Monday, November 18, 2019

பிறந்த ஊர் நினைவுகள் 2

வாழ்ந்த ஊரில்
வசதியான வீடுகள்
உள்ளது.
ஆட்கள் யாருமில்லை.
ஆட்கள் இருக்கின்றார்கள்.
அவர்களுக்கு சொந்தமான
வீடுகள் இல்லை.





காலமாற்ற சுழற்சி
மாறிய முகங்கள்
மாறிய பாதைகள்
கஜா புயல் தாக்கிய கோரங்கள்
ரசிக்க முடியாமலும்
ஏற்றுக் கொள்ள முடியாமலும்...







மூன்று தலைமுறையைப் பார்த்த
ஆலமரம்
புயல் தாக்கி விறகாக மாறியிருந்தது.
இருந்த சுவடே தெரியவில்லை.
வாழ்க்கையின் இருப்பியல்
பாடம் நடத்தியது.


உச்சி வெயிலில்
ஓடித்திரிந்த தெருக்களில்......
பார்த்த முகங்கள்
ஒவ்வொன்றும்
ஓராயிரம் நினைவுகளை
தந்து போனது.

சிறுவயதில்
நான் பார்த்த பாப்பாக்கள்
குமரிகளாக மாறியிருந்தனர்.
அம்மாக்கள்
கிழவிகளாக இருந்தனர்.

நான் யார்?
என் அடையாளம் என்ன?






இந்த காணொலிக் காட்சியைப் பார்க்க உங்களுக்கு  இரண்டு மணி நேரம் தேவைப்படும்.  சர்வதேச தரத்தில் மிக மிக அழகாக தயாரித்து உள்ளனர்.




#Amazonpentopublish2019
#5MuthalaleegalinKathai
#Longform
#JothiGanesan
#5முதலாளிகளின்கதை

5 முதலாளிகளின் கதை

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படங்கள் ஆகா...!

காணொலி... யம்மாடி...!

கரந்தை ஜெயக்குமார் said...

படங்கள் அருமை

D.Kanagasundaram said...

எவ்வளவு புத்தகங்கள் அருமை

ஜோதிஜி said...

இது புதுக்கோட்டை ஞானாலயா நூலகம். அய்யா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மனைவி டோரதி அவர்கள்.

ஜோதிஜி said...

நன்றி அய்யா.

ஜோதிஜி said...

சர்வதேச தரம். மிக அழகாக வந்துள்ளது.

G.M Balasubramaniam said...

பிறந்த ஊர் பற்றி கூற ஏதுமில்லை பிற்ந்தது என்னவோ பெங்களூர்தான் ஆனால் வளர்ந்தது எல்லாம் பல ஊர்களில் இருந்தும் என் மூதாதையரின் ஊர் கோவிந்த்ராஜபுரம் பாலக்காடுஅங்கு என் பத்தாவது வயதில் சுமார் ஓராண்டுகால்ம்என் தந்தை வழிப்பாட்டியுடன் வசித்தேன் அது பற்றியும் எழுதி இருக்கிறேன் அங்கே கிராமம் என்பது ஒரு அ
சாலைதான் திருமணத்துக்குப்பின் என்மகன் குடும்பதாருடன் சென்றிருக்கிறேன் எனக்கும் அந்தௌஉருக்கும் எவ்வித தொடர்பும் இலவிட்டாலும் என் முஅவரி தெரிந்து ஊர் கும்பாபிஷேகத்துக்கு என்னை நேரில் வந்து அழைத்தார்கள் அதுதான் ஆச்சரியம்

ஜோதிஜி said...

உங்களை நினைவில் வைத்திருந்து அழைக்கின்றார்கள் என்றால் நீங்கள் முக்கியமானவர் என்று அர்த்தம்.

G.M Balasubramaniam said...

ஆனால் எனக்கு அவர்கள் யாரென்றே தெரியாது இப்பொழுதும் ஊர்க்க்கோவில் விசேசங்களுக்கு அழைப்பு உண்டு என் விலாசம் அவர்கள் கையில்