Tuesday, October 27, 2020

கவனிக்கும் கற்றுக் கொடுக்கும் கண்காணிக்கும்

சில்வியா பிளாத்

" கடவுள் நம்பிக்கைகள், பிற நம்பிக்கைகள் போன்றவற்றில் நாம் கவனம் செலுத்துவது விடக் காலத்தின் மீது நம்பிக்கை வைப்பது எளிது"

காலம் -

கவனிக்கும்

கற்றுக் கொடுக்கும்

கண்காணிக்கும்

காத்திருக்கச் சொல்லும்

//


#ஐந்து_முதலாளிகளின்_கதை

போன மாசம் என்னால இங்க இருக்க முடியல, திரும்ப சென்னைக்கு போகனும் போல இருக்குன்னு பதிவு போட்டு இருந்த போது நிறைய நண்பர்கள் கிட்ட இருந்து போன் வந்தது.

Saravanan Chandran கிட்ட இருந்து வந்த போனில் எனக்கு மேல புத்தகத்துல இருக்கும் வரிகளை  வார்த்தைகளை மட்டும் மாத்தி போட்டு இதே மாதிரி சொல்லி இருந்தாங்க. காலத்தோட கைகள் கிட்ட உங்களை ஒப்படைத்து விடுங்க. அது சுழட்டி சுழட்டி எடுத்து வைத்து ஒரு நல்ல இடத்தில் உட்கார வைக்கும். நீங்க இப்ப செய்ய வேண்டியது எல்லாம் அமைதியா நடக்கிறது கவனிக்க வேண்டியது மட்டும் தான். நீங்கள் எல்லாம் எங்களுக்கு ரொம்ப முக்கியமான ஆட்கள். இப்படி மனச தளர விடாதீங்க என்று நீண்டு கொண்டு சென்ற உரையாடல் அப்படியே இந்த புத்தகத்தில் ஆசிரியர் எழுதி வைத்து இருந்தது பார்த்ததும் வியப்பு வந்தது.

முதல் தலைமுறை தொழில் செய்பவர்கள் எல்லாரும் ஒரே மாதிரியான சிந்தனையில் இருப்பார்கள் என்று புரிந்தது.

இந்தப் புத்தகத்தில் அவருக்கு தெரிந்த ஐந்து முதலாளிகளின் கதையை எழுதி உள்ளார்.

பெண்ணாசை

மண்ணாசை

பேராசை பிடித்த பெரு முதலாளிகள் சாம்ராஜ்யங்கள் அழிந்த கதையும், இந்த GST காலத்திலும் எந்த கடனும் இல்லாமல் தொழில் நடத்தும் அதிபர்களையும் ஒவ்வொருவரின் நிர்வாகத் திறமையும், தொழிலாளர்கள் நிலைமையும், அரசாங்கத்தின் கவனமின்மையும் திருப்பூர் என்ற எக்ஸ்போர்ட் நகரத்தில் கடந்த இருபது ஆண்டுகளில் நடந்த தொழில் சமூக மாற்றங்களை இந்த நூல் ஆவணப்படுத்தி இருக்கிறது.

தொழில் தொடங்கும் எண்ணம் உள்ளவர்கள் முதல் தொழில் நடத்தி கொண்டு இருப்பவர்கள் இந்த புத்தகம் படித்தால் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை குறுக்கு வெட்டுத் தோற்றம் வைத்து ஆராய்ந்து கொள்ளலாம்.

இந்த ஆசிரியர் பதினேழு புத்தகங்கள் எழுதி இருக்காங்கன்னு தெரிய வந்தது. ஒன்று ஒன்றாக தேடிப் படிக்கனும்.

#ஐந்து_முதலாளிகளின்_கதை

#KDP

#ஜோதிஜி

.++++++++

பெண்கள் நலக்கூட்டணி ஒட்டு மொத்தமாகச் சேர்ந்து முடிவெடுத்து என்னிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார்கள். அமேசான் திருவிழாக் கொண்டாட்டம், அதன் சாதக அம்சங்கள் என்று பட்டியில் இட்டு இருந்தார்கள். 

ஆசை வார்த்தைகளை உள்ளே சொருகியிருந்தார்கள். குறிப்பாகக் கொட்டை எழுத்தில் வாங்க வேண்டிய அலைபேசி? என்ன மாடல்? அதில் இருக்க வேண்டிய வசதிகள்? அதன் சிறப்பு அம்சங்கள்? என்று பட்டியலிட்டுக் கொடுத்தார்கள்.

சபாநாயகர் ஆன்லைன் கிளாஸ் என்று எடுத்துக் கொடுத்தார். அவசியம் தேவை என்பதனை அவர் பாணியில் புரிய வைத்தார். நான் ஞானம் பெற்றவனாக மாறி அவர்களிடம் பேசினேன்.

"என் வேட்டி சட்டையைத் தவிர அத்தனையும் நீங்கள் தானே பயன்படுத்தி மீதி நேரம் தானே எனக்குத் தர்றீங்க? இனி எதற்கு புது அலைபேசி" என்றேன்?

சபை அமுளிதுமுளியானது. யார் யார் என்ன பேசுகின்றார்கள் என்று குறிப்பெடுக்க முடியாத சூழல் நிலவியது. 

என் வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டேன். கதவு திறந்திருக்கிறதா? என்று பக்கவாட்டில் பார்த்துக் கொண்டேன்.

இறுதியாக ஒரே ஒரு கேள்வி கூட்டத்துத் தலைவி என்னிடம் கேட்டார்?

எப்போது தான் வாங்கித் தரப் போகிறீர்கள்? என்று மிரட்டல் தொனியில் வந்த போது நான் மிரண்டு விட வில்லை.

"ஆளுநர் 7.5 சட்டமன்ற தீர்மானத்தில் கையெழுத்துப் போடும் போது நான் வாங்கித் தருகிறேன்" என்றேன்.

மீதி அவர்கள் பேசிய வார்த்தைகள் சபைக்குறிப்பில் ஏற்ற முடியாத அளவுக்கு இருந்தது.

இன்று சபை இனிதே நிறைவுற்றது.

தொழிலும் பயமும் Self entrepreneur

 நுழைவுத்தேர்வு ஃபோபியா |Entrance Exam Phobia

இணைய விளையாட்டு-ஒரு லட்சம் போச்சு | On line Games for childrens

சத்து மாவு | Sathu Mavu recipe

ஆழ்ந்த தூக்கம் ஆயுள் அதிகம்


4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// அலைபேசி? என்ன மாடல்? அதில் இருக்க வேண்டிய வசதிகள்? அதன் சிறப்பு அம்சங்கள்? //

சிரமம் தான்... "ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம்" எனும் தகவல் எங்காவது உண்டா...? அந்த மூன்றும் ஒன்றே போல் கிடைக்குமா...? அதாவது அறமே மூன்று பால்களாக திருக்குறளில் உள்ளது போல...

அவ்வாறு வாங்குவில்லை என்றால், ஆளுநர் போல் கூட ஆக முடியாதே...!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அவைக்குறிப்பில் இடம்பெறாத அளவிற்கு எதிர்ப்பு இருந்ததென்றால், தாக்கத்தை உணரமுடிகிறது.
இனிதே முடிவுற்றது.......என்பது எதிர்மறைச் சிந்தனையை நேர்மறையாகத் தருவதுபோல இருந்தது.

ஜோதிஜி said...

நம்ம ஊரில் தான் ஒரு டெக்னாலாஜியை எந்த அளவுக்கு கேவலமாக பயன்படுத்த முடியும் என்பதற்கு சிறியவர் முதல் பெரியவர்கள் வரைக்கும் உதாரணமாக இருக்கின்றார்கள்.

ஜோதிஜி said...

சண்டையில் கிழியாத சட்டை உண்டா?