Monday, December 21, 2020

கொஞ்சம் உழைப்பு. அதிக வைராக்கியம் 2020

இந்த வருடம் யூ டியூப் பக்கம் சென்றேன். அதுவும் சில மாதங்களுக்கு முன்பு தான் உள்ளே நுழைந்தேன். ஆனால் ஜிமெயில் கணக்கு திறந்த 2007 முதல் எப்போதும் போல இதிலும் கணக்கு இருந்தது. நான் சென்றதே இல்லை.  2018 முதல் 2020 வரைக்கும் உள்ள மூன்று வருடங்களில் தான் யூ டியுப் பக்கம் அதிகம் சென்று உள்ளேன். 

எப்போதும் நாமும் இதில் நம் தரப்பு விசயங்களைப் பதிவு செய்வோம் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை. வேர்ட்ப்ரஸ் ல் திடீரென எழுதத் தொடங்கியது போல இதுவும் கிடைத்த ஓய்வில் உருவாக்கிக் கொண்ட பாதையிது.

குறள் சித்தருக்கு(ம்) அந்த நண்பரைத் தெரியும். அவர் யூ டியூப் கில்லாடி என்றும் எவரும் அவரை நெருங்க முடியாத வலைப்பின்னல் போட்டுக் கொண்டு உளவாளி போல வாழ்ந்து வருபவர் என்றும் சொல்லப்பட்டவரிடம் இது குறித்து அழைத்துக் கேட்டேன். அன்று காணாமல் போனவர் தான். 

இப்போதும் இங்கே வந்து படித்துக் கொண்டிருப்பார்.

அப்போது மனதில் வைத்திருந்தேன். ஏன் இது நம்மால் முடியாதா? 

சில தினங்களுக்கு முன்பு உன் தேர்ச்சி அறிக்கை இது தான் என்று அனுப்பி வைத்துள்ளார்கள்.  அனைத்துத் துறைகளிலும் ஈடுபடுவது எளிது. ஆர்வத்தை வளர்த்துக் கொள்வது சாத்தியம் தான். ஆனால் தொடர் உழைப்பு முக்கியம். நம் சொந்த வாழ்க்கை உழைப்போடு விருப்பம் சார்ந்த துறைகளில் ஈடுபடும் போது நம்மைப் போன்றவர்களுக்கு இரவு நேரம் தான் கிடைக்கும். அவசியம் இதற்காகத் தூக்கத்தைத் தியாகம் செய்தாக வேண்டும்.

பிஎஸ்என்எல் இணைய இணைப்பு வந்து வந்து போகும். ஒரு பேச்சை யூ டியூப் ல் ஏற்றுவதற்குக் குறைந்த பட்சம் 3 மணி நேரம் ஆகும். பொறுமை முக்கியம். அதனை நண்பர்களுக்குக் கொண்டு சேர்ப்பது அதனை விட முக்கியம்.

இன்றைய காலகட்டத்தில் யூ டியூப் என்றால் கழிப்பறை போல அசிங்கங்கள் நிறைந்து வழியும் மலக்கூடமாக இருக்கும் இடத்தில் நம்மைப் போன்றவர்கள் கடைப்பிடிக்கும் கொள்கைகள் கோட்பாடுகள் அங்கே எடுபடாது என்று தெரிந்தும் என் கொள்கைகளை விட்டுக் கொடுக்கவில்லை. கோட்பாடுகளை மாற்றிக் கொள்ளவில்லை. ஆனால் சாதனைப் பட்டியல் சொல்லும் அளவிற்குச் சிறப்பாகவே உள்ளது. இதன் முக்கால்வாசிப் பெருமை என் மகளுக்கே சேரும். அவர் தான் உழைத்துள்ளார்.







ஜோ பேச்சு







13 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துகள் ஐயா

த. சீனிவாசன் said...

உங்கள் பேருழைப்பு இன்னும் பல்லாயிரம் மகிழ்ச்சிகள் தரும் ஐயா.

ஜோதிஜி said...

நன்றி.

ஜோதிஜி said...

பத்து வருட தொடர் பயணத்திற்கு நன்றி சீனி.

திண்டுக்கல் தனபாலன் said...

அவர் வருவார்... ஆனால்...

இவறல்...

சூழ்பவர் யார்...?

Mohamed Yasin said...

உங்கள் இயக்கத்தையும், ஓட்டத்தையும்,சமூக பார்வையையும் குறித்து என்றும் பிரமிக்கிறேன்.. மென் மேலும் பல தூரங்கள் கடக்க என் வாழ்த்துக்கள்..

ஜோதிஜி said...

துள்ளி வருது பகையே. எவருக்கும் அஞ்சேல். வெற்றி வேல். வீர வேல்.

ஜோதிஜி said...

நன்றி மகிழ்ச்சி.

மெய்ப்பொருள் said...

BSNL இப்போது ஆப்டிக் கேபிள் மூலம் ப்ரோட் பேண்ட் அளிக்கிறது .
பழைய போன் போல இல்லை .20 MBPS !
விலையும் கம்மி .

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள்.

கிரி said...

வாழ்த்துகள் ஜோதிஜி. ஆர்வம் கொண்டு தெரிந்து அதைத் தொடர்வது சுவாரசியமான அனுபவமே!

தற்காலம், எதிர்காலம் அனைத்தும் காணொளி காலம் தான்.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

நிச்சயம் இதுவும் மாறும் என்றே நினைக்கிறேன்.