இருபது வருடத்திற்கு முன் என் உறவினர் என்னைத் தேடி வந்து இருந்தார். காரணம் கேட்ட போது திருப்பூர் பேபி எலெட்ரானிக்ஸ் கடை குறித்துச் சொன்னார். தான் வாங்க வந்த பட்டியலைக் காட்டினார். எனக்கு மயக்கமே வரும் அளவுக்கு அந்த பட்டியல் நீண்டதாக இருந்தது. எனக்கு அப்போது அந்த கடை குறித்து எதுவும் தெரியாது. ஆனால் தமிழகம் முழுக்க இந்த கடை நோக்கி வந்து கொண்டே இருந்தார்கள்.
காவல்துறையினர் வருகின்ற கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்குத் தினமும் திருவிழாக் கூட்டம் தான். ஆனால் நான் அப்போதே பலரிடமும் சொன்னேன். எங்கோ புகை வருகிறது. தீப்பிடிக்கப் போகின்றது என்றேன். என்னை உறவினர்கள் முதல் மனைவி வரைக்கும் கிறுக்கன் போலவே பார்த்தார்கள். சதுரங்க வேட்டை படம் போலவே முடிந்தது.
முதலாளி காணாமல் போனார். எத்தனை கோடி நஷ்டம். யாருக்கெல்லாம் பாதிப்பு ? எந்த தகவலும் இல்லை.
(அண்ணாமலை அவர்களின் பிறந்த நாள் அன்றுவெளியிட்ட வலையொளி காட்சியிது. வெளியிட்ட 18 மணி நேரத்தில் ஒரு லட்சம் பார்வையாளர்கள் பார்த்தனர்)
இப்போது இடைவேளை முடிந்து அதே நாயகன் வேறொரு தோற்றத்தில் வருவது போல அந்த முதலாளி தொடங்கியிருக்கின்ற நிறுவனத்தின் பெயர் கோபாலபுரம் சதுக்கம். நிச்சயம் அவர் முதலாளி இல்லை. முதலாளி யார் என்று தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் முதல் முறையாக ஆட்சியைப் பிடித்த ஜெ என்ற பெண்மணி செய்தது போலப் பினாமியாகப் பலரையும் வைத்துக் கொண்டு பல பாதைகளில் பணம் பம்ப் ஆகிக் கொண்டே இருக்கின்றது.
தொடக்கத்தில் ஒய்எஸ்ஆர் ரெட்டி காரு வந்தார். பிறகு தெலுங்கானா காரு இருந்தார். எங்களால் இதற்கு மேல் முடியாது என்று இவர்கள் இருவரும் மூச்சுவிட முடியாமல் தவித்தனர்.
தொடக்கத்தில் மின்சாரத்துறையில் உள்ள முன்னால் இந்நாள் அனைத்து ஒப்பந்தக்காரர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட கூலிகள் அனைத்தும் தங்கள் மூதாதையர்கள் பிறந்த மண்ணென்று துப்பாக்கி ஏந்திய பாதுகாவலருடன் வாரம் ஒரு முறை அனுப்பி வைப்பதற்கென ஒரு தனி கூட்டத்தை வைத்திருந்தனர் என்பதனை நீங்கள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.
இதனைத் தொடர்ந்து கடத்தல் தொழில் செய்வதையே கடமையாக வைத்துள்ள மதநல்லிணக்கவாதிகள் மூலம் கடல் கடந்து பல இடங்களுக்கு ஹவாலா மூலம் பம்ப் ஆனது. இதன் தொடர்ச்சி தான் வளைகுடா நாடுகளுக்குச் சென்ற நாடகக் காட்சி.
அது அண்ணாமலை ஆப்ரேசன் காரணமாகக் குறைத்துக் கொண்டார்கள்.
நன்றாகக் கவனிக்கவும். நிறுத்திக் கொள்ளவில்லை.
இதற்கென தனி அல்லக்கைகளை வைத்து அதற்கென ஒரு அணி ஒன்றை உருவாக்கிப் பெயர் சூட்டி, பதவி கொடுத்து கடைசியில் கொடுத்துள்ள வேலை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து கவனிப்பது, கண்காணிப்பது, வளர்ப்பது.
அதாவது வீட்டில் வளர்க்கும் நாய் போலவே தங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரையும் வைத்துள்ளது என்பது இணையத்தில் புழங்கும் அனைவருக்கும் தெரிந்தது தான்.
வெட்கம், மானம், சூடு, சொரணை இழந்தால் மட்டும் கோபாலபுரத்தில் மதில் சுவர் அருகே நிற்க முடியும். அவர்களுக்குத்தான் பயிற்சி பாசறை என்ற பெயரில் இருக்கும் தன்மானத்தையும் உறிஞ்சு எடுத்துச் சிறப்புப் பயிற்சியும் அளிக்கின்றார்கள்.
இப்போது பேபி எலெக்ட்ரானிக்ஸ் முன்னாள் முதலாளியும் இந்நாள் கோபாலபுரம் சதுக்கம் புது பணக்காரர் போலவே உலா வருகின்றார்.
இவர்களின் சித்து விளையாட்டில் வேறு சில விசயங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இப்போது ஒருவர் அண்ணாமலை அவர்கள் வெளியிட்டுள்ள ஊழல் புகார்களை முனை மழுங்க இவர் விஜயபாஸ்கர் பினாமி. அந்த பினாமி அண்ணாமலைக்குப் பினாமிக்கு என்கிற ரேஞ்சுக்கு கதையளப்பதை கண்டு சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை.
புதுக்கோட்டைச் சென்று நீங்கள் கேட்டால் தெரியும். அங்கு உள்ள ஒவ்வொரு தொழிலும் ஏதோவொருவகையில் விஜய பாஸ்கருக்குத் தொடர்புடையதாகவே இருக்கும். இது தவிர அவர் மூலம் வட்டிக்கு விட்டு வாங்கும் கூட்டம் என்பது மிகப் பெரியது. கடந்த இரண்டு வருடங்களில் எனக்குத் தெரிந்து நாலைந்து பேர்கள் வசூலித்த பெரிய தொகையை லவட்டிக் கொண்டு சென்றது வரைக்கும் தெரியும்.
ஆனால் அந்த அமுதசுரபியும், காமதேனு பசுவின் பாலும் வற்றக்கூடியதா? சுரந்து கொண்டே தான் இருக்கின்றது?
இவர்கள் உளறும் 100 கோடி என்பது இன்றைய சூழலில் விஜயபாஸ்கர் கோஷ்டிக்கு டிப்ஸ் பணம்.
இவர்கள் எப்படி மடை மாற்றுகின்றார்கள் என்பதனை கூர்மையாகக் கவனித்துப் பாருங்கள்.
ஏற்கனவே முதல்வருக்குத் தெரியாமல் அனைத்து அதிகாரிகளும் செய்கின்றார்கள் என்று கிளப்பி விட்ட அதே கரகாட்ட கோஷ்டி இப்போது அண்ணாமலை தன் பினாமி (அதாவது விஜயபாஸ்கர் ஆள் அண்ணாமலையின் ஆள் போல) க்கு ஒப்பந்தப்புள்ளி கிடைக்காத காரணத்தால் இப்படி பத்திரிக்கையாளர் கூட்டத்தின் வாயிலாக திமுக ஆட்சிக்குக் களங்கம் விளைவிக்கின்றார் என்று அள்ளி வீசிக் கொண்டு இருக்கின்றார்கள் வாய் விபச்சாரர்கள்.
சரி அப்படியே இடது பக்கம் யூ டேர்ன் போட்டு திருப்புங்கள்.
திருப்பூரில் அனிதா டெக்ஸ் என்ற பெயர் முந்தைய அதிமுக ஆட்சியிலும் அடிபட்டது. இப்போது அடிபடுகின்றது. கருப்பு பட்டியலில் கொண்டு போய் சேர்ப்போம் என்று சொன்னது என்ன ஆயிற்று? தரமற்ற பொருட்கள் குறித்து ஏதாவது விசாரணை உண்டா?
கிறிஸ்டி முதல் அனிதா டெக்ஸ் வரை இன்னும் பலரும் நேரிடையான உற்பத்தியாளர்கள் இல்லை என்பதனை நீங்கள் கவனத்தில் வைத்திருங்கள். இவர்கள் அனைவரும் இரண்டு பங்காளிகளின் பினாமிகள்.
அவன் படுக்கக் கூப்பிட்டால் அங்கே போவான். இவன் கூப்பிட்டால் யோசிக்காமல் இங்கே வருவான்.
ஜெ ஆட்சியிலிருந்த போது ஒரு குடும்பத்திற்கு விஷம் வைத்து இவர்கள் கொன்றார்கள். குழந்தை, மனைவி என்ற பாரபட்சம் இல்லை? யார்? எவர்? என்ன காரணம் என்று இன்று உங்களால் நினைவுக்குக் கொண்டு வர முடிகின்றதா?
இதன் தொடர்ச்சி அடுத்த நான்கு ஆண்டுகளில் உங்களுக்குத் தெரிய வரும்?
இன்று இரண்டு முருங்கைக்காய் பதினைந்து ரூபாய் என்று காய்கறி கடைக்காரர் சொன்ன போது ஒன்று மட்டும் வாங்கினால் போதும் என்று சபாநாயகர் அலைபேசியில் சொன்னவுடன் கையில் எடுத்த ஒன்றைக் கடைக்காரரிடம் திருப்பிக் கொடுத்தேன். ஒரு ஒப்பந்தப்புள்ளியில் திறப்பதற்கு முன்னால் 100 கோடி ரூபாய் என்பதனை டிப்ஸ் போலச் சம்பாதிக்கத் திறமை உள்ளவர்களை இந்த சமயத்தில் நினைத்துப் பார்த்தேன்.
அதிகாலை நடைபயிற்சி முடிந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்த போது அண்ணாமலை யாரை எதிர்த்து களத்தில் நிற்கின்றார்? என்பதனை யோசித்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தேன்..
No comments:
Post a Comment