Thursday, April 30, 2020

ஆடம்பர திருமணங்களை அடக்கிய கொரோனா


அந்த 42 நாட்கள் -  25
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)


இன்று வரையிலும் மொத்தமாகப் பட்டியலிட்டுப் பார்த்தேன், பார்த்த, பழகிய, கேட்ட, விரும்பிய, பழகிய, விலகிய, வெறுத்த, ஆதரித்த, ஏக்கத்துடன் பார்த்த ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு உள்ளேன்.  காரணம் கொரானா காலம் மிகப் பெரிய பாடத்தையும், படிப்பினையும், வாய்ப்பை, வசதிகளை, வரத்தையும் கொடுக்க வந்துள்ளது.  முதல் 21 நாளில் ஒழுங்காகக் கடைப்பிடித்தவர்களின் நரம்பு மண்டலம் உருவாக்கிய அதிர்வுகளும், மனதில் உருவான தளர்ச்சி, கோபம், இனம் புரியாத ஆத்திரம் என்று பலதரப்பட்ட கதைகளைத் தினமும் கேட்டு வருகிறேன்.




இந்தப் பழக்கங்கள் இனி தேவையில்லை. மகன், மகள் பெரியவர்களாக வளர்ந்து விட்டார்கள், நமக்கு இனி அசிங்கம் என்று மனம் எண்ணினாலும் இரவு வந்தவுடன் கால்கள் தானாகவே கடையை நோக்கிச் செல்வது இங்கே இயல்பாகவே உள்ளது. மாதம் பத்தாயிரம் சம்பாதிப்பவருக்கும் 5000 ம் இருபதாயிரம் சம்பாதிக்கும் தகுதியுள்ளவருக்கும் பத்தாயிரமும் இந்தக் குடியால் செலவாகின்றது. எவராலும் நிறுத்த முடியவில்லை. நெருக்கமான கடைகள் இருக்கும் போது எளிதாகக் கிடைத்து விடுகின்றது. கடந்து செல்லும் போது கடைகளைத்தாண்டி வீட்டுக்குச் செல்ல முடிவதில்லை. ஆனால் இன்று முதல் பகுதி 21 நாட்கள் முடிந்து விட்டது. இரண்டாவது பகுதி தொடங்கியுள்ளது என்ற போதிலும் பலராலும் இவற்றிலிருந்து மீள முடியவில்லை என்பதே உண்மை. 

இப்போதைக்கு எடப்பாடி மதுக்கடைகளைத் திறக்க அனுமதி கொடுத்தால் தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரை எளிதில் பெற முடியும் என்பதே எதார்த்த உண்மை.

பட்டியல்.......
1. வெற்றிலை, சுண்ணாம்பு, கொட்டைப் பாக்கு
2. வெற்றிலை, சுண்ணாம்பு, சீவல்
3. வெற்றிலை, சுண்ணாம்பு, புகையிலை,
4. பன்னீர் புகையிலை,
5. பீடி
6. சுருட்டு
6. சாதா சிகரெட்,
7. பில்டர் சிகரெட்,
8. (அங்கீகாரமின்றி) காய்ச்சின சாராயம்
9. அரசு ஆதரித்த பட்டை சாராயம்,
10. விஸ்கி, பிராந்தி, ரம், ஒயின், வோட்கா, ஜின்
11. குட்டி பீர், டின் பீர், பெரிய பாட்டில் பீர்,
12. மிலிட்டரி சரக்கு, உள்ளூர் சரக்கு, கம்பெனி பெயர் வைத்து பாதிக்குப் பாதித் தண்ணீர் கலந்த சரக்கு,
13. பான்பராக்,
14. கணேஷ்,
15. ஹான்ஸ்,
16. ஸ்வீட் பீடா,
17. 120 பீடா,
18. மாவா
(ராஜபோதை சமாச்சாரங்களை இதில் கொண்டுவரவில்லை)

அரசாங்கம் உருவாக்கிய தடைக்காலம் உங்கள் வாழ்க்கையில் வருமானத்தை நிறுத்தியுள்ளது என்பது பற்றி யோசிக்காமல் உங்களிடம் இருந்த ஆரோக்கியமற்ற பல பழக்கத்தையும் நிறுத்த உதவியுள்ளது என்பதாக எடுத்துக் கொள்ளுங்கள். காரணம்,  நூறு கோடியை அடைந்து கோடீஸ்வரன் என்று பெயர் எடுத்தவன் முழு ஆரோக்கியம் இல்லாதவனாக இருந்தால் அவனின் சொத்துக்களை, அதன் மூலம் கிடைக்கும் சுகங்களை அவன் அனுபவிக்க முடியாது. சுற்றியுள்ளவர்கள் தான் அனுபவிக்க முடியும். அது தான் பெரிய நரக வேதனை. வருகின்ற மே 3 க்குள் கட்டுப்படுத்த முடியாமல் இருந்த உங்களின் (மேலே குறிப்பிட்ட) ஏதோவொரு பழக்கம் இருந்தால் அதனை நிறுத்தும் பட்சத்தில் 1. பணம் மிச்சம். 2. அளவில்லாத ஆரோக்கியம். 3. மருத்துவச் செலவுகள் இனி குறையும். 

(பின் குறிப்பு 115 சரக்கை ஐந்து ரூபாய் அதிகமாக வைத்து 120 ரூபாய் என்று கடையில் விற்கும் சரக்கு இன்று 600 முதல் 800 வரைக்கும் விலை உச்சத்தில் உள்ளது. மக்கள் வாங்க வரிசையில் நிற்கின்றார்கள்)

*************


அடேயப்பா.... மிகப்பிரம்மாண்டமான கல்யாணம் போல இருக்கே....??

சமீபத்திய முகூர்த்த நாளில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள்... ஊரடங்கு என்பதால் நெருங்கிய சொந்தங்களை வைத்து 30 பேருடன் நடந்து முடிந்ததை நாம்.. கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கொங்கு மண்டலத்தில் நடைபெறும் பெரும்பாலான திருமணங்களுக்கு சென்றிருக்கேன். இதற்கு ஒரு இலைக்கு அவர்கள் நிர்ணயித்த சராசரி விலை 300/-...  அந்த திருமணத்தில் சுமாராக 3000 பேர் கலந்து கொண்டதாக வைத்தோமானால்.. இரவு உணவு செலவு மட்டுமே...
9 லட்ச..ரூபாய்.  பிற செலவுகளை சேர்த்தால் கோடியை நெருங்கக்கூடும்.

இதே போல கோவையில்... ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன். அங்கு உணவு பரிமாறும் இடம் மட்டுமில்லாமல் பார்க்கிங்லிருந்து.. கை கழுவும் இடம் வரை... பிரபலமான சமையல்காரரின் 30 உணவு வகைகள் பட்டியல் போட்டு ஒட்டப்பட்டிருந்தது.

நான் உணவருந்த சென்ற போது ஏற்கனவே உணவு பரிமாறப்பட்டு பந்தி தயார் நிலையில் இருந்தது. வந்தவர்கள் அவரவர் விரும்பிய இடத்தில் உட்கார்ந்தனர். 20 பேர் கொண்ட ஒரு வரிசையில் குறைந்தபட்சம் 2 இடங்கள் ஆளில்லாமல் பரிமாறப்பட்டு இருந்தது.  எனக்கு தெரிந்து அவ்வாறு ஒரு பந்திக்கு 20 இலை போடப்பட்டு ஆள் அமராமல் அப்படியே எச்சிலைகளுடன் எடுத்து போடப்பட்டது.  பத்து பந்திகளாக கொண்டால் 10 × 20 = 200 பேருக்கு பரிமாறப்பட்ட உணவு குப்பைக்கு போனது. இங்கு ஒரு இலை சராசரியாக ₹.300 என வைத்தால் 60,000/- குப்பைக்கு போனது. சமையல்காரரின் கணக்கு பந்தியில் பரிமாறும் இலையை பொறுத்தே என்பதால்,... வெளியே தரப்படும் 5 விதமான ஐஸ் க்ரீம், கூல் ட்ரிங்ஸ், காபி & டீ, பீடா என அனைத்தும் அந்த குப்பை கணக்கில் அடக்கம்.

மேற்படி திருமணத்தை இவ்வளவு ஆடம்பரமாக நடத்தியவர் பெரும் பணக்காரரோ, ஜமீன்தாரரோ, அரசியல்வாதியோ அல்ல..... அவர் சாதாரண அரசு ஊழியர்.  இவர் இவ்வளவு ஆடம்பரத்துடன் திருமணம் நடத்த காரணம்,..???    இதே மண்டபத்தில் சில மாதங்களுக்கு முன் அவரது உறவினர் நடத்திய ஆடம்பர திருமணம் தான். அந்த திருமணத்தை நடத்தியவரும் பெரும் ஜாம்பவான் அல்ல.  அவர் ஒரு பிஸினெஸ்மேன் அவ்வளவே.  அவரது திருமணத்தை #மிஞ்சி..... தனது இல்ல திருமணம் நடத்தியாக வேண்டும்...

எனும் #வெறிதான் இதற்கு காரணம். மேற்படி கொங்கு மண்டலத்தில்.... இரண்டு திருமணங்கள் நடந்து வருடங்கள் பல ஓடி விட்டாலும்... பிஸினெஸ்மேன் இன்னமும் பெருந்தொகைக்கு #வட்டி.... கட்டிக் கொண்டிருக்கிறார்.  அரசு ஊழியரோ தனது #பூர்வீக_சொத்துக்களை விற்று கடனிலிருந்து வெளிவந்திருக்கார். இந்த திருமணங்களின் பந்தி செலவு மட்டுமின்றி... இதர செலவுகளான ட்ரோன் வைத்து வீடியோ எடுப்பது,

வாசல் முதல் மண மேடை வரை அலங்காரம் செய்வது, 10 கேமிரா க்களை வைத்து படம் எடுத்து ஆல்பம் போடுவது,  நகரிலேயே பிஸியான #ப்யூட்டியசினிடம் அப்பாயின்மென்ட் வாங்கி அலங்காரம் செய்வது, #மெல்லிசை அல்லது #ஆர்கெஸ்ட்ரா என பணத்தை விரயமாக்க...  பல ஆடம்பரங்களில்.....  #சேர்த்து_வைத்த அல்லது    #கடன் வாங்கிய #ரொக்கம்... மேட்டூர் அணையிலிருந்து காலியாகும் டிஎம்ஸி நீரைப் போல காலியாகி கடைசியில் ஆளையே காலியாக்கிவிடும். கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக நடக்கும் திருமணங்கள்... அதற்காக கட்டப்பட்டுள்ள ஆடம்பர திருமண மஹால்கள் ஆகியவை இதற்கு கட்டியம் கூறும். முன்பெல்லாம் திருமணங்கள்... முந்தைய நாள் பட்டினித்தண்ணி என நெருங்கிய உறவுகள் மட்டுமே... இரண்டாம் நாள் உறவுகள்... & உள்ளூரில் உள்ளவர்கள் மட்டுமே..  மணமகன் & மணமகள் இல்லங்களில் அவரவர் வசதிக்கேற்ப நடக்கும்.... மறுநாள் விடிகாலை..  3 மணிக்கோ....... 4..மணிக்கோ... 5... மணிக்கோ.. தூரத்தை பொறுத்துக் மாட்டு வண்டியை பூட்டி பெண் வீடு செல்வார்கள்.... அங்கே மணமகள் இல்லத்தில்... திருமணம்... நெருங்கிய உறவுகள் & உள்ளூர் உறவுகள்.. மட்டுமே... கலந்து... மகிழ்ந்தனர்.... #பின்னர்.... கோவில் மண்டபங்களிலும் சத்திரங்களிலும் மட்டுமே நடந்த...... மணவிழா...... இன்று மஹால்களில் நடக்கின்றன. அந்த மாதிரி மஹால்களை புக்கிங் செய்து (வாடகை குறைந்தபட்சம்.. 2.. அ 3..லட்சம்) மன்னர்களை போல தங்களது வீட்டு திருமணங்களை நடத்தி பீத்திக் கொள்ளவே இந்த ஆடம்பர திருமணங்கள் நடத்தப்படுகின்றன. இந்த திருமணங்கள் நடந்து முடிந்த பின்னர்.. லட்சக் கணக்கில் செலவு செய்து எடுக்கப்பட்ட வீடியோ & போட்டோ ஆல்பம் கேட்பாரின்றி பரணில் பதுங்கி கொள்ளும். பல திருமணங்கள் நிஜ வாழ்க்கையில் ஜெயிக்க இயலாமல்...

திசைக்கொன்றாக பிரிந்து வாழ்ந்து "சிங்கிள் பேரன்ட்" என தம்பட்டம் அடிக்க வைத்திருக்கிறது.  #ப்யூட்டிசியன் க்கு செலவளித்த அந்த ஒரு லட்சத்திற்குள் தான்... இன்று #கொரானா வால் ஒட்டு மொத்த திருமணமே நடந்து கொண்டிருக்கிறது. தினந்தோறும் தனது வருமானத்தை #டாஸ்மாக் சென்று தொலைப்பவனுக்கும்.  30 வருடங்களாக சம்பாதித்தை #வீம்பெடுத்து ஒரே ஆடம்பர திருமணத்தை நடத்தி முடித்தவனுக்கும் பெரிய வித்தியாசமில்லை.

நாட்டுக்குள் #புலிகள்... (#கோடீஸ்வரர்கள்) குறைவே, ஆனால்  #பூனைகள் (#நடுத்தர_வர்க்கத்தினர்) அதிகம்.  அந்த புலிகளை பார்த்து பூனைகள் கோடுகளை போடக் கூடாது.   #புலி_புலிதான்..  #பூனை_பூனைதான்... இன்று வீட்டுக்குள் அடங்கி ஒடுங்கி இருக்கும் போது #சேமிப்பின் அவசியம்..

இப்போதுதான் தெரிகிறது  அவசரவசரமாக மண்டைக்குள் ஓடுது. கொரோனா வின் தாக்கம் உடல்நிலையில் சிலருக்கு உபாதைகளை உண்டாக்கினாலும்... மன. இனைந்து...  எழுச்சியுடன் குடும்பம் நிகழ்வுகளை.. நடத்துவோமே....

(இரண்டாவது பகுதி முடிந்தது)


ஐ போனுக்கு விலைபோன அரசு மருத்துவர்..! கொரோனா அச்சத்தில் 300 பேர்

எழுதிய தலைப்புகள்.

ஏப்ரல் 5 - 9 மணி 9 நிமிடங்கள் விளக்கேற்றுங்கள்


தப்லீக்கி மாநாடு

கொரோனா வைரஸில் PhD செய்த Dr.பவித்ரா | Special Interview


திருப்பூரின் ஊரடங்கு கால குறுக்கு வெட்டு நீள் வெட்டுத் தோற்ற (ட்ரோன்) புகைப்படங்கள்



3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஏலே மச்சி மச்சி
தல சுத்தி சுத்தி
உன் புத்தி கெட்டு போயாச்சு...

என் மூளைக்குள்ள
பல பட்டாம் பூச்சி
எட்டி எட்டி பாக்குது என்னாச்சு...?

அட டாலர் போல
போத ஏறி போச்சு
நம்ம ரூபா போல
புத்தி இறங்கி போச்சு

போத ஏறினால்
கொஞ்சம் ஞானம் பொறக்குது
போத தெளிஞ்சதும்
வந்த ஞானம் பறக்குது...!

ஏதாச்சு போதை ஒன்னு
எப்போதும் தேவை கண்ணா
இல்லாட்டி மனுஷனுக்கு சக்தி இல்ல...


தாய் பாலும் போத தரும்
சாராயம் போத தரும்
இரண்டையும் பிரித்தது என் புத்திஇல்ல

தாய் பாலின் போதை
சில மாதம் மட்டும்
சாராய போதை நாம் வாழும் மட்டும்

போதை மாறலாம்
உன் புத்தி மாறுமா
புத்தர் சொல்லியும் நாய் வாலு நிமிருமா...?

வாழ்க்கை புதையலப்பா
வலுத்தவன் எடுத்துகப்பா அவன்
அவன் வயித்துக்குதான் வாழ்வது தப்பா...?

அடுத்தவன் வயித்துக்குள்ள உன் உணவு இல்லையப்பா...
இளைச்சவன் பசித்திருந்தால் இந்த மண்ணு தாங்காதப்பா...!

நீ வாதத்துக்கு ரொம்ப கெட்டிகாரன்...
அட வக்கீலுக்கு நீ சொந்தக்காரன்...
சொல்லும் வார்த்தையில் என்ன சொக்க வைக்கிற...
இமய மலையில வந்து ஐஸ் விக்கிற...!

திண்டுக்கல் தனபாலன் said...

காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா
கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக்
கைப்பற்ற நினைக்குது மனமே - நீ
தேடும் போது வருவதுண்டோ - விட்டுப்
போகும் போது சொல்வதுண்டோ...?

அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்
அவனும் திருடனும் ஒன்றாகும்...
வரவுக்கு மேலே செலவுகள் செய்தால்
அவனும் குருடனும் ஒன்றாகும்...
களவுக்குப் போகும் பொருளை எடுத்து
வறுமைக்குத் தந்தால் தருமமடா...
பூட்டுக்கு மேலே பூட்டைப் போட்டு
பூட்டி வைத்தால் அது கருமமடா...

கொடுத்தவன் விழிப்பான் எடுத்தவன் முடிப்பான்
அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே
சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிபபதும்
பணத்தால் வந்த நிலை தானே

கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால்
கூட்டமிருக்கும் பின்னோடு
தலைகளை ஆட்டும் பொம்மைகளெல்லாம்
தாளங்கள் போடும் பின்னோடு...!

ஜோதிஜி said...

சிறப்பு. அருமை.