Thursday, November 25, 2021

பழங்குடியினர் - மத்திய அரசின் வெற்றி பெற்ற திட்டங்கள்

ஒரு திரைப்படம் பழங்குடியினர் மேல் பரிதாபப்பட வைத்துள்ளது. அதிகம் பேர்களை எழுத வைத்துள்ளது. ஆனால் கடைசியில் வெங்காயம் உரித்தால் என்ன மிஞ்சுமோ அதே போல வித்தியாசமான பல உண்மை விவகாரங்களை படிப்படியாக ஒன்றன் பின் ஒன்றாக இப்போது வெளியே கொண்டு வந்து கொண்டே இருக்கின்றது. 

இந்த சமயத்தில் பழங்குடியினர் வாழ்க்கையில் மத்திய அரசு என்ன சாதனைகள் செய்து உள்ளனர்? என்பதனை யாராவது விபரம் புரிந்தவர்கள் பேசினால் நன்றாக இருக்குமே என்று யோசித்த போது நண்பர் சிவா இவரை அறிமுகம் செய்து வைத்தார்.  தற்போது மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்திரா காந்தி தேசிய பழங்குடிகள் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் முனைவர் திரு எம் நாகலிங்கம் அவர்கள் (துணை பேராசிரியர்) முக்கால் மணி நேரம் பேசி முழுமையாக புரிய வைத்தார்.  

மபி உள்ள மலைப் பிரதேசத்தில் இருக்கும் அவர் இணையத் தொடர்பில்  சிக்கல் உருவானாலும் முடிந்தவரைக்கும் ஆதாரப் பூர்வத் தகவல்களை அளித்துள்ளார்.

சுருக்கமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்தியா முழுக்க இருக்கும் பழங்குடியினர் வாழ் மக்களுக்கு மத்திய அரசாங்கத்தில் 40 துறைகள் தொடர்ந்து செயல்படுகின்றன.  பல ஆயிரம் கோடிகள் அவர்களின் நல்வாழ்வுத் திட்டத்திற்காகத் தொடர்ந்து செலவழிக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் துறையில் செலவழிக்கப்படும் ஒவ்வொரு பைசாவும் இணையம் வழியே கண்காணிக்கப்படுகின்றது. எவர் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ள முடியும்.

ஆனால் இரண்டு பிரச்சனைகள்.

பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் இயல்பான வாழ்க்கையிலிருந்து நாகரிக வாழ்க்கை வரத் தயாராக இல்லை.
மீதி உள்ள மக்களுக்குச் செல்ல வேண்டிய நிதி மாநிலம் வாரியாக அரசியல் சூழல் பொறுத்து மாறுபடுகின்றது.

இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம்.
நல்ல பேச்சு. அவசியம் கேளுங்கள்.  

  
தமிழக பாஜக தலைவர் கு அண்ணாமலை எழுதும் கடிதம் ஒலி வடிவில்

இன்று நான் எனக்கு வரும் கடிதங்களைப் பற்றி உங்களுடன் சில கருத்துக்களை பரிமாறிக் கொள்ள விரும்புகிறேன். கடிதங்கள் வெறும் காகிதங்கள் அல்ல.

கடிதங்கள் வரலாற்றையே மாற்றி எழுதி இருக்கின்றன. கடிதங்கள் அரசாங்கங்களைப் புரட்டிப் போட்டு இருக்கின்றன. கடிதங்கள் மன்னர்களை எல்லாம் மண்டியிட வைத்திருக்கின்றன. உறவுகளுக்குப் பாலமாகவும்... உணர்வுகளுக்கு வடிகாலாகவும்...

வரலாற்றின் பதிவுகளாகவும்... 
கருத்துக்களை அறிவிக்கும் கல்வெட்டுக்களாகவும்... 
கடிதங்கள் வரலாற்றுப் பொக்கிஷங்களாக, 
காலப் பெட்டகக் கருவூலமாகத் திகழ்கின்றன.

ஆகவே நான் எனக்கு வரும் ஒவ்வொரு கடிதத்தையும் மிகுந்த கவனத்துடன் கையாள்வதற்காக ஒரு தனி குழுவை நியமித்து இருக்கிறேன் 

No comments: