Sunday, January 02, 2022

2022 முக்கிய கடமை

சமூக வலை தளங்கள் என்பது பொழுது போக்கிகள் அல்ல. அதுவொரு கனா காலம். மாறி விட்டது. பலரும் முயன்று படிப்படியாக மாற்றி விட்டார்கள். இப்போது அரசியல் ஆயுதம் என்பதனை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.
இந்த வருடத்தில் காங்கிரஸ் உருவாக்கி இருந்த டூல் கிட் உங்கள் நினைவில் உள்ளதா? ட்விட்டரில் நாறிய சண்டைகள் சச்சரவுகள் உங்களுக்குத் தெரியுமா? பாஜக என்ற கட்சியை மோடி என்ற மனிதரை அசிங்கப்படுத்த எத்தனை வழிகள் உள்ளதோ அத்தனை வழிகளைக் கண்டடைவது தான் அந்த டூல்கிட் டின் நோக்கம்.

காங்கிரஸ் வெளியானது கண்டு வெட்கப்படவில்லை. இன்று உபி வரைக்கும் நிறைவேறாத வாய்ப்பில்லாத அனைத்தையும் தங்கள் கொள்கைகளாக மேடையில், பொதுத் தளத்தில் இன்று வரையிலும் முழங்கிக் கொண்டு இருக்கின்றார்களே?

ஈவெ ராமசாமி என்ற மனிதர் நம்பாத இருவர் சிஎன் அண்ணாதுரை மற்றும் மு. கருணாநிதி. ஆனால் நம்பாத மனிதரைப் பெரியார் என்று மாற்றி அவர் எங்கங்கோ எதையெதையோ பேசியதைக் கொள்கையாக திரித்து இன்று பேரனுக்குப் பேரன் வரைக்கும் சம்பாதிக்க மட்டுமே கட்சி என்பதாக எப்படி அவர்களால் மாற்ற முடிந்தது?

கடந்த பத்து வருடங்களில் திமுக மற்றும் திக அதனைச் சார்ந்த ஒட்டுண்ணிகள் இணைய தளத்தை ஆக்கிரமித்தது எப்படி என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர்களின் கருத்தியலைப் பரப்பியதற்கும், நிலையான வாசகப் பரப்பினை உருவாக்கியதற்குக்  காரணம் புத்திசாலிகள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களின் அமைதி அல்லது விலகல்.

ஒரு தவறான செய்தியை அந்தக் கூட்டம் சலிக்காமல் தொடர்ந்து பகிர்ந்து கொண்டே இருப்பதும் நாம் அதனைச் செய்ய மறுப்பதற்கும் பின்னால் உள்ள உளவியல் என்பது அவரவர் சுயநலம் மட்டுமே.

கொள்கை என்பது தவறாக இருந்தாலும், மொத்தச் சமூகத்தைக் கீழ் இறக்கும் என்று தெரிந்த போதிலும் தனக்கும் அதில் ஆதாயம் உண்டு என்பதனை கருத்தில் கொண்டு படிப்படியாக ஒன்று சேர்ந்தவர்களும் சேர்க்கப்பட்டவர்களும் இன்று மிகப் பெரிய ஆலமரத்தை உருவாக்கி உள்ளனர். அதன் கிளைகள் தான் நம்மைப் பயமுறுத்திக் கொண்டு இருக்கின்றது.  காரணம் அவர்கள் அல்ல. நாம். நம்முடைய பொறுப்பற்ற தனம்.

அரசு பள்ளிக்கூட மாணவர்களின் கனவு 7.5 சதவிகிதம் - திமுக ஏன் அழிக்க விரும்புகின்றது

அப்படிச் செயல்பட்டவர்களின் சிலருக்கு இன்று பாராளுமன்றத்திற்குள் உள்ளே நுழைய வாய்ப்பு கொடுத்துள்ளனர். மற்றவர்களுக்கு பணம் பண்ணும் வாய்ப்பு அமைத்துக் கொடுத்து உள்ளனர். 

முதல்தலை முறை இன்ஸ்டாகிராம். ரீல்ஸ், ஸ்டோரிஸ், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ். இரண்டாம் தலைமுறை ட்விட்டர், இரண்டு நிமிட துண்டுக் காட்சிகள் மூன்றாம் தலைமுறை ஃபேஸ்புக் மற்றும் ஐந்து நிமிட யூ டியுப் காட்சி வடிவம் நான்காம் தலை வலைபதிவு மற்றும் அரைமணி நேர யூ டியூப் காட்சிகள்.  இது தான் இன்றைய நம் சமூகம். 

எழுத்து வடிவம், ஒலி வடிவம், காட்சி வடிவம், ரீமிக்ஸ் வடிவம், பட வடிவம், பாடல் வடிவம் என்று ஒவ்வொருவரும் வெவ்வேறு ரசனையில் இருப்பதை அவர்கள் உணர்ந்து உள்ளனர். அதன் வழியே எவரவர் எங்கங்கு இருக்கின்றார்களா அங்கேயே அவர்கள் விரும்புகின்ற வழியில் செல்கின்றார்கள். அவர்கள் விரும்புவதைக் கொடுத்து தாங்கள் விரும்பிய வண்ணம் தங்கள் பக்கம் கொண்டு வந்து சேர்த்து பெரியார் மட்டும் இல்லை என்றால் கோஷ்டி கானத்திற்குள் ஓர் அங்கத்தினராக மாற்றிக் கொண்டு இருப்பது உங்களுக்குத் தெரியுமா?  

காலம் மாறும்.

இந்த வருடத்தில் நாம் என்ன செய்யப் போகின்றோம்? இது ஆட்சியைப் பிடிக்கும் சமாச்சாரம் அல்ல. அதற்குண்டான முஸ்தீபுகளும் அல்ல.  இது சமூகத்திற்கான மொத்த மாற்றத்தை அவர்கள் விரும்பிய வண்ணம் மாற்றிக் கொண்டு வருகின்றார்கள் என்பதனை எத்தனை பேர்கள் உணர்ந்து உள்ளனர்?

சொந்தப் பெயர், புனைப் பெயர், வேறு பெயர் என்று வெவ்வேறு வடிவங்களில் விதவிதமான முறைகளில் கூட்டணி அமைத்து பரஸ்பரம் கூச்சப்படாமல் சொன்ன பொய்யை மெய் என்பதாக சொல்லும்  அவர்களை நாம் கோமாளிகள் என்பதா?  இல்லை நாம் கிறுக்குத் தானமாக வாழ்கின்றோம் என்பதா?

5 மணி நேரம் (2021 கற்றதும் பெற்றதும்)

நான் மாட்டிக் கொள்ள மாட்டேன். விரும்பவில்லை. வயதாகி விட்டது. உறவினர்கள் பிரச்சனை. மனைவி வருத்தப்படுவார். மகன் மகள் பாதுகாப்பில் பிரச்சனை வரலாம். இறைவன் பார்த்துக் கொள்வான். நாம் ஏன் முன்னிலைப் படுத்த வேண்டும்? அவரின் புகழ் பரப்ப நாம் ஏன் காரணமாக இருக்க வேண்டும்?  ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அனைத்துக்குள் உங்கள் மகன் மகள் பேரன் பேத்திகள் இங்கு வாழும் போது கண் எதிரே அனுபவிக்கப் போகும் துயரங்களுக்கு உங்களை நீங்கள் இப்பொழுதே தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

அவர்கள்  அண்ணாமலை அவர்களை விஜயகாந்த போல மாற்றி விட முடியும் என்று நம்புகின்றார்கள்.  ஆனால் வரக்கூடிய அம்புகள் அனைத்தையும் அம்புலிமாமா கதை படித்த சிறுவர்களாக மாற்றி அண்ணாமலை அதகளம் செய்து கொண்டு இருப்பதைப் பார்த்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தடுமாறி நிற்கின்றார்கள்?

2021 கற்றுத் தந்த பாடங்கள்

அண்ணாமலை போன்றோரை நீங்கள் தவற விட்டால் அடுத்த தலைமுறை வரைக்கும் அந்த பாவம் உங்களை துரத்தும் என்பதனை நினைவில் வைத்திருங்கள்.  அவரை ஆதரிப்பது அவர் காட்டும் பாதையில் நடக்க கூடியவர்களை நாம் அங்கீகரிப்பதும் தான் நம் 2022 முக்கிய கடமையாக இருக்க வேண்டும்.

ஆயுதங்களை நீங்களும் கூர்மைப்படுத்துங்கள்.

இனியாவது இன்று முதல் தொடங்குங்கள்.