Wednesday, December 25, 2019

இணையத்தில் நடந்த முக்கிய நிகழ்வு 2019




2019 ஆம் ஆண்டில் இணையத்தில் நடந்த முக்கிய நிகழ்வு என்ன?

@ தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தவர்கள் முழு எழுத்தாளராக மாற முயன்றுள்ளனர்.

@ விரிவாக, விளக்கமாக, ஆழமாக எழுதிக் கொண்டிருந்தவர்கள் மாறிய இணைய எழுத்து வாசிப்புக்கேற்ப தங்கள் நடையை மாற்றியுள்ளனர்.

@ எழுத்தாளராக அவதாரம் எடுத்த ஒவ்வொருவரும் அதிவேக வாகனப் பயணம் போல தங்கள் எழுதும் நடையை மாற்றியுள்ளனர்.

@ நான்கு வரி எழுதிப் பழகியவர்கள் எழுத்தாளராக மாற வேண்டும் என்ற முயற்சியைத் தொடங்கியுள்ளனர்.




@ துப்பறியும் கதைகள் முதல் துப்புக் கெட்ட கதைகள் என்ற பெயரிலும் பலரையும் எழுத வைத்துள்ளது. இவற்றையெல்லாம் சுவராசிய நடையில் சொல்லவே முடியாது என்ற நம்பப்பட்ட ஆவணங்களையும் அழகு நடையில் எழுத முடியும் என்பதனையும் உணர்த்தியுள்ளது.

@ நான்கு பேர்கள் துண்டு துண்டாக எழுதி, வெட்டி ஒட்டி, அதனைப் பத்துப் பேர்கள் திருத்தி, ஒருவர் பெயரில் வெளியாகி அதற்கும் எழுத்தாளர் என்ற நிலையில் வாசிப்பவர்களின் பார்வையில் பிரமிப்பை உருவாக்கியுள்ளது.

@ எனக்கு எழுதத் தெரியாது. நான் சொல்வதை வைத்துக் குறிப்பெடுத்து எழுதிக் கொடு என்று எழுதி அதனைத் தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் கையாண்டு புத்தகமாக மாற்றி புதிய எழுத்தாளர்களை உருவாக்கியுள்ளது.

@ "நீ எங்கள் கொள்கைகளை ஆதரிக்காவிட்டால் நீ எங்கள் கூட்டத்திற்கே எதிரி" என்ற ஆபத்தான போக்கையும் உருவாக்கியுள்ளது.

@ "நான் ஏன் உன்னை ஆதரிக்க வேண்டும்?" என்ற நண்பர்களின் பெருந்தன்மையையும் அடையாளம் காட்டியுள்ளது.

@ மதவாதம் தவறு என்றவர்கள் சாதியவாதத்தைக் கண்டு கொள்வதில்லை. இவை இரண்டுமே தவறென்பவர்கள் இனவாதத்தை விட்டு வெளியே வருவதில்லை. இவை எதுவும் தேவையில்லை என்பவர்கள் ஊழலை மொத்தமாக மறந்து விடுகின்றார்கள். இந்தக் கூட்டத்தில் இல்லாமல் தனியொருவனாகக் கடலில் நெகிழிக் கழிவுகளுக்குள் சிக்கிய மீன்கள் போலவே நீந்திக் கொண்டிருக்கின்றார்கள்.

மொத்தத்தில் சரி? தவறு? என்பதற்கு அப்பாற்பட்டு இந்த வருடம் கிண்டில் கடலில் தமிழ்ப் புத்தகங்கள் மிக அதிக அளவில் மிதந்து கொண்டிருக்கிறது. வாசகர்கள் மறைந்து எண்ணிக்கையில் அடக்க முடியாத தமிழ் எழுத்தாளர்களை 2019 உருவாக்கியுள்ளது. எங்கெங்கு காணினும் தமிழ் இன்பமடா? என்கிற நிலைக்குக் கொண்டு வந்த அமேசான் தொழில் நுட்பக் குழுவினருக்கு 2020 ஆம் ஆண்டு இதனை விட இன்னமும் சவாலாக இருக்கப் போகும் ஆண்டாக மலரப் போகின்றது.

வேடிக்கை பார்க்காதீர்கள்.
விமர்சித்து ஒதுங்காதீர்கள்.
எதையும் ஒதுக்காதீர்கள்.


நாமும் இந்தக் கடலில் குதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மேலே சொன்ன ஒவ்வொருவரும் உருவாக்கக் காரணமாக இருந்துள்ளார்கள் என்பதனையும் நினைவில் வைத்திருக்கவும். உங்கள் சிந்தனைகளை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் என்றே எடுத்துக் கொள்ளுங்கள்.

நம்மால் ஏன் முடியாது? என்ற எண்ண மாற்றத்தை விதைக்கின்றார்கள் என்பதாகவும் எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் சொந்தக் கதை, சோகக் கதை, வெந்த கதை, வந்த கதை, நைந்த கதை, நீயெல்லாம் நாண்டுக்கிட்டு சாகலாம்டா? என்று பலர் பாராட்டிய கதைகள் என்று சொல்வதற்கு ஆயிரம் கதைகள் இருக்கக்கூடும். எவரிடமும் பகிர முடியாது நிலையில் கூட இருக்கலாம். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் கதைகளைக் கேட்கும் நேரமில்லாதவர்களாகவும் இருக்கலாம்.

உலகத்தீரே இதனைக் கேட்பீராக? என்று வலையேற்றுங்கள். இதன் மூலம் நீங்கள் காகிதத்தை அழித்து சுற்றுச்சூழலைக் கெடுக்கவில்லை. பதிப்பகம் வாயிலில் வரிசையில் போய் நிற்கத் தேவையில்லை. சென்னையில் மட்டும் தான் கிடைக்கும்? என்று அச்சப்படத் தேவையில்லை. ஒரே நாளில் உங்களின் உழைப்பு, உங்களின் திறமையை உலகத்திடம் கொண்டு சேர்க்கும் அமேசான் தொழில் நுட்பத்தை வாழ்த்தி மகிழுங்கள்.

உங்கள் இணையப் பயணத்தில் நானும் இங்கு உருப்படியாக இதனைச் செய்துள்ளேன் என்று சொல்லும் அளவிற்கு 2020 இருக்க என் வாழ்த்துகள்.

நீங்கள் மறைந்தாலும் உங்கள் படைப்பு இங்கு யாரோ ஒருவரின் கண்களில் பட்டுக் கொண்டேயிருக்கும் என்பதனை நினைவில் வைத்து இன்றே உங்கள் முயற்சிகளைத் தொடங்குகள்.

தமிழ் என்பது மாறும். ஆனால் மறையாது என்பதனை நிரூபிக்க நீங்களும் முயற்சிக்கலாமே?

5 முதலாளிகளின் கதை (திருப்பூர் கதைகள் Book 15) (Tamil Edition) by Jothi G ஜ... https://www.amazon.in/…/B07ZXJQH4T/ref=cm_sw_r_tw_dp_U_x_lj… via Amazon Reviewers Community Amazon online shopping Amazon India
🙏🙏🙏🙏🙏

நாளை முதல் ஐந்து நாட்கள் 5 முதலாளிகளின் கதை இலவசமாக வாசிக்கக் கிடைக்கும்.

இதுவரையிலும் வாசிக்காதவர்கள், கிண்டில் அன் லிமிட் ல் இல்லாதவர்கள், அலைபேசியில் கிண்டில் செயலி இல்லாதவர்களின் மேடான இடத்திற்கு வாருங்கள். உங்கள் மேன்மையான கருத்துக்களைத் தாருங்கள். தரத்தின் அடிப்படையில் நட்சத்திரங்கள் ஒளிர விடுங்கள். 
🙏

2020 உங்கள் வாசிப்புப் பயணம் டிஜிட்டல் வாசிப்பாக மாற வாழ்த்துகள்.
😍

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

2020 எண்ணம் போல வாழ்க்கை அமைய என் முன் கூட்டிய வாழ்த்துகள்.
🥰🥰🥰🥰🥰

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

2020 நல்லதொரு மாற்றம் வரும் என்று நினைக்கிறேன்...

ஜோதிஜி said...

வாழ்த்துகிறேன்.

Rathnavel Natarajan said...

மகிழ்ச்சி. வாழ்த்துகள்

G.M Balasubramaniam said...

எழுத்தாளர்கள் தங்கச்ளை மாற்றிகொள்வதுநல்லதா இல்லையா சொல்லலாமே

வெங்கட் நாகராஜ் said...

2020 நல்லதொரு மாற்றத்தினை கொண்டு வரட்டும். பலரும் கிண்டில் வழி புத்தகங்கள் வெளியிடுவது நல்ல விஷயம் தான். எனக்கும் அமேசான் வழி புத்தகம் வெளியிட எண்ணம் உண்டு - செயலாக்கத்தில் தான் தடைகள்...

அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும். மேலும் பல வெற்றிகளை நீங்கள் அடைய வாழ்த்துகள் ஜோதிஜி.