Showing posts with label கார்டூன். Show all posts
Showing posts with label கார்டூன். Show all posts

Thursday, September 23, 2010

குழந்தைகள் உலகம் (ஹாலிவுட் பாலா மின் நூல் பிக்ஸார் விமர்சனம்)

நம்மில பலரும் பார்த்த பழைய தமிழ் திரைப்படமான இரு கோடுகள் போலத் தான் இதுவும் கோடுகளால் ஆன உலகம்.  கால்புள்ளி, அரைப்புள்ளி என்று தொடங்கி கண்டுபிடித்த இந்த கோடுகள் தான் மில்லியனர் பில்லியனர் அளவுக்கு இதற்கு பின்னால் உழைத்த ஒவ்வொருவரையும் கொண்டு போய் நிறுத்தியுள்ளது. 


ஒவ்வொரு நிலையிலும் பல கோடுகளை ஒன்றாக சேர்க்க, பிரிக்க, மாட்ட என்று பல கட்டங்கள் தாண்டி வந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நிலையில் இதற்கான உருவகங்கள் உருவாகிக் கொண்டேயிருக்கிறது. 

பெயர் தான் கார்டூன் அல்லது கேலிச்சித்திர உலகம்.  ஆனால் நம்மைப் பார்த்து கேள்விகள் கேட்கும் உலகம் போலத்தான் இருக்கிறது?

உயிரற்ற ஓடும் கார் முதல் தாவும் மிருகங்கள் வரைக்கும் எல்லாவிதமான உருவங்களையும் அதன் இயல்பான தன்மையுடன் உருவாக்க முடியும்.  ஆடலாம் படலாம் ஏன் அவசர ஆத்திரம் என்றால் குதியாட்ட நடனம் கூட போட்டுக் காட்டும். இன்று மூச்சா போகும் சத்தத்தையும் நாம் உணரும் அளவிற்கு காட்டி கப்பு வாடையை கடத்த வைக்கலாம்.  அத்தனையும் இன்று வளர்ந்துள்ள விஞ்ஞானத்தின் வளச்சி. 

அழுகை,சிரிப்பு,கேலி, கிண்டல்,துரத்தல்,வேகம் என்று நாம் எதிர்பார்க்கும் அத்தனை மனித உணர்ச்சிகளையும் நம்ப முடியாத வகையில் தந்து விட வேண்டும் என்று ஒரு பெரிய உலகமே இதற்குப் பின் இயங்கிக் கொண்டு இருக்கிறது. ஒரு சிறிய கணினி திரையின் முன்னால் அமர்ந்து கொண்டு எதற்காகவும் நகர வேண்டிய அவஸ்யம் இல்லாமல் விதவிதமாக உருவாக்கி குழந்தைகளின் உலகத்தை தங்களது மாயக் கரத்திற்குள் வைத்துருககிறார்கள்.  இவர்கள் அத்தனை பேர்களும் இந்த விஞ்ஞான உலகில் நவீன பிரம்மாக்கள்.

பிராந்திய மொழிகள் வரைக்கும் வந்து சேர்ந்துள்ள இந்த உலகம் குழந்தை களுக்கு அளிக்கும் மகிழ்ச்சி ஆச்சரியமாக இருக்கிறது. 

வீட்டில் குழந்தைகளுடன் சேர்ந்து பார்த்த சிந்துபாத் கதையில் வரும் தமிழ் குரல்கள் தமிழ் திரைப்படங்களில் வந்த அத்தனை நகைச்சுவை வசனங்களை யும் ஒன்றாக போட்டு குலுக்கி அதை சரியாக சேர்க்க வேண்டிய இடங்களில் பொருத்தி, அடேங்கப்பா.......... வேகமாக ஓடிக்கொண்டுருக்கும் ப்ரேம் வரிசை களை மறந்து ஒவ்வொரு குழந்தைகளையும் பைத்தியம் பிடிக்க வைத்துக் கொண்டுருக்கும் விந்தை உலகம் இது.  

இந்த உலகத்தைப்பற்றி நூலாசிரியர் வார்த்தைகளில்

" காமிக்ஸ் படிப்பவர்களையும் கார்டூன் படங்களை பார்ப்பவர்களையும் குழந்தைதனமானவர்கள் போல இந்தியாவில் பார்க்கப்படுகிறார்கள். ஆனால் இந்த கார்டூன் படங்கள் உருவாக்க ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ளும் சிரத்தையும் உழைப்பும் பயன்படுத்தும் விஞ்ஞான அறிவும் எவரும் நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று.  

நாம் வாழ்ந்து கொண்டுருக்கும் உலகம் எப்படி உருவானது?  பரிணாமம் என்பது என்ன? விஞ்ஞான வளர்ச்சி?  இது போன்ற மண்டையை உடைத்துக் கொள்ள வைக்கும் கேள்விகளை நாம் என்றைக்காவது நமக்குள் கேட்டுக் கொண்டு இருப்போமா? 
நிச்சயமாக வரக்கூடிய பதில் மாட்டோம் என்ற சொல்லாகத் தான் இருக்கும்.  

" இன்றைக்கு உள்ள பொழப்பே பார்க்க முடியல. இதில் எங்கே போய் நாமத்தையும் ஞானத்தையும் பார்ப்பது " என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டு நகர்ந்து கொண்டுருக்கிறோம்.

எவரோ எப்பொழுதோ எங்கேயோ இருந்து கொண்டு உழைத்த உழைப்பின் பலனை தான் நாம் அணைவரும் இன்று அனுபவித்துக் கொண்டுருக்கிறோம்.  மனிதர்களின் உடலுறவுக்கு மட்டும் இன்னும் மாற்று ஏற்பாடு கண்டுபிடிக்க வில்லை. அதுவும் வந்து விட்டால்?

அது தான் பாலா சொல்லும் தொடக்க கதையும் கூட.  

வால்ட் டிஸ்னி, பிக்ஸார் இதற்குப் பிறகு வந்த இமேஜ் ஓர்க்ஸ் உருவான தலபுராணத்தை தரவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள். மனிதர்களை வைத்து வேலைவாங்கி ரெடி ஸ்டார்ட் கட் என்று தொண்டை தண்ணீர் வற்றி வேலை வாங்கியவர்களை விட இந்த உலகத்தில் இவர்கள் உழைத்துக் கொண்டு இருக்கும் உழைப்பு நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. 

இதை டாய் ஸ்டோரி என்ற பதிவில் நண்பர் ஜெய் தான் எழுதிக் கொண்டுருக்கும் வலைப் பூவில் வெகு அற்புதமாக சொல்லி இருக்கிறார்.

பிறமொழிபடங்கள் தமிழில்

" ஒவ்வொரு கேரக்டரையும் உருவாக்க, தனியா ரூம் போட்டு யோசிப்பாங்க போல... கண்ணைத் தனியா கழட்டி வேவு பார்க்கிற Potatohead பொம்மை, ஸ்பானிஷ் பேசி டான்ஸ் ஆடும் Buzz Light Year, அடியாள் பொம்மைகளோட வர்ற கரடி பொம்மை அப்படின்னு ஒவ்வொண்ணுக்கும் தனி ஸ்டைல், பழக்க வழக்கம், ஸ்பெஷல் திறமை, பிடிச்சது, பிடிக்காததுன்னு... அது ஒரு தனி உலகம்... பார்க்க ஆரம்பிச்சா அப்படியே உங்களை உள்ள இழுத்துடும்... அதுதான் பிக்ஸார் ஸ்பெஷல்... 

பொம்மைகளைப் பார்க்கறப்போ ஏதோ பழைய நண்பர்களை திரும்ப பார்க்கிற மாதிரி இருக்கு. புள்ளக்குட்டிகளோட இந்த வருஷம் ஒரு படத்துக்கு போகணும்னு நினைச்சீங்கன்னா, இந்த படத்துக்குப் போங்க..

 படம் முடியும்போது குழந்தைகளுக்கும், உங்களுக்குமான வயசு வித்தியாசம் அதிகம் இருக்காது.."

காரணம் அத்தனையும் தனி மனிதர்களின் உழைப்பு தான் இன்றுள்ள குழந்தை களை குதுகலமாய் வைத்துள்ளது. சும்மா வரவில்லை சுதந்திரம் என்பது போல் ஒவ்வொரு மனிதரின் ந்யூரான்கள் உருவாக்கிய மாய உலகம் இது.

நூலாசிரியர் கொடுத்துள்ள முக்கியமான குறிப்புகளில் சிறப்பான விசயங்கள் பல உண்டு. 

ஒவ்வொரு கோடுகளும் எப்படி உருவமாக மாறுகிறது. ஒரு வரி கதை உருவாக்கம் முதல் கடைசியாக பின்னால் ஒலிக்கும் குரல் வரைக்கும்  வரிசைப்படுத்தி சுட்டிக் காட்டுகிறார். 

எப்படி இந்த உலகத்தை சிருஷ்டிக்கிறார்கள் என்பதை வரிசைக்கிரமமாக எண்கள் போட்டு கொடுத்த விதம் படிக்கும் எவருக்கும் புரியக்கூடியது..

" சோர்ந்து விடாதே " என்ற தராக மந்திரம் தான் பிக்ஸார் நிறுவனத்தின் தொடக்க கால வளர்ச்சி.  அது தான் இறுதியில் "அனிமேட் கார்டூன்" என்ற மாய உலகத்தை உருவாக்க உதவியது. 

புத்திசாலிகள் எங்கேயாவது சீக்கிரம் ஜெயித்த கதை உண்டா?  காரணம் வால்ட் டிஸ்னி மூடி சூடா சக்ரவர்த்தியாக கோலோச்சிக் கொண்டுருக்க ரஜினி கிரில் கேட்டை திறந்து தமிழ் திரைப்பட உலகத்திற்கு வந்த கதையை போலத் தான் பிக்ஸார் வளர்ந்த விதம் நமக்கு நினைவு படுத்துகிறது.  1993 வரைக்கும் இந்த உலகம் இப்படித்தான் இருந்தது. ஆனால் இன்றைய வளர்ச்சி என்பது எந்திரன் வரைக்கும் எங்கங்கோ பறந்து போய்க்கொண்டுருக்கிறது.

குறிப்பாக இந்த துறையில் பணிபுரிபவர்களுக்கு கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு கையால் தொடர்ச்சியாக கோடுகளை நகர்த்திக் கொண்டுருப்பவர்களுக்கு வரும் நோய்கள் முதல் கார்டூன் உலகத்தை வைத்துக் கொண்டு மில்லியன் பில்லியன் சாம்பாரித்துக் கொண்டுருப்பவர்களைப் பற்றி படித்துக் கொண்டே வரும் போது இதன் மொத்த விஸ்தாரம் நம்ப முடியாத ஆச்சரியமாக இருக்கிறது. 

இந்த உலகத்தில் சவாலான பல வேலைகளை கணினியே எடுத்துக் கொண்டாலும் பெயர் என்னவோ பணிபுரிபவர்களின் பெயர் தான் வருகின்றது, ராயல்டி ரைட்ஸ் எதுவும் கேட்காத கணினிகள் நமக்கு பலப்பல ஆச்சரியங்களை தந்து கொண்டுருப்பதைப் போல, ஏற்கனவே வந்த 3டி போல எதிர்காலத்தில இன்னும் எத்தனை அதிசயங்களை உருவாக்கப் போகின்றதோ?

" காறித்துப்பினாலும் நான் விடமாட்டேன் " என்று உழைத்த பிக்ஸாரின் டாய் ஸ்டோரி உழைப்பை டிஸ்னி அங்கீகாரத்தை எப்போது கொடுத்தார்கள்?   தொலைக் காட்சியில் ப்ரைம் டைம் அலலது பண்டிகை தினம் போல உள்ள கிறிஸ்துமஸ் தின பண்டிகை கொண்டாட்டத்தின் போது,

டிஸ்னி பிக்ஸாருக்கு கொடுத்த அங்கீகாரம் வேறு எவருக்குமே கொடுக்காத ஒன்று.

உழைத்தால் ஒரு நாள் முன்னேறறம் உண்டு என்பது உண்மை தானே?

                                          படம் முடியல. கொஞ்சம் உட்காருங்க


அதகள புகழுக்கு பெயர் பெற்ற நூலாசிரியருக்கு அவர் பாணியில்

உங்கள் சொந்தப் பெயர்
ஏன் சொன்னா இந்தியாவின் கடனை தள்ளுபடி செய்துடுவாங்களா?

வலைதள பெயர் 
வலையே சிக்கி சின்னபின்னமாச்சு.  இதுல நீங்க வேற வந்துக்கிட்டு.

ஆசிரியரின் மிகச் சிறந்த பொன்மொழி
போய் புள்ளகுட்டிய படிக்க வச்சு உருப்புடுற வழிய பாருங்க பாஸ்

ஆசிரியர் விரும்பும் பாடல்  
அக்கரைச்சீமை அழகினிலே மனம் ஆட்டம் கண்டேனே.

ஆசிரியரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது?
பதிவுலகத்தை சுத்தம் செய்வது எப்பூடி?

திரட்டிகளின் மறுபெயர்
ச்சும்மா எரிச்சலை கௌப்பாதீங்க தல

எப்போது மறுபடியும் எழுதுவீங்க
வான்புகழ் கொண்ட வள்ளூவர் குறளுக்கு எழுத அதிகாரம் கொடுக்கும் போது

தெரிந்த மொழிகள்
கொஞ்சூண்டு தமிழ், கொறச்சு மலையாளம். ஸ்பானீஷ் தோழியை டாவடிக்க
கலந்து கட்டும் இங்கீலுபீசு

எதிர்கால லட்சியம்


1 பீன்நவீனத்துவ கதை எழுதி பலாப்படறை ஓனருக்கு டெடிகேட் செய்யனும்,  நேற்று பாலபாரதி இந்த மேட்டர படிக்க வச்ச பழி எடுத்துட்டாரு.

2, ஓட விடமா பிடிச்சு வச்சு இராமசாமி கண்ணன் கவிதைகளை படிக்க வைக்கோனும்

3, உண்மைத்தமிழன் அண்ணாவுக்கு பாசக்கார பயபுள்ள பாலா எழுதும் கடிதம்ன்னு நாலு பதிவு எழுதி டர் ஆக்கனும்., கூடவே க முதல் தொடர்ந்து தமிழில் உள்ள அத்தனை எழுத்துக்களையும் எழுதி தமிழன் தரும் பின்னூட்ட பதிலை கின்னஸ்க்கு அனுப்பனும்.

அப்புறம்................

சரி முடிஞ்சா ஆசிரியருக்கு உங்க கடிதத்தை தட்டுங்க.  ஓளிஞ்சுருந்து படிக்கிற மனுஷன் வெளியே வர வேண்டாமா?

ஹாலிவுட் பாலா மின் அஞ்சல் முகவரி hollywoodbala@gmail.com 

Sunday, September 19, 2010

ஹாலிவுட் பாலா பிக்ஸார் மென்நூல் விமர்சனம்

பள்ளி விட்டு வந்ததும், படிக்க எழுத வேண்டிய அடிப்படை கடமைகளை முடித்த குழந்தைகள் அமைதியாக தொலைக்காட்சியில் கார்டூன் பார்த்துக் கொண்டுருப்பார்கள். . நான் கணினியில் கவனமாய் இருப்பேன்.  ஏதோ ஒரு யோசனையில் குழந்தைகளை நிமிர்ந்து பார்க்கும் போது ஒவ்வொருவர் முகத்திலும் ஒவ்வொருவிதமான பாவனைகள் மாறி மாறி வந்து கொண்டுருக்கும். சுட்டி, கார்டூடன் நெட்வொர்க்,போகோ இதில் ஏதோ ஒன்று பஞ்சாயத்து முடிவுக்கு வந்து ஓடிக் கொண்டுருக்கும்.

ஒருவர் வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்க மற்றொருவர் ஆர்ப்பாட்டமாய் அதிர மற்றொருவர் உதட்டுக்கும் தெரியாத சிரிப்பு வெளியே வந்து கொண்டுருக்கும். 

எனக்கு ஒன்றும் புரியாது. திரையில் தெரியும் எலி பூனைகளின் கோடுகள் உருவமாக ஓடிக் கொண்டுருக்கும். அல்லது டோராவும் புஜ்ஜிம்மாவும் காட்டுக்கு செல்ல வழி தேடிக் கொண்டுருப்பார்கள். மொத்தத்தில் ஏதோ ஒன்று அவர்களை அந்த அரை மணி நேரத்தில் உற்சாகமாய் வைத்து வைத்திருக்கும். சில சமயம் தமிழ் குரல்கள் அந்த சித்திரங்களுக்கு உயிர் கொடுத்து சுவராஸ்மாய் மாற்றி வைத்து இருக்கும்.

குழந்தைகளை தொடக்கத்தில் நன்றாக பேசிப் பழக வேண்டும் என்பதற்காக அன்று அவர்கள் பார்த்த இந்த கார்டூன் படங்களின் கதைகளை அவர்களை விட்டே பேச வைப்பேன். இப்படித்தான் பேசகற்றுக் கொண்டு இன்று என்னை பேசவே முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளார்கள். குறிப்பாக நகர்புறங்களில் வாழும் குழந்தைகள் அணைவருக்கும் இந்த தொலைக்காட்சி ஊடகங்கள் மிகப்பெரிய வரப்பிரசாதம். ஒவ்வொரு முறையும் கணினியை என்னிடம் இருந்து கைப்பற்றிக் கொண்டு போக்கு காட்டும் திறமைகளை வியந்து கொண்டுருக்கும் போது இந்த நூலின் ஆசிரியரின் வீட்டில் வளர்ந்து கொண்டுருப்பவர் எதிர்கால பில்கேட்ஸ் போல் வந்து கொண்டுருப்பது மிகுந்த ஆச்சரியம்.


அத்தனையுமே நாம் அளிக்கும் சுதந்திரம் பொறுத்தே குழந்தைகள் உன்னத இடத்தை அடைகிறார்கள்.

தமிழில் உள்ள அத்தனை சேனல்களிலும் இந்த கார்டூன் ஏதோவொரு சமயத்தில் வந்து கொண்டே தான் இருக்கிறது. இது போக தமிழ் ஆங்கில சேனலில் தனியான 24 மணி நேர சேவைகள்.

இயற்கையான கிராம வளர்ப்பு இல்லாமல் இன்று கில்லி கிட்டி, புள்ளியங்கொட்டை மங்கத்தா தாயக்கட்டை சரட்டுமுத்து, கோலிக்குண்டு என்று அத்தனையும் மறந்து 90 சதவிகித குழந்தைகள் இன்று தொல்லைக் காட்சிக்கு அடிமையாய் சிக்கி இருப்பதற்கு முக்கிய காரணமே பெற்றோர்கள் தான். கிராமத்தில் உள்ள வீடுகளுக்குச் சென்றாலும் அங்கும் நடுநாயகமாக இந்த தொல்லைக்காட்சி தான் முன்னால் அமர்ந்து இருக்கும் பள்ளியில் நடக்கும் பெற்றோர் ஆசிரியர் தின கூட்டத்தில் முக்கியமான குற்றச்சாட்டாக வெளியே வருவது இந்த தொலைக்காட்சி தொந்தரவு தான். ஆத்தா அப்பன் ஒரு பக்கம்.  மாமியார் மகன் மகள் மற்றொரு பக்கம்.

ரிமோட் என்பது கில்லி போல சுழன்று சூறாவளியாய் பல குடும்பத்தை படுத்தி எடுத்துக் கொண்டுருக்கிறது.  அதனால் அடிதடி வரைக்கும் உச்சகட்டமாக சமீபத்தில் ஒரு கொலை வரைக்கும் கொண்டு வந்து விட்டுருக்கிறது.  எப்போதும் போல இந்த மீடியா சந்தையின் பங்குகள் மட்டும் மேட்டை நோக்கி ஓடிக் கொண்டேயிருக்கிறது.

ஓடியாடி வளர்ந்து திரிந்த குழந்தைகள் இன்று தொலைக்காட்சிக்கு முன்னால் அமர்ந்து தின்று கொண்டே இருக்கும் நொறுக்குத் தீனிகள் உடம்பை பெருக்க வைத்து விட்டது. நாம் அவர்களைத் தூக்கினால் நம் எலும்புகளை நொறுக்கி விடும் போல் கனமாக பொதி மூட்டை போல் ஆகிப்போனார்கள். .

பெற்றோர்கள் தாங்கள் விரும்பும் நெடுந்தொடர்கள் பார்க்க உட்காரும் போது குழந்தைகளும் அருகில் அமர இதுவே இன்று போதை போல் மாறிவிட்டது. என்றாலும் இந்த காட்சி ஊடகங்கள் இல்லாவிட்டால் குழந்தைகளின் அறிவு உலகம் நிச்சயம் இந்த அளவிற்கு வளர்ந்து இருக்குமா என்பது சந்தேகமே? 

ஹாலிவுட் பாலா எழுதியுள்ள, மென் நூலாக (E BOOK)  வெளிவந்துள்ள பிக்ஸார் படித்தீர்களா? முழுக்க முழுக்க இந்த கார்டூன் உலகத்தைப் பற்றி அதன் தொழில் நுட்ப ஜம்பவான்களைப் பற்றி அவர் சொல்லியுள்ள விசயங்களை ஒரு முறை தரவிறக்கம் செய்து எழுத்துக்களை சற்று பெரிதாக்கி படித்துப் பாருங்கள்.

கார்டூன் என்பது குழந்தைகளுக்கான படம் தானே? என்ற எண்ணம் இருந்தால் முதலில் ஒரு அழி ரப்பரை வைத்து அதை அழித்து விடுங்கள்.  கமஸ்ஹாசன் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.  தமிழ் திரைப்படங்களை விட நான் அதிகமாக பார்ப்பது டிஸ்கவரி சேனல்.  திரைப்படங்களில் உள்ள சண்டை, ஊடல், காதல் போட்டிகளை விட உண்மையான  சமாச்சாரங்களை அதில் தான் த்தரூபமாக பார்க்க முடியும் என்றார். உங்கள் ரசனை பொதுவானதாக இருந்தால் எதையும் இயல்பாக ரசிக்க முடியும்.

இல்லை என்னை யோசிக்க வைக்கக்கூடாது என்றால் உங்களின் சிந்தனைகள் ஒரு வட்டத்திற்குள் இருக்க எப்போது போல ஒரு புள்ளி கோலமாய் வாழ்ந்து தொலைக்க வேண்டியது தான்.. .இயல்பாகவே வாழப் பழகி விட்டால் ஒன்றும் குடி முழுகி விடாது.  என்னவொன்று குறிப்பிட்ட காலத்தில் குழந்தைகளுக்கும் உங்களுக்கு உள்ள இடைவெளி படுபாதாளம் போலத்தான் மாறும்.  பார்த்துக் கொண்டுருப்பதால் தைரியமாக எழுத முடிகின்றது.

கமலின் மைக்கேல் மதன காம ராஜன் படத்தில் கூட ஆறடிக்கு மேல் உள்ள ஆஜானு பீம்பாய் விரும்பிப் பார்த்தது இந்த கார்டூன் படங்களைத் தான்,  காரணம் 3 வயது குழந்தைகள் முதல் 60 வயது பெரியவர் முதல் அத்தனை பேர்களாலும் ரசிக்க முடிகின்ற ஒரே விசயம் இந்த கார்டூன் படங்களே. 

ப்பூபூ.....  இது தானா?  என்று சொல்லிவிட்டு எச்சில் வடிய அடுத்த சேனலில் நகர்ந்து கவனிக்க முயற்சிப்பதற்குள் ஒரு முறை இந்த மென் நூலை வாய்ப்பு இருக்கும் போது படித்துப் பாருங்கள்.

உழைப்பு என்பதன் முழு அர்த்தத்தையும் இந்த கார்டூன் உலக ஜாம்பவான்கள் தான் உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அர்பணிப்பு, கற்பனைத்திறன், விடாமுயற்சி, கிரியேட்டிவிட்டி என்று சொல்லக்கூடிய அத்தனை ஆளுமைத்திறனுக்கும் இந்த கார்டூன் உலக மககளைத் தான் உதாரணம் காட்ட முடியும் போலிருக்கிறது. எனக்கு இந்த துறை பற்றி பத்து சதவிதிகம் கூட தெரியாது.  ஆனால் இந்த புத்தகத்தை படிக்க ஆச்சரியமாய் இருக்கிறது. 

ரஜினி மகளின் ஆக்கர் ஸ்டுடியோ செய்து கொண்டுருக்கும் கார்டூன் படங்கள் சார்ந்த ஒரு விசயங்களைப் பற்றி படிக்கும் போது லேசாக மனதிற்குள் வியந்தது உண்டு. ஆனால் பாலா சொல்லிக் கொண்டு வரும் இந்த கதைகள் அத்தனையும் சராசரி மக்களுக்கு குறிப்பாக படித்தவர்களுக்கே இவ்வளவு விசயங்கள் தெரியுமா? என்பது சந்தேகமே,

நக்கல், நையாண்டி, எகனைக்குமொகனை, எகத்தாளம் என்று இதற்குப் பின்னால் இன்னும் நீங்கள் எத்தனை வார்த்தைகளை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்.  அது தான் தல ஹாலிவுட் பாலா.  இவர் வால்ட் டிஸ்னி சொந்த மகனோ, பேரனோ அல்லது ஹாலிவுட்ல இருக்கும் தமிழர் அசோக் அமிர்தராஜ் போல இவரும் படங்கள் தயாரிப்பவரா? என்று நீங்கள் கேட்டால் அநியாயத்திற்கு பச்ச புள்ள அல்லது கைப்புள்ள என்று அர்த்தம். 

அவங்க படம் எடுத்து கொடுத்துக்கிட்டு இருப்பாங்க.  இவரு அவங்க எடுத்த படமெல்லாம கிழிகிழி என்று கிழித்து தோரணம் கட்டி தன்னுடைய அக்கறைப் பச்சை வலைப்பூவில் எழுதிக் கொண்டுருப்பவர்.(எழுதிக் கொண்டுருந்தவர்), இவர் எழுதிய புகழ் பெற்ற தமிழ்பட விமர்சனமான கலைஞரின் பெண் சிங்கம், விஜய் நடித்த சுறா போன்ற படங்களின் விமர்சனத்தைப் பார்த்து கோடம்பாக்க மக்கள் தேடிப்பார்த்தார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரமான உண்மைத்தமிழன் அண்ணன் மட்டும் என்னிடம் சொன்னார், ஆனால் ப்ளைட்டு பிடிக்கிற செலவு பார்த்து அத்தனை பேர்களும் ஆர்வத்தை அடக்கிக் கொண்டார்கள், இல்லாவிட்டால் அன்றையே தல தக்காளியாய் ஆகியிருப்பார்.

அமெரிக்காவில் மென்பொருள் துறையில் அவர் சொல்ற மாதிரி கம்யூட்டர் கம்பெனியிலே தினமும் துடைக்கும்  வேலை பார்த்து கொண்டுருப்பவர். இவரின் அதகளத்திற்கு அளவே இல்லை. உச்சகட்டமாய் தான் எழுதிக் கொண்டுருந்த அக்கறைப் பச்சை வலைதளத்தையே காணாமல் செய்து விட்டார்.  என்னவொரு தெனாவெட்டு?

சமீபத்தில் பதிவுலகத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த புனைவு பிரச்சனை ஓடிக் கொண்டுருந்தது. ஒவ்வொரு இடுகையாக இது குறித்து படித்துக்கொண்டுருந்த போது இந்தாளு ஒவ்வொரு இடுகையின் பின்னோட்டத்திலும் ஹாலிவுட் பாலா என்ற பெயருடன் ரணகளத்தை உருவாக்கி போய்க் கொண்டேயிருந்தார்.  எந்த இடுகையையும் விட்டு வைக்கவில்லை. செந்தழல் ரவி இவரை எப்படி விட்டு வைத்தார் என்பது ஆச்சரியம். ஆனால் எவருக்கும் கோபம் வராத அளவிற்கு கிழிப்பதில் கிழி மன்னன்.

நானும் யாருடா இந்தாளு? விடாம ஒவொரு இடுகையாக போய்ப் பார்த்தால் கடைசியில் சமீபத்தில் உண்மைத்தமிழனுக்கு கொடுத்த உலகப் புகழ் பெற்ற கும்மு வரைக்கும் படித்து விட்டு இன்னமும் இவரைத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறேன்.

எப்போதுமே புத்திசாலிங்க செய்யுறது இரண்டு வேலைகள்.

ஒன்று படிக்கிறவங்களுக்கு புரிந்து விடக்கூடாது என்ற மேம்பட்ட ரசனையில் எழுதுவது. மற்றொன்று அத்தனையும் கலந்து கட்டி எழுதி தொடர் வாசிப்பில் இருந்து நம்மை தொலை தூரத்திற்கு விரட்டி அடிப்பது. ((?) ). பதிப்பகத்தில் போய் உட்கார வேண்டிய ஆள்.  எப்படித்தான் கடல் கடந்து போனாரோ?, ஆனால் கேபிள் சங்கர் எப்படி இவரை சாகடிக்காமல் விட்டார் என்பது ட்ரில்லியன் டாலர் கேள்வி?

ரெண்டையும் இவர் மிகத் தெளிவாகவே செய்துள்ளார்.  

காரணம் கார்டூன் படங்களை ரசிப்பது வேறு.  அந்த துறைக்குள் இருக்கும் தொழில் நுடப சமாச்சராங்களைப் பற்றி நாம் தெரிந்து கொளள நினைப்பது வேறு. பொதுவாகவே தொழில்நுட்பம் என்றாலே பாலைவனம் போலத்தான் இருக்கிறது,  அதிலும் இந்த கார்டூன் தொழில் நுட்ப துறை ரொம்பவே அக்கிரமம்.  ஒரு ப்ரேம்ல வரும் சித்திரத்தில் லேசாக இரத்தம் வரவேண்டும் என்பதற்காக எத்தனை மணிநேரம் உழைத்து இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? இந்த மின் நூலை படித்துப் பாருங்கள்.  கார்டூன் பார்க்கிற ஆசையே போய்விடும். ஆனால் இடையிடையே இவர் செய்துள்ள முக்கியமான காரியம் கொஞ்சம் நகைச்சுவை பாணியில் கொண்டு போயிருப்பதால் நிச்சயம் படிப்பவருக்கு சோர்வு வராது.

இதற்கு மேல் மென்நூல் வடிவத்தில் இருப்பதால் இடையே கொடுத்துருக்கும் வலை அறிமுகங்கள் உங்களுக்கு கார்டூன் உலக படங்களை நேரிடையாகவே அறிமுகப்படுத்தும். தொடக்கத்தில் இந்த கார்டூன் உலகம் எப்படி இருந்தது. எப்படி வளர்த்தார்கள். எவ்வாறு வளர்ந்தார்கள்? மூதலீடுகள் என்ன? அவர்கள் சந்தித்த சவால்கள் என்ன?

இதற்கு மேலாக நீங்க இந்த நூலை காசு கொடுதது வாங்கிப் படிக்க வேண்டிய அவஸ்யம் இல்லை.  அவரே சொன்ன மாதிரி பதிப்பக மக்களையும் போண்டியாக்காது. காரணம் நமக்கு படமோ அல்லது பாடமோ படிக்கும் புத்தகமோ ஒரு சொறி சுகத்தை தரக்கூடிய அலங்கார நடை வேண்டும். இதில் பூதக்கண்ணாடி வச்சு நீங்க தேடிப்பார்த்தாலும் உங்களுக்கு கிடைக்காது.

நூலாசிரியர் பிரபல வசனமான இதை எப்படி தமிழ் படுத்த முடியும்? என்கிற தமிழ் ஆங்கில வார்த்தைகள் உங்கள் படுத்தி எடுக்கும்.  ஆனால் நிச்சயம் யோசிக்க வைக்கும்.

என்சைக்ளோபீடியா தொடங்கி விட்டகுறை தொட்டகுறையாக இந்த கார்டூடன் உலக ஜம்பவான்களைப் பற்றி அவர்களின் புகைப்படங்கள் வரைக்கும் ஆதியும் அந்தமும் அத்தனை விசயங்களையும் படம் வரைந்து பாகமாக உங்களுக்கு தெளிவாக புரியவைக்கும். இதுவொரு பாலாவின் கடின உழைப்பு என்று ஒரே வார்த்தையில் என்னால் சொல்லிவிட முடியும்.

ஆனால் தினமும் கம்யூட்டரை துடைக்கிற வேலை பார்க்கிற இவர்க்கிட்டே போய் நீங்க கேட்டுப் பாருங்க.  இத்தனை மணியில் இதை உருவாக்கி முடித்தேன் என்று டர்ர்ர் ஆக்குவார்.  கெட்டாலும் மேன் மக்கள் மென்நூல் உருவாக்கும் மக்களே.

நீங்க சென்னையில் ஜெமினி மேம்பாலத்துக்கு கீழே உள்ள அமெரிக்க தூதரக அலுவகத்திற்கு போக வேண்டாம். ஏற்கனவே இடம் பிடித்து வைத்துக் கொண்டு வியாபாரம் போல் செய்து கொண்டுருப்பவர்களிடம் பேரம் பேச வேண்டாம். இப்ப நாம் நேரிடையாகவே வால்ட் டிஸ்ணி முதல் இந்த பிக்ஸார் வரைக்கும் அத்தனை  இடங்களுக்கும் நாமே போய் பார்த்து விட்டு வந்து விடலாம்,

என்னவொன்று உங்களுக்கு இதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும். 

செல்வோமா சென்னை சில்க்ஸ்க்கு

ஓ.............ஸாரி..............கேலிச்சித்திர உலகத்திற்கு ..............................

மென்நூல் குறித்த பார்வை அடுத்த பதிவில்................