ஏன் பாஜகவிற்கு அரவிந்த் கேஜ்ரிவால் சவாலாக இருக்கின்றார்? எப்படி வெற்றி பெற முடிகின்றது?
1. கல்வித்துறையை முழுமையாகச் சீரமைத்துள்ளார். எளிய மக்கள் அனைவரும் படிக்க அரசுப் பள்ளிகள் சிறப்பானது என்று தன் செயல்பாட்டின் மூலம் நிரூபித்துள்ளார்.
2. மக்கள் எதிர்பார்க்கும், மக்களுக்கு அவசியமான மின்சாரம் முதல் ரேசன் பொருட்கள் வரைக்கும் ஆம் ஆத்மி நடத்திய நிர்வாகம் ஏழை, எளிய, நடுத்தரவர்க்கத்திற்கு உதவும்வண்ணம் இருந்தது.
3. வாயால் வடை சுடுவதில்லை. உச்சக்கட்டமாக அனுமன் தண்டனை கொடுப்பார் போன்ற வார்த்தைகள் வந்தது. தெய்வங்களுக்கும் மக்களுக்கும் நடந்த போட்டியில் மக்கள் தான் வென்றுள்ளார்.
4. அமித்ஷா டெல்லி பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய வார்த்தைகள் அனைத்தும் டெல்லி மக்களை முட்டாள் என்பது போலவே தெரிந்தது.
5. வளர்ச்சி அரசியல் என்பது மக்களுக்குத் தேவையானதைச் செய்து முடித்து விட்டு அதன் சாதக பாதகங்களைப் பற்றிப் பேசுவது என்பதனை இனியாவது பாஜக உணர வேண்டும்.
6. டெல்லி முழுக்க 400 கிளினிக் கேஜ்ரிவால் தொடங்கி இலவசமாக மருத்துவ வசதியை உருவாக்கினார். குடிநீர் வசதிகள் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
7. பிரச்சாரக்கூட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை விமர்சிக்கவே இல்லை. பத்திரிக்கையாளர்கள் நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில் மட்டுமே அது குறித்து தன் கருத்து என்ன? என்பதனைப் பற்றிப் பேசினார். பிரச்சாரக் கூட்டத்தில் மக்களிடம் நான் இவற்றை எல்லாம் இதுவரையிலும் செய்துள்ளேன்? இன்னும் என்ன செய்ய வேண்டும்?உங்கள் தேவைகள் என்ன? என்பதனை மட்டுமே கேட்டார். அன்றாட வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் மட்டுமே கவனம் செலுத்திப் பேசி வாக்காளர்களின் நம்பிக்கையை எளிதாகப் பெற்றார்.
8. மக்களுக்குத் தேவையான வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை நடத்தினால் போதும். பாஜக பொருட்டல்ல என்ற நிலைக்கு மக்கள் வரக்கூடும். ஆனால் கேஜ்ரிவால், பட்நாயக் தவிரக் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் வாய்ப்பே இல்லை என்றே தோன்றுகின்றது.
9. சோனியா காங்கிரஸை கேஜ்ரிவால் அவர்களிடம் ஒப்படைத்து விடுவது சிறப்பானது. ஒரே ஒரு கூட்டத்தில் ராகுல் கலந்து கொண்டார். உடல்நலக் கோளாறு காரணமாக சோனியா எந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை.
10. பாஜக ஓட்டு எந்திரம் மூலம் வெல்கின்றது என்ற போராளிக்கூட்டம் சிறிது காலத்திற்கு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தியர்களுக்கு தேவையான அரசு நிர்வாகத்தை சிறப்பாக நடத்தி வரும் அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களுக்கு வாழ்த்துகள். Arvind Kejriwal
................................
ஊடகத்தில் இன்னும் சில நாட்களுக்கு அரவிந்த் கேஜ்ரிவால் தீனி போட்டுக் கொண்டு இருப்பார்.
திரும்பத் திரும்ப "வளர்ச்சி அரசியல்" என்ற வார்த்தையை இவர்கள் உச்சரித்துக் கொண்டேயிருப்பார்கள். ஆனால் வளர்ச்சி அரசியல் என்ற பெயரில் இங்கே நடந்த, நடந்து கொண்டிருக்கும் "கொள்ளை அரசியல்" பற்றி பேசவே மாட்டார்கள்.
ஆனால் இவர்கள் விவாதிக்க வேண்டிய தலைப்புகள், தமிழகக் கட்சிகளுக்குச் சொல்ல வேண்டிய அறிவுரைகளை மறந்தும் கூடச் சொல்ல மாட்டார்கள்.
அரசியல் கட்சிகளுக்கு எப்பாடாடுபட்டாவது அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்.
ஊடகத்திற்கு விவாதத்திற்கு ஏதாவது தலைப்பு கிடைத்து டிஆர்பி ஏற்ற வேண்டும்.
கேட்டபவனும், பார்ப்பவனும் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியது. அதனால் தான் வாக்காளர்கள் தெளிவாக மாறியுள்ளனர்.
"எங்கள் வீட்டில் ஏழு பேர். ஏழாயிரத்தை எடுத்து வை. நீ சொல்ற சின்னத்துக்கு ஓட்டுப் போடுகிறோம்".
சமீபத்தில் கிராம அளவில் நடந்த (உள்ளாட்சி) தேர்தலில் சர்வசாதாரணமாக 50 லட்சம் 75 லட்சம் செலவளித்த நெருங்கிய நண்பர்களைத் தனிப்பட்ட முறையில் நான் அறிவேன்.
"ஒரு வருடத்தில் எடுத்து விடலாம்" என்று தைரியமாகப் பேசினார்கள்.
மோடி வைத்தார் ஒரு ஆப்பு.
திட்டத்தைச் சொல். கலந்து பேசு. திட்டங்களை உருவாக்கு. உன் பெயரில் பணம் எதையும் கையாள முடியாது. இணையம் வழியே எவருக்குச் செல்ல வேண்டுமோ? அவர்களுக்கு அந்தப் பணம் சென்று விடும். வேலை முடிந்த விசயங்கள் முழுமையாகத் தெரிய வேண்டும்.
சம்பாரிக்க முடியும் என்ற நினைப்பில் வந்தவர்கள் கலங்கிப் போய் நிற்கின்றனர்.
20 comments:
உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என்ற வழக்கு அரசியலுக்கு மட்டும் பொருந்தாதோ ஜோதிஜி.!
அரவிந்த் கேஜ்ரிவால் தன்னுடைய உயரம் வீச்சு என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு பிரசாந்த் கிஷோர் வேண்டியிருக்கிறது! PK வகுத்துக் கொடுத்த உத்திப்படி ஹனுமான் சாலிசாவை ஒப்பிக்க வேண்டியிருக்கிறது. தேர்தலில் ஜெயித்தவுடன் கூட ஹனுமான் மீதான பக்தியை நன்றியறிவிப்பில் சொல்லியாக வேண்டியிருக்கிறது .
ஊடகங்களுக்கு நொறுக்குத்தீனியாக கேஜ்ரிவால் வெற்றி இன்னும் ஒருசில நாட்களுக்கு வேண்டுமானால் பேசுபொருளாக இருக்கலாம்! அதுவும் கேஜ்ரிவாலுக்காக அல்ல, பிஜேபியை வெறுப்பேற்ற உதவுகிற பானகத்துரும்பாக இருப்பதைப்பற்றி மட்டுமே!
இன்னொரு விவரம் கூட இணையத்தில் கிடைக்கிறது. டில்லியை சேர்த்து இப்போது 13 மாநிலங்களில் பிஜேபி தான் எதிர்க்கட்சி என்று! ஆனால் காங்கிரஸ் பூஜ்யமாகிப் போனதைப் பற்றியோ அகில இந்திய அளவில் அதற்கு மாற்றாக யார் இருப்பார்கள் என்பதுபற்றியோ யோசித்துக்கூடப் பார்க்கமாட்டார்கள்! வெறும் கூச்சல் அரசியலுக்காகாது!!
மன்னிக்கவும் , டெல்லியில் அந்த காலத்திலேயே , வசதிகள் ஒன்றும் இல்லையெனினும் , டெல்லி தமிழ் எடுகேஷன் டிரஸ்ட் என்கிற அமைப்பு ஒரு 10 + பள்ளிகளை பராமரித்து வந்தது , அதில் படித்தவர்கள் எல்லாம் மிக பெரிய மனிதர்கள் இன்று -அது போல மற்ற மொழி சங்கங்களும் பள்ளிகள் நடத்தின - நிறய கான்வென்ட் பள்ளிகளும் உண்டு - டெல்லி காத்தலிக் அமைப்பு நிறைய பள்ளிகளை நடத்துகிறது , பணம் ரொம்ப ஆகும், அட்மிஷன் கிடைப்பது ரொம்ப கஷ்டம். - அவர்கள் ஏழைக்காக ஒரு பள்ளி கூட நடத்துவதாக எனக்கு தெரியாது . ( 10+ தமிழ் பள்ளிகளில் கட்டணம் சில ரூபாய்கள் மட்டுமே அந்த காலத்தில் ) அரசு பள்ளிகள் என்பது மிக மிக குறைவு , அரசு பள்ளிகள் எதனை, அதில் கடந்த வருடங்களில் என்ன சதவிகிதம் தேர்ச்சி, drop out எவ்வளவு ? போன்ற விவரங்களை பார்த்தால் - இது ஒன்றும் பெரிய புரட்சி இல்லை என தெரியும் . நீங்கள் தான் மெச்ச வேண்டும் கெஜ்ரிவாலை.
டெல்லியின் சுகாதாரம் - AIIMS , Safdarjang , Ganga Ram போன்ற மிக பெரிய மருத்துவமனைகள் பெரும் பனி ஆற்றுகிறது - கெஜ்ரிவால் தொடங்கிய ஆரம்ப சுகாதார நிலையம் வெறும் optics மட்டுமே ....
கொஞ்சம் யாரவது டெல்லி வாசியிடம் பேசுங்கள் - ஊழல் பற்றி சொல்வார்கள்.- சிறுபான்மை மக்களின் சிதறா ஓட்டை பற்றி லாவகமா தவிர்த்து விட்டீர்கள் .
டெல்லியில் மொத்த ஜனத்தொகையில் 10 சதவிகிதம் தான் இஸ்லாமியர். அதுவும் இரண்டு தொகுதியில் மட்டுமே 30 சதவிகிதம். இப்போது சொல்லுங்க சுந்தர்.
உங்களுக்கு இன்னோரு பெசல் ஐட்டம் உண்டு.
பாஜக செய்ய வேண்டியது
1. அடுத்த நான்கு வருடங்களுக்கு நிர்மலா அக்காவைப் பத்திரிக்கையாளர்களிடம் பேசவிடக்கூடாது. அக்காவுக்குப் பேசத் தெரியவில்லை. வாயைத் திறந்தாலே வம்பு தான் பெருகுது. முதலில் அக்கா ஜிஎஸ்டி இணையத்தைச் சரி செய்யாமல் சீட்டை விட்டு எந்திரிக்கக்கூடாது என்று மோடி உத்தரவிட வேண்டும். கட்டிய பணம் 90 நாள் கழித்து வரும் என்றார்கள். ஒன்றும் நகர்வதாகத் தெரியவில்லை. முன்கூட்டியே கட்ட வேண்டியிருப்பதால் தலையைப் பிச்சுக்கிட்டு அலைய வேண்டியதாக உள்ளது.
2. அடுத்த நான்கு வருடங்களுக்குப் பாகிஸ்தான் என்ற வார்த்தையை பாஜக வில் உள்ள எவரும் பேசவே கூடாது. பேசியவர்கள் வாயில் குயிக்பிக் வைத்துத் தைத்து விட வேண்டும்.
3. டெல்லி தேர்தலில் அனுமனைக் கொண்டு வந்து சிரிப்பாய் சிரித்தது போல இனி எந்தத் தெய்வங்களையும் கொண்டு வரக்கூடாது. கேஜ்ரிவால் அனுமன் சாலிசா மந்திரத்தை அட்சர சுத்தமாக கூட்டத்தில் பாடத் தொடங்க பயபுள்ளைங்க நடுங்கிப் போய் இதுவும் பால் அவுட்டா என்று பார்க்கத் துவங்கினர்.
4. அமித்ஷா எல்லா இடங்களிலும் வாயால் வடை சுட முடியாது என்பதனை உணர வேண்டும். சாதாரணக் குடும்ப பட்ஜெட் ல் 5000 முதல் 6000 ரூபாய் மிச்சப்படுத்திய கேஜ்ரிவால் பார்த்து தீவிரவாதி என்று சர்வசாதாரணமாகச் சொல்லிவிட்ட தைரியம் ஆச்சரியமாகவே உள்ளது. 400 க்கும் மேற்பட்ட இவர் உருவாக்கிய எளிய மருத்துவமனைகள் மூலம் 42 சதவிகித மக்கள் பயன்படுத்திய காரணத்தால் தனியார் மருத்துவமனை காத்தாடுது. மக்கள் இவரை விடுவார்களா?
பத்து சதவிகிதம் பத்தாதா ? - நான் 30 வருஷம் முன்பு டெல்லியில் இருந்த பொழுதே ரெண்டு வகை பஸ் டிக்கெட் தான் ஒன்னு 40 காசு, அல்லது 50 காசு , அருமையான மதர் டயரி மூலம் சூப்பர் பால், ரேஷன் கடையில் , நல்ல ஒண்ணாந்தர அரிசி மிக குறைந்த விலையில் - டெல்லி எப்போதுமே , இந்தியாவுக்கு செல்ல பிள்ளை தான் - நியாயமாக பார்த்தால் - மின்சாரமும், தண்ணீரும் இலவசமாக கொடுக்க கூடாது , என்ன செய்வது , உங்களை போன்ற , நன்கு படித்த, பண்பாளன் , அனுபவசாலி - இதை வரவேற்கிறீர்கள் - டெல்லியில் உள்ள ஒவ்வொரு வீடும் , தோட்டமும் பார்த்தல் இப்படி சொல்ல மாட்டிர்கள் , சர்தார் அல்லாத பஞ்சாபி என்ற ஒரு சமூகம் டெல்லியில் நிறைய உண்டு , அவர்களை பற்றி பேசாமல் இருப்பது நல்லது... கமலஹாசன் பாராட்டியிருக்கிறார் , அது ஓன்று போதாதா , கெஜ்ரிவாழ் எப்படிப்பட்டவர் என்று அறிய..
நான் இலவசங்களை எதிர்க்கின்றேன். அதற்கு முன்னால் கீழ்க்கண்ட விசயங்கள் குறித்து உங்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆசை.
1. இடஒதுக்கீடு என்பது சட்டமன்றம் பாராளுமன்றம் தொடர்புடையது. மக்கள் தேர்ந்தெடுக்கின்றார்கள். மக்களுக்குத் தேவையான சட்டங்களை இயற்றுகின்றார்கள். ஆனால் ஒவ்வொருமுறையும் நீதிபதிகள் இடஒதுக்கீடு விசயங்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றார்கள். நீக்க வேண்டும் என்கிறார்கள் ஏன்? இந்தியா முழுக்க ஒரு கோடிக்கும் மேல் நிலுவையில் உள்ள வழக்குகளை எப்போது நாம் தீர்க்கப் போகின்றோம். இந்த சூழலில் இவர்களுக்கு கோடை கால விடுமுறை குளிர்கால விடுமுறை தேவையா? இரண்டு ஷிப்ட் போட்டு தானே வேலை செய்யனும்?
2. இதுவரையிலும் இந்திய அரசியல்வாதிகள் செய்த ஊழல்களில் ஒரு சதவிகிதமானவர்களுக்குக் கீழே தான் தண்டனை பெற்றுள்ளனர். ஏன்? மீதி உள்ளவர்கள் எப்போது தண்டனை பெறுவார்கள்?
3. இதுவரையிலும் கடந்த 50 ஆண்டுகளில் எத்தனை லட்சம் கோடி கார்ப்ரேட் பெரிய நிறுவனங்களுக்கு வரிச் சலுகை என்ற பெயரில், வராக்கடன் என்ற பெயரில் தள்ளுபடி செய்யப்பட்டது. கட்சி மாறினாலும் ஆட்சி மாறினாலும் காட்சி மாறுவதில்லை. ஏன்? இவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகையை ஒப்பிடும் போது ஏழை எளிய மக்கள் பெறுவது 2 சதவிகிதம் கூட இருக்காதே சுந்தர்.
வல்லவனுக்கு வல்லவன். அதுவும் நல்லவனாக இருந்தால் யார் என்ன செய்ய முடியும்?!!
இங்கு நல்லவன் என்பது ஓரளவுக்காவது மக்களுக்கு மனதார நல்லது செய்வது. ஏனெனில் யாரும் நூறு சதவிகிதம் நல்லவனாக இருக்க முடியாத துறை அரசியல்.
சபாஷ் , சரியான போட்டி - முதலில் நம்பர் 1 இல் - ரெண்டு பாயிண்ட் a ) இதே பாராளுமன்றம் இந்த இட ஒதுக்கீடு ஒரு குறிப்பிட்ட சமயம் வரை தான் , என்று சொன்னதாக நினைவு - பாராளுமன்றம் என்ன சட்டம் இயற்றினாலும் , நான்காவது தூணான நீதிமன்றம் அப்பப்ப வரும் - b) வழக்குகள் நிறைய இருப்பது - நிறைய கோர்ட்டுகளில் , வக்கீல், நீதிபதி , தாளாளர் , எல்லாரும் ஒரு மாபியா போல செயல் படுகின்றனர் - கம்ப்யூட்டர் , apps , digital , camera இதுவெல்லாம் வந்தால் - எல்லா கேஸ்களும் பறந்து போகும்.
2) நான் முன்பே சொல்லியிருக்கிறேன் - அருண் ஜைட்லீ ஒரு முக்கியமான காரணம் , மேலும் மோதியின் இயல்பு , பழி வாங்குதல் கிடையாது ( MK vs JJ போல இல்லை ) - முக்கிய காரணம் - கோர்ட் , அரசியல்வாதி , கிரிமினல், புரோக்கர், போலீஸ் இவர்களின் கூட்டு களவாணித்தனம் தான்.
3) இதை நீங்கள் ஓரளவு புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன் - நம்புகிறேன் , இலவசம் , இலவசம் என்று எல்லாருக்கும் கொடுத்தால் , ஒரு உந்துதல் இருக்காது , வேலை நடக்காது, வேலை இருக்காது, உற்பத்தி இருக்காது , படிப்பு இருக்காது , கற்றல் இருக்காது , திறமை இருக்காது - it’s a recipe for total disaster - if you haven't read so far , please read Atlas Shrugged by Ayn Rand - big book ….but read it
சேற்றில் முளைத்த செந்-தாமரை...?
இந்திய மக்கள் அதிகம் எதிர்பார்ப்பதில்லை. தங்கள் கிராமத்தில் நல்ல பள்ளிக்கூடம், மருத்துவமனை,ரேசன் கடை, குடிநீர்க்குழாய்,சாலைவசதிகள், மின்சார வசதி அவ்வளவு தான். 70 ஆண்டுகளில் ஏன் இந்தியாவால் சாதிக்க முடியவில்லை. 700 கோடி ரூபாய் ல் வீடு கட்டு ஒருவர் வாழ முடிகின்றது. 7 லட்சம் என்பதனை இன்னும் இங்கு பார்க்காமல் 50 கோடி மக்கள் இருக்கின்றார்கள்.
https://www.amazon.in/Atlas-Shrugged-Ayn-Rand-ebook/dp/B003V8B5XO/ref=tmm_kin_swatch_0?_encoding=UTF8&qid=1581564445&sr=8-1
vibrant and powerful novel of ideas.'' --New York Herald Tribune
''Ayn Rand is destined to rank in history as the outstanding novelist and most profound philosopher of the twentieth century.'' --New York Daily Mirror
''Atlas Shrugged is not merely a novel. It is also--or may I say--first of all--a cogent analysis of the evils that plague our society.'' --Ludwig von Mises, philosopher and economist
''A writer of great power. She has a subtle and ingenious mind and the capacity of writing brilliantly, beautifully, bitterly.'' --The New York Times
இலவசம் , இலவசம் என்று எல்லாருக்கும் கொடுத்தால் , ஒரு உந்துதல் இருக்காது , வேலை நடக்காது, வேலை இருக்காது, உற்பத்தி இருக்காது , படிப்பு இருக்காது , கற்றல் இருக்காது , திறமை இருக்காது
எல்லாமே சரி தான். இங்கு எல்லா மக்களுக்கும் தேவையான அடிப்படை கட்டமைப்பு இன்னமும் கூட உருவாக்கப்படவில்லையே. போலியோ கால் உள்ளவன், சூம்பிப் போன கால் உள்ளவன், சத்துக்குறைபாடு உள்ளவன் இவர்களுடன் மிகுந்த ஆரோக்கியமானவர்கள் ஓடிக் கொண்டு இருக்கின்றார்களே? இது சரியான போட்டியா?
பாஜக உங்களை அன்புடன் வரவேற்கிறது.
இப்படிக்கு
திண்டுக்கல் மோடி பாசறை.
எல்லாரும் ஒரே பந்தயத்தில் தான் ஓடுகிறார்கள் என்ற அடிப்படை வாதமே சரியில்லை -
இந்த NEET போராட்டமும் , IIT போன்ற இடங்களில் நடக்கும் சர்ச்சைகளை நம் அடிப்படை எண்ண ஓட்டத்தையே அசைத்திருக்கிறது - நீங்கள் சொல்லும் job reservation மிக மிக சிறிய பகுதி - ஒரு கடை நடுத்துபவரோ அல்லது ஒரு மெக்கானிக் கடை நடுத்துபவரோ - கால், கை சரியில்லாதவரை கருனை கொண்டு வேலையில் அமர்த்துவது இல்லை - சற்று கவனித்தால் தெரியும் , அந்த முதலாளி சரி சம ஊதியம் வழங்கவது இல்லை - pure exploitation .
இந்த அடிப்படை வசதி - கொஞ்சம் பார்க்கலாம் , எனக்கு தெரிந்த , நல்ல வசதியான நிறைய குழந்தைகள் , புஸ்தகம், நல்ல பள்ளி, கணனி , படிக்க நல்ல குளிர் சாதன அறை , சமயத்திற்கு டீ / காம்பிளான் /பால் / பழம் - அவர்கள் நன்றாக படிப்பார்கள் என உறுதியாக கூற முடியுமா - இந்த பைக் / டிக் -டாக் / இத்தியாதிகள் படிப்பு பக்கமே போக வேண்டாம் என பார்த்து கொள்கிறது ( இதை போல தான் - UK /USA வசதியான நாடாய் இருந்தாலும் - அந்த ஊரை சேர்ந்தவர்கள் படிப்பிலோ அல்லது ஆராய்ச்சியிலோ பெரிதாக சாதிப்பதில்லை .
சினிமா அல்லது காலை துறையை எடுத்து கொள்வோம் , திறமை தானே மூலதனம் - எஸ் வீ. சேகர் ,ஆயிரம் ( அல்லது அதற்க்கு மேல் ) நாடகம் நடத்தியிருக்கிறார் என்றால் , மக்கள் ரசித்ததினால் தானே - கவுண்ட மணி என்ன கவுண்டரா ? எல்லாரும் சூப்பர் ஸ்டார் ஆக முடியுமா ?
அந்த Ayn Rand புத்தகத்தை படிக்க முயற்சி செய்யுங்கள் , அநேகமாக முடியாது ( ஆயிரம் + பக்கம் ) -
நான் பார்த்தவரை அல்லது படித்தவரை அரசியல் எண்ணங்கள் எல்லாமே ஏதோபெர்செப்ஷனாகவே இருக்கிற்து
நல்ல கட்டுரை. பாராட்டுகள்.
அரசியல்! பொதுவெளியில் பல விஷயங்களைச் சொல்வதற்கில்லை!
அரசியல் என்றாலே நமக்கு பிடிக்கவேண்டும் என்பதன் அடிப்படை தானே?
நன்றி
Post a Comment