1990 ஆம் ஆண்டு வரை மதமாற்றம் என்பதனை நான் கேள்விப்பட்டதில்லை. பார்த்தது இல்லை. பாரபட்சம் இருந்ததும் இல்லை. காரணம் கல்லூரியில் பணியாற்றிய கிறிஸ்துவப் பேராசிரியர்கள் மற்றும் கிறிஸ்துவக் கல்லூரிகளில் பணிபுரிந்தவர்கள் அனைவருக்கும் கிறிஸ்துவம் என்பது வழிகாட்டி. அவர்கள் வணங்கக்கூடிய தெய்வம். கிறிஸ்துமஸ் என்பது வருடத்தில் ஒரு முறை கொண்டாட வேண்டிய பண்டிகை. வேறு ஒன்றுமில்லை.
ஆனால் சென்ற மாதம் முதல் முறையாக மூத்த சகோதரியிடம் திடீர் என்று சந்தேகம் வந்து அவர் 1980 வாக்கில் படித்த நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் நிலைமை எப்படி இருந்தது என்று கேட்ட போது அங்கு இருந்த பாரபட்சத்தைத் தெளிவு படுத்தினார். அதாவது கிறித்தவர் மக்களுக்கு முதல் மரியாதை. அதே சமயத்தில் மற்ற மத மக்களை இப்போது உள்ள கேவலம் போல யாரையும் நடத்தவில்லை. பாரபட்சம் உண்டு. இருந்தது. அது இலை மறை காயாகவே காணப்பட்டது.
ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளில் வேலை இல்லாதவர்கள், உழைக்க மறந்தவர்கள், மறுத்தவர்கள், திடீர் பணக்காரர் ஆக நினைத்தவர்கள், அரசியலில் குறுக்குவழியில் செல்ல விரும்பியவர்கள் என்று கிறிஸ்துவத்தில் மட்டுமல்ல இஸ்லாமியர்களும் பல நூறு பேர்கள் படிப்படியாக உருவானார்கள்.
உருவாக்கவும் பட்டார்கள்.
எஸ்ரா சற்குணம், பால் தினகரன் குடும்பம்,மோகன் சி லாரன்ஸ் இந்து மூன்று பேர்களிடம் நிச்சயம் ஒரு லட்சம் கோடி இருக்கும் என்றே உறுதியாக நம்புகிறேன்.
நேற்று சந்தித்த நண்பர் உறுதிப்படுத்திய பின்பு சொன்ன தகவல் இது. தவ்ஹித் ஜமாத் உருவாக்கிய பீஜே வசம் 400 முதல் 500 கோடி இருக்கும் என்றார். இதில் பட்டியல் இட்டால் மேலே சொன்ன நபர்கள் போல இதிலும் வரக்கூடும்.
இரண்டு பக்கமும் வெளிநாட்டுத் தொடர்பு 100 சதவிகிதம் என்பதால் காட்டாறு அருவி போல வெள்ளமெனப் பணம் பாய்ந்தோடி வந்தது. இன்று வழிகின்றது. அவ்வளவு தான் வித்தியாசம்.
(ஆனால் தமிழகத்தில் உள்ள இந்து மடாதிபதிகள் இருக்கின்ற சொத்துக்களை விற்று தின்று கொண்டு இருக்கின்றார்கள்)
ஆனால் முப்பது வருடங்களில் அடித்தட்டு கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை எதுவும் மாறவே இல்லை.
தனிப்பட்ட நபர்களின் ஆடம்பர வாழ்க்கை முதல் தனி ஜெட் பயணம் வரைக்கும் தலைகீழாக மாறியுள்ளது.
இவர்கள் தான் பிராமணர்களைக் குறை சொல்லித் தாக்குகின்றார்கள்.
பால் தினகரன், எஸ்ரா சற்குணம் குடும்பங்களில் ரத்த உறவு தானே வாரிசாக வர முடிந்ததுள்ளது.
இந்த லட்சணத்தில் நான் கிறிஸ்துவப் பள்ளியில் படித்தேன். என்னை மதம் மாறச் சொல்லவில்லை என்று கிறுக்கர்கள் அங்கங்கே எழுதிக் கொண்டு சிரிப்பு மூட்டுகின்றார்கள். நான் இருபது தலைமுறைக்கு முன்னால் மாறியவன். என்னை இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்று மற்றொரு புத்திசாலி கேட்கிறான்.
அடக் கொடுமையே?
ஒரு தலைமுறை என்பது 33 வருடங்கள். இங்கு நடந்த குறிப்பாக தமிழக மதமாற்றம் என்பது கடந்த 25 வருடங்களில் 75 சதவிகிதம் என்றால் மீதம் உள்ள 75 வருடங்களில் 25 சதவிகிதம் என்று தான் நான் சொல்வேன். எவனும் பத்து தலைமுறைக்கு முன்னால் என்பதெல்லாம் கப்சா. அதிகபட்சம் மூன்று தலைமுறைகள். அதற்குள் தான் இத்தனை கொடூரங்கள் இங்கே நடந்தது.
சாதி இழிவு போக்க இவர்கள் மாறினார்கள் என்று சொல்ல வருவீர்கள் எனில் போன இடத்தில் இரண்டு மதங்களிலும் உள்ள பிரிவினைகள் குறித்து எவனும் பேசுவதே இல்லையே? அப்பட்டமான சாதீய ஒடுக்குமுறை இரண்டு மதங்களிலும் இன்று வரை இருக்கத்தானே செய்கின்றது.
பணம் , வேலை, பதவி, வெளிநாட்டு வாய்ப்பு கொடுக்கின்றார்கள். அவர்கள் அடுத்த கட்டத்திற்கு உயர்கின்றார்கள் என்றால் என்னைப் பொருத்தவரையிலும் மகிழ்ச்சி. நன்றாக இரு என்று தான் வாழ்த்துவேன்.
ஆனால் கூடவே ஒரு கேள்வி கேட்பேன்.
நீ வெளிநாடு சென்றாய். சென்னை சென்றாய். நல்ல பதவியில் அமர்ந்தாய். உன்னைப் போல உன் சாதியில் இழிவு சுமந்து வாழ்கின்றவர்களில் எத்தனை பேர்களுக்கு நீ உதவியிருக்கிறாய். நீ தான் போகின்ற இடங்களில் உன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நவீன அய்யர் கணக்காக வாழும் நீ எதற்கு ஊருக்கு அறிவுரை சொல்கின்றாய்?
வெளிநாடு சென்றால் அங்கே வாழ்ந்து அங்கே செத்து விடு.
இங்கே இருக்கும் பிரச்சனைகளை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்.
மோடி இதற்கும் அடுத்த முறை ஆட்சிக்கு வந்த பின்பு நீண்ட காலச் செயல்திட்டம் வைத்திருப்பார்.
கவலைப்படாதே.
மதமாற்றம் தமிழ்நாட்டில் நடக்கவே இல்லை என்று சரியான தகப்பன் தாய்க்குப் பிறந்தவன் ஒருவனாவது அவனவன் மனசாட்சிக்கு பொதுவாக எழுதச் சொல்லுங்களேன் பார்க்கலாம்.
அதற்கும் ஆட்டின் குறி, விருப்பக்குறி விட்டு புளகாங்கிதம் அடையும் சின்னப் பயல்களைப் பார்க்கும் போது?
உங்கள் குறியை அறுத்தால் சரியாகி விடும்.
ராஸ்கல்ஸ்....
•••••••••••••••
1972க்குப் பிறகு கருணா தன் கட்டுப்பாட்டில் கட்சி மற்றும் ஆட்சி என்பதாக மாற்றியவுடன் (அப்போது தமிழகத்தில் மிக மிகக் குறைவான மாவட்டங்கள் தான் இருந்தன. ஆனால் பரப்பளவில் பெரிய மாவட்டங்கள்)
1. தனக்கு எடுபிடியாக இருக்கும் நபர்களை மாவட்டச் செயலாளராக அங்கங்கே நியமித்தார்.
2. கட்சியின் கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரைக்கும் எதிர்ப்பான் என்று தெரிந்தாலே மண்ணுக்குள் போட்டு உடனடியாகப் புதைக்கும் வேலையை அவர் துதிபாடிகள் கண் அசைவில் செய்து முடித்தனர்.
3. கம்யூனிஸ்ட் ஆதரவு, விவசாயிகள் ஆதரவு, எம்.ஜி.ஆர் ஆதரவு என அனைத்தும் தான் பதவிக்கு வர காரணமாக இருந்தது என்பதனை மறந்து தூக்கி பரணில் வைத்து மறந்து போனார். எம்ஜிஆர் மட்டுமே உயிர்த்தெழுந்தார்.
4. பத்திரிக்கையுலகம், இஸ்லாமியர்கள் இரண்டிலும் பிரிவினையை உருவாக்கினார். தனக்கு ஜால்ரா போடும் கூட்டங்களை உருவாக்கி அவர்களை மட்டுமே வளர்த்தார்.
5. தான் ஒரு கருத்தைச் சொல்ல வேண்டும் என்றால் உடனே சொல்ல மாட்டார். அவர் கூட்டத்தில் வளர்க்கப்படும் ஒவ்வொரு நாயாக குலைக்க வைப்பார். எதிராளி பயப்படுகின்றார்களா? என்பதனை பார்த்துக் கொண்டேயிருப்பார். கடைசியாக முரசொலியில் எழுதுவார். கட்டக்கடேசியாக நான் சூத்திரன். அதனால் தான் பார்ப்பனர்கள் என்னைப் பழிவாங்குகின்றார்கள் என்று முடிப்பார்.
பாவம் மகனும் அந்தப் பாதையில் செல்லத் துவங்கியுள்ளார்.
இது 1972 அல்ல. இது 2022.
உங்களுக்கு ஆளுநர் ரவி விரைவில் புரிய வைப்பார்.
நூல் விட்ட உயர்கல்வித்துறை அமைச்சர், அறிக்கை விட்ட தொழில் துறை அமைச்சர், முரசொலி சிலந்தி பெயரில் எழுதும் திருமா வேலன், கடைசியில் இப்போது உருமாறிய கொரோனா
காலம் கவனிக்கும்.
•••••••••••••••
கோமாளிக்கூட்டமும் அதனை இயக்கும் பாதிரிக்கூட்டமும் ஒரு முடிவோடு இருப்பார்கள் போல. தமிழகத்தை அழித்து ஒழித்து சுடுகாடாக மாற்றாமல் ஓய மாட்டார்கள் போல.
ஏற்கனவே ஆளுநர் பல அறிக்கைகள் உள்துறை அமைச்சகத்துக்கு வழங்கி உள்ளார். நடைபெறப் போகும் 5 மாநிலத் தேர்தலுக்காக மத்திய அரசு கையைக் கட்டி ஒவ்வொன்றையும் எரிச்சலோடு பார்த்துக் கொண்டு இருக்கின்றது. தமிழக பாஜக மற்றும் தமிழ்நாடு அரசியலில் நிச்சயம் ஏப்ரல் மாதம் தொடங்கிப் பல மாறுதல்களை உங்களால் காண முடியும்.
மத்திய பாஜக அரசு அண்ணாமலை அவர்களுக்கு ஆதரவும் அளிக்கவில்லை. உதவிகளும் செய்வதில்லை. காரணம் தமிழகம் என்பது அவர்களைப் பொறுத்தவரையிலும் மிக மிக சாதாரணம். அல்வா துண்டு போல கையில் உள்ள இந்தி பெல்ட் மாநிலங்கள் போதும்.
கூர்ந்து கவனித்தால் தெரியும்.
ஆனால் திடீரென்று இறந்த குழந்தை மத மாற்ற விசயத்தில் ஆச்சரியப்படத் தக்க வகையில் குழு ஒன்று நியமித்து உள்ளனர். உடனடியாக அடுத்தடுத்து என்று நகர்கின்றனர்.
கூமுட்டைகள் உடனே நடக்கப் போகும் உள்ளாட்சித் தேர்தல் மனதில் வைத்து என்று கூப்பாடு போடுகின்றார்கள்.
இல்லை.
வேறு ஏதோ இதற்குப் பின்னால் உள்ளது என்றே நான் யூகிக்கின்றேன்.
இதற்குப் பின்னால் உளவுத்துறை சார்ந்த திட்டம் உள்ளது என்று அர்த்தம்.
மதமாற்றிகளை வைத்து பாஜக அரசு அரசியல் செய்கின்றது என்று பல கூமுட்டைகள் கதறுகின்றதைப் பார்க்கும் சிரிப்பு வருகின்றது.
பாஜக நினைத்தால் உருவாக்க முடியும். மாற்ற முடியும். மறைக்க முடியும். இன்றைய சூழலில் இங்கே மதுவும் பணமும் போதும். அந்த அளவுக்கு வாக்காளர்களை விலை கொடுத்து வாங்க எளிதாக இரண்டு திருடர்களும் சேர்ந்து களம் அமைத்துக் கொடுத்து உள்ளனர். ஒரு கோடி வாக்காளர்கள் போதும். ஆட்சி அமைக்க நினைத்தால் இவர்களை விலைக்கு வாங்குவது பாஜக வுக்கு கடினமா?
ஆளுநராக ரவி உள்ளே வந்த போது நான் புரிந்து கொண்டேன். நான் தேர்தல் நடக்க இருக்க கடைசி நாளில் எழுதினேன். தமிழகத்தை இராணுவ காரிடார் ஆக மாற்ற மத்திய அரசு படிப்படியாக ஒவ்வொன்றாக செய்து வருகின்றது என்று எழுதியுள்ளேன். அது தான் இப்போது நடந்து வருகின்றது.
எனவே தமிழகத்தைப் பொறுத்தவரையிலும் மத்திய பாஜக மிக மிக நிதானமாகவே முடிவு எடுப்பதாகவே எனக்குத் தெரிகின்றது.
மீண்டும் சொல்கிறேன்.
அடுத்த நான்கு ஆண்டுகளுடன் இரண்டு திருடர்களுக்கும் தமிழக மக்கள் நிரந்தரமாகவே விடை கொடுத்தால் நல்லது.
இல்லையெனில் மத்திய பாஜக அதைச் செய்யும்.
செய்தே ஆக வேண்டிய சூழலை உருவாக்கும்.
1 comment:
மனித குல விரோத 'பார்ட்டிக்கு' எதுவும் கடினமில்லை... ஆனால் அது தான் பிரச்சனையே...
அதனால்...
அதுவே...
சீரழிவு உறுதி தான்...!
Post a Comment