Tuesday, September 29, 2020

நிலம் உங்களுடையது. மண் எங்களுடையது.

எளிய தமிழ்ப்பிள்ளைகளின் சிந்தனை எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பதற்கு ஓர் உதாரணம் சொல்ல முடியுமா?

தற்போது சேலத்தில் உள்ள விமானநிலையத்தில் ஒரு விமானம் மட்டும் வந்து போய்க் கொண்டிருப்பதால் மத்திய அரசு சர்வதேச விமான நிலையத்திற்கு அனுமதி வழங்கி அருகே இருந்த 500க்கும் மேற்பட்ட ஏக்கர்களை வாங்கி (ஆறு கிராமங்கள்) பூர்வாகப் பணி தொடங்கியுள்ளது. நிலத்தை விற்பனை செய்தவர்கள் ஒரு காரியம் செய்தார்கள். அவரவர் நிலத்தில் உள்ள மண் எடுக்கும் வேலையைத் தொடர்ந்து செய்ய ஆறு முதல் பத்து அடி வரைக்கும் மொத்தமாக அந்தப் பகுதி வரைக்கும் பள்ளமாக மாறி அதுவே தொடர்ந்து சில வாரங்களாக நடக்க விமான நிலையம் சுவர் வரைக்கும் வந்து நின்றுள்ளது.

ஒரு மாதத்தில் கிராம நிர்வாக அதிகாரி முதல் மற்ற அரசு நிர்வாகம் அமைதியாக இருந்து இப்போது விமான நிலைய உயரதிகாரி அலற இப்போது தான் முழித்துக் கொண்டு எளிய தமிழ்ப் பிள்ளைகளை விரட்டியடிக்கத் தொடங்கியுள்ளனர்.

இனி பள்ளம் முழுக்க மண் போட்டு நிரப்ப வேண்டும். விற்றவர்களுக்கு இரண்டு வருமானம். அமைதியாக இருந்தவர்களுக்கு மற்றொரு வருமானம். சர்வதேச விமானத் தளமாக மாறினால் வளர்ச்சியடைந்தால் எங்களுக்கென்ன? எங்களுக்கு எங்கள் நில மதிப்பு முக்கியம். எங்கள் மண் முக்கியம்.

ஒவ்வொரு கட்சியும் 2021 தேர்தலுக்குப் பத்தாயிரம் கோடி பட்ஜெட் போட்டு இருந்தால் நிச்சயம் ஐம்பதாயிரம் கோடி தயார் செய்து வைத்திருந்தால் மட்டுமே எளிய தமிழ்ப்பிள்கைள் ஓட்டளிக்க முன் வருவார்கள்.

()()()

11 Minutes - With Real Facts

ஜோ பேச்சு| அறிவுரைகள் வழிகாட்டுமா| Is it important Advice| 017| 28 Sep 2020

எப்போதும் இல்லாத அளவிற்கு சமூக வலைதளங்கள் வாயிலாக எங்கெங்கு காணினும் அறிவுரை சொல்லும் நபர்கள் அதிகமானது ஏன்? பேசக்கூடியவர்கள் அனைவரும் வென்றவர்களா? அல்லது இந்தப் பேச்சின் மூலம் பணம் பார்ப்பவர்களா?  செயல்பாடுகள் முக்கியம். செயலில் இறங்குவது மிக முக்கியம்..

No comments: