Thursday, May 09, 2013

ராமதாஸ் - இனி நித்யகண்டம் பூரண ஆயுசு



கடந்த சில வாரங்களாக மக்கள் தொலைக்காட்சியைத் தான் அதிக நேரம் பார்க்கின்றேன். ராமதாஸ் குறித்த செய்திகள் எதில் வந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்கின்றேன். பத்திரிக்கைகள் முதல் வலைதளம் வரைக்கும் வெறுத்து எழுதும் அவரை நான் எப்போதும் போல விரும்பவே செய்கின்றேன். 

அவசரப்பட்டு என்னையும் அவனா நீ? என்று கேட்டு விடாதீர்கள்? 

பள்ளிப் பருவத்தில் பத்திரிக்கைகள் வாசிக்கத் துவங்கிய காலகட்டத்தில் திரைப்படச் செய்திகளுக்குப் பிறகு அதிகம் வாசித்தது அரசியல் சம்மந்தப்பட்ட செய்திகளே. ஊரில் உள்ள பிள்ளையார் கோவில் ஊரணிக்கரையில் தான் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் மேடை போட்டு பேசுவார்கள்.  குட்டி தாதா முதல் பெரிய தலைகள் வரைக்கும் அத்தனை பேர்களின் பேச்சையும் கேட்டு இருக்கின்றேன்.  

ஆனால் வீட்டில் எல்லா வீட்டையும் போலத்தான்.  ஏதாவது அரசியல் பேச்சு என்றால் கட்டி வைத்து உரித்து விடுவார்கள்.  

ஏனிந்த ஆர்வம் உருவானது என்று தெரியவில்லை.  

இன்று திரைப்படங்கள் சார்ந்த விருப்பங்கள் பின்னுக்குப் போய்விட அரசியல் சார்ந்த கவனிப்பு அதிகம் உருவாகியுள்ளது.  வாக்காளர் அடையாள அட்டை கிடைத்தது முதல் ஒரு தேர்தலைக்கூட புறக்கணித்தது இல்லை. 

என் கடமையைச் திருப்திகரமாகவே செய்து வந்துள்ளேன்.  

ஆனால் தமிழ்நாட்டில் அரசியலில் ராமதாஸ் என்னைப் பொறுத்தவரையிலும் வித்தியாசமான மனிதர்.  சாதி என்ற ஒற்றைச் சொல்லை நீக்கிவிட்டு பார்த்தால் அவர் ஒரு சமூகத்திற்கு தேவைப்படும் மனிதர்.  ஆனால் ஆட்சி, அதிகாரம் பதவி என்ற இந்த மூன்றும் இல்லாவிட்டால் பத்து காசுக்கு ஒருத்தரும் மதிக்கமாட்டார்கள் என்பதை எதார்த்தம் உணர்ந்தவர்.

மற்ற அரசியல்வாதிகளைப் போலவே மாறி மாறிப் பேசி வளர்ந்தவர்.  அதற்கு நீங்கள் சந்தர்ப்பவாதம், பச்சோந்தி என்று எந்த பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.  என் குடும்ப உறுப்பினர்கள் எவரும் ஆட்சி, அதிகாரம், பதவி என்று எதிலும் இருக்கமாட்டோம் என்று சொல்லி இன்று தான் சிறையில் இருப்பதை விட மகன் சிறையில் இருப்பதை நினைத்து வேகாத வெயிலில் வழிந்தோடும் வேர்வையை துடைத்துக் கொண்டிருப்பவர். 

குடும்ப அரசியல் தான்.  சந்தேகம் வேண்டாம். கட்சியை வைத்து குடும்பத்தை, வசதியை வளர்த்துக் கொண்டவர் தான்.  இவரைப்பற்றி தெளிவான கட்டுரை எழுத வேண்டும் நினைத்துள்ளேன். அது சாதி குறித்த தன்மை என்று மட்டுமல்லாது நம் மக்களின் மனோநிலையையும் பிரதிபலிப்பதாக இருக்கும்.

இந்த தளத்தில் இதுவரையிலும் நான்கு அரசியல் கட்டுரைகளை என் பார்வையில் எழுதியுள்ளேன்.  

ஒவ்வொரு கட்டுரைக்கும் ஏராளமான பார்வையாளர்கள், திக்குமுக்காடிய விமர்சனங்கள், மாற்றுக் கருத்துக்கள் என்று வந்துள்ளது. ஆனால் இன்று இதை நீங்கள் படித்துப் பார்த்தாலும் அதன் நம்பகத்தன்மை புலப்படும். 

கொங்கு முன்னேற்றப் பேரவை உருவாக காரணமாக இருந்த பெஸ்ட் ராமசாமி இப்பொழுது எங்கே இருக்கின்றார் என்று தேடும் நிலைமையில் தான் இருக்கின்றார்?

கட்சி உடைந்து சின்னாபின்னாமாகி ஈஸ்வரன் வேறொரு பாதையில் போய்க் கொண்டிருக்க சாதியை நம்பி வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் கொங்கு மண்டல இளைஞர்கள் கொடுத்த பணத்தை பெற்றவர் பெற்றவர் இன்று சர்வ சந்தோஷமாக இருக்கின்றார். அப்போது சக்திவேல் என்ற நண்பர் என்னோடு சண்டைக்கு வந்து விமர்சனம் எழுதினார்.  ஆனால் நான் எழுதியது தான் நடந்துள்ளது.

ன் மகள் கனிமொழி என்ற ஒரு சொல்லுக்காக கலைஞர் பெற்ற அவமானங்கள், இன்னும் மீள முடியாத பிரச்சனைகள், உலக அளவில் பெயர் வாங்கித்தந்த பூதாகார ஊழல் பூகம்பங்கள் என்று இன்றும் விடாது துரத்தும் கருப்பாகத்தான் இருக்கிறது.

ன்று வரையிலும் சீமான் குறித்து நக்கலும் நையாண்டியும் பேசிக் கொண்டிருப்பவர்களின் ஒரே தாக்கம் பாவி மண்னை கவ்வ வைக்க இவனும் ஒரு காரணமாக இருந்து விட்டானே? என்று அங்கலாய்ப்பவர்கள் தான் அதிகம்.  கடந்து போன தேர்தலில் நிச்சயம் சீமானின் பங்களிப்பு அதிகம்.  

இவர் மேல் குறைகள் சொல்பவர்கள், விமர்சனங்கள் வைப்பவர்கள் அத்தனை பேர்களும் தங்கள் முதுகில் உள்ள அழுக்கை துடைத்து விட்டு வந்தால் நன்றாக இருக்கும்.  துடைக்க துடைக்க வந்து கொண்டிருக்கும் வண்டி அழுக்கை எங்கே கொண்டு வைப்பது?  

அரசியலில் வளர்ந்து வரும் எல்லோரும் இருக்கும் ஆசைகள் இவருக்குள்ளும் இருக்காமலா போய்விடும்?  

இவர் மேல் விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை. இவர் தாண்டி வந்த விபரீதங்களுக்கும் அளவில்லை.  

இன்று வரை தாக்கு பிடித்து நிற்பதே அதிசயம் தான்.

விஜயகாந்த் பற்றி எழுதி வைத்து பல நாட்கள் கழித்து அப்பாதுரை வந்து இப்போதைய பார்வையில் விஜயகாந்த் குறித்து எழுதுங்களேன் என்று கேட்டார்.  காரணம் விஜயகாந்த எதிர்க்கட்சி தலைவராக மாறியிருந்தார்.  அவரே எதிர்பார்த்து இருப்பாரா என்று சந்தேகம்.  அதில் எழுதிய கடைசி வரிகளை படித்துப் பாருங்கள்.  கடந்த ஆறேழு மாதங்களாக அவர் கட்சியில் நடக்கும் நிகழ்வுகளை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

முழுமையாக தரவுகளோடு நிச்சயம் ராமதாஸ் குறித்து எழுத விரும்புகின்றேன்.  

காரணம் வீரபாண்டி ஆறுமுகம் சிறைச்சாலைக்குச் செல்லும் போது கூகுள் ப்ளஸ் ல் திமுக நண்பருடன் நீண்ட உரையாடல் நடத்த வாய்ப்பு கிடைத்தது.  

இன்று வீரபாண்டி ஆறுமுகம் மறைந்து விட்டார்.  

அவர் யாருக்காக "பாடுபட்டு" தேடித்தேடி சொத்துக்கள் சேர்த்தாரோ இன்று அதன் காரணமாக குடும்பத்திற்குள் வெட்டுக்குத்து என்று குடும்பமே நீதிமன்ற வாசலுக்கு அலைந்து கொண்டு இருக்கிறது. 

கடந்த பத்தாண்டுகளில் எந்த கட்சியில் இருந்தாலும் சரி, எந்த பதவியில் இருந்தாலும் சரி எவரும் இன்றைய சூழ்நிலையில் சிறைக்குச் செல்ல விரும்புவதில்லை.  ஒரே காரணம் வசதியாகவே அரசியல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களின் உடம்புக்கு சிறை வாழ்க்கை ஒத்துக் கொள்வதில்லை.  

அது ஏறக்குறைய இறுதி பயணத்தை நோக்கித்தான் அழைத்துச் செல்கின்றது அல்லது விடுதலையானதும் அதற்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்துகின்றது. 

மேடை போட்டவுடன் வந்து சேரும் ஆட்கள் கூட்டம் இன்று இல்லை. எது பேசினாலும் வாயை பிளந்து கொண்டு கேள்வி ஏதும் கேட்காமல் அமர்ந்திருப்பவர்களும் எவருமில்லை. காரணம் வீட்டு வரவேற்பரைக்கே அத்தனை பேர்களின் அயோக்கியதனங்களும் வந்து விடுகின்றது.  

எவரும் திருந்தத் தயாராகவும் இல்லை.  மக்களும் அதை எதிர்பார்க்கவும் இல்லை.

இன்று அரசியல் கட்சி நடத்துவது என்பது ஒரு கார்ப்ரேட் நிறுவன திட்டத்தை விட கடினமாக உழைக்கும் அளவிற்கு மாறிப்போயுள்ளது. 

கூட்டத்திற்கு அழைக்க பணம், கொண்டு வந்து சேர்க்க பணம், வந்தவர்கள் தங்க பணம், திரும்பிச் செல்ல பணம் என்று எங்கெங்குகாணினும் பணமடா என்று அரசியலின் முகமே மாறிவிட்டது.  

இன்று தமிழ்நாட்டில் ஒரு சாதாரண நகர்மனற் உறுப்பினர் வைத்திருக்கும் டயட்டோ இன்னோவா வாகனம் என்பது இயல்பாக போய்விட்டது.  

ஆனால் அப்படி தேடித்தேடி கொள்ளையடித்து வாழ்ந்தவர்கள் எவரும் கட்சியில் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் ஆட்சி முடியும் போது தேங்கிப் போய் சம்பாரித்த காசோடு அமைதியாகிவிடுகின்றார்கள். கக்கூஸ் கழுவி சம்பாரித்த காசு நாறவா செய்யும்?

இப்போது ராமதாஸ் அவர்களும் வீரபாண்டி ஆறுமுகம் போன்ற ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டு செல்லப்படுகின்றாரோ என்று மனதில் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.  

உலகில் கொடுமையானது முதுகு வலி நோய்.  அதில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை என்பது வாழ்ந்து கொண்டேயிருக்கும் போது தினந்தோறும் பரலோகம் பார்க்கும் கதை தான். நிச்சயம் ராமதாஸ்க்கு இப்போதைய காலகட்டம் ஒரு கொடுமையான காலமாகத்தான் இருக்கும்.  ஆனால் இனி வரும் அழைக்கழிப்பும், சிறைக்குள் இருக்கும் பயத்தன்மை, காவல்துறை அதிகாரவர்க்கத்தில் உள்ள தலித் அரசியல் என்று எல்லாப் பக்கத்திலும் பிரச்சனைகளின் ரூபம் பெரிதாகவே இருக்கும் என்று நம்புகின்றேன்.

ஊடகத்துறை, காவல்துறை, அதிகாரவர்க்கம் போன்றவர்களுடன் தொடர்பு இருப்பவர்கள் பேசிப்பாருங்கள்.  

ஒரு செய்திக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வெளியே தெரியாத அத்தனை விசயங்களையும் உங்களால் உணர முடியும். ஒரு கட்சியின் தொண்டராக ஒரு தலைவரைப் பார்ப்பவனுக்கும், அந்த கட்சி எடுத்த முடிவுக்குப் பின்னால் உள்ள அரசியல் கணக்குகளுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் எப்போதும் உண்டு என்பதை நன்றாக நினைவில் வைத்திருக்கவும். கத்திக் கொண்டு இருக்கும் தொண்டனுக்கு மட்டுமல்ல பொதுஜனத்திற்கும் அது குறித்து அத்தனை சீக்கிரம் தெரிந்து விடாது.

எதுவும் உடனே வெளியே வராது. வரவும் கூடாது. அது தான் அரசியலில் முக்கியம்.  

எப்போதும் போல வாழ்க, ஒழிக என்று கத்திக் கொண்டிருக்கும் காசு பெற்ற கூட்டத்திற்கு இதுபோன்ற விசயங்கள் எப்போதும் தெரியப் போவதில்லை. இப்போதைய ஆட்சியில் பல்வேறு கணக்குகளின் அடிப்படையில் அடுத்தடுத்து ஆப்புகள் பா.ம.கா. கட்சியினருக்கு சொருக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. 

இது ஏறக்குறைய  காலில் வந்து விழு என்பது வரைக்கும் இந்த நாடகம் நீடீத்துக் கொண்டேயிருக்கும் என்று நினைக்கின்றேன்.

பா.ம.கா வில் ஓடி ஒளியும் கூட்டமும், உள்ளே தள்ளிக் கொண்டு செல்லும் கூட்டமும் தான் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.  ஆனாலும் இன்னமும் வட மாவட்டங்கள் அச்சத்தில் தான் உறைந்துள்ளது.

எரிந்த பேரூந்துகளும்  கலவரத்தினால் வாழ்க்கை இழந்தவர்களைப் பற்றி இன்னும் சில மாதங்கள் பேசுவார்கள். 

முடிந்தால் வருடந்தோறும் மேடைப் பேச்சில் தவறாமல் குறிப்பிடுவார்கள்.  உருவான வன்முறைக்கு இந்த சாதி மட்டும் தான் காரணமா? இல்லை சமூகத்தில் உருவாகியுள்ள வாழமுடியாதவர்களின் வெறுப்பா?  

நிச்சயம் பேசுவோம்.

ஆட்சியாளர்கள் போட்டுள்ள கணக்குகள் சமன் செய்யப்படும் வரைக்கும் இனி ராமதாஸ்க்கு ஒவ்வொரு நாளும் நித்ய கண்டம் பூரண ஆயுள் தான்.



52 comments:

சீனு said...

அவர் 'ஒரு' சமூகத்திற்கு தேவைப்படும் மனிதர். என்றும் எடுத்துக் கொள்ளலாம் இல்லையா ஜோதிஜி :-)

Anonymous said...

//ஆட்சியாளர்கள் போட்டுள்ள கணக்குகள் சமன் செய்யப்படும் வரைக்கும் இனி ராமதாஸ்க்கு ஒவ்வொரு நாளும் நித்ய கண்டம் பூரண ஆயுள் தான்// சரியா சொல்லி இருக்கீங்க, ஒரு சிறு திருத்தம் ”நித்ய கண்டம் பூரண ஆப்பு” இனி ஏழு கொடு எழுபது கொடுன்னு கேட்க கூடாது, வெளிய விட்டா போதும்னு அம்மா கூட ஒப்பந்தம் பண்ணிக்க வேண்டியதுதான்.

reverienreality said...

ராமதாஸின்... சாதி என்ற ஒற்றைச் சொல்லை நீக்கிவிட்டு பார்த்தால்

=

ஹிட்லரின்... யூத வெறுப்பை மட்டும் நீக்கிப்பார்த்தால்...


இதை சொல்வதற்காக வருத்தப்படவில்லை நண்பரே...

அறிவுள்ள எவனும் ராமதாசின் பாதையை சகித்துக்கொள்ள மாட்டான்...

அதோடு நிறுத்திக்கொள்கிறேன்...

I tried reading between the lines also...but could not give the benefit of the doubt to you....Sorry...

Anonymous said...

சாதியை வைத்து அரசியல் செய்து ஜெயித்தார் என்கிற ஒரே விஷயத்துக்காக பாராட்ட வேண்டுமா ?

சாதியை வைத்து அரசியல் செய்வதும் பெண்டாட்டியை வைத்து மாமா வேலை பார்ப்பதும் ஒன்றாக தான் தோன்றுகிறது (இது ராமதாசுக்கு மட்டுமல்ல; சாதி அரசியல் செய்யும் அனைவருக்கும் பொருந்தும்)

அன்புமணி போல மனசாட்சி இல்லாத பிராடு எங்கும் காண முடியாது; சுகாதார துறை அமைச்சராக இருந்த போது இவர் அடித்த கொள்ளை - தொடர்ந்து கொள்ளை அடிக்கும் இரு கழகங்களை விட அதிகம்; அதிலும் சுகாதார துறையில் பல விஷயங்களில் மனசாட்சியே இன்றி கொள்ளை அடித்தார்

நீங்களும் ஒரு வன்னியரோ; அல்லது இணையத்தில் மாற்றி எழுதினால் மட்டுமே கவனிக்கப்படுவோம் என்று இப்படி எழுதுகிறீர்களோ என்றே தோன்றுகிறது

ராமதாஸ் கூட்டம் சமீபத்தில் செய்துள்ள அராஜகங்களை நியாயப்படுத்துபவர்கள் யாராயினும் அவர்கள் மனிதாபினம் அற்றவர்கள்; அப்படி எழுதும் யாரும் சிறிதும் மதிக்கத்தக்கவர்கள் அல்ல... உங்களையும் சேர்த்து !

http://rajavani.blogspot.com/ said...

ராமதாஸ் மற்றும் அவரது கட்சியினர் செய்தது ஓவர் டோஸ் அன்பின்....வாந்தி எடுத்து தான் ஆகவேண்டும்.

வவ்வால் said...

ஜோதிஜி,

ஹி...ஹி நல்ல வடிவான பகடிப்பதிவு :-))

உங்களுக்கு அரசியலும்,வரலாறும் இக்காலத்தில் புரியப்போவதில்லை, புரியுதோ இல்லையோ பதிவு மட்டும் வந்துடும் :-))

ஜாதிக்கட்சி என்பது தனது ஜாதியை முன்னேற்றுவதை கொள்கையாக கொண்டு செயல்ப்பட்டால் கூட பரவாயில்லை,ஆனால் இன்னொரு ஜாதியை அழிக்கனும் என்று செயல்பட்டால் அது இனசுத்திகரிப்பு போன்றது ,ராசபக்சேக்கள் செய்வது.ராமதாசர் செயல்ப்பாடு ராசபக்சேவை ஒத்தது. அதனைக்கூட புரிந்துக்கொள்ள இயலாத அளவுக்கு தான் உங்கள் அனுபவம் இருக்கு.

இப்போ ,இப்படி எழுதினால் எதிர்ப்பு வரும்னு தெரிஞ்சு தான் எழுதினேன்னு ஒரு டயலாக்கு சொல்வீங்களே :-))
----------

நம்ம கிட்டே நேரடி அனுபவமே இருக்கு, ஒரு பதிவ போடலாம்னு பார்க்கிறேன் , தடைகளா வந்துக்கிட்டு இருக்கு, குண்டு ஒன்னு வச்சிருக்கேன் வகையிலே வரும்!!!
-------------

ரெவரி,

//ஹிட்லரின்... யூத வெறுப்பை மட்டும் நீக்கிப்பார்த்தால்...
//

hitting the BullS eye!

யூத வெறுப்பை நீக்கினால், ஹிட்லர் தான் மிகச்சிறந்த நிர்வாகி, அறிவியல் ஆர்வலர், நிறைய கண்டுப்பிடிப்புகளுக்கு வித்திட்டவர்.ஜெர்மனியை தொழில் துறையில் முன்னேற்றியவர்,இன்னிக்கும் ஜெர்மனிய வேதியல் வல்லுனர்கள் தான் உலகின் டாப் இடத்தில்,நிறையப்பேரு நோபெல் வாங்கி இருக்காங்க, எல்லாம் ஹிட்லர் அழிவு அல்லது ஆய்வு என அப்போ ஊக்கப்படுத்தியது, பொதுவாகவே ஜெர்மானியர்கள் வேதியல் துறையில் வல்லுனர்கள் என்பதும் குறிப்பிட தக்கது.

எனவே ஹிட்லர் சமூகத்துக்கு வேண்டியவர்*conditions applied!

ஜோதிஜி said...

முட்டாளாக வாழ்ந்து பாருங்கள். உங்கள் முன்னால் எத்தனை புத்திசாலிகள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

ஜோதிஜி said...

மேலே அனானி சொன்ன சொன்னதில் பல விசயங்கள் உண்மை ராஜ். வருகின்ற தேர்தலில் ஜெயித்தே ஆக வேண்டும் என்கிற நிலையில் பா ம க உள்ளது.

ஜோதிஜி said...

சாதியை வைத்து அரசியல் செய்வதும் பெண்டாட்டியை வைத்து மாமா வேலை பார்ப்பதும் ஒன்றாக தான் தோன்றுகிறது (இது ராமதாசுக்கு மட்டுமல்ல; சாதி அரசியல் செய்யும் அனைவருக்கும் பொருந்தும்)

அப்பாடா சூடான வார்த்தைகளுக்கிடையே ஒரு இதமான ஆறுதல்.

ஜோதிஜி said...

அறிவுள்ள எவனும் ராமதாசின் பாதையை சகித்துக்கொள்ள மாட்டான்...


நன்றி. வன்முறையாளர்களை காவல்துறை தானே கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கின்றது. ஆனால் இதனால் பாதிக்கப்படும் எந்த பொதுஜனமும் வாயை திறப்பதே இல்லையே.

ஜோதிஜி said...

யூகங்கள் மாறும். வாய்ப்புகள் இனி குறைவு.

ஜோதிஜி said...

அவரும் அப்படித்தான் சொல்லிக் கொண்டு இருக்கின்றார். ஆனால் நம்புபவர் யாருமில்லை.

Anonymous said...

நீங்க முட்டாளாதானே வாழுறீங்க ஜோதிஜீ

வவ்வால் said...

ஜோதிஜி,

கூல்...கூல்!

சித்தாந்த அடிப்படையில் நீங்க கொஞ்சம் "conservative idealogist" என ஒரு புரிதல் எனக்கு உண்டு ,பல நேரங்களில் அதனை மெய்ப்பிக்கிறிங்க :-))

"நல்லறிவு கதைகள்" எல்லாம் படிச்சு வளர்ந்திருப்பீங்கனு நினைக்கிறேன்,ஒன்றை பற்றி தெரிந்து கொள்ள புரிந்துக்கொள்ள அதன் மீதே ஒரு லேபில் ஒட்டி இருக்கானு பார்க்கிறிங்க ,திரைப்பட "விஷப்பாட்டில்" போல :-))

நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பது போலவே "முட்டாள்' தத்துவமும் சொல்லுறிங்க, அது சரி நான் ஏன் முட்டாளா வாழ்ந்து பார்க்கணும் ஹி....ஹி அதான் ஏற்கனவே முட்டாளாத்தானே இருக்கேன் :-))

ஆனால் முட்டாளாக இருந்தால் யாரு அறிவாளினே இனம் கண்டுக்கொள்ள கூடத்தெரியாது என்பது தான் உலக நியதி, கற்றாரை கற்றாரே காமுறுவர் என எப்பவோ சொல்லிட்டாங்க.எனவே நமக்கு முன்னால் இருப்பது புத்திசாலியானு புரிந்துக்கொள்ள கூட கொஞ்சம் அடிப்படை புத்திசாலித்தனம் தேவைங்கோ!

அடியேனுக்கு முட்டாளாக இருப்பதில் பெரிய கவலையில்லை,ஆனால் முட்டாளாக ஆக்கப்படுவது குறித்து கவலைப்படுவேன்!
---------------

யாருயா அனானியா வந்து குறுக்குசால் ஓட்டுறது, தனி டிராக் போட்டு ஓட்டவும் ,நான் போட்ட டிராக்கில் நான் தான் ஜோதியை ஓட்டுவேனாக்கும் :-))

Anonymous said...

முட்டாளை முட்டாளுன்னு சொல்ல எந்த ட்ராக்கிலும் வரலாம் வெளவால்

ஜோதிஜி said...

வவ்வால் இம்பூட்டு அறிவா? இந்த தத்துவ ரீதியான விசாரனைகளை ஏன் பதிவில் எழுதுவதில்லை. பாருங்க என்னை முட்டாள்ன்னு சொல்ல பெயரில்லாமல் எம்பூட்டு மெனக்கெட்டு சந்துக்குள்ள பூகுறாரு?

Anonymous said...

முட்டாளுன்னு திரும்ப திரும்ப நிரூபிக்கறீங்க ஜோதி

நிகழ்காலத்தில்... said...

முட்டாள்னு சொன்னா ஒத்துக்கிட்டாத்தான் அறிவாளி... :))))

சேக்காளி said...

என்ன சொல்றது வவ்வால் அசத்துறீங்க, இந்த அணுகுமுறை ஒவ்வொருவருக்கும் வந்தால் நிறைய வாதங்கள்(argument) கலந்துரையாடலாக,கருத்து பரிமாற்றங்களாக(Discussion) மாறி பங்கு பெருவோர்,படிப்போர் மற்றும் பார்வையாளர்களுக்கு பயன்படும்.
//கக்கூஸ் கழுவி சம்பாரித்த காசு நாறவா செய்யும்//
கக்கூஸ் கழுவுவதை தரக்குறைவாக எண்ணாத ஒருவரிடமிருந்து இந்த வார்த்தை வெளிப்படுமா. பார்க்கலாம் உங்கள் கட்டுரை "ஜி" க்கு தரம் சேர்க்கிறதா அல்லது 2ஜி-3ஜி போல தரம் குறைகிறதா என்று.

வவ்வால் said...

ஜோதியை நீங்களே முட்டாளுன்னு சொல்லுங்க சிவா. என் வாயாலே சொல்ல வெச்சி கேட்கிறதில் என்ன இன்பம்.

ஜோதிஜி said...

தவறாக புரிந்து கொண்டீர்கள் என்ற நினைக்கின்றேன்.

பொதுவாக பூ விற்ற காசு போன்ற நடைமுறை பேச்சுக்களை குறிப்பிடுவதுண்டு. அரசியல்வாதிகளைப் பற்றி பேசும் போது இப்படித்தான் எழுத வேண்டியுள்ளது. இதன் மறைபொருளை நீங்கள் கற்பனை செய்வது போன்ற எண்ணத்தில் எழுதவில்லை.

Anonymous said...

ஏன் சார் பா.ம.க வில இணையிற எண்ணம் இருக்குது போல
ரெவெரி சார்,ராமதாஸ் ஓட ஹிட்லர் அ ஒப்புடுறீங்களே..
என்ன தான் கொடுமைக்காரனா இருந்தாலும் ஹிட்லர் ஒரு திறமையான நிர்வாகி,முதலாம் மகாயுத்தத்தில் தோற்று எல்லோராலும் சூறையாடப்பட்ட ஜெர்மனி நாட்டை ஏனைய வல்லரசுகளுக்கு நிகராக வளரச்செய்த திறமைசாலி,நாட்டுப்பற்றாளன் .நம்ம ராமதாஸ்

Arasu said...

நுணுக்கமாக சிந்தித்து எழுதப்பட்ட பதிவு. ஜோதிஜிக்கு பாராட்டுக்கள். மருத்துவர் ராமதாஸ் செயல்கள் குறித்து பரிவுடன் எழுதப்பட்டிருக்கும் இப்பதிவில் எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு.

தமிழ் மொழித்தூய்மை, தமிழிசை, ஊடகத்தில் தரமான தமிழ், மதுவிலக்கு போன்ற நன்னோக்குகளை தூக்கிப்பிடிப்பதில் ராமதாஸ் அவர்களின் பங்கினை யாரும் மறுப்பதற்கில்லை.

ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைப்பதில் அவர் முனைப்புடன் பணியாற்றி தமிழின வரலாற்றில் ஒரு தனியிடம் பெற்றிருக்கவேண்டியவர். இன்று “தன் கட்சி வளர்ச்சிக்கு சாதிச்சண்டைகள் மூட்டிவிட்டு ஏற்கனவே குழம்பியிருக்கும் தமிழினத்தை மேலும் சிதைக்கிறார்” என்ற அவப்பெயரை இன்று பெற்றிருக்கிறார். இதற்காக வேறு எவரையும் நாம் குற்றம்சொல்லமுடியாது. அவர்தான் பொறுப்பேற்கவேண்டும்.

தலித் மக்களுக்கு எதிராக “உயர்சாதிக்கூட்டணி” அமைத்ததைவிட தமிழ்ச்சமுதாயத்திற்கு என்ன கொடுமை யார் செய்துவிடமுடியும்.

இந்நேரத்தில் தொல். திருமாவளவனின் பொறுமையும், பக்குவமும் ஒவ்வொரு தமிழ்ச்சமுதாய நலம் விரும்பியாலும் பாராட்டப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும், ராமதாஸ் அவர்கள் சிறையிலிருந்து வெளியில் வந்து தன் பாதையில் மாற்றம் செய்துகொள்வார் என எதிர்பார்ப்போம்.

அவருக்காக நடந்த ஆர்ப்பாட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களில் அவர்மேல் பரிவுள்ளவர்களும், ஆதரவாளர்களுமே இருக்கக்கூடுமே. இந்தக்கொடுமைகளை ஊடகங்களும், இணைய தளங்களும் கண்டிக்காமல் என்ன செய்ய?

இத்தோடு சாதி அரசியல் தமிழகத்தில் முற்று முழுதாக ஒழியட்டும்.

- அரசு

அருள் said...

அன்புள்ள ஜோதிஜி

உங்களது துணிச்சலை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இந்த பதிவை நீங்கள் எவ்வளவு எச்சரிக்கையாக எழுதியுள்ளீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால், உங்களது பரிதாப நிலையை நினைத்து கவலையாகவும் இருக்கிறது. நீங்கள் எவ்வளவுதான் எச்சரிக்கையாக எழுதினாலும், இனி உங்கள் மீது பூசப்படும் சேற்றை நீங்கள் துடைக்க முடியாது.

பதிவுலகிலும் பத்திரிக்கை உலகிலும் இரண்டு நிலைகள்தான் உள்ளன:

1. மருத்துவர் இராமதாசு அவர்களை கடுமையாக எதிர்ப்பவர்கள்,
2. மருத்துவர் இராமதாசு அவர்களை கடுமையாக எதிர்க்காதவர்கள்.

மருத்துவர் இராமதாசு அவர்களை எதிர்ப்பவர்கள் எல்லோரும், எதிர்க்காதவர்களை தங்களின் எதிரிகளாகத்தான் கருதுகிறார்கள். அந்த வகையில், எந்த தருணத்தில் நீங்கள் மருத்துவர் அவர்களை தீவிரமாக எதிர்க்க மாட்டேன் என்று முடிவெடுத்தீர்களோ - அப்போதே நீங்கள் சாதிக்கு ஆதரவானவராக, பிற்போக்குவாதியாக, சாதி வெறியராக அடையாளப்படுத்தப்படுவீர்கள்.

இனி உங்களை பதிவுலகில் காப்பாற்ற முடியாது என்றுதான் கருதுகிறேன். நன்றி.

rajah said...

அப்ப அந்த சாதிய வச்சி காலேஜி சீட் அப்புறம் அரசு வேலை வாங்குறவங்க அவனோட அம்மா வ வச்சி ****** பண்றான் னு எடுத்துக்கலாமா? பேசுரான் பாரு பேச்சி கேன பய மாதிரி

Unknown said...

ஜோதிஜி உண்மையை உரைத்தற்கு நன்றி !

ஆனந்த் said...

பலரும்(பெயரை கூட சொல்லாதவர்கள்) அனைவரும் என்னவோ எந்த தலைவரும் கட்சியும் சாதியே பார்காத மாதிரி கருத்து சொல்லி இருக்கிறார்கள். போகட்டும். பிரச்சனை எப்படி ஆரம்பித்தது என்று தெரிந்துகொள்ளுங்கள். உடனே பொய்த்தகவல் என்று சொல்லிவிடாதீர்கள், நக்கீரனில் வந்த தகவல்கள் உள்ளன. http://vanjikkapadupavaninkuralgal.blogspot.in/

வவ்வால் said...

சேக்காளி,

நன்றி!

நாம எப்போதும் கருத்துரையாடல் செய்யவே விரும்புவோம், சில சமயம் அதுவா சூடாகி எகிறிடும் :-))

அதுவும் ஜோதிஜி போன்ற "விற்பன்னரிடம்" எல்லாம் சூடாவோமா? இல்ல ஆகத்தான் முடியுமாங்கிறேன்!
----------------

ஜோதிஜி,

//வவ்வால் இம்பூட்டு அறிவா? //

எனி உள்க்குத்து?

முட்டாளுக்கு இம்புட்டூ அறிவானு கேட்கலையே அவ்வ்!

தத்துவ விசாரணைகள்,மானிட வாழ்வியல் சார்ந்து லோகாதாய காரண காரியங்கள் சார்ந்து ,பிரச்சினைகளின் மையப்புள்ளியின் வெளிவட்ட பாதையில் இயங்கியல் மற்றும் சார்பியல் ரீதியாக அலசி உண்மைகளை கண்டறிந்து ஆத்ம விசாரத்துடன் அவ்வப்பொது கதைப்பதும் உண்டு,என்ன அதை எல்லாம் பதிவாகப்போட்டால் எட்டிப்பார்க்க எங்க ஏரியா கொசுக்கூட வராது என்பதால் ஈக்களை கவரும் இனக்கவர்ச்சிப்பொறியாக இனிப்பான பதிவுகளை இட்டு வருகிறோம் :-))

# ஊடால பாய்ஞ்சு பட்டம் கொடுத்ததும் இல்லாமல் என் பேரை வேற களவாடப்பார்க்குதே பயப்புள்ள,அப்போ பழம்ப்பெருச்சாளியாத்தான் இருக்கும், அனானி ராசா வேண்டாங்கண்ணா அப்பாலிக்கா லட்டு தின்ன வாய் இருக்காது சொல்லிட்டேன் :-))

Anonymous said...

பாமக வளர்ச்சியில் தான் இராமதாசுவின் சகலமும் அடங்கியுள்ளது. இப்போ பாமகவுக்கு இறங்கு முகம் அதை சரிகட்ட வேண்டி ராமதாசு இம்முயற்சியில் உள்ளார். அடுத்த சாதி காரங்க பாமகவுக்கு வாக்கு செலுத்துவது இல்லை அல்லது மிககுறைவு. வடதமிழ்நாட்டில் வன்னியரை உசுப்பேத்த அவருக்கு வேற வழியில்லை. வன்னியர் எல்லோரும் அவரை ஆதரிக்கமாட்டார்கள் ஆனால் குறிப்பிட்ட விழுக்காடு வாக்கு வாங்கி அரசியலில் பிழைக்க வேண்டிதான் இந்த வேலை.

சாதி எதிர்ப்பாளர்களே நீங்க அதிமுக திமுக போன்ற கட்சிகளுக்கு வாக்கு செலுத்தியதுண்டா? அவர்கள் செய்வதும் சாதி அரசியல். திராவிட கட்சிகள் சாதி கூட்டணி அமைத்த போது திராவிட கட்சியினர் அக்கட்சிக்கு வாக்கு செலுத்தவில்லையா? ஆனால் வன்னியரை மட்டுமே நம்பி உள்ள பாமக போல் அல்ல அவை என்பது தான் பாமகவுக்கும் மற்ற கட்சிகளுக்கும் உள்ள வேறுபாடு.

இன்னொரு பெரிய குறை நம் தேர்தல் முறைகளில் உண்டு. ஒரு கட்சி சில மாவட்டங்களில் பலமாக உள்ளது அங்கு அது 15 அ 20% வாக்குகளை வாங்குகிறது. ஆனால் மாநில அளவில் பார்க்கும் போது அக்கட்சி அங்கீகாரம் பெற போதுமான அளவு வாக்கு % பெறவில்லை. எனவே அக்கட்சி மாநில அளவில் வெற்றி பெறும் என்று கருதும் கட்சியுடன் கூட்டணி வைக்கிறது (பாமக நிலை இது தான்). பாமக சந்தர்ப்பவாத கூட்டணி வைக்கிறது என்பவர்கள் இதை கருதில் கொள்க. அதிமுக திமுக காங்கிரசு சிபிஐ சிபிஎம் போன்றவையும் சந்தர்ப்பவாத கட்சிகள் என்பதையும் நினைவில் கொள்க.

தமிழகத்தில் எவ்வளவு பேர் சாதி பற்று இல்லாமல் இருப்பவர்கள்? 1% இருப்பார்களா?

-


Siva Kavundar said...

கருத்து சொல்ற
அறிவாளிகளுக்கு சில கேள்விகள் ,
1) சாதி சங்கமே இல்லாத
ஒரேயொரு சாதி இந்த தமிழ் நாட்ல
இருந்தா சொல்லு ,நான்
பொது இடத்துல உங்க கிட்ட
நூறு செருப்படி வாங்க
தயார் ,அடிக்கிறதுக்கு போலீஸ்
பர்மிஷன் நானே வாங்கித்தறேன் ,

2)சாதி பார்த்து அரசியல் பண்ணாத
ஒரேயொரு அரசியல் தலைவனையோ ,
அரசியல்வாதியோ இருந்தா சொல்லு ,எ
தொகுதில எந்த
சாதி மெஜாரிட்டினு பார்த்து ஆள
நிறுத்தாத ஒரேயொரு கட்சிய
சொல்லு ,( வன்னியர் அதிகம் உள்ள
தொகுதில எந்த நாய
வேணுமின்னாலும் நிறுத்தலாம் இந்த
குடிகார நாய்களுக்கு குடிக்க சாராயம்
வாங்கிகொடுத்தா போதும்
யாருக்கு வேணுமின்னாலும்
ஒட்டு போடும் )

3)ரிசர்வ் தொகுதி தவிர வேறு தொகுதில
ஒரு அரிசன வேட்பாளர
( தலித்னா அர்த்தம் புரியல )
நிறுத்துன ஒரேயொரு தலைவன
சொல்லு (தலித் எழில்மலைய
MP .கே அடையாளம் காட்டியதால
jeyalalithaa திருச்சில நிறுத்திச்சி )
சாதி மறுப்பு பேசுற யாரும்
சாதிச்சான்று வாங்குவது இல்லன்னு பி
மீது நம்ம்பிக்கை இருந்தா சொல்லுங்க
பார்ப்போம் ,

4 ) எந்த காலனி வாழ்
மக்களும் அதே பகுதில குடியிருக்குற
அருந்ததிய பெண்ணையோ ,
பையனையோ தன
பிள்ளைகளுக்கு திருமணம்
செய்துள்ளதா சொல்லுங்க ,

என்னடா நாமெல்லாம்
மாநாடு நடத்துனமென்றால் குடிக்க
சாராயம் ,பிரியாணி ,செலவுக்கு பணம் ,
R .T . O கிட்ட சொல்லி தனியார்
பேருந்து உரிமையாளரிடம்
மிரட்டி டீசல்
போட்டு இலவசமா பஸ்ஸ
அனுப்புனாதான் கூட்டம் வருது.
ஆனா இவனுங்களுக்கு மட்டும் சொந்த
காசுல இவ்வளு கூட்டம் கூடுதேன்ற
கோவத்துல திட்டமிட்டு இந்த அரசோ ,
அரசு எந்திரமோ சதிசெஞ்சு ,
உங்களுக்கு ஏற்படுற எந்த
இழப்பிற்கும் அதிகமாக
இழப்பீடு தறோம்னு அரிசன
தலைவர்கள்
மூலமா மறக்கானத்து காலனி மக்களு
கொடுத்து மரக்கானத்துல
இப்படி ஒரு கலவரத்த
ஏற்படுத்தி அதன் மூலம் வட
மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கைய
ஸ்தம்பிக்க வச்சது இந்த
கேடு மதி கொண்ட ஆட்சியாளர்கள்
தான் என்பதை புரிந்து கொள்ளாத
ஜடங்கள் மற்றும் குற்ற நோக்கம்
உள்ளவர்கள் கூறும் கருத்த
நெனைக்கும் பொது முன்னாள்
உச்சநீதிமன்ற
நீதிபதி வணக்கத்திற்குரிய
மார்க்கண்டேய கட்ஜு சொன்ன "இந்த
நாட்டில் வாக்களிக்கும் மக்களில்
தொண்ணூறு சதவிகிதம் பேர்
முட்டாள்கள் " வார்த்தைகளின்
உண்மையை என்னால் புரிந்துகொள்ள
முடிகிறது , உங்களில்
யாராவது சிந்தித்தீர்களா ஏற்கனவே பல
நடந்த அந்த பகுதியில போதிய
பாதுகாப்பு ஏற்பாடு செய்யாமல்
விட்டது என்
என்று ,அரசாங்கமோ ,காவல்துறையோ
அந்த பகுதியில் முடிந்தால் நேரில்
விசாரித்து பாருங்கள். உண்மை தெரிய
வரும் .

Siva Kavundar said...

எவனுக்கும் வப்பாட்டியா இருந்து அரசியலுக்கு வரல. மஞ்சாப் பையோட சென்னை வந்து சினிமாவுக்கு கத வசனம் எழுதி அரசியலுக்கு வரல. இது காயா பழமா கொஞ்சம் தொட்டு பாக்கட்டுமான்னு சினிமாவுல பாடு பாடி அரசியலுக்கு வரல. . நல்லா குடிசிக்குனு தொப்புள்ள பம்பரம் விட்டு புட்டு அரசியலுக்கு வரல.தமிழ் நாட்டுல இந்த மாதிரி அடிப்படை தகுதி எதுவில்லாம . குடிக்காதிங்கன்னு தமிழ் நாட்டு மக்களை சொன்னா மிடாசு ,வருமானம் போச்சுன்னா .. எப்படி சும்மா விடறது படீக்க சொல்லறாரு . விவசாய பூமிய காப்பாந்துங்கன்னு சொல்லறாரு.இவர எப்படி தலைவரா ஏத்துக்கமுடியும்.சாதிதலைவரா ஆக்கிபுட்டோம்ல . கேப்மாரி தனம் பண்ணி , திருட்டுத்தனம் பண்ணி பெங்களுரு , டில்லின்னு கேசுக்கு நாயா அலையறாரா என்ன ..,
மந்திரிகளை எம் எல் ஏ வை ஆண்டான் அடிமை மாதிரி நடத்தும் ஜெயா விற்கு, சட்டமன்றத்திலேயே நான் பாப்பாத்திதான்னு சொன்ன ராமதாசினை சாதி தலைவர் என்று சொல்ல அருகதை இல்லை

Unknown said...

பிற அரசியல் தலைவர்களுக்கு மருத்துவரின் மீதான் மிகப்பெரிய எரிச்சல்களுக்கு காரணம் ..
எந்த வித அரசியல், பண பின்புலங்கள் இல்லாமல் பேச்சுத்திறமையில்லாமல், திரைப்பட பின்னனியில்லாமல் மக்களை கவர்ந்திழுக்கும் எந்த ஒரு அம்சமும் இல்லாமல் இருந்த போது எப்படி இவரின் பின்னால் எப்போதும் பின் வாங்காத, அவரை வெறுக்காத ஒரு மக்கள் சக்தி உள்ளது என்ற பொறாமை....

ஆனால் அவருடைய அற்பணிப்புதான் இதற்கெல்லாம் காரணம் என்ற உண்மை அறியாமல் (அல்லது அறிந்து கொள்ள விரும்பாமல்) உள்ளனர்.

FULL NEWS HERE:
ஏன் பத்திரிக்கைகள் பா.ம.க. வையும் மருத்துவர் இராமதாசுவையும் கடுமையாக கண்மூடித்தனமாக தாக்குகின்றன....?
http://needjusticeinmarakkanam.blogspot.de/2013/05/blog-post_10.html

Unknown said...

மருத்துவர் இராமதாசு மற்ற அரசியல்வாதிகளைப்போல அன்போடு ஆரத்தழுவுவதுபோல முதுகிலே கத்தியை இறக்குபவர் அல்லர், அடுக்கு மொழியிலே அழகுத்தமிழிலே நயமாக பேசும் அரசியல்வாதியல்ல, கேமராவின் முன்னால் மட்டுமல்லாமல் எல்லாரிடத்திலும் எல்லா இடத்திலும் நடிக்கும் மனிதர்களுக்கிடையில் மனதிற்கு பட்டதை நேரடியாக சொல்லும் குணம் படைத்தவர், ஆதரித்தால் பலமாக ஆதரிப்பதும் எதிர்த்தால் பலமாக எதிர்ப்பதும் இவரது இயல்பு, நாளை இவரோடு கூட்டணி வைத்தால் என்ன செய்வது, இவரை ஆதரித்தால் என்ன செய்வது என எண்ணி பசப்பு மொழிகள் பேசி கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீனாக செயல்படுபவர் அல்ல, இவருடைய பேச்சும்,செயல்களும் அதிரடியாக இருக்கும், இதுதான் இவருடைய மிகப்பெரிய பலம், மிகப்பெரிய பலவீனமும் கூட, இவருடைய இந்த அதிரடிப்பேச்சினால் தான் செல்வி.ஜெயலலிதாவும், திரு.கருணாநிதியும் மோதிப்பார்க்க பயந்த ரஜினியுடன் மோதி ரஜினிக்கு இருந்த மாய பலத்தினை உடைத்தெறிந்தவர், இது தமிழினம் மறுமொரு நடிகரால், வேற்று மாநிலத்தவரால் ஆளப்படாமல் தப்பித்தது, இது மருத்துவர் இராமதாசினால் அடைந்த மிகப்பெரிய பலன். இந்த பேச்சுதான் அவருடைய பலவீனம், ஒரு தேர்ந்த அரசியல்வதிக்கான அரசியல் தந்திரம் (நயவஞ்சகம்?) அவரிடமில்லை, மனதில் பட்டதை நேரம் காலம் தெரியாமல் பேசுவது அவருடைய பலவீனம்.....

ஜோதிஜி said...

நன்றி அரசு.

இந்த பதிவுக்கு கிடைத்தத அங்கீகாரமாக வந்த உங்கள் கருத்துக்கு நன்றி.

ஜோதிஜி said...

நன்றி அருள்.

ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு விதமான பட்டங்கள். இதில் எழுதியுள்ள நான்கு அரசியல் கட்டுரைகளை படிக்கும் போது உங்களுக்கே புரியும். திமுக வை பற்றி எழுதினால் அதிமுக. முஸ்லீம்களைப் பற்றி எழுதினால் ஆர்எஸ்எஸ். இடஒதுக்கீடு பற்றி எழுதினால் சாதி வெறியன்.

ஜோதிஜி said...

நன்றி சமத்துவம்

ஜோதிஜி said...

இந்த கட்டுரையை ஏற்கனவே நீங்க தந்தீங்க. ஞாபகம் இருக்கா. கூகுள் ப்ளஸ் ல் கூட அப்போது இணைத்து வைத்தேன்.

ஜோதிஜி said...

நீங்கள் எழுதிய அடிப்படை விசயங்களைப் பற்றி அடுத்த பதிவில் எழுத மனதில் வைத்திருந்தேன். வருகைக்கு நன்றி.

ஜோதிஜி said...

உங்கள் கருத்துக்கு நன்றி.

ஜோதிஜி said...

அரசியல்வாதிகளுக்கு எப்போதும் ஒரு வசதியான நல்ல விசயம் உண்டு என்பதை ஆச்சரியத்தோடு பார்ப்பதுண்டு. போன் தேர்தலில் தோற்று இருப்பார். ஏராளமான ஊழல்களை செய்து இருப்பார். இந்த தேர்தலில் கூட்டணி பலத்தில் அல்லது சார்ந்த கட்சியின் பலத்தில் ஜெயித்து இருப்பார்.

புனிதராக மாறியிருப்பார். மக்களும் மறந்து இருப்பார்கள்

ஜோதிஜி said...

வீட்டுக்குள் விட முடியாத சாதியை வைத்துக் கொண்டு தான் சாதி பேசும் தலைவர்களை வெறுப்பவர்கள் தான் இங்கே அநேகம். உங்கள் பதிவுகளைப் பார்த்தேன். வருகைக்கு நன்றி.

ஜோதிஜி said...

கருத்துக்கு நன்றி.

ஜோதிஜி said...

நன்றி டினேஷ்

ஜோதிஜி said...

சரி சரி. ஏதோ வெடிகுண்டு சமாச்சாரம் தரப்போறதா சொல்லியிருக்குறீங்களே? எப்ப தரப்போறீங்க?

sakthi said...

வன்னியர்கள் அதிகமாக வாழும் வடமாவட்டங்களெல்லாம் குடியில் முதலிடமும், படிப்பறிவில் கடைசி இடமும் பெறும்போது, இன்னும் வறுமைக் கோட்டுக்கு கீழே இருந்தபோது மரு.இராமதாஸ் தவிர பாவம் இந்த மக்கள் என்று எந்த நாயும் கேக்கல. அவர் ஒன்னும் திருடர் கட்சிகள் மாதிரி பல வருடம் ஆட்சி செய்து எந்த மக்களுக்கும் துரோகம் செய்யல. எவனாவது பெரும்பாண்மை வன்னிய மக்களுக்கான உரிமைகளை பேசுங்க. அப்புறம் நாங்களும் சேர்ந்து மருத்துவரை எதிர்க்கிறோம்.

Anonymous said...

அடுத்த இடுகையை எதிர்நோக்கி உள்ளேன். இவர் வெளிப்படையா சாதி ஆதரவு பற்றி பேசுகிறார் மற்றவர்கள் வெளிப்படையா பேசாமல் ஆதரவு வேலை பண்றாங்க. அது தான் வேறுபாடு. வெளிப்படையாக பேசுவது குற்றமா என்பதை சிந்திக்கவேண்டும்.

- குறும்பன் (கூகுள்ளில் புகுபதிய செய்ய சோம்பல்)

ஜோதிஜி said...

அக்கறைக்கு நன்றி. நிச்சயம் எழுதுகின்றேன்.

எம்.ஞானசேகரன் said...

இன்றைய காலகட்டத்துக்கு மிகத் தேவையான அரசியல். துணிச்சலான முயற்சி. ஜாதிக் கட்சித் தலைவர் என்கிற முத்திரை இவருக்கு மட்டும் ஏன்? மற்ற ஜாதிக்கட்சிகளே தமிழ்நாட்டில் இல்லையா என்ன? மற்ற யாருமே சந்தர்ப்பவாத கூட்டணி அமைக்கவில்லையா என்ன? இவருக்கு மட்டும் ஏன் இந்த அவப்பெயர். யாருமே மாநாடு பொதுக்கூட்டம் நடத்தவில்லையா என்ன? இவருக்கு மட்டும் ஏன் இந்த சதிவலை?

சாமானியர்கள் யாருமே சிந்த்திப்பதில்லை. ஆள் கிடைத்தால் போதும் எல்லாருமே கும்முகிறார்களே நாமும் கும்முவோம் என்பது மனிதர்களின் இயல்பான குணம்தானே! சமூகத்தில் அடித்தட்டு ஜாதியின மக்கள் முன்னேற வேண்டும் என்ற போதுவான இலக்குதான் ஜாதிக் கட்சிகளுக்கு. அல்லது இதைச்சொல்லி ஓட்டு வாங்குவது! இதை தமிழ்நாட்டில் யார் செய்யவில்லை? எந்தக்கட்சி செய்யவில்லை?

குதிரைக்கு சேனம் பூட்டிவிட்டதைப்போல இவர்கள் எந்தப்பக்கமும் பார்க்கமாட்டார்கள். விவாத்ததிற்குப் பதில் விதண்டாவாதம் செய்வார்கள். இது பதிவுலகில் அதிகமிருக்கிறது. போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். உங்கள் நடுநிலையான கட்டுரையைத் தொடருங்கள் ஜோதிஜி!

ஜோதிஜி said...

தெளிவான் உங்கள் புரிந்துணர்வுக்கு என்னுடைய வணக்கமும் வாழ்த்துக்களும்.

Anand said...

ஞாபகம் இருக்கிறது ஜோதிஜி அவர்களே.

Anand said...

சரியாக சொன்னீர்கள் ஜோதிஜி.

Anonymous said...

எந்த நாய் எப்படி குரைச்சாலும். அய்யா ராமதாஸ் தான் வன்னியனின் நம்பிக்கை . திருட்டு முண்டங்கள் கட்சி கொள்ளையிலிருந்து தப்பிக்க ஒரே வழி பா ம க வை ஆதரிப்பதுதான்.

எந்த ஒரு அரசியல் நாயை விட ராமதாஸ் நல்லவர்.

மொதல்ல கோட்டா வ ஒழிச்சிட்டு சாதிய ஒழிக்கிறத பத்தி பேசுங்கடா ( ராமதாஸ தப்பா பேசுற எவனும் சாதிவெறி பிடிச்ச மிருகம் )

அய்யா பல்லாண்டு வாழ்க .