Friday, October 04, 2013

நம்ப முடியாத இந்தியாவின் வளர்ச்சி -- ஆனால் இன்று?

திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு சார்பாக , இந்திய பொருளாதாரம் - இன்றும் நாளையும் - கருத்தரங்கம் - திரு. எஸ். குருமூர்த்தி அவர்களின் சிறப்புரை (02.10.2013)நடந்தது-

இந்தியாவின் பொருளாதாரத்தைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ள இந்த பேச்சு உங்களுக்கு உதவக்கூடும்.


15 comments:

Yaathoramani.blogspot.com said...

தெளிவைத் தரும் காணொளி
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

'பரிவை' சே.குமார் said...

பகிர்வுக்கு நன்றி அண்ணா...

இராய செல்லப்பா said...

"இன்றைய பொருளாதார சுனாமியில் நமது நாடு எவ்வாறு முன்னேறமுடியும் என்பது நமது அறிவுஜீவிகளுக்கே தெரியவில்லை என்பது தான் பரிதாபம்" - என்ற திரு. குருமூர்த்தியின் கருத்தை மறுக்க முடியும் என்று தோன்றவில்லை. படித்தவன் சூதும் வாதும் செய்தால் (சாதாரண மனிதன்) ஐயோவென்று போவான் - என்று பாரதியும் சொல்லிப்போனாரே! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

sasero said...

ரீல் விடறார்.. இறக்குமதி தவிர்க்க முடியாததே
மீண்டும் வண்டி மாடு கமலை கிடங்கு உழவு மாடு ரோடு ரோலர் பழைய அம்பாசடர் இன்லண்ட் லெட்டெர் தந்தி என பழைய போர்முலாவுக்கு போகச்சொல்ஹிறார் போல,,,

vishwa said...

Informative -Thanks for sharing.

எம்.ஞானசேகரன் said...

காணொளியைக் காண முடியவில்லை. காரணம் என்னுடைய இணைய இணைப்பின் வேகம் போதவில்லை. ஆனால் குருமூர்த்தியின் பல கட்டுரைகளை துக்ளக்கில் வாசித்ததுண்டு.

வவ்வால் said...

தொழிலதிபரே,

//இந்தியாவின் பொருளாதாரத்தைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ள இந்த பேச்சு உங்களுக்கு உதவக்கூடும்.//

ஹி...ஹி இப்படியான குருட்டு நம்பிக்கையில் இருந்தால் 600 வார்த்தைகளில் உருப்படியாக எந்தகாலத்திலும் எழுத முடியாது :-))

உணர்ச்சிப்பூர்வமாக மேடைப்பேச்சு பேசிவிட்டு, கட்சி சார்பில் பெரிய தொழிலதிபர்களோடு பேசிப்பழகி வருபவரை எல்லாம் பொருளாதார நிபுணர் என கொண்டாடலாம் என்றால் ,தலப்பாக்கட்டு மன்னு இவரை விட பெரிய பொருளாதார நிபுணர்னு கொண்டாடலாம் :-))

ஜோதிஜி said...

அ பே தலைவரே

இவரைப்பற்றி திருப்பூரில் டீக்கடைப் பெஞ்சு என்று குழும மின் முகநூல் வட்டத்தில் நான் எழுதிய கருத்தை உங்கள் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்.

பன்னாட்டு நிறுவனங்களின் ஆலோசகராக இருந்து கொண்டு இந்திய பொருளாதாரத்தைப்பற்றி கவலைப்படுபவர்.

ஆனால் இந்த பேச்சு என்னைப் பொறுத்தவரையிலும் மிக முக்கியமானது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா பெற்று இருந்த வளர்ச்சி, ஏன் வீழ்ச்சி உருவானது? எங்கே தப்பு செய்தோம்? என்ன காரணம்? போன்றவற்றை இதை விட வேறு எவரும் சிறப்பாக சொல்லிவிட முடியாது.

என்னை செய்வது? நந்தவனம் சொல்வது மாதிரி நீங்க மட்டும் புத்திசாலியா இருந்தா போதாது? ஒவ்வொருவரும் கொஞ்சமாவது (எங்களைப் போன்றவர்கள்) புத்தியோடு யோசிக்க வேண்டாமா? என்பதற்காக மட்டுமே இங்கே பதிவாக போட்டு வைத்தேன்.
நீங்க டாக்ட்ரேட் பட்டம் வாங்கியவர். இதையெல்லாம் பெரிசா எடுத்துக்கப்படக்கூடாது.

ஜோதிஜி said...

நேரம் கிடைக்கும் போது கேட்டுப் பாருங்கள்.

ஜோதிஜி said...

திருப்பூர் நண்பர்களுக்குத் தான் உங்கள் நன்றியைச் சொல்ல வேண்டும்.

ஜோதிஜி said...

நீங்க தலைகீழா புரிஞ்சுக்கிட்டீங்க நண்பா. அவர் சொல்வது சுய பொருளாதாரக் கொள்கைகளை வளர்ப்பதும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதும். நம்மவர்கள் ஈ அடிச்சான் காப்பி போலமேலை நாட்டு பொருளாதாரக் கொள்கைகள் தான் நம் நாட்டுக்குச் சிறந்தது என்பதை சாடியுள்ளார்,

ஜோதிஜி said...

உண்மை தான். இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பின்பு இந்தியாவில் உருவான பொருளாதார மாற்றங்கள் வளர்ச்சி என அனைத்தும் இங்கே உருவாக காரணமாக இருந்தது தனி மனிதர்களின் மகத்தான் உழைப்பே.

ஜோதிஜி said...

குமார்இது போன்ற பேச்சுக்களை நீங்கள் அவசியம் கேட்க வேண்டும்.

ஜோதிஜி said...

உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி.

Paramasivam said...

அருமையான காணொளி. சேமிப்பின் முக்கியம் இன்றைய இளைய சமுதாயம் அறிய வேண்டிய ஒன்று என்றும் விவசாயம் தொடர்ந்து செய்யப்பட வேண்டும் என்றும் இந்திய பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெரும் என நம்பிக்கை ஊட்டும் காணொளி. இந்தியாவின் ரூபாய் வீழ்ச்சிக்கு உண்மையான காரணம் உற்பத்தியற்ற இறக்குமதி தான் என்பதை நான் ஒரு கட்டுரையில் MINT பத்திரிக்கையில் படித்து உள்ளேன். மன நிறைவை தந்த பதிவு. பகிர்வுக்கு மிகவும் நன்றி. --- பரமசிவம்.