Saturday, December 21, 2019

அட... ச்சும்மாயிருங்க.. பாஜக வந்துரும்.- 2019


நான் இந்த வருடம் முழுக்க தமிழகத்தில் பயணம் செய்த ஊர்கள் முதல் சந்தித்த பலதரப்பட்ட மனிதர்கள் வரைக்கும் ஒருவர் கூட பாஜக மேல் நல்ல அபிப்ராயம் சொல்லவில்லை. அளவு கடந்த வெறுப்பு.  திட்டித் தீர்த்த வார்த்தைகள்.  கிண்டல், கேலி, நக்கல் என்று பாரபட்சமின்றி. 

தணிக்கையாளர்கள் முதல் வியாபாரிகள் வரைக்கும்.  

அரசியல் தெரிந்தவர்கள் முதல் அரசியலைப் பற்றிக் கண்டு கொள்ளாதவர்கள் வரைக்கும். 72 வருட சுதந்திர இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மோடியைப் போல மிக அதிக அவமானப்படுத்தப்பட்டவர் இங்கு யாருமே இல்லை. அதே போல இந்தியா முழுக்க மோடி என்றாலே தினமும் ஏதோவொரு வகையில் உச்சரிக்கப்படும் மந்திரம் போலவே பாவிக்கப்படுகின்றது.  இதில் குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில் மோடி ஊடகங்களை மதிப்பதில்லை.  கண்டு கொள்வதும் இல்லை.  ஆனால் இன்றைய ஊடகங்களுக்கு மோடி தான் எல்லாமே.

இணையதளங்களில் செயல்படுபவர்களை நான் பொருட்படுத்திக் கொள்வதில்லை.  களத்தில் இருப்பவர்களைப் பார்ப்பேன்.  அங்கும் இதே எதிர்ப்பு. ஏளனம். என்ன காரணம்?  எனக்கு இந்த வருடம் கிடைத்த பட்டங்கள் சங்கி, மென்சங்கி, நீங்க ஆதரவு கொடுத்தாலும் சூத்திரன் தான் இன்னும் பல வாழ்த்துகள்.  பேசத் தொடங்கினாலே கொன்றுவிடுவேன் என்கிற அளவுக்கு அன்புக் கட்டளை.  ஏன்?



நான் ஏன் காங்கிரஸ் கட்சி வெறுக்கின்றேன்?

2004 மன்மோகன்சிங் ஆட்சிக்கு வந்தது முதல் அவரது இரண்டாவது ஆட்சிக்காலம் முடியும் வரைக்கும் நான் முழுமையாகக் கவனித்து எழுதி உள்ளேன்.  அமெரிக்க அதிபராக ஜார்ஜ் புஷ் இருந்த போது அணுவாயுதப் பரவல் சட்டத்திட்டத்திற்காக, அமெரிக்கா சொல்லி விட்டது நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதற்காக மன்மோகன்சிங் தரை டிக்கெட் நிலைக்கு இறங்கி பணம் கொடுத்து அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார்.  

கம்யூனிஸ்ட் கதறினார்கள். எதையும் கண்டு கொள்ளவே இல்லை. மன்மோகன் இன்று மோடியை "சேல்ஸ்மேன் போல உலகம் முழுக்க சுற்றி வருகின்றார். அவர் பிரதமர் பதவிக்கு உண்டான மரியாதையைக் கெடுத்து விட்டார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் உழைக்கின்றார்" என்று திருவாய் மலர்ந்து சொல்லும் ஒவ்வொரு வாக்கியமும் அப்படியே அவருக்கும் பொருந்தும். ஏறக்குறைய காங்கிரஸ் கட்சி பத்தாண்டுகளாக அமெரிக்காவிற்குக் கூலி போலவே செயல்பட்டது.  பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.  

மன்மோகன் பிரதமர் பதவியில் இருந்தார். ஆனால் அவர் பிரதமருக்கான உண்டான அதிகாரம் அவரிடம் இல்லை.  ஒரு பக்கம் ராகுல். மற்றொருபுறம் சோனியா.  மற்றொருபுறம் வதேரா.  மற்றொருபுறம் ஒவ்வொருநாளும் ஊழலில் திளைத்த அமைச்சர்கள்.  நாடே நாறியது.  இன்று காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதாரம் சிறப்பாக இருந்தது என்கிறார்கள்.  ஆனால் ரிசர்வ் வங்கி அதன் எல்லையை மீறியது. வெளியே தெரிந்தால் காறித்துப்பி விடுவார்கள் என்ற அச்சமின்றி பணத்தாள்களில் இரண்டு சீரியல் ஒரே நோட்டுக்கு வருமளவிற்கு அடித்துத் தள்ளிக் கொண்டேயிருந்தார்கள். இவையெல்லாம் தேடிப் படித்துப்பாருங்கள்.  

ஹாவாலா பெருக்கெடுத்து ஓடியது.  போதைப் பொருட்கள் எல்லைப்புறம் வழியாக உள்ளே வந்து குவிந்து கொண்டேயிருந்தது. எல்லைப்புற நாடுகளிலிருந்து அகதிகள் சாரைசாரையாக உள்ளே வந்து கொண்டேயிருந்தார்கள். வந்தார்கள். தங்கினார்கள். ஓட்டரசியலுக்காக அவர்களை வளர்த்தார்கள். அந்தந்த மாநில மக்களின் கோபம் உள்ளுற கங்கு போல எறியத் காத்துக் கொண்டிருந்தது. உலக நாடுகளின் செல்வாக்கில் அதலபாதாளத்தில் இருந்தது. மக்கள் தூக்கி எறிந்துவிட்டார்கள். இந்தியாவை  வெளிநாடுகள் கண்டு கொள்ளவே இல்லை. அடிமை போலவே நடத்தினார்கள்.

உடம்பு முழுக்க புண்ணாக இருக்கும் மனிதர் வெளியே கோட் சூட் போட்டுக் கொண்டு வாழ்ந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் மன்மோகன் வாயைப் பொத்திக் கொண்டு ஆட்சி நடத்தினார்.    

ஆனால் இவர்கள் செய்த உருப்படியான காரியம் ஊடகங்களைப் பகைத்துக் கொள்ளவில்லை. அறிவுஜீவிகள் என்று சொல்லப்படும் வர்க்கத்திற்கு எலும்புத்துண்டுகளைக் கடைசி வரைக்கும் போட்டுக் கொண்டேயிருந்தார்கள். டெல்லியில் உள்ள அனைத்து அரசாங்க விடுதிகளும் இவர்களால் நிரம்பி வழிந்தது.  அவர்கள் சுகமாக வாழ்ந்தார்கள்.  நாடே சுபிட்சமாக இருக்கிறது என்று தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருந்தார்கள். மக்களின் வரிப்பணத்தை இரண்டு சதவிகித மக்கள் மட்டும் உண்டு கொளுத்து வாழ்ந்தார்கள்.  ஆனால் இது ஊடகங்களுக்குத் தெரியும். எவரும் எழுதவில்லை. இதை விடக் காங்கிரஸ் அரசாங்கம் இலங்கை விவகாரத்தில் நடந்த ஒவ்வொன்றும் விபரம் தெரிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். இவர்கள் திருத்தவே முடியாது ஜென்மங்கள் என்று.  

நேரு, இந்திரா, ராஜீவ் வரைக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் தவிர வேறு எவருமே இந்த நாட்டில் பெயர் சொல்லுமளவிற்கு வெளியே புகழ் பெற்று விடக்கூடாது என்பதில் இன்று வரையிலும் மிகக் கவனமாக இருக்கின்றார்கள். மிகப் பெரிய உதாரணம் நரசிம்மராவ். அப்பேர்பட்ட மனிதரை அனாதைப் பிணம் போலவே சோனியா மாற்றினார். இன்று எத்தனை பேர்களுக்கு அவரைப் பற்றித் தெரியும்? இப்போது ராகுல் பிரியங்கா வரைக்கும் இந்த நிலை தான் நீடிக்கின்றது. 

அதாவது இந்தியா என்பது இவர்களின் சொத்து. ஆனால் இவர்கள் வெளியே சொல்வது மதச்சார்பின்மை. அனைவரும் இங்கே சேர்ந்து வாழ வேண்டும் என்பதே.  அப்படித் தான்  செய்தார்களா? ஆட்சி நடத்தினார்களா? இவர்கள் ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் முதல் ஜார்க்கண்ட் வரைக்கும் நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டங்கள் ஒவ்வொன்றையும் தேடிப் படித்துப் பாருங்கள். ஆந்திராவை கடைசி நிமிடத்தில் கொத்துக்கறியாக மாற்றினார்கள். கடைசியில் சந்திரசேகர ராவ் சோனியாவுக்கு திருநெல்வேலி அல்வா கொடுத்தார். தென்னிந்தியா முழுக்க துடைத்துக் கொண்டுப் போய் விட்டது. இவர்கள் ஆட்சி செய்யவும் லாயக்கு இல்லை. இந்தியாவை வளர்ப்பதிலும் எண்ணம் உள்ளவர்கள் இல்லை என்பது நன்றாகவே  மக்களுக்குப் புரிந்து போனது.   

சீனாதானா இன்று முழங்குகின்றார்.  அவர் கடைசி வரைக்கும் பங்குச் சந்தையில் மட்டுமே கவனமாக இருந்தார். காரணம் அவர் குடும்ப முதலீடு முழுக்க அதில் தான் இருந்தது.  அமுதசுரபி போல வருமானம் வந்து கொண்டேயிருந்தது.  எப்போது வரும்? எங்கே வரும்? யாருக்குப் போய்ச் சேர்கின்றது? யாருக்குத் தெரியும்?  

பத்தாண்டுக் காலமும் வென்றார்கள்.  கூச்சப்படாமல்  சுரண்டினார்கள். சுரண்டிக் கொண்டேயிருந்தார்கள். திருமாவேலன் எழுதிய காந்தி முதல் மன்மோகன் வரைக்கும் என்ற புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். காறித்துப்பி விடுவீர்கள்.

இன்று அனுபவிக்கின்றார்கள். 

காங்கிரஸ் ல் இருந்த மானங்கெட்ட மனிதர்கள் அனைவரும் மரியாதையான பதவியில் இருந்தார்கள்.  மொத்த நீதித்துறையும் அவர்கள் கைப்பாவையாக இருந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகளை தங்கள் சுட்டுவிரலால் அசைத்து ஆட்டிக் கொண்டிருந்தார்கள். நள்ளிரவில் நீதிமான்களிடம் ஒரு தொலைபேசி மூலம் ஜாமீன் வாங்கும் அளவிற்கு.  இதுவே தான் மோடியின் முதல் ஐந்தாண்டுக் காலம் வரைக்கும் நடந்தது கொண்டிருந்தது.  மோடி ஆட்சியில் இருந்தார்.  ஆனால் நீதிமான்கள் காங்கிரஸ் ன் கட்டுப்பாட்டில் இருந்தது.

காரணம் அடி முதல் நுனி வரைக்கும் அவர்கள் வளர்த்த ஆட்கள் தான் இருந்தார்கள்.  பாஜக இரண்டாவது முறையும் ஆட்சிக்கு வந்தது.

பாஜக 1 மற்றும் 2

பாஜகவிற்கு கொள்கை ஒன்று இருக்கிறது. அது நமக்கு பிடிக்கலாம். பிடிக்காமல் போகலாம். அந்தக் கொள்கை தான் அவர்களுக்கு வெற்றியைத் தந்து கொண்டு இருக்கிறது.

அந்தக் கொள்கை பாதி ஆர்எஸ்எஸ் உருவாக்கிக் கொடுத்தது.  பாதி நாடு இனி எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதாக இருந்தது.  துரதிருஷ்டவசமாக பாஜக ஒவ்வொரு செயல்பாட்டிலும் மதத்தை உள்ளே நுழைத்துக் கொண்டே வந்தது. காங்கிரஸ் மதச் சார்பின்மை என்று சொல்லிக் கொண்டு கிறிஸ்துவ, இஸ்லாமியர்களின் ஓட்டுக்களை மட்டுமே பெறுவதில் கவனமாக இருந்தது.  கடைசி வரைக்கும் அவர்களுக்கு எதுவும் செய்யத் தயாராக இல்லை.  

ஆனால் பாஜக இந்த விசயத்தில் வேறுபட்டு நின்றது. 

எனக்கு இந்துக்கள் மட்டுமே முக்கியம் என்பதனை கொள்கை பிரகடனமாகவே வெளிப்படுத்தியது.  அதே சமயத்தில் மைனாரிட்டிகளைக் காங்கிரஸ் போல நேரிடையாக துன்புறுத்தவில்லை.  அதற்குப் பதிலாகச் சட்ட வடிவுகளை மாற்றிக் கொண்டே வந்து அவர்கள் ஒரு வட்டத்திற்குள் கொண்டு  வந்து நிறுத்தியது. முதல் ஐந்தாண்டுக் கால ஆட்சியில் மாநிலங்களவையில் மெஜாரிட்டி இல்லாத காரணத்தால் பல்லைக்கடித்துக் கொண்டு அமைதி காத்தார்கள்.  இப்போது ஆடித்தீர்க்கின்றார்கள்.

பாஜக அரசியல்.

இந்தியாவில் பாஜக தவிர மற்ற அனைத்துத் தேசிய மாநிலக் கட்சிகள் அனைவருக்கும் மைனாரிட்டி ஓட்டு மிக முக்கியம். அவர்கள் ஓட்டளித்தால் தான் நம்மால் வெல்ல முடியும் என்று நம்புவதால் அவர்களைப் பகைத்துக் கொள்ள விரும்புவதே இல்லை.  ஆனால் பாஜக இதனை அடித்து உடைத்து நொறுக்கியது.  

பிரதமர் பதவிக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உபியில் 71 உறுப்பினர்களைப் பெற்று விழாக் கொண்டாடியது.  அதாவது உபியின் மொத்த ஜனத்தொகையில் 30 சதவிகிதம் இஸ்லாமியர். எப்படி இந்த மாறுதல் நடந்தது?  அது தான் அமித்ஷா உருவாக்கிய மாயாஜாலம்.

எப்படி வெல்கிறார்கள்?

ஒரே வார்த்தையில் முடிக்கின்றார்கள்.  வாக்குச் சீட்டு இருந்தால் பாஜக வெல்ல முடியாது. தில்லுமுல்லு செய்கின்றார்கள் என்று. இது வடிகட்டிய முட்டாள்தனம்.  இதற்குள் கோல்மால் இருந்தால் காங்கிரஸ் விட்டு வைக்குமா? இந்த விசயத்தில் அவரவருக்குத் தோன்றிய வகையில் இன்று வரையிலும் பேசிக் கொண்டேயிருக்கின்றார்கள்.  பாஜக சில விசயங்களை மிகத் தெளிவாகச் செய்கின்றது.

1. ஓட்டுக்களைப் பின்வருமாறு பிரிக்கின்றார்கள்.  மதம், சாதி, விருப்பம், விருப்பமில்லாதவர்கள். இதனை அடிப்படையாகக் கொண்டு வட்டம், மாவட்டம், நகரம், ஒன்றியம், கிளைக்கழகம் என்று அட்டவணையாக மாற்றுகின்றார்கள்.  

2, இதற்குப் பிறகு ஒவ்வொரு இடத்திலும் உள்ள சாதக பாதக அம்சங்களைக் கணக்கில் எடுக்கின்றார்கள்.  இதனை அடிப்படையாக வைத்து அந்த இடத்தில் என்ன உடனடித் தேவை? எது அடுத்த தேவை? என்று கணக்கில் கொண்டு வருகின்றார்கள்.  

3, அந்தந்த பகுதியில் செல்வாக்கு உள்ளவர்கள் யார்? பதவி கொடுத்து அழைக்கின்றார்கள். பணம் கொடுத்து மாற்றுகின்றார்கள்.  தேவையானதைச் செய்து கொடுத்து வட்டத்திற்குள் கொண்டு வந்து நிறுத்துகின்றார்கள். மேல்பட்ட தலைவர்கள் களத்தில் இறக்கப்படுகின்றார்கள்.  வாய்ப்புகளை அலசி ஆராய்ந்து வெற்றி பெறும் வரைக்கும் உழைக்கின்றார்கள்.

இப்போது யோசித்துப் பாருங்கள். அடி முதல் நுனி முதல் இவர்களின் கட்டமைப்பு புள்ளி விபரப்பட்டியலோடு, சாதக பாதக அம்சங்களோடு வெள்ளைத் தாளில் வந்து விடுகின்றது.  அதிகாரம் இருக்கின்றது. பணம் இருக்கின்றது.  வேறென்ன வேண்டும்.  ஆனால் பாஜக ஒவ்வொருயிடத்திலும் காங்கிரஸ் போல மனிதர்களை அவர்களின் செல்வாக்கை முன்னிறுத்துவதில்லை.

கட்சியின் கொள்கைகளைத் தான் முன்னிறுத்துகின்றது.  

காரணம் நம்பிய நபர்கள் மாறக்கூடும். ஆனால் மக்கள் மாறமாட்டார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுகின்றார்கள். நமக்கு அது மதவாதமாகத் தெரியும்.  அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.  

அரசியலில் இறுதி வெற்றி மட்டுமே முக்கியம்.  

அது மட்டுமே இங்குப் பேசப்படும்.  அதிகாரத்தை அடைவது தான் முக்கியம்.  இதைத்தான் பாஜக கடந்த ஆறு ஆண்டுகளாகச் செய்து கொண்டிருக்கிறது.
  
காங்கிரஸ்க்கும் பாஜக விற்கும் உண்டான வேறுபாடுகள்?

காங்கிரஸ் கட்சியில் அனைவரும் தலைவர்கள். தொண்டர்கள் குறைவு. ஆனால் வட இந்தியாவை விட தென் இந்திய மக்கள் ஆழ் மனத்தில் இன்னும் காங்கிரஸ்க்கு வாய்ப்புள்ளது.   நம்பிக்கை வைத்து இருக்கின்றார்கள்.

அதனைச் சரியான முறையில் காங்கிரஸ் அறுவடை செய்யத் தெரியவில்லை. அதற்கான ஆட்கள் இல்லை. மேலும் கடந்த காலத்தில் மாநில அரசியலைக் காங்கிரஸ் கையாண்ட விதத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாநிலக் கட்சிகளும் காங்கிரஸ் கட்சியை நம்பத் தயாராக இல்லை.

உன்னுடன் சேர்கிறேன். ஆனால் உன்னை நான் தலையில் வைத்துச் சுமக்க மாட்டேன்.  யாருக்கு மரியாதை அதிகமோ? அவர்களுக்குப் பின்னால் நீயும் வா? என்று ஒவ்வொரு மாநில கட்சியும் காங்கிரஸ் கட்சியை இன்று வரையிலும் பயமுறுத்திக் கொண்டேயிருக்கிறது. சேர்வது போல நடிக்கின்றார்கள். ஆனால் பிரிந்தே களம் காண்கின்றார்கள். மக்கள் புரிந்து கொண்டார்கள்.  தெரியாத பேயை விட தெரிந்த பிசாசு பரவாயில்லை என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். இதன் காரணமாகத்தான் பாஜக இரண்டாவது முறை வென்றது.

சேர வேண்டிய அனைவரும் பிரிந்து நின்றார்கள்.  ஒவ்வொருவரும் பிரதமர் பதவி நமக்குத் தான் என்று கனவு கண்டார்கள்.  இறுதியில் எல்லோரும் தோற்றார்கள் என்பதனை விட மண்ணைக் கவ்வினார்கள் என்ற வார்த்தையே சரியாக இருக்கும்.

பாஜக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாகச் செயல்படுகின்றது. 

அந்த மாநிலப் பிரச்சனைகளை முன் வைத்துப் பேசுகின்றது.  மோடி, அமித்ஷா போலப் பலரும் பேசுகின்றார்கள். சிலர் உளறுகின்றார்கள். அபத்தமாகப் பேசுகின்றார்கள்.  அநாகரிகமாகப் பேசுகின்றார்கள்.  அட நாரப்பயலே என்று நாம் திட்டும் அளவிற்கு நம்ப முடியாத விசயங்களைப் பற்றிப் பேசுகின்றார்கள்.  காரணம் என்ன?

அரசியலில் சில ஆபத்தான வளைவுகள் உண்டு.

அதனை ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு சமயத்திலும் கடந்தே ஆக வேண்டும்.  அதாவது மக்கள் தங்கள் கட்சியை நினைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். அவர்களுக்கு வேறு சிந்தனை வந்து விடக்கூடாது. எதிர்மறை பிரச்சாரம் என்றாலும் பரவாயில்லை.  

ஏதோவொரு வகையில் தங்கள் இருப்புகளை நிலைநிறுத்திக் கொண்டே ஆக வேண்டும்.  இதைத்தான் பாஜக செய்து கொண்டே வருகின்றது.  நமக்கு முட்டாள்தனமாகத் தெரியலாம்.  காங்கிரஸ் என்ற திமிலங்கத்தை வென்று வந்த பாஜக அதனை எழ விடாமல் வைத்திருக்கும் வரை அதன் ராஜ்ஜியம் ராஜபாட்டையுடன் நடந்து கொண்டேயிருக்கும்.  

பாஜக என்பது ஒரு கட்சியல்ல. நாம் தான் அதனைக் கட்சி என்று சொல்கின்றோம்.  

பல துணைப்பிரிவுகள் இதற்குப் பின்னால் உள்ளது. ஆர்எஸ்எஸ். பஜ்ரங்தள் என்று தொடங்கி ஒவ்வொரு மாநிலத்திலும் மதம் என்ற அஸ்திவாரத்தின் மூலம் மட்டுமே கட்டப்பட்ட பல இயக்கங்கள் உள்ளது.  ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான அஜண்டா. இதனைக் கவனிப்பது கண்காணிப்பது கட்டுப்படுத்துவது எல்லாமே ஆர்எஸ்எஸ். இறுதியாக எந்தக் கொள்கை இப்போது வேண்டும். எது அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்றப்பபட வேண்டும் என்பதனை இறுதி வடிவமாகக் கொண்ட வருபவர்கள் ஆர்எஸ்எஸ்.  

ஜனநாயக நாட்டில் முழுமையாக உடனடியாக நினைத்தமாத்திரத்தில் இவர்களின் விருப்பங்களை இங்கே கொண்டு வர முடியாது. படிப்படியாக நகர்த்திக் கொண்டே வருகின்றார்கள். இதுவரையிலும் பாஜக அரசாங்கம் செயல்படுத்திய திட்டங்கள், செயல்படுத்த நினைக்கும் திட்டங்கள் அனைத்தும் வெளிப்படையாக அறிவித்த திட்டங்களே ஆகும்.  அவர்கள் எதையும் மறைத்து வைத்துச் செய்யவில்லை. நாங்கள் இவற்றைச் செய்வோம் என்று சொல்லித்தான் மக்களிடம் வாக்கு கேட்டு வந்தார்கள்.

பெருவாரியான மக்களும் அதற்காகவே அவர்களுக்கு ஓட்டளித்தனர். அவர்களும் கர்மசிரத்தையும் அதையே நிறைவேற்றுகின்றார்கள். நீங்களும் நானும் அலறி ஒன்றும் ஆகப் போவதில்லை.  

இந்தியாவின் எதிர்காலம் என்ன தான் ஆகும்?

இப்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களை வைத்து சில விசயங்களைப் பேசுவோம்.

போராட்டக்காரர்களை 3 விதமாகப் பிரிக்கலாம்.

1) இந்தியக் குடியுரிமை வழங்கினால் தாங்கள் சிறுபான்மை ஆகி விடுவதாகப் போராடும் வட கிழக்கு மாநில மக்கள் போராட்டம் செய்கின்றனர்.

2) இசுலாமிய மக்களைச் சேர்க்கவில்லை என்று இசுலாமிய மக்கள், இசுலாமிய மாணவர்கள், இசுலாமிய ஆதரவு கட்சிகள் போராடுகின்றனர்.

3) மூன்றாவது கல்லூரி மாணவர்களை காவல்துறை தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து போராட்டம்.

முதலில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவே ஓட்டரசியலால் தான் நடக்கிறது. காங் கட்சி சிறுபான்மை வாக்குகளை நம்பியே ஆட்சி நடத்தியது/நடத்துகிறது. மாநிலக் கட்சிகளுக்குச் சிறுபான்மை வாக்குகளோடு, சாதி வாக்கு வேண்டும். அது போல பாஜக இந்துத்துவக் கட்சி அதனால் இசுலாமிய மக்களின் தவறுகளைப் பயன்படுத்தி அரசியல் நடத்துகிறது.

இப்போது விடயத்திற்கு வருவோம்.

எந்த நாட்டில் விசா காலம் முடிந்து மக்களைத் தங்க வைக்கிறார்கள்.

எல்லை தாண்டி வந்தவர்களை அகதிகளைகாகத்தான் ஏற்றுக்கொள்கிறார்கள்.

இந்தப் போராட்டங்கள் அவசியமற்றது என்கிற கருத்துப் பரவலாக மக்கள் மனதில் பதிந்தால் அது பாஜக விறகே சாதகமாக மாறும்.

அரசியல் மட்டுமல்ல எங்கும் எதிரிகளின் பலவீனத்தை தன் பலமாக மாற்ற முயல்பவர்கள் எளிதில் வெற்றியடைந்து விடுவார்கள்.  காங்கிரஸ் செய்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடுகளும் கடைசியில் பாஜக விற்கே சாதமாக வந்து முடிகின்றது.  காரணம் காங்கிரஸ் நம்பும் கூட்டாளிகள் கூட மனப்பூர்வமாக ஆதரிக்க முன்வருவதில்லை. ஊடகத்தில் ஒரு பேச்சு. மக்களிடத்தில் வேறொரு பேச்சு.  பாராளுமன்ற தீர்மானத்தின் போது மொத்த எதிர்க்கட்சிகளும் பாஜக விரிக்கும் வலையில் தான் மாட்டிக் கொள்கிறது. இறுதியில் பாஜக வென்று விடுகின்றது.  

மீண்டும் கலைஞர் இங்கு வந்து விடவே கூடாது என்பதற்காக மட்டுமே ஜெ. தமிழகத்தை சீரழித்தத்தை மொத்தத் தமிழ்ச் சமூகமும் வேடிக்கைப் பார்த்தது. அதுவே இப்போது வரைக்கும் திமுகவிற்கு பாதகமாக உள்ளது.  நீ என்ன பெரிய யோக்கியமா? என்று திரும்பவும் கேட்கின்றது.

எக்காரணம் கொண்டு காங்கிரஸ் எங்களுக்குத் தேவையில்லை. அது பெரும்பான்மையினர் உரிமையைப் பற்றிப் பேசுவதில்லை. கண்டு கொள்வதில்லை. கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை என்ற மனதிற்குள் குமுறிக் கொண்டிருந்தவர்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு பாஜக. அதனை பாஜக தெளிவாகப் பயன்படுத்திக் கொண்டது. இதனை வளர்த்தது. வாக்குகளாக மாற்றியது. அதிகாரத்தைக் கைப்பற்றியது.  மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுகின்றது.  

130 கோடி மக்களில் பெரும்பான்மை ஓட்டு அதிகபட்சமாக யாரிடம் உள்ளது என்பதனை ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்.  என்ன நடந்தாலும் எது நடந்தாலும் நாங்கள் குடியுரிமைச் சட்டத்தை வாபஸ் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அமித்ஷா தைரியமாகச் சொல்வதற்குப் பின்னால் உள்ள அரசியல் உங்களுக்குப் புரிபடக்கூடும். 

விரைவில் பல மாநிலங்களில் தேர்தல் வரப் போகின்றது. மாநிலங்களவையில் பாஜக பலம் பெறுமா? இழப்பு ஏற்படுமா? என்று தெரியாது.  இப்போது மிருக பலம் உள்ளது.  அவர்களின் அஜண்டாவில் மீதம் உள்ளது ஒன்றே ஒன்று மட்டுமே.

பொது சிவில் சட்டம்.

சீர்திருத்தங்களை முடித்த பிறகே நாங்கள் மற்ற (பொருளாதார) விசயங்களில் கவனம் செலுத்துவோம் என்ற நோக்கில் தான் இந்த ஆட்சி சென்று கொண்டிருக்கின்றது. இவர்கள் இதுவரையிலும் கொண்டு வந்த ஒவ்வொரு திட்டங்களும் முழுமையாக அழகாக முடிந்ததாகச் சரித்திரமே இல்லை. அப்படியே பாதியில் விட்டு விட்டு அடுத்த விசயங்களுக்கு வந்து விடுகின்றார்கள்.  ஜிஎஸ்டி இன்னமும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. 

இப்போது கொண்டு வந்துள்ள சுங்கவரி தானாகக் கழிக்கும் திட்டம் வரைக்கும் இப்படியே தான் அரைகுறை வேக்காடு போலவே வெந்தும் வேகாமல் போய்க் கொண்டேயிருக்கிறது. பத்துச் சதவிகித இட ஒதுக்கீட்டில் காட்டிய அக்கறையும் ஆர்வமும் வேறு எதிலும் காட்டியதாக எனக்குத் தெரியவில்லை. இப்போது இவர்கள் எடுத்துக் கொண்டிருக்கும் முரட்டுத்தனமாகக் கொள்கைகளைப் போல 2020 ல் கட்டாயமாகப் பொருளாதாரச் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள்.

பாஜக மேல் சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறக்கூடிய வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதில்லை. காரணம் ஒவ்வொருவரின் முதுகிலும் ஒரு டன் அழுக்கு உள்ளது. அறுதிப் பெரும்பான்மையில்லாத மாநிலங்களை பாஜக அதிகார செல்வாக்கின் மூலம் கபளீகரம் செய்கின்றது என்ற குற்றச்சாட்டிற்குப் பின்னால் இருப்பது என்ன?  கர்நாடகாவில் காங்கிரஸ் ல் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக விற்கு மாறி தேர்தலில் நிற்கின்றார்கள். அவர்களே வெல்கின்றார்கள்.  மக்களை நினைத்து காங்கிரஸ் புலம்பத்தான் முடிகின்றது. சந்துக்குள் வைத்து அடிக்கும் வேலையைத்தான் பாஜக தொடர்ந்து செய்கின்றது. காரணம் இது அரசியல். தர்ம நியாயங்களைப் பற்றி ஒன்றும் ஆகப் போவதில்லை.  இதைத்தான் 50 வருடங்களாக காங்கிரஸ் செய்தது. இப்போது அதையே பாஜக ஆயுதமாக வைத்துக் கொண்டு ஆட்டம் காட்டுகின்றது.

கடந்த ஐந்தாண்டுகள் போலக் காரணம் சொல்லி இனியும் இவர்கள் தப்ப முடியாது. தெளிவான இந்தியாவை, நம்பிக்கையான இந்தியாவை உலகத்திற்கு அடையாளம் காட்டாத பட்சத்தில் அடுத்த 25 வருடங்களுக்கு பாஜக எழவே முடியாது.  

ஒரு வேளை பாஜக எதார்த்தத்தை உணர்ந்து இதற்குப் பிறகாவது சரியான தடத்தில் சென்று வெற்றி பெற்றால் காங்கிரஸ் ல் உள்ள அனைவரும் பாஜக பக்கம் சென்ற விடுவார்கள். 

ராகுல் முதியோர் பென்சன் வாங்கும் நிலைக்கு ஆளக்கூடும்.


(இலவசமாக படிக்க முடியும்)

25 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// இப்போது மிருக பலம் உள்ளது. //

மிகச்சரியாக சொல்லி உள்ளீர்கள்...!

KILLERGEE Devakottai said...

//மக்கள் புரிந்து கொண்டார்கள். தெரியாத பேயை விட தெரிந்த பிசாசு பரவாயில்லை என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். இதன் காரணமாகத்தான் பாஜக இரண்டாவது முறை வென்றது//


ஆக எல்லோருமே பரமபிதா கூட்டம்தான் போலும்...

G.M Balasubramaniam said...

விட்டால் பஜக வின் கொள்கை பரப்பு செயலாளராக செயல் படுவீர்கள் போல் இருக்கிறதே

ஜோதிஜி said...

காலையில் இருந்து இந்த விமர்சனத்தைப் படித்துப் படித்து சிரித்துக் கொண்டேயிருக்கின்றேன் நண்பா. இது தான் டைமிங் சென்ஸ்.

கிருஷ்ண மூர்த்தி S said...

பதிவை இப்போதுதான் படித்து முடித்தேன் ஜோதிஜி! மாசேதுங் சொன்ன மாதிரி அரசியலிலும் கூட என்ன உத்தி , ஆயுதத்தைக் கையிலெடுக்கவேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறான் என்றாகிவிட்டது. காங்கிரஸ் கையாண்ட ஆயுதத்தை அவர்களுக்கெதிராக பிஜேபி வெற்றிகரமாகக் கையாள்கிறார்கள்.

குறைகள் இன்னும் நிறைய சொல்லலாம். ஆனால் யாரும் கைவைக்க முடியாது என்று மமதையோடு அலைந்த சிதம்பரத்தை அடக்கவும் ஒரு அமித் ஷா வேண்டியிருக்கிறது. அரசு நிர்வாகத்தில், நீதித்துறையில் காங்கிரஸ் விட்டுப்போயிருக்கிற பெருச்சாளிகளை முழுக்கக் களையெடுத்தால் மட்டுமே மோடி என்றில்லை வேறு எவராக இருந்தாலுமே உருப்படியான மாற்றங்களை சாதிக்க முடியும்

ஜோதிஜி said...

முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.

ஜோதிஜி said...

நாளைய பொழுது யார் கையில் உள்ளதோ?

ஜோதிஜி said...

2020 இன்னும் உங்களுக்கு வேடிக்கை உள்ளது. காத்திருக்கவும்.

திண்டுக்கல் தனபாலன் said...

பொய்யை மட்டுமே பேசித் திரியும் மோடி மஸ்தான் வகையராக்களுக்கு...

*ஒவ்வொரு முறையும் பிரதம மந்திரி மோடி மேடையில் கடந்த 60 வருடங்களாக காங்கிரஸ் ஒன்றுமே செய்யவில்லை, ஒன்றுமே செய்யவில்லை என்று முழங்குவார்...*

*இதுதான் அவருக்கு பதில்....* *இதை எழுதியது ஜூலியஸ் ரெபைரோ, ஓய்வு பெற்ற IPS அதிகாரி, முன்னாள் DGP, மஹாராஷ்டிரா.*

*ஒரு சாதாரண இந்திய பிரஜையாகிய நான் சொல்லிய இவைகள் அவர்களுக்கு போய் சேர வேண்டும்.*

*மோடிஜி, இப்படி சொல்லுவதை நிறுத்துங்கள். 60 வருடங்களில் என்ன சாதித்தோம் என்பதை பாருங்கள்,*

*இந்திய பிரஜைகள் எல்லாரும் முட்டாள்கள் இல்லை என்பதை முதலில் நீங்கள் (மோடி) உணருங்கள்.*

*நீங்கள் பிரதம மந்திரியாக இருக்கும் நம் இந்தியாவை 200 வருடங்களுக்கு மேலாக ஆங்கிலேயன் ஆட்சி செய்தான்.*

*இந்தியர்கள் அனைவரும் அவனுக்கு அடிமைகளாகத்தான் இருந்தார்கள்.*

*1947ல் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சி ஆரம்பித்தபோது, ஆங்கிலேயன் துடைத்து வைத்துவிட்டுப்போன பூஜ்யமான பொருளாதாரம்.*

*ஆங்கிலேயன் விட்டுப்போன குப்பைகளைத்தவிர வேறு ஏதுமில்லை.*

*ஒரு பின் தயாரிக்கக்கூட எவ்விதமான வசதியையும் அவன் விட்டுப்போகவில்லை.*

*இந்தியா முழுவதுமாக 20 கிராமத்தில் மட்டுமே மின்சார வசதி.*

*20 அரசர்களுக்கு மட்டுமே தொலைபேசி.*

*குடிதண்ணீர் கிடையாது.*

*நாடு முழுதும் 10 சிறிய அணைக்கட்டுகள்.*

*ஒரு மருத்துவமனையும் கிடையாது.*

*ஒரு கல்வி நிறுவனம் கிடையாது,*

*விவசாயத்திற்கு நீர் வசதி, பயிர்களுக்கு பூச்சி மருந்து எதுவுமே கிடையாது.*

*வேலைகள் கிடையாது.*

*பசி பஞ்சம்தான் நாட்டில். பிஞ்சுக் குழந்தைகள் கொத்துக் கொத்தாக மரணம்.*

*எல்லையில் மிக சிறிய அளவில் இராணுவ அதிகாரிகள்,*
*4 விமானங்கள், 20 பீரங்கிகள்,நாட்டின் நான்கு எல்லைகளும் திறந்த நிலை.*

*குறைவான அளவில் சாலைகள் மற்றும் பாலங்கள்.*
*காலியான கருவூலங்கள்.*

*இந்த நிலையில்தான் நேரு பதவியேற்றார்...*

*60 வருடங்கள் கழித்து இந்தியா?????*

*உலகில் மிகப்பெரிய இராணுவ சேவை.*

*ஆயிரக்கணக்கில் போர் விமானங்கள், பீரங்கிகள்,* *லட்சக்கணக்கான தொழில்நுட்ப ஸ்தாபனங்கள்,*

ரூர்கேலா, பிலாய் இரும்பு எஃகு தொழிற்சாலைகள்

*அனைத்து கிராமங்களிலும் மின் வசதி,*

*நூற்றுக்கணக்கான மின்சார உற்பத்தி நிலையங்கள்,*

* கிராமங்களையும் நகரங்களையும் இணைத்து இலட்சக்கணக்கான கிலோ மீட்டர்கள் சாலைகள் மற்றும் பாலங்கள்,*

*புதிய இரயில் நிலையங்கள்,* நீராவி எஞ்சின்களிலிருந்து டீசல் என்ஜின்கள் பிற்பாடு மின்சார ரெயில்கள்.

*ஸ்டேடியங்கள்,* நகர்புற கிராமப்புற விளையாட்டு வீரர்களை அதிகளவில் ஊக்கப்படுத்தியது. கிரிக்கெட் விளையாட்டின் மூலம் சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியது.

*சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிகள். மக்களின் அடிப்படை சுகாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசின் பங்களிப்புகள்.

*அனைத்து இந்தியர்களின் இல்லங்களில் தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி வசதியை ஏற்படுத்தியது.*

*இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வேலைசெய்யகட்டமைப்பு, வங்கிகள், பல்கலைக்கழகங்கள்,*

*AIIMS, IIMS,அணு ஆயுதங்கள், நீர்மூழ்கி கப்பல்கள், அணு ஆயுத ஆராய்ச்சி நிறுவனங்கள்,*

*விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி நிலையம், பொதுத்துறை நிறுவனங்கள்.*

*பல வருடங்களுக்கு முன்பே இந்திய இராணுவம் லாகூர் வரை சென்று, பாகிஸ்தான் நாட்டை இரண்டாக ஆக்கியது,*

*அப்போது ஒரு லட்சத்திற்கும் மேலான பாகிஸ்தானியர்களை நம்மிடம் சரணடையவைத்து இந்தியாவின் ராணுவ பலத்தை நிரூபித்தது.,*

*இந்தியாவிலிருந்து உணவுப்பொருட்கள் மற்றும் கனிம வளங்களை ஏற்றுமதி செய்தது,*

*வங்கிகள் அனைத்தையும் தேசிய உடைமை ஆக்கியது இந்திரா காந்தி.*

*கணினி அறிமுகம். அதன் மூலம் உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் அதிக வேலை வாய்ப்புகள்.*

*மோடிஜி நீங்கள் ப்ரதான் மந்திரி ஆனது இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி மூலம்....*

*நீங்கள் ஆட்சி அமைக்கும்போது இந்தியா பொருளாதார நாடுகளின் உலக அளவில் முதல் 10ல்...*

*இதை தவிர GSLV, மங்கள்யான், மெட்ரோ ரெயில், மோனோ ரயில், பன்னாட்டு வானூர்தி நிலையங்கள்,*

*ப்ரித்வி ஏவுகணை,அக்னி ஏவுகணை, நாக் ஏவுகணை,*
*அணு ஆயுதங்கள் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்கள்.....*
*இவைகள் அனைத்தும் நீங்கள் பிரதமராவதற்கு முன்பே சாதிக்கப்பட்டு விட்டது.*

*தயவுசெய்து நீங்கள் மக்களிடம் வந்து 60 வருடங்களில் காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லாதீர்கள்.*

திண்டுக்கல் தனபாலன் said...

*கடந்த நான்கு ஆண்டுகள், 6 மாதங்களில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சொல்லி வாக்கு கேளுங்கள்.*

*பெயர்கள் மாற்றம்,சிலை அரசியல், மாட்டு அரசியல்,*

உங்களது நிர்வாகத் திறமை யின்மையால் உள் நாட்டு உற்பத்தியில் பெரும் சரிவு

*தோல்வியுற்ற பண மதிப்பு இழப்பு (demonetization), அனுபவில்லாமல் செயல்பட்ட GST, மக்களை வெயிலிலும், மழையிலும் வரிசையில் நிற்க வைத்து அவர்களது பணத்தை எடுக்க முடியாத நிலைக்கு தள்ளியது,*

*பாஜக எதிர்கட்சியாக இருக்கும்போது எதிர்த்த வெளிநாட்டு நேரடி பண முதலீடுகள்,
இப்போது வெட்கமில்லாமல் ஆதரிப்பது....*

நாட்டை அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் விற்றது,
அம்பானியின் இரண்டு மாத கம்பெனிக்கு ரஃபேல் விமான ஆர்டரை கொடுத்தது....
இந்திய நிறுவனம் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் ஐ செயலிழக்க செய்தது, BSNL நிறுவனத்தை மூடுவதற்கு அம்பானியின் ஜியோ மூலமாக செயல்படுவது....

குருட் ஆயில்
(கச்சா எண்ணெய்) மிகக்குறைந்த விலையில் கிடைக்கும்போது, பெட்ரோலும் டீசலும், எரிவாயுவையும் அதிக விலைக்கு விற்குமளவிற்கு வரிகள்....

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்திருந்த ஏழை, நடுத்தர மக்களின் பணமான
ரூ 1771 கோடிகளை, மினிமம் பேலன்ஸ் வைக்காமல் இருப்பதாக சொல்லி தண்டத்தொகை...

சப்கே சாத்,
சப்கோ விகாஸ் யாருக்கு என்றால்
அமித்ஷா, அவரின் மகன் சவுரியா தோவல், அம்பானி, அதானி, பாபா ராம்தேவ் பதஞ்சலி குழுமம் மற்றும் பாஜகவின் ஸ்பான்சர்கள்.

கங்கை நதியை தூய்மைப்படுத்த
ரூ 3000 கோடிகள்.... கங்கையில் குளிக்க செல்லும் ஒவ்வொருவருக்கும் தெரியும் இந்த பணம் எங்கே என்று?????

*இது காங்கிரஸ் கட்சிக்கு விளம்பரமல்ல....*
*நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவனுமில்லை.*

*நான் விபரங்கள் தெரிந்த சாதாரண இந்திய குடிமகன்.*

*ஒவ்வொரு முறையும்60 ஆண்டுகள்* *ஒன்றுமேநடக்கவில்லை என்று சொல்லும்போது என்னுடைய ப
குத்தறிவு ஏற்க மறுக்கிறது.....*

மேலும் 2020 ??????

#படித்ததில்பிடித்தது

ஜோதிஜி said...

ராஜீவ் காந்திக்கு பின்னால் உள்ள காங்கிரஸ் குறித்து இது போல அழகாக அற்புதமான அவசியமான நிச்சயமான நிதர்சனமான உண்மைகள் இருந்தால் தயவு செய்து இங்கே பகிரவும்.

திண்டுக்கல் தனபாலன் said...

எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி...?

ஆனால்...

எரிகிற நெருப்புக்குப் பயந்து எண்ணெய்க் கொப்பரையில் விழுந்த மாதிரி...!

ஜோதிஜி said...



நான் பிறந்த ஊர் மிகச் சாதாரண கிராமம். அங்குள்ள அரிசி ஆலைகள் முதல் தவிட்டிலிருந்து எண்ணெய் எடுக்கும் நிறுவனங்களில் 90 சதவிகிதம் வட மாநில தொழிலாளர்கள் தான் பணியாற்றுகின்றார்கள். அனைவரும் 18 முதல் 25 வயது. மோடி வந்து ஆறு ஆண்டுகள் ஆகின்றது.
திருப்பூரில் இப்போதைய சூழலில் 6 லட்சம் வட மாநிலத் தொழிலாளர்கள் இருக்கின்றார்கள். அதே வயது.
என் உத்தேச கணக்குப்படி தமிழகம்முழுக்க எப்படிப் பார்த்தாலும் ஒரு கோடி பேர்கள் வட மாநிலத் தொழிலாளர்கள் இருக்கக்கூடும்.
உத்தேசமாக 50 ஆண்டுகள் காங்கிரஸ் இந்த நாட்டை ஆண்டுள்ளது. என்ன ஆச்சு? ஏன் இவர்கள் மாநிலம் முன்னேற வில்லை? ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள நண்பர் சொல்கிறார். அங்குள்ளவர்கள் வருடத்தில் மூன்று மாதங்கள் அரிசி பீர் தான் இன்னமும் உணவு. ஒரிஸ்ஸா, ஜார்கண்ட் முதல் பல மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட உள் பகுதிகளில் இராணுவம், காவல்துறை எதுவும் இன்று வரையிலும் உள்ளே செல்ல முடியாது. அங்கு சென்ற நண்பர் நேரிடையாகப் பார்த்து சொன்னது.
ஏன் இதெல்லாம்?
நான் பாஜக வை தலையில் வைத்து கொண்டாட விரும்பவில்லை. காங்கிரஸ் என்பது தன் சுயலாபத்துக்காக மக்களை பிரித்து வைத்து இது வரையிலும் தன்னைக் காப்பாற்றிக் கொண்டு உள்ளே உள்ள பிரச்சனைகள் வெளியே தெரியாதவாறு காலத்தை நகர்த்திக் கொண்டே வந்து இப்போது இந்த நிலையில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது என்பது தான் என் ஆதங்கம்.
நேரு,இந்திரா( என் மகளில் பெயரே இவரின் பெயர் தான்) ராஜீவ் மூன்று பேருமே என் ஆதர்ஷணம்.
ஆட்சி செய்யவே லாயக்கு இல்லாத சோனியா கையில் இந்த நாடு செல்ல வேண்டுமா?

Avargal Unmaigal said...

தமிழகம்முழுக்க எப்படிப் பார்த்தாலும் ஒரு கோடி பேர்கள் வட மாநிலத் தொழிலாளர்கள் இருக்கக்கூடும்.உத்தேசமாக 50 ஆண்டுகள் காங்கிரஸ் இந்த நாட்டை ஆண்டுள்ளது. என்ன ஆச்சு? ஏன் இவர்கள் மாநிலம் முன்னேற வில்லை?

சரியான கேள்விதான் ஜோதிஜி இதே 50 ஆண்டில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது தமிழகமும் இந்தியாவில்தானே இருந்தது. அப்படியென்றால் தமிழகம் வளர்ந்தது எப்படி?

தமிழகத்தை காங்கிரஸ் ஆளவில்லை என்றால் தமிழகத்தை ஆண்டத்து திராவிட கட்சிகள்தானே அந்த கட்சிகளால்தானே தமிழகம் வளர்ந்து இருக்க முடியும் ஆனால் பாஜககாரர்கள் சொல்லவது என்னவென்றால் திராவிட ஆட்சியில் தமிழகம் பாழ்பட்டடுவிட்டது என்ற ஒப்பாரிதான்


பக்கத்துநாடுகளை ஒப்பிடும் போது காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவும் அது போல பக்கத்து மாநிலங்களை ஒப்பிடும் போது திராவிட அட்சியில் தமிழகமும் நங்கு முன்னேறித்தான் இருக்கிறது அதை யாரும் மறுக்க முடியாது ஆனால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் இப்படி இந்தியாவும் தமிழகமும் முன்னேறிய போது அதற்கு காரணமான தலைவர்களின் குடும்பமும் சமீப காலத்தில் மிக அசுரத்தனமான வளர்ச்சியை அடைந்தது அதுதான் தவ்று அதைத்தான் நாம் விவாவதிக்க வேண்டுமே தவிர இந்தியாவின் வளர்ச்சியையும் தமிழகத்தின் வளர்ச்சியையும் அல்ல இந்த தலைவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் மற்றும் அவர்களது கட்சியை சார்ந்தவர்களின் சொந்த வளர்ச்சியும் மற்றும் பொதுமக்களின் ஒழுக்க கேடுகளும் இல்லாமல் இருந்தால் நிச்சயம் இந்தியா வல்லராசகவே வளர்ந்து இருக்கும்


இன்னொரு தகவல் மோடி ஆட்சி ஒன்றும் ஊழல் அற்ற ஆட்சி இல்லை பாஜகவின் அதிகாரப் பவர் என்றாவது ஒரு நாள் மாறும் அப்போது இவர்களின் வண்டவாளங்கள் எல்லாம் யாரும் கேட்காமலே தண்டவாளத்தில் தானே சூப்ப்ர் ட்ரெயினாக ஒடி வரும்

திண்டுக்கல் தனபாலன் said...

ஜண்டா : 55 ஆண்டுகளாக ஜார்கண்டுக்கு காங்கு என்ன செய்தது...?

சிறு குறிப்பு : ஜார்கண்ட் பிறந்தே 19 வருடம் ஆகிறது... ஹா... ஹா... இதில் 16 வருடம் யாருடைய ஆட்சி...?

மேலும் : https://www.facebook.com/kgbsenthil/posts/3007987215882079

ஜோதிஜி said...

மோடி ஆட்சி ஒன்றும் ஊழல் அற்ற ஆட்சி இல்லை பாஜகவின் அதிகாரப் பவர் என்றாவது ஒரு நாள் மாறும்/////// என் பதிவை முழுமையாக படிக்க உங்களுக்கு நேரம் இல்லை என்பதனை புரிந்து கொண்டேன். நன்றி.

ஜோதிஜி said...

தப்புத் தப்பா புரிந்து கொண்டால், தப்பானவர்கள் எழுதுகின்றவர்களை வேத வாக்காக எடுத்துக் கொண்டால் நான் என்ன செய்வது? பீகாரில் இருந்து பிரிந்தது தான் ஜார்கண்ட். நான் மறுக்கவில்லை. ஆனால் நான் குறிப்பிட்டது அதன் தற்போதைய நிலைமை. வடக்கு பீகார் பக்கம் சென்றால் 1947 ல் இந்தியா எப்படி இருந்ததோ அப்படித்தான் இன்னமும் உள்ளது. தனி நபர்களின் அரசாங்கம் தான் இன்னமும் உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இருந்து இங்கு பணியாற்றிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் சொல்லும் கதைகளைக் கேட்கும் போது நம்ப முடியாததாக உள்ளது. கடந்த சில வருடங்களாகத்தான் மின்சாரம், கேஸ் இணைப்பு, செல்போன் டவர், தேசிய நெடுஞ்சாலை இணைப்பு (இதைப் போட விடாமல் தடுக்கும் கேங் அங்கே அதிகம்). ஜன்னல் கதவுகளை திறந்து வைங்க. வாய்ப்பிருந்தால் தமிழ் ஊடகங்களைத் தவிர்த்து வட மாநிலம் குறித்த டாக்மெண்ட்ரி வீடியோக்கள் பார்க்கவும்.

Avargal Unmaigal said...

///தமிழகம்முழுக்க எப்படிப் பார்த்தாலும் ஒரு கோடி பேர்கள் வட மாநிலத் தொழிலாளர்கள் இருக்கக்கூடும்.உத்தேசமாக 50 ஆண்டுகள் காங்கிரஸ் இந்த நாட்டை ஆண்டுள்ளது. என்ன ஆச்சு? ஏன் இவர்கள் மாநிலம் முன்னேற வில்லை?///

உங்கள் பதிவை முழுமையாகத்தான் படித்தேன் ஆனால் நான் கருத்து சொன்னது இந்த வரிகளை படித்த பின்புதான் அது பதிவில் வந்தது அல்ல பதிவிற்கு நீங்கள் இட்ட கருத்துதான் இதற்கு தான் நான் பதில் கருத்தை சொல்லி இருந்தேன்

ஜோதிஜி said...

பாஜக மேல் சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறக்கூடிய வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதில்லை. காரணம் ஒவ்வொருவரின் முதுகிலும் ஒரு டன் அழுக்கு உள்ளது. அறுதிப் பெரும்பான்மையில்லாத மாநிலங்களை பாஜக அதிகார செல்வாக்கின் மூலம் கபளீகரம் செய்கின்றது என்ற குற்றச்சாட்டிற்குப் பின்னால் இருப்பது என்ன? கர்நாடகாவில் காங்கிரஸ் ல் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக விற்கு மாறி தேர்தலில் நிற்கின்றார்கள். அவர்களே வெல்கின்றார்கள். மக்களை நினைத்து காங்கிரஸ் புலம்பத்தான் முடிகின்றது. சந்துக்குள் வைத்து அடிக்கும் வேலையைத்தான் பாஜக தொடர்ந்து செய்கின்றது. காரணம் இது அரசியல். தர்ம நியாயங்களைப் பற்றி ஒன்றும் ஆகப் போவதில்லை. இதைத்தான் 50 வருடங்களாக காங்கிரஸ் செய்தது. இப்போது அதையே பாஜக ஆயுதமாக வைத்துக் கொண்டு ஆட்டம் காட்டுகின்றது.

ஜோதிஜி said...

மிஸ்டர் மீடியா அவர்களுக்கு, உங்களால் உங்கள் சொந்த முகத்தை காட்டத் துணிவில்லை என்ற போது நீங்கள் ஏன் சமூகத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும். விடுங்கள். அரசியலில் அதிகாரத்தைப் பிடிக்க ஒவ்வொருவரும் அவருக்கும் தெரிந்த பாதையை தேர்ந்தெடுப்பார்கள். பாஜக தவறின் மூலம் தான் ஆட்சியைப் பிடித்தார்கள் என்றால் அப்படியே இருக்கட்டும். அந்த தவறு செய்ய துணிவில்லாத, லாயக்கு இல்லா சோனியா இப்படியே இருக்கட்டும்.

Mr. Media said...

அன்பின் ஜோதிஜி உங்கள் எழுத்துக்களை படிப்பவன் என்ற முறையில் உங்கள் மேல் எனக்கு மதிப்பு உண்டு சமூக வலைத்தளங்களில் புனைப் பெயர்களில் வலம் வருபவர்கள் எல்லாம் சொந்த முகத்தை வெளிக்காட்ட துணிவு இல்லாதவர்கள் அல்ல விருப்பமில்லாதவர்கள் ஆக கூட இருக்கலாம். சரி போகட்டும், நீங்கள் ஏன் என் கமெண்ட்டை டெலிட் செய்து விட்டு என் கமெண்டுக்கு பதில் அளித்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?

அது ஒரு கனாக் காலம் said...

எல்லாரும் வந்துட்டு போய்ட்டாங்க , நான் ரொம்ப லேட் .

பா ஜ கா - சொல்லாததை செய்வதில்லை , 370 அல்லது குடியுரிமை , முத்தலாக் , இனி UCC ( நாடு முழுவதும் பொதுவான சட்டம் ) ...எல்லாவற்றையும் சொல்லி தான் செய்து வருகிறார்கள் . விலை வாசி , விலைவாசி என்று எல்லாரும் சொன்னாலும், நான் அறிந்த வரை ( நான் ஒரு NRI ) , inflation index , கட்டுக்குள் இருப்பதாக தான் தகவல்.... வெங்காயம் விலை உயர்வு ஒரு விதி விலக்கு ஆதார் மூலம் நிறய ஊழல்கள் கட்டுக்குள் அடக்கம் ( கெரசின் , யூரியா , உதவித்தொகை ( படிக்க) , சம்பளம் , இல்லாத மஸ்டெர் ரோல் ஊழியர்கள் , நேரடி பணம் பட்டுவாடா - பேங்க் /ஆதார் மூலம் ) .-

எதிர் காட்சிகள் தொடர்ந்து இந்த minority appeasement செய்து அரசியல் செய்தால் , பா ஜ க வுக்கு , வேற வழி கிடையாது. மேலும் , இந்து விரோத பேச்சுகள் ஓர் அளவுக்கு மேல் கூடினால் , மக்கள் ப ஜ க பக்கம் தான் சாய்வார்கள் - முக்கியமாக இஸ்லாமியர்களும் /கிறிஸ்துவர்களும் இப்படிப்பட்ட பேச்சுக்களை /செய்திகளை கண்டிக்காமல் , அதில் ஒரு சின்ன சந்தோஷம் கிடைப்பதுபோல் இருந்தார்கள் எனில் - நிச்சயம் இது கூடும் .அவர்களுக்கு சிற்றின்பம் கிடைக்கலாம், அனால் பெரும் துயரத்தில் கொண்டு போய் விடும். நம் வீடு கல்யாணத்தில் வந்து, நம் பக்கத்து வீட்டுக்காரரை வசை பாடினால் , நாம் அனுமதிப்போமா .... மாட்டோம் .

மோடியை எதிர்க்க யார் இருக்கார் ... என்ன தான் விலைஉயர்ந்த கோட்டு , வெளிநாட்டுப்பயணம் என , மீம் போட்டாலும் , அவரும் அவ்வப்பொழுது , அம்மாவை பார்ப்பது , பிளாஸ்டிக் இருக்கையில் அமர்வது என மீம் அல்லாத உண்மையான நிலைமையை படம் மூலம் எடுத்து உரைக்கிறார்.

இவர்கள் இது வரை கூறிவந்த அம்பானி/ அதானியில் - அம்பானி எப்பொழுதோ எதிர் திசைக்கு போய்விட்டார் ( மஹாராஷ்டிரா அரசியில்) .... அம்பானி நடத்தும் news 18 , தொலை காட்சி பார்த்தாலே போதும் ( தி .க குணசேகரன் , செந்தில் ...)

உண்மையில் மோடி கடின நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை ( 2G அப்பீல் , மாறன் திருட்டு ISD , TR .Balu .... இன்னும் எத்தனையோ ஊழல்கள் ...அருண் ஜெட்லீ மூலம் இது வரை தப்பித்தார்கள் . இன்னும் பாட புத்தகங்கள் , மொகலாய ஆட்சியை பற்றியும் , அவர்களின் அருமை பெருமை பற்றியும் அப்படியே இருக்கு . தஞ்சை பெரிய கோவில், ராமேஸ்வரம் , மதுரை மீனாட்சி , நெல்லையப்பர் , சிதம்பரம் ...இதெல்லாம் எவ்வளவு பெரிய கலை பொக்கிஷங்கள்... CBSE புஸ்தகங்களில் , சிறுகுறிப்பு கூட இருக்குமா என சந்தேகம் தான்.

ஜோதிஜி said...

நீங்கள் கொடுத்த விமர்சனத்தின் மூலம் என் எழுத்தை மிகவும் விரும்பி படித்துக் கொண்டிருப்பவர் என்பதனை புரிந்து கொண்டேன். என்னுடைய வருத்தம் என்னவென்றால் நான் சொல்வது தான் சரி என்று என்றுமே சொல்ல மாட்டேன். நான் எழுதியதிற்கு எதிர்ப்பதமாக எல்லா கருத்துக்களையும் யார் யாரோ எழுதியவற்றை தனபாலன் இங்கே வந்து எடுத்து போட்டுக் கொண்டு இருக்கின்றார். வாட்ஸ் அப் வாயிலாகவும் என்னை டென்சன் ஏற்ற முடியுமா? என்றும் சோதித்துக் கொண்டே இருக்கின்றார். ஆனால் வருத்தப்பட மாட்டேன். ஒதுக்க மாட்டேன். வெறுக்கவும் மாட்டேன். நட்பு வேறு. நாம் இணையத்தில் பேசும் கொள்கைகள் வேறு என்பதனை உறுதியாக கடைபிடிக்கின்றேன். அதே போல நீங்க எனக்கு கொடுத்த விமர்சனம் ஓகே. அது உங்கள் பார்வை. ஆனால் கம்பீரமாக தன் பெயரில் மற்றவர்கள் போல சொல்ல வேண்டும். அந்த துணிவைத் தான் ஒவ்வொருவரிடமும் எதிர்பார்க்கிறேன். ஒருவர் நீங்கள் விட்டால் பாஜக கொள்கை பரப்பு செயலாளர் ஆகி விடுவீங்க போல என்று கூட கலாய்கின்றார். இயல்பாகத்தான் எடுத்துக் கொள்கிறேன். என் முகம் முதல் அனைத்தையும் வெளிப்படையாக இங்கே வைத்துக் கொண்டு நாம் நம்பும் கருத்தை எடுத்து வைக்கின்றேன். அதற்கு மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் பேசுபவர்களும் அப்படியே வர வேண்டும் என்பது எதிர்பார்ப்பது தவறா. ஆனால் உங்கள் கருத்துக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே உங்களுக்கு பதில் அளித்தேன். சென்சிட்டிவ் ஆன விசயங்கள் பேசும் போது நான் யாருடன் பேசுகின்றேன் என்பதனை கவனத்தில் வைத்திருப்பேன். முகநூலில் இது போன்ற விசயங்களுக்கு பதில் அளிக்க மாட்டேன். உடனே சம்பந்தப்பட்டவரை ப்ளாக் செய்து என் அடுத்த வேலையைப் பார்க்க போயிடுவேன். உங்களை சங்கடப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். நன்றி. உங்கள்பெயரில் இப்போது உருவாக்கியது போல முகவரியை உருவாக்கிக் கொள்ளுங்க. நான் பாஜக சரி என்பதால் மோடி என் வீட்டில் வந்து எதையும்கொடுக்கப் போவதில்லை. தமிழக பாஜக வில் எவர் எவர் எந்த நிலையில் இருக்கின்றார்கள் என்பது வரைக்கும் உணர்ந்தே இதையும் எழுதத் தோன்றியது. நீங்கள் எப்போது இங்கு வந்தாலும் ஒன்றை நான்றாக நினைவில் வைத்துக் கொண்டு வரவும். காங்கிரஸ் என்பது சோனியா இறந்த பின்பு வேண்டுமானால் என் கோபம் மறையும். அதுவரையிலும் பாஜக வின் நல்லதையும் எழுதுவேன். அவர்கள் தவறு செய்தால் அதனையும் ஆப்ரேசன் செய்வேன் என்பதனையும் நினைவில் வைத்துக் கொண்டுபடிக்கவும்.

ஜோதிஜி said...

..அருண் ஜெட்லீ மூலம் இது வரை தப்பித்தார்கள் . ... படித்தவுடன் சிரித்து விட்டேன் சுந்தர்.பாஜக நினைத்தால் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் தூர் வார நினைத்தால் பாதி சமூக நீதி போராளிக்கூட்டம் எல்லாம் திஹாரில் தான் இருக்க வேண்டும். இந்த விசயத்தில் கள்ள ஆட்டம் தான் பாஜக ஆடுகின்றது. பார்க்கலாம்.

ஜோதிஜி said...

ரிசர்வ் வங்கி ஒப்பந்தம் பெற்ற இருவேறு நாணய அச்சகங்கள் ஒரே வரிசை கொண்ட நோட்டுகளை எப்படி தணிக்கையின்றி முறைகேடாக அச்சடித்தது, ஒப்பந்த எண்ணிக்கைக்கும் அதிகமாக ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை ஏன் அச்சடித்து போன்ற பல கேள்விகள் எனக்கு உண்டு.https://www.outlookindia.com/magazine/story/aadhar-a-few-basic-issues/279077?fbclid=IwAR3UpvoIUcTrMpGSDzM0WT9h6pc0xlOHTOqmJLVHoURSX33wAGf4WRqPoBs