சமீபத்தில் மத்திய அரசாங்கம் வெளியிட்ட கல்வி வரைவு திட்டத்தில் மும்மொழி கல்விக் கொள்கையை வெளியிட்டது. எப்போதும் போலத் தமிழகத்தில் மிகப் பெரிய எதிர்ப்பை சந்தித்தது. ஹிந்தி புறவாசல் மட்டுமல்ல. எந்த வாசல் வழியாகவும் தமிழகத்தின் உள்ளே வரக்கூடாது என்பதனை இங்குள்ள கட்சிகள் எதிர்த்தனர். குறிப்பாகத் திராவிடக் கட்சியினர் இந்த விசயத்தில் ஆர்வம் கட்டினர்.
இதன் தொடர்ச்சியாக பாஜகவின் ஹெச் ராஜா ஒரு அறிக்கையை வெளியிட்டார். அத்துடன் சில ஆதாரங்களையும் உடன் வெளியிட்டார்.
சென்னை மற்றும் தமிழகம் எங்கும் திமுகவினருக்குச் சொந்தமான கல்விக் கூடங்களின் பட்டியலை வெளியிட்டார்.
+++++++
இது நிச்சயம் பாகம் 1 ஆக இருக்கும். இன்னும் பல பாகங்கள் உள்ளது.
அரசியல்வாதிகள் தொழில் நடத்துவது தவறில்லை. அவர்கள் தங்கள் கடுமையான உழைப்பின் மூலமே தங்களுக்கு உரிய இடத்தை அடைந்துள்ளார்கள் என்பதனையும் நான் நம்புகிறேன். அதனை தக்க வைத்துக் கொள்ள மற்றவர்கள் போலவே அனுதினமும் போராடிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதனையும் உறுதியாக நம்புகிறேன்.
நான் கேட்க விரும்பும் கேள்விகள் எளிமையானது. எங்களுக்கு எந்தக் கொள்கையும் இல்லை. எல்லாவற்றையும் போல இதுவொரு வியாபாரம். வியாபாரிகளுக்கு லாபம் தான் முக்கியம் என்றால் எந்தப் பிரச்சனையும் இல்லை. யாரும் எந்தக் கேள்வியும் கேட்க உரிமையும் இல்லை.
ஆனால் ஒரு முகம் வியாபாரியாகவும் மறுமுகம் இது பெரியார் மண். இங்கே எவ்விதமான பிற்போக்குத்தனங்களையும் அனுமதிக்க மாட்டோம் என்று கொள்கையோடு வாழும் மகா பெரியவர்களிடம் மட்டும் என்னிடம் கேட்க கேள்விகள் உள்ளது.
யாருக்காவது பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.
1. பகுத்தறிவு கொள்கை என்று கச்சைகட்டி சலங்கை கட்டி ஆடும் பெரியவர்கள் தாங்கள் நடத்தும் பள்ளியில் அட்மிசன் விஜயதசமியில் தொடங்குகின்றது என்று அறிவிப்பு வெளியிடுகின்றார்களே? ஏன்?
2. எத்தனை பள்ளி்களில் பெரியார் படங்களை மாட்டிவைத்து உள்ளார்கள். பெரியார் பிறந்த தினத்தை எத்தனை பள்ளி்ளில் முக்கிய விழாவாக கொண்டாடுகின்றார்களா?
3. தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு இது போன்ற பள்ளிகளில் எத்தனை சதவிகிதம் ஒதுக்கி வருடந்தோறும் அவர்களின் வாழ்க்கையில் விளக்கெற்றி வைக்கின்றார்கள்?
4. தங்கள் கட்சி சார்ந்த பணம் இல்லாத தொண்டர்களின் குடும்பத்திற்கு எத்தனை பள்ளிகள் இலவச படிப்பு படிக்க அனுமதி வழங்குகின்றார்கள்?
5. ஒவ்வொரு பள்ளியிலும் ஆர்எஸ்எஸ் ஊடுருவிகிறது? கூட்டம் நடத்துகிறது? ஷாகா நடத்துகின்றது? என்று குற்றச்சாட்டு சொல்பவர்கள் ஏன் அவரவர் பள்ளியில் திராவிடம் 1 2 3 4 5 போன்ற கூட்டங்கள் நடத்தி திராவிடத்தின் அருமை பெருமைகளை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து இருந்தால் கடந்த பத்து வருடங்களில் கோடிக்கணக்கான மாணவர்களிடம் புத்துணர்ச்சி உருவாகியிருக்குமே? ஏன் அது நடப்பதில்லை?
6. அரசாங்கம் நடத்தும் கல்வித்துறை என்பது தற்போது கொள்ளையடிப்பது பாதி. கொஞ்சூண்டு கவனிப்பது மீதி என்று தான் உள்ளது. ஆனால் தற்போது அரசாங்கத்திற்குச் சமமாக அனைத்து கட்சிகார்களுக்கும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உள்ளது. இவர்கள் கட்சி ரீதியாக எதிர்முனையில் இருந்தாலும் மொத்தத்தில் அண்ணா கொள்கை, பெரியார் கொள்கை என்பதில் தானே வந்து முடிக்கின்றார்கள். அப்படியென்றால் இவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் ஒன்றல்லவா? செய்ய வேண்டியது தானே?
பின்குறிப்பு
1. தரமற்ற பொறியியல் கல்லூரிகள் என்று அண்ணா பல்கலைக்கழகம் காறித் துப்பிய பட்டியலைப்பற்றி எந்த அரசியல்வாதிகளும் இங்கே பேச மாட்டார்கள்?
2. மத்திய அரசாங்கம் சிறப்புத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் கல்வி சார்ந்த செயல்பாடுகள் நடந்து கொண்டு வருகின்றது. அதில் பாதிக்கும் மேலே இங்குள்ளவர்கள் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக எவற்றையும் தமிழகத்தின் உள்ளே அனுமதிப்பதே இல்லை. காரணம் தமிழர்கள் தமிழ் மொழியை மறந்து விடுவார்களாம்?
3. இப்படி ஒரு திட்டம் செயல்பட்டுக் கொண்டிருப்பது (பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் இடங்களில்) தமிழகத்தில் எந்தப் பத்திரிக்கையிலும் நான் இதுவரையிலும் பார்க்கவில்லை. தமிழகத்தில் ஐந்து இடங்களில் இந்தப் பள்ளிக்கூடம் மத்திய அரசு ஆதரவுடன் நடந்து வருகின்றது.
Eklavya Model Residential Schools
http://vikaspedia.in/…/sc…/eklavya-model-residential-schools
https://tribal.nic.in/DivisionsFiles/sg/ListEMRS060418.pdf
8 comments:
அவர்களிடம் இருந்து இதற்கு பதிலே கிடைக்காது.
இதற்கு அவங்க கொடுக்க விளக்கம்.. உங்களுக்கு இன்னும் 30 வருடங்கள் கழித்து.. புரியுமான்னு கேட்குறீங்களா.. இல்ல.. அப்பவும் புரியாது :-) .
பலமுறை படித்து சிரித்துக் கொண்டேயிருக்கிறேன். பட்டாசு பாலுங்றது நீங்க தான் கிரி.
இணையத்தில் திமுக வுக்கு சொம்பு அடிச்சுகிட்டு இருக்கும் 200 ரூபா அடிமைகளாவது பதில் சொல்வார்களா ?
ஜோதிஜி, உங்கள ஓரளவு சுய சிந்தனையும், பகுத்து அறியும் திறனும் உள்ள ஆள் அப்டினு நினைச்சுருந்தேன்.. ஆனா கொஞ்ச நாள் முன்னாடி நடிகன் சிவகுமாரை பாத்துட்டு வந்து ஆஹா ஓஹோ மஹாபுருஷன்னு எழுதினப்பவே நீங்களும் தமிழ்நாட்டில் உள்ள மூளைக்கு கொஞ்சமும் வேலை கொடுக்காத குப்பைகளில் ஒருவர் என்று நான் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.. நிற்க.
உங்களுடைய இந்த கட்டுரை எப்படி இருக்கு தெரியுமா? "கலிங்கர் ஊட்டு புள்ளிங்கலாம் இந்தி படிக்கும்போது நாம புள்ளிங்களை மட்டும் இந்தி சொல்லிகுடுக்காம சொட்ட ஏமாத்திட்டான்" அப்டினு தமிழ்நாட்டில் உள்ள மொட்டை பாப்பானும், தன்னை பாப்பானாக நினைத்து கொள்ளும் வாந்திக்கு பிறந்த முட்டாள் பசங்களும் கேக்குற கேள்வி மாதிரிதான் இருக்கு!
தன்னுடைய அப்பன் ஆத்தா பெயர் தெரியாமல் பிறக்கும் அனாதைகளுக்கு, அக்கா அம்மாவுக்கு உண்டான வித்தியாசமே தெரியாமல் எல்லோருமே பொண்ணுங்க தான் என்பதாகவே தெரியுமாமே?
நீங்க ஏன் இந்த அனானியை தாக்குவதாக நினைத்துக் கொண்டு, ஒரு தப்பும் செய்யாத அனாதைகளப் போட்டு இப்படி தாக்குறீங்க?
அனானி ஆப்சனை தூக்கி விடுங்க. இல்லைனா இவர்கள "கவனிக்க" முயன்றூ நீங்களூம் கீழ இறங்கீடுவீங்க. அப்புறம் உங்க இஷ்டம்.
இல்லை வருண். இந்த மாதத்தோடு இணையத்திற்குள் வந்து பத்து வருடம் முடியப் போகின்றது. அங்கங்கே எழுதி வைத்த பல விசயங்களை இங்கே கொண்ட வர முடியாமல் நாள் கடத்திக் கொண்டு இருந்தேன். இப்போது அதை செய்து விட வேண்டும் என்பதற்காக ஒரு நாள் உட்கார்ந்து எல்லாவற்றையும் சேகரித்து வைத்து விட்டேன். இப்போது படிப்படியாக ஒவ்வொன்றாக தினமும் வெளியிட்டு வருகிறேன்.
அனானி ரூபத்தில் வந்தவர் கேட்ட கேள்வி அவறில்லை. அது அவர் பார்வை அல்லது கொள்கை. அவர் விமர்சனத்தையும் நான் ஏற்றுக் கொள்ளவே செய்கிறேன். என்னுடைய ஒரு கேள்வி என்னவென்றால் நான் எழுதுவதை நீ எப்படி வேண்டுமானாலும் கேள்வி கேட்க உரிமையுள்ளது. இது பொதுவிடம். ஓடி ஒளிய முடியாது. கூடாது. ஆனால் உனக்கென்று ஒரு கொள்கை என்று சொல்கிறாய் தானே? அப்படியென்றால் அந்த கொள்கையில் (அரசியல் சார்பு, தனிநபர்கள் சார்பு எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். அது அவர்களின் கருத்து சுதந்திரம் என்பதாகவே எடுத்துக் கொள்கிறேன்) உறுதியாக இருக்கும் பட்சத்தில் ஏன் உன் சொந்தப் பெயரில் சொந்த ஐடியில் வராமல் இருட்டுக்குள் நின்று கல் எறிகின்றாய் என்பது தான் என் கேள்வி. அப்படி எவரொல்லாம் இங்கே அனானி வடிவத்தில் வந்து கம்பு சுற்ற வருகின்றார்களோ அத்தனை பேர்களுக்கும் என் கம்பு சுற்றிக் கொண்டு இருக்கும். நாம இங்கே நாய்கள் போல பாலியல் ரீதியான, பேய்கள் போல பணத்தைக் காக்கும் மனித ரூபங்களுடன் சேர்ந்து வாழ்ந்தை அனைத்தையும் எதிர்த்து நின்று இன்னமும் தனித்துவமாய் வாழத் தெரிந்தவனுக்கு இவர்கள் எம்மாத்திரம்.
திமுக கல்வித்தந்தையர்கள்? - அருமையான, நிறைய விபரங்கள் அடங்கிய பதிவு. நண்பர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி
Post a Comment