Tuesday, December 10, 2013

இப்படியும் (சிலசமயம்) நடக்கக்கூடும்

திட்டமிடுதல் இருந்தால் ஜெயிக்க முடியும் என்கிறார்கள். ஆனால் தினசரி வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் யோசித்துப் பார்த்தால் பெரும்பாலும் தற்செயலாக நடக்கும் நிகழ்வுகள் தான் நாம் அடுத்த படி எடுத்து வைக்க காரணமாக இருக்கின்றது.  

இதைத்தான் ஏற்கனவே "தீர்மானிக்கப்பட்ட ஒன்று" என்கிறார்கள். "கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே" என்றும்  சொல்கின்றார்கள்.  2013 ஆம் ஆண்டில் கடைசி மாதத்தில் ஒரு மகிழ்ச்சியை இந்த சமயத்தில் பகிர்ந்து கொள்கின்றேன். காரணம் ஒருவர் கொடுத்த விமர்சனம் ஊக்கத்தை தர அதுவே இதன் தூண்டுகோலாய் அமைந்துவிட்டது.

வ்வொரு வருடமும் எழுதிக் கொண்டே வரும் பொழுது இடையே சில மாதங்கள் எழுதாமல் விட்டு வேடிக்கைப் பார்ப்பதுண்டு. ஆனால் இந்த வருடம் எல்லா மாதங்களிலும் எழுதும் சூழ்நிலை இயல்பாகவே அமைந்தது. மூன்று மாதங்கள் தொடங்கி ஆறு மாதங்கள் வரைக்கும் எழுதாமல் இருந்தபோதிலும் வருடத்திற்கு நூறு தலைப்புகள் சேர்ந்து விடும். ஆனால் இந்த வருடம் அடுத்த வருட ஆறுமாதத்திற்கு எழுத வேண்டிய தலைப்புகளையும் சேர்த்து எழுதி விட்டோமோ? என்று தோன்றி இடையில் நிறுத்தி விடுவோம் என்ற எண்ணிய நேரத்தில் குழந்தைகளைப் பற்றி எதுவும் எழுதவில்லையே என்று நினைத்துக் கொண்டு போரும் அமைதியும் என்ற தலைப்பில் தொடங்கினேன். அது தான் இப்போது அடுத்த சாதனையாக மாறியுள்ளது. 

வ்வொரு வருடமும் பல்வேறு தலைப்புகளைப் பற்றி எழுதும் பொழுதே குழந்தைகளைப் பற்றியும் எழுதி விடுவதுண்டு.  அவர்களின் மாறிக் கொண்டே வரும் சிந்தனைகள், அதன் மூலம் தற்போதைய கல்வி குறித்த என் பார்வையை சொல்வதுண்டு.  அதைப் பற்றி ஒரு சிறப்பான அங்கீகாரத்தை துளசி கோபால் கொடுத்தார்.  

"போன பதிவும் இந்தப் பதிவும் அபாரம்! நல்ல அவதானிப்பு வந்துவிட்டது. கண்ணை மட்டும் திறந்து வச்சுக்கிட்டால் போதும். நம்மைச் சுற்றிலும் நடப்பவைகள் நம்மை எழுத வைத்துவிடுகின்றன!"

இதன் தொடர்ச்சியே பல பதிவுகள் எழுதி ஒவ்வொருவரின் விமர்சன எதிர்பார்ப்பின்படி இதற்குத்தானே ஆசைப்பட்டாய்? என்கிற தலைப்பில் முடிந்தது.எப்போதும் போல எழுதியதை மறந்து விட்டு சித்த மருத்துவத்திற்குள் நுழைந்து விட்டேன்.   

ன் எழுத்தை தொடர்ந்து (சு)வாசித்துக் கொண்டு வரும் திருமதி கோவை எழில், திரு. எட்வின் அவர்களுக்கு என் தளத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார். திரு.எட்வின் அவர்களை முகநூலில் பார்த்துள்ளேன். அறிமுகம் ஏதுமில்லை.பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளியில் தலைமையாசிரியராக இருப்பவர். மாவட்ட அளவில் சங்கப் பதவிகளில் இருப்பவர். அற்புதமான மேடை பேச்சாளர், களப்போராளி.  காக்கை சிறகினிலே போன்ற பல இதழ்களுக்கு நிர்வாக குழுவில் இருப்பவர். புதிய தரிசனம் என்ற மாதமிருமுறை இதழில் வலைபதிவுகளை தொடர்ந்து அறிமுகம் செய்து எழுதிக் கொண்டு வருபவர். 

சிறப்பான தளங்கள் வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் கோவை எழில் என் தளத்தை அவருக்கு அறிமுகம் செய்து வைக்க சில தலைப்புகளைப் படிக்க சுவராசியமாகி தளத்தில் உள்ள பலதரப்பட்ட கட்டுரைகளையும் பிரிண்ட் அவுட் எடுத்து முழுமையாக படித்து விட்டு அவர் பத்திரிக்கையை விமர்சனம் அனுப்பிய பிறகே என்னை அழைத்துச் சொன்னார். இவை அனைத்தும் அவர் என்னை ஒரு நாள் இரவில் அழைத்த போது தான் தெரிந்தது. 

இந்த ஆண்டு கிடைத்த முக்கிய அங்கீகாரம் இது. மகிழ்ச்சியாக இருந்தது.

தோன்றிய எண்ணங்களை எழுதுவது எழுத்துக்கலை. இதில் சுவராசியம், சுருக்கம், எளிமை என்று மூன்று விசயங்கள் முக்கிய பங்கு வகித்த போதிலும் வாசித்த பின்பு யோசிப்பு என்பதை விட்டு விலகி நிற்கும் எழுத்துக்கள் எப்போதும் போல மறக்கப்பட்டு விடுகின்றது. இதற்கும் ஒரு காரணத்தை எழுதுபவர்கள் சொல்கின்றார்கள்.  அவரவருக்கு இருக்கும் கவலைகளை நாம் ஏன் அதிகப்படுத்த வேண்டுமென்று? ஆனால் நான் எழுதிய ஒவ்வொரு தலைப்பிலும் ஏதோவொரு தகவல் இருக்கும்படி பார்த்துக் கொள்வதுண்டு.  

எழுதுபவனின் முக்கியத் தகுதியன்பது படிப்பவர்கள் இதைத்தான் விரும்புவர்கள் என்பதை ஒரு வரையறைக்குள் வைத்துக் கொள்ளாமல் நாம் எது குறித்து எழுதினாலும் நிச்சயம் வாசிக்க வைக்க முடியும் என்று தன் தகுதியை நிருபிப்பது. நானும் அதே பாணியைத் தான் தொடக்கம் முதல் கடைபிடித்து வருகின்றேன். பலரும் ஆதரித்துள்ளனர். 

டந்த நாலரை வருட எழுத்துப்பயணத்தில் இந்த தளத்தில் இரண்டு தளங்களின் வாயிலாக ஏழு லட்சம் சொடுக்குகள் பட்டுள்ளது. பத்தாயிரம் விமர்சனங்கள் கிடைத்துள்ளது. ஒவ்வொரு விமர்சனமும் தான் என்னை அடுத்தபடிக்கு நகர்த்தியுள்ளது.பலதரப்பட்ட அங்கீகாரத்தை பலரும் கொடுத்துள்ளனர். காரண காரியத்தோடு எனக்குத் தோன்றியவற்றை என் பாணியில் எழுதியவற்றுக்கு இப்போது வலைக்காடு விமர்சனம் மூலம் ஒரு சிறப்பான அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இது போன்ற விமர்சனத்தை நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்தேன்.  அதுவும் முடிவுக்கு வந்து விட்டது.

ங்கீகாரமும் வெற்றியும் வெவ்வேறு தளத்தில் இருப்பது.  சிறப்பான படங்களும், அற்புதமான புத்தகங்களும் வணிக ரீதியாக ஜெயிக்காமல் போகும் போது அது பலருக்கும் போய்ச் சேரமால் இருந்து விடுகின்றது. சமூகத்தில் அதை தோல்வி என்றே சொல்லப்படுகின்றது. 

4 தமிழ்மீடியா குழுமம் உழைப்பின் மூலம் உருவான டாலர் நகரம் இந்த இரண்டு தளங்களிலும் ஜெயித்ததுள்ளது. இணையத்தில் பல தரப்பட்ட நண்பர்கள் புத்தக வெளியீட்டு விழா வரைக்கும் உண்டான நிகழ்வுகளை தங்கள் தளத்தில் வெளியீட்டு ஆதரவு தந்தார்கள். பலரும் விமர்சனமும் கொடுத்தார்கள்.  இந்த வருடத்தின் கடைசி மாதத்தில் இங்கே நன்றியை எழுதி வைத்து விடுகின்றேன். சென்ற வருடம் டைரிக்குறிப்புகள் போல மூன்று பகுதிகளாக எழுதி வைத்தேன்.  ஆனால் இனி குறிப்பிட்ட காலம் வரைக்கும் இணையத்தை விட்டு விலகியிருக்க வேண்டும் என்று நினைத்துள்ளேன். விரைவில் இடைவேளை ஆரம்பம்.

சிறப்பான எழுத்தாளர்கள் என்று சொல்லப்படுவர்களின் புத்தகங்களும், சிறந்த பதிப்பகம் என்று சொல்லப்படும் நிறுவனங்களும் தற்போதுள்ள புத்தக சந்தையில் விற்பனை செய்யப்படும் அளவீடுகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த புத்தக உலகம் குறித்து அடுத்த பதிவில் எழுத முடியுமா? என்று பார்க்கின்றேன்.

முதல் பதிப்பில் 300 புத்தகங்கள் தான் கொண்டு வருகின்றார்கள்.  சில சமயம் 500 புத்தகங்கள் வரைக்கும் விற்பனைக்கு கொண்டு வருகின்றார்கள். விதிவிலக்கான தலைப்புகள் மட்டுமே இங்கே முதல் பதிப்பில் ஆயிரத்தை தாண்டுகின்றது. பல சமயம் சில மாதங்களில், வருடங்களில் அடுத்த பதிப்புக்கு நகர்கின்றது. பிரபலமான எழுத்தாளர்களின் 500 புத்தகங்கள் விற்க எடுத்துக்கொள்ளும் காலம் 18 மாதங்கள் என்றார் ஒரு பதிப்பக முதலாளி. இது போன்ற உண்மையான விசயங்கள் பெரும்பான்மையினருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் டாலர் நகரம் முதல் பதிப்பில் 2000 புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அனைத்தும் வாசிப்பாளர்களிடம் சென்றுள்ளது. சென்று கொண்டிருக்கின்றது.

சென்று கொண்டிருக்கும் பாதை சரிதானா? என்று அவ்வப்போது எனக்குள் கேட்டுக் கொள்வதுண்டு. இந்த வருடம் பலதரப்பட்ட விமர்சனங்கள் என்னை நோக்கி வந்தது.  எழுதுவது மட்டுமே உங்கள் வேலையாக உள்ளதா? என்றார் ஒருவர். உங்களைப் பற்றி மட்டுமே எழுதிக் கொண்டு இருக்கப் போகின்றீர்களா? என்று மற்றொருவர் கேட்டார்.  சுய பெருமைகளை மூட்டை கட்டி வைக்கும் எண்ணமில்லையா? என்று என் முகத்திற்கு நேராக சிரிக்காமல் கேட்டார் என்னை நேரிடையாக சந்தித்த நண்பர். 

தொடக்கத்தில் மகாகவி பாரதி படத்தை முகமாக வைத்துக் கொண்டு என் மின் அஞ்சல் கூட எவருக்கும் தெரியப்படுத்தாமல் பயணித்த பாதையில் இன்று முகத்துடன், மற்ற அடையாளத்துடன் எழுதிக் கொண்டிருக்கின்றேன். அதென்ன வினோதமான தேவியர் இல்லம் என்று பெயர்?  உங்கள் வயது அறுபதுக்கு மேல் இருக்குமா? என்று கடந்த ஆறு மாதங்களாக எவரும் கேட்பதில்லை.

ருடத்தின் தொடக்கத்தில் எந்த சபதங்களையும் எடுத்துக் கொள்வதில்லை.
 ருடத்தின் இறுதியில் ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்ப்பதுண்டு.


தொடர்புடைய பதிவுகள்

வாசிக்க32 comments:

'பரிவை' சே.குமார் said...

எழுத்து ஒரு வரம் அண்ணா... அது உங்களுக்குள் பிரகாசமாக இருக்கிறது...
தொடர்ந்து எழுதுங்கள்.

Avargal Unmaigal said...

என்னைப் பொருத்தவரை நீங்கள் உங்களைப் பற்றி எழுதுவதைவிட உங்களின் பரந்து விரிந்த கழுகுப் பார்வையைப் பற்றிதான் எழுதுகிறீர்கள் அந்த பார்வையும் மிகவும் மாறுபட்ட பார்வையாகத்தான் இருக்கிறது பாராட்டுகள் வந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள் அதே நேரத்தில் ஏச்சுக்கள் வந்தாலும் அதை பாராட்டாக நினைத்து ஏற்றுக் கொள்ளுங்கள் அதே நேரத்தில் எந்த நேரத்திலும் யாருக்காவும் எதற்காகவும் உங்கள் எழுத்து நடையையோ அல்லது சொல்ல நினைக்கும் கருத்துகளையோ மாற்றிக் கொள்ளாதீர்கள், நான் பல நேரத்தில் பல சம்யங்களில் விட்டுக் கொடுத்து போவேனே தவிர நான் என்னை மாற்றிக் கொள்ளமாட்டேன்

Avargal Unmaigal said...

இந்த வரிகளை நான் ஆமோதிக்கிறேன் ஒன்றைத்தவிர அண்ணா என்பதற்கு பதில் தம்பி ஹீஹீ

Yaathoramani.blogspot.com said...

சுயவிமர்சனம் போல் அமைந்த பதிவு
மிக மிக அருமை

வலையத் தேடி பத்திரிக்கைகள் வரும் சூழல்
தங்களைப் போன்ற சிறந்த பதிவர்களால்தான்
சாத்தியமாயிற்று.

சமூக அக்கறையுடன் ஆழமான சிந்தனையுடன்
பகிரப்படும் பயனுள்ள பதிவுகள்தான் தங்கள் பதிவுகள்
என்பதும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது

இந்தப் பொழுதில் இடைவெளி இடைவேளை என்கிற
சிந்தனைகள் ஏதும் வேண்டியதில்லை என்பதுவே
எனது கருத்து

பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

தர்ங்கள் பயணிக்கும் பாதை சரியானது,
சரியானது மட்டுமல்ல இன்றைக்கு தேவையான
அவசியமான பாதையில் பயணிக்கிறீர்கள்.
பயணம் தொடரட்டும்.
வாழ்த்துக்களும் நன்றிகளும்

துளசி கோபால் said...

ரொம்பச் சரி.

அப்பப்பக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கத்தான் வேணும்! மனுஷ மனசின் ( வேண்டாத) வேலையும் அதுதான் இல்லியோ:-))))

இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும். நல்லா இருங்க.

saidaiazeez.blogspot.in said...

உங்களின் மகிழ்ச்சியில் நானும் பங்குகொள்கிறேன்.
எல்லாம் நன்மைக்கே.
எண்ணம் போல வாழ்க்கை!

திண்டுக்கல் தனபாலன் said...

சரியான மிகச்சரியான பாதை... தொடருங்கள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

டிபிஆர்.ஜோசப் said...

எழுதுகின்ற விஷயம் எதுவானாலும் அது வாசிப்பவர்களை சென்றடைவதுதான் முக்கியம் என்று நீங்கள் கூறுவது சத்தியமான வார்த்தை.

ezhil said...

எதுவுமே திட்டமிடாமல் கிடைப்பதில்லை...உங்களின் சமுதாய நோக்கு , அது குறித்த தீர்வுக்கான உங்களின் தேடலே உங்களை கவனிக்க வைக்கிறது. அந்த தேடல் தொடரட்டும் என்பதே என் போன்றோரின் ஆவல். வாழ்த்துக்கள் ஜோதிஜி சார்.

ஜோதிஜி said...

உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி ரமணி. இளைப்பாறுதல் என்பது எல்லா இடத்திலும் எல்லோருக்கும் தேவை. படிக்க முடியாத சூழ்நிலை இருந்தாலும் வெளியே உள்ள சமூகத்தை உள்வாங்கி வைத்துக் கொண்டேயிருக்கும் பொழுது குறிப்பிட்ட காலகட்டத்தில் அதுவே வார்த்தையாக வந்துவிடும். டாலர் நகரம் நூலே இருபது வருட திருப்பூர் சமூகத்தின் உள்வாங்கல் தானே.

ஜோதிஜி said...

நன்றி ஆசிரியரே.

ஜோதிஜி said...

சில வார்த்தைகள் சம்பிரதாய வார்த்தைகள் போலத்தான் தெரியும். ஆனால் வலையுலகில் உங்களுக்குண்டான டீச்சர் என்ற வார்த்தை என்னைப் பொருத்தவரையில் மிக மிக பொருத்தமானதே. எழுதத் தொடங்கியது முதல் நான் எழுதிய இந்த 617 வது கட்டுரை வரை உங்களின் அக்கறையும் கவனிப்பும் இருப்பதால் நாமும் எழுத கற்றுக் கொண்டுள்ளோம் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு.

ஆசிர்வாதத்திற்கு நன்றி. உங்கள் கோபால் அவர்களின் மருத்துவமனையில் படுத்துள்ள புகைப்படத்தை பார்த்த போது என்ன எழுதுவது என்று தெரியாமல் அப்படியே வந்து விட்டேன். இப்போது நலமாக இருக்கின்றாரா?

ஜோதிஜி said...

கடைசி வரைக்கு உங்களின் கடைசி வரி தான் என் வாழ்க்கை கொள்கையும். நன்றி அஜீஸ்

ஜோதிஜி said...

நன்றி தனபாலன்.

ஜோதிஜி said...

பல சமயம் என்னுடைய பழைய பதிவுகளில் உள்ள விமர்சனங்களைப் பார்க்கும் போது அவசரகதியில் கடந்து வந்த காரணத்தால் அதில் விமர்சனம் எழுதிய பலருக்கும் பதில் அளிக்காமல் வந்துள்ளதை பார்க்கும் போது லேசாக குற்ற உணர்ச்சி உருவாகின்றது. நாம் எழுதியுள்ள கட்டுரைகளுக்கு என்னவிதமான பதில் கிடைத்துள்ளது என்பதை கவனிப்பதும் நமக்கு ஒவ்வொரு சமயத்தில் கிடைத்த ஆதரவும் நினைத்துப் பார்க்கும் போது சற்று மலைப்பாகவே உள்ளது. நன்றிங்க.

ஜோதிஜி said...

சமுதாய நோக்கு , அது குறித்த தீர்வுக்கான உங்களின் தேடலே உங்களை கவனிக்க வைக்கிறது

அழகான விமர்சனம். நன்றி எழில்.

ஜோதிஜி said...

எப்படியோ குமார் இவர் வயசை சொல்லிட்டாரு.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

மிக வெளிப்படையான உங்கள் எழுத்தில் ஆச்சர்யப்பட்டதும் உண்டு .அதே சமயம் இவ்வளவு வெளிப்படையான எழுத்தை கண்டு பயந்ததும் உண்டு .

Raja said...

தங்களின் வெற்றிக்கு நான் காரணமாக நினைப்பது
1.உங்களின் ஒரு விஷயம் குறித்த ஆழமான தேடல்
2. அதை எழுத்து வடிவில் இயல்பான நடையில் கொண்டுவருதல்
3.இந்த இரண்டையும் விடாமல் செய்தல்

வாழ்த்துக்கள் அண்ணா

ஜோதிஜி said...

அரசியல்வாதிகள் தான் என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்கிறார்கள். நாம் அப்படி வாழ்ந்தால் என்ன? என்று நினைத்ததோடு இல்லாமல் செயல்படுத்தியும் உள்ளேன். உங்களின் சென்ற பதிவு விமர்சனம், இந்த விமர்சனத்தின் மூலம் எந்த அளவுக்கு (சு)வாசித்திக் கொண்டு வருகின்றீர்கள் என்பதே எனக்கு கொஞ்சம் பெருமையாக உள்ளது கிருஷ்ணமூர்த்தி. நீங்கள் எழுதி உள்ளது போல அமுதவன் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கினறார்கள் என்ற பதிவுக்கு கொடுத்த அவரின் விமர்சனமும் எனக்கான ஒரு அங்கீகாரம். நன்றி.

ஜோதிஜி said...

நீங்க சொன்ன தேடலுக்கு நிச்சயம் மீண்டும் ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டு மீண்டும் வருகின்றேன், 49 வருடத்திற்கு முன்பு பல எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் சமீபத்தில் என் கைக்கு வந்தது. என்னால் படிக்கவோ அதை உள்வாங்கவோ முடியவில்லை. காரணம் மனதளவில் எந்த அளவுக்கு மாறியுள்ளோம் என்பதான சமூக சூழ்நிலை எனக்கு பலவற்றையும் உணர்த்தியது. இப்போது கூட இந்த தளத்தில் உள்ள பல பழைய பதிவுகள் சில விவாதங்களில் சுட்டிக்காட்டப்படுவதைப் பார்க்கின்றேன். சரியோ? தவறோ, என்னளவில் எனக்குத் தெரிந்த புரிந்த விசயத்தை நீங்க சொன்ன மாதிரி எளிமையைப்படுத்தி எழுதி வைத்துள்ளேன். தேடல் உள்ளவர்களுக்கு ஏதோவொரு சமயத்தில் பயன்படக்கூடும்.

phantom363 said...

while my copy of dollar nagaram is waiting for me to be picked up in chennai (jan 5), i would like to congratulate you, not only for the high quality but frank/fascinating output from you. it has become a part of my daily routine and on those days when there is none, the day does not feel complete. that much being said, i am hoping that you will be working on your next book soon. in today's cyber world, i am as close to you, as your neighbour in tiruppur. for me, in my 60s, who left india in 1973, and who missed the entire tamil phenonmena of 1970s through 1990s, internet is a blessing beyond what any words can express. people like you of the new generation, are a gift to me, which i cherish dearly. what i like about you, is not only your keen sense of observation, but the fairness and empathy, that goes along with it. keep good health and mind. God Bless.... rajamani

ஜோதிஜி said...

உங்கள் வார்த்தைகளை வாசித்த போது உண்டான மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஆனால் நீங்க மட்டுமல்ல. இங்கே வீட்டில் குழந்தைகளுடன் உண்டான பிரச்சனைகள், மகிழ்ச்சி, முரண்பாடு, வாக்குவாதம் போன்றவற்றை பார்க்கும் போது எனக்கும் வயசாகிவிட்டதோ என்று தான் நினைத்துக்கொள்கின்றேன். மிக்க நன்றிங்க.

GANESAN said...

எழுதுவதை நிறுத்த வேண்டாம் .தொடருங்கள் உங்கள் எழுத்துக்கள்தான் உங்கள் சந்ததியருக்கு உங்களை பெருமை கொள்ள வைக்கும் என்பது என் அபிப்பிராயம் .ஆமாம் . எப்படி நேரம் கிடைக்கிறது ? பொறாமையாக உள்ளது

எம்.ஞானசேகரன் said...

மிகச்சரியான சுய அலசல். இதில் பெருமிதமும் கர்வப்படவும் காரணங்கள் பல. குறிப்பாய் உழைப்பு. சலிக்காத உழைப்பு. எழுத்துக்கள் பல பொக்கிஷமாய் பாதுகாக்கப்பட வேண்டியவை. இணையத்தில் ஏறிவிட்டதால் இனி அதற்கு அழிவில்லை என்றே கொள்ளலாம். பல நேரங்களில் உங்கள் பதிவுகளுக்கு விரிவாய் பதிலோ விமர்சனமோ அல்லது அதுகுறித்த எனது கருத்துக்களை பதிவாகவோ எழுதலாம் என்ற எண்ணம் மேலோங்கும். ஆனால் சூழ்நிலையும், உடல்நலமும் குறுக்கே வந்துவிடுகிறது. குறிப்பாய் என்னத்த எழுதி என்னத்த பண்ண...? என்ற சலிப்பும் வந்துவிடுகிறது. ஆனாலும் உங்கள் அபார வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப் பட்டாகிலும் எழுத முயற்ச்சிக்கிறேன். வாழ்த்துக்களுடன்...

ஜோதிஜி said...

எல்லோரும் எப்போதும் கேட்ட கேள்வி தான். தொடக்கத்தில் தூங்கும் முன் பலரும் தங்களது டைரியில் எழுதும் பழக்கத்தில் இருந்தவர்கள் தானே? நேரம் என்பது நாம் எந்த செயலில் ஈடுபடுகின்றோம்? அந்த செயலில் எந்த அளவுக்கு ஆர்வமாக உள்ளோம் என்பதைப் பொறுத்தே உள்ளது என்றே நினைக்கத் தோன்றுகின்றது. மற்றபடி இதனால் என்ன பிரயோஜனம்? என்று ஒவ்வொரு செயலையும் நினைத்துப் பார்த்து செயல்பட்டால் விரைவில் அலுப்பு வந்து விடும்.

நன்றி கணேசன்.

ஜோதிஜி said...

தொடர்ந்து எழுதுங்கள். உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் கூட ஏதோவொரு சமயத்தில் உங்கள் எழுத்துக்களை வாசிக்க வாய்ப்பு கிடைக்கும் அல்லவா? வெளிப்படையான விமர்சனத்திற்கு நன்றி.

தி.தமிழ் இளங்கோ said...

உங்களுக்கு நீங்களே கிள்ளிக் கொண்ட மாதிரி தெரிகிறது. என்னதான் நாம் திட்டம் போட்டாலும், நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறது. வேறொருவர் எழுதிய பிறகு, நாமும் இந்த பொருளில் எழுதியிருக்கலாமோ என்று நினைப்பதை விட, எழுத நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுங்கள். எனக்கு இதுமாதிரி அடிக்கடி நேரும்.

// ஆனால் இனி குறிப்பிட்ட காலம் வரைக்கும் இணையத்தை விட்டு விலகியிருக்க வேண்டும் என்று நினைத்துள்ளேன். விரைவில் இடைவேளை ஆரம்பம்.//
உங்களால் அப்படி இருக்க முடியாது.

முதன் முதல் உங்களுடைய “தேவியர் இல்லம்” என்ற தலைப்பைப் பார்த்ததும் ஆன்மீகப் பதிவு என்றுதான் எண்ணினேன். அதன்பிறகு நான் படித்தவற்றுள் ஒன்றான எஸ் எஸ் வாசன் அவர்களது பொன்மொழி உங்கள் தள முகப்பில் இருக்கவும் வந்து சேர்ந்தேன்.


ஜோதிஜி said...

சென்ற வருடம் கடைசி ஆறு மாதங்களில் தான் எழுதினேன். நீங்கள் மட்டுமல்ல அறிமுகமான பலரும் தொடர்பு எல்லைக்குள் வந்த பிறகு என் தளம் குறித்து சொன்ன போது பாதி சிரிப்பு. பாதி திகைப்பு.

ஏதோ ஆசிரமம் சார்பாக எழுதுறீங்க என்றே நினைத்தேன் என்றார் ஒருவர். இது போல பல. தற்போது மாறிக் கொண்டிருக்கும் தமிழ்மொழி, தற்போது பயன்பாட்டில் உள்ள பாதி ஆங்கிலம் பாதி தமிழ் என்ற விளம்பரங்களில் பயன்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ், தொலைக்காட்சிகளில் பயன்பட்டுக் கொண்டிருக்கும் கொலைத் தமிழ், நீங்க எழுதிய அரிக்கேன் விளக்கு இது போல பலவற்றையும் நினைத்து வைத்ததுண்டு. ஒருமித்த சிந்தனைகள் யாரோ மற்றொருவரின் மனதில் உதிப்பது கண்டு வியந்துள்ளேன். இந்த பதிவு எழுதியதற்குக் காரணம் இத்துடன் இரண்டு பதிவுகள் எழுதும் பொருட்டு மட்டுமே. விரைவில் உங்களுக்கு புரியும். நன்றி.

'பரிவை' சே.குமார் said...

உண்மையான வயதை சொல்லவதற்கு அவர் பயப்படவில்லை போல ஜோதி அண்ணா.

கிரி said...

வாழ்த்துகள் ஜோதிஜி. தொடர்ந்து சிறப்பாக எழுதுங்கள் :-) சினிமா பற்றி எழுதாத சிலரின் நீங்களும் ஒருவர் :-) இப்படியே இருங்க.