Saturday, December 25, 2021

வரலாற்று நாயகர் வாஜ்பாய்

மறைந்த பாரதப் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினம் டிசம்பர் 25. 13 நாட்கள். 13 மாதங்கள். முழுமையாக 5 வருடங்கள்.
 

1980 ஆம் ஆண்டு பாஜக என்ற கட்சி உருவானது முதல் இந்த வருடம் முழுமையாக வாசித்தேன்.  ஒரு தொழில் நிறுவனம் நேர்மையாக நடந்து அற நெறிகளை கடைப்பிடித்து படிப்படியாக வளர்வது எப்படி இருக்குமோ அதைப் போலவே இன்று பாஜக வின் காவிக்கொடி 17 மாநிலங்களில் பறந்து கொண்டு இருக்கின்றது.

இன்று வரையிலும் வெறித்தனமாக எதிர்க்கும் கம்யூ இயக்கங்கள் செய்து கொண்டு இருக்கும் தவறான காரியங்கள் அனைத்தும் பாஜக மேல் வரவு வைக்கின்றனர்.  தங்கள் சுய லாபத்துக்காக தங்களின் அதிகார வெறிக்காக மக்களை வெறியேற்றும் இஸ்லாமிய கிறிஸ்துவத்தில் உள்ள குறிப்பிடத்தக்க விஷக்கிருமிகள் அனைவருக்கும் பாஜக என்ற கட்சியே கசக்கின்றது. 

இன்று உத்திரப்பிரதேசத்தில் யோகி ஆட்சியில் நிலவும் வன்முறையற்ற பாதுகாப்பான நிர்வாகம் எங்களுக்கு எப்போதும் வேண்டும் என்று ஊடக மக்களிடம் பேட்டி கொடுக்கும் அளவுக்கு அங்கு வாழும் இஸ்லாமியச் சகோதரர்கள் உண்மையை உணர்ந்து பேசுகின்றார்கள். இது அடுத்த பத்தாண்டு அண்ணாமலை அவர்களின் தலைமையில் தமிழகத்திலும் நடக்கும் என்றே நம்புகிறேன்.

கத்தோலிக்கத் திருச்சபைகளும், ப்ராட்டஸ்டெண்ட் சபைகளும் பாஜக எதிர்ப்பு என்ற நிலையில் முழுமையாக இல்லாமல் இருப்பதற்குக் காரணம் அவர்களின் வாழ்க்கை முறை என்பது வேறு.  ஆனால் புற்றீசல் போல இந்தியா முழுக்க பெருகிக் கொண்டு வரும் பெந்தேகொஸ்தே சபை என்பது அசிங்கம் மற்றும் அநாகரிகத்தின் உச்சமாக தங்கள் செயல்பாடுகளை மதம் மேல் ஏற்றி மக்களை மடையர்களாக மாற்றிக் கொண்டு வருவதை நாம் பார்த்தே வருகின்றோம். 

இவர்களின் வாக்கினால் மட்டுமே நாம் ஆட்சியைப் பிடித்துக் கொள்ளையடிக்க முடியும் என்பவர்கள் இவர்களுக்குச் சாமரம் வீசுகின்றார்கள்.  பாஜக எப்போதும்  அதனைச் செய்யாது.  மனிதர்களை விட நாடு முக்கியம். அன்று முதல் இன்று வரை இப்படித்தான் காவி சித்தாந்தம் என்பதே இது மட்டும் தான்.  மற்றபடி பாஜக குறித்து விமர்சிக்கும் நண்பர்களின் கூற்றுகளைக் கவனிக்கும் போது நான் உணர்ந்து கொண்டது ஒன்றே ஒன்று தான்.  

இவர்கள் "ஏன் எங்களைத் திருத்த வேண்டும்?  எங்கள் பாணியை இவர்கள் ஏன் மாற்ற வேண்டும்"

என்ற கோபம் தான் இவர்களுக்கு உள்ளது என்பதனை உணர்ந்து கொண்டேன்.  

அதாவது திருடிக் கொண்டு இருப்பவனைத் திருத்த முயன்றால் எதிர்மறை பிரச்சாரம் களைகட்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் நம் தமிழகம்.

தொழில் மற்றும்  கலைத்துறையைப் பற்றிப் பேசக்கூடியவர்கள் உணர்ச்சி வசப்படுவதை ஒப்பிடும் போது அரசியல் குறித்து பேசக்கூடியவர்கள் உணர்ச்சி வசப்படுவதோடு ஆக்ரோஷமடைவதும் இயல்பாகவே உள்ளது. 

என் தலைவன். எங்கள் கட்சி. நான் விரும்பும் கொள்கை என்று அவரவருக்கு தோன்றும் விசயங்களை வைத்து இங்கு ஆதரிப்பதும் எதிர்ப்பதும் நடக்கின்றது. ஆனால் உண்மையில் நிஜ அரசியல் களத்திற்கும் எதார்த்த தொண்டர்களின் எண்ணத்திற்கும் தொடர்பே இல்லை என்பதனை எவரும் உணர்வதே இல்லை.  கட்சி அரசியல், கொள்கை அரசியல், ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்னால் செய்யக்கூடிய பேசக்கூடிய அரசியல், அதிகாரத்தை அடைந்த பின்பு மாற்றம் அடைந்த அரசியல் என்பது பல கிளைகளாக உள்ளது.   

இப்படித்தான் திமுக வாஜ்பாய் அரசுக்கு ஆதரவு அளித்த கதையை நான் புரிந்து வைத்துள்ளேன்.

இந்தியாவில் உள்ள மாநிலக் கட்சிகள் அனைத்தும் இப்படித்தான் செயல்படுகின்றது. 

இஸ்லாமியர்களுக்கு என்ன வேண்டும்? கிறிஸ்துவர்களின் காவலர்கள் நாங்கள் தான்? என்று மாறி மாறி அரிதாரம் பூசி சோர்வே இல்லாமல் வாக்கரசியலின் தன்மைக்காக தங்கள் கொள்கைகளை இழக்க தயாராக இருக்கின்றார்கள். இருந்தார்கள். இனியும் இருப்பார்கள்.

ஆனால் பாஜக என்ற கட்சியை இந்த வருடம் 1925 முதல் மோடி ஆட்சிக்கு வந்த 2014 வரை என்னளவில் முடிந்தவரைக்கும் நேர்மறை எதிர்மறை நியாயங்கள் அனைத்தையும் வாசித்தேன். என் நண்பர்கள் பாஜக குறித்து எதிர்மறை செய்திகளைத் தினமும் அனுப்பிக் கொண்டே இருக்கின்றார்கள். தவறாமல் அனைத்தையும் வாசித்து விடுகின்றேன்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். 

இந்த நிமிடம் வரை பாஜக என்ற கட்சியை அதன் கொள்கையைச் சித்தாந்தங்களை வெறுக்க எவரும் சரியான ஆதாரத் தகவல்களைக் கொடுக்கவே இல்லை. நானும் நண்பர்களிடம் இதையே திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.

திராவிடம் என்ற பெயரை வைத்துக் கொண்டு திருட்டுத்தனம் செய்யும் அனைத்து நபர்களின் பேச்சுகளைக் கடந்த மூன்று வருடங்களாக கேட்ட பின்பு தான் இந்த முடிவுக்கு வந்தேன். அவர்கள் என்ன பேசுகின்றார்கள்? 
எந்த இடத்தைப் பேசாமல் தவிர்க்கின்றார்கள்? 
எப்படி மடை மாற்றுகின்றார்கள்? 

என்பதனை உணர உங்களுக்கு நீண்ட வாசிப்பு ஆழ்ந்த புரிந்துணர்வு இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் நீங்களும் அவர் ஜட்டி போட்டு விட்டார். இவர் கால் கழுவி விட்டார் என்ற பழைய பீத்தப்பாயைப் பிறாண்டிக் கொண்டே கொத்தடிமையாக வாழத் தயாராக இருக்க வேண்டும்.  

ஆமை சுடுதண்ணீருக்குள் இருக்கும் சுகம் போல அது.  வாழ்வின் இறுதிப் பகுதிக்குள் வரும் தான் புரியும்.

நான் இதனைக் காழ்ப்புணர்ச்சியுடன் எழுதவில்லை.

எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதியதை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகின்றேன்.  

"இவர்கள் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் நடத்தியது முதல் அதற்குப் பிறகு படிப்படியாக இவர்கள் எப்படி மாறினார்கள்? தங்களை மாற்றிக் கொண்டார்கள்? எதை அடைந்தார்கள்? எதைப் பெற்றார்கள்? எவரையெல்லாம் தவிர்த்தார்கள்? என்பதனை இன்று நான் யோசிக்கும் போது நம்மை எவ்வளவு தூரம் முட்டாளாக்கி இருக்கின்றார்கள் என்பதனை இன்று நான் யோசிக்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது".

இது போல அவர் எழுதியுள்ளார் என்பதனை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.  நான் ஜெயகாந்தன் மற்றும் கண்ணதாசனை உதாரணம் காட்ட விரும்பவில்லை.  

புதுக்கோட்டை ஞானாலயா நூலகத்திற்கு வந்த பல தொடக்கக் கால திமுக விற்கு உழைத்த பல நபர்களுடன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் பேசி உள்ளேன்.  கதை கதையாக சொல்லி உள்ளனர்.  இன்னமும் அந்த நூலகத்தில் பழைய பல ஆதாரமான புத்தகங்கள் உள்ளது.

ஆனால் இங்கே என்ன நடக்கின்றது?  

அண்ணாமலை அவர்களைப் பேட்டி எடுக்கும் ஒவ்வொருவரும் தமிழகம் சிங்கப்பூர் போல இருப்பதாக நினைத்துக் கொண்டு உபி குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அண்ணாமலை அவர்களின் திறமையைப் பற்றிப் பேசாமல் அமைச்சர்கள் முதல் அமைச்சருக்கு என்ன தான் தகுதி உள்ளது என்பதனைப் பற்றி யோசிக்க விரும்பாமல் வளர்ச்சி குறித்துப் பேசுகின்றனர்.

ஊடகவியலாளர்கள் மனம் என்பது இரும்பில் ஆனதா? இல்லை எங்களுக்கு இது பிழைப்பு? என்பதனை மறைமுகமாக உணர்த்துகின்றார்களா? குழப்பமாகவே உள்ளது? 

ஆனால் இதில் எதிர்கால இளைஞர்களின் வாழ்க்கை தொடர்பு உடையது என்பதனை நினைக்கும் போது வருத்தமாகவே உள்ளது.

மாதம் இத்தனை கோடி வசூலித்தே ஆக வேண்டும் என்று ஒவ்வொரு துறைகளையும் சூறையாடிக் கொண்டு இருப்பது இன்று நடப்பது அல்ல.  1990 முதல் இப்படித்தான் இங்கே நடந்து வருகின்றது?  

ஒரு பத்திரிக்கை கூட இதனைப் பற்றிக் கவலைப்படவில்லை என்பது கூடுதல் தகவல்.  ஆனால் பாஜக குறித்து உபி குறித்து அத்தனை ஊப்பிகளும் கவலைப்படுகின்றார்கள் என்றார் என்ன அர்த்தம்.  குற்ற உணர்ச்சி என்பது மனதில் அறவே இல்லாமல் அக்மார்க் கொடூரவாரியாகவே மாறி விட்டனர் என்று தானே அர்த்தம்.  பெயர் மட்டும் தான் மாறியுள்ளது. அரசியல்வாதி, அதிகாரி, பத்திரிக்கையாளர்.  ஆனால் செய்வது அனைத்தும் வசூல் மட்டுமே?

இந்தச் சூழலில் தான் வாஜ்பாய் அவர்களை இன்று நான் யோசித்துப் பார்க்கின்றேன். அவரின் உழைப்பை, நல்லெண்ணத்தை நினைத்துப் பார்க்கத் தோன்றுகின்றது.

மறைந்த முன்னாள் பாரதப்பிரதமர் பிவி. நரசிம்மராவ் அவர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்குரிய முதல் புள்ளியைப் போட்டார்.  இடையே தடைகள் இருந்த போதிலும் வாஜ்பாய் அவர்கள் அதனை ஓரளவுக்கேனும் முழுமையாக்கினார்.  ஆனால் அடுத்த பத்தாண்டு காலம் மன்மோகன் சிங் என்ற பொம்மையை வைத்துக் கொண்டு சோனியா என்ற பெண்மணி எப்படி இந்தியாவைக் கையாண்டார் என்பதனை பார்த்தோம்.

வந்தார் மோடி.  மக்களின் மனதை வென்றார். இன்று மோடி என்றால் அலறுகின்றார்கள். காவி என்றால் கலங்குகின்றார்கள். பாஜக என்றால் பதறுகின்றார்கள்.  எவன் ஒருவன் பேசாமல் அடிக்காமல் பார்வையால் பயமுறுத்துகின்றானோ அவனே மிகச் சிறந்த குழுத் தலைவன்.  ஆனால் இவை எதையும் செய்யத் தேவையில்லை. என் கடமையை மட்டும் கர்மயோகி போலத் தொடர்ந்து செய்து கொண்டே வருவேன். அதன் விளைவுகள் எதிரிகளை படிப்படியாக கலங்கவைக்கும் என்பதனை தாரக மந்திரமாக வைத்து எட்டாவது ஆண்டில் மோடி அவர்கள் காசி விஸ்வநாதர் ஆசீர்வாதத்துடன் செயல்படும் இந்தத் தருணத்தில் வாஜ்பாய் பற்றி அண்ணாமலை அவர்கள் எழுதிய கடிதம் மிக அருமையாக வந்துள்ளது.

No comments: