Monday, February 10, 2020

Amazon 2025

நானும் பிடிவாதக் கொள்கை கொண்டு வாழ்ந்தவன் தான். உள்நாட்டுப் பொருட்கள், உள்நாட்டு உற்பத்தியை ஆதரிப்பது என்ற எண்ணத்தை இரண்டு வருடத்திற்கு முன்பு தான் மாற்றினேன். ஏன்?

24 மாதங்களுக்கு முன்பு அமேசான் அறிமுகம் ஆனது. இன்று அமேசான் என்னை முழுமையாக மாற்றியுள்ளது. அப்போது கிண்டில் என்பது எனக்கு அறிமுகம் ஆகவில்லை.

இன்று வரையிலும் அமேசான் (இந்தியா) நட்டத்தில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இப்போது 2025 இலக்கை அடிப்படையாகக் கொண்டு 7000 கோடியை இங்கே முதலீடு செய்யப் போகின்றது.



ஏன்? எப்படி? எதற்கு?

"திருப்பூர் விட்டு வெளியே வரவேண்டும் அண்ணாச்சி" என்ற வலையுலக நிதியமைச்சருக்கு இந்த நூலைச் சமர்ப்பித்துள்ளேன்.

"மிகக் கச்சிதமாக கிண்டில் மொழி வந்துள்ளது" என்று பாராட்டிய வலையுலக அபூர்வப் பீஷ்மருக்கு அன்பு காணிக்கை.

"இவர் கொள்கை எனக்குப் பிடிக்காது" என்ற "நல்ல" கட்சித் தம்பிக்கு இந்நூல் அன்புப் பரிசு.

"உங்கள் புத்தகம் தேவை. இலவசம் முக்கியம்" என்ற நண்பருக்கு நாளை மதியம் 1.30 முதல் இலவசமாக வாசிக்க முடியும். (11.02.2020 மதியம் 1.30 முதல்  12.02.2020)

கிண்டில் மொழி நூலுக்குத் தொடர்ந்து இடைவிடாமல் அமேசான் செய்து கொண்டிருக்கும் விளம்பரமென்பது முதன்மை எழுத்தாளர்களுக்குச் செய்ய வேண்டியது. ஆனால் எனக்கும் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

அனுபவங்கள் வழியே உள்ள நிகழ்வுகளை, அந்தந்த சமயங்களில் நான் பார்க்கும் சமூகத்தை, அது சரியோ, தவறோ, தேவையானதோ, தேவையற்றதோ இவற்றை ஆவணப்படுத்துவதே என் எழுத்தின் கொள்கை. இதன் பொருட்டே நான் தொடர்ந்து எழுதுகிறேன். ஆனால் இம்முறை என் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு தரவுகளின் அடிப்படையில், வாசித்த கட்டுரைகளின் அடிப்படையில் குறுகிய கால வாசிப்பாக இதனை எழுதியுள்ளேன்.

கிண்டில் அன் லிமிட் ல் உள்ளவர்கள் கீழே இணைப்பின் வழியாக இப்போதே படிக்கலாம்.

#AmazonOneBillionInvestment-INDIA - 2025


8 comments:

சிகரம் பாரதி said...

அமேசான் கிண்டில் போன்றவை நல்லது தான். ஆனால் அரசுகள் முயற்சி எடுத்தால் இதைப் போன்ற உள்ளூர் முயற்சிகளை இலகுவாக வளர்த்தெடுக்கலாம்.

நமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பல புதிய செய்திகளை அறிந்தேன்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல தகவல் ஜோதிஜி. நானும் தரவிறக்கம் செய்து கொண்டேன். விரைவில் படிக்கிறேன்.

எனது பயணக் கட்டுரை ஒன்றையும் கிண்டில் வழி புத்தகமாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளேன்.

ஸ்ரீராம். said...

அனைத்து 'வகை' நண்பர்களையும் கவர் செஞ்சிருக்கீங்க போல!

வருண் said...

***நானும் பிடிவாதக் கொள்கை கொண்டு வாழ்ந்தவன் தான்.***

One thing Americans know much better than anyone is HOW TO DO BUSINESS and ATTRACT even people like you in "their way"! Let it be google or fb or amazon, it is American business machines!

ஜோதிஜி said...

1. நம் குடும்பத்தில் ஒழுக்கம் குறித்து தான் முதல் 20 வருடத்தில் போதித்து வளர்க்கின்றார்கள். தொழில் சிந்தனைகளை எவரும் எடுத்துச் சொல்லி வளர்ப்பதில்லை. அதற்குத் தேவையான பயிற்சி ஆளுமைத்திறனை 1 சதவிகித மாணவர்கள் பெற்று இருப்பார்களா? என்பது சந்தேகமே. ஆனால் நீங்க சொன்ன அமெரிக்க நாகரிகம் எல்லாவற்றையும் வெளிப்படையாக அனுமதித்து புரிய வைத்து தெளிய வைத்து உருவாக்கி விடுகின்றது.

2. இங்கு சினிமா தவிர வேறு எதையும் கற்றுக் கொள்ள முடியாத சூழல் தான் இன்னமும் உருவாகி உள்ளது. அதனையே கச்சிதமாக கொண்டு செல்லவும் செய்கின்றார்கள். கடைசியில் சிந்தனை அளவில் மொக்கை அறிவு.

3. இவரின் வாழ்க்கையைப் பற்றி படித்த போது என்னால் இனி இதற்கு வாய்ப்பில்லை. மகள்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றே நினைத்துக் கொண்டேன்.

வருண் said...

நான் உங்க புத்தகம் அமசான் கிண்ட்ல கிடைப்பதற்கு என்னுடைய இக்கருத்தை சம்மந்தப் படுத்தாமல் படிங்க. நான் உங்களையோ யாரையுமே காலத்திற்கேற்ப மாறுவதை விமரிசிக்க முன் வரவில்லை.

இன்று ட்ரம்ப் என்ன செய்கிறார். உலகறிய நாங்கதான் உலகில் உயர்ந்தவர்கள். எங்களை பகைத்துக் கொண்டால் சைனாவாக இருந்தாலும் சரி ஜப்பானாக இருந்தாலும் சரி உங்க நிலைமை கஷ்டம்தான் என்கிறார்.

இதற்கு காரணம் என்ன?

நம்ம ஊரில் முகநூல், ட்விட்டர், அமசான் கிண்ட்ல் இல்லாமல் வாழ முடியாது என்கிற நிலைப்பாடு உருவாகிவிட்டது. ப்ளாக்ரையும் சேர்த்துக்கிறேன். இல்லைனா நான் மட்டும் யோக்கியன்னு சொல்ல வர்ர மாதிரி ஆகிவிடும்.

கேள்வி?

இவைகள் எல்லாம் இல்லாமல் இன்று நம்ம வாழ முடியாதா? இவைகள் ஆக்ஸிசன் போலவா நமக்கு? இல்லைனா அதுபோல் ஒரு சூழலை நாமே உருவாக்கிக் கொண்டு நாசமாகப் போய்விட்டோமா? அமெரிக்கா நம்மைக் கெடுத்து நம்மை அடிமையாக்கிக் கொண்டதுனு கூட சொல்லலாம். சரியா? இதை நியாயப் படுத்த முயல வேண்டாம். இப்படித்தான் நாம் சூப்பர் பவர்களால் கண்ட்ரோல் செய்யப் படுகிறோம்னு சொல்ல வர்ரேன். அவ்ளோதான். இதில் குழந்தைகள், சிறுவர்கள், வெடலைகள் மட்டுமல்ல நானும் நீங்களும் "கில்ட்டி"தான்.

ஜோதிஜி said...

நீங்கள் சொன்ன பலவற்றை அன்றாட வாழ்க்கையில் இன்று வரையிலும் கடைபிடிக்கின்றேன். 1. வெளியே எங்கே சென்றாலும் (வீட்டுக்கு அருகே உள்ள இடங்கள்) அலைபேசியை தவிர்த்து விடுவதுண்டு. 2. அவசர தேவையின்றி இரவில் அலைபேசி கணினி பயன்படுத்துவதில்லை. 3. முக்கிய இடங்கள், முக்கிய சந்திப்புகள் இல்லாத போது எளிமையான கவர்ச்சியற்ற உடைகள் 4. அவ்வப்போது பட்டினி கிடந்து அதிக பசியெடுக்க முயற்சிப்பது. 5. வீட்டுக்கு வரும் வயதான பெண்மணிகள் கொண்டு வரும் பொருட்கள் வாங்கி ஆதரிப்பது. இது போன்ற பல. நீங்க சொன்ன மாதிரி அமெரிக்கா, அமேசான் மற்றும் சூப்பர் பவர் எவரும் நம்மை ஆள்வதில்லை. நாம் தான் விரும்பி அவர்களிடம் நம்மை ஒப்படைக்கின்றோம். நம் கட்டுப்பாடுகள் நம்மை வழி நடத்த வேண்டும். ஆனால் நம்மவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை வந்து விடுகின்றது. எது உண்மை? எது நிஜம் என்பதே படித்தவர்களுக்கே புரியவில்லை.