மத்திய அமைச்சரவையில் நான் வெறுக்கக்கூடிய முதல் நபர் ரவிசங்கர் பிரசாத். அவர் என்ன சாதித்தார்? எதன் அடிப்படையில் அவரை இன்னமும் வைத்துள்ளார்கள் என்றே எனக்கு இன்று வரையிலும் புரியவில்லை. அவர் தற்போது ட்விட்டர் விவகாரங்களில் சொதப்பிக் கொண்டு இருப்பதை அகில உலகமும் கவனித்துக் கொண்டு இருக்கிறது. மோடி இது வரையிலும் வாய் திறக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.
மத்திய அரசாங்கம் ட்விட்டர் விசயத்தில் ஏன் இந்த அளவுக்கு மென்மையான போக்கை கடைப்பிடிக்கின்றது. நைஜீரியா அதிபர் செய்தது போல ஒரே நாளில் கடையை மூடி விடலாமே? என்ற பலரும் கேட்கின்றார்கள்.
நான் இதற்காகத்தான் வண்ணப்புரட்சி என்றொரு பதிவை எழுதினேன்.
கீழே கொடுத்துள்ளேன்.
நிச்சயமாக ட்விட்டர் விசயத்தில் இந்தியா போன்ற வளரும் நாடுகள் அவசரப்பட்டு எதுவும் செய்ய முடியாது. செய்யவும் முடியாது. அது தனியார் கார்ப்பரேட் உலகளாவிய நிறுவனம் மட்டுமல்ல. அதன் வலைபின்னல் உங்களாலும் என்னாலும் நினைத்தே பார்க்க முடியாத ஒன்று. மேலும் பைடன் அரசாங்கம் இப்போது வரைக்கும் மோடி அரசாங்கத்திற்கு நேரிடையாக ஆதரவு கரம் நீட்டவில்லை. அந்த எண்ணமும் இருப்பதாகவும் தெரியவில்லை. அவர்கள் வேறு ஏதோவொரு வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றார்கள்.
2024 இந்தியாவில் நடக்கப்போகும் தேர்தல் நம்மை விட அமெரிக்காவுக்கு மிக முக்கியமானது. இதை வாசிக்கும் போது வியப்பாக இருக்கும். காரணம் இந்தியாவில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் மாற்றங்கள் எதுவும் அவர்களுக்கு உவப்பானது அல்ல. ஒரு பக்கம் சீனா மற்றொருபுறம் இந்தியா இரண்டும் அவர்களுக்கு உலக ரவுடி அந்தஸ்த்தை இழக்க வைத்து விடுமோ என்று அஞ்சுகின்றார்கள்.
அவர்கள் பயம் கொள்வதில் அர்த்தம் உண்டு. உலகிலேயே அதிக கடன் உள்ள நாடு. இன்று வரையிலும் தங்கள் நாணய மதிப்பை வைத்து உலகத்தை தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருப்பதாக மிதப்பில் இருக்கும் நாடு என்று இது போலப் பட்டியல் இட்டால் பலவும் வரும்.
அவர்கள் இப்போதைய சூழலில் சீனா பக்கம் செல்ல வாய்ப்பே இல்லை. சென்றால் பிதுக்கி விடுவார்கள். ஆய் ஊய் என்று தூரத்திலிருந்து கொண்டு சலம்பல் ரவுடியாகத்தான் நடந்து கொள்ள முடியும். சீனா நினைத்தால் அமெரிக்காவிற்கு மிகப் பெரிய பொருளாதார அழிவை ஒரு நாள் பொழுதில் உருவாக்க முடியும். எனவே மேலே கீழே மூடிக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஆனால் இந்தியா அப்படி அல்ல. இங்கு தான் மேலேயிருந்து கீழே வரைக்கும் துரோகிகளும், நாட்டை காட்டிக் கொடுக்கும் பத்தனன் கூட்டமும் (பத்தினிக்கு எதிர்மறை) உள்ளதே. ராகுல் ஒரு பக்கம் நீங்க வாங்க. எங்கள் பிரச்சனையில் தலையிடுங்கள் என்று கண்ணீர் விட்டுக் கதறிக் கொண்டு இருக்கின்றார்.
அமெரிக்காவில் வெளியாகும் அனைத்து முக்கியமான பத்திரிக்கைகளிலும் கொரோனா மரணம், பிணங்கள் போட்டு ஏராளமான கவர் ஸ்டோரி வந்த போதிலும் அது எந்த வகையிலும் மோடி அரசாங்கத்தைப் பாதிப்படையச் செய்யவில்லை என்று கோபம் அவர்களுக்கு இருக்கவே செய்யும்.
கடைசி ஆயுதம் ட்விட்டர்.
இதில் மத்திய அரசாங்கம் அவசரப்பட்டுக் கைவைக்காமல், இன்னமும் இழுத்துக் கொண்டே செல்வதற்குக் காரணம் மற்ற இரண்டு சமூக வலைதளமாக இருக்கும் கூகுள் மற்றும் பேஸ்புக். பேஸ்புக் நீக்கினால் இங்கு எவருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் கூகுள் அப்படி அல்ல. இந்தியா ஸ்தம்பிக்கும்.
ஏற்கனவே சீனாவிற்கு மோடி உருவாக்கும் நெருக்கடிகள் பொதுவெளியில் அதிகம் இன்னமும் விவாதத்திற்கு வராமல் உள்ளது. காரணம் இந்தியாவை விடச் சீனா ஆதரவு தளத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மூனா கானா பணியாளர்கள் தான் அதிகமாக உள்ளனர். இன்றைய சூழலில் 49 சதவிகிதம் சீனப் பொருட்கள் இறக்குமதியாவது அடிவாங்கி அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் பெரிய பொருளாதார இழப்பை உருவாக்கியுள்ளது. இதனை மனதில் வைத்துக் கொண்டு சீனா மற்றொரு காரியத்தைச் செய்து கொண்டு இருக்கின்றது.
இந்தியாவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்களில் விலை உயர்வு. தடங்கல்கள். தேவையில்லாத செயல்பாடுகள் என்ற பல விசயங்களைப் பட்டியலிட முடியும்.
ஆனால் இத்துடன் இந்திய ஏற்றுமதி இறக்குமதியில் தாக்கத்தை உருக்குலைக்க சீனா எடுத்துள்ள ஆயுதம் என்ன தெரியுமா?
உலகில் உள்ள அனைத்து நிறுவனங்களில் உள்ள கண்டெய்னர்களை முன்பணம் கொடுத்து முன்பதிவு செய்து அவர்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு போய்விட்டார்கள். எவராக இருந்தாலும் அவர்களிடம் தான் கை கட்டி நிற்க வேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு வந்து சேர்த்து உள்ளனர். தற்போது இந்திய ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
மோடி நாம் கண்டெய்னர் உற்பத்தி தொழில் தொடங்கினால் என்ன? என்று குஜராத்தில் அதன் தொடக்க வேலை நடந்து கொண்டு இருக்கின்றது என்று இந்தத் துறையில் உள்ள நண்பர் சொன்னார்.
இப்படிப்பட்ட பலமுனை தாக்குதல் மோடியைச் சுற்றி வலை போலப் பின்னப்பட்ட வேலையில் அமெரிக்கா அரசாங்கத்தின் துணையுடன், அடியாள் போலச் செயல்படும் ட்விட்டர் என்ற நிறுவனத்தைத் தடாலடியாக முடக்குவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல.
நாளை இது பெரிய பிரச்சனையை உருவாக்க வாய்ப்புண்டு. வெவ்வேறு விதமாக பிரதிபலிக்கும். எங்கே அடித்து எங்கோ திரும்பி எதில் கொண்டு வந்து முடிக்கும் என்பதைச் சர்வதேச அரசியல் பாலபாடம் தெரிந்தவர்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். வரிசையாக அடுத்தடுத்து தேர்தல் வரவுள்ளது. அனைத்தும் பாஜகவிற்கு முக்கியமான தேர்தல்.
இப்போது நீ எங்கள் சட்டத்தின் அடிமை என்று சொல்லி உள்ளனர். இன்னமும் அமெரிக்கா வாய் திறக்கவில்லை. அடுத்து வட்டம் சுருக்கப்படும். உலகம் எப்படி வாய் திறக்கும் என்பதனை அடிப்படையாகக் கொண்டு அந்த வட்டம் மேலும் சுருக்கப்படும்.
மொத்தத்தில் அடுத்த இரண்டு வருடங்களில் ட்விட்டர் இங்கே இருப்பது மத்திய அரசாங்கத்திற்கு இருப்பது பிரச்சனையல்ல. ஆனால் அதன் கிரிமினல் தனத்தை எந்த அளவுக்குக் கட்டுப்படுத்த முடியும் என்பதில் தான் கவனம் செலுத்துவார்கள் என்றே நாம் நம்புகிறேன்.
என் தனிப்பட்ட யூகப்படி அமெரிக்கா மற்ற நாடுகளை மிரட்டுவது போல இந்தியா மேல் நேரிடையாக கை வைக்கத் தயங்கும். காரணம் இஸ்ரேல் என்பது அன்று முதல் இன்று வந்துள்ள புதிய இஸ்ரேல் பிரதமர் வரைக்கும் மோடியின் நெருங்கிய நண்பர்களாக இருப்பது கூடுதல் பலம்.
அமெரிக்காவின் செனட்டர் சபை என்பது யூதர்களின் கட்டுப்பாட்டில் தான் அன்று முதல் இன்று வரை இயங்கி வருகின்றது. தொடக்கதில் தடுப்பூசி மூலப் பொருட்கள் கொடுக்கு பைடனுக்கு விருப்பமே இல்லை. காரணம் அமெரிக்காவில் உள்ள பார்மா லாபி உருவாக்கிய அழுத்தம். அவர்கள் மட்டும் பைடன் தேர்தல் செலவுக்கு மிக அதிக அளவு வழங்கி உள்ளனர். ஆனால் கதை மாறியது. எங்கிருந்தோ வந்த தொடர் அழுத்தம் பைடனை பணிய வைத்தது. அவரே வெளிப்படையாக இந்தியாவிற்கு ஆதரவாக இருப்போம் என்கிற அளவுக்கு ராஜதந்திர நகர்வுகள் நடந்தது.
ட்விட்டர், கூகுள், பேஸ்புக் என்பது நீங்கள் நினைப்பது போல சாதாரண நிறுவனம் அல்ல. காரணம் பைடன் என்பவரை இவர்கள் தான் அலங்கரித்து மேலே கொண்டு வந்தார்கள் என்பதனை நீங்கள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.
மோடி அரசிடம் வலிய வம்பு இழுக்க வேண்டும் என்பதாகத்தான் ட்விட்டரின் செயல்பாடுகள் உள்ளது. காத்திருப்போம். இன்னும் சில வாரங்களில் தெரியக்கூடும்.
3 comments:
என்னமோ... ம்...
கண்டெயினர் பஞ்சாயத்து உண்மைதான். இது ஏற்றுமதி இறக்குமதியில் பெரும் பங்கு வகிப்பது மட்டும் இல்லாமல், கால விரயம், கட்டண உயர்வு என, பலவிதங்களிலும் பொருட்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
கண்டைனர் தகவல்கள் தற்போது தான் எனக்குத் தெரியும்.
நீங்கள் கூறுவது போல, துவக்கத்தில் நானும் கோப்பட்டேன். ஏன் ட்விட்டர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் என்று.
பின்னர் தான் இதை அவசரப்பட்டு அணுக கூடாது என்று தீர்மானித்து பொறுமையாக கையாளுகிறார்கள் என்று புரிந்து கொண்டேன். அதை இக்கட்டுரை உறுதிப்படுத்துகிறது.
Post a Comment