Thursday, December 12, 2019

நடப்பு செய்திகள் - டிசம்பர் 2019

ருத்தமாக உள்ளது.

தேவகவுடா வுக்கு குண்டு முழங்க ராணுவ பீரங்கி மரியாதை கிடைக்காமல் போய்விடும் போல.

கழிவுகளை காலம் சல்லடை போட்டு சலித்து விடும்.

என் பேரனை ஏன் கைவிட்டீர்கள் என்று முதலில் தேவகவுடா அழுதார்.

என் இதய நோய் பொறுத்து உங்களுக்காகத் தானே உழைத்துக் கொண்டிருக்கிறேன் என்று குமாரசாமி அழுதார்.

ஆனால் மக்கள்?

எதிரும் புதிருமாக அரசியல் செய்து, கள்ள நாடகம் நடத்தி, ஒன்றாக அதிகாரத்தை கைப்பற்றிய காவருத்தமாக உள்ளது.

கழிவுகளை காலம் சல்லடை போட்டு சலித்து விடும்.

நீங்கள் ஓய்வு எடுங்கள். உழைத்தது போதும் என்று வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு இங்கிலாந்து மக்கள் டாடா பை பை சொல்லி வழியனுப்பியதைப் போல வச்சு செய்து விட்டார்கள்.

**************


திரைப்படத்துறை என்பது இருப்பதிலேயே வினோதமான ஆச்சரியமான துறை. பாம்பு வாய்க்குள் எப்போது போவார்கள் என்றே தெரியாது. இவரும் இப்படியா? என்று திடீர் செய்தி வரும். அவர்களுக்கு அது சாதாரணமான விசயம். நாம் தான் திக்குமுக்காடிப் போய் விடுவோம்.

சிவகார்த்திகேயன் சில மாதங்களுக்கு முன் லைம் லைட்டில் இருந்தார். சாதித்து விட்டார் என்று.

இப்போதும் சிகா லைம்லைட்டில் இருக்கின்றார். கடன் தொல்லையில் தவிக்கின்றார் என்று.

இப்போது முருகதாஸ் கொடி கட்டி பறக்கிறார்?

முருகதாஸ்க்கு மாய புகழ் வெளிச்சம் குறித்து தெரியாதா? என்றால் தெரியும்.

ஆனால் இது தான் சினிமா.

*************

நான் காங்கு குறித்து எழுதினால் என் மேல் பாய்ந்து பிராண்டுகின்றார்கள். இவர் என் நண்பர். பத்திரிக்கையாளர். குறிப்பாக நேர்மையான பத்திரிக்கையாளர். என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஜெ சொத்துக் குவிப்பு வழக்கு கர்நாடாகாவில் நடந்த போது அங்கே நடந்த உண்மையான நிகழ்வுகளை இவர் எதிர்காலத்தில் புத்தகமாக எழுத வேண்டும். அனைத்தையும் அருகே இருந்து பார்த்தவர்.

Ra Vinoth

கர்நாடகாவில் காங்கிரஸை குழித்தோண்டி புதைத்துவிட்டு, இப்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் சித்தராமையா.அவரின் ஏதேச்சதிகாரமும், அளவுக்கு மீறிய‌ சுயநலமும், பதவி வெறியும் தான் காங்கிரஸின் இந்த மோசமான தோல்விக்கு காரணம்.

2018 சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்ற போதே சித்தராமையா ஒதுங்கி இருந்தால், குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி அரசு தப்பி பிழைத்திருக்கும். ஆனால் தன் விசுவாசிகளையெல்லாம் குமாரசாமிக்கு எதிராக தூண்டிவிட்டு,பாஜகவின் குதிரை பேரத்துக்கு துணைப்போனார்.

பாரம்பரிய காங்கிரஸாரை எல்லாம் கட்சியை விட்டு துரத்திவிட்டு, இப்போது தார்மீக ரீதியாக ராஜினாமா செய்கிறேன் என்கிறார்.இதை மக்களவைத் தேர்தலுக்கு முன்பே செய்திருந்தால், கர்நாடகாவில் காங்கிரஸ் சரிபாதி இடங்களையாவது பிடித்திருக்கும். இப்போது காங்கிரஸ் மூழ்கும் கப்பலாகி விட்டதால், தப்பியோடுகிறார்.

இனிமேலாவது நேரு குடும்பத்துக்கு, கட்சிக்காக உழைக்கும் காங்கிரஸ்காரனுக்கு பொறுப்பை கொடுக்கனும் என்கிற புத்தி வரட்டும்.

**************

ம்மா என்ற புனிதமான வார்த்தையை தமிழகம் சாக்கடையில் போட்டு அமிழ்த்து விட்டது. பன்றிகளுக்கு பெயர் சூட்டி மாற்றி விட்டது.

அந்தப் பெயரை உச்சரித்தாலே வராத கோபம் எல்லாம் மொத்தமாக வந்து விடுகின்றது

*************

மதரீதியாக துன்புறுத்தப்படும் ஹிந்துக்களின் இயற்கையான தாய் நாடாக இந்தியாவை அறிவிப்போம் .   2014 ல் பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் வாக்குறுதியாக  அளித்திருந்தது .

* குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா. ஆட்சிக்கு வந்த பிறகு தோன்றிய  சிந்தனை அல்ல.

மதச்சார்பின்மை பேசி அதிகாரத்தைச் சுவைத்த காங்கு இத்தனை ஆண்டுகளில் முஸ்லீம்களின் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை உருவாக்கியுள்ளது? இந்தியாவில் நடந்த (பாஜக ஆட்சியில் இல்லாத காலங்களில்) மதக்கலவரங்களில் காங்கிரஸ் எப்படி கையாண்டது என்பதனையும் நீங்கள் கணக்கில் எடுக்க வேண்டும்.

மதச்சார்ப்பின்மை என்பது இந்தியாவிற்கு அழகு தான். ஆனால் காங்கு அதனைப் பற்றி பேச தகுதியில்லை. அதனை ஓட்டரசியலுக்காகவே கையாண்டது. தன் கட்சிக்காரர்கள் கூட எவரும் தங்கள் எல்லையை விட்டு மேலேறி விடக்கூடாது என்பது காங்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் கவனமாக இருந்தது. இன்று வரையிலும் மாறவில்லை.

மேற்கு வங்கம் தொடங்கி வடகிழக்கு மாநிலங்கள் வரைக்கும் திறந்த வீடு போல காங்கு உருவாக்கிய மாய்மால அரசியல் தந்திரங்கள் காரணமாக என்ன நடந்தது. ஹாவாலா, போதைப் பொருள், பயங்கரவாதம் மூன்று பெருக்கெடுத்து ஓடியது. அண்டை நாடுகளில் உள்ளவர்கள் கணக்கின்றி உள்ளே வந்து செட்டிலானார்கள். வரைமுறையின்றி.

இது சட்டம் ஒழுங்கு முதல் இங்கே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வரைக்கும் ஏராளமான பாதிப்புகளை உருவாக்கியது. உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இவர்கள் செய்தது சரி தவறென்று சொல்ல காங்கு வுக்கு அருகதை இல்லை.

*************

பஞ்சு முதல் பனியன் வரை

2 comments:

KILLERGEE Devakottai said...

//அம்மா என்ற புனிதமான வார்த்தையை தமிழகம் சாக்கடையில் போட்டு அமிழ்த்து விட்டது. பன்றிகளுக்கு பெயர் சூட்டி மாற்றி விட்டது//

இந்தக்கோபம் எனக்கு நெடுங்காலமாக இருக்கிறது நண்பரே...

இந்த தீட்டு உலகம் அழியும்வரை மாறாது

ஜோதிஜி said...

வருத்தங்கள், கோபங்கள் அனைத்தையும் என்னால் மாற்றிக் கொள்ள முடிகின்றது. ஆனால் இவர் உருவாக்கி விட்டுச் சென்ற பல அக்கிரமங்களை எவர் வந்து மாற்றுவார்? நண்பர் பேசும் போது சொன்ன வாசகம் இது. மகாராணி போல வாழ்ந்து கடைசியில் தெரு நாய் போல இறந்து விட்ட கொடுமை என்றார்.