Wednesday, September 30, 2020

செயற்கை நுண்ணறிவு AI - எதை மாற்றப் போகின்றது?

மோடி அரசு செய்த முக்கிய சாதனைகளில் ஒன்று நீட் மூலம் உருவாக்கிய மடை மாற்றம். அதென்ன மடை மாற்றம்?. நீட் வருவதற்கு முன்பு தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொள்ளையடிக்கின்றார்கள். அதன் நிறுத்த அல்லது மாற்றவே நீட் பரிட்சை என்றார்கள். அதாவது ஒரு எம்பிபிஎஸ் சீட்டுக்கு 70 லட்சம் முதல் 1 கோடி வரைக்கும் வாங்கிக் கொண்டு விற்றார்கள் என்பது குற்றச்சாட்டு. ஆனால் இது இப்போது எப்படி மாறியுள்ளது?

இப்போது தனியார் பள்ளிக்கூடங்களில் 11 ஆம் வகுப்பில் முதல் பிரிவில் (கணக்குப் பிரிவு) சேர வேண்டும் என்று ஒரு மாணவர் நினைத்தால் அவர் கட்டாயம் நீட் பயிற்சியில் சேர வேண்டும். அய்யா நான் இளங்கலை கணக்கு படிக்கப் போகின்றேன் என்றாலும் வாய்ப்பில்லை. நீ என்னமோ படி. அது எங்களுக்கு முக்கியமல்ல. ஆனால் முதல் பிரிவு என்றால் கட்டாயம் நீட் பரிட்சைக்கு உண்டான கட்டணம் அவசியம் கட்ட வேண்டும் என்று வசூலித்து விடுகின்றார்கள். சாதாரண பள்ளிகள் என்றால் தொடக்கத்தில் ரூபாய் 50 000 இத்துடன் மாதம் 1700 ரூபாய். மொத்தம் ரூபாய் 70 000 கொள்ளையடித்து விடுகின்றார்கள். பெருநகரம் முதல் சிறு கிராமங்களுக்கு அருகே உள்ள தனியார் பள்ளிகள் வரைக்கும் இது நிலைமை. பலரும் வேறு வழியே இல்லாமல் இணைய வகுப்பில் கலந்து கொள்கின்றார்கள். அந்தப் பயிற்சியும் சிறப்பானது இல்லை. காசு வசூலிக்க வேண்டும்.

அதற்கு கணக்கு காட்ட வேண்டும் என்கிற ரீதியில். இரண்டு வருடமும் சேர்த்து குறைந்த பட்சம் இரண்டரை லட்சம் இருந்தால் மட்டுமே 12 ஆம் வகுப்பு பாஸ். பணம் கட்டாவிட்டால் அதோகதி தான்.

உத்தேச கணக்காக தமிழகத்தில் தனியார் பள்ளியில் முதல் பிரிவில் படிக்கும் மாணவர்கள் ஒரு லட்சம் என்று கணக்கில் எடுத்துக் கொண்டால் வருடத்திற்கு 700 கோடியை சுருட்டுகின்றார்கள். இதில் கால் பங்கு மாணவர்கள் கூட நீட் பக்கம் செல்வதில்லை. அம்மா பார்த்த கௌரவம், அப்பா கொடுத்த அழுத்தம், அடுத்த வீட்டுக் காரன் காட்டிய கெத்து பல காரணிகள் இதற்குப் பின்னால் உள்ளது. அதற்கு எளிய தமிழ்ப் பிள்ளைகள் பாணியில் சொல்லப்போனால் வெட்டிப் பந்தா என்றும் சொல்லலாம்.

சமீபத்தில் கொரானா காரணத்தால் தமிழக அரசுப் பள்ளிகளில் மொத்தம் 12 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். துல்லியமாகச் சொல்லப் போனால் 13 லட்சம் அருகே வருகின்றது. மாற்றுச் சான்றிதழ் இல்லாவிட்டாலும் மதிப்பெண் பட்டியல் இருந்தால் போதும் என்றதும் தனியார்ப் பள்ளியில் படித்தவர்கள், விண்ணப்ப பாரத்திற்கு ரூபாய் 5000 கட்டி விட்டு ஆன் லைன் வகுப்பில் கலந்து கொண்டு இருந்தவர்கள், அதன் பின் ரூபாய் 25 000 கட்டினால் மட்டுமே இணைய வகுப்பு என்றதும் பெரும்பாலான மக்கள் கம்பி நீட்டிவிட்டு அரசுப் பள்ளி பக்கம் வந்து விட்டனர்.

தனியார் மக்கள் பொங்கி எழுந்து விட்டனர். எங்களுக்கு 2000 கோடி நட்டம். அரசு உத்தரவை மாற்ற வேண்டும் என்றனர்.

திரும்பவும் சொல்கிறேன். இதையே எப்பவும் சொல்வேன். அப்பா அம்மா தான் குழந்தைகளுக்கு எல்லாமே. நீங்கள் தான் வழிகாட்டி. உங்கள் மகன் மகள் உயிரோடு இருந்தால் மற்ற விசயங்களைப் பற்றிப் பேசவே முடியும். ஆட்சியில் இருப்பவர்கள் ஒன்றைப் பேசுவார்கள்.

ஆட்சிக்கு வர நினைப்பவர்கள் வேறொன்றைப் பேசுவார்கள். தமிழகத்தில் பிணம் விழுந்தால் அரசியல் களம் சூடுபிடிக்கும் என்பது பொது விதி. ஆனால் எவரும் உண்மையை மட்டும் பேச மாட்டார்கள் என்பதனை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

நீட் விசயத்தில் உலக சுகாதார மையத்தின் அரசியல் உள்ளதா? இல்லை பாஜக அரசின் லாபி அரசியல் செய்கின்றதா? என்பது மட்டும் பரம ரகசியமாகவே உள்ளது. அதைத் தவிர மற்ற அனைத்தும் இங்கே அனைவரும் பேசுகின்றார்கள்.


()()()


இன்னும் 25 வருடங்களில் உலகம் முழுமையையும் தலைகீழாகப் புரட்டிப் போகும் இரண்டு விசயங்கள். ஒரு பக்கம் வளர்ந்து வரும் சூப்பர் அதி வேகத் துல்லிய செயற்கை நுண்ணறிவு துறை.  மற்றொருபுறம் 5 ஜி தொழில் நுட்பம். எதை இழக்கப் போகின்றோம்? எவற்றையெல்லாம் அடையப் போகின்றோம்? எப்படி நம் வாழ்க்கை மாறப் போகின்றது.


4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கண்டிப்பாக இவை வருவதற்கு முன்பே மனிதர்கள் இருப்பார்களா...? தெரியவில்லை, ஏனென்றால் மரங்கள், பறவைகள் விலங்குகள் என பலவற்றும் அழிந்து கொண்டிருக்கின்றன... ஒரு எடுத்துக்காட்டுக்கு பனையும் தேனீயும் அழிவதற்குள் மனிதர்கள் இல்லாமல் போவார்கள்... அதற்கு நம் தமிழில் கணக்கும் உண்டு...! சான்றுகளும் உண்டு...!

ஒரு பக்கம் சிறப்பாகவும் சிரிப்பாகவும் இருந்தாலும், இதைப் பற்றி பிற நண்பர்களிடம் பேசியுள்ளேன்...!

என்னைப் பொறுத்தவரை : உலகத்திற்கு தேவை மரம் உட்பட பலவற்றையும் வளர்க்கும் விஞ்ஞானம் அவசியமில்லை... என்றும் தேவை மனிதம் வளர்க்கும் மெய்ஞானம்... இதிலும் விஞ்ஞானம் புகுந்து கொண்டது வேறு கதை...!

ஜோதிஜி said...

மனிதர்கள் இனி வரும் காலங்களில் உயிருள்ள எந்திரமாக வாழ வாய்ப்புண்டு. ஒரு பக்கம் எந்திர மனிதர்கள். மற்றொருபுறம் நிஜமான ஆனால் எந்திர மனம் உள்ள மனிதர்கள்.

Aravind said...

உங்கள் ஊகத்தைத் தான் யூவல் நோவா ஹராராரியும் தனது ஹோமோடியஸ் நூலில் சொல்லியுள்ளார் சார்.
அடுத்த கட்ட மனிதர்கள் எந்திரங்களோடு கலந்த அதி மனிதர்களாக இருப்பார்கள் என அணுமானிக்கிறார்.

ஜோதிஜி said...

2045 என்கிற போது தமிழகத்தில் ஐந்து சட்டமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்துருக்கும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாதிப் பேர்கள் இருப்பார்களா? ஆளுமை செலுத்தும் நிலமையில் இருப்பார்களா? மாற்றத்தின் தொடக்கமாக இருக்குமா அரவிந்த்.