Thursday, August 12, 2021

வெள்ளை அறிக்கை

தமிழக நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ள தமிழ்நாட்டின் நிதி நிலை பற்றிய வெள்ளை அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் என்ன?



1) வெள்ளை அறிக்கை இதுவரை சட்டமன்றத்தில்தான் தாக்கல் செய்யப்படும். இதையும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து விவாதித்திருக்கலாம். அதனால் எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்தினைப் பதிவு செய்திருக்கும். 

2) ஏன் திமுக இதை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை?

ஏனெனில் சட்டசபையில் சமர்ப்பிக்கும் அறிக்கையில் தவறான தகவலைச் சமர்ப்பித்தால் பிரச்சனை எழலாம். எனவேதான் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யாமல் நேரடியாக வெளியீடு. வெள்ளை அறிக்கை மொத்தம் 122 பக்கங்கள். எவர் படித்தாலும் ஓரளவிற்குப் புரியும்.



3) தமிழகத்தின் மொத்தக்கடன் கிட்டத்தட்ட 5,70,000 கோடி ரூபாய்.

4) 2006 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்கும்போது தமிழகத்திற்கு இருந்த கடனைவிடக் கருணாநிதி ஆட்சியைவிட்டு விலகும்போது விட்டுச் சென்ற கடன் இரு மடங்கு. அதுபோலவே 2011 ல் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்கும்போது இருந்ததைவிட 2016 ல் அவரது ஆட்சி முடிவில் கடன் இருமடங்கு. அதுபோலவே 2021 ல் தமிழகத்தின் கடன் இருமடங்கிற்குச் சற்று அதிகம். ஒரு மாநிலம் எவ்வளவு கடன் வாங்கலாமோ அதன் அளவினை இன்னும் தாண்டவில்லை.

5) ஒவ்வொரு 5 ஆண்டிற்கும் தமிழகத்தின் கடன் தொகை இரட்டிப்பாகிக் கொண்டே வருகிறது.



6) இப்போது திமுக பதவியேற்ற 90 நாட்களில் வாங்கியுள்ள கடன் 17,000 கோடி ரூபாய். இதை 2046 ல் அமையும் தமிழக அரசு திருப்பிச் செலுத்த வேண்டும். கடன் வாங்குவது தவறெனில் இப்போது இவர்கள் ஏன் வாங்கினர்?

7) திமுக மறைத்த விஷயம்: திமுக ஆட்சியிலும் கடன் வாங்கினார்கள். கடந்த 90 நாட்களிலும் 17,000 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.



😎 ஜி.எஸ்.டி பாக்கி:

தமிழக அரசிற்கு மத்திய அரசு தரவேண்டிய ஜி.எஸ்.டி பாக்கி 20033.02 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Compensation Cess குறைவாக வசூலானதால் 2022 ல்தான் ஜி.எஸ்.டி பாக்கித்தொகை 4,850 கோடி ரூபாய் தர இயலும் என தமிழகத்திடம் மத்திய அரசு முன்னதாகவே தெரிவித்திருக்கிறது. 



மேலும் இவர்கள் 20,033 கோடி என்பது 2021 -2022 ஆம் ஆண்டிற்கான தோராயமான (Estimated) தொகையையும் சேர்த்துத்தான். இழப்பீட்டுத் தொகை எவ்வளவு என்பதே 2022 மார்ச்சில்தான் தெரியவரும். இவர்கள் இப்போதே தோராயமாக இவ்வளவு வரும் என கணக்கு போட்டு வைத்துள்ளனர். இது தவறில்லை. 

ஆனால் 2022 ல் வர வேண்டியதை இப்போதே மத்திய அரசு தர வேண்டியது எனச் சொன்னால் எவ்வாறு சரியாகும்.

9) திமுக அரசு மறைத்தது: 

உண்மையான ஜி.எஸ்.டி பாக்கித் தொகை 4,850 கோடி மட்டுமே. அதுவும் Compensation Cess குறைவாக வசூலானதால் அடுத்த வருடம் தரப்படும் என மத்திய அரசு தமிழகத்திடம் அறிவித்திருக்கிறது. எனவே ஜி.எஸ்.டி பாக்கி 0 ரூபாய்.

10) அரசு ஊழியர்களுக்கான சம்பளங்கள் Revenue Expenditure ல் (வருவாய்ச் செலவினத்தில்) ஆண்டு வாரியான வளர்ச்சியின் சராசரி.

2006–2007 முதல் 2010 -2011 வரை

திமுக ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்களுக்குக் கொடுத்த சம்பளங்களின் ஆண்டு வளர்ச்சியின் சதவீதம் 21.756 %.

2011- 2012 முதல் 2015 -2016 வரை

அதிமுக காலத்தில் அரசு ஊழியர்களுக்குக் கொடுத்த சம்பளங்களின் ஆண்டு வளர்ச்சியின் சதவீதம் 9.486%

2016 -2017 முதல் 2020 -2021 வரை

அதிமுக காலத்தில் அரசு ஊழியர்களுக்குக் கொடுத்த சம்பளங்களின் ஆண்டு வளர்ச்சியின் சதவீதம் 9.254%

Revenue Expenditure ல் திமுகவினை விட அதிமுக சிறப்பாகவே கையாண்டுள்ளது.

11) நிதியமைச்சர் சொன்ன மற்றுமொரு திருவாசகம் 

மத்திய அரசு பெட்ரோல் வரியில் லிட்டருக்கு 50 காசு மட்டுமே தருகிறது என. தமிழக அரசு பெட்ரோலுக்கு விதிக்கும் VAT வரி மூலம் கிடைக்கும் வருவாய் யாருக்குச் செல்கிறது? தமிழக அரசிற்குத்தானே? பிறகு ஏன் இந்தப் பொய்?

12) GST அமுல்படுத்தப்பட்டதால் தமிழகத்தின் வணிக வரி வருவாய் குறைந்துவிட்டது எனக் குறைசொல்லும் தமிழக அரசு வெள்ளை அறிக்கையில் GST அமுல்படுத்தும் முன்னரே தமிழக வணிக வரி வருவாய் குறைய ஆரம்பித்துவிட்டது எனக் குறிப்பிடுகிறது.

13) மிகமுக்கியமான விசயம் என்னவெனில் திமுக தன் தேர்தல் அறிக்கையில் தமிழகத்தின் மொத்தக் கடன் 9 இலட்சம் கோடிகள் எனக் குறிப்பிட்டது. 

ஆனால் தமிழகத்தின் கடன் 5,60,000 கோடி மட்டுமே. எனவே திமுக எதிர்பார்த்ததைவிட 38% கடன் குறைவுதான். எனவே தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே சிறந்தது.

ஆனால் திமுகவால் அவற்றை நிறைவேற்ற இயலாது. 

உதாரணம் நீட் தேர்வு விலக்கு. அதனால்தான் வெள்ளை அறிக்கை என ஒன்றை வெளியிட்டு வழக்கம்போல முந்தைய ஆட்சியின் மீது பழியைப் போடுகின்றனர்.

14) பெரும்பாலான வரிவிதிப்புகள் GST யின் கீழ் இருப்பது நமக்கு வசதியாய் போய்விட்டது. இல்லையேல் திமுக வரியை உயர்த்தியிருக்கும். எனவே வரும் காலங்களில் மாநில அரசின் கீழ் இருப்பவற்றில் வரி விதிப்பில் மாபெரும் மாற்றங்கள் வரும். 

பாரத தேசத்தின் உண்மையான வரலாறு பகுதி- 1

சுருங்கக்கூறின். மின்கட்டணம், பேருந்துக் கட்டணம், சொத்து வரி, குடி தண்ணீர் வரி, சேவைக் கட்டணங்கள், பெட்ரோலுக்கான VAT ஆகியவை மாற்றியமைக்கப்பட்டு அதிக வரி விதிக்கப்படக்கூடும். 

அதுபோலவே வருவாயைப் பெருக்க மீண்டும் கனிமவள விற்பனை, பரிசுச்சீட்டு விற்பனை என ஏற்கனவே தடை செய்யப்பட்டவை மீண்டும் தலையெடுக்கத் தொடங்கும்.

15) உண்மையில் தமிழகத்தின் நிதிநிலைமை அதலபாதாளத்தினை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 

இதுவரை இலவச வாக்குறுதிகளுக்காகவும், வழங்கப்பட்ட பணத்திற்காகவும் நம்மை நாமே அடகு வைத்தோம்.  இனி அதற்கு உண்டான பலனை அனுபவிக்க போகின்றோம்.

(உங்களுக்குத் தெரிந்து இரண்டு பக்கமும் உள்ள பத்து குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், பினாமிகள், நிறுவனங்களை கணக்கிட்டு எத்தனை லட்சம் கோடி என்று மனதிற்குள் சொல்லிப் பாருங்கள். அதற்குள் தான் இந்த 6 லட்சம் கோடி உள்ளது)


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

வழக்கமான விளையாட்டு...