அப்பா, தாத்தா வாழ்ந்த காலங்கள், அவர்களின் சொந்தங்களுடன் எடுத்த புகைப்படங்களைக் கல்லூரி படிக்கும் போது பார்த்துள்ளேன். வித்தியாசமான எண்ணங்களை உருவாக்கியது. ஆனால் அந்தத் தலைமுறை நினைவுகளைப் பெரிது படுத்திக் கொள்ளவில்லை. அம்மாவிடம் பழைய புகைப்படங்களைக் கொண்டு போய் காட்டினாலும் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் பிறந்தவர்கள் பிறந்த அந்த நொடி முதல் படிப்படியான வளர்ச்சி வரைக்கும் காட்சி வடிவில் ஆவணப்படுத்தும் அளவிற்கு நவீனத் தொழில் நுட்பம் நமக்கு வசதிகளைத் தந்துள்ளது.
நண்பர் நீங்களே வீடியோ பேசி எனக்கு அனுப்பி வையுங்கள் என்றார். இதனை மகள் தான் எடுத்தார். எடுக்கும் சமயத்தில் எத்தனை எத்தனை பிரச்சனைகள்? பால்காரர் முதல் பக்கத்து வீட்டுக்காரர் மாடிக்கு வருவது வரைக்கும் அடுத்தடுத்து பல சிரிப்பான சமாச்சாரங்கள் நடந்தது. கடைசியாக முழுமையாகப் பேசி முடித்த போது மற்றொரு மகள் பின்னால் வந்து ஓ... வென்று கத்த அதுவும் அவுட். இப்படியே நாலைந்து முறை முயன்று கடைசியில் இதனை எடுத்து முடித்தோம்.
ஆனால் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. இணையம் ஒத்துழைக்க மறுக்க கடைசியில் எடுத்ததை ஏன் வீணாக்க வேண்டும் என்று இங்கு பதிவேற்றம் செய்துள்ளேன்.
சமீபத்தில் வெளியான தமிழக அரசியல் வரலாறு புத்தகமான ராபின்சன் பூங்கா முதல் திருக்கழுக்குன்றம் வரைக்கும் என்ற மின்னூலுக்கு அறிமுக உரையாக, அறிமுகப்படுத்தும் விதமாக இதனைப் பேசியுள்ளேன்.
அடுத்த பத்தாண்டுகளில் நம் முக மாற்றத்தை உணர்ந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.
5 comments:
கொஞ்சம் உண்மை... நிறைய பொய்...
கொஞ்சம் பொய்... நிறைய உண்மை...
அருமை அண்ணே...
தங்கத்திற்கு அன்பு முத்தம்.
அண்மையில் நேரடி இணைய வழி கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போது சில சங்கடங்களை உணர்ந்தேன். மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் இவ்வாறாக நாம் எதிர்கொள்பவை நமக்கு நல்ல அனுபவங்களே. உங்களின் இந்த உத்திக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
சரியான பாயிண்ட். இந்தப் பிரச்சனை எனக்கும் உண்டு. அதைப் போக்கவே இந்த முயற்சி. நன்றி.
அவசியம் தரவிறக்கம் செய்து படிப்பேன் ஐயா
Post a Comment