Saturday, December 30, 2023

திராவிட அரசியல் வரலாறு பாகம் 1 மற்றும் பாகம் 2

 சென்னைப் புத்தகக் கண்காட்சி 2024 - சுவாசம் பதிப்பக வெளியீடு 22


திராவிட அரசியல் வரலாறு பாகம் 1 (ரூ 460) மற்றும் பாகம் 2 (ரூ 440), ஜோதி கணேசன், ரூ 900 (இரண்டு பாகங்களும்) - முன்னட்டை ஓவியம்: ஓவியர் ஜீவா


பாகம் 1


திராவிட அரசியல் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமானது. இன்றைய தமிழ்நாட்டின் ஏற்ற இறக்கங்கள் அனைத்துக்கும் பெரும்பாலும் இந்த திராவிடக் கட்சிகளின் அரசியலே காரணம். திராவிடக் கட்சிகளின் அரசியல் வரலாற்றைப் புரிந்துகொள்வது, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு ஒப்பானது.


காமராஜரின் காலத்திலேயே திராவிடக் கட்சிகளின் அரசியல் தீவிரமாகத் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் காமராஜர் மற்றும் காங்கிரஸின் வீழ்ச்சியும் அண்ணாதுரை மற்றும் திமுகவின் எழுச்சியும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன. பின்பு கருணாநிதியால் இந்த அரசியல் இன்னும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.


காமராஜர் காலம் தொடங்கி, அண்ணாதுரை மற்றும் கருணாநிதி காலம் வரையிலான திராவிட அரசியல் வரலாற்றை எவ்விதச் சார்பும் எடுக்காமல் உள்ளது உள்ளபடி இந்தப் பாகத்தில் எழுதி இருக்கிறார் ஜோதிஜி. பொய்ப் பூச்சுகளும் பாசாங்கும் இல்லாத நேரடியான மொழியில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருப்பது சிறப்பு.


பாகம் 2


திராவிட அரசியல் வரலாற்றில் அதிமுகவின் பங்களிப்பு முக்கியமானது. அதிமுகவின் செயல்பாடுகள் திராவிடக் கட்சிகளின் மையத்திலிருந்து விலகுவது போல் தோன்றினாலும், கொள்கை ரீதியாக அது தன்னை திராவிடக் கட்சிகளில் ஒன்றாகவே அறிவித்துக் கொண்டுள்ளது. இந்த வேறுபாட்டினால் அதிமுகவின் அரசியல் ஒரே சமயத்தில் சுவாரஸ்யமானதாகவும் சிக்கல் மிகுந்ததாகவும் மாறுகிறது.


எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் திராவிடக் கட்சி அரசியலை முற்றிலுமாகக் கைவிடாமல், அதே சமயம் தங்களது தனித்துவமான அரசியலையும் தொடர்ந்து செய்தார்கள். இதன் மூலம் கருணாநிதியின் அரசியலை சாதுர்யமாக எதிர்கொண்டார்கள். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா என்ற இரு தலைவர்கள் இல்லாமல் இருந்திருந்தால், திராவிடக் கட்சிகளின் அரசியல் ஒற்றைப் படைத் தன்மை கொண்டதாகக் கூட மாறி இருக்கும் வாய்ப்பு உண்டு.




கருணாநிதியின் தீவிர அரசியல் காலம் தொடங்கி, எம்ஜிஆரின் எழுச்சி, அதிமுகவின் உதயம், ஜெயலலிதாவின் அரசியல் என அனைத்தையும் இந்த இரண்டாம் பாகத்தில் பதிவு செய்திருக்கிறார் ஜோதிஜி. எவ்விதச் சார்பும் இன்றி நேரடியாகப் பேசும் மொழியில் இந்த நூல் எழுதப்பட்டிருப்பது சிறப்பு.


முன்பதிவு செய்ய

சொடுக்க கீழே


No comments: