Sunday, March 07, 2010

சிவராசன் தணு மற்றும் பலர்

ராஜீவ் காந்தி படுகொலைக்கு செயல்பட்ட குழுவிற்கு தலைமை தாங்கிய சிவராசனின் உண்மையான பெயர் பாக்கிய சந்திரன்.  யாழ்பாணத்தில் உடிப்பிடியைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஆங்கிய வழிக்கல்வி பள்ளிக்கூடத்திற்கு ஆசிரியராக இருந்தவர்.  இவரின் சகோதரர் பெயர் ரவிச்சந்திரன்.  இவர் புலிகள் இயக்க மாணவர் பிரிவில் செயல்பட்டுக் கொண்டு இருந்தவர்.ரவிச்சந்திரனின் மற்றொரு பெயர் தில்லை அம்பலம் சுதந்திர ராஜா. 

இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த போது அவர்களால் இந்த ராஜா பிடிபட்டு சிறைக்குச் சென்றவர். சிவராசன் இலங்கையின் மின்வாரியத்தில் மட்டக்களப்பில் பணிபுரிந்த அரசு ஊழியர்.  முதலில் தான் ஈடுபட்டுருந்த டெலோ இயக்கத்தில் இருந்து விலகி விடுதலைப்புலிகளின் இயக்கத்திற்கு வந்தவர்.  தொடக்கத்தில் இந்தியா போராளிக் குழுக்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கிய போது அதில் பயிற்சி எடுத்தவர்களில் இவரும் ஒருவர்.

இலங்கை ராணுவத்தினருடன் (1987) போரிட்ட போது தனது ஒரு கண்ணை இழந்து பின்னாளில் ஒற்றைக்கண் சிவராசன் என்றும் பாக்கியசந்திரனின் சுருக்கமான பாகி அண்ணா என்று இயக்கத்தில் அழைக்கப்பட்டவர். புலனாய்வு பக்கங்களில் சிவராசன் என்ற ரகுவரன் என்ற பெயரைப்பெற்றவர். தொடக்கத்தில் விடுதலைப்புலிகளின் இராணுவ பயிற்சி பெற்று பின்னாளில் பொட்டு அம்மான் தலைமையில் இருந்த உளவுப் பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்திய அமைதிப்படை முழுமையாக படை விலகி இந்தியாவிற்கு திரும்பத் தொடங்கிய 1990 பிப்ரவரி மாதத்தில் சிவராசன் வழிகாட்டலின்படி சுதந்திர ராஜா குருவி பயணத்தின் மூலம் சென்னை வந்து கோடம்பாக்கத்தில் உள்ள தொழிற் நுட்ப கல்லூரியில் சேர்ந்தார். 

இந்தக் கல்லூரியும் இலங்கைத் தமிழரால் நடத்தப்பட்டுக்கொண்டுருந்தது. அருகே உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இருந்தவர்கள் பத்பநாபா தலைமையில் இருந்த ஈபிஆர்எல்எப் அலுவலகம் இயங்கிக் கொண்டுருந்தது. சுதந்திர ராஜாவிற்கு கொடுக்கப்பட்ட வேலை என்பது EPRLF அலுவலகம் செல்வது, அவர்களுடன் பழகுவதும், அவர்களின் நம்பிக்கையை பெற்று அவர்களின் ஒரு நபராக மாறியிருப்பது மட்டுமே. கொடுக்கப்பட்ட உத்திரவின்படி மிகத் தெளிவாக நடந்து அங்கிருந்தவர்களின் நம்பிக்கையும் ராஜா பெற்று இருந்தார். 

ஜுன் மாத இறுதியில் EPRLF பத்மநாபா யாழ்பாண பாராளுமன்ற உறுப்பினர் யோக சங்கரியுடன் சேர்ந்து சென்னையில் கூட்டம் நடத்தப் போவதை ராஜா இலங்கையில் இருந்த சிவராசனிடம் தெரிவிக்க கடற்புலி குழுவினருடன் சென்னைக்கு வந்து, திட்டமிட்டமிட்டபடி உள்ளே வெடிகுண்டு, ஏ.கே.47 உடன் நுழைந்து 13 பேர்களை கொன்று அழித்தனர்.  அப்போது வீசி எறிந்த வெடிக்காத ஒரு குண்டும் சிதறிக்கிடந்த சிதறல் வெடிகுண்டுகளின் மிச்சமும் என்று அங்கு கிடைத்த வெடிகுண்டுகளின் உள் கட்டமைப்பும் ராஜீவ் காந்தி புலனாய்வுக்கு சிறப்பான முறையில் உதவியது.

அப்போது திமுக அரசாங்கம். படுகொலை சென்னையில் நடந்த போது கலைஞர் தில்லியில் இருந்தார்.  பாதிக்கப்பட்டது முழுக்க முழுக்க அவர் மட்டுமே, இதையே காரணம் காட்டித்தான் கவர்னர் ஒப்புதல் இல்லாமலே அவருடைய ஆட்சியும் பிறகு கலைக்கப்பட்டது. இவர்களின் காரியம் முடிந்ததும் தப்பிச் செல்ல பயன்படுத்திய அம்பாசிடர் கார் பாதியில் மக்கர் செய்ய சாலையில் வந்த மாருதி ஆம்னியை மிரட்டி கைப்பற்றி மல்லிப்பட்டினம் சென்று ஒரு நாள் உண்டு உறங்கி ஓய்வெடுத்து மறுநாள் இலங்கைக்கு பயணப்பட்டனர். இடையில் மறித்த காவல்துறை அன்று அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.  அன்றைய அரசாங்கத்தின் இலங்கை தமிழர் ஆதரவு என்ற கொள்கை அந்த அளவிற்கு இவர்களுக்கு பயன்பட்டது.
தமிழ்நாட்டில் இருந்து கிளம்பி இலங்கை சென்றவர்களுக்கு கிடைத்த பாராட்டைப் போலவே சிவராசன் மேல் அப்போது தான் பிரபாகரனின் முதல் நம்பிக்கை பார்வை உருவானது. இதன் தொடர்ச்சியாகத் தான் சிவராசனிடம் ராஜீவ் காந்தி பொறுப்பு பொட்டு அம்மான் மூலம் ஒப்படைக்கப்பட்டது. 1991 ஏப்ரல் 28 அன்று மதகல் என்ற இடத்தில் பொட்டு அம்மான் தலைமையில் குழு ஒன்று கூடியது. அப்போது பெண்புலிகளின் தலைவியான அகிலா மூலம் சுபா, தணுவை அழைத்து வந்து நடந்த  கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.  ஆனால் அன்றே அவர்கள் இந்தியாவிற்கு வந்து சேர முடியாத பயணத் திட்ட மாற்றத்தால் மொத்த குழுவினர்களும் ஏப்ரல் 30 அன்று கோடியக்கரை வந்து சேர்ந்தனர். இந்தியாவிற்கு வந்த சிவராசன் இந்த பொறுப்புக்கு சுதந்திர ராஜாவையே(இவருக்கு வேறு பெயர்களும் உண்டு) உதவியாளராக வைத்துக்கொண்டு மே 1 முதல் அடுத்த 20 நாட்கள் வேலைக்காக திட்டமிடத் தொடங்கினர். சிவராசன் பற்றிய மொத்த விசயங்களும் புலானய்வு குழுவினர் திரட்டியது உயிருடன் பிடிபட்ட இந்த ராஜா மூலமே.

விடுதலைப்புலிகளுக்கு தொடக்கம் முதல் எல்லாவகையிலும் உதவிக்கொண்டுருந்தவர் கோடியக்கரையில் இருக்கும் மிராசுதார் சண்முகம். கடற்கரையோரப் பகுதியில் ஒரு தனி கடத்தல் சாம்ராஜ்யத்தையே வைத்து ஆண்டு கொண்டுருந்தவர்.இவருடைய மாமனாரும் இதே தொழில் தான். விடுதலைப்புலிகளுக்கு தேவையான பெட்ரோல்,டீசல் எரிபொருட்கள் முதல் இயக்கத்திற்கு தேவைப்படும் அத்தனை பொருட்களையும் தன்னுடைய அளப்பரிய இலங்கைத்தமிழர் சேவை மற்றும் பணம் சார்ந்த ஆசையினால் பக்க பலமாக இருந்தவர். இவர் ஆளுமையில் இருக்கும் பகுதியில் மக்கள் உள்ளே செல்லவும் அஞ்சுவார்கள்.  காவல் துறையும் அந்த அளவிற்கு உள்ளே செல்ல முடியாத அளவிற்கு அவருடைய செல்வாக்கு கொடி கட்டி பறந்தது. விடுதலைப் புலிகளின் நீண்ட கால திட்டம் என்றால் அகதியாக இராமேஸ்வரம் வந்து தங்களை பதிவு செய்து கொண்டு உள்ளே இருந்து களப்பணி ஆற்றுவதும், வந்து போவது என்றால் கோடியக்கரை முதல் இராமேஸ்வரம் இடையில் உள்ள அத்தனை கடற்கரையோரப்பகுதிகளும் அவர்களின் ஆளுமையில் 1983 க்குப்பிறகு இருந்தது வந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இரண்டு அல்லது மூன்று யமஹா என்ஜின் பொருத்தப்பட்ட பைபர் ஆப்டிக் படகு என்பதும் அதன் உந்து விசை என்பதும் ஏறக்குறைய ஓலியைப் போலத்தான். தண்ணீரை கிழித்துக்கொண்டு வரும் என்பதை விட கண் இமைக்கும் நேரத்தில் மாயமாய் மறைத்து விடும் உயர் தொழில் நுட்பம் உடையது. பொருத்தப்பட்ட என்ஜின்கள் தரும் வேகம் என்பது பறந்து வரும் துப்பாக்கி தோட்டா கூட தோற்று விடும். விடுதலைப்புலிகள் இந்தியாவிற்குள் எளிதாக வந்து போன காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தினரின் எந்த தாக்குதல்களும் இந்திய மீனவர்கள் மேல் நடந்தப்பட்ட கோரச்சாவுகளும் கொடுமையான அனுபவங்களும் மிக மிக குறைவு.  காரணம் அந்த அளவிற்கு இலங்கை கடற்படையினர் தங்களை காத்துக்கொள்வதில் சிறப்பாய் கருத்துடன் இருந்தனர். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட காலகட்டத்தில் விற்பனையான யமஹா மோட்டர்கள் அத்தனையும் விடுதலைப்புலிகளால் தனித்தனியாக கழற்றி தங்களுக்கு தேவையான பாகங்களை மட்டும் எடுத்துக்கொள்வதும் திருச்சியின் சுற்றுவட்டார கிராமப்புற விவசாயிகளிடம் அந்த மாவட்ட மொத்த விற்பனையாளர்கள் வியப்புடன் வந்து விசாரித்தது வரைக்கும் இதற்கு பின்னால் பல கதைகள் உண்டு. தொடக்க காலத்தில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கொடைக்கானல் பகுதியை தங்களின் பயிற்சிக்காக தேர்ந்தெடுக்க வேண்டிய எண்ணம் என்பதைப் போல மற்ற அத்தனை மாவட்டங்களிலும் விடுதலைப்புலிகளுக்காக பணிபுரிந்தவர்கள் பல பேர்கள் உண்டு. குறிப்பாக தொழில் நகரங்கள் அவர்களுக்கு பல விதங்களிலும் உதவியது.

கோடியக்கரை என்பது அவர்களுக்கு மற்றொரு யாழ்பாணம் அல்லது வன்னிப்பகுதி.அடுத்த மூன்று மாதங்கள் அல்லது குறிப்பிட்ட காலகட்டம் வரைக்கும் தேவைப்படும் அத்தனை பொருட்களும் கோடியக்கரை சதுப்பு நில பூமிக்கடியில் உள்ள பாதுகாப்பு பகுதியில் பாதுகாக்கப்படும். இலங்கையில் நடக்கும் சூழ்நிலை பொறுத்து ஒவ்வொன்று அதன் பயணத்தை தொடங்கும். உலக சந்தையில் ஆயுத தளவாடங்கள் கொள்முதல் செய்து பிரபாகரனுக்கு நம்பிக்கையாக இருந்த கேபி என்றழைக்கப்பட்ட நிழல் மனிதர் கூட கடைசி காலத்தில் பிரபாரகன் நம்பிக்கை இழந்து போய் வேறு நபருக்கு அந்த பொறுப்பை மாற்றியது கூட நடந்தது.  ஆனால் இந்த சண்முகம் புலனாயவு குழுவினர் வந்து சுற்றி வளைத்த போது, வேறு வழியே தெரியாமல் தன்னுடைய மாமனார் திட்டிய திட்டலை பொறுக்க முடியாமல், தேச துரோகம் செய்து விட்டாயே என்று பேசிய பேச்சில் காவல்துறையினரிடம் இருந்து தப்பித்து ஓடும் போது அருகில் கிடைத்த கயிற்றை பயன்படுத்தி மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு சாவது வரைக்கும் விடுதலைப்புலிகளின் மொத்த நம்பிக்கையையும் பெற்று இருந்தார் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

முக்கிய காரியங்கள் மற்றும் கொள்முதல்களுக்காக முதன் முதலாக  கோடியக்கரைக்குத் தான் வருவார்கள். வருவதற்கு முன்பே அவர்கள் விரும்பியது தயாராய் இருக்கும். வருவதும் போவதும் தெரியாது. இதைப் போலத் தான் இயல்பாக அன்று கரைக்கு வந்து சேர்ந்தவர்கள் ராஜீவ் காந்தியின் திட்டத்திற்கு வந்தவர்கள் என்று சண்முகத்திற்கே தெரியாது.  காரணம் விடுதலைப்புலிகள் சார்பாக இவர்களுக்கு முன்பே சென்னையைத் தளமாக வைத்துக்கொண்டு உள்ளே பல்வேறு குழுக்கள் இயங்கிக்கொண்டுருந்து. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி.  அச்சகப் பணி,உளவு,அரசியல், முதல் அச்சத்தை தரும் வெடிகுண்டுகளுக்குத் தேவையான மூலப்பொருட்களை கோர்ப்பது , முழுமையாக வெடிகுண்டுகளாக கொண்டு போவது வரைக்கும்.

கோயமுத்தூரில் ஒரு சாதாரண லேத்தை வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையாக மாற்றி நீண்ட நாட்களாக வைத்து இருந்ததும் பிறகு தான் கண்டு பிடிக்க முடிந்தது.  இயக்கத்தின் முக்கிய கொள்கை என்பதும் கடைசி வரையிலும் கடைபிடித்த லட்சியமும் என்பதும் எந்த முக்கிய காரியமும் நடந்து முடியும் வரைக்கும் அதன் மொத்தமும் தெரிந்தவர்கள் பிரபாகரன், பொட்டுஅம்மான் இறுதியாக பங்கெடுக்கும் நபர்கள்.  இதைத்தான் பலமென்று கடைசி வரைக்கும் பிரபாகரன் நம்பினார். இயக்க உளவுத்துறை என்றாலும் அவர்களிலும் பிரிவு உண்டு.  பிரிந்து செயல்படுபவர்கள் அவர்களின் பணி என்பது உத்தரவை நிறைவேற்றுவது மட்டுமே. ஏன் ? எதற்காக? என்பது இவர்களின் சாவின் வாசலில் நிற்கும் போது கூட தெரியுமா என்பது சந்தேகமே? அதற்கு மேல் பிரபாகரனை சந்தித்து இருப்பார்களா என்பதும் அதை விட ஆச்சரியம்.  முதல் கட்டம் என்பது பிரபாகரன் என்ற ஒரு நபர் மட்டுமே.  இரண்டாம் கட்டத்தில் அரசியல் குழு, உளவுக்குழு, திட்டமிடுதல்,செய்தி தொடர்பு பங்கேற்பாளர்கள் போன்ற பல பேர்கள். இரண்டாம் கட்டத்தில் உள்ளவர்களிலும் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பிரபாகரனை சந்திக்க முடியும்.  இது வணங்கத்தக்க உருவமாக வைத்திருந்தார்களா இல்லை வகைதொகையில்லாமல் நிறைந்துள்ள எதிரிகளிடம் இருந்து தங்கள் தலைவரை காக்க உருவாக்கினார்களா என்பது நினைத்துப் பார்க்க முடியாத அதிசயம்.  இந்த செயல்பாடு பல விதங்களிலும் பிரபாகரனை பாதுகாக்க உதவினாலும் பல தவறான புரிதல்களின் தொடக்கமும், சர்வதேச சமூகத்திடம் நெருங்க முடியாத அளவிற்கும் பிரபாகரனை ஒதுக்கி வைத்திருந்ததும் உண்மை. கடைசிகட்ட போரின் போது இந்தியாவில் உள்ள வட நாட்டு ஊடக மக்கள் அத்தனை பேர்களும் ராஜபக்ஷே ஊதுகுழல் போல் ஒருங்கே நின்றதற்கு பல காரணங்களில் இதுவும் ஒன்று.  அனிதா பிரதாப்பிற்கு கிடைத்த வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கமாகக்கூட இருந்துருக்கலாம். பரபரப்பை மட்டும் முதலீடாக வைத்து வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கு வாழ்நாள் முழுக்க படபடப்புடன் வாழ்ந்தவரின் தர்க்க நியாயங்கள் புரியும் என்பதை எப்படி எதிர்பார்க்க முடியும்?

சிவராசனுடன் பயணித்து வந்த குழுவினர் சண்முகத்தின் பிரத்யோக காட்டேஜ்ல் தங்கி ஓய்வெடுத்து விட்டு மறுநாள் சென்னைக்கு வந்து சேர்ந்தனர்.  ராஜிவ் காந்தி படுகொலைக்கு என்று விடுதலைப்புலிகளால் ஓதுக்கப்பட்ட நிதி என்பது வெறும் ஐந்து கிலோ தங்கக்கட்டி மட்டுமே.  அதை விற்றுத்தான் கிடைத்த பணமான 17.25 லட்சம் பெற்று தான் தங்களுடைய காரியங்களை தொடங்கினார்கள். இந்த இடத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் பிரபாகரன் எதிர்பார்ப்பு எப்படியிருக்கும் என்பதை உணர்த்து வைத்திருந்த சிவராசன் தான் செலவு செய்யும் ஒவ்வொன்றுக்கும் தொடக்கம் முதல் குறிப்பேட்டில் எழுதிக்கொண்டு வந்தது.

தொடக்கம் முதல் ராஜிவ் காந்தி படுகொலையை செய்தது நாங்கள் அல்ல, தாக்குதலை நடத்தியவர்கள் இலங்கை தமிழர்கள் அல்ல ராஜிவ் காந்தி மரணம் என்பது வெறும் துன்பியல் சம்பவம் அதற்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று அறிக்கை விடுதலைப்புலிகள் இயக்கம் பல்வேறு விதமாக தங்களின் ஆட்கள் மூலம் தெரியப்படுத்தினாலும் புலனாய்வு குழுவினர் திரட்டிய ஆதாரங்கள் அத்தனையுமே மேலைநாடுகள் கூட நினைத்துப் பார்க்க முடியாதது. பிரபாகரன் தான் வைத்திருந்த சுதேசியான தன்னம்பிக்கை சார்ந்த எண்ணங்களைப் போலவே இங்கும் புலனாய்வுக்குழுவினர் தங்கள் திறமைகளை மட்டுமே வைத்துக்கொண்டு களத்தில் இறங்கினர்.  அந்த தனிப்பிட்ட பங்கெடுத்த ஒவ்வொருவரின் திறமையே அத்துவான காட்டில் நடந்த கோரத்தின் மொத்த பின்ணனியை வெளி உலகத்திற்கு கொண்டு வர உதவியது.

உண்ணா நோன்பு இருந்து இறந்து போன தீலீபன் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் யாழ்பாணத்தில் உடுப்பிடி என்று சிறிய ஊரில் நடந்த போது அதில் இரண்டாவது நபராக பேச அழைக்கப்பட்டவர் பாகி என்ற பாக்யசந்திரன் என்ற சிவராசன். அவர் அப்போது தோளில் தொங்கிய துப்பாக்கியுடன் பேசியது

" எனக்குப் பேச தெரியாது. பேசிப் பழக்கமில்லை.  நாம் பேசிப்பேசியே இதுவரை காலத்தை வீணடித்து விட்டோம்.  எனவே பேச்சில் நாம் நம்பிக்கை இழந்து விட்டோம்.  ஆகவேதான் ஆயுதங்களை கையில் ஏந்தி இருக்கிறோம். ஆயுதப் போராட்டத்தின் மூலம் மட்டுமே நாம் வளர முடியும்.  இந்தியாவை நாம் நம்பி இருந்தால் எப்போதே நம்மை அழித்து இருப்பார்கள். நம் கனவு நனவு ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை "

இந்த ஒலி ஒளி நாடா என்ற வலுவான ஆதாரம் கைக்கு கிடைக்கும் வரைக்கும் தொடக்கம் முதல் குழப்பான நிலையில் பயணித்த பயணமென்பது ஒவ்வொன்றும் கோர்த்து மாலையாக மாற்றம் பெற இறுதி வரைக்கும் பல வெற்றிகளையும் வெறியின் மூலத்தையும் காண உதவியது.

இதைப் போலவே மனித வெடிகுண்டாக செயல்பட்ட தணு என்பவரைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ள உதவியது விடுதலைப் புலிகளின் " மண் மீட்பிற்கே உயிர் நீத்த மா வீரர்களின் குறிப்பேடு " என்ற புத்தகத்தின் மூலம் . ஒவ்வொரு வீரர்களின் இறப்பையும், அவர்களைப் பற்றிய குறிப்பும் மிகுந்த பொக்கிஷமாக ஆவணத்தில் ஏற்றும் விடுதலைப்புலிகள் இவரின் இறப்பை இலங்கை ராணுவத்தினருடன் போரிட்ட நாட்களில் உள்ள கணக்கில் கலைவாணி ராஜரத்தினம் என்கிற கேப்டன் அகினோ என்று வரவு வைத்திருந்தனர்.ஆனால் விடுதலைப் புலிகளால் தனிப்பட்ட முறையில் குறிப்புகள் ஏதும் கொடுக்காத போதும் கூட பயிற்சி முடிந்து சீருடையில் கொடி பிடித்து நடை பயின்று வரும் முதல் ஆளாக வந்தவர் இந்த தணு. 

இவர்களின் ராஜீவ் என்ற திட்டத்தின் முறைப்படியான திட்டமிடுதல் என்பது இறுதியில் வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கை மனதிற்குள் இருந்தாலும் அந்த திட்டமிடுதல் எந்த அளவிற்கு இருந்தது என்றால் ராஜீவ் காந்தி கூட்டத்திற்கு ஒத்திகை என்பதாக தன்னை ஒரு பத்திரிக்கையாளராக உருமாற்றிக்கொண்டுருந்த சிவராசன் விபி சிங் (1991 மே 7)கூட்டத்தில் முதல் வரிசையில் அமர்ந்து இருந்ததை பிறகு பார்த்து கண்டு பிடித்தனர். காரணம் சென்னையில் நடந்த அந்தக் கூட்டத்தை ஒரு பத்திரிக்கையாளர் முழு படமாக எடுத்து இருந்தார். அதைக் கண்டு பிடித்த போது தான் இதன் திட்டமிடுதலும் அதற்காக இவர்கள் உழைத்த உழைப்பும் புரிந்தது. 

முதலில் ராஜீவ் காந்தியின் மரணம் என்பது டெல்லியில் வைத்து நடத்தப்படுவதாகத் தான் திட்டமிட்டப்பட்டது. ஆனால் அங்கு மொழி, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதில் உள்ள பிரச்சனை, வாகனம் ஓட்டுவதில் உள்ள சாலை போக்குவரத்து சிக்கல்கள் இருந்ததைப் பொருட்படுத்தினாலும் அங்கும் சென்று தொடக்கத்தில் அடிப்படை ஏற்பாடுகளை உருவாகி அங்கேயே ஒரு வயர்லெஸ் தொடர்பு உருவாக்கி அமைக்கும் வரைக்கும் உழைத்தனர்.  அப்போது தினமும் வெளிவந்து கொண்டுருக்கும் தினமணி செய்திகளை பார்த்து இதன் மூலமே ராஜிவ் காந்தியின் அடுத்த கட்ட நகர்வை புரிந்து கொண்டு தமிழ்நாட்டில் உள்ள பிரச்சாரக்கூட்டத்தை மையமாக வைத்துக்கொண்டு காரியத்தில் இறங்கினர். இந்த இடத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க சம்பவம் பொட்டு அம்மான் பொறுத்தவரையிலும் இந்த படுகொலையை தமிழ்நாட்டில் உள்ளவர்களை வைத்து நிறைவேற்றி விடலாம் என்பதும் ஆனால் பிரபாகரன் பார்வையில் வலி பெற்றவர்கள் உருவாக்கும் வலி என்பது தான் சரியாக இருக்கும் என்பதாக ஒரு பெண் மூலம் என்பதை மூலமாக்கினார்.

விடுதலைப்புலிகளிடம் உள்ள பல திறமைகளில் வயர்லெஸ் சாதன தொடர்பு என்பதும் அதில் அவர்கள் கையாண்ட யுத்தி என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.  யாழ்பாணத்தில் பொட்டு அம்மான் கட்டுப்பாட்டில் உள்ள தொடர்பு எண் 91.  சென்னையில் சிவராசன் கட்டுப்பாட்டில் தொடர்பு எண் 95.  இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் 1991 தொடக்கம் முதல் இந்திய உளவு நிறுவனங்கள் மண்டையை பிச்சுக்கொள்ளும் அளவிற்கு சென்னையில் இருந்து வெளியே ஏதோ ஒரு சங்கேத பாஷை அடிப்படையாகக் கொண்டு செய்தி போய்க் கொண்டுருக்கிறது. ஏதோ ஒரு தொடர்பு உள்ளே இருக்கிறது.  ஆனால் இடை மறித்தும் கேட்க முடியவில்லை.  சந்தேக பாஷைகள் கோர்வையாகவும் இல்லை.  எங்கிருந்து போகின்றது என்பதை உணர முடியாமல் கோட்டை விட்டுக் கொண்டுருந்தனர். அந்த அளவிற்கு விடுதலைப்புலிகள் தொழில் நுட்ப அறிவை கரைத்துக் குடித்து கடத்திக் கொண்டுருந்தனர்.  மற்றொரு ஆச்சரியம் சிவராசன் தனியாக தொடர்பு கொண்டுருந்ததைப் போலவே மற்றொரு பணியில் இருந்த அடுத்த குழுவினருக்கும் வேறொரு அலைவரிசை. உத்தரவு ஒருவர். இயங்குபவர்கள் பலர்.  நோக்கம் ஒன்று.  பாதைகள் வெவ்வேறு.  பிரபாகரனுக்கு தனித் தொடர்பு எண் 14.  இது போக அவர் வைத்திருந்த நேரிடையான செயற்கைகோள் மூலம் பேசக்கூடிய கைபேசி பிறகு வந்தது.

இந்த வயர்லெஸ் தொடர்புகளைக்கூட ராஜீவ் மரணத்திற்குப் பிறகு கூட பாதி அளவிற்குத்தான் கண்டு கொள்ள முடிந்தது.  மற்றொரு ஆச்சரியம் இதையும் நடமாடும் வயர்லாஸ் கட்டுப்பாட்டு என்பதான அமைப்பில் வைத்திருந்தனர்.  இது போன்ற தொழில் நுட்பத்தில் ஒரு பிரச்சனை.  தொடர்பு கொள்ளும் போது அருகில் உள்ள வீடுகளில் உள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டுருப்பவர்களுக்கு கர் புர் என்று காட்சி மாறி கத்தத் தொடங்கி விடும். சில சமயம் தெளிவற்ற குரல்கள் கேட்கலாம். ஆனால் முழுமையாக படமும் தெரியாது.  கடத்தும் வார்த்தைகளும் புரியாது. தொடர்பில் வரும் இடைவிடாத சப்தங்கள் சம்மந்தப்பட்ட துறை சார்ந்தவர்களுக்கு இனம் கண்டு கொள்ள வைத்துவிடும்.  பொட்டு அம்மன் பல முறை இவர்களிடம் பகல் நேரத்தில் பயன்படுத்தினால் பொதுமக்கள் இனம் கண்டு கொள்வார்கள். கவனமாக இருங்கள் என்று கூறியிருந்த அறிவுரையையும் மீறி அவசரத்தில் இவர்கள் பயன்படுத்திய போது இவர்களை அறியாமலே புலனாய்வு வலையில் மாட்டத் தொடங்கினர். 

புலன் விசாரணை தீவிரப் பாதையில் வந்து கொண்டுருக்கும் போது ஒவ்வொரு இடமாக மாறிக்கொண்டு தப்பித்து வந்தார்கள். கோயமுத்தூரில்  எல்லைப் பகுதியில் (துடியலூர்)  வீட்டில் இருந்த போது பகல் நேரத்தில் யாழ்பாணத்துடன் தொடர்பு கொண்ட போது ஏற்கனவே புலனாய்வு குழுவினர் சொல்லி வைத்திருந்தபடி மக்கள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் செய்ய அங்கிருந்து கிளம்பும்படி ஆயிற்று. துரத்தல்கள் ஒரு பக்கம்.  தூக்கம் இழந்தாலும் இயக்கத்திற்கு தொல்லை வந்து விடக்கூடாது என்று லட்சிய வேட்கை மறுபக்கம்.

17 comments:

ஈசு தமிழ் said...

ஜெயமோகனின் உலோகம் கதை படித்தீர்களா ?

Anonymous said...

உடிப்பிடியை

உடுப்பிட்டி

ஜோதிஜி said...

படித்தது இல்லை. சிறப்பைச் சொல்லுங்களேன்.

உடுப்பிட்டி. இந்த தவறு என்னுடையதைப் போல பத்திரிக்கைகளில் புத்தகங்களில் உள்ள எழுத்துப்பிழையும் காரணமாக இருக்கலாம். மன்னிக்கவும்.

Thenammai Lakshmanan said...

மிக அருமையாக இருகிறது ஜோதிஜி
வயர்லெஸ் பைஃபர் படகுகள் தளவாடங்கள் அரசியல் திரை மறைவு வேலைகள் என ஈழம் சம்பந்தப்பட்ட எந்த விபரமாக இருந்தாலும் நன்கு ஆராய்ந்து கொடுக்கிறீர்கள் ஜோதிஜி மிகுந்த விஷய ஞானம் கொண்டு எழுதும் உங்கள் ஒவ்வொரு இடுகையும் ஒவ்வொரு ஆவணம் போல சிறப்பாக இருக்கு

ஜோதிஜி said...

உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி தேனம்மை

thiyaa said...

உஷ்.......!

பின்னோக்கி said...

நிறைய தகவல்கள், நிறைய உழைப்பைக் காட்டுகிறது. நடு நிலைமையுடன் எழுதுவது படிக்கத் தூண்டுவதுடன், கட்டுரையின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது.

M.Thevesh said...

தமிழரின் பொற்காலம் மறுபடி மலர்ந்து கோலோச்சக்
கூடிய ஒரு திறமைவாய்ந்த ஒரு இனக்குளுமம் அழிக் கப்பட்டது மொத்த தமிழ் இனத்தின் எதிர்காலத்தையே கேழ்விக்குறியாக்கிவிட்டது.
உலகத்தமிழ்தலைவன் என்ற பட்டத்திற்காக
வருங்காலம் மலரக் கூடிய தமிழரின்
பொற்காலம் கருணாநிதியால் அழிக்கப்
பட்டது கொடுமையிலும் பெருங்கொடுமை. சரித்திரத்தில் கருணாநிதியின் பெயர்
எட்டப்பனாகவே பதியப்படும்.

ஜோதிஜி said...

நன்றி தியா பின்னோக்கி

தவேஷ் உங்கள் வருகையைத்தான் எதிர்பார்த்து இருந்தேன்.

ஜோதிஜி said...

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் இன்னமும் தங்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தேடிவருகின்றன என்றும் இந்த விவகாரம் குறித்து இந்தியாவுடன் இலங்கை பேசியுள்ளது என்றும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமாராவை நேற்று தாம் சந்தித்த போது இதுபற்றி அவரது கவனத்திற்கு கொண்டு வந்ததாக வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

Anonymous said...

//மதகல்//
அந்த இடத்தின் பெயர் மாதகல். மாதகல் ராஜன் என்ற தளபதியால் பெயர் பெற்ற இடமும் கூட.

யமஹா எஞ்சின் கதை புதுசு. இந்தியாவில் நடந்தவற்றைப் பற்றி விபரமாக அறிந்தது குறைவு. இப்படி நடக்கும் என்று தெரிந்தாலும் அங்கிருக்கும் ஒருவர் விளக்கமாகச் சொல்லும் போது கேட்க நன்றாக இருக்கிறது.

Anonymous said...

புலிகளிடம் அதிவேகப் படகு இருந்தது உண்மை தான். ஏழு நிமிடங்களில் இந்தியாவிற்கு வரும் வேகமாம். அதை எங்கள் ஊரில் குருவி போட் என்று சொல்லுவார்கள். கிளாலி கடலில் (யாழில் இருந்து வன்னிக்குப் போக பயன்படுத்திய‌ ஒரு நீரேரி / சிறு கடல்) பயணம் செய்யும் மக்களை சிங்கள இராணுவம் கொன்று குவிக்கிறது என்பதால், புலிகளுடைய குருவி படகுகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும். நீங்கள் சொன்னது போலவே இந்தப் படகுகள் வேகமானவை. சின்ன வயதில் ஒரு முறை இந்த கிளாலி கடலில் பயணம் செய்த போது பார்த்திருக்கிறேன். சட்டென எங்களுக்கருகே தோன்றிய படகு அடுத்த நொடியே மறைந்துவிட்டது. அதன் பின்னர் அந்தப் படகைப் பார்க்க இரவு முழுவதும் தூங்காமல் முழிந்திருந்து பார்த்தோம். அந்த நீண்ட பயணத்தில் பல தடவைகள் அந்தப் படகுகள் தோன்றி மறைந்தன. ஒரு சிலவற்றில் இரண்டு போராளிகள் இருந்தார்கள். சிலவற்றில் ஒருவர் மட்டுமே நின்றபடி ஓட்டியதைக் கண்டோம். அந்த ஒரு நொடியில் தெரிந்த ஒரு சில உருவங்கள் என் மனதில் இன்றும் பசு மரத்தாணி போல இருக்கிறது. எனக்கு வரையும் திறமை இருந்தால் அந்த போட்டையும் போராளியையும் வரைந்திருப்பேனே என்று இன்றும் புலம்புவேன். அந்தக் காட்சி உலகின் உன்னதமான படைப்பாக வந்திருக்கும். அப்படியான ஒன்று. பொய் இல்லை.

Anonymous said...

//கோடியக்கரை//
இராஜராஜன் காலத்தில் இருந்து இன்று வரை ஈழத்துடன் தொடர்பு பட்ட இடமல்லவா? ஒரு முறை போய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆசை பலகாலமாக மனதில் இருக்கிறது.

சண்முகத்தைப் போலவே பலர் தங்கள் உயிர்களைக் கொடுத்து இரகசியங்களைக் காத்திருக்கிறார்கள். அவர்களுக்காக இரண்டு துளி கண்ணீரையே விடும் நிலையில் இருக்கிறோம்.

//இது வணங்கத்தக்க உருவமாக வைத்திருந்தார்களா இல்லை வகைதொகையில்லாமல் நிறைந்துள்ள எதிரிகளிடம் இருந்து தங்கள் தலைவரை காக்க உருவாக்கினார்களா என்பது நினைத்துப் பார்க்க முடியாத அதிசயம். //

கண்டிப்பாக எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கவே என்று சொல்லுவேன். தலைவருடைய காரோட்டியில் இருந்து மெய்பாதுகாப்பாளர் வரை மாத்தையாவினுடைய ஆட்களாக மாறி கொலை செய்ய முயன்ற போது அவரால யாரை நம்பி இருக்க முடியும். இது நடந்தது 92/3 என்று நினைக்கிறேன். நாங்கள் மிகவும் சின்னப் பிள்ளைகள். வீட்டில் பெரியவர்கள் பேசும் போது ஒட்டுக்கேட்டவையே அவை. எப்படித்தான் அவரால் நிம்மதியாக நித்திரை கொள்ள முடிந்ததோ தெரியாது. சாப்பாட்டில் விசம் வைத்து கொல்ல முயன்றார்களாம். பாத்ரூம் போய்விட்டு வெளியே வரும் போது கொல்ல முயன்றார்களாம். வாகனத்தில் பயணம் செய்யும் போது கொல்ல முயன்றார்களாம். இதை எழுதும் போதே என் கைகள் நடுங்குகின்றனவே. எப்படித் தான் அவரது குடும்பம் தாங்கிக் கொண்டதோ தெரியாது. இதில் அவருடைய பிள்ளைகளைக் கூட கொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள்.

Anonymous said...

//இங்கும் புலனாய்வுக்குழுவினர் தங்கள் திறமைகளை மட்டுமே வைத்துக்கொண்டு களத்தில் இறங்கினர். //
டிஸ்ஸப்பொயின்ட்மெட்டுக்கு மன்னியுங்கள். இவர்கள் பிடி பட ஒரே காரணம் இவர்கள் செய்த ஒரு பெரிய முட்டாள் தனமே. தாக்குதலின் ஒவ்வொரு கட்டத்தையும் தலைவரிடம் பிலிம் காட்ட என்று இவர்கள் எடுத்த வீடியோ மட்டும் இல்லை என்றால் இவர்கள் பிடிபட்டு இருக்க மாட்டார்கள். ஒரு காலத்தில் ஸ்கொட்லன்ட் யார்ட்டின் அளவு புகழ் பெற்ற இந்திய காவல்துறையை சோம்பேறிகளாக்கிய அரசியல்வாதிகளை வையுங்கள்.

இந்தப் படத்தில் கொடி பிடித்துக் கொண்டிருக்கும் பெண்மணி வன்னியில் கடைசி வரை கச்சேரியில் (இலங்கையின் ஒரு அரச திணைக்களம்) வேலை செய்தவர். இவர் வேறு தனு வேறு என்பது எங்கள் வாதம். அதை ஏன் பலர் பகிரங்கமாகச் சொல்லவில்லை என்று தெரியாது. சொல்லிப் பிரயோசனம் இல்லை என்று நினைத்தார்களோ என்னவோ. பலர் மறுப்பதில்லை என்று தெரியவில்லை. இவருடைய படங்களை பல புத்தகங்களில் பார்த்திருக்கிறோம். அதனாலேயே இவரை முதல் முதல் கண்ட போது யார் என்று எங்களால் அடையாளம் காண முடிந்தது.

Anonymous said...

நாலைந்து வயதில் ஒட்டுக்கேட்டதை எல்லாம் எப்படி ஞாபகம் வைத்திருக்கிறேன் என்று தெரியவில்லை. தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. ரொம்ப பெரிதான பதிவு. தரவுகளைச் சேகரிக்க நிறைய உழைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சிம்ப்ளி வாவ்.

ஜோதிஜி said...

அனாமிகா (சகோதரியே) உங்கள் பக்கத்தில் இருந்து இருந்தால் கை வலிக்கும் வரை குலுக்கியிருப்பேன். நிறைய ஆச்சரியம். உங்கள் வாசிப்பு ரொம்ப ஆச்சரியம்.

Anonymous said...

=))