Wednesday, December 02, 2020

2020 பென் டூ பப்ளிஷ் அமேசான் போட்டி

 வலையுலக நண்பர்களே

இந்த வருடம் அமேசான் நடத்தப் போகும் பென் டூ பப்ளிஷ் 2020 போட்டி அறிவிப்பு வெளியாகி உள்ளது.  வலைபதிவு வழியாக எழுதியவர்கள், எழுதக் கற்றுக் கொண்டவர்கள் வெற்றிகரமாக தனபாலன் அறிவுரையை ஏற்று பலரும் அமேசானில் மின் புத்தகங்களாகக் கடந்த ஒரு வருடமாகப் பதிப்பித்து உள்ளீர்கள். வாழ்த்துகள்.  



ஆனால் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளக்கூடியவர்களுக்குக் குறிப்பிட்ட சட்ட திட்டங்களை அமேசான் வகுத்துள்ளது என்பதனை சென்ற முறை நான் கலந்து கொண்ட போது அறிந்து அதனைப் பற்றி முழுமையாக எழுதி உள்ளேன்.  

வாய்ப்பிருப்பவர்கள் அமேசான் கணக்கு உள்ளவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்துத் தெளிந்து உங்கள் புத்தகங்களை அமேசான் போட்டிக்குத் தகுதி உள்ளதாக மாற்றுங்கள் என்று அன்போடு கோரிக்கை வைக்கின்றேன்.

கலந்து கொள்ள என்ன தகுதி வேண்டும்? அமேசான் தளத்தில் நாம் விரும்பிய புத்தகத்திற்கு விமர்சனம் எழுத ஸ்டார் ரேட்டிங் கொடுக்க என்ன தகுதி வேண்டும்? போன்ற அனைத்து தகவல்களையும் எழுதி உள்ளேன்.  ஆழம் தெரியாமல் காலை விட வேண்டாம். அறிந்து புரிந்து களத்தில் குதிக்கவும்.

தமிழக அரசியல் வரலாறு என்ற 1440 பக்கம் உள்ள புத்தகத்தை 3 புத்தகமாக பிரித்து இந்தப் போட்டியில் கலந்து கொள்கிறேன்.  

மூன்று புத்தகங்களும் ஒவ்வொரு சமயத்திலும் இலவசமாக வெளியிடப்படும். 

என்னால் மூன்று நிமிடத்திற்கு மேல் யூ டியூப் பார்க்க முடியாது.  என்னால் ஐந்து நிமிடத்திற்கு மேல் வாசிக்க முடியாது என்பவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைக்கவும். அவர்கள் கையில் தான் எதிர்கால தமிழகம் உள்ளது.

வெற்றி மற்றும் வெற்றியைத் தவற விடுதல் என்பதற்கு அப்பாற்பட்டு உலகம் முழுக்க இருக்கக்கூடிய தமிழ் வாசிக்கத் தெரிந்து லட்சக்கணக்கான வாசகர்களுக்கு உங்கள் புத்தகம் எளிதாகச் சென்று சேரும் என்பதனை கவனத்தில் வைத்திருங்கள்.

சென்ற முறை இந்தப் போட்டி நடந்த போது சொன்னேன். இந்த முறையும் முன்கூட்டியே சொல்வது என் கடமை.

வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

கிண்டில் மொழி: Kindle Pen to Publish 2019

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி ஐயா

Anuprem said...

தகவலுக்கு நன்றி ஐயா ..

வெங்கட் நாகராஜ் said...

தகவலுக்கு நன்றி ஜோதிஜி. வெற்றி பெற வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

மின்னூல் வழக்கொழிந்த காலம் கடந்து, வெற்றி எனும் மாயை கடந்து போன பின்...

நன்றி - அற நெறியில் ஒன்று; அதனால் நன்றி அல்ல கணக்கியல் வேறு...

ஜோதிஜி said...

வெற்றி என்பது முதல் பரிசு ஐந்து லட்சம் மட்டும் அல்ல. அதனைக் கடந்து இதில் பல விசயங்கள் உள்ளது.