Monday, November 29, 2021

200 நாட்கள்


இன்று முதல் இந்த மின்னூல் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

 புதிய நண்பர்களுக்காக இந்த தகவல்



இணைப்பு

அமேசான் கிண்டில் மூலம் படிக்க வேண்டும் என்கிற போது ஒரு மனத்தடங்கல் இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.  உங்களுக்கு அமேசான் கணக்கு இருந்தால் போதும்.  கீழே அலைபேசி செயலி கொடுத்துள்ளேன். தரவிறக்கம் செய்து உங்கள் பெயர், கடவுச்சொல் கொடுத்தால் போதுமானது. பிறகு இலவசப் புத்தக இணைப்பில் பை ப்ரி என்ற பட்டனைத் தட்டுங்கள். உங்கள் அலைபேசியில் புத்தகம் வந்து இறங்கிக் கொள்ளும். புத்தகச் சுமையின்றி எளிமையாக எங்கு சென்றாலும் படிக்கலாம். கட்டாயம் நீங்கள் இனி டிஜிட்டல் வாசிப்பு பக்கம் வந்தே ஆக வேண்டும். எளிமையான தொழில் நுட்பம்.

()()()

இந்த மின்னூல் என் 38 வது புத்தகம்.  உலகம் முழுக்க ஒரே நிமிடத்தில் சென்று சேர்ந்து விடுகின்றது.  இரண்டு புத்தகங்கள் தவிர மற்ற அனைத்தையும் இலவசமாகவே கொடுத்தேன்.  இன்று வரையிலும் அப்படிச் செய்து வருகின்றேன்.  பாஜக வை எதிர்த்து எழுதினால் வாசகர்கள் பெருகுவார்கள். வாசகர்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். சிறுபான்மை வாசகர்களுக்குக் குளுகுளு என்று இருக்கும் என்பது போன்ற  கிரிமினல் மனம் உள்ள எழுத்தாளர்களின் வரிசையில் நான் இல்லை.  எனக்கு எது சரியென்று தோன்றுகின்றதோ அதுவே என் எழுத்து.

()()()

புத்தக சந்தை, பதிப்பாளர்கள் குறித்து உங்களுக்கு உள்ளும் புறமும் உண்மையான தகவல்கள் தெரிந்தால், அவர்களின் யுக்திகள், தந்திரங்கள், அயோக்கியத்தனங்கள் தெரிந்தால் நீங்கள் காரி துப்பி நகர்ந்து விடுவீர்கள்.

(நீலகிரி மாவட்ட ஆட்சியர் மாற்றம் -ஆளுங்கட்சியின் அராஜகம் (பாஜக தலைவர் கு. அண்ணாமலை அறிக்கை)

நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த இன்னசன்ட் திவ்யா மாற்றப்பட்டது ஏன்? திமுக எந்த அளவுக்கு அராஜாகம் செய்கின்றது என்பதனை பத்திரிக்கை அறிக்கை வாயிலாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் வெளியிட்டு உள்ளார். 

ஓலிவடிவில் முழுமையாக கேட்க.... )



பத்தில் இரண்டு பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மட்டும் மனிதாபிமான முறையில், நாகரிகமாக தொழில் செய்து வருகின்றார்கள்.  

நாமக்கல் பகுதியைச் சேர்ந்த திரு. சாந்தமூர்த்தி அவர்கள் அமெரிக்காவில் பணி புரிந்தவர். மிகுந்த நாகரிகமானவர். கண்ணியம் மிக்கவர். புத்தக விற்பனை என்பதனை லாபத்திற்காக நடத்துபவர் அல்ல. தன் விருப்பத்திற்காகத் தொடர்ந்து இதனை ஒரு சேவையாக செய்து வருகின்றார். என் டாலர் நகரம் புத்தகம் இவரிடம் தான் இன்னமும் புத்தக வடிவில் விற்பனையாகிக் கொண்டு இருக்கின்றது.  உங்களுக்கு எத்தனை தள்ளுபடி வேண்டுமானாலும் தருவார்.  

அவர் வாட்ஸ் அப் எண் +91 99005 78736  

டாலர் நகரம் புத்தகம் இன்று வரையிலும் இவர் மூலமாகத்தான் உலகம் முழுக்க போய்க் கொண்டு இருக்கின்றது.  புத்தகம் மூலமாக மட்டும் தான் படிப்பேன் என்பவர்களுக்கு இது உதவக்கூடும்.


No comments: