உலகம் முழுக்க முதலீடு செய்து, தன் புத்திசாலிதனத்தால் மோடி அரசாங்கம் கூட தன்னை, தன் குடும்பத்தை நெருங்க முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளவர்களை நாம் பாராட்ட வேண்டும். பொறாமைபடக்கூடாது.
Dr. Swamy letter to PM on P Chidambaram.
வருமான வரித் துறையின் சென்னை புலனாய்வு பிரிவு முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவர் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு வெளி நாடுகளில் இருக்கும் சொத்து மற்றும் வங்கி இருப்பு பற்றிய முழு விவரங்களை 2௦௦ பக்கங்களுக்கு மேல் அறிக்கையாக வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளது.
பி ஜே பி கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி அண்மையில் ஊடகவியலார் சந்திப்பின் போது இந்த சொத்து விவரங்கள் அடங்கிய அறிக்கையின் ஒரு பகுதியை வெளியிட்டார்.
ஆனால் ப. சிதம்பரத்துக்கு வேண்டிய பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் இச்செய்தியை வெளியிடாமல் மறைத்துவிட்டன.
வருமான வரி துறையும் அமலாக்கத் துறையும் நடத்திய பல சோதனைகளின் மூலமாகக் கண்டுபிடிக்கப்பட்டு அறிக்கையாக அளிக்கப்பட விவரங்களை பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய தார்மீகக் கடமை சமூகப் பொறுப்புணர்வு உடைய எம்மைப் போன்ற செய்தி தளங்களுக்கு இருப்பதால் அவற்றை நாங்கள் இங்கு வாசகர்கள் வாசித்து அறிவதற்காகத் தருகிறோம்.
கார்த்தி சிதம்பரத்துக்கும் அவரது நிறுவனத்துக்கும் பிரிட்டனில் மெட்ரோ வங்கியில் 21 வங்கிக் கணக்குகள் உள்ளன.
சிங்கப்பூரில் உள்ள ஓ சி பி சி வங்கியில் ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் சிக்கிய கார்த்தியின் Advantage Strategic Consulting Pte Ltd, என்ற நிறுவனத்துக்கு நான்கு வங்கிக் கணக்குகள் உண்டு.
ஸ்பெயின் நாட்டில் சபாடேல் அட்லாண்டிக்கோ மற்றும் லா காக்சியா வங்கி ஆகிய இரண்டிலும் கணக்குகள் உள்ளன.
மொனாக்கொவில் பார்க்லேஸ் வங்கியில் கணக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அது போல பிரான்சு நாட்டில் மார்செயில் பி என் பி பரிபாஸ் வங்கியிலும் சுவிட்சர்லாந்து நாட்டில் யூ பி எஸ் வங்கியிலும் கார்த்திக்கு வங்கி கணக்குகள் உண்டு.
இந்த செய்தியின் கீழ் புலனாய்வு துறையினர் கண்டுபிடித்த கார்த்திக்கு 21 வெளி நாட்டு வங்கிகளில் இருக்கும் ரகசிய வங்கி கணக்கின் முழு விவரங்களும் தரப்பட்டுள்ளது.
புலனாய்வு குழுவினர் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகங்களில் நடத்திய சோதனையின் போது அங்கு பறிமுதல் செய்த கணினி வன்கலத்தின் உதவியுடன் ப. சிதம்பரம், அவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோரின் பேரில் கூட்டாக பிரிட்டனில் கேம்ப்ரிட்ஜ் நகரில் ஒரு சொகுசு பங்களா வாங்கப்பட்டிருப்பது அம்பலமாகி உள்ளது.
இந்த பங்களாவின் முகவரி 5, ஹோய்பேன் க்ளோஸ், கேம்ப்ரிட்ஜ், CB237AQ. இந்த பங்களா இலண்டனில் உள்ள எட்மன்ட் சுலே ஹோல்ட் மற்றும் ஹீதர் ஹோல்ட் என்பவரிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது.
இதற்கான பணம் இலன்டன் மெட்ரோ வங்கியில் உள்ள கார்த்தியின வங்கி கணக்கான 16714313 இல் இருந்து செலுத்தப்பட்டுள்ளது.
இந்த சொகுசு பங்களா பற்றிய தகவலை ப. சிதம்பரமோ கார்த்தியோ இந்தியாவில் காட்டிய சொத்து விவரப் பட்டியலில் காட்டவே இல்லை. மறைத்து விட்டார்கள்.
ப. சிதம்பரம் தான் இராஜ்ய சபா உறுப்பினராக இருந்த போதும் அமைச்சரான போதும் அரசுக்கு அளித்த சத்தியப் பிரமாணத்தில் இந்த சொகுசு பங்களாவைத் தனது சொத்து விவரப் பட்டியலில் சேர்க்கவில்லை.
2௦16ஆம் ஆண்டு மே மாதம் அளித்த சொத்துப் பட்டியலில் நளினியின் சொத்து விவரத்தில் 3இல் ஒரு பங்கை மட்டுமே காட்டியுள்ளனர். அந்த சொத்தின் மதிப்பையும் மிகவும் குறைத்து வெறும் 1.55 கோடியாக மட்டுமே காண்பித்துள்ளனர். ஆனால் இலண்டனில் இவர்களுக்கு இருக்கும் சொகுசு பங்களாவின் மதிப்பு மட்டுமே 85 கோடி ரூபாய் ஆகும்.
பிரிட்டனில் சொமேர்செட் என்ற ஊரில் சரிட்ஜ் ஃபார்ம் என்ற பண்ணை வீடு 88 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. இதை வாங்க கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் ஸ்ட்ராட்டஜிக் பிரைவேட் லிமிட்டட் என்ற சிங்கப்பூர் நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து பணம் வழங்கப்பட்டுள்ளது.
சொத்துப் பதிவேட்டில் இதன் மதிப்பு ஒரு மில்லியன் பவுண்டு என்று குறிக்கப்பட்டுள்ளது.
கேம்ப்ரிட்ஜில் இன்னொரு சொத்தும் கார்த்தியால் வாங்கப்பட்டுள்ளது. இதன் முகவரி 29, Meade House, ceres என்பதாகும்.
வெளி நாடுகளில் கார்த்தி சிதம்பரம் பல்வேறு முதலிடுகளை ரியல் எஸ்டேட் அல்லது மனையடி தொழிலில் செய்துள்ளார்.
இலண்டன், துபாய், தென்னாப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேஷியா, ஸ்ரீ லங்கா, பிரிட்டிஷ் வெர்ஜின், பிரான்ஸ், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, கிரீசு, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பல தொழில்களைச் செய்து வருகிறார்.
ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் இருந்த காலத்தில் அதாவது 2006 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் கார்த்தி இந்நாடுகளில் ஏராளமாக முதலீடு செய்திருக்கிறார்.
இந்தச் சொத்துக்களின் மொத்த மதிப்பு மூன்று பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாகும் என்று புலனாய்வு அமைப்புகள் கருதுகின்றன.
முதல் உலக நாடுகளில் கார்த்தி குடும்பத்தினர் ஏன் மனையடி தொழிலில் முதலீடு செய்தனர் என்பதற்கான காரணத்தை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
ஸ்ரீ லங்காவில் லங்கா பார்ச்சூன் ரெசிடன்சிஸ் என்ற நிறுவனம் ஆடம்பர சொகுசு விடுதிகளை நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தில் கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனம் ஏராளமான பங்குகளை வாங்கியிருக்கிறது.
The Waterfront’, ‘Weligama Bay Resort’ மற்றும் Emerald Bay Hotel என்ற சொகுசு விடுதி நிறுவனங்களிலும் கார்த்தியின் நிறுவனத்துக்குச் சொந்தமான பல ஆடம்பர விடுதிகள் உள்ளன.
தென் ஆப்பிரிக்காவில் மூன்று திராட்சை தோட்டங்களும் பண்ணை வீடுகளும் கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனத்துக்கு சொந்தமாக உண்டு. இவற்றை அவர் துபாய் மூலமாக பணம் செலுத்தி வாங்கினார்.
கிராபோவ் என்ற நகரத்தில் உள்ள ரோவே ஃபார்ம் , ஆஷ்டன் நகரில் உள்ள கேப் ஆர்ச்சட்ஸ் மற்றும் வைன் யார்ட்ஸ் பிரைவேட் லிமிட்டட், மற்றும் சென்த்விலேட் என்டேர்பிரைசெஸ் ஆகிய நிறுவனங்களில் கார்த்திக்கு பண்ணை வீடுகளும் திராட்சை தொழிற்சாலைகளும் உண்டு.
கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனம் அட்வாண்ட்டேஜ், துபாயில் உள்ள டேசர்ட் டியுன்ஸ் பிராப்பர்ட்டிஸ் லிமிட்டட் என்ற நிறுவனத்திலும் பங்குவாங்கி இருக்கிறது.
இந்த இரு நிறுவனங்களுக்குள் 1.7 மில்லியன் சிங்கப்பூர் டாலர்ஸ் பரிவர்த்தனை நடந்திருப்பதைப் புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள நிறுவனங்களுடன் கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் நிறுவனம் கூட்டுப் பங்கு வைத்திருந்து அதன் மூலமாக ஆசியாவின் சர்வதேச பிரிமியர் டென்னிஸ் லீக் போட்டிகளை நடத்தும் உரிமையைப் பெற்றது.
இவ்வாறு கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் நிறுவனத்துடன் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த SM Arena Complex Corporation, Sports Entertainment Events Management Inc. ஆகிய நிறுவனங்கள் கூட்டு வைத்திருந்தன.
கார்த்தியின் அட்வான்டேஜ் நிறுவனத்துக்கு சிங்கப்பூரில் உள்ள Real Beyond Pte. Ltd. என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் நிதி பரிவர்த்தனைகள் உண்டு.
இநத நிறுவனத்துக்கு மலேசியாவிலும் மூன்று நிறுவனங்கள் உள்ளன. புலனாய்வு அமைப்புகள் இந்நிறுவனம் தாய்லாந்தில் பதினாறு இடங்களில் நிலம் வாங்கி இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது.
கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் நிறுவனத்தின் சிங்கப்பூர் பிரிவு பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் Somerset Surridge Ltd. என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து அதில் நான்கு இலட்சம் சிங்கப்பூர் டாலர்களை முதலீடு செய்திருந்தது.
இது தவிர Full Innovations Ltd என்ற நிறுவனத்திலும் கார்த்தி முதலீடு செய்திருக்கிறார். இந்த நிறுவனமும் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில்தான் உள்ளது.
அங்கெ உள்ள Geben Trading Limited என்ற நிறுவனத்திலும் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சில அலுவலகங்களிலும் கார்த்தி முதலீடு செய்திருக்கிறார்.
கார்த்தி நிறுவனத்தின் பணப் பரிவர்த்தனைகள் புகழ் பெற்ற சுவிஸ் வங்கியான யூ பி எஸ் வங்கி மூலமாகவே நடைபெற்றுள்ளது.
இந்த வங்கியில் யுரோ மற்றும் டாலர் செலாவணி மதிப்பில் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
சிங்கப்பூரில் உள்ள யுனிசன் க்ளோபல் இன்வெஸ்ட்மென்ட் லிமிட்டட் என்ற நிறுவனத்துடனும் கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் நிறுவனத்துக்கு பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
இந்த நிறுவனத்துக்கு கார்த்தியின் நிறுவனம் தனது ஐந்து மில்லியன் சிங்கப்பூர் டாலரை மாற்றியுள்ளது.
மனில்லா மாவேரிக்ஸ் என்ற டென்னிஸ் விளையாட்டு குழுவை வாங்குவதற்காக கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனம் கிராவிட்டாஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டது.
இந்த டென்னிஸ் குழுவின் மொத்த மதிப்பு பன்னிரெண்டு மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இத் தொகையை பத்துத் தவணைகளில் கார்த்தி செலுத்தினார்.
கார்த்தி மலேசியாவில் உள்ள பெனின்சுலார் ஸ்மார்ட் என்ற நிறுவனத்திடம் இருந்து 1.9 மில்லியன் மலேசிய ரின்கிட்சுக்கு ஒரு குடியிருப்பை வாங்கியுள்ளார்.
மலேசியாவில் பல இடங்களில் உள்ள Café’ Coffee Day என்ற கடையை கார்த்தியின் நிறுவனம் பிரான்சைஸ் எடுத்து நடத்தி வருகிறது.
கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனத்துடன் மலேசியா நிறுவனங்கள் பல பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதற்கான ஆவணங்களைப் புலனாய்வு அமைப்பினர் கண்டுபிடித்துள்ளனர்.
2௦௦6 இல் ஏர்செல் நிறுவனத்தை வாங்கிய மேக்சிஸ் நிறுவனம் ஊழலில் சிக்கிய மிகப் பெரிய நிறுவனம் ஆகும்.
வருமான வரி துறையினரும் அமலாக்கத் துறையினரும் முப்பது கோடிக்கும் மேலாக அந்நிய செலாவணியில் பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் நிறுவனம் ஸ்பெயின் நாட்டில் Advantage Estrategia Esportiva என்ற நிறுவனத்தை பார்சிலோனா என்ற நகரில் 2௦12ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது.
இது ஏழு டென்னிஸ் மைதானங்களைக் கொண்ட விளையாட்டு பயிற்சி கல்லூரி ஆகும்.
பிரான்சில் உள்ள பெம்ப்பிலோன் ஆர்கனைசேஷன் என்ற நிறுவனத்தில் கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் நிறுவனம் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளது.
இது தவிர கார்த்தி கிரேக்க நாட்டிலும் ஏதென்ஸ் நகரில் பிசானி ஜான் சகேல்லேரியோஸ் என்ற பெயரில் உள்ள ஒரு நிறுவனத்துடன் நிதி பரிவர்த்தனைகள் வைத்துள்ளார்.
கார்த்தியின் அட்வான்டேஜ் நிறுவனத்துடன் பின் வரும் நிறுவனங்கள் தொழில் தொடர்பு வைத்திருந்தன.
Aircel Televentures, DCB Client, Diageo Scotland Limited, Katra Group, Sri Lanka Export Development Board, Unifi Wealth Management Ltd, VST Tillers Tractors, Carlton Trading Company, Claris Life Sciences’, ITC Centre, Best Land Realty Limited, Essar Steel Limited, Gokul Builders and Estates, S Kumar, INX Media, Reflections, Thiagarajar Mills Private Limited, Saksoft, EL Forge Limited. Saksoft, EL Forge Limited.
வருமான வரி துறையினர் கார்த்தியின் அலுவலகத்தை சோதனை செய்த போது அங்கு கிடைத்த கணினி வன்கலங்கள் [ஹார்டுவேர்] அவர் பலரிடம் பெருந்தொகை கோடி கோடியாகப் பெற்றிருப்பதையும் காட்டுகின்றது.
அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தில் கார்த்தியின் தந்தை நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் கை எழுத்துக்காக முடங்கிக் கிடக்கும் ஆவணங்களில் அவரது கையொப்பத்தைப் பெற்றுத் தருவதற்காக கோடி கோடியாக கார்த்தி இலஞ்சம் வாங்கியிருப்பதும் தெரிய வந்துள்ளது.
ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த காலத்தில் ஐ என் எக்ஸ் மீடியா 2௦௦ கோடி ரூபாய் அந்நிய முதலீட்டுக்கு அவரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பதற்காக சி பி என் ரெட்டி என்பவர் பெரும் பங்குகள் வைத்திருக்கும் நார்த் ஸ்டார் சாப்ட்வேர் சொலுஷன்ஸ் என்ற நிறுவனத்துக்கு அறுபது இலட்சம் ருபாய் இலஞ்சம் கொடுத்தது.
இந்த சி பி என் ரெட்டி கார்த்தியின் அட்வான்டேஜ் நிறுவத்தின் இயக்குனர் ஆவார். கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனத்தின் பொறுப்பும் இவர் வசமே உள்ளது. இவர் கார்த்தியின் பினாமி என்பதும் குறிப்பிடத்தக்கது.
2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி ஐ என் எக்ஸ் மீடியா இன்னொரு இருபதினாயிரம் டாலரை கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனத்துக்கு வங்கி முலமாக வழங்கியுள்ளது. அதற்கான ஆவணங்கள் வருமான வரித் துறையினருக்கு கிடைத்து இருக்கிறது.
கிரீசு நாட்டின் தலை நகர் அதேன்சு நகரில் உள்ள கேபேன் டிரேடிங் லிமிட்டட் என்ற நிறுவனத்தில் இருந்து ஐம்பதினாயிரம் டாலர் சிங்கப்பூரில் உள்ள கார்த்தியின் அட்வான்டேஜ் நிறுவனத்தின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இந்த நிறுவனம் 4,Zaf.Matsa Street, 14564 Athens என்ற முகவரியில் உள்ளது. பி வி ஐ எனப்படும் பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகளில் உள்ள கார்த்தியின் நிறுவனத்துடன் இந்த கேபேன் நிறுவனம் இணைக்கப்பட்டு உள்ளது.
சுவிட்சர்லாந்தின் தலைநகராக உள்ள ஜெனீவா நகரில் கார்த்தியின் நிறுவனத்துக்கும் இந்த கேபேன் டிரேடிங்க் நிறுவனத்தில் இருந்து பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இந்த பரிவர்த்தனைகளுக்கான மின்னஞ்சல் நகல்கள் கார்த்திக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
கிரீசு நாட்டில் சுகாதாரம் மற்றும் மறுவாழ்வு மையங்களுக்கு பணம் அனுப்புவதாக இந்த பணப் பரிவர்த்தனைகளுக்குக் கணக்கு காட்டப்பட்டுள்ளது.
இந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் ப. சிதம்பரத்தின் மேசையில் ஐ ன் எக்ஸ் மீடியா கோப்பு 2௦௦ கோடிக்காக அவரது ஒப்புதலுக்காகக் காத்திருந்த காலத்தில் தான் நடந்துள்ளன.
தங்களது ஐ என் எக்ஸ் மீடியா நிறுவனத்தை இப்போது விற்று விட்ட கொலை குற்றவாளிகளான பீட்டரும் இந்திராணி முகர்ஜியும் அந்நிய முதலீட்டு வாரியத்தின் அனுமதியைப் பெறுவதற்காக ஒன்பது கோடி ருபாய் வரை கார்த்திக்கு இலஞ்சம் கொடுத்துள்ளனர்.
2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலண்டனில் உள்ள நெட் ஓர்க் 18 என்ற ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த அர்டிவியா டிஜிட்டல் யூ கே என்ற நிறுவனத்தில் இருந்து அறுபது இலட்சம் பங்குகளை கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனம் வாங்கியது.
இது நெட் ஒர்க் 18 என்ற நிறுவனம் ப. சிதம்பரத்திடம் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெறுவதற்காகக் காத்திருந்த காலத்தில் தான் நடந்துள்ளது.
நிதி அமைச்சர் ஒப்புதலுக்காக சுமார் 25 கோடி ருபாய் கார்த்தியின் நிறுவனத்துக்கு கை மாறியுள்ளது.
வருமான வரி துறை அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மற்றும் சி சி இ ஏ எனப்படும் பொருளாதாரா நடவடிக்கைகளுக்கான அமைச்சகக் குழுவிடம் இருந்து ஒப்புதல் பெறுவதற்காக பல நிறுவனங்கள் கார்த்தியின் நிறுவனங்களுக்கு அதிகளவில் பணப் பரிமாற்றம் செய்திருப்பதைக் கண்டுபிடித்துவிட்டன.
இவ்வாறு கார்த்தியின் அட்வான்டேஜ் [ASCPL] நிறுவனங்களுக்கு பணம் அனுப்பியவற்றின் பட்டியலில் கிலாரிஸ் லைஃப் சயின்சஸ் மற்றும் டியாஜியோ ஸ்காட்லாண்டு லிமிட்டட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
டியாஜியோ நிறுவனம் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்த இயலாமல் நாட்டை விட்டு ஓடிப் போன விஜய் மால்யாவின் யூ பி ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கி விட்டது.
இவை தவிர [Katra Group, Arcelor Mittal நிறுவனத்தோடு சேர்ந்த Saksoft, Reflections [Spark Capital Advisory Private Limited].ஆகிய நிறுவனங்களும் கார்த்தியின் நிறுவனமான அட்வான்டேஜ்ஜில் [ASCPL] பணம் செலுத்தியுள்ளன.
அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மற்றும் சி சி இ ஏ எனப்படும் பொருளாதாரா நடவடிக்கைகளுக்கான அமைச்சகக் குழுவிடம் இருந்து ஒப்புதல் பெறுவதற்காக காத்திருந்த காலங்களில் இந்நிறுவனங்கள் சுமார் 5௦௦ கோடி ருபாய் வரை கார்த்தியின் பல்வேறு நிறுவனங்களில் பணம் செலுத்தியுள்ளன என்பதை வருமான வரித் துறை ஆய்வறிக்கை தெளிவாக்குகிறது.
PSU வங்கிகள் எனப்படும் பொது துறை வங்கிகளிடம் இருந்து 300 கோடி வரை கடன் வாங்கியதற்காகவும் பேஸ்ட் லேண்டு ரியாலிட்டி என்ற மனையடி வியாபார நிறுவனம் கார்த்தியின் அட்வான்டேஜ் நிறுவனத்துக்கு இலஞ்சம் கொடுத்துள்ளது. இதுவும் வருமான வரி துறையினர் சோதனையின் போது கைப்பற்றிய ஆவணங்களில் சிக்கியுள்ளது.
விஜய் மால்யாவின் யூ பி ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தை வாங்கிய பிரிட்டனை சேர்ந்த டியஜியோ ஸ்காட்லாண்டு லிமிட்டட் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரைச் சந்திப்பதற்கு நேரம் வாங்கி தருவதற்காக கார்த்தியின் அட்வான்டேஜ் நிறுவனத்துக்கு 15,௦௦௦ டாலர் இலஞ்சமாகக் கொடுத்துள்ளது.
பிரிட்டன் நிறுவனத்தின் அதிபர் லார்ட் ப்லைத் என்பவர் இந்தியப் பிரதமரையும் நிதி அமைச்சரையும் சந்திக்க நேரம் வாங்கிக் கொடுத்ததற்காக கார்த்திக்கு நன்றி தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பியதை வருமான வரித்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த மின்னஞ்சலில் இந்த சந்திப்பு நேரம் அமைத்து கொடுத்ததற்கான சேவை கட்டணமாக 15,000 டாலருக்கான ரசீதும் இணைக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்புத் தடை சட்டத்தின் கீழ் பதிவாக வேண்டிய வழக்கு இது என்பதில் ஐயமில்லை.
இந்திய ஓவர்சீஸ் வங்கியுடன் ரஷ்யாவின் நேஷனல் இன்ஸ்டிடியுட் வங்கி [Nazprom] கூட்டாகச் செயல்பட கார்த்தியின் அட்வான்டேஜ் நிறுவனத்தை ஆலோசகராக 2௦௦6 ஆம் ஆண்டில் நியமித்தது.
இதற்கான ஆவணத்தை வருமான வரித்துறையினர் தாம் நடத்திய சோதனையின் போது கண்டுபிடித்தனர்.
ரஷ்ய நிறுவனம் மற்றும் கார்த்தியின் அட்வான்ட்டேஜ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சென்னையில் பல முறை சந்தித்துப் பேசியுள்ளனர்.
ஒவ்வொரு முறையும் ஆலோசனை வழங்குதல் என்ற பெயரில் இரண்டு வங்கிகளிடம் இருந்தும் கார்த்தியின் நிறுவனம் அதிகளவில் பணம் பிடுங்கியுள்ளது.
ஐ ஓ பி வங்கி ஆரம்பத்தில் கார்த்திக்கு கொடுத்த சேவை கட்டணமான 25,௦௦௦ டாலர் தவிர ஒவ்வொரு சந்திப்பின் போதும் அவரது சிங்கப்பூர் நிறுவனத்துக்கு ஐந்து சதவிதம் கமிஷனும் தர வேண்டும்.
பொது துறை நிறுவனமான ஐ ஓ பி வங்கிக்கும் ரஷ்ய வங்கிக்கும் இடையில் நடக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கார்த்தியின் ஆலோசனை நிறுவனத்துக்கு சேவை கட்டணம் வழங்க வேண்டும் என்பது கன்சல்ட்டன்சி என்ற பெயரில் கார்த்தியும் ப. சிதம்பரமும் நடத்திய பகல் கொள்ளை ஆகும்.
தென் ஆப்பிரிக்காவின் நிக்கோலஸ் ஸ்டைன்ஸ் அசோசியேட்ஸ் லிமிட்டட் நிறுவனத்தில் இருந்து கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் நிறுவனத்துக்கு பெருந்தொகை ஒன்று கை மாறியுள்ளது.
இந்த ஆப்பிரிக்க நிறுவனம் ஐ பி எல் கிரிக்கட்டுக்கு பாதுகாப்பு வழங்கியது. ப. சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது இந்த பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதாகத் தெரிகிறது.
சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது நபார்டு பத்திரங்களை [NABARD Bonds] விற்பதற்காக அலையன்ஸ் செக்யுரிட்டிஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து கார்த்தியின் அட்வான்ட்டேஜ் [ ASCPL] பெருந்தொகையை கமிஷனாகப் பெற்றுள்ளது.
வருமான வரி துறையினரின் சோதனையின் போது கைப்பற்றிய ஆவணங்களில் இருந்து இத்தகவல் தெரியவந்துள்ளது.
மைசூரில் உள்ள மிகப் பெரிய பரப்பளவு நிலத்தை வி எஸ் டி டில்லர்ஸ் அன்ட் டிராக்டர்ஸ் லிமிட்டட் என்ற நிறுவனத்துக்கு விற்றதில் இருந்தும் கார்த்தியின் மேல்டிராக் லிமிட்டட் நிறுவனத்தில் பெரியளவில் பங்குகள் விற்றதில் இருந்தும் பெருந்தொகை நிதி அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு வந்துள்ளது.
இந்த நிலம் யூனியன் வங்கியிடம் [Union Bank of India] அடமானம் வைக்கப்பட்டுள்ளது. ப. சிதம்பரம் மேல்டிராக் லிமிட்டட் நிறுவனத்தின் சார்பில் இந்த அடமானத்தினால் பணம் பெற்றுள்ளார்.
கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் நிறுவனத்தில் ஐந்து இயக்குனர்கள் உண்டு. அவர்கள் சி பி என் ரெட்டி, பாஸ்கர் ராமன், மோகனன் ராஜேஷ், ரவி விஸ்வநாதன், மற்றும் வி பத்மா.
இவர்கள் ஐந்து பேரும் ப. சிதம்பரத்தின் மீதுள்ள அன்பினாலும் மரியாதையினாலும் தங்களது அனைத்து சொத்துக்களையும் வருமானத்தையும் கார்த்திக்கும் அவர் மகள் அதிதிக்கும் வழங்குவதாகக் கூட்டாக உயில் ஒன்றைத் தயாரித்துள்ளனர்.
இதனால் இவர்கள் ஐந்து பேரும் கார்த்தி மற்றும் ப. சிதம்பரத்தின் பினாமிகள் மட்டுமே என்பது தெளிவாகிறது.
குரோஷியாவில் ‘ஹோட்டல் மொசார்ட்’ என்பது வரலாற்று சிறப்பு வாய்ந்த கட்டிடத்தில் இயங்கி வரும் புகழ் பெற்ற ஓட்டல் ஆகும்.
இந்த ஓட்டல் கட்டிடம் தான் இரண்டாம் உலகப் போரின் போது யுகோஸ்லேவியா நாட்டின் இராணுவத் தலைமையகமாக இருந்து வந்தது.
இந்த ஓட்டலில் கார்த்தி ஐந்து மில்லியன் டாலர் முதலீடு செய்திருப்பதாகவும் தெரிகிறது.
ப. சிதம்பரம் நான்கு மாடி கொண்ட ஜோர் பாக் வீட்டில் தங்கியிருப்பதற்காக தன் மகனுக்கும் மனைவிக்கும் மாதந்தோறும் ஒரு லட்ச ருபாய் கொடுத்து வந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அப்படி என்றால் இந்த ஒரு மாடியை மட்டும் தான் ப. சிதம்பரம் குடும்பத்தினர் பயன்படுத்துகிறார்களா? மற்ற மூன்று மாடிகளும் யாருக்கு உரியன?
இந்திய அரசியல்வாதிகளில் ப. சிதம்பரத்தை போல அதிகளவில் கருப்புப் பணம் வைத்திருப்பவர் வேறு எவரும் இல்லை.
ப சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருக்கும் கருப்பு பணத்தை மீட்க அரசு எப்போது சி பி ஐ, அமலாக்க துறை, வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு கருப்பு பணத்தடை சட்டம் , PMLA, பினாமி பரிவர்த்தனைச் சட்டம், கருப்பு பணத்தை கைப்பற்றுதல், ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுத்து அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து வழக்கு விசாரணையை நீதிமன்றத்தில் முறைப்படி நடத்தி அவர்களுக்குத் தண்டனை பெற்று தரும்?
18 comments:
மலைப்பாக இருக்கிறது நண்பரே... இதெல்லாம் மா'க்களுக்கு தெரிந்தும் மீண்டும் இவனை வெற்றி பெற வைத்துள்ளார்களே... ?
ஒருவேளை உணவுக்கு வழியின்றி எத்தனை மக்கள் இந்நாட்டில் வாழ்கின்றார்கள்.
இவைகளை காணும்போது இறைப்பற்று சற்றே அற்றுப்போகிறது.
ஜோதிஜி! பட்டியல் கிடக்கட்டும்! முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்து விட்டீர்களே! 1985 வாக்கிலேயே துணை அமைச்சர் என்றாகிவிட்டாலும் அய்யாவுடைய சம்பாத்தியம் எல்லாம் 2004 க்கும் 2014க்கும் இடைப்பட்ட பத்தாண்டுகளில் தான்! 1969 இலிருந்து சிறுகச்சிறுகச் சம்பாதித்துக் கொண்டிருந்த கலீஞர், நேரு இந்திரா பெயரைச்சொல்லிச் சம்பாதித்துக் கொண்டிருந்த சோனியாG எல்லோரையும் ஓவர்டேக் பண்ணிய சாமர்த்தியம் வேறெந்த அரசியல்வாதிக்கும் இருத்ததில்லை!
வாரிசு, கருத்து அமைப்பு நடத்திய போது ஏற்பட்ட கசமுசாவில் 100 கோடி குடகு எஸ்டேட் ஒன்றைத்தாரை வார்த்த கதை வேறு அரசல் புரசலாக ஞாபகம் வருகிறது.
இத்தனையையும் எப்படி நினைவு வைத்துக்கொள்கிறார்கள்? படிக்கப் பொறுமை இல்லை நமக்கு.
இத்தனை விவரங்கள் இருந்தும் அரசு ஏன் நடவடிக்கைகளில் வெற்றி பெறவில்லை சுப்பிரமணிய சாமி ஒரு ஜோக்கர் என்னும்நிலையே தொடர்கிறது
//இத்தனையையும் எப்படி நினைவு வைத்துக்கொள்கிறார்கள் ?//
ஸ்ரீராம்ஜி எனக்கும் இந்த ஐயம் வந்தது.
காரைக்குடி, தேவகோட்டை ஏரியாக்களில்
இவரது சமூகத்தை சேர்ந்தவர்கள் யாரும் அரண்மனையை (வீட்டை) விற்பதாக இருந்தால் இவர்களையே நாடவேண்டும்.
வேறு நபர்களிடம் விற்ககூடாது.
இந்தப் பிறவியில் இறைவன் அவர்களுக்கு இந்த சௌகர்யத்தை அனுபவிக்கக் கொடுத்திருக்கிறான்!
1. இது பாராட்டு தானே...?
இந்தியா முழுக்க எத்தனையோ அரசு சார்ந்த, சாராத தணிக்கையாளர்கள் உள்ளனர். இதைப் போல பலவிதமான மத்திய மாநில புலனாய்வு ஏஜென்சிகளும் உண்டு. ஆனால் அனைத்தையும் மீறி அப்பாவும் மகனும் வென்றுள்ளார்கள். மோடியின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில் அதுவும் குறிப்பாக அமித்ஷா இவர்களை கொலை வெறியில் தனிப்பட்ட துறையில் துரத்திக் கொண்டேயிருந்தார். (காரணம் அமித்ஷா வை குஜராத்திலிருந்து ப சி ஒரு சமயத்தில் ஓட ஓட விரட்டிக் கொண்டிருந்தார். குஜராத்துக்குள் நுழையக்கூடாது என்கிற வரைக்கும்). ஆனால் அப்பாவை, மகனை கடைசி வரைக்கும் ஐந்தாண்டு முடிகின்ற வரைக்கும் ஓபி ஷைனி காப்பாற்றிக் கொண்டேயிருந்தார். ஒவ்வொரு முறையும் ஜாமீன் நீட்டிக்கப்பட்டு கொண்டேயிருந்தது. இப்போது மறுபடியும் தொடங்கி உள்ளனர். இப்போது அடுத்த ரவுண்டு. பையன் எம்பி ஆகி உள்ளார். சட்டம் என்ன செய்யப் போகின்றது? என்று தெரியவில்லை. முதல் வரியைக் கவனிக்கவும். இது முதல் பட்டியல் மட்டுமே. ஏதோவொரு காரணத்தில் இன்னமும் இரண்டாவது பட்டியலை வெளியிடாமல் வைத்துள்ளார்கள். நம்ம தேவகோட்டை நண்பர் இதற்கே மிரண்டு போயுள்ளார். அதையும் பார்த்தால் பத்து நாளைக்கு தூங்க மாட்டார் போல. எங்கே செல்லும் இந்தப் பாதை?
கஜினி படத்தை இந்தியில் ஏஆர் முருகதாஸ் இயக்கி வெற்றி பெற்றது. ஏஆர் முருகதாஸ் அமீர்கான் இருவரையும் முகேஷ் அம்பானி தன் வீட்டுக்கு சாப்பிட வரவழைத்து இருந்தார். அவர் படத்தை பாராட்டிவிட்டு முருகதாஸ் சொந்த ஊர் பற்றி கேட்டுள்ளார். சென்னையில் இருந்து தூரத்தில் உள்ளது. உங்களுக்குத் தெரியாது. ஊர் பெயர் கள்ளக்குறிச்சி என்று சொல்லி உள்ளார். உடனே முகேஷ் அந்த ஊருக்கு அருகே உள்ள அவர்களின் பெட்ரோல் பங்க் குறித்து எந்த இடத்தில் உள்ளது என்பதில் இருந்து வரிசையாகப் பேசி உரையாடி உள்ளார். இதை இங்கே சொல்வதற்குக் காரணம் ஒரு சின்ன அறிக்கை போதும். அவர்கள் அந்த ஒரு மணி நேரத்தில் உள்வாங்கி விடுவார்கள். உலகத்தையே காலி செய்து விடுவார்கள்.
ஹா...ஹா...
பக்கா கிரி.மூளை அவர்களுக்கு...
எனக்கு மதுரை "அண்ணன்" அழகிரி ஞாபகம் வருகிறது ஏனோ...?
நானும் அழகிரி வில்லாதி வில்லன், சூராதி சூரன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். விபரம் அறிந்தவர்களைக்கேட்டுப் பார்த்தால் கடைசி பெஞ்ச் மாணவனை விட படு திராபையாக இருக்கிறார். உழைக்கத் தயாராக இல்லை. கற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஆனால் எல்லாமே வேண்டும். இப்போதைய சூழலில் முடியுமா?
தவறான தகவல். நான் அறிந்தவரையில் அப்படி நம் பகுதியில் செய்ததாக நினைவில்லை. யாரும் சொல்லவும் இல்லை. அவர்கள் முதலீடு என்பது வேறு. அதுவொரு நீண்ட தனிக்கதை.
ஆளும் கட்சி எப்போதும் எதையும் உடனே செய்யாது. செய்யவும் விரும்பாது. அவர்களுக்கு தேவைப்படும் சமயத்தில் அதிகாரத்தை பயன்படுத்துவார்கள். அது தான் அரசியலின் பாலபாடம். பயத்திலேயே வைத்திருக்க வேண்டும். செயல்படுவதை முதலில் முடக்கி வைத்திருக்க வேண்டும். இது தான் இரண்டாவது பாடம். மேலும் சம்மந்தப்பட்டவர்களை ஆதாயத்தின் அடிப்படையில் தம் பக்கம் இழுத்தால் சாதகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களை இழுத்துக் கொள்ள வேண்டும். இது தான் மூன்றாவது பாடம். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியில் தற்போது பாஜக பக்கம் மாறிய (வென்று வந்த) பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைத்து பேர்கள் பேரிலும் எல்லாவிதமான கேஸ்களும் உள்ளது.
இந்திய நாட்டில் உள்ள ஏழை பணக்காரன் என்ற பெரிய வித்தியாசத்திற்கும் பிறகும் ஏன் மற்ற நாடுகள் போல உடையாமல் கலவரம் உருவாகாமல் இருக்கின்றது. 1. மதம் 2. சாதி 3. கடவுள் நம்பிக்கை கடைசியாக இது நம் விதி என்று எளிதாக ஏற்றுக்கொள்ளும் தன்மை.
முற்றிலும் உண்மை.
கடைசியாகச் சொல்லி இருக்கும் 'இது நம் விதி' காரணம் தான் முதலில் என்று தோன்றுகிறது! ஏனெனில் ஒரு சாமானியனால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.
1,தமிழிசை சௌந்தரராஜன் - இயக்குநர், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPCL), இந்திய அரசு நிறுவனம்.
2. ஹெச்.ராஜா - இந்திய இரயில்வே பயணிகள் வசதிகள் மேம்பாட்டு குழு தலைவர்.
3. சி.பி.ராதாகிருஷ்ணன் - இந்திய கயிறு வாரிய தலைவர் (தலைமை அலுவலகம் கேரளாவில்).
4. வானதி சீனிவாசன் - இயக்குநர், சென்னை உர தொழிற்சாலை (MFL), இந்திய அரசு நிறுவனம்.
5. லலிதா குமாரமங்கலம் - தலைவர், தேசிய மகளிர் ஆணையம் (NCW).
6. குருமூர்த்தி - இயக்குநர், ரிசர்வ் வங்கி (RBI).
7. முனைவரி பேகம் - மத்திய முஸ்லிம் மகளிர் நல வாரியம்.
8. எல்.முருகன் - துணைத்தலைவர், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் (NCSC).
9. ஆதவன் & கருப்பு முருகானந்தம் - அறங்காவலர்கள், சென்னை துறைமுகம், இந்திய அரசு நிறுவனம்.
10. எஸ்.வி.சேகர் - மத்திய திரைப்பட தணிக்கைக் குழு உறுப்பினர்
Post a Comment