Wednesday, September 02, 2020

முதல் பேட்டி

கடந்த 11 ஆண்டுகளில் இணையம் வழியாக நான் பெற்ற சொத்து ஒன்று உள்ளது. பல தரப்பினரும் என் தொடர்பில் உள்ளார்கள். கட்சியில் நேரிடையாகத் தொடர்புள்ளவர்கள், குறிப்பிட்ட கட்சியின் கொள்கைகளை அதி தீவிரமாக ஆதரிப்பவர்கள், மாற்று அரசியலை விரும்புகின்றவர்கள், மூன்று மதங்களில் உள்ளவர்கள், ரசிகர்களாகவே வாழ வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள், அதற்கு மேலாக அவர்களைக் கடவுளாகப் பார்ப்பவர்கள், சாதிக்கட்சி, மத ரீதியான கட்சிகள் என்று எல்லா நிலையிலும் யாரோ ஒருவர் என் தொடர்பில் இருக்கின்றார்கள். இது இயல்பாக படிப்படியாக உருவானது.

இணையத்தில் எனக்கென்று கொள்கை எதுவுமில்லை. 

நான் சரியென்று நம்புவதை எழுதுகிறேன். அது தவறென்று தெரிய வரும் போது மாற்றிக் கொள்கிறேன். எவரையும் கூடுமானவரையில் புண்படுத்த விரும்புவது இல்லை. அப்படியே செயல்பட நேர்ந்தாலும் அதை நகைச்சுவையாகவே எழுதவே விரும்புகிறேன்.  

காரணம் ஆரோக்கியம் இழந்து வருத்தப்படும் சமயங்களில் அட இவையெல்லாம் எழுதியிருக்கலாமோ? என்று வருத்தப்படக்கூடாது என்பதற்காகவே அனைத்தையும் பற்றி எழுதுகிறேன். நேரம் இருக்கிறது. கூடிக் களிக்கும் கொண்டாட்ட மனநிலையில் இல்லாததும் கும்பல்களின் தொடர்பு இல்லாமல் வாழ்வதும் மற்றொரு காரணம். 

இன்ட்ரோவர்ட் எக்ஸ்ட்ரோவர்ட் என்பதாக மனிதர்களின் பழக்கவழக்கத்தைப் பிரிக்கின்றார்கள். நான் எப்போதும் இன்ட்ரோவர்ட் தான். அதாவது அவ்வளவு சீக்கிரமாக யாருடனும் பழகிவிடுவதில்லை. வெளியே சுற்றவும் விரும்புவதில்லை. எதையும் காரண காரியத்துடன் பார்த்துப் பழகி வந்த காரணங்களால் எனக்கு கிடைக்கும் ஓய்வு பொழுதுகள் அனைத்தையும் எழுதவே பயன்படுத்திக் கொள்கிறேன். 

இதன் காரணமாகவே அதிகமாக எழுத முடிந்துள்ளது.

என்ன பலன்? என்ன தாக்கத்தை உருவாக்கும் போன்ற ஆராய்ச்சியில் இறங்குவதில்லை.

ஏனிந்த கதை இப்போது?

வீட்டில் பெண்கள் நலக்கூட்டணி பலமுறை என்னிடம் கேட்ட கோரிக்கையைச் சென்ற வாரம் நிறைவேற்ற வாய்ப்பு அமைந்தது. 

நண்பர் மேகநாதன் தமிழர் வணிக களம் என்ற அமைப்பை நடத்தி வருகின்றார். 

என் எழுத்துக்கு அதி தீவிர வாசகர். என் இரண்டு மாதமாகப் பேட்டி கொடுக்க வற்புறுத்திக் கொண்டு இருந்தார். தயக்கமாகவே இருந்தது. என் அனைத்து அந்தரங்கமும், பேச்சுகளும், செயல்பாடுகளும் வீட்டில் உள்ள நான்கு பேர்களுக்கும் தெரியும். வெளிப்படையான புத்தகமாக வாழ்வதால் அவர்கள் இதனைக் கேட்டு என்னை வற்புறுத்திய பின்பு அவருக்கு ஜும் செயலி வாயிலாகப் பேட்டி அளித்தேன்.  

மூன்று பகுதிகளாகப் பிரித்துள்ளார் என்றே நினைக்கின்றேன். மேற்கொண்டு பல பணிகள் கொடுத்துள்ளார். எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்.

நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

கடலில் குதிக்கட்டுமா?  எப்போதும் போலக் கரையில் இருந்தபடியே வானம் பூமி கடலைகள் என்று கவிதை போல எழுதிக் கொண்டு இது போன்ற அக்கப் போர்களில் கலந்து கொள்ளாமல் இருந்து விட வேண்டுமா?

சொல்லுங்கள்?




14 comments:

'பரிவை' சே.குமார் said...

Congrats anna.

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துகள் ஐயா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உங்களின் அடுத்த நகர்வு. நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துகள்...

Unknown said...

Valgha valamudan

KILLERGEE Devakottai said...

வாழ்த்துகள் ஜி வெற்றிகள் இணையட்டும்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல முயற்சி ஜி. தொடரட்டும்!

வாழ்த்துகளும் பாராட்டுகளும். 1500 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி இருக்க வேண்டும் - இது எனக்கு புதிய தகவல்! நன்றி.

ஜோதிஜி said...

உங்களுக்கு நான் ஜுனியர் குமார். ஏற்கனவே ஜும் செயலி வழியாக பல நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டு இருப்பீர்கள் போல.

ஜோதிஜி said...

அடுத்து நம்ம தல உங்களைப் போன்றவர்களுக்கு காணொளிக் காட்சியின் அருமை பெருமைகளை விளக்கி புதிய பூபாள ராகத்தை இசைப்பார். அனைவரும் பின்னால் வரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஜோதிஜி said...

விருப்பமான நகர்வல்ல. இது போன்ற காட்சி ஊடகங்களில் முகம் காட்ட தனித்த திறமை வேண்டும். பல முன்னெடுப்புகள் செய்து நாம் நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். எழுத்து என்றால் சிறப்பு. இது கொஞ்சம் கடினம்.

ஜோதிஜி said...

அடுத்து உங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் அமித்ஷா வந்தவுடன் இந்தியா பெற்ற புண்ணிய காரியங்கள் குறித்து அதற்குப் பிறகு மோடி என்பவர் ஏன் இந்தியர்களால் கடவுளாகப் பார்க்கப்படுகின்றார் போன்ற தலைப்பில் பேசவா?

ஜோதிஜி said...

பெயர் இல்லையே. நன்றி.

ஜோதிஜி said...

காசு சம்பாரிக்க எத்தனை வழிகள் இங்கு இல்லையோ அத்தனை வழிகளிலும் நாம் வெற்றிகளை நம்மோடு இணைத்துக் கொண்டே தான் இருக்கின்றோம். அடுத்த உங்கள் மீசையை தமிழ் கூறும் நல்லுகம் பார்க்க வேண்டும். வந்து விடுங்கள். தனபாலன் விரிவாக விரைவில் விளக்குவார்.

ஜோதிஜி said...

நீங்கள் இது குறித்து எழுதியது மிக மிக குறைவு. அனைத்து கண்டங்களிலும் நம் புத்தகம் தெரியவேண்டும் என்றால் அதற்கு தனி வழியுள்ளது. இது போன்ற பல உள் விசயங்கள் உள்ளது.