Monday, October 26, 2020

என் நம்பிக்கை. என் விருப்பம்.

ஒரு முழம் செவ்வந்திப் பூ ரூபாய் 50, மல்லி, முல்லை ரூபாய் 60. சாதாரண உதிரிப்பூக்கள் முதல் எல்லாவிதமான பூக்களும் ஐம்பது ரூபாய்க்குக் குறைவாக இல்லை. மாவிலை தொடங்கி வாழையிலை வரைக்கும் உண்டான முறை சாரா தொழில்கள் மூலம் அடையும் சாதாரண மனிதர்கள் பெறும் லாபங்கள் ஒரு பக்கம். மதம் சார்ந்த பண்டிகைகள் வரும் போது மக்களின் மகிழ்ச்சியும் ஒன்றிணையும் தன்மையும் துயரங்களை மறந்து தன்னை மீட்டெடுத்துக் கொள்வதாகவே ஒவ்வொரு பண்டிகைகளும் உள்ளது.



பொரி மட்டுமே விற்கும் பாட்டியம்மா "ரெண்டு நாளிலே ஆயிரம் ரூபாய் லாபம் பார்த்தேன் தம்பி" பொக்கை வாயுடன் சிரித்துக் கொண்டே சொன்ன வாசகம் இன்னமும் என் கண்ணில் நிற்கிறது. பழங்களை மட்டுமே தள்ளு வண்டியில் விற்றுக் கொண்டு வரும் வயதான பெரியவர் முகத்தில் புன்னகை தளும்பி வழிகின்றது. 

ஏன் இன்னமும் இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டினை மற்ற நாடுகள் ஆச்சரியமாகப் பார்க்கின்றார்கள் என்பதற்கு ஒரே காரணம் அவரவர் நம்பிக்கைகள். நம்பிக்கைகளுக்குப் பின்னால் உள்ள வணிகம். வணிகத்தோடு தொடர்புடைய இந்தியப் பொருளாதாரம். இந்தத் தொடர்புச் சங்கிலி எந்தக் காலத்திலும் உடையாது. உடையாத வரைக்கும் இந்தியா என்பது மற்ற நாடுகள் விரும்பியே ஆக வேண்டிய சந்தைப் பொருளாதாரத்தின் ஜாம்பவான் போல போலவே ஆட்சி செலுத்தும்.

அரசின் கொள்கைகள் சாதாரண மக்களுக்குப் பலன் அளிப்பதில்லை என்பது போல எளிய மனிதர்களின் வியாபாரமும் லாபத்தினாலும் அரசுக்கு எவ்விதப் பலனும் இல்லை என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதுவொரு சுயசார்பு சங்கிலி. அவரவர் அவரவருக்குண்டான வாழ்க்கையை வாழ அனுமதித்துள்ள இந்திய ஜனநாயகத்தின் சிறப்பு அம்சங்களில் இதுவும் ஒன்று. 

மேற்கித்திய நாடுகளில் அனைவரும் 40 முதல் 50 சதவிகிதம் கட்டி வாழ வேண்டிய வாழ்க்கைக்கும் இங்கே வரி என்றால் என்ன என்பதே தெரியாமல் தாங்கள் வாங்கும் பொருட்கள் மூலம் வரி கட்டுவதற்கான உண்டான வித்தியாசங்கள் வேறு. 

இங்கு எதுவும் கட்டாயம் இல்லை. 

வாங்குவதும் வாங்காமல் இருப்பதும் உங்கள் விருப்பம். 

அடிப்படை வாழ்க்கைக்குத் தேவையுள்ள எந்தப் பொருட்களும் அதிக வரிகள் இல்லை என்பது தான் இங்குள்ள சிறப்பு அம்சம்.

நீங்கள் நம்பும் நம்பிக்கைகள் குறித்து யாராவது கேள்வி எழுப்பினால் எனக்குத் தெரியும் போடா? என்று எளிய தமிழ்ப்பிள்ளைகளின் வாசகத்தின் மூலம் பதில் அளியுங்கள். 

எளிய மனிதர்களுக்கு புரியாத தத்துவங்கள் தேவையில்லை. அந்த தத்துவங்களுக்குள் ஒளிந்திருக்கும் சூழ்ச்சிகள் தேவையில்லை. அவர்களுக்குத் தேவை ஒன்றே ஒன்று தான்.  

மூன்று வேளை உணவு. அமைதியான வாழ்க்கை. அதற்கு அவர்கள் நம்பும் எளிய நம்பிக்கைகள்.

நம்பிக்கைகள் என்பது இங்கே பொருளாதாரத்தோடு தொடர்புடையது. பொருளாதாரம் இந்தியாவின் வளர்ச்சியுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.  உடைபட வேண்டும் என்று கூலிக்கு மாறாடிக்கும் கும்பல் விரும்பும் எண்ணத்திற்கு இரையாகாதீர். 

உங்கள் மனம் முதிர்ச்சியடைந்து நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட நிலைக்கு வந்தாலும் உங்கள் குடும்பம் பண்டிகைகள் கொண்டாடும் போது அவர்களுடன் ஒன்றிணைந்து அவர்கள் மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வாழும் காலத்தில் உங்களால் வழங்க முடிந்ததை குடும்பத்தினருக்குக் கொடுக்க தயாராக இருங்கள். 

மற்றவர்களுக்கு வழங்குங்கள்.  காலம் மாறும். எண்ணங்கள் மாறும். அவரவர் அனுபவங்கள் அவரவருக்கு கற்றுக் கொடுக்கும். அமைதியாக உள்வாங்குவதும் கவனிப்பதும் தான் உங்கள் வயதின் முதிர்ச்சி வெளிப்படும் தருணமாக இருக்க வேண்டும்.

என் நம்பிக்கை.

என் விருப்பம்.

எட்டிப்பார்க்காதே

என்பதை உரக்கச் சொல்லி பழகுங்கள்,.🥰🥰

5G - ஊழல் முதல் வளர்ச்சி வரை |5G Tech World

செயற்கை நுண்ணறிவு AI - எதை மாற்றப் போகின்றது?

அறிவுரைகள் வழிகாட்டுமா| Is it important Advice

பேச -பார்க்க - பழக - நேரமில்லை | Speak less and write less

பக்தி சிங்கம். கழிவு அசிங்கம் | Public Health Awareness


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

பொருளாதாரத்தோடு தொடர்புடையது என்றாலும், பலரின் மகிழ்வில் குழந்தை மன சிரிப்பு தோன்றும்... அந்த அறமே சிறக்கவும் வேண்டும்... வளரவும் வேண்டும்...

ஆனால்...