Monday, November 25, 2019

என் குரு -திரு மலைநாடன் விமர்சனம்

டாலர் நகரம்' 4தமிழ்மீடியாவில் முதல் தொடராகவும்,  வெளியீட்டில் முதலாவதாக வந்த புத்தகம். புத்தகத்தின் ஆசிரியர் 'ஜோதிஜி' யின் முதலாவது புத்தகம். திருப்பூர் பின்னாலாடை தொழில் தொடர்பாக விரிவாக எழுதப்பெற்ற முதல் புத்தகம். அது வெளிவந்த 2013ம் ஆண்டில் சிறந்த புத்தகங்கள் வரிசையில், 'விகடன்' சிறப்புத் தெரிவில் இடம்பெற்றது.

ஏனிந்த படம் என்று குழம்ப வேண்டாம்.  கீழே உள்ளது. புரிந்தவர்கள் பாக்கியவான்கள்.





அதன் பின்னால் நிறைய   எழுதியுள்ள 'ஜோதிஜி' யின் அன்மைய முயற்சி " 5 முதலாளிகளின் கதை". திருப்பூரும், பின்னாலாடைத் தொழிலும், ஜோதிஜி பல வருடங்களாக நீந்தி விளையாடும் நீச்சல் குளம். ஓடி விளையாடும் ஆடுகளம். அந்தக் களத்தில் 5 முதலாளிகள் குறித்த அவரது அனுபவக் குறிப்புக்களை தொகுத்திருக்கும் இந்தப் புத்தகம் அவரது 16வது படைப்பு.

பழக்கமான களம், பரிச்சயமான விடயங்கள். அதுபோதுமே எழுதத் தெரிந்தவனுக்கு. எழுத்தில் சமரசங்கள் வைக்க விரும்பாத எண்ணம் கொண்டவர்கள் நாம். எமக்கு ஜோதிஜியைப் பிடிப்பதற்கான காரணமும் அதுவே. அனுபவ முதிர்ச;சியில், "5 முதலாளிகள் கதை" யை அதகளப்படுத்தியிருப்பார் என்பதை தனியாகச் சொல்லத் தேவையில்லை. ஆனால் RS Prabu  வின் இந்தப் பார்வை, அமேசான் தளத்தில், கிண்டில் மின்னூல் பதிப்பாக வெளிவந்திருக்கும் அப் புத்தகத்தை, உங்களையும் வாசிக்கத் தூண்டும். பிரபுவுக்கும், ஜோதிஜிக்குமான வாழ்த்துக்களுடன்,  5 முதலாளிகளின் கதை நூல் நயப்பு இங்கே. - 

4Tamilmedia Team.


*******

உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் யாராவது ஒருவர் கொண்டு வந்து கொடுத்து உனக்கு எப்போது வசதிப்படுகின்றதோ? அப்போது கொடு? இனியாவது தொழிலில் நல்ல விதமாகப் பிழைக்கும் வழியைப் பார்? என்று நடந்தால் அந்த நாள் உங்களுக்கு எப்படியிருக்கும்?

உங்களுடன் 1 முதல் கல்லூரி வரைக்கும் படித்தவன், படித்தவர்கள், தொழில் வாழ்க்கையில் உங்களுடன் தொடர்ந்து பயணித்தவர்கள், பயணித்துக் கொண்டிருப்பவர்கள், உங்கள் குடும்ப பின்புலத்தை அறிந்தவர்கள், உங்களுடன் தற்போது வரைக்கும் நல்ல புரிதலில் இருப்பவர்கள் உங்களின் தனிப்பட்ட திறமைகளை அங்கீகரித்து பலருடன் பெருமையாக அதனைப் பகிர்ந்து கொண்டு இவன் என்னோடு படித்தவன் என்று சொல்லி பலருக்கும் அறிமுகம் செய்து வைத்தால் அந்த நாள் எப்படியிருக்கும்?

மாற்றுக் கொள்கை, மாற்றுச் சிந்தனைகள், மாற்றுச் சித்தாந்தங்கள் மேல் நம்பிக்கைக் கொண்டு இருந்தாலும் உன்னை எனக்கு நிறையப் பிடிக்கும்? நீ நிச்சயம் வெல்வாய்? என்று எப்போது நம்மை ஆசீர்வாதம் செய்தால் அதனையும் வெளிப்படையாகச் செய்தால் எப்படியிருக்கும்?

நீங்கள் பணிபுரிந்து நிறுவன முதலாளி இடைவெளி விட்டு உங்களைச் சந்திக்கும் போது அப்படியா? நீ நல்லா வருவாய்? என்று ஆசீர்வாதம் செய்தால் எப்படியிருக்கும்?

உங்களுடன் உடன்பிறந்தவர்கள் உங்கள் எழுத்துக்கு வாசகராக இருந்தால், மற்றவர்களுடன் அதனைப் பெருமையாகப் பகிர்ந்தால் அந்த நாள் எப்படியிருக்கும்?

இவையெல்லாம் ஒரே ஒரு புத்தகத்தின் மூலம் நடக்க வாய்ப்புள்ளது என்பதனை 5 முதலாளிகளின் கதை எனக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக வெவ்வேறு சம்பவங்கள் மூலம் உணர்த்திக் கொண்டேயிருக்கிறது.

•••••••


வாசகர் கடிதம் 1

அன்புள்ள ஜோ

உங்களின் 5 முதலாளிகளின் கதையை வாசித்தேன். நீங்கள் ஏன் அதில் 3 ஷா விஷயத்தை எழுதாமல் விட்டு விட்டீர்கள்? இது வாசகர்களுக்குச் செய்யும் துரோகம் அல்லவா?

அன்புள்ள ஜா

எழுதிவிடலாம். தவறில்லை. ஆனால் 5 முதலாளிகளின் கதையை இப்போது அமேசான் தகுதியான இடத்தில் கொண்டு போய் நிறுத்தியுள்ளனர். எனக்கு முன்னால் நான்கு பேர்கள் போட்டியில் உள்ளனர். நானே தத்தித்தத்தி மேலே வந்து கொண்டிருக்கின்றேன். 5 லட்சம் என்றதும் மின் அஞ்சல் வாயிலாகப் பணம் கட்டி தங்கள் புத்தகத்திற்குத் தொடர்ந்து விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றார்கள். இடைவிடாத மழை போலச் சூறாவளியை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். இது போன்ற சூழலில் அவற்றையெல்லாம் எழுதினால் போட்டியாளர்கள் என்ன செய்வார்கள்? எப்படி ரிப்போர்ட் அடிப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா?

உங்களுக்கு ஏன் இந்த சமயத்தில் வீபரித ஆசை. அவற்றையெல்லாம் எழுதினால் தமிழ் காமக்கதைகள் வரிசையில் கொண்டு போய் கிண்டில் அல்கரிதம் சேர்த்து விடுமே? நான் எழுதிய சில சம்பவ கோர்வைகளைப் படித்த நண்பர்கள் உங்களை எப்படி விட்டு வைத்திருக்கிறார்கள்? ஏன் இன்னமும் ஆட்டோ வீட்டுக்கு வராமல் இருக்கிறது என்று ஆசீர்வாதம் செய்து கடிதம் எழுதுகிறார்கள்.

மேலும் நீங்கள் குறிப்பிட்ட விசயம் இரண்டு தொழில் முனைவோரிடம் நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தம். தொழில் என்றால் ஒருவர் தானே பலன் பெற முடியும்? அப்படித்தான் புட்டாமா போட்டு நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கருப்பாயி வென்றார். அவருக்கு நீங்கள் வாழ்த்து தான் சொல்ல வேண்டும்.

அவற்றை எல்லாம் சம கால இளைஞர்கள் முழுமையாகத் தெரிந்து கொண்டால் கருப்பாயியை முன் மாதிரியாக எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளதால் அது தேவை இல்லை என்று தவிர்த்து விட்டேன்.

உங்களின் புரிந்துணர்வுக்கு நன்றி.
#Amazonpentopublish2019
#5MuthalaleegalinKathai
#JothiGanesan
#5முதலாளிகளின்கதை








2 comments:

G.M Balasubramaniam said...

உங்களுக்கு சோலைமலை சம்பத்தை தெரியுமா எப்பொழுதோ உங்கள் ஃபேஸ் புக்கிலா ?பார்த்த நினைவு

ஜோதிஜி said...

Face Book Link தரவும்.