Wednesday, May 15, 2019

எழுதிய சில குறிப்புகள் 7

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக வைச் சேர்ந்த துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்ட வேலூர் தொகுதியை மட்டும் தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்து விட்டது. 

துரைமுருகன் வீட்டில், அவர் சம்மந்தப்பட்ட இடங்களில் பணம் கைப்பற்றப்பட்டதாகப் படங்களும் காட்சிகளும் தொடர்ந்து வலைதளங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்து கொண்டேயிருக்கின்றது. அவர் ஐம்பது லட்சம் கொடுப்பேன் என்று வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டார்.

இதுவொரு ஆச்சரியம், அதிர்ச்சி போலப் பார்க்கப்படுகின்றது.

துமு எவ்வளவு பெரிய கெட்டிக்காரர் என்பதனை ஏற்கனவே விகடனில் வந்த தந்திரி மந்திரி தொடரில் தெளிவாகச் சொல்லியுள்ளனர். பணத்தின் அருமை தெரிந்தவர். கஷ்டப்பட்டு மேலேறி வந்தவர். அவரைப் பொறுத்தவரையில் இந்தப் பணமெல்லாம் டிப்ஸ் மாதிரி.

இது எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. தனிப்பட்ட நபர்கள் இதனைப் பற்றி எழுதுவதை விடப் புதியதலைமுறை தன் தளத்தில் தலைப்பில் துமு வீட்டில் கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டது என்று எழுதிவிட்டு, உள்ளே அந்தப் பணம் யாருடையது? என்று விசாரணை தொடங்கியுள்ளது என்று முடிக்கின்றார்கள்.

அதிகாரப்பூர்வமாக எத்தனை கோடி என்று எவராலும் இன்னமும் சொல்ல முடியவில்லை. சோதனை போட்டவர்களும் அறிவிக்கப்படவே இல்லை.

இதில் மற்றொரு நுண் அரசியல் உள்ளது.

நம் மக்களுக்கு ரூபாய் நோட்டுகள் பளபள என்று சலவை நோட்டு போல் இருந்தால் செலவழிக்க மனமில்லாமல் சிறிது நேரம் தாளைத் தடவிக் கொண்டே இருக்கத் தோன்றும். அதன் காரணமாகவே என்னவோ எல்லாத் தாள்களும் சலவைத்தாளாகவே உள்ளது.

அவர்கள் கல்லூரியில் எல்லாவிதமான கோர்ஸ்ம் உள்ளது. சிபிஎஸ்சி மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிக்கூடமும் உள்ளது. அட்மிசன் சமயங்களில் ஒவ்வொரு தனியார் கல்லூரிகளிலும், பள்ளிக்கூடங்களிலும் ஆசிரியர்கள் தங்கள் பாடம் நடத்தும் பணியை விட்டு விட்டு நிர்வாக அறிவுறுத்தலின்படி பணக்கட்டு எண்ணி அடிக்கும் பணியை இங்கே நான் நேரிடையாகப் பார்த்துள்ளேன்.

துமு நடத்தும் கல்விக்கூடங்களில் ஒரு வருட வருமானம் என்பது நாம் தான் கூட்டிக் கழித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் தொழில் நேர்த்தியாக வார்டு எண் போட்டுப் பட்டியலிட்டு வைத்திருந்ததை எவரோ போட்டுக் கொடுக்காமல் இப்படி லம்பாக வந்து அள்ள முடியாது.

அப்புறம் புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக ஆதரவாளர் என்று உறுதியாகத் தெரியும்பட்சத்தில் அந்தக் குடும்பத்தைத் தவிர பல கிராமங்களில் தொடக்கப் பணமாக ரூபாய் 2000 (ஒரு ஓட்டுக்கு) அதிமுக கொடுத்து முடித்து விட்டார்கள். மூன்று ஓட்டு இருந்த குடும்பத்திலிருந்து அழைத்து இருந்தார்கள்.

நீங்க வாங்கி விட்டீர்களா? என்று அவசரமாகக் கேட்டார்கள்.

சுப்பராயனுக்கு நாம் தான் நன்கொடை கொடுக்க வேண்டிய சூழல் வரும். எம்எஸ்எம் ஆனந்தன் சம்பாரித்த பாதித் தொகையை செல்போன் கடைகளை ஒவ்வொரு ஊராகத் திறந்து (பினாமி பெயரில்) அங்கே கொண்டு போய் கொட்டியுள்ளார். நான் இருக்கும் பக்கம் அதிமுகவும் வந்தபாடில்லை. 

சிபிஆர் சொல்லவே வேண்டாம். அவருக்குக் கட்சியிலிருந்து பணம் கொடுத்தாலும் அது நேராக வீட்டில் உள்ள பீரோவுக்குத் தான் போகும். இன்னும் சில வாரம் கஷ்டப்பட்டுச் சுற்றிக் கொண்டிருப்பார். வென்றாலும் தோற்றலும் அப்புறம் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். மறுபடியும் தேர்தல் வந்தால் தலை வெளியே வரும்.

இவர்களையெல்லாம் நம்பி எப்படி வசூல் செய்வது? 

நண்பர் வேறு ஒரு ஓட்டுக்கு 84000 வாங்குங்கள் என்று கணக்குப் போட்டுச் சொல்லி பீதியைக் கிளப்பியுள்ளார்.

இதை வேட்பாளர்களிடம் சொன்னால் நடக்குமா? என்று 😔வேறு குழப்பமாக உள்ளது.

யாராவது எங்கள் சந்துக்கு வருவார்கள் என்று காத்துக் கொண்டிருக்கின்றோம் என்று அழைத்தவரிடம் சொல்லியுள்ளேன்.

*************

ஒவ்வொரு தேர்தல் சமயங்களிலும் திமுக விற்கு இருக்கும் அடிப்படை ஓட்டுகளுடன் பிறர் ஓட்டுக்கள் வந்து விடக்கூடாது என்று முழு முதற் வேலையாக செய்து தன் கடமையை ஒவ்வொரு முறையும் சரிவரச் செய்பவர் யார்?

கி.வீரமணி

^^^^^^^^^^^

சமீபத்தில் பலரும் தேஜஸ் ரயிலில் பயணம் செய்தததைப் பற்றி சிலாக்கியமாக எழுதியிருந்தார்கள். பயண நேரம், வசதிகள், ஆச்சரியம் இன்னும் பல. ஆனால் யார் மூலம் இந்த திட்டங்கள் இத்தனை விரைவாக வந்தது என்பதனை துளி கூட வெளிக்காட்டிக் கொள்ளவிலையே என்று நினைத்தால் நீங்க வேற நபர். 😂 

காரைக்குடி பட்டுக்கோட்டை மயிலாடுதுறை மார்க்கமாக இருந்த ரயில்வே தண்டவாளங்களை புடுங்கிப் போட்டு விட்டு போன மகராசன் எங்கேயிருப்பானுங்கன்னு நான் தேடியிருப்பேன். அனாதை போல அந்த ரயில்வே தடமே புல் முளைத்துக் கிடந்தது. இந்த தடம் மட்டுமல்ல. தமிழகத்தில் தென்மாவட்ட தடங்கள் முதல் பல்வேறு மாவட்ட இணைப்பு அனைத்தும் படு ஜருராக நடந்து முடிந்துள்ளது. 

வேகம் என்றால் அப்படியொரு வேகம். பாஜக ஆட்சியில் ரயில்வே துறை என்பது ஜெட் வேகம் தான். குறிப்பாக அந்தந்த மண்டல உயரதிகாரிகளுக்கு குறிப்பிட்டத் தொகை வரைக்கும் (500 கோடி என்று நினைக்கின்றேன்) திட்டங்களுக்காக டெல்லியின் கட்டளைக்காக காத்திருக்க வேண்டாம் என்று சீர்திருத்தங்கள் கொண்டுவந்ததும் பாஜக அரசு. 

சாலை லாபி என்பது இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு கட்சி வித்தியாசம் இல்லாமல் பணம் தினமும் வந்து கொட்டிக் கொண்டேயிருக்கும் துறை. 

பினாமிகளுக்கு ரயில்வே துறை குறித்து எப்படி அக்கறை வரும்?


No comments: