"இங்கே வந்துருக்க ஆல் வ்யூர்ஸ்க்கு நமஸ்தே அண்டு குட்மார்னிங். நைன் ஏஜ்ல கலக்கல் பர்பார்மன்ஸ் கொடுத்துட்டு போயிருக்க குட்டீஸ்களின் சிங்கிங் பாத்து நீங்க என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. வாட்ச் பண்ணிக்கிட்டுருக்க ஜட்ஜ்டோட கமெண்ட்ஸ் நல்லா கலர்புல்லா இருக்குது. உங்களோட கிளாப் நல்ல மகில்ச்சியை தந்தது போல நம்ம சீப் கெஸ்ட் ஒரு சாங் பாடி நமக்கு ஹேப்பியை தருமாறு கேட்டுக்கொல்கிறன்"
அசாத்திய திறமை படைத்த குழந்தைகளை தனது சூரத்தனத்தால் வழிநடத்துடம் இந்த ஊடக தமிழ் மொழி உங்களையும் என்னையும் வந்து "காது குளிர" வைத்துக்கொண்டுருந்தாலும் தமிழ் மொழியின் ஈரம் இன்னும் குறையவில்லை.
நடைமுறை தமிழ் எத்தனை இருட்டுக்குள் இருந்தாலும் தமிழரின் தமிழ் மொழியின் வீச்சை இன்று வரையிலும் எவராலும் நிறுத்த முடியவில்லை.
என்ன தான் நிறுத்த முயற்சித்தாலும், தமிழ் உள்ளே பேசினாலும் தண்டனைக் கட்டணம் கட்ட வேண்டும் என்று சொன்ன போதிலும் அத்தனை மம்மிகளும் கும்மியடித்துக்கொண்டே தான் படையெடுத்துக்கொண்டுருக்கிறார்கள்.
படையெடுப்பாளர்கள் வந்து அவர்களின் நவரசத்தை நிலைநாட்ட இங்குள்ள பரவசத்தை பாடையில் ஏற்றினாலும் சரி, இப்போது உள்ள "தமிழ் படித்து என்ன ஆகிவிடப்போகிறது" என்று "தமிழ் மணம்" வீசினாலும் சரி தமிழ்மொழி என்பது இன்று வரையிலும் உங்கள் விழி போல் ஓளி வீசிக்கொண்டு தான் இருக்கிறது.
உத்தேச கணக்காக இந்த உலகம் 460 கோடிகள் ஆனது. இந்த உலகத்தில் முதல் மனிதன் தோன்றி 30 லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டது. தன்னுடைய பிரச்சனையை உணரத் தொடங்கி, மனிதன் மிருகத்தன்மையில் இருந்து மாறி 50 ஆயிரம் ஆண்டுகள் ஆகி உள்ளதாக மானிடவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அந்த 50 ஆயிரம் ஆண்டுகள் என்பது ஏறத்தாழ உத்தேச கணக்காக 600 தலைமுறைகள். இதில் கவனிக்க வேண்டியது என்ன தெரியுமா? சற்று ஏறக்குறைய 36 ஆயிரம் ஆண்டுகள் வெளி உலகம் ஏதும் தெரியாமல் குகைக்குள்ளேயே தன்னுடைய குறைகள் ஏதும் தெரியாமல் குகைக்குள்ளேயே வாழ்ந்து கழித்து இருக்கின்றான்.
கடந்த 70 தலைமுறைகளில் தான் எழுத்து, பேச்சு, விவசாயம் போன்ற அத்தனை முன்னேற்றங்களும், குறிப்பாக ஆறு தலைமுறைக்கு முன்னால் தான் அச்சடித்த வார்த்தைகள், எழுத்துக்கள் என்று அத்தனை முன்றேங்களும் நிகழ்ந்துள்ளது. அச்சடித்த வார்த்தைகள் உருவான பின்பு தான் நாகரிகம் என்பது மிக வேகம் பிடித்து ஓடத் தொடங்கியது.
ஆனால் இந்த கால கட்டத்தில் எத்தனை மொழிகள், கலாச்சாரம், பண்பாடுகள், எழுத்துக்கள் உருவாகி உள்ளது என்பது யோசித்துப் பாருங்கள்? வாழ்ந்த மக்களை எத்தனை விதமாய் புடம் போட்டு பார்த்து இருக்கிறது. ஆனாலும் இந்த தமிழ் மொழி இன்று வரையிலும் சுட்ட தங்கம் போல ஜொலிப்பாய் தான் விளங்கிக்கொண்டு இருக்கிறது.
அமெரிக்காவின் மிக உயர்ந்து பொக்கிஷமாக கருதப்படும் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் போல முப்பது மடங்கு பெரிதான பிரமிடுகளை தந்த எகிப்தியர்களின் எகிப்து மொழி எங்கே போயிற்று?
3000 ஆண்டுகளுக்கு முன்னால் உலகில் சிறந்த மொழி சமஸ்கிருதம் தான் என்று திணிக்கப்பட்ட இந்த மொழி இன்று எங்கே போயிற்று?
மாபெரும் வல்லரசை உருவாக்கிய ரோமபுரி மன்னர்களின் இலத்தின் மொழியை இன்று காணவில்லை?
புத்தர் பரப்பிய பாலி மொழி, மகா அலெக்சாண்டர் பேசிய கிரேக்க மொழி, ஏசு நாதரின் கிப்ரூ மொழி என்று இன்று வரையிலும் நீண்ட பட்டியல் உண்டு.
இவையெல்லாம் காத்து இருப்பு பட்டியல் அல்ல? காணாமல் போன மொழிகளின் பட்டியல்? ஆனால் தமிழனின் தமிழ்மொழி?
இன்று வரையிலும் உரித்துக்கொண்டே உடைந்து கொண்டே உருமாறிக்கொண்டே தன்து பயணத்தை படித்துறையில் அமர்ந்து கொண்டு நாம் பார்க்கும் ஜீவநதி போல் தனது ஓட்டத்தை நிறுத்தாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது.
தமிழ் மொழியின் ஈரம் குறையவில்லை. அதன் மூலம் மாறவில்லை. முகவரி மாறி உள்ளதே தவிர முகத்தில் ஒப்பனைகள் சேர்ந்து உள்ளதே தவிர அழகு குறையவில்லை.
இன்று வரையிலும் எத்தனையோ நல்லவர்கள் உள்ளே வந்து வளர்க்கின்றோம் என்று தங்களை வளர்த்துக்கொண்டார்களே தவிர தமிழ் தாய்க்கு வளர்ப்பு தாய் தேவையில்லாமல் சுயமாக சுயம்புவாக நம்மை காத்துக்கொண்டுருக்கிறாள்.
அதன் வீச்சை குறைக்க முடியவில்லை. உள்வாங்குதல் குறையவில்லை. ஈரமாக இருக்கும் நாவில் வருவது குழந்தை தமிழாக இருக்கட்டும். உளறல் தமிழாக இருக்கட்டும். தங்கிலீஸாக இருக்கட்டும். தடுமாற்றத் தமிழாக இருக்கட்டும்.
ஆனால் இன்னமும் அழியவில்லை. அழியாது.
கெட்டுப்போயுள்ளது. நம்மை விட்டுப் போய்விட வில்லை. இன்னமும் உரித்துக்கொண்டே பயணித்துக்கொண்டு இருக்கிறது. நம்மை மொத்த தமிழினத்தை இணைத்து வைத்துக்கொண்டுருக்கிறது.
எத்தனை கோபக் கணைகளை தமிழ் திரைப்படங்களை நோக்கி உங்கள் பார்வை பாய்ந்தாலும் உலகமெங்கும் உள்ள அத்தனை தமிழனத்தையும் நல்லவிதமாக கெட்டவிதமாக தன்னுடைய மூல மொழியை இது உன்னுடைய முகவரியின் மொழி என்று நினைவில் வைத்து இருக்க உதவிக்கொண்டுருப்பவர்கள் இந்த ஊடக பிரம்மாக்கள் தானே?
சந்திக்கும் போது பேசுவது ஆங்கிலமாக இருக்கட்டும். வெளியே காட்டிக்கொள்ளாமல் மனதிற்குள் சிந்திப்பது தமிழ் தானே? தமிழ் மொழி என்றால் விழி மருகி அக்கம் பாக்கம் பார்த்துக்கொண்டே பயந்து கொண்டே பின்னங்கால் பிடறி தெரிக்க ஓடிபவர்களும், மருகி பார்வை பார்ப்பவர்களும் விரும்பு நாயக நாயகிகளை எந்த மொழி கொண்டு கனவில் கட்டிப்பிடிக்கிறார்கள்?
தமிழனின் தாழ்வு மனப்பான்மை ஒரு பக்கம் கிடக்கட்டும். உண்மையான தமிழ் மக்கள் விரும்பும் ஆங்கிலமே ஆட்சி மொழியாக மாறித் தொலையட்டும். கற்பித்து கொடுத்துக்கொண்டுருக்கும் ஆங்கிலம் மூலம் அத்தனை கலப்பின சிந்தனைகள் உருவாகட்டும்.
பெரியாரின் முன்னோடிகளும் சரி, பின்னோடிகளும் சரி வேறு வழியில்லை. இந்த தமிழ் என்ற வெங்காயத்தை உரித்துக்கொண்டே தான் இருக்க வேண்டும். அவனால் ஆங்கிலத்தையும் மூலம் அறிந்து கற்றுக்கொள்ள விரும்ப மாட்டான். தமிழ் மொழியை தகறாறு இல்லாமல் யோசித்துப் பழக மாட்டான். குறை பிரவசத்தை குதுகலப் பிரசவம் போல் இன்று நேரம் குறித்து குத்திக் கிழிப்பவனிடம் போய் நீங்கள் என்ன பெரிதாக எதிர்பார்த்து விட முடியும்?
கிராமத்தில் கடைக்கோடி தமிழன் வாழ்க்கை அழியும் வரையும், மண் மூடி மேடாக மாறும் வரையும் இந்த தமிழ் மொழி வாழ்க்கையை எவராலும் அழித்து விடமுடியாது.
திருக்குறள் மொழி திக்குவாய் மொழியாக மாறியுள்ளதே தவிர திருட்டு மொழியாக இருட்டு மொழியாக மாறி விடவில்லை. காரணம் அழிந்து விடக்கூடிய பட்டியலில் தமிழ் மொழி இருக்கிறது என்று ஒவ்வொரு முறையும் ஒப்பாறி போல் உங்களை என்னையும் வந்து அடைவது இது தான் முதல் முறையா?
நீங்கள சாவது வரைக்கும் உண்பது முக்கியம். நீங்கள் உண்டு கொழுத்தால் தான் நீங்கள் விரும்பும் ஊடக சிறப்பு தமிழ் உங்களை வந்து அடையும். உண்ண நீங்கள் விரும்பும் போதெல்லாம் இந்த வெங்காயம் இல்லாமல் எவ்வாறு சமைப்பீர்கள். உரிக்கத் தொடங்கும் போதே உங்களை அறியாமல் இந்த தமிழ் மொழியை உரித்தாலும் உடைத்தாலும் உங்களுடன், உங்கள் வாழ்க்கையுடன் இந்த தமிழ் மொழி வந்து கொண்டே தான் இருக்கும்?
வளர்ந்து வந்த விதத்தைப் பாருங்கள். மன்னர் தமிழ், சங்கத்தமிழ், தீந்தமிழ், செந்தமிழ்,பாகவதர் தமிழ், பராசக்தி தமிழ்,பெரியார் தமிழ்,மெட்ரிகுலேசன் தமிழ், ஆங்கில தமிழ், இன்று அலறும் ஊடகத்தமிழ்.
காரணம் தமிழனின் கோணல் சிந்தனைகளை கண்டு நாணி கோணி ஒதுங்கிவிட மாட்டாள் இந்த தமிழ்த்தாய்.
10 comments:
உலகத்தில் பரவியுள்ள தமிழர்களின் பிரச்சனைகள், மொத்த வாழ்வியலின் அவலநிலை.
இன்று நடந்து கொண்டுருக்கும் இலங்கை தமிழர்களின் சிதைக்கப்பட்ட கோர வாழ்க்கைச் சுவடுகளை ஆராய்ந்து தொட்டு தொடர்வது.
தமிழனின் தமிழ்மொழியும் தடுமாற்றமான வாழ்க்கை மொழியும் என்பதன் தொடர் ஓட்டம் இது.
மூலத்தில் இருந்து இன்று முகவரி இழந்து முள்கம்பிகளுடன் வாழ்வது வரையிலும்.
//ஆனாலும் இந்த தமிழ் மொழி இன்று வரையிலும் சுட்ட தங்கம் போல ஜொலிப்பாய் தான் விளங்கிக்கொண்டு இருக்கிறது.//
ஆமாங்க..! நன்றாகச் சொல்லி இருக்கீங்க..!
தமிழைக்காப்பாற்றுவோம் என்று சொல்லும் அரசியல்வாதிகளால் தமிழ் காப்பாற்றப்படப்போவதில்லை ஏனென்றால் தமிழை யாரும் காப்பாற்ற வேண்டாம். அது நம்மைக் காப்பாற்றும்.
சில நாட்களுக்கு முன் ஒரு தலைமுறை என்பது எத்தனை வருடங்கள் என்று எனக்கும் என் அண்ணனுக்கும் விவாதம். நான் சொன்னது 75 வருடங்கள். அண்ணன் சொன்னது 25 வருடங்கள். நீங்கள் சொன்னதும் 75 வருடங்கள். இது போதும் என் அண்ணனிடம் கூற
/சந்திக்கும் போது பேசுவது ஆங்கிலமாக இருக்கட்டும். வெளியே காட்டிக்கொள்ளாமல் மனதிற்குள் சிந்திப்பது தமிழ் தானே?/
இது சரியான கேள்வி.
/காரணம் தமிழனின் கோணல் சிந்தனைகளை கண்டு நாணி கோணி ஒதுங்கிவிட மாட்டாள் இந்த தமிழ்த்தாய். /
அருமை.
அய்யா,
தமிழைப்பற்றி சரியாய் எழுதியிருக்கிறீர்கள்...
ஊடகத்தமிழ் இருக்கிறதே, அதுதானய்யா, நமது குரல்வளையை நெறிப்பதாய் இருக்கிறது...
தொடர்க உங்களின் தமிழ்ப்பணி....
பிரபாகர்...
நல்ல பகிர்வு
அருமை ஜோதிஜி,
மீண்டும் உங்களிடமிருந்து ஒரு முத்தான இடுகை.
//
திருக்குறள் மொழி திக்குவாய் மொழியாக மாறியுள்ளதே தவிர திருட்டு மொழியாக இருட்டு மொழியாக மாறி விடவில்லை. காரணம் அழிந்து விடக்கூடிய பட்டியலில் தமிழ் மொழி இருக்கிறது என்று ஒவ்வொரு முறையும் ஒப்பாறி போல் உங்களை என்னையும் வந்து அடைவது இது தான் முதல் முறையா?//
மிகவும் வீச்சு வாய்ந்த வரிகள்,ஓட்டுக்கள் போட்டாச்சு
but one generation is equal to 20-30 years only
Please check
yasavi.blogspot.com
பகிர்ந்து கொண்ட,தொடர்ந்த,வாசித்த,முன்னெடுத்துச் சென்ற அத்தனை உள்ளங்களுக்கு நன்றி.
"ராணுவத்தில் இருப்பவர்கள், இருந்தவர்கள் அரசியல் அதிகாரத்திற்கு ஆசைப்படக்கூடாது"
இலங்கையின் தற்போதைய ராணுவத்தளபதி (அதிகாரம் குறைக்கப்பட்ட)ஜெகத் ஜெயசூர்யாவின் அச்சம்(?)
"ராணுவத்தின் செயலாளரான கோத்தபய ராஜபக்சே மனித உரிமைகளை மீறிய ஆதாரத்தை விளக்க வேண்டும்"
அமெரிக்காவின் உள்துறை அதிகாரிகள் விசாரணையில் உள்ள சரத்பொன்சேகா. அமெரிக்க குடியுரிமை பெற்ற முன்னாள் இலங்கையின் இராணுவ தலைமைத்தளபதி, இப்போது சகோதர்களுக்கு தலைவலியின் மிச்சம் (?)
"தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி தமிழர்களும் நம்முடைய தொப்புள் கொடி தமிழர்களே"
12 கோடி ஒதுக்கிய தமிழக அரசின் அக்கறை (?) வார்த்தைகள்
"வாழ்க்கையில் நாங்கள் படும் துன்பத்திற்கு அளவே இல்லை. இங்கு இருக்கும் முகாம்களில் மனிதர்கள் வாழவே முடியாது. வெளியாட்கள் எங்களை மதிப்தே இல்லை. எங்கள் உரிமைகளை இழந்து நிற்கிறோம்"
முகாம்களில் இருக்கும் அவலக்குரலின் சிறு உதாரணம்.
இதுவும் கடந்து போகும்.................................
ஆஇந்தப்பூமி இருக்கும்வரை நாம் இருக்கப்போவதில்லை. ஆனால் தமிழ் இருக்கும்.
Post a Comment