கருப்புக்குதிரை நூல் விமர்சனம் மற்றும் சில பார்வைகள்
சென்ற வாரத்தில் என் நெருங்கிய நண்பர் என்னை அலைபேசியில் அழைத்திருந்தார். என் எழுத்து அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்று ஆசைப்படுபவர். என் மின் நூல்கள் மற்றும் பதிவுகளைப் பாரபட்சமின்றி விமர்சிப்பவர். அவருக்கு நரேன் ராஜகோபாலன் எழுதிய "கருப்புக்குதிரை" கிடைக்கப்பெற அதனைப் படித்துக் கொண்டிருந்த போதே என்னை அழைத்துப் பேசினார். புத்தகத்தில் உள்ளக் கருத்துக்களுக்கு எதிரணியில் இருப்பவர்கள் பாராட்டுவது என்பது மிகச் சிறந்த அங்கீகாரம். மனதார பாராட்டினார். எப்படி எழுத வேண்டும்? என்பதற்கும் எந்தவொரு விசயமாக இருந்தாலும் எழுதுபவனின் திறமை பொறுத்து எப்படி எழுத முடியும் என்பதற்கும் இந்த நூல் உதாரணம் என்றார்.
அவர் தான் ரசித்துப் படித்த புத்தகம் முக்கியமானவர்களுக்கும் சென்று சேர வேண்டும் என்று அவர் கொடுத்திருந்த குறிப்பிட்ட நண்பர்களின் பட்டியலின் அடிப்படையில் சென்னையில் இருந்து எனக்கும் இந்நூல் வீட்டுக்கு வந்து சேர்ந்தது. நண்பருக்கு நன்றி.
பார்வை 1
மதன் எழுதிய "வந்தார்கள் வென்றார்கள்" புத்தகத்தில் எழுத்தாளர் சுஜாதா எழுதியிருந்த அணிந்துரை வார்த்தைகள் என்பது இன்னமும் எனக்கு மனப்பாடமாக உள்ளது. "இந்தப் புத்தகம் போலப் பள்ளிக்கூடங்களில் வரலாற்றுப் பாடங்கள் இருந்திருந்தால் நான் இன்னமும் அதிக மதிப்பெண்கள் எடுத்திருப்பேன்" என்று எழுதியிருந்தார். இந்தப் புத்தகத்திற்கும் அந்த வார்த்தைகளை அப்படியே பொருத்தி விடலாம். பொருளாதாரம் சார்ந்த விசயங்களை இப்படியொரு நடையில், இது போன்ற எளிமையில் நான் வாசிப்பது இதுவே முதல் முறை. அந்த அளவுக்கு ஆச்சரியம், பிரமிப்பும் கலந்து கட்டியுள்ளது.
பார்வை 2
வரலாறு, பொருளாதாரம் சார்ந்த துறைகள் என்பது கல்லில் நார் உறிக்கும் சமாச்சாரம். காலப்போக்கில் வரலாறு பின்னோக்கிப் போய்விட்டது. அதற்குப் பதிலாகத் தற்பொழுது பொருளாதாரம் சார்ந்த துறைகள் முன்நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. இணையம் அறிமுகமான பின்பு புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் இளையர் பட்டாளம் மிகச் சரியாகக் கையாள்கின்றார்கள். எதனையும் சொல்கின்ற விதத்தில் சொன்னால் சுவராசியப்படுத்த முடியும் என்கிற அளவில் பல பேர்கள் இத்துறையில் கவன ஈர்ப்பு பெறுகின்றார்கள். தற்போது நட்சத்திரமாக மாறியிருப்பவர் நரேன் ராஜகோபாலன்.
பார்வை 3
நான் பிறந்த குடும்பம் என்பது பொருளாதாரத்தில் அதிகக் கவனம் செலுத்தும் வாழ்க்கையை வாழ்ந்த, வாழும் குடும்ப அமைப்புக் கொண்டது. ஆனால் என் பாதை மட்டும் தொடக்கம் முதலே தப்பித் தவறி வேறுபாதையில் பயணிக்கத் தொடங்கியதால் பொருளாதாரம் குறித்துப் பள்ளிக்கூடப் பாடங்களிலும் கவனம் செலுத்தவில்லை. அதன் பாதிப்பு வாழ்க்கையிலும் இன்று வரையிலும் எதிரொலிக்கின்றது. ஆனால் இந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்து முடித்தவுடன் பணம் சார்ந்த ஆசைகளே போய்விட்டது. பண ரீதியாக உச்சத்தை அடைந்தவர்கள் அத்தனை பேர்களுக்கும் பின்னால் உள்ள எச்சங்களை அப்படியே தோலுரித்துக் காட்டுகின்றது. அத்துடன் எப்படியெல்லாம் அரசாங்கத்தின் கொள்கைகளைத் தங்களுக்குச் சாதமாக மாற்றிக் கொண்டு பணம் சம்பாரிக்கும் குறுக்கு வழிப்பாதைகளைப் படம் வரைந்து பாகம் குறித்தும் காட்டுகின்றது.
பார்வை 4
இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு அத்தியாயமும், அதிகப் பணம் சம்பாரிக்கும் வாழ்க்கையைக் கொண்டவர்கள், அந்தப் பணத்தை எப்படியெல்லாம் சம்பாரிக்க முடியும் போன்ற குறுக்கு நெடுக்கு வெட்டுத் தோற்றத்தை தோலுரித்துக் காட்டுகின்றது. திருப்பூரில் கோடிகள் என்கிற விதத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கு வியப்பாகத் தெரியவில்லை. ஆனால் இந்தப் புத்தகத்தில் குறைந்தபட்சமே அமெரிக்கன் டாலரில் மில்லியனில் இருந்து தான் தொடங்குகின்றது. நமக்குப் பில்லியன், ட்ரில்லியன் போன்றவற்றைத் தாண்டிச் செல்லும் கணக்கு வாத்தியார் பாடம் நடத்தும் போது வந்த கொட்டாவி போல வாயைப் பிளக்க வைக்கின்றது.
பார்வை 5
கருப்புப்பணம் என்று ஒற்றை வார்த்தையில் அதற்குப் பின்னால் உள்ள கிரகசாரங்களை ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருட் ஜோதியை விலாவாரியாக விஸ்தாரமாக விவரித்துக் கொண்டே சென்றாலும் என் மனதில் தோன்றியது ஒரே விசயம் தான். இப்படியெல்லாம் எளிமையாக எழுத முடியுமா? என்பது தான்.
அத்துடன் வாழ்க்கை முழுக்க எழுத்தே தன் பணி என்று வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்குக்கூட இப்படிப்பட்ட வாக்கிய அமைப்பு கைகூடுமா? பொருளாதாரத்தைப் பற்றிப் படிக்கின்றோமா? அல்லது துப்பறியும் கதையை நாம் படிக்கின்றோமா? என்று யோசிக்க வைத்த நடையில் அமைந்த புத்தகமிது.
பார்வை 6
வலைப்பதிவுகள் உருவாக்கிய மாயவித்தையிது. எழுத்தே தன் வாழ்க்கை. எழுத்துலகம் தன் ஆதாரம் என்று வாழ்நாள் முழுக்க வாழ்ந்த எழுத்தாளர்கள் என்று கீரிடம் சுமந்து ஒளிவட்டம் காட்டிக் கொண்டிருந்தவர்களை இணைய உலகம் பல மாயப் பிம்பங்களை உடைத்து சுக்குநூறாக உடைத்துள்ளது என்பதனை இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.
எவ்வித எழுத்துப் பயிற்சியும் இல்லாத சாதாரணமானவர்கள் எங்களாலும் எந்தத் துறை குறித்தும் தெளிவாக அழகாகச் சுவராசியமாக எழுத முடியும் என்று சொன்னதோடு மட்டுமல்லாது செயல்படுத்தியும் காட்டியுள்ளதற்கு இந்தப் புத்தகம் முக்கிய உதாரணம். நரேன் சொல்லியுள்ள பிரதமர் மோடி கொடுத்த துல்லிய தாக்குதலை விட இவர் கொடுத்துள்ள வார்த்தை பிரயோக தாக்குதல் என்பது வாசிக்கும் ஒவ்வொருக்கும் பிரமிப்பைத் தரும்.
பார்வை 7
பத்திரிக்கையில் வணிகச் செய்திகளை வாசிப்பவர்கள் தமிழக வாசக பரப்பில் நூற்றில் ஐந்து பேர்கள் கூட இருக்க மாட்டார்கள். மேலும் வணிகம் சார்ந்த ஆங்கிலப் பத்திரிக்கைகள் படிப்பதென்பது மிக மிகக் குறுகிய வட்டமாகவே இருக்க முடியும். ஆனால் வணிகம் அதற்குப் பின்னால் உள்ள தில்லாலங்கடி வேலைகள், ஷேர் மார்க்கெட் என்ற மாயமந்திரங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கும் கண்கட்டி வித்தைகள், ஹவாலா தொடங்கி ஒவ்வொரு இடத்திலும் அல்வா கிண்டும் பெருந்தனக்காரர்களைப் போற போக்கில் தோலுரித்துக் காட்டிக் கொண்டே செல்கின்றார். ஆனால் இவை அனைத்தும் அரசாங்க சட்டதிட்டத்தின் படி நடந்து கொண்டிருக்கின்றது. நீங்கள் கற்பனையில் வைத்துள்ள பல கோடீஸ்வரர்கள் எப்படிச் சம்பாரித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை உங்கள் மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்தும் புத்தகமிது.
பார்வை 8
இன்னமும் வியப்பாக உள்ளது. பள்ளி, கல்லூரி சமயங்களில் வேதியியல், இயற்பியல், வணிகவியல், பொருளாதாரம் போன்றவற்றை நினைத்தாலே காய்ச்சல் வந்த காலகட்டத்தை இப்போது நினைத்துப் பார்க்கின்றேன். ஒன்றுக்குப் பயந்து மற்றொன்று மாறி, அதையும் தாக்குப் பிடிக்க முடியாமல் கடைசியில் தாவரவியல் படித்துக் கல்லூரியை கடனே என்று முடித்து வந்தவனுக்கு இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன் எனக்குத் தோன்றியது ஒரே ஒரு விசயம் தான்.
தவறு என் மேல் இல்லை. நரேன் போன்றவர்களைப் பாடப்புத்தகங்களை எழுத அனுமதித்து இருந்தால் லட்சக்கணக்கான மாணவர்கள் பட்டையைக் கிளப்பியிருக்கக்கூடும். உங்கள் குடும்பத்தில் பத்தாம் வகுப்பு முடித்து மேல்நிலைப்பள்ளி செல்லும் மாணவர்கள் இருந்தால் அதிலும் குறிப்பாக வணிகவியல் சார்ந்த படிப்புகள் படித்துக் கொண்டிருப்பவர்கள் எவராக இருந்தாலும் இந்தப் புத்தகத்தை வாங்கிப் பரிசாகக் கொடுங்கள். ஒன்று பாடப்புத்தகம் என்பதனை எந்த அளவுக்குச் சுமையாக மாற்றியுள்ளார்கள் என்பதனை உணர முடியும். ஒரு துறையை எப்படியெல்லாம் எளிமையாகச் சொல்ல முடியும் என்பதனையும் அவர்களால் உணர்ந்து கொள்ள முடியும்.
பார்வை 9
புத்தகத்தின் பிற்பகுதியில் பிரதமர் மோடி உருவாக்கிய பணமதிப்பு இழப்பு விவகாரத்தால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகளை நரேன் விஸ்தாரமாக விவரிக்கின்றார். குறிப்பாகக் காங்கிரஸ் ஆட்சிக்கு வக்காலத்து வாங்குகின்றார். பல புள்ளிவிவரங்களை அள்ளித் தெளிக்கின்றார். பல இடங்களில் நரேனுக்குச் "செலக்ட்டீவ் அம்னிசீயா" வேறு வந்துவிடுகின்றது. காங்கிரஸ் அரசாங்கத்தில் பாலும் தேனும் இந்தியா முழுக்க ஓடியதாகக் கதைவிடுகின்றார்.
சோனியா, ராகுல், மன்மோகன் சிங், ப.சிதம்பரம் இவர்களையெல்லாம் நினைத்தாலே, மனதிற்குள் கொலைவெறி வந்து போகின்றது. எப்படியோ நாடு தப்பித்தாகி விட்டது என்று தான் தோன்றுகின்றது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நடந்த அலேங்கோலங்களை இப்போது நினைத்துப் பார்த்தாலும் மோடி உருவாக்கியது இழப்பு அல்ல. மாற்றத்திற்கான முதல்படி. நேரு முதல் மன்மோகன் சிங் வரையிலும் வந்தமர்ந்த பிரதமர்கள் எவரும் தனக்கான ஆதாயம், தான் விரும்பியவர்களுக்கான ஆதாயம் என்பதிலேயே தங்கள் பதவிக் காலத்தைக் கழித்தவர்கள்.
பொருளாதாரப்புலி என்றழைக்கப்படும் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட ஒவ்வொரு ஒப்பந்தங்களுக்குப் பின்னால் இரண்டு விசயங்கள் இருந்தன. ஒன்று எவ்வித அறநெறியும் தேவைப்படாமல் நாட்டை அப்படியே மற்றவர்களுக்கு விற்பது. ஆதாயம் பெற காத்திருந்தவர்களுக்குத் தனது கள்ள மௌனத்தின் மூலம் ஆதரவு அளித்தது. சிறுபான்மை உரிமை என்ற பெயரில் இந்த நாட்டில் எந்த மாற்றத்தையும் இங்கே அனுமதிக்காமல் இருந்தது. வெளிப்படைத்தன்மையை எந்த இடத்திலும் அனுமதிக்காமல் தான் சார்ந்த, தாங்கள் விரும்பும் நபர்கள் சார்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஊழல் என்பது தேசிய வார்த்தையாக மாறியிருந்தது.
எந்த அரசியல்வாதியும், அவர் எந்தப் பதவியில் இருந்தாலும் தானே மீண்டும் மீண்டும் அந்தப் பதவியில் சாகும் வரையிலும் இருக்க வேண்டும் என்று தான் இந்தியாவில் உள்ள அத்தனை அரசியல்வாதிகளும் விரும்பும் சூழ்நிலையில் பிரதமர் மோடி தனது பதவிக்கான சுருக்குக்கயிற்றைத் தானே உருவாக்கியுள்ளார். தன்னால் மீண்டு வர முடியுமா? அல்லது மீண்டும் பிரதமர் பதவி கிடைக்குமா? போன்றவற்றைப் பற்றிச் சிறிது கூடக் கவலைப்படாமல் ஒரு புதிய பாதையை இந்தியர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். உச்சக்கட்டமாய்த் தன் பதவிக்கான அத்தனை ஆதாரங்களை அழிக்கவல்ல அஸ்திரங்களைத் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டவர் பிரதமர் மோடி.
இறுதியான என் பார்வை
காஷ்மீர் முதல் கன்யாகுமரி முதல் பெரிய எதிர்ப்பும் மிகப் பெரிய சுனாமி போன்ற மக்கள் திரளுமாக மோடி அரசாங்கத்திற்கு எதிராகத் திரள்வார்கள் என்று அநேகம் பேர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தது ஏமாற்றமடைந்தது தான் மோடிக்குக் கிடைத்த வெற்றி. எந்த அரசியல்வாதியும் பணமதிப்பு விவகாரத்தை வைத்து பெரிய அளவுக்கு எவ்வித முன்னெடுப்புகளையும் எடுக்க முடியாத அளவுக்கு அவரவருக்கு ஆயிரம் பிரச்சனைகள். அவரவர் சேர்த்து வைத்துள்ள ஊழல் பணங்களை மாற்ற வேண்டிய அவசியம். திருடனுக்குத் தோள் கொட்டியது போல அவஸ்தையான காலக் கட்டமிது. பணமதிப்பு விவகாரத்தால் மக்கள் அடைந்த துன்பங்களை விட அரசியல்வாதிகளும் அவர்களின் பினாமிகளும் கற்றதும் பெற்றதும் ஏராளம். என்னவொன்று அவையெல்லாம் ஊடகங்களில் பதிவு செய்ய முடியாத அளவுக்கு வெறும் வாய்ச்சவடால்களாக நின்று விட்டது.
இட ஒதுக்கீடு, மானியம், சிறுபான்மை நலன், போன்ற வார்த்தைகளை வைத்துக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான அரசியல்வாதிகளின் வாழ்க்கையை வட்டத்திற்குள் சிக்க வைத்த பெருமை மோடிக்கு வந்து சேர்ந்துள்ளது. முதல் முறையாகச் செயல்படும் பிரதமர் அலுவலகமாக மாறியுள்ளது.
இனி வரும் காலங்களில் முறைப்படியான கணக்கு மூலம் மட்டுமே வியாபாரங்கள் செய்ய முடியும் என்பதற்கான தொடங்க புள்ளியை இந்த மாற்றங்கள் உருவாக்கும். அதிகப்படியாகச் சேர்க்கும் பண ஆசையில் ஒரு நிதானம் வந்து சேரும். முறையற்ற வழியில் சேரும் பணத்தில் ஒரு பயம் நிரந்தரமாக இருக்கக்கூடும்.
திருப்பூரில் உள்நாட்டு வியாபாரத்தில் வாரம் நூறு கோடி வியாபாரம் செய்பவர்கள் துண்டுச்சீட்டு வழியாகவே வர்த்தகம் செய்கின்றார்கள். ஏற்றுமதி வியாபாரத்தில் செய்யப்படும் தந்திரங்கள் மூலம் தனியாக வந்து சேரும் அத்தனை பணமும் படுக்கை அறையில் மெத்தையில் அடுக்கி வைக்கப்பட்டுப் பூதம் போலக் காவல் காக்கப்படுகின்றது. ஒரு நாளில் தான் பெறும் லட்சக்கணக்கான பணத்தை மருத்துவர்கள் முதல் பல துறையில் உள்ளவர்கள் எவ்வித கணக்கு வழக்கும் காட்ட அவசியமில்லாமல் அடுத்தடுத்து பண ஆசையில் மேலும் மேலும் பணத்தை முடக்கி வைத்துக் கொண்டே செல்கின்றார்கள் . எது தேவை? எது தேவையில்லை? என்பதெல்லாம் மாறி நுகர்வு என்பது பெரும் கலாச்சாரமாக மாறியுள்ளது. பணத்தை தவிர இங்கு வேறெதும் தேவையில்லை என்கிற புதிய வாழ்க்கை முறை உருவாகி பல ஆண்டுகள் ஆனதால் எல்லாத் தவறுகளும் இங்கே நியாயப்படுத்தப்படுகின்றது.
ஏக்கர் ஆயிரம் ரூபாய் மதிப்பில்லாத அத்தனை நிலங்களும் லட்சத்திற்குத் தாவி சராசரி மனிதனின் வாழ்க்கையை வாழ முடியாத அளவிற்கு ஏற்றத்தாழ்வு என்பது எட்ட முடியாத நிலைக்குச் சென்றுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உருவான தொழில் நுட்ப வளர்ச்சிக்குப் பிறகு தனி மனிதனின் வாழ்க்கையில் பணம் என்பது அகோர பிசாசு போலக் கோர தாண்டவம் ஆடும் தற்போதைய சூழலில் பணம் என்பது வெறும் காகிதமாக மாறிய சூழலை இந்தப் பணமதிப்பு விவாகாரம் என் பார்வையில் மனமதிப்பு நிலை பெற உதவி செய்யக்கூடியதாகவே இருக்கும் என்று நம்புகின்றேன் .
மனம் முழுக்கக் கார்ப்பரேட் வாழ்க்கையை விரும்பும் நடுத்தர வர்க்க மனிதர்கள். தகுதியானவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை, மானியங்களைத் தாங்களும் தங்கள் குடும்ப வாரிகளுமே பெறுகின்றோம் என்ற கூச்ச உணர்வு இல்லாமல் வாழும் மனிதர்களுக்கு மோடி உருவாக்கும் ஒவ்வொரு செயல்பாடுகளுமே துல்லிய தாக்குதல்களாகத்தான் தெரியும். உருவாகும் மாற்றங்களைக் கண்டு பயந்து ஓடி ஒளியும் வாழ்க்கை கொண்ட நம் சமூகத்தில் இது போன்ற துல்லிய தாக்குதல் என்பது அவசியம் தேவையே.
உங்களின் பணம் சார்ந்த எண்ணங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அரசாங்கங்கள் அவவ்போது கொண்டு வரும் திட்டங்கள் யாருக்கு பயன் தந்து கொண்டிருக்கின்றது? உங்களைச் சுற்றியுள்ள பணம் படைத்தவர்களின் வாழ்க்கையை, அவர்கள் பணம் ஈட்டும் முறைகளை, அதற்கு நமது அரசாங்கம் எப்படியெல்லாம் உதவுகின்றது என்பதனையும் இந்தப் புத்தகம் உங்களுக்கு புரியவைக்கக்கூடும். .
இது போன்ற விஸ்தாரமான விளக்கங்கள் உங்களுக்கு புரியும் சமயத்தில் மோடி உருவாக்கியுள்ள பணமதிப்பு விவகாரம் குறித்து நீங்களே உங்களுக்குள் ஒரு முடிவு தேடிக் கொள்ள இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவக்கூடும்.
கருப்புக்குதிரை புத்தகம் பெற
நவி பதிப்பகம்.
விலை ரூபாய் , 150./
திரு. அரவிந்தன் கிருஷ்ணமூர்த்தி
Face Book https://www.facebook.com/aravindan.krishnamoorthy
வாட்ஸ் அப் எண் 81 05 88 20 22
ஆன் லைன் வாயிலாக பெற
இது போன்ற விஸ்தாரமான விளக்கங்கள் உங்களுக்கு புரியும் சமயத்தில் மோடி உருவாக்கியுள்ள பணமதிப்பு விவகாரம் குறித்து நீங்களே உங்களுக்குள் ஒரு முடிவு தேடிக் கொள்ள இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவக்கூடும்.
கருப்புக்குதிரை புத்தகம் பெற
நவி பதிப்பகம்.
விலை ரூபாய் , 150./
திரு. அரவிந்தன் கிருஷ்ணமூர்த்தி
Face Book https://www.facebook.com/aravindan.krishnamoorthy
வாட்ஸ் அப் எண் 81 05 88 20 22
ஆன் லைன் வாயிலாக பெற
18 comments:
ஆன்லைன் ஆர்டர் போட்டாச்சு..
நல்ல விமர்சனம் கண்டேன். நன்றி.
அவசியம் படித்தே ஆக வேண்டிய நூல்
ஆன் லைனில் ஆர்டர் போட்டுவிட்டேன் ஐயா
நன்றி
MK CINEMA இது நமது சேனல் இதை SUBSCRIBE மற்றும் ஷேர் செய்யுங்கள் நண்பர்களே.
மேலும் பலதரப்பட்ட சுய தொழில் இலவச பயிற்சி வகுப்புகளை இங்கு அறிமுகம் செய்ய இருக்கிறோம்.
நீங்கள் நமது சேனலை இது போன்று லைக் ஷேர் செய்தால் மேலும் மேலும் நாங்கள் விடீயோக்கள் போடுவதற்கு எங்களை ஊக்கப்படுத்தி. மேலும் எங்களை சிறப்பாக விடீயோக்கள் பதிவிடுவதற்கு உதவும் நண்பர்களே ..
நிறை மற்றும் குறைகள் இருப்பின் கமெண்ட் இல் தெரியப்படுத்துங்கள்.உங்களது கமெண்ட்கள் வரவேற்கப்படுகிறது .
வாழ்க தமிழ் வளர்க தமிழ் .
வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன்
நமது நமது சேனல் பக்கத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யுங்கள்.
https://www.facebook.com/Mkcinema-298392973889075/app/212104595551052/
உங்களின் கருப்பு பணம் பற்றிய புத்தக விமர்சனம் அந்த புத்தகத்தை வாங்கி படிக்கவேண்டும் என்ற ஆசையை தூண்டி இருக்கிறது
கருப்புபணம் புத்தகவிமர்சனமாக ஆரம்பித்த இந்த பதிவி இறுதியில் மோடியின் புகழ்பாடும் பதிவாக முடிந்துவிட்டது இரு வேறு பதிவுகளாக வந்து இருக்க வேண்டும்
நல்ல விமர்சனம். ஆழமான விமர்சனப் பார்வை. விமர்சனத்தை ரசித்து வாசித்தோம் என்றால் மிகையல்ல. அத்தகைய வல்லமை படைத்தது உங்கள் எழுத்து.
மிக்க நன்றி ஜோதிஜி! அறிமுகத்திற்கு. இணையத்தில் புத்தகம் வாங்க சொடுக்கியாயிற்று.
கருப்பு பணம் என்று இருக்கும் இடத்தில் கருப்பு குதிரை என்று திருத்தி கொள்ளவும்
உங்களின் பொன்னான பொழுதுகளை என் எழுத்துக்காக செலவிட்டு ஒவ்வொரு பதிவாக படித்துக் கொண்டு வந்த உங்களுக்கு என் நன்றி. உங்களின் அற்புதமான விமர்சனங்களைக் கண்டு மகிழ்ந்தேன். நல்வாழ்த்துகள் உங்கள் இருவருக்கும்.
நன்றி நண்பரே. இந்தப் புத்தகத்தின் அடிநாதமே மோடி எதிர்ப்பு என்பதே. நரேன் அவர்களை எழுதத் தூண்டியதே மோடி அவர்களின் செயல்பாடுகள் மட்டுமே. மற்றபடி நாம் எதிர்ப்பு ஆதரவு என்ற இந்த இரண்டு வார்த்தைகளை யாரோ ஒருவரை பின்புலமாக வைத்துக் கொண்டு தான் பேசுகின்றோம். ஆனால் களநிலவரங்களை வைத்து யாரும் உரையாடுவதில்லை. அடித்தட்டு மக்கள் பாதிப்பு என்பது (பணமதிப்பு செயல்பாடுகளால்) எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு வளர்ந்து கொண்டிருக்கும் நடுத்தரவர்க்கம், மேல்தட்டு வர்க்கம் இரண்டு கூட்டங்களை அவர்களின் பணம் சார்ந்த செயல்பாடுகளை இப்போது தொடங்கியுள்ள மாற்றங்கள் மனமாற்றத்தை உருவாக்கும் என்று நாம் தனிப்பட்ட முறையில் நம்புகின்றேன். அது உங்களின் பார்வையில் மோடி ஆதரவு போல தெரிகின்றது. உங்கள் விமர்சனத்திற்கு என் நன்றி.
https://www.youtube.com/watch?v=XUaivbbjv6g
How To use Hangout Video calls free
Google Hangout பயன்படுத்துவது எப்படி ?
https://www.youtube.com/watch?v=aor8wBEWypc
வீட்டில் இருந்து கொண்டு ஆபிஸில் உள்ள கம்ப்யூட்டரை பயன்படுத்துவது எப்படி ?
https://www.youtube.com/watch?v=kRQRe6NTD84
அந்த காலம் முதல் இன்று வரை நமக்கு பிடித்த பாடல்களை ஆண்ட்ராய்டு மொபைலில் டவுன்லோட் செய்வது எப்படி ?
https://www.youtube.com/watch?v=0lgJhG36peg
தேவையற்ற Android APPS யூஸ் செய்யாமல் தவிர்ப்பது எப்படி?
https://www.youtube.com/watch?v=pNxwUFvzUkU
Facebook-ல் தேவையில்லாத விளம்பரங்களை வராமல் தடுப்பது எப்படி?
https://www.youtube.com/watch?v=w_3MUp-bkjM
நமது Facebook Account மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது எப்படி ?
https://www.youtube.com/watch?v=FDCGRfzuQgw
வாட்சப்பில் தமிழில் மெசேஜ் அனுப்புவது எப்படி ?
https://www.youtube.com/watch?v=pSNKJn9G-FA
ஒரு App Download செய்து 10 மேற்பட்ட App-களை பயன்படுத்துவது எப்படி ?
https://www.youtube.com/watch?v=oaQUWzIbZpo
Post a Comment