Thursday, December 30, 2021

காலம் மாறும்.

நீங்கள் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அல்லது சந்தேகத்தின் அடிப்படையில் உள்ள குற்றவாளிகள் என்று யாராக இருந்தாலும் நீதிமன்றம் 15 நாட்கள் காவல்துறை கண்காணிப்பில் வைத்து விசாரித்து விட்டு மீண்டும்  கூட்டி வாருங்கள் என்றே அறிவுறுத்தும்.  
அவர்களை அந்த நகரில் உள்ள பெரிய சிறிய சிறைச்சாலைகளில் கொண்டு போய் அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் வைத்திருப்பார்கள்.  தண்டனை  உறுதி செய்யப்பட்டு வழங்கப்பட்டதன் மூலம் சிறையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் மற்றவர்களுடன் சிறைக் காவலர்கள் கொண்டு போய் சேர்க்க மாட்டார்கள். பல சிக்கல்கள் உருவாகும் என்பது அவர்களுக்குத் தெரியும்.  

ஆனால் இதில் ஓர் ஆச்சரியம் என்னவெனில் கற்பழிப்பு குற்றம் செய்தவன், அதில் ஆர்வம் உள்ளவன் மிகச் சரியாக உள்ளே அதே போல குற்றம் செய்தவனுடன் தான் சென்று சேர்வான்.  உள்ளே இருக்கும் ஜெயில் வார்டர் கையில் கொஞ்சம் திணித்தால் போதும்.  இதே போல பிச்சுவா பக்கிரி முதல் பீரோ உடைத்துத் திருடியவன் வரைக்கும் ஒவ்வொருவருக்கும் தத்தமது ஜோடியை எளிதாக கண்டு கொள்வார்கள். அரைகுறை அறிவுடன் பயத்துடன் தடுமாற்றத்துடன் ஒரு முறை உள்ளே சிறை சென்றவர்கள் வெளியே வந்த பின்பு 95 சதவிகிதம் திருந்தி வாழ வாய்ப்பே இல்லாத அளவுக்கு நம் சிறைத்துறை இன்று வரை சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றது. நான் இருக்கும் ஊரில் அப்படிப்பட்ட பலரின் கதையை கேட்டுள்ளேன்.

ஏன் இந்தக் கதை?

தமிழக ஊடகங்களில் எத்தனை பிரிவுகள் உள்ளதோ அத்தனை பிரிவுகளின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் அத்தனை பேர்களுக்கும் ஒரே ஒற்றுமையைச் சமீப காலமாக பார்த்து வருகிறேன். சிறையில் உள்ள கூட்டணி போலவே செயல்படுகின்றார்கள் என்றே சந்தேகம் கொள்கிறேன்.

எக்காரணம் கொண்டு அண்ணாமலை அவர்களுக்குச் சாதாரண அங்கீகாரம் கூட கொடுத்து விடக்கூடாது என்பதில் கங்கணம் கட்டி ஒரே அலைவரிசையில் செயல்பட்டு வருகின்றனர்.  பேசிக் கொள்வார்களா? உத்தரவு வருமா? வாங்கிய கூலிக்குப் பணியாற்றக்கூடியவர்களா? நமக்கு ஏன் வம்பு? என்கிற ரீதியில் செயல்படுகின்றார்களா? என்பதெல்லாம் இன்னும்  சிறிது காலத்தில் படிப்படியாகத் தெரியும். 

அதாவது பாஜக என்ற கட்சி தமிழ்நாட்டில் இருப்பதாகவே காட்டிக் கொள்ளக்கூடாது. அவர் திறமை, பேச்சு, ஆர்வம் எதையும் பொருட்படுத்தவே தேவையில்லை.

ஒருவன் கருத்துக்கணிப்பு எழுதுகிறேன் என்று பாஜக கட்சி என்பதனைத் தவிர்த்து நண்டு சிண்டு அத்தனை பேர்களையும் எழுதுகிறான்.  அது மோகன் சி லாரன்ஸ் க்கு சொந்தமானது.  அது தவறில்லை.

ஆனால் விகடன் குழுமம் டாப் 10 மனிதர்கள், பரபர சம்பவங்கள் என்று 2021 ஆம் ஆண்டுக்கு விதம் விதமாக எப்போதும் போல எழுதியுள்ளனர். அதில் பரபர பகுதியில் அண்ணாமலை குறித்து எழுதியவன் நிச்சயம் அவன் பிறப்பு சந்தேகத்துக்குரியதாகவே இருக்கும் என்றே நம்புகிறேன்.  அல்லது அவன் தொடக்கம் முதல் தாழ்வு மனப்பான்மையின் ஊறித் திளைத்து வாழ்ந்து இருப்பான் என்றே நினைக்கின்றேன்.  குறைந்தபட்சம் தன் மனைவியையும் தன் அம்மாவையும் ஒரே பார்வையில் பார்க்கக்கூடியவனாக இருக்கக்கூடும்.  காரணம் தனி மனித விமர்சனம் என்பது வன்மத்துடன் வெளிப்படும் பட்சத்தில் அவன் மனநலக் கோளாறு என்பதாகத் தான் கருதுகிறேன்.  

நேற்று நான் எழுதிய பதிவுக்கு மோடி குறித்து  அந்த பெண்மணி எழுதியதற்காக இப்படி நீங்கள் இப்படித் தரம் தாழ்ந்து எழுதுவது சரியாகாது என்று என் நண்பர் எனக்கு அறிவுரை கூற வந்தார்.  ஆனால் அதில் என் கோபம் நக்கல் இருந்தது.  அவர்கள் போட்ட படத்தை எடுத்து நான் பயன்படுத்தினேன். தவறான வாசகங்கள் தரம் கெட்ட வார்த்தைகள் எழுதவில்லை.  

ஆனால் விகடன் குழுமத்தில் பணியாற்றும் கழிசடைகள் பலரையும் நான் அறிவேன்.  நாளுக்கு நாள் எல்லை மீறிக் கொண்டே இருக்கின்றார்கள். 

சினிமா என்ற துறைக்குள் நுழைய இப்போது விகடன் என்ற மாமா தளம் உதவக்கூடியதாக இருப்பதால் அத்தனை பேர்களும் இந்த விபச்சார விடுதிக்குள் சென்று சில காலம் தொழிலை கற்றுக் கொள்கின்றனர்.  நுழைவதற்கு முன்பே இங்கே பணியாற்றிக் கொண்டே சதை வியாபாரத்தில் இறங்கத் தொடங்கி விடுகின்றனர்.

அப்படித்தான் மு. கருணாநிதி அவர்களின் ஆட்சியை ஊமைக்குத்து போல குத்து குத்தென்று குத்தி தங்கள் ஆதங்கத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்.

அவர் சாகும் முன்னாள் முதல்வர் என்ற பெயரில் சென்று சேர்ந்ததும், அவரை உடலைப் புதைக்க குடும்பமே எடப்பாடியிடம் கெஞ்ச வேண்டிய சூழலை உருவாக்கினர்.   

முக மகன் இன்றைய சூழலில் மக்களைக் கவனிப்பதை விட இவர்களைக் கவனித்தால் நம் கோமாளி வேடத்தை இவர்கள் மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விட மாட்டார்கள் என்று கர்ண பரம்பரை போல மக்கள் பணத்தை வாரி வாரி வழங்கிக் கொண்டு இருக்கின்றார்.

இதுவரை தமிழக அரசியல் சந்திக்காத ஒரு ஆபூர்வ ஆளுமை அண்ணாமலை என்று இவர்கள் உணரும் காலம் வரும்.  அண்ணாமலை அவர்கள் அப்போதும் "அண்ணா அதையெல்லாம் நான் மறந்து விட்டேன்" என்றே கடந்து செல்வார்.

என்னைப் போன்றவர்கள் மறக்க விரும்பாத அனைத்தையும் இப்போது இவர்கள் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

காலம் மாறும். 

காத்துக் கொண்டிருக்கின்றேன்


https://youtu.be/UwE7ZG2yO5w

6 comments:

Manivannan Kamaraj said...

ஐயா உங்களுக்கு விருப்பம் இருந்தால் கீழே உள்ளவற்றை பதிவேற்றம் செய்யவும் மற்றும் உங்களால் முடிந்தால் பதில் கூறவும் அந்த வாசகர்களும் முடிந்தால் அவர்களுடைய கருத்துக்களையும் தெரிவிக்கட்டும்
இதனால் உங்கள் மற்றும் உங்கள் வாசகர்களின் மனம் மற்றும் ஈகோவை நான் காயப்படுத்தினால் அதற்காக நிபந்தனையற்ற முறையில் மன்னிப்பு இப்பொழுதே கேட்டுக்கொள்கிறேன்.
இதோ பதிவு.
256 கோடி – கருப்பு – அது பியூஷ் ஆக இருந்தாலென்ன … புஷ்பாவாக இருந்தாலென்ன ….?
Posted by vimarisanam - kavirimainthanThe Director General of GST Intelligence,
Ahmedabad, has unearthed a major tax evasion
racket involving Uttar Pradesh-based
businessman Piyush Jain, at whose business
and residential premises taxmen have found
₹194.45 crore cash, 23 kg of gold and
unaccounted raw materials worth ₹6 crore.

( https://www.thehindu.com/news/national/other-states/perfume-industrialist-piyush-jain-arrested-over-tax-evasion-charges/article38046498.ece )

இதை பாஜக – பியூஷ் ஜெயின், அகிலேஷ் யாதவின்
சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர் என்று கூறி,
அகிலேஷின் ஊழல் வாசனை வெளிப்பட்டு விட்டது
என்று கூறுகிறது….
ஆனால், அகிலேஷ் யாதவோ, அவர்கள் குறி வைத்தது
சமாஜ்வாதி கட்சியின் புஷ்பராஜ் ஜெயினை தான்… ஆனால்,
தவறுதலாக, பாஜகவின் பியூஷ் ஜெயின் மீது ரெய்டு
நடத்திவிட்டு, இப்போது பரிதாபமாக விழிக்கிறார்கள்
என்று கிண்டல் செய்கிறார்….
மாட்டியது பியூஷோ அல்லது புஷ்பராஜோ,

ஊழலில் ஊறியது சமாஜ்வாதியோ, பாஜகவோ –
எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்….


மீடியாக்கள் இதை “காமெடி” என்று சொல்லி தீவிரத்தை
குறைத்து, மக்களை சிரித்து விட்டு மறந்து விடச்செய்யும்
தங்கள் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடட்டும்.

நாம் கவலைப்படுவது வேறு விஷயத்தைப்பற்றித்தான்….

ஒருவர், 256 கோடி ரூபாய் பணத்தை சட்டவிரோதமாக
சம்பாதித்து, அதை புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக
மாற்றி, வருமான வரி அதிகாரிகள், அமலாக்கப்பிரிவு
அதிகாரிகள், ஜிஎஸ்டி அதிகாரிகள் ஆகிய அத்தனை
பேர்களையும் மீறி பதுக்கி வைத்திருக்கிறார் என்றால் –
நமது சிஸ்டம் அவ்வளவு பலவீனமாகவா இருக்கிறது….?

அஹமதாபாத் கம்பெனிக்கும், கான்பூர் கம்பெனிக்கும் raw material supply-யில் நடந்த ரொக்கப்பரிமாற்றம் ஜிஎஸ்டி மோசடியில் முடிந்திருக்கிறது என்கிறார்கள். ஜிஎஸ்டி- யில் ரொக்கப் பரிவர்த்தனைக்கு இடம் ஏது…? ஜி.எஸ்.டி.யில் இவ்வளவு பெரிய ஓட்டையா….? இதை இவ்வளவு நாட்களாக எப்படி அனுமதித்தார்கள்….?

பண மதிப்பிழப்பீட்டிற்குப் பிறகு, நாட்டில் கருப்புப்பணமே
இருக்காது என்று சொன்னார்களே…. பின் இது எப்படி….?
இவருக்கு இத்தனை கோடிக்கு 2000 ரூபாய் நோட்டுகள்
கிடைத்தது எப்படி….?

மூத்த அதிகாரிகளின் துணையின்றி, அரசியல்வாதிகளின் ஆதரவு இன்றி,
தனி ஒருவர் இதனை சாதித்திருக்க முடியுமா….?

இதன் பிறகும், அரசு – இலாகாக்கள் இந்த ஆட்சியில்
மிகத்திறமையாக செயல்படுகின்றன என்று யாருக்காவது
நம்பத் தோன்றுமா?


Manivannan K: இவை எல்லாவற்றுக்கும் காரணம் நேரு லால் பகதூர் இந்திரா காந்தி மொரார்ஜி தேசாய் ராஜீவ்காந்தி நரசிம்மராவ் என்று மட்டும் காரணம் என்று சொல்லிவிடாதீர்கள்.
ஏழு ஆண்டுகளில் திரு மோடி அவர்களால் இதனை எவ்வாறு சரி செய்ய முடியும் என்று மட்டும் பதில் சொல்லி விடாதீர்கள்.

Manivannan Kamaraj said...

Manivannan K: கீழே உள்ள வற்றுக்கு திருஅண்ணாமலை அவர்களிடம் இருந்தும் அல்லது உங்களிடம் இருந்தும் பதில் கிடைக்கும் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Manivannan K: மாறும் என்ற நம்பிக்கையில் தான் நானும் எனது வாக்கினை திரு மோடி அவர்களுக்கு செலுத்தினேன்

வேலிக்கு ஓணான் சாட்சியா ….!!! ஈஷா விவகாரத்தில் முரணான பதில்கள் ஏன்….?
படத்தொகுப்பு

ஈஷா யோகா குறித்து தமிழ்நாடு அரசின் ஆர்.டி.ஐ விளக்கம்
முரணாக இருப்பது ஏன்…? வனத்துறை மாறுபட்ட தகவலை
கொடுத்ததன் பின்னணி என்ன….?

“யானைகளின் வழித்தடங்களை ஈஷா யோகா மையம்
ஆக்கிரமிக்கவில்லை” என தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ்
கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, தமிழ்நாடு வனத்துறை பதில்
அளித்துள்ளது. `

ஆனால், அப்பகுதி யானைகளின் வாழ்விடங்கள்தான் என
மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. அது யானைகளின்
பாதை அல்ல என்ற முடிவுக்கு வருவது தவறானது’ என்கின்றனர்
சூழல் ஆர்வலர்கள்….

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில்
ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையம் அமைந்திருக்கிறது.

போலுவாம்பட்டி வனச்சரகத்துக்குட்பட்ட
இந்தப் பகுதியில் அனுமதியின்றி ஈஷா யோக மையம்
கட்டடங்களை எழுப்பியுள்ளதாக சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து
குற்றம் சுமத்தி வந்தனர்.

இதுதொடர்பாக, உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும்
வழக்குகள் தொடரப்பட்டன.

வனநிலத்தை ஈஷா ஆக்ரமித்ததா…? இல்லையா….?

ஒவ்வோர் ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா
மையத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். .
இந்த நிகழ்ச்சிக்காக வரும் பொதுமக்களால் வனவிலங்குகளுக்கு
பாதிப்பு ஏற்படுகிறது எனவும் சூழல் ஆர்வலர்கள் பேசி வந்தனர்.
வனப் பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக உணவு மற்றும்
தண்ணீர் தேடி வனவிலங்குகள் வெளியில் வருவதால் இந்த மோதல்நடைபெறுவதாகவும் கூறப்பட்டது.

வனத்துறையின் நிலங்களுக்கு அருகிலேயே ஈஷாவின் கட்டடங்கள்
இருப்பதால், மனித – விலங்கு மோதல்கள் நடப்பதாகவும் தகவல்
வெளியானது. இதற்காக மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம்
ஈஷா நிர்வாகம் உரிய அனுமதியைப் பெறவில்லை எனவும்
சூழல் ஆர்வலர்கள் குற்றம் சுமத்தினர்.

இந்நிலையில்,

லேட்டஸ்டாக – `ஈஷா யோகா மையத்தால்
வனப்பகுதியில் எந்தவித ஆக்ரமிப்பும் செய்யப்படவில்லை’ என
ஆர்.டி.ஐ கேள்வி ஒன்றுக்கு, தமிழக அரசின் –
கோவை மாவட்ட வனத்துறை எழுத்து வடிவில் பதில் அளித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த தினேஷ்ராஜா
என்பவர், கோவை வனக்கோட்ட பொது தகவல் அலுவலருக்கு சிலகேள்விகளை அனுப்பியிருந்தார். இதற்கு அளிக்கப்பட்ட பதிலில்,


`ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையத்தால்
வனப்பகுதியில் எந்தவித ஆக்ரமிப்பும் செய்யப்படவில்லை. மேலும்,
ஈஷா யோகா மையத்தின் கட்டுமானங்கள் எதுவும் வனப்பகுதியில்
இல்லை’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஷா யோகா மையம் அருகே யானைகளின் வழித்தடம் உள்ளதா?' என்ற கேள்விக்குப் பதில் அளித்துள்ள வனத்துறை,வரையறுக்கப்பட்ட யானைகள் வழித்தடம் என எதுவும் இல்லை’ எனவும் பதில் அளித்துள்ளது.

ஈஷா யோகா மையத்திற்கு மிகவும் ஆதரவான,
இந்த விளக்கம், ஈஷா யோகா மையம் நிர்வாகிகளுக்கு பெருத்த
உற்சாகத்தையும் – குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தவர்க்கு
பெருத்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி
உள்ளது.

“கோவை மண்டலத்தில் யானைகளின் வழித்தடங்கள்

Manivannan Kamaraj said...

எவை
என்பது இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதை வைத்து ஈஷாவுக்கு ஆதரவாக – ஆர்.டி.ஐ கேள்விக்குப் பதில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அது யானைகளின் வாழ்விடங்கள் – என்று மத்திய அரசும், மாநில அரசும் – ஏற்கெனவே, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முன்பாக தாக்கல்
செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளன.

அந்தப் பகுதியானது, அதிகாரபூர்வமாக யானைகளின் வழித்தடமாக
அறிவிக்கப்படவில்லை என்பதால், அது யானைகளின் பாதை அல்ல
என்ற முடிவுக்கு வருவது தவறானது …

வனத்துறையின் புகாருக்கு எதிராக, வனத்துறையே
மாறுபட்ட பதிலை இப்போது தந்திருப்பது எந்த அழுத்தம்
காரணமாக….?

“ ஈஷா நிர்வாகத்துக்கு எதிராக முதலில் வனத்துறை தான்
2012-ஆம் ஆண்டில் புகார் எழுப்பியது. அப்போது கோவை மாவட்ட
வன அலுவலராக திருநாவுக்கரசர் இருந்தார். அவர் 17.8.2012 அன்று
அரசின் முதன்மை வனப்பாதுகாவலருக்குக் கடிதம் ஒன்றை
எழுதினார். அதில் –

” இது யானைகளின் வழித்தடம், இங்கு ஈஷா யோகா மையம்
கட்டடங்களை எழுப்பி வருகிறது. இதனால் யானை-மனித
மோதல்கள் நடக்கின்றன’ எனக் குறிப்பிட்டு எந்தெந்த சர்வே எண்கள்
எல்லாம் வனத்துறையின் நிலத்துக்கு அருகில் உள்ளன,
எவையெல்லாம் யானைகளின் வழித்தடம் – எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், `அப்பகுதியில் எந்தக் கட்டடம் எழுப்புவதாக இருந்தாலும்
மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையமான
(Hill Area Conservation Authority) (HACA)
ஹாகாவிடம் அனுமதி பெற வேண்டும்’ … ஆனால்,
ஈஷா இந்த அனுமதியைப் பெறவே இல்லை என்றும்
சுட்டிக்காட்டி இருக்கிறார்.

முதன்மை வனப்பாதுகாவலர் இந்தக் கடிதத்தை உள்ளூர் திட்டக்
குழுமத்துக்கு அனுப்பி வைத்தார். உள்ளூர் திட்டக் குழுமமும்,
இதுதொடர்பாக விளக்கம் கேட்டு ஈஷாவுக்கு கடிதம் அனுப்பியது.
அதற்கு ஈஷா தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை”

( பதில் வரவில்லையென்றால். அதன் மீது தொடர் நடவடிக்கைகள்
ஏன் எடுக்கப்படவில்லை; அதற்கு யார் பொறுப்பு ….? தமிழக அரசு விசாரணை நடத்துமா….? )

ஈஷா மையத்தால் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடித்து
அதனைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்காகவே உள்ளூர்
திட்டக் குழுமம் நோட்டீஸ் அனுப்பியதாகக் குறிப்பிடப்படுகிறது.

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 1,44,000 சதுர மீட்டர்
பரப்பளவில் ஈஷா அறக்கட்டளை அமைந்துள்ளது. இங்குள்ள
60 கட்டடங்களை இடிப்பதற்காக கடந்த 2013 டிசம்பரில் நோட்டீஸ்கொடுக்கப்பட்டது. ஆனால், அதன்பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

(ஏன்….. ஏன்…. ஏனோ…??? )

அரசு நீதிமன்றத்தில் கொடுத்த உறுதிமொழி –

சுற்றுப்புர ஆர்வலர்கள் சொல்வது – இதையடுத்து, அரசின் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என 2014- ஆம் ஆண்டு

நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
தொடர்ந்தோம். அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது.

இந்த வழக்கில், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில்,
`அனைத்துமே அனுமதி பெறப்படாத கட்டடங்கள். இதன்பேரில்
நடவடிக்கை எடுப்போம்’ எனத் தெரிவித்துள்ளது” என்கிறது
இது குறித்த செய்தி….

தற்போது வரையில் ஈஷாவின் கட்டடங்கள் என்பது அதிகார
பூர்வமற்றவைதான். அதை உறுதி செய்யும் ஆதாரமாக
அரசின் ஆணைகள் உள்ளன.

வன எல்லையில் இருந்து 100 மீட்டர் இடைவெளிவிட்டுத்தான்
கட்டடம் கட்ட வேண்டும். இவர்கள் மிக நெருக்கமாக
கட்டியுள்ளனர்.

முன்னதாக, தங்களால் எழுத்து பூர்வமாக எடுக்கப்பட்ட
நடவடிக்கைகளுக்கும், நீதிமன்றத்தில் சொன்னவற்றிற்கும்
மாறாக – முரணாக – தற்போது வனத்துறை ஆர்.டி.ஐ. -க்கு
பதில் சொல்லி இருப்பது எந்த அழுத்தம் காரணமாக….?

இப்போது இன்னொரு ஆர்.டி.ஆர். மூலமாக –

Manivannan Kamaraj said...

1) ஈஷாவின் சர்ச்சைக்குரிய கட்டிடங்கள் கட்டப்பட்டது
எப்போது……..?( அதாவது தேதி குறிப்பிட்டு…)

2) ஈஷா – (Hill Area Conservation Authority)
(HACA) ஹாகாவிடம் கட்டிடத்திற்கு அனுமதி கோரி
எப்போதாவது விண்ணப்பம் கொடுத்ததா…?

3) ஆம் – என்றால் எப்போது….?

4) ஹாகா, அனுமதி கொடுத்ததா…?
ஆம் – என்றால் எப்போது….?

5) 60 கட்டடங்களை இடிப்பதற்காக – 2013 டிசம்பரில்
தமிழக அரசு/வனத்துறை சார்பாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டதா…?

6) ஆம் – என்றால், அதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
என்னென்ன….? எடுக்கப்படவில்லை என்றால் – ஏன்…?

-என்று கேட்டு விளக்கம் கோரினால், தமிழக அரசின் நிலை
என்னவாக இருக்கும்…? பதில் என்னவாக இருக்கும்….?

பகுத்தறிவுவாத அரசு என்று சொல்லிக்கொள்ளும் தமிழக அரசும்,
ஈஷாவின் மாயையில் சிக்கிக் கொண்டதா….?

அல்லது ஈஷா, தமிழக அரசையும் வளைத்துப் போட்டு விட்டதா…?

பந்தப்படுத்தியது பணமா அல்லது செல்வாக்கா…..?

.
………………………………………………………………………………………

Manivannan Kamaraj said...

உங்களையும் உங்களின் வாசகர்களின் மனதினையும் ஈகோவை காயப்படுத்தி இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்

Manivannan Kamaraj said...

Manivannan Kamaraj: இதைப்போலவே காருண்யா காடுகளையும் யானைகளின் வழித்தடங்களையும் அறிவித்து ஆக்கிரமித்து உருவாக்கினார்கள் என்று சொல்கிறார்கள் இது உண்மையாகவே இருக்கும் ஏனெனில் அவர்களும் திருடர்களின் ஒரு பகுதியை கூட்டத்தின் ஒரு பகுதி
Manivannan Kamaraj: முந்தைய அரசாங்கம் கொண்டுவந்த ஆர் டி என்ற சட்டத்தின் வழியாக திரு அண்ணாமலை அவர்கள் பாரு மியாவின் பித்தலாட்டங்களை ஆட்சியை மூலமாக எடுத்து மக்களுக்கு தெரிவித்து அவர்களின் பித்தலாட்டத்தை உடைக்கவேண்டும் இதை நீங்கள் திருஅண்ணாமலை அவர்களிடம் சொல்லி செய்ய முடியுமா செய்தால் நானும் உங்களையும் பின் தொடர்வேன் போனமுறை எப்படி திரு மோடி அவர்களுக்கு வாக்களித்து ஓமே மாறும் என்ற நம்பிக்கையில் உங்களுக்கே திரும்பவும் அடுத்த முறையும் வாக்களிப்போம்