Sunday, August 30, 2020

ஜிஎஸ்டி - சில குறிப்புகள்.


எனக்கும் தனிப்பட்ட முறையில் ஜிஎஸ்டி குறித்து ஏராளமான வருத்தங்கள் இருந்தது. காரணம் நாம் கட்டிய தொகை நம் உடனே வருவதில்லை. அதற்கான வலைத்தளத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தணிக்கையாளர்கள் புலம்பல்கள் மற்றொரு புறம். இதுவரையிலும் நேரிடையாக எதையும் பார்க்காமல் கேட்காமல் உறுதிப் படுத்திக் கொள்ளாமல் இவையெல்லாம் அரசின் தவறு என்றே நேற்று வரையிலும் நினைத்திருந்தேன். இன்று எங்கள் பகுதி உயரதிகாரியைச் சந்தித்து இருக்காவிட்டால் இதை எழுத வாய்ப்பு அமைந்திருக்காது.



நண்பர் மேகநாதன் ஜும் வழியாக ஓர் ஆடிட்டர் கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சி நன்றாகவே ஒருங்கிணைக்கப்பட்டது. என் மனக்குறையை அவரிடம் நண்பர் வழியாகக் கேட்டேன். ஏன் ரீபண்ட் வருவதில்லை என்ற போது நேரில் சென்று எழுதிக் கொடுங்கள் என்றார். அதன் பொருட்டு நேரில் சென்றேன். அங்கே சென்ற போது காட்சியே வேறுவிதமாக மாறியது.

1. உங்கள் தொழிலுக்கு நீங்கள் தொடர்பில் வைத்துள்ள தணிக்கையாளர் சரியானவராக இருக்கின்றாரா? என்பதனை முதலில் உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். காரணம் ரீபண்ட் விசயத்தில் ஒவ்வொருவரும் அவருக்குக் கொடுக்க வேண்டும். இவருக்குக் கொடுக்க வேண்டும் என்று உங்கள் பையில் உள்ளதை எடுக்கத் தயாராக இருப்பார்கள். பத்துப் பைசா செலவழிக்கத் தேவையே இல்லை. பிணம் திண்ணிக் கழுகளிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. அரசாங்கத்தைக் குறை சொல்லாதீர்கள்.

2. கோப்பு பதிவேற்றம் செய்யப்பட்டதா? என்பதனை அவர்கள் சொன்னாலும் நீங்கள் தனிப்பட்ட முறையில் சோதித்துக் கொள்ளுங்கள். அதற்கு ஏஆர்எண் எண் ஒன்று உங்களுக்குக் குறுஞ்செய்தியாக வரும்.

3. பதிவேற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து அதிகப்படியாக 4 நாட்களுக்குள் ரீ பண்ட் வரும். வந்தே ஆக வேண்டும். தணிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு கணக்கு வைத்துப் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள். சிலசமயம் பத்து மாதம் கூட ஆகும். அவசரப்படாதீர்கள் என்கிறார்கள். பொய்.

4. இந்தியாவில் அதிக அளவு ஜிஎஸ்டி கட்டும் மாநிலம் தமிழ்நாடு. அதிக அளவு ரீ பண்ட் வாங்கும் மாநிலம் தமிழ்நாடு.

5. எல்லாமே கணினி மயமாக்கப்பட்டுள்ளது. பதிவேற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து அந்தக் கோப்பு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் குறிப்பிட்ட வணிகவரி அலுவலகம் தரவரிசைப்பட்டியலில் கீழே இறங்கிக் கொண்டேயிருக்கிறது. (அந்தப் பட்டியலை நான் பார்த்தேன்). குறிப்பிட்ட பட்டியலுக்குக் கீழ் இறங்கினால் ரெட் அலர்ட்.

6. அதற்கு மேல் போனால் குறிப்பிட்ட வணிக வரி உயரதிகாரிக்கு அஷ்டமத்து சனி திசை நடக்கத் தொடங்குகின்றது. அதிலிருந்து மீள்வது தனிப் புராணம். (விரிவாகச் சொன்னார்)

7. ஜிஎஸ்டி இல்லாமல் வட இந்தியர்கள் அதிக அளவு ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தற்போதைய பொதுவான குற்றச்சாட்டு. ஆனால் வட்டத்திற்குள் இருக்கின்றார்கள். வலையில் சிக்காத மீன்கள் உண்டு. வாழும் வரைக்கும் அரசு தொடர்பு இல்லாமல் இருந்தால் போதும் என்பதற்கு அவர்கள் உதாரணமாக இருக்கலாம். ஆனால் நித்ய கண்டம் பூரண ஆயுசு தான்.

8. தற்போதைய சூழலில் தொழில் தொடர்ந்து நடக்கவில்லை. ஆனால் மாதம் தோறும் NIL RETURN செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கும் தணிக்கையாளருக்கு மாதம் தோறும் நாம் கொடுக்க வேண்டியிருக்கிறதே என்ற புலம்பல் இருக்கும். அதற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளது.

ஒன்று மூன்று மாதத்திற்கு ஒரு முறை NIL RETURN செய்யலாம். அல்லது மாதம் தோறும் NIL RETURN செய்யலாம்.

9. மற்றொரு ஆச்சரியம் நீங்கள் தணிக்கையாளர் மூலம் NIL RETURN செய்யவேண்டியதில்லை. அவர்களுக்கு மாதம் தோறும் ஒரு தொகை கொடுக்க வேண்டியதில்லை. உங்கள் குறுஞ்செய்தி மூலம் NIL RETURN செய்ய முடியும். (நான் செய்து பார்த்தேன். அருமை. அற்புதம்) எளிதாக வேலை முடிந்து விட்டது. விபரங்கள் இணைப்பில் கொடுத்துள்ளேன். தேவையுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

முதல் விமர்சனம் - ராபின்சன் பூங்கா முதல் திருக்கழுக்குன்றம் வரை (பிகேஆர்)

7 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அறியாத செய்தி ஐயா
நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

ஊருக்கு வரும் போது, எந்தெந்த தொழில்கள் அழிந்துள்ளன என்பதை உங்களுக்கு காட்ட வேண்டும் என்கிற எண்ணம் உண்டு...

ம்... உங்கள் சிந்தனை வேறு... கூட்டமும் வேறு...

ஜோதிஜி said...

அழிந்தால் வளரும். வளர்வது அழியும். சிந்தனையில் மாற்றம் வந்தால் வளர்ச்சி. கூட்டத்தினர் சொல்வதைக் கோரஸாகச் சென்னால் எளிய தமிழ்ப்பிள்ளைகள் என்று அர்த்தம்.

ஜோதிஜி said...

தொழில் துறையினருக்கு முக்கியமான செய்தி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வணிகத்தில் ஈடுபடுவோர் அவசியம் தெரிந்து, பயன்படுத்திக் கொள்ளவேண்டியது. நுணுக்கமாக நீங்கள் பகிர்ந்த விதம் சிறப்பு.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விஷயங்கள் பல வெளியில் தெரிவதில்லை என்பதை புரிந்து கொண்டவர்கள் குறைவே. அடுத்தவர்கள் சொல்வதையே நம்பிக் கொண்டிருக்கிறோம் - மெத்தப் படித்தவர்கள் உட்பட!

குறைகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிவது எப்போதும் நடப்பது தானே.

Rathnavel Natarajan said...

ஜிஎஸ்டி - சில குறிப்புகள். - வர்த்தகர்கள் மட்டுமல்ல, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. எனது பக்கத்தில்பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி