Sunday, December 29, 2019

உங்களைப் பார்த்து பொறாமைப்பட கூட வைக்கிறது....

Rajesh Ram 


அன்புடன் ஜோதிஜி,

உங்களுக்காக எழுத்துச் சோம்பேறி ஆகிய நான்... உங்களை உத்வேகம் கொள்ளவும் மேலும் வெறிகொண்டு எழுதவும் என்னாலான தார் குச்சி கடிதம். உங்கள் சமீபத்திய வெளியீடான 5 முதலாளிகளின் கதையை ஒரு ரயில் பயணத்தின்போது ஒரு மணிநேரத்திற்கு குறைவான நேரத்தில் படிக்க முடிந்தது என் பாக்கியமே.




என்னால் படிக்க முடிந்த அளவுக்கு விமர்சனம் எல்லாம் எழுதுவது ஆகாத காரியம்... எந்தப் புத்தகத்தை நான் கையில் எடுத்தாலும் முதல் மூன்று பக்கத்திற்குள் என்னை திருப்தி செய்யவில்லை என்றால் அது என் அலமாரியில் ஒரு அலங்கார காகித பூ மட்டுமே... அதிர்ஷ்டவசமாக அந்த இரண்டு பக்கங்களை உங்கள் புத்தகம் என்னை எளிதாகக் கடக்க வைத்தது.... ஆரம்பத்தில் தொழில் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் உங்களை நீங்களே ஈடுபடுத்திக்கொண்டு அளவு என்னை நிஜமாகவே பிரமிக்க வைத்தது.... அதுவே உங்களை மேலேற்றும் ஏணியாக ஆக்கியதில் ஆச்சரியம் எதுவுமில்லை.... சிற்பல சலனங்களுக்கு ஆட்படாமல் நீங்கள் விலகிப் போனதே உங்களை நீங்கள் இப்போது இருக்கும் படிக்கு உயர்த்தியதாக நான் கருதுகிறேன்... நடுவில் உங்கள் "தி ஜானகிராமன்" தாக்கத்தை என்னால் உணர முடிகிறது... இன்னும் சொல்லப்போனால் எழுத்தாளர் எம்ஜிஆரின் "நான் ஏன் பிறந்தேனின்" ஊடுருவலையும் என்னால் ஊகிக்க முடிகிறது....

இன்னும் சொல்லப்போனால் உங்களைப் பார்த்து பொறாமைப்பட கூட வைக்கிறது....

அலுவலகம் சென்று கடமையாற்றி!???!! நிறைய வெட்டி பொழுது போக்கி கொண்டு இருக்கும் என்னால் இத்தகைய எழுத்துக்களை நிச்சயமாக எழுத முடியாது.... சொந்தத் தொழில் செய்யும் உங்களுக்கு அதையும் மீறி எழுத்து சார்ந்து உங்களால் இயங்க முடிகிறது என்றால் கண்டிப்பாக கடவுள் (நம்பிகை இருக்குமானால்) கொடுத்த வரம் என்றே கருதுகிறேன்.....

மென்மேலும் உங்கள் எழுத்துப் பணி சிறக்க என் வாழ்த்துக்களும், கடவுளின் ஆசீர்வாதங்களும்.....


இன்று அமேசான் தரவரிசைப் பட்டியலில் 5 முதலாளிகளின் கதை எப்படியுள்ளது?


2 comments:

வெங்கட் நாகராஜ் said...

தொடரும் விமர்சனங்கள் மகிழ்ச்சி தருகின்றன நண்பரே. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மையை சொன்ன நண்பருக்கும் வாழ்த்துகள்...