இறை அன்பு தலைமைச் செயலாளர் பதவியில் அமர்ந்த போது அவரின் பணிகள் என்ன? எப்படி செயல்படுவார்? செயல்பட வேண்டும்? நம் அரசியல் சாசனம் என்ன வகுத்துள்ளது? போன்றவற்றை வெவ்வேறு விதமாக தினமும் படித்துக் கொண்டே வந்தேன்.
லக்ஷ்மி நாராயணன் இஆப.. இந்தப் பெயர் பலர் கேள்விப்பட்டிருக்கலாம்.. இவர் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் செயலராக இருந்தவர்.. ஒரு திட்டத்தைச் செயல்படுத்த முதலமைச்சர் சொன்ன போது.
"அது அப்படி எல்லாம் செய்ய முடியாது சார்"
எனச் சொல்லியிருக்கிறார்.
"நாங்கள் சொல்வதைச் செய்யத் தான் செயலர்கள் இருக்கிறீர்கள்" என்ற போது.. "நீங்கள் சொல்வதை எல்லாம் செய்வதற்கு நாங்கள் இல்லை.. எதைச் செய்ய வேண்டும், செய்யக் கூடாது எப்படிச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்வதற்குத் தான் செயலர்கள் இருக்கிறோம்.." என்றிருக்கிறார்.
அதற்குப் பிறகு.. எப்போதும் போல் நாம் காணும் காட்சியான.. யாரும் சீண்டாத எங்கோ ஒரு மூலைக்கு மாற்றப்பட்டிருக்கிறார் அந்த அதிகாரி..
காலங்கள் உருண்டன.. அந்த அதிகாரியும் மறக்கடிக்கப்பட்டார்.. சில ஆண்டுகள் கழித்து
TNPSC யில் ஊழல் மலிந்து போனதாகவும்.. தேவைப்படுபவர்களுக்கு பலத்த சிபாரிசு கொடுத்து அரசுப்பணிக்கு ஆட்கள் எடுப்பதாகவும், பத்திரிகைகளிலும் எதிர்க்கட்சிகளும், புகார்களும் வந்த வண்ணம் இருக்கும் சமயத்தில்..நான் சொன்ன வேலையைச் செய்ய மாட்டேன் என்றாரே.. ஓர் அதிகாரி.. அவரை தேடச் சொல்லி இருக்கிறார் முதலமைச்சராக இருந்த MGR..தேடிக் கொண்டுவந்து அவருக்கு.. TNPSC யின் சேர்மன் பதவியில் அமர வைக்கப்பட்டார் லக்ஷ்மி நாராயணன் இஆப..
"நீங்க சொன்னதை செய்யமாட்டேனே சார்.." எனக்கூறியதற்கு.. முதல்வரின் பதில்…
"நானே யாருக்காவது சிபாரிசு செய்தாலும் முடியாதென்று சொல்லனுங்கறதுக்காகத்தான் உங்களுக்கு இந்தப் பதவி" என்றாராம்..
தனி ஒருவன் படத்தில் பயிற்சி தலைமை அதிகாரியான ஜெயப்பிரகாஷ் ஒரு வரி சொல்வார்..
Politicians might be a rulers but, we.. executives are the real masters..
இங்கு தானே முதலமைச்சர் இருப்பார்.. முக்கியமானவர் முதலமைச்சர் எனும் போது முதலமைச்சர் அலுவலகம் தானே..
ஆனால் இதற்குப் பெயர் தலைமைச் செயலகம்.. இதிலிருந்து தலைமைச் செயலரின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினை "சரியான" வழியில் நடத்திச் செல்வதே தலைமைச் செயலரின் முக்கிய பணி..
தலைமைச் செயலரின் 8 முக்கிய பொறுப்புகளாக இவற்றைக் குறிப்பிடலாம்.
முதல்வரின் ஆலோசகர் (Adviser to the CM)
அமைச்சரவையின் செயலாளர் (Secretary to the Cabinet)
மாநில அமைச்சரவை செயலகத்தின் தலைவர் (Head of State Cabinet Secretariat)
மாநில அரசின் வள நபர் (Resource Person of State Government)
குடிமைப் பணிகளின் தலைவர் (Head of Civil Services)
குடிமைப் பணிகளின் ஒருங்கிணைப்பாளர் (Coordinator of Civil Service Efforts)
செயலகத் துறைகளின் தலைவர் (Head of Secretariat Departments)
குறிப்பிடப்படாத மீதமுள்ள பொறுப்புகள் (Residual Legatee)
"இது யார் பொறுப்பில் வரும்"னு ஒரு கேள்விக்குப் பதில் இல்லையென்றால் அதைத் தலைமைச் செயலாளர் கிட்ட கொடுத்துருவாங்களாம்.
இவற்றைப் பார்க்கும் போது தலைமைச் செயலர் என்பவர் நிரந்தர முதல்வன்
2 comments:
Superb
இறையும் அன்பும் செயலில் இருக்க வேண்டும்...
Post a Comment