மோடியை, பாஜக வை, அண்ணாமலையை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் இன்று வரையிலும் கேட்கும் ஒரே கேள்வி ஏன் தமிழகத்தில் பாஜகவிற்கு என ஒரு தொலைக்காட்சி சேனல் இல்லை? என்பதே.
பாஜகவிற்கு தமிழகத்தில் ஒரு தொலைக்காட்சி சேனல் உருவாக்குவது, வளர்ப்பது எல்லாவகையிலும் எளிது. ஆனால் அதனை விட சமூக வலைதளங்களின் காலம் தொடங்கி விட்டதால் அண்ணாமலை போன்றோர் கூட அதனை விரும்பியதாகத் தெரியவில்லை. வாட்ஸ் அப் என்பது இன்றைய சூழலில் வலிமையான ஊடகம். காடு, மலை, மேடு, பள்ளம், குழி, கடல், ஏரி, ஆறு என்று எங்கங்கோ இணையம் உள்ளதோ அத்தனை இடத்திற்கு மிக எளிதாகச் சென்று சேர்வது வாட்ஸ் அப் மட்டுமே.
இரண்டு நிமிட வலையொளிக்காட்சி முதல் முப்பது நிமிடமாகப் பிரித்த பல காட்சித் தொகுப்புகள் வரைக்கும் எளிதாகத் தமிழக மக்களிடம் சென்று சேர்கின்றது.
நன்றாகப் படித்தவர் முதல் சுமாராக படித்தவர் வரைக்கும், உலக அரசியல் தெரிந்தவர் முதல் உள்ளூர் கிராம அரசியல் மட்டும் தெரிந்தவர் வரைக்கும் அனைவருக்கும் காட்சி வடிவங்கள் சென்று சேர்ந்து விடுகின்றது.
அண்ணாமலை இப்படித்தான் தமிழகம் முழுக்க சென்று சேர்ந்தார்.
கூட்டம் என்ற பெயரில் கடந்த சில மாதங்கள் மாநாடுகளை இப்படித்தான் நடத்தி முடித்து உள்ளார்.
தமிழக அச்சு ஊடகங்கள் எதுவும் அண்ணாமலையை ஆதரிக்கவும் இல்லை.
தமிழக காட்சி ஊடகங்கள் அனைத்தும் திருட்டு ஆட்சியாளர்களைக் கடந்து இன்று வரை வெளியே வரவில்லை.
ஜூன் 26 அன்று சென்னையில் நடந்த மாநாடு தவிர்த்து, திருவாரூர், பழநி, திருச்சி, திருப்பூர் தெற்கு, மதுரை, நாமக்கல், பொள்ளாச்சி, திருநெல்வேலி என்று அனைத்து மாநாடுகளையும் ஒரே டேக் ல் இணைத்துள்ளேன்.
ஓய்வு நேரம், உடற்பயிற்சி செய்யும் நேரம், பயண நேரம் என்று உங்களுக்கு உகந்த நேரத்தில் கேட்க முடியும். பார்க்க முடியும். பலருக்கும் இதனைத் தெரிவிக்க முடியும்.
நம் கடன் பணி செய்து கிடப்பதே.
தமிழக பாஜக வில் இருந்து வலுவான பாராளுமன்ற உறுப்பினர்களை டெல்லிக்கு அனுப்பும் வரைக்கும் ஒவ்வொரு காட்சிகளும் கடைக்கோடி கிராமம் வரைக்கும் சென்ற சேரட்டும்.
இணைப்பு bit.ly/3ynI0ah
No comments:
Post a Comment