இதுவரையிலும் வாழ்ந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் உறவாடிய விதமும் கடந்த இருபது ஆண்டுகளில் தொழில் நுட்ப உலகம் உருவாக்கிய மாற்றங்களுக்குப் பின்பு தங்கள் குழந்தைகளுடன் உறவாடும் விதமும் முற்றிலும் மாற்றம் பெற்றுள்ளது என்பதனை ஒவ்வொருவரும் உணர்ந்தே இருக்கக்கூடும்.
இதை உணராதவர்கள் பெருந்துன்பத்தைப் பெற்று அவஸ்தைப்பட்டுக் கொண்டு இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம்.
நொடிக்கு நொடி செய்திகள், விரல் நுனியில் உலகம், உண்மைகள் எங்கே உள்ளது? என்பதனை தேடித்தான் பார்க்க முடியும்? என்கிற அளவுக்கு எத்தனை விதமான கற்பனைகள் உண்டோ அத்தனையும் நம் கண்ணில் தெரிந்து நம்மைக் கதற வைத்துக் கொண்டு இருக்கின்றது.
அனுபவம் இருப்பவர்களுக்கே உருவான, உருவாகிக் கொண்டு இருக்கும் மாற்றங்கள் அனைத்தும் சவாலாக இருக்கும் போது 15 முதல் 25 வயதுள்ள முதல் தலைமுறைக்கு எப்படியிருக்கும்.
மொழி, நாகரிகம், கலாச்சாரம் என்று எல்லாமே மாறியுள்ளது.
பிழைப்பதே முக்கியம் என்பதாக வாழ்க்கை தத்துவம் ஒவ்வொருவருக்கும் உணர்த்தியுள்ளது. இப்படித்தான் வாழ வேண்டும் என்பதும் மாறியுள்ளது.
இதற்கிடையே தான் உங்கள் குழந்தைகள் உங்களுக்குப் பல பாடங்கள் நடத்துகின்றார்கள்.
மகளைப் பத்தாம் வகுப்பு வரைக்கும் படித்துக் கொண்டிருந்த தனியார்ப் பள்ளியிலிருந்து நகர்த்தி புதிய அரசுப் பள்ளியில் சேர்த்த போது அவரிடம் சேர்த்த தினத்தில் சொன்னேன்.
"இங்கு உனக்குப் புதிய அங்கீகாரம் தேடி வரும். மாவட்ட கல்வி அதிகாரி உன்னைத் தேடி வந்து பார்ப்பார். பத்திரிக்கையாளர் உன்னிடம் பேட்டி எடுத்து பத்திரிக்கையில் பிரசுரம் செய்வார்கள்" என்றேன்.
அது அப்படியே நடந்துள்ளது.
வாய்ப்பு இருந்தால் இந்த வலையொளியைக் காண அன்போடு அழைக்கின்றேன்.
மாதா, பிதா இவர்களுக்குப் பின்பு தான் ஆசிரியர். அதற்குப் பின்பு தான் தெய்வம்.
உங்கள் கைகளில் தான் எல்லாமே உள்ளது.
5 comments:
மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள்...
வாழ்த்துகள். தந்தையின் சொல் மந்திரமானது.
வாழ்த்துகள்
வாழ்த்துகள்.
வாழ்த்துகள்
Post a Comment