மானம் கெட்ட பிழைப்பு என்பது நாம் எதை மட்டும் விரும்புகின்றோம்? என்பதனைப் பொறுத்து மாறிக் கொண்டேயிருக்கும்.
மற்றவர்கள் பார்வைக்கும் நம் தனிப்பட்ட பார்வைக்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கும்.
குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, சமூக சேவை போன்றவற்றில் நியாயம், நீதி, நேர்மை என்பதனை வைத்து வாழத் தெரிந்தவர்களுக்குச் சிறிய தவறு என்றாலும் உள்ளூர உறுத்தும்.
இரவில் உறக்கம் வராது.
ஆனால் கமல் போன்றவர்களுக்கு இது இயல்பான பழக்கம்.
தன் சுகம், தன் விருப்பம் என்பதனைத் தவிர அவருக்கு வேறொன்றும் பெரிதில்லை என்பதனை தமிழ் கூறும் நல்லுலகம் தொடர்ந்து பார்த்துக் கொண்டே தான் வருகின்றது.
தான் பிறந்த ஊருக்கும், தான் சார்ந்து இருக்கும் தொழிலுக்கு, தன்னுடன் பழகியவர்களுக்கு, தன்னை வளர்க்க உதவியவர்களுக்கு, தன்னை ஆளாக்கிய சமூகத்திற்கு என்று அவர் இதுவரையிலும் எதையும் செய்யவே இல்லை.
கேட்டால் அவரின் சமூக கோட்பாடு கொள்கை வேறுவிதமாக இருக்கும்.
இருந்து விட்டு போகட்டும்.
அவர் உழைப்பு. அவர் பணம். அவர் விருப்பம்.
ஆனால் நேர்மை குறித்துப் பேசுவது தான் பிரச்சனை.
51. அழிவை நோக்கி திமுக | 2024 மீண்டும் மோடி இலக்கை நோக்கி அண்ணாமலை | #annamalai | #aoh | #jothiG
கடந்த ஆறு மாதங்களாக உதயநிதி வாங்கும் அனைத்து படங்களும் எத்தனை ஷோ வேண்டுமானாலும் முன் அனுமதி இல்லாமல் தமிழக திரையரங்கில் தொடர்ந்து ஓடிக் கொண்டு இருக்கின்றது.
என்ன கணக்கு? எப்படி கணக்கு? யாருக்கும் தெரியாது. கேட்க முடியுமா?
மற்றொரு விசயம்
அனைவரும் இன்று விக்ரம் வசூல் குறித்துச் சிலாகித்துப் பேசிக் கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் ரூபாய் 110 மதிப்புள்ள டிக்கெட் என்பது அதிகாரப்பூர்வமாக 180 ரூபாய்க்குத் தான் விற்பனை செய்கின்றார்கள்.
அதாவது இப்போதைய சூழலில் திரையரங்கத்தில் டிக்கெட் விலை என்ன என்பதனை நாம் போய்க் கேட்கும் போது தான் தெரியும்?
எப்போதும் விற்பனை செய்து கொண்டிருக்கும் டிக்கெட் விலை உதயநிதி வாங்கும் படத்திற்கு எத்தனை ரூபாயாக மாறும் என்பது யாருக்கும் தெரியாது. நான் இதனைப் பார்த்து திரையரங்கத்தில் உள்ளவரிடம் பொறுமையாகப் பேச்சுக் கொடுத்த போது எங்களால் அடுத்த நான்கு வருடங்கள் சம்பாதிக்கவே முடியாது என்று இந்த குடும்பத்தின் சமூக சேவையைப் பற்றி கண்ணீர் விடாத குறையாகச் சொன்னார்.
இந்த கொள்ளைக்கூட்டக் கும்பலைத்தான் கமல் லாபம் நேர்மை என்ற வார்த்தைகளால் பாராட்டுகின்றார்.
இந்த இடத்தில் முறைப்படி கெட்ட வார்த்தை தான் எழுத வேண்டும். நாகரிகம் தடுக்கின்றது.
தமிழகத்தில் எட்டு கோடி மக்கள் தொகையில் தற்போது ஒரு கோடி பேர்கள் தினமும் மது அருந்துபவர்களாக இருக்கின்றார்கள். மேலும் மேலும் பல இடங்களில் கடைகள் திறக்க ஏற்பாடு செய்கின்றார்கள். மக்கள் தள்ளுமுள்ளு சண்டை சச்சரவுகள் நடந்து கொண்டே இருக்கின்றது.
சாராயக்கடை திறக்கும் நேரமும் மூடும் நேரத்தையும் அதிகப்படுத்தி உள்ளனர். இது தவிர அனுமதி இல்லாத பார் என்பது அறுபது சதவிகிதம் தமிழகம் எங்கும் உள்ளது. அந்த பணம் எங்கே செல்கின்றது என்பதற்கு கார்ப்பரேட் மாடல் சிஸ்டம் ஒன்றை அமைச்சர் உருவாக்கி கோபாலபுரம் குட் புக் ல் இடம் பெற்று உள்ளார்.
தமிழகத்தில் பார் என்பது 24 மணி நேரமும் இயங்குகின்றது. எப்போது போய் வாங்கினாலும் எந்த சரக்கு வேண்டுமானாலும் கிடைக்கும். பாதிக்குப் பாதி டூப்ளிகேட் என்பது தனிக் கதை. அதன் மூலம் கிடைக்கும் அபரிமிதமான வருமானம் என்பது உங்களால் கற்பனை செய்து பார்க்கவே முடியாது.
போதை பாக்கு முதல் அனைத்து விதமான போதை வஸ்துகளும் கடந்த பத்து மாதங்களாக இங்கே இயல்பாகக் கிடைக்கின்றது. அதுவும் பத்து ரூபாய் சமாச்சாரம் என்பது 80 ரூபாய்க்கு விற்கின்றார்கள். என் கணக்குப்படி கடந்த 12 மாதத்திற்குள் குறைந்தபட்சம் 4000 கோடியைச் சுருட்டி உள்ளனர்.
திருப்பூரில் ஒரு நிறுவனம் கடந்த பத்து மாதங்களில் பாய்ந்தோடி வந்த பணத்தை வைத்துக் கட்டியுள்ள கடைகள் என்பது கதைகளில் மட்டும் பார்க்கும் சமாச்சாரம் ஆகும். அவர்கள் அடுத்தடுத்து முன்னேறிக் கொண்டேயிருக்கின்றார்கள். ஒரு பக்கம் பம்ப ஆகின்றது. மற்றொரு பக்கம் வழிந்தோடுகின்றது. கண் இமைக்கும் நேரத்தில் மாட மாளிகைகள் கட்டி முடிக்கப்பட்டு வணிக வளாகமாகச் செயல்படத் துவங்கியும் விடுகின்றது.
இப்போது ஜாஸ் சினிமா வை கையில் வைத்திருக்கும் சசிகலா அண்ணி இளவரசி மகன் விவேக் (24 வயதில் ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபதியான ஒரே அதிர்ஷ்ட இளைஞர்ர்ர்) கவனிக்க முடியாமல் உதயநிதி (விவேக் தகுதி அப்படியே இந்த இளைஞர்ர்க்கும் பொருந்தும்.
சொல்லப்போனால் இன்னும் கூடுதல்) அன் கோ விடம் பேச்சு வார்த்தையைத் தொடங்கியுள்ளார் என்ற செய்து வந்து கொண்டு இருக்கின்றது.
சசிகலா ஆடாத ஆட்டமல்ல.
காத்திருப்போம்.
மச்சானா? மாப்பிள்ளையா?
அவரை அழுது ஆர்ப்பாட்டம் செய்து கெஞ்சிக் கூத்தாடி புதைத்தார்கள்.
இவருக்கு என்ன ஆகும்?
காலம் காட்டும்.
No comments:
Post a Comment