ஒவ்வொரு முறையும் மாநிலத்தில் அல்லது மத்தியில் ஆட்சிகள் மாறுகின்றது. முந்தைய ஆட்சியில் நடந்த ஊழல்வாதிகளைக் கூண்டில் ஏற்றுவோம் என்று ஆட்சிக்கு வந்தவுடன் அறைகூவல் விடுப்பதை, பாஜக வை காங்கிரசுக்கு எதிரி போலவே நாம் இன்று வரையிலும் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்? நம்பிக் கொண்டு இருக்கின்றோம்? இது உண்மையா?
ஊடகத்துறையில் பணியாற்றும் கதிர்வேல் என்பவர் இது குறித்து முன்பு எழுதிய தகவல் இது. இதைத்தான் நான் தொடக்கம் முதலே சொல்லிக் கொண்டு வருகிறேன்.
அதிகாரம் என்பது எங்கு? எப்போது? யார் மேல்? எந்த நிலையில்? பயன்படுத்த வேண்டுமோ அந்த நிலையில் மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதே இந்திய அரசியலில் எழுதப்படாத சாசனமாக உள்ளது.
நாம் தான் மதவாதம், மதசகிப்புத்தன்மை என்று உளறிக் கொண்டு இருக்கின்றோம்.
**************
கேள்விகளுக்கு அப்பாற்பட்டவன் எவருமில்லை என்கிற நக்கீர வம்சத்தின் வம்சாவளி நாம். ராஜீவ் காந்தி மீது சுமத்தப்பட்ட போபர்ஸ் ஊழல் புகாரை 16 ஆண்டுகள் புலனாய்வு செய்தது சிபிஐ.
காங்கிரஸ் ஆட்சியில் அல்ல. காங்கிரஸ் அல்லாத 3 ஆட்சிகளில்.
2004 ல் தீர்ப்பு வழங்கிய நீதிபதி என்ன சொன்னார்?
ராஜிவ் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் அல்ல, ஆதாரம் இருக்கலாம் என்பதற்கான அடையாளம்கூட சிபிஐக்கு கிடைக்கவில்லை என்றால், குற்றச்சாட்டின் நோக்கம் குறித்து இதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை.. என்றார் நீதிபதி. எஸ் டி ஷர்மா மாதிரி ஏதோ பெயர்; எனக்கு நினைவில்லை.
அப்போது யார் ஆட்சி தெரியுமா?
பிஜேபி கூட்டணி ஆட்சி.
பிரதமர் யார் தெரியுமா?
அடல் பிகாரி வாஜ்பாயி.
அப்பீல் செய்யலாமா என்று சட்ட அமைச்சகம் கேட்டபோது, பிரதமர் வாஜ்பாய் சொன்ன பதில் நினைவிருக்கிறதா?
"இதற்கு மேலும் என் அரசாங்கம் நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் அவமானப்பட வேண்டுமா?" என்று கேட்டார் அவர்.
"இன்று நான் உயிரோடு இருப்பது ராஜிவ் காந்தியின் கருணையால்" என்று வெளிப்படையாக பேட்டி அளித்த வாஜ்பாய், அதற்கு நன்றிக் கடனாக ராஜிவை விட்டுவிட்டார் என நினைக்க வேண்டாம்.
"மணிப்பூரில் நமது அரசு செய்ததைவிட இது மலிவாக தெரிகிறதே? மக்கள் நம்மை எவ்வளவு கேவலமாக எடைபோடுவார்கள்?" என்று கொதித்தார் அந்த பிஜேபி ப்ரதான் ப்ரசாரக்.
மணிப்பூர் அரசு விவகாரம் நடந்தபோது நீங்கள் பள்ளி மாணவனாக இருந்திருக்கலாம்.
"அரசுக்கு சொந்தமான கோழி குஞ்சுகளை திருடி சென்று விட்டார்" என்று வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ய வாரன்டும் பிறப்பித்தது, மணிப்பூர் அரசு.
அது ஜனதா கட்சி அரசு. மத்தியிலும் அப்போது ஜனதா கூட்டணி அரசு. அதன் பிரதமர் மொரார்ஜி தேசாய். பிஜேபி அதன் அங்கம்.
கோழி திருடிய குற்றவாளி பெயர் இந்திரா காந்தி!
இதற்கு மேலும் அந்த நிகழ்வு குறித்து சந்தேகம் இருந்தால், நீங்கள் ஆதரிக்கும் கட்சியின் முக்கியஸ்தரான டாக்டர் சுப்ரமணியன் ஸ்வாமியை கேளுங்கள்.
பயங்கரவாதிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஒரு தேசபக்த குடும்பத்தின் பிரதிநிதியை, கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் அசிங்கமாக விமர்சித்த நபரையும், அவரது வாரிசை வழிப்பறி கொள்ளையனாக சித்தரித்த அம்மணியையும் ஆதரிப்பது உங்கள் உரிமை. முழுமையாக அதை மதிக்கிறேன்.
அதற்காக, எதையும் எடுத்து வீசிவிட்டு போவோம்; அதை கேட்க எவருக்கும் உரிமை இல்லை என நீங்கள் நினைத்தால், ஸாரி ப்ரபசர், நீங்கள் மோடி கேபினட்டில் மினிஸ்டராக இருக்க வேண்டியவர்.
போபர்ஸ் வழக்கை தோண்டி எடுத்து விசாரிக்க மோடி அரசு தலைகீழாக நின்று பார்த்தது.
கையால் சீண்டினால் பாவம் என்று காலால் ஒதுக்கி தள்ளியது சுப்ரீம் கோர்ட். மறந்து விட்டீர்களா?
எல்லாம் போகட்டும். ஒரே ஒரு கேள்வி. பதில் சொல்லுங்கள்.
கடைந்தெடுத்த ஒரு க்ரிமினல் குடும்பத்தை மொத்தமாக ஜெயிலில் தள்ள முழுசாக ஐந்து வருசம் போதவில்லை என்றால், அதைவிட வெட்கக்கேடு ஏதாகிலும் உண்டா, சொல்லுங்கள்.
******************
நம்மைச்சுற்றிலும் எதிர்மறை எண்ணங்களை விளைவிக்கக்கூடிய தகவல்களும், செய்திகளும் தான் வந்து விழுந்து கொண்டேயிருக்கின்றது.
நான் எப்போது சிறுபான்மைப் பிரிவுகளைச் சேர்ந்த நண்பர்களிடம் உரிமையுடன் சொல்வேன். தயவு செய்து உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை உயர் கல்வி வரைக்கும் கொண்டு போய் நிறுத்துங்கள். இடையில் எக்காரணம் கொண்டும் நிறுத்திவிடாதீர்கள். உங்களுக்கு மதம் எந்த அளவுக்கு முக்கியமோ எதிர்கால தலைமுறையினருக்கு அவர்கள் கல்வி தான் மிக மிக முக்கியம் என்பேன்.
ஆனால் இன்று வரையிலும் முடிவு ஜீரோ தான். நாம் ஊதுகின்ற சங்கை ஊதிக் கொண்டேயிருக்க வேண்டியது தான்.
வாய்ப்பிருந்தால் இந்த காணொலிக் காட்சியை நேரம் ஒதுக்கி முழுமையாகப் பாருங்கள். உங்களுக்கே புரியும்.
*****************
இந்திய நீதித்துறையின் நேர்மைக்கு ஓர் உயர்ந்த உதாரணம் மாண்புமிகு நீதியரசர் 2gபுகழ் ஓபி சைனி அவர்கள். நேர்மையின் சிகரம் ஒப்பில்லா ப சிதம்பரம் , கார்த்திக் சிதம்பரம் இவர்களுக்கு உச்ச நீதி மன்றம் வழங்கி இருக்கும் ஜாமீன்களின் கால அளவு. பொது மக்களுக்கு நீதியின் மீது உயர்ந்த நம்பிக்கையை அளிக்கும் இந்த செய்கைக்கு எப்படியும் நியாயம் கற்பிப்பார்கள்.
ஆனால் அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும். இதை தாண்டி சொல்ல வேறொன்றுமில்லை. அதே போல ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகாரும் நீர்த்து போய் நீதியின் மீதான நம்பிக்கையை மக்களுக்கு வாரி வழங்கி இருக்கிறது.
தயாநிதி மாறன்கள், கனிமொழிகள், ஷாகித் உஸ்மான் பல்வாக்கள், ப சிதம்பரங்கள், ராபர்ட் வாத்ராக்களின் ஊழல் , கொலை, கொள்ளைகளுக்கு இயற்கையாகப் பார்த்து தண்டித்தால் தான் உண்டு.
தயாநிதி மாறன்கள், கனிமொழிகள், ஷாகித் உஸ்மான் பல்வாக்கள், ப சிதம்பரங்கள், ராபர்ட் வாத்ராக்களின் ஊழல் , கொலை, கொள்ளைகளுக்கு இயற்கையாகப் பார்த்து தண்டித்தால் தான் உண்டு.
28 comments:
உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை உயர் கல்வி வரைக்கும் கொண்டு போய் நிறுத்துங்கள். இடையில் எக்காரணம் கொண்டும் நிறுத்திவிடாதீர்கள். உங்களுக்கு மதம் எந்த அளவுக்கு முக்கியமோ எதிர்கால தலைமுறையினருக்கு அவர்கள் கல்வி தான் மிக மிக முக்கியம்
உண்மை
உண்மை
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். உண்மைதான்.
முகநூல் நண்பரின் ஓர் பகிர்வு
ராஜீவ்காந்தி கொலை பற்றிய பத்துகேள்விகள் :
1.ராஜீவ் காந்தி கொலை செய்யப் படும் போது அவர் யார்?
பிரதம மந்திரி வேட்பாளர்
2.கொலையாகும் போது ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து கொண்டிருந்தார்?
தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தார்
3.அவருடன் பலியானது எத்தனை பேர்?
ராஜீவ் காந்தியும் கொலையாளியும் சேர்த்து 14 பேர் .
4.ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது, கூட இருந்தவர்களில் காங்கிரஸ் தலைவர்கள் எத்தனை பேர் ?
ஒருவரும் இல்லை
5. ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது காயம்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் எத்தனை பேர்?
ஒருவர் கூட, கூட இல்லை
6.இந்திய அரசியலில் இது போன்று தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் வேட்பாளரை சுற்றி யாரும் இல்லாமல் தனியாக விடப்பட்டதுண்டா?
இதுவரை நடந்ததில்லை
7.கொலையாளி கட்டியிருந்த பெல்ட் bam 5 அடிக்கு அப்பால் இருப்பவரை கொல்ல முடியுமா?
முடியாது
8.கொலையாளி, ராஜீவ் காந்திக்கு மிக அருகில் செல்ல முடியும் என்பது முன்பே திட்டமிடப்பட்டதா?
ஆம்
9. ராஜீவ் காந்தி அரசியல் வாழ்வில் மொத்தம் எத்தனை அரசியல் பொதுக்கூட்டத்தில் பேசினார்?
181
10. இதில் எத்தனை பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி உடனிருந்தார் ?
181 ல் 180 கூட்டத்தில் உடன் இருந்தார். அவர் இல்லாமல் போனது இந்த கடைசிகூட்டத்தில் தான்
பத்து கேள்விகளையும் அதன் பதிலையும் சிந்தித்துப் பாருங்கள் இது யார்மனதையும் புண்படுத்தம் கேலிசெய்ய அல்ல... என்னைபோன்ற பலருக்கும் எழுந்த எழுகின்ற கேள்வி...
அருமை. இப்போது சீனாவின் பங்கு இதில் உள்ளது என்பது போன்ற ஆதாரப்பூர்வ கட்டுரைகள் வந்து கொண்டு இருக்கின்றது. காரணம் சுசா சீனாவின் நெருங்கிய தோஸ்த்.
நேற்று இதே போல் ஒரு நண்பர் பதிவு செய்து இருந்தார்... வலைத்தளம் என்றால் அடுத்த நொடியே சொல்லி விடுவேன்... ஆனால் பகிர்ந்தது முகநூலில்... நினைவில் உள்ள அதன் சாராம்சம் சில :- (என்னுடைய பார்வையுடன்)
1) கொலையாளி யார்...? எப்படி நடந்தது...? என்று தான் பல பேர்கள் புத்தகங்கள் எழுதி "பணம்" பார்த்து விட்டார்கள்...
2) இது ஏன் நடந்தது என்று யாருமே யோசிக்கவில்லை... அது தான் இந்தியாவை "ஹிந்தியா" ஆக்கும் திட்டம்...
3) பலமுறை இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கம், இன்று நாடாளுமன்றம் பாராளுமன்றம் உட்பட அனைத்து துறைகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, (ஜோதிஜி போன்ற நடுநிலை ஆட்களை கவிழ்த்தது உட்பட) கொக்கரிக்கும் கூட்டம் இந்திய இறையாண்மைக்கு ஒரு சவால்...!
4) குஜராஜ்-த்தில் பல வன்முறைகள் நடந்த பின்பும், "மோடி எப்படி புனிதர் ஆனார்...?" / ஆக்கப்பட்டார் என்பது யாருக்குமே தெரியாது...
5) மொத்தத்தில்... பல வருடங்களுக்கு முன்பே ராஜீவ்காந்தி அவர்களின் கொலையை எப்படி திட்டமிட்டு செய்தோமோ, அதே போல நாமும் பொறுமையுடன் இந்த இந்தியாவை, மாநில மாநிலமாக அழிக்க வேண்டும்... அதற்கு காங்கிரஸ் (காங்கு ) வழியே தான் நம் வழி... அவர்கள் பொய் சொல்லி கொள்ளையடித்தார்கள்... நமது கொள்கை நாம் உண்மை (!) மட்டுமே சொல்லி, அவர்களை விட கொள்ளை, கொலை செய்து நாட்டை நாசமாக்குவோம்... ஜெய் ஸ்ரீராம்... வாழ்க கோட்சே... வாழ்க RSS புகழ்...
நன்றி அண்ணே...
2ஊழலை பாஜக ஒழித்து விடுமா பஜக அல்ல எந்த கொம்பனாலும் முடியாது ஊழல் என்பது ஏதோ கட்சி மட்டத்தில்தான் நிகழ்கிறதா ஊழல் எங்கும் எதிலும் வியாபித்து இருப்பது ஆட்சியிலிருப்ப்சவர்கள் ஏதோதங்கள் ஆட்சியிலூழலே இல்லை என்பது போல் சீன் காடலாம் ஆனால் சாதாரண மனிதனுக்குத்த்தெரியும் ஆட்சியில் இருப்போர் எல்லாவற்றையும் டிட்டமிட்டே செய்கிறார்கள் அதற்கு துணை போவதுஅரசாங்க அதிகாரிகள் அவர்களுக்கு சட்டத்தை எப்படி வளைப்பதுஎன்பது தெரியும் கோலட்தில் போனால் தடுக்கு என்பது போல் மேலும் நம்கணோட்டம் பொதுவாக ஏதோ பெர்செப்ஷன் பேரிலேயே இருக்கிறது
எந்த வருடமும் இல்லாத அளவுக்கு அரசு பள்ளிக்கூடங்களில் ஒரு லட்சம் மாணவர்கள் வந்து சேர்ந்துள்ளார்கள். வாழ்த்துகள் தலைவரே. உங்க பள்ளிக்கூடம் எப்படி?
என்னத்த கொல்லுது. ஆர்எம் வீரப்பன் எல்லாம் இன்னமும் உயிரோடு தானே இருக்காரு. இது போல பட்டியலில் உள்ளனர். என்னவொன்று சீக்கு செரங்கு வந்து எப்படா சாவு வரும்ன்னு நொந்து போய் பீ மூத்திரம் அள்ளி கடைசியில் கொள்ளி போடும் வரைக்கும் பலரையும் படுத்தி எடுத்துத்தான் சாகின்றார்கள். பணம் இருப்பதால் வெளியே தெரிவதில்லை.
குஜராத் கலவரம் புத்தகம் குறித்து ஒருவரின் புத்தகம் படித்தேன். அது அவர் மோடி எதிர்ப்பு என்ற நிலையில் எழுதியிருக்கின்றார். இது தவிர மருதன் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். இரண்டும் படித்து விட்டேன். ஆனால் இன்னமும் எனக்கு தெளிவான பார்வை கிடைக்கவில்லை. அங்கங்கங்கே விடுபட்ட இடங்கள் உள்ளது. அதனால் அதன் விமர்சனம் எழுதத் தோன்றவில்லை.
ஏற்கனவே இந்த பெர்செப்ஷன் வார்த்தையை வேறொரு பதிவில் சொல்லியிருக்கீங்க. அது எனக்கு பெரிய தாக்கத்தையும் உருவாக்கியது. அது குறித்து ஒரு சிறிய இடைவேளை விட்டு எழுதுவேன்.
அரசன் அன்று கொல்லாதபோது தெய்வம் நின்று கொல்லும் என்று எதிர்பார்த்து நிற்பது பாமர மக்களின் எதிர்பார்ப்பு. அதற்கும் எத்தனைத் தலைமுறைகள் காத்திருக்க வேண்டுமோ? எப்போதாவது எதிர்பாராமல் ஏதாவது நிகழும்போது "பார்த்தியா.. தெய்வம் கேட்டு விட்டது" என்று சொல்லலாம்!
ஊழலை ஒழிக்க யுகம் யுகமாக முயன்று கொண்டிருக்கிறார்கள்!
ஊழல் - அது அரசியல்வியாதிகள் மட்டும் செய்வதில்லை. பொதுமக்களும் செய்கிறார்கள். ஊழலுக்கு இங்கே ஒவ்வொருவரும் காரணம். அவனை நிறுத்தச் சொல், நான் நிறுத்துகிறேன் என்று சொல்லிக் கொண்டே ஊழலைத் தொடரலாம்.
(ஜோதிஜி போன்ற நடுநிலை ஆட்களை கவிழ்த்தது உட்பட)
ஒரே காரணம் இங்கிருப்பவர்களை நம்பி நம்பி ஏமாந்தது. தன் குடும்பம் மட்டும் யோசித்த புண்ணியவான்களுக்கு மோடி என்ன தான் செய்வார்? என்று சின்ன நம்பிக்கையின் அடிப்படையில். இந்த முழு வருடம் காத்திருப்பேன். அப்புறம் இருக்கு வேடிக்கை. நீங்க பார்க்கத்தான் போகின்றீர்கள்?
தலைவரே அசத்தல். இது தான் உண்மை.
நெருங்கிய நண்பர்களிடம் பேசினால் நீங்க ஐடியலிஸ்டிக் என்று என்னை கட்டம் கட்டுகின்றார்கள். பேச்சை குறைத்து விட்டேன்.
முற்றிலும் உண்மை.
ஊழலை ஒழிக்க முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள்.., முடிவு என்பது கேள்விக்குறியே...
https://www.indiatoday.in/magazine/cover-story/story/19870215-rajiv-gandhis-most-insensitive-blunder-a.p.-venkateswaran-removal-as-foreign-secretary-798506-1987-02-15 ஜோதிஜி! இந்த லின்கைப்பிடித்துக் கொஞ்சம் பாருங்கள்! AP வெங்கடேஸ்வரன் பதவிநீக்கம் செய்யப்பட்டதன் பின்னணி அமெரிக்கக் கூலிப்படை ஜ்யவர்தனே புகார் என்று கொஞ்சம் போகிறதே! சு சாமியை உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம்! அதற்காக சீனாவையும் ராஜீவ் கொலையில் கோர்த்துவிடுவது நெம்பவே ஓவராகத் தெரியவில்லையா? திருச்சி வேலுசாமி மாதிரி திடீர் காங்கிரஸ்காரர்களுக்கு சு சாமி மீது பழிபோடுவது வாடிக்கையாக இருக்கலாம். சந்தேகவலையில் விசாரிக்கப்படவேண்டிய பலரையும் விசாரிக்காமல் விட்டதன் பின்னணியில் சீனாதான் அல்லது சுசாமி தான் இருந்தனரா?
இது கலியுகம்! அன்றே கொல்வதோ நின்று கொல்வதோ சினிமா , சீரியல்களில் கூட நடவாத காரியம்.
திண்டுக்கல் தனபாலன் கொஞ்சம் கூடப் பொருத்தமில்லாத கான்ஸபிரசி தியரிகளை அடுக்குவது வேடிக்கையாக இருக்கிறது! நரேந்திர மோடி மீது வெறுப்பு, பயம் இருப்பதனால் இப்படியா அடுக்குவது?.
இப்போதுதான் மார்கரெட் ஆல்வா எழுதியிருக்கிற சுயசரிதை பற்றிக் கொஞ்சம் விமரிசனங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சோனியாG பற்றிச் சொல்லப்படுவதில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட மோடி மீது சொல்ல முடியவில்லை.
GMB சார்! ஜோதிஜி! ஊழல் விஷயத்தை இப்படிப் பார்க்கலாமே!
என்னமோ நாளையோ மறுநாளோ உலகமே அழிந்துவிடப்போகிற மாதிரி ஒரு அவசரத்தில் 2004 முதல் 2014 வரையிலான பத்தாண்டுகளில்தான் இந்தியாவில் ஊழல் மிகவும் கோரமாகத் தலைவிரித்தாடியது. நம்மூர் நீதிமன்ற நடைமுறைகளில் இருக்கிற ஓட்டைகள் சலுகைகளைப்பயன்படுத்தி எவரையும் தண்டிக்க முடியவில்லை என்பது ஒருபக்கமிருக்கட்டும். நரேந்திரமோடி பதவிக்கு வந்து இந்த ஐந்தாண்டுகளில் பிஜேபி அமைச்சர்கள் மீது எந்தவொரு லஞ்சப்புகாரையாவது குறிப்பிட்டுச் சொல்ல முடிந்ததா என்ற ஒரு கேள்விக்கு மட்டும் நியாயமான விடையைத் தேடிப்பாருங்கள்! ஊழல் செய்ய இடம் கொடுக்காமல் இருப்பது ஒரு முன்னேற்றம், ஊழல் ஒழிப்புக்கு ஒரு வலுவான முதல் படி என்று தோன்றவில்லையா?
உண்மை
தனிப்பட்ட முறையில் உண்மையாக பதில் சொல்லுங்க. சு சாமி இந்த நாட்டின் அனைத்து வசதிகளை அனுபவித்தார். இன்று வரையிலும் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றார். இந்தியாவிற்கு அவரால் என்ன பலன்?
அருமை
மாறும். மாற வேண்டும்.
ஜோதிஜி! இன்றைக்கு எழுதியிருக்கிற பதிவு உட்படப் பல இடங்களிலும் நன் சொல்லிவருவது ஒன்றே ஒன்றுதான்! இங்கே சோனியாG +வாரிசுகளை அவரளவுக்குத் தெருவில் இழுத்து விட்டவர் எவருமில்லை. ஆனால் அதனால் ஆதாயமடைந்த பிஜேபி கூட வெறும் ராஜ்யசபா சீட் கொடுத்து ,புறந்தள்ளி விட்டது. இங்கே ஒன்றுக்கும் உதவாத அரசியல்வாதிகளை திராவிடங்கள் உருவாக்கியது மாதிரி (ஒரே ஒரு விதிவிலக்கு இரா.செழியன் மட்டுமே) அவரை ஒதுக்கி வைத்து விட முடியாது.
சுசா உங்கள் பார்வையில் புத்திசாலி திறமைசாலி என்று ஏதோவொரு வகையில் அவரை பெருமையாகப் பார்ப்பது புரிகின்றது. என் பார்வையில் அவர் ஒரு அப்பட்டமான புரோக்கர். இந்த வார்த்தையை எழுத முக்கியக் காரணம் ஜெ வின் இரண்டாவது ஆட்சி காலத்தில் அவர் ஆட்சியை காவு வாங்கக்கூடிய குறிப்பாக சொத்து அடங்கிய தகவல்களை சுசா விடம் கொண்டு போய் கொடுத்தனர். அப்போது ஜெ வுக்கு சுசா வுக்கு நல்லுறவு இல்லை. அன்று அவர் நினைத்திருந்தால் ஆட்சியை கவிழ்த்திருக்க முடியும். லட்டு போன்ற விசயங்கள் அடங்கியது. ஆனால் 500 கோடி பேரத்தில் குப்பைக்குச் சென்று விட்டது. இன்று வரையிலும் சசிகலா குறித்து அக்கறைப்பட்டுக் கொள்வதற்குப் பின்னாலும் அவர் அடைந்த லாபங்களின் பட்டியல் மிக நீளம். அவர் சீனாவின் குடிமகன். இஸ்ரேலின் நிரந்தர குடிமகன். நான் பிராமணன் நான் பிராமணன் என்று எல்லா இடத்திலும் கூச்சம் இல்லாமல் பேசுபவர் ஏன் முஸ்லீம் மருமகனை ஏற்றுக் கொண்டார். இப்போது பேரனை முஸ்லீமாக வளர்ப்பாரா? இல்லை இந்துவாக வளர்ப்பாரா? அவர் புத்திசாலித்தனம் அல்லது திறமை எல்லாமே உச்சநீதி மன்ற லாபி வட்டத்திற்குள் மட்டும் தான் இருக்கின்றது. அதை வைத்துக் கொண்டு தான் இந்த ஆட்டம் காட்டுகின்றார். சோனியா குறித்து சொன்னீங்க. ப சிதம்பரம் முதல் சொத்துப் பட்டியல் வெளியிட்டார். ஏன் இரண்டாவது வெளியிடவில்லை. அதற்குப் பின்னால் நிச்சயம் பேரம் இருக்கும். தமிழர்களை அசிங்கப்படுத்துவதில் இவரை மிஞ்ச ஆளே இல்லை. ஆனால் வாழும் வாழ்க்கை முழுக்க ஒயிட்காலர் கிரிமினல் தனமானது. ஜெ வின் குறியில் தப்பிய இரண்டு பேர்கள் ஒன்று இவர் மற்றொருவர் நக்கீரன் கோபால். நக்கீரன் கோபால் சட்ட பாதுகாப்பை பெற்று தப்பித்தார். இவர் தன் லாபி செல்வாக்கால் உயிர் பிழைத்தார். இல்லாவிட்டால் தேவாரம் விமானத்தில் இருந்தவரை இறக்க முயற்சித்த போதே கதை முடிந்திருக்கும். தப்பி விட்டார். பாஜக நல்ல காரியம் இவரை கோட்டைவிட்டு வெளியே நாய் போல வைத்திருப்பது. தேவைப்படும் போது பிஸ்கட் போட்டால் போது. தேவையான சமயத்தில் குலைக்கும் அல்லவா?
Post a Comment