புனிதம், பெருமை என்ற வார்த்தைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் சூழலுக்கு ஏற்ப மாறுபடும். தனி மனிதர்களுக்குப் பிரச்சனையில்லை. இணையம் வந்த பிறகு அரசியல்வாதிகளுக்குத் தான் பிரச்சனையாக உள்ளது.
ஒரு பக்கம் தலைவர் என்பவர்களை மறுபக்கம் தறுதலை என்கிறார்கள். எது உண்மை? எது பொய்? என்பதற்கு அப்பாற்பட்டு முழுமையாக மாலையாக கோர்த்து தொங்கவிட்டு அஞ்சலி செலுத்துகின்றார்கள். எழுத்தை வாசிக்கும் போதே நாறுகின்றது.
ட்விட்டரில் முகமில்லாமல் 90 சதவிகித போராளிக்கூட்டம் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் ஆதி மொழி தான் அங்கே தொகுக்கவே முடியாத தமிழ் அகராதியாக உள்ளது.
நாம் இறப்பதற்கு முன் இணையத்தை விட்டுக் குறைந்த பட்சம் ஐந்து வருடம் ஒதுங்கியிருக்க வேண்டும். அதுவரையிலும் நம்மோடு பழகிக் கவனித்துக் கண்காணித்துக் கொண்டிருந்தவர்கள் உள்ளே வைத்திருந்தவற்றைத் துப்புவதை நமக்குப் பின்னால் நம் மகன் மகள் பார்க்கும் துணிச்சலை அவர்களுக்கு கற்றுக் கொடுத்து மறைய வேண்டும். 😔
***********************
தனியார் வங்கிகள் எளிதாகக் கடன் கொடுப்பதில்லை. கொடுத்தாலும் அவர்கள் வசூலித்து விடுவார்கள். பொதுத்துறை வங்கிகள் நிர்வாகத்தில் இந்த முறை இல்லாத காரணத்தால் (வாராக்கடன்) நஷ்டத்தை அடைகின்றது என்று சொல்லக்கூடிய நண்பர்கள் இன்று எஸ் வங்கி ஏன் இந்த நிலைமையை அடைந்தது என்பதனை விளக்குவார்கள் என்றே நம்புகிறேன்.
வங்கியின் டெபாசிட் தொகை மதிப்பு இரண்டு லட்சம் கோடி.
வசூலிக்க வேண்டிய வாராக்கடன் பத்தாயிரம் கோடி
நாடு முழுக்க 1122 கிளைகள்.
வங்கியை விரிவு படுத்த ஜப்பான் மற்றும் தைவான் உட்பட எட்டு சர்வதேச நிதி நிறுவனங்களில் இருந்து கடனாக வாங்கிய தொகை (2018) 3000 கோடி கடன் வாங்கியுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனையில் முதலிடம் இருந்த வங்கி.
*******************
படம் வெளிவந்து இரண்டாவது நாளே வெற்றி விழா கொண்டாடும் மக்கள் எவரும் இந்தப் படத்தைப் பற்றி பேசினாலே ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்று பயப்படுகின்றார்கள். இன்னமும் நான் பார்க்கவில்லை. சபாநாயகர் ஒத்திவைப்பு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்.
#பரிட்சை முக்கியம் பாஸ்
300 திரையரங்குகளில் இரண்டாவது வாரம் தொடர்கிறது... இதுவரை 10 கோடிக்கு மேல் மொத்தமாக வசூல் சாதனை புரிந்துள்ளது.. சிறு குழு கொண்ட தமிழின் முதல் கூட்டு முயற்சி திரைப்படத்தை இவ்வளவு பெரிய வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி.. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.. #திரெளபதி #Draupathi
இந்த வார பதிவுகள்
4 comments:
யெஸ் வங்கி - எதிர்பார்த்தது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகவே நிறைய பிரச்சனைகள்.
திரௌபதி - நிறைய இது பற்றி பேசுகிறார்கள். தலைநகரில் பார்க்க வாய்ப்பில்லை.
எஸ் வங்கி - முன்னரே தெரிந்ததுதான்... அடுத்தடுத்த வங்கிகள் இந்த நிலையை அடையாமல் இருக்க வேண்டும்.
திரௌபதி பார்க்க வேண்டும். நான் எடுத்தால் அது பாடம்... நீ எடுத்தால் அது சாதீயம் எனச் சொல்பவர்களைப் பார்க்கும் போது சிரிப்புத்தான் வருகிறது.
அடுத்து Axis என்கிறார்கள் Reserve-வை கைக்குள் போட்டுக் கொண்டவர்கள்...!
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு (நமக்கு) ஒரு கவலையில்லை. வாரம் ஒரு முறை நல்ல மீன் (கிடைப்பதே அரிதாக உள்ளது) சாப்பிட்டால் போதுமானது. எல்லாக்கவலைகளும் மறந்து விடுகின்றது. அங்கிட்டு எப்பூடி?
Post a Comment