Tuesday, May 21, 2013

மம்மி யுகத்தில் பம்மும் வீரத்தமிழர்கள்


தமிழ்த்தாய் சிலை குறித்து யாராவது எழுதுவார்களா என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். படித்த ஒன்றிரண்டு கட்டுரைகளும் அம்மா பயத்தை தான் காட்டியது. 

பத்திரிக்கையில், தொலைக்காட்சி நேரிலைகளில் என்று எல்லா இடங்களிலும் ஒவ்வொருவரும் முடிந்தவரைக்கும் பம்மிக் கொண்டு பதில் சொல்வதை பார்க்கும் போது புறநானூற்று வீரத்தைப் பெற்றவனடா நம் தமிழினம் என்பதாக எடுத்துக் கொண்டேன்.

நண்பர் வில்லவன் என்னுடைய நெருக்கமான வட்டத்தில் இருப்பவர். திருப்பூரில் ஆய்த்த ஆடைத்துறையில் இருந்து தற்போது இதே துறையில் பெங்களூரில் இருப்பவர்.  

கட்டுரையை எழுதிய நண்பர் வில்லவனுக்கு நன்றி.


கடந்த வாரத்தில் இரண்டு முக்கியமான அறிவிப்புகள் ஜெயலலிதாவால் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஒன்று, நூறுகோடியில் தமிழ்தாய்க்கு சிலை. இன்னொன்று, அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வியை துவங்குவது. முதல் அறிவிப்பை பிறகு பார்க்கலாம். அது இந்திய அரசியல்வாதிகளின் வழக்கமான திமிர்பிடித்த கோமாளித்தனங்களில் ஒன்று. 
இரண்டாவது அறிவிப்புதான் மிக மோசமானது மற்றும் கபடத்தனமானது.
அரசுப் பள்ளிகளில் ஆங்கில மீடியம் இருப்பதால் என்ன நட்டம் என்றும் ஏழைகள் ஆங்கில வழியில்தான் படிக்கட்டுமே அவர்கள் அந்த வசதியை அனுபவிப்பதில் என்ன தவறென்றும் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்த அறிவிப்பை எதிர்ப்பது ஏழைக்குழந்தைகள் முன்னேறுவதை தடுக்கும் நடவடிக்கையாகக்கூட சிலரால் பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பை தமிழ்மொழிக்கு வந்த ஆபத்து என உணர்வுபூர்வமான வழியில் எதிர்க்க நான் விரும்பவில்லை (அதற்கான சகல நியாயங்களும் இருக்கும்போதிலும்). பிரயோஜனம் இல்லாவிட்டால் பெற்ற தாய் தந்தையையே தள்ளிவைக்கும் சமூக சூழலில் மொழியை காப்பாற்று என்று சொன்னால் அது ஒரு பைசாவுக்குகூட மதிக்கப்படப் போவதில்லை. பொருளாதாரீதியாக பின்தங்கியுள்ள மாணவர்களது அறிவுத்திறனிலும் உயர்கல்வி வாய்ப்பிலும் இந்த அறிவிப்பு உண்டாக்கவிருக்கும் பாரிய பின்விளைவுகளை மட்டும் விளக்க முயற்சி செய்கிறேன்.
அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிப் படிப்பு இருந்தால்தான் என்ன?
முதலில் இந்த அறிவிப்பு ஆங்கிலவழிக் கல்வியே சிறப்பானது எனும் கருத்தை பாமர மக்களிடம் இன்னும் அழுத்தமாக விதைக்கிறது. ஆங்கிலவழிக் கல்வி கவர்ச்சிகரமானதாக் மாறியதன் பிண்ணனி மிக எளிமையானது, பணக்காரன் அதில் படிக்கிறான் 
ஆகவே அது சிறப்பானதாகத்தான் இருக்கும் எண்ணம். அதைத் தவிர்த்து சொல்லப்படும் தர்கரீதியான கருத்து எல்லா பாடங்களையும் ஆங்கிலத்தில் படிப்பதால் ஆங்கில புலமை மேம்படும். ஆங்கிலப் புலமை இருந்தால் வேலை கிடைக்கும். அது எதிர்காலத்துக்கு நல்லது”.
தொன்னூறுகளின் இறுதியில் சாஃப்ட்வேர் இளைஞர்கள் தஞ்சாவூர் வீதிகளில் அரைடிராயரோடு (சட்டையும் அணிந்துகொண்டுதான்) வலம்வர ஆரம்பித்து பிறகு அவர்கள் திருவிடைமருதூர் போன்ற சிற்றூர்வரைக்கும் ரியல் எஸ்டேட் விலையை ஏற்றிவிட்ட தருணத்தில்தான் கம்ப்யூட்டர் படித்தால் நல்ல வேலைகிடைக்கும் என மக்கள் பேசத்தொடங்கினார்கள். 
அதுவரை ஆங்கிலம் படிப்பதே நல்ல வேலைக்கு போவதற்கான வழியாக பலராலும் நம்பப்பட்டுவந்தது.
ஆங்கிலம் எனும் ஒற்றைப் பாடத்துக்காக ஏனைய பாடங்களை பலியிடத்தயாராக இருந்த வீரச்சமூகம் நம்முடையது. பாடங்களை புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் படிப்பை ஒரு கௌரவம் சார்ந்த விடயமாக கருதிய பெற்றோர்களால் வளர்த்துவிடப்பட்ட இந்த ஆங்கிலவழிக் கல்வியை ஜெயலலிதா இப்போது எல்லோருக்குமானதாக மாற்ற உத்தேசித்திருக்கிறார்.
ஒரு சிறிய கேள்வியின் ஊடாக இந்த கருத்தை அணுகலாம். ஒரு மாணவன் ஏன் வரலாற்றையும் அறிவியலையும் இன்னொரு மொழியின் மூலம் கற்ற வேண்டும்? பிரென்ச் மொழியோ அரபியோ கற்றுக்கொண்டிருக்கும்போதே அதே மொழியில் இன்னும் நாலைந்து பாடங்களை கற்றுக்கொள் என சொன்னால் உங்களால் அது முடியுமா? 
பிறகெப்படி ஆங்கிலம் கற்றுக்கொண்டிருக்கும் பிள்ளைகளிடம் அதே மொழியில் மற்ற பாடங்களை படிக்க்ச்சொல்லி துன்புறுத்த நம்மால் முடிகிறது?
உலகில் தனித்த பாடம் என்றொன்று இல்லை. உயிரியலை உடைத்தால் அதில் கடைசியாக இருப்பது வேதிப்பொருட்கள்தான். வேதியியலை உடைத்தால் அதில் மிஞ்சுவது அணுக்கள் எனும் இயற்பியல். அணுக்களை பகுத்தறிவது என்பது வெறும் கணக்குதான். 
தாவரங்கள் பற்றிய அறிவில்லாவிட்டால் மருந்தியல் எனும் துறையே இருக்காது. மானுடவியலை புறக்கணித்துவிட்டு மரபணு ஆராய்ச்சி செய்ய முடியாது. வரலாறும் புள்ளியியலும் இல்லாவிட்டால் எந்த நவீன அறிவியலும் வளர்ந்திருக்க முடியாது.
இரண்டாயிரம் ஆண்டுகளாக செய்யப்பட்ட சரியான மற்றும் தவறான சிகிச்சைகளின் வரலாறுதான் இன்றைய நவீன மருத்துவத்தின் அடிப்படை. ஆகவே எந்த துறையில் அறிவைப் பெறவேண்டுமானாலும் 
அடிப்படை பாடங்களை புரிந்துகொள்வது என்பது மிக முக்கியம். ஆனால் இந்த உண்மை தொன்னூறு விழுக்காடு பெற்றோருக்கு புரிவதில்லை.
ஆங்கில வழியில் ஒரு மாணவன் படிக்கையில் பாடத்தை ஆங்கிலத்தில் கேட்டு அதனை தமிழில் புரிந்துகொண்டு பிறகு ஆங்கிலத்தில் எழுத வேண்டும். இதே தலைவலிதான் ஆசிரியருக்கும். அவர் ஆங்கிலத்தில் படித்து தமிழில் புரியவைத்து பிறகு ஆங்கிலத்தில் எழுதவைக்க வேண்டும். 
இந்த நிலையில் ஒரு பாடத்தை புரிந்துகொண்டு அதைப்பற்றி சிந்திக்கும் எண்ணமும் அவகாசமும் மாணவர்களுக்கு எப்படி கிட்டும்? 
பாடம் நடத்துவது என்பது வழிகாட்டுவதைப்போல எளிமையான காரியமாக இருக்கவேண்டும்.
இப்போது அது மாணவனை கட்டி இழுத்துக்கொண்டு போவதைப்போல கடினமான செயலாக மாறிவிட்டதன் அடிப்படைக் காரணி ஆங்கிலவழிக் கல்வியும் மதிப்பெண் வெறியும்தான்.
எந்த மொழியில் படிப்பது என தேர்வு செய்யும் உரிமை ஏழைகளுக்கும் கிடைக்குமில்லையா? இதனால் தனியார் பள்ளி மோகம் குறையுமே?
ஆங்கிலவழிக் கல்வி என்பது பணக்கார மாணவர்களுக்குகூட பரிந்துரைக்கப்படக்கூடாத கல்விமுறை. இப்போது, தேவைப்படும் அனைத்து பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வி தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அரசின் எல்லா புதிய அறிவிப்புகளும் ஏதோ ஒருவகையில் சிறப்பானது எனும் தோற்றத்துடனேயே வருகின்றன. 
எல்லா பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வி துவங்கப்படும் எனும் அறிவிப்பிலேயே அது தமிழில் படிப்பதைவிட சிறப்பானது எனும் கருத்தை அரசே ஒப்புக்கொள்வதாக ஆகிறது. 
இதனால் தற்போது தமிழிவழியில் படிப்பவர்களும் தங்கள் படிப்பு மட்டமானது எனும் சிந்தனை உருவாகும் வாய்ப்பிருக்கிறது. 
முன்பே குறிப்பிட்டதைப்போல இங்கே கல்வி பற்றிய புரிதல் கிட்டத்தட்ட இல்லை. ஆக இந்த அறிவிப்பு மக்களுக்கு தெரிவு செய்யும் வாய்ப்பை தரவில்லை. மாறாக இது ஆங்கிலவழி கல்விக்கு ஒரு விளம்பரமாகவே இருக்கிறது.
அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் பெற்றோர்கள் ஆங்கிலவழி படிப்பை தெரிவு செய்வார்கள். தமிழ்வழியில் மாணவர்கள் படிப்பது குறையும். பிள்ளைகள் படிப்பில் பெரிய கவனம் செலுத்தவியலாத பாமர பெற்றோர்கள் ஆங்கிலவழியில் பாடம் நடத்தி பயிற்சியில்லாத ஆசிரியர்கள் போன்ற காரணங்களால் அரசுப்பள்ளி தேர்ச்சிவிகிதம் குறையும் 
(இன்றும் பல அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகளைவிட சிறப்பான தேர்ச்சியை காட்டுகின்றன என்பதை நினைவில் வையுங்கள்). இறுதியில் எந்த சிரமமும் இல்லாமல் தங்கள் பள்ளிகளே சிறந்தவை என தனியார் பள்ளி முதலாளிகள் விளம்பரம் செய்யலாம்.  
இதை ஒரு பரீட்சார்த்தமான முயற்சியாக ஏன் கருதக்கூடாது?
பள்ளி கல்வியில் செய்யப்படவேண்டிய மாற்றங்களை ஒரு வல்லுனர் குழுவை அமைத்து செய்யும் வழக்கம் தாமஸ் மன்றோ ஆளுனராக இருந்த காலத்தில் இருந்தே வழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால் கல்வித்துறை பற்றிய அறிவிப்பை தான்தோன்றித்தனமாக வெளியிடுவது என்பது ஜெயலலிதாவின் இயல்பு. 
அவர் பேட்டி கொடுக்கக்கூட ஆங்கில ஊடகங்களையே தெரிவு செய்பவர். அவரது ஆலோசகர்களும் தமிழ் மொழி மீது வெறுப்பு கொண்டவர்கள். சமச்சீர் பாடத்திட்டத்துக்கு எதிரான ஜெயாவின் மூர்கமான நடவடிக்கைகளுக்கு பிறகும் அவரை நம்புவது முட்டாளதனமில்லை.. அதற்கும் மேலான ஒன்று.
இந்த அறிவிப்பின் மூலம் என்ன மோசமான விளைவுகள் உருவாகிவிடும்?
சீந்துவாரில்லாமல் இருக்கும் அரசுத்துறைகளில் முதன்மையானது கல்வித்துறைதான். இருக்கும் குறைவான மனிதவளம் இரண்டு மொழிவழிப் பாடத்திட்டத்தால் இன்னும் மோசமாக வீணடிக்கப்படும். ஒரே ஆசிரியர் இரண்டு மீடியம் வகுப்புகளையும் கையாளும் நிர்பந்தம் உருவாகும். 
அதனால் ஏற்படும் மோசமான தேர்ச்சிவிகிதம் மற்றும் கல்வித்தரத்தை காரணம் காட்டி தனியார் பள்ளிகள் இன்னும் அதிகமாக உருவாகும். மாணவர் வருகைக் குறைவை காரணம் காட்டி அரசுப்பள்ளிகள் மூடப்படும்.
இப்போதிருக்கும் பெரும்பாலான அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எல்லா பாடங்களையும் ஆங்கிலத்தில் நடத்தும் திறமை பெற்றவர்கள் அல்ல. ஆங்கிலத்தில் சொல்லித்தருவது என்பது வேறு ஆங்கிலம் தெரிந்திருப்பது என்பது வேறு. ஒரு மோகத்தால் ஆங்கில மீடியத்தில் சேர்க்கப்படும் மாணவர்கள் படிக்க சிரமப்படுவார்கள். 
இதனால் பள்ளி இடைநிற்றல் சதவிகிதம் அதிகமாகும், படிப்பை தொடரவிரும்பும் மாணவர்கள் தனியே பயிற்சி பெறவேண்டிய செலவு உருவாகும். 
அப்படியும் படிக்க முடியாத மாணவர்களை வேறுவழியின்றி தனியார் பள்ளிகளுக்கு அனுப்பவேண்டிய சூழலுக்கு பெற்றோர்கள் ஆளாவார்கள்.
இன்றைக்கும் தனியார் பள்ளி முதலாளிகளுக்கு இருக்கும் பெரிய சவால் பெரும் எண்ணிக்கையில் மருத்துவம் மற்றும் அரசு பொறியியற் கல்லூரிகளில் இடம்பிடிக்கும் 
தமிழ்வழியில் கற்ற மாணவர்கள்தான். ஆங்கிலவழிக் கல்வியின் விளைவாக தமிழில் படிக்கும் மாணவர் எண்ணிக்கை கணிசமாக குறையும். பிறகென்ன.. முதலாளிகள் காட்டில் மழைதான்.
எல்லாவற்றிற்கும் மேலாக இது தமிழ் மொழி மீது தமிழர்களது சுயமரியாதை மீதும் தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல். இன்றைய நிலையில் அரசுக்கு தேவை ஒரு கல்வியறிவற்ற சமூகமும் ஒரு சுயசிந்தனையற்ற படித்த கொத்தடிமைச் சமூகமும்தான். 
இப்போதைய இந்திய அரசுகள் (மாநில அரசுகள் உட்பட) கார்பரேட்டுகளுக்கு ஊழியம் செய்யும் ஏஜென்டாகவும் நில அபகரிப்பு செய்யும் தரகராகவும் மட்டுமே செயல்படுகின்றன. 
அந்த கார்பரேட்டுகளுக்கு உற்பத்தி துறையில் பணியாற்றவும் சேவைத்துறையில் வேலைசெய்யவும் மட்டுமே ஆட்கள் தேவை.
அத்தகைய ஆள்களை மட்டும் உற்பத்தி செய்யும் பட்டறையாக கல்வித்துறையை முற்றிலுமாக மாற்றும் திட்டம் இது. அரசுப்பள்ளிகளில் இருந்துதான் மாவோயிஸ்டுகள் உருவாகிறார்கள். ஆகவே சட்டீஸ்கரில் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைத்துவிடலாம் என சாமியார் ரவிசங்கர் ஒருமுறை யோசனை சொன்னார். 
எவ்வளவு அடித்தாலும் வாங்கிக்கொள்ளும் ஒரு அடிமைச்சமூகம் இன்றைய முதலாளித்துவ அதிகாரவர்கத்துக்கு அவசர தேவையாயிருக்கிறது. 
அதனை சாத்தியமாக்கும் வழிகளில் டாஸ்மாக்குக்கு அடுத்தபடியாக அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி முன்மொழியப்பட்டிருக்கிறது.
நிறைவாக,
குழந்தை அதன் அம்மாவிடம்  வளர்வதே நல்லது என நாங்கள் சொல்கிறோம். சித்தியிடம் வளர்வதால் ஒன்றும் குடிமுழுகிவிடாது என அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் வாதம் தவறல்ல என்றே இருக்கட்டும். 
ஆனால் அம்மா உயிரோடு இருக்கும்போதே சித்தியை கூட்டிக்கொண்டுவருவது என்பது சட்டப்படி, நியாயப்படி மற்றும் தர்மப்படி என எல்லாவற்றின்படியும் தவறுதான். இப்போது துவங்கியுள்ளது 
அம்மா இருக்கும்போதே சித்தியை அழைத்துவருவதல்ல...
அம்மாவைக் கொன்றுவிட்டு சித்தியை அழைத்துவரும் செயல். இதன் பிறகு நீங்கள் கவலைப்படப்போவது அம்மாவின் உரிமை பற்றியா அல்லது சித்தியை கூட்டிவரும் உரிமை பற்றியா என்பது உங்கள் தனிப்பட்ட உரிமை. 
அதில் நாங்கள் சொல்ல எதுவுமில்லை.

31 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆமா என்னதான் சித்தி என்றாலும் அம்மா போல் வருமா...? சித்தி என்றாலே கொடுமை என்றாகி விட்டதே...!

நல்லதொரு விளக்கமான கட்டுரை… நன்றி…

திண்டுக்கல் தனபாலன் said...

மம்மி யுகத்தில் பம்மும்.... தலைப்பிற்கு வாழ்த்துக்கள்...

வவ்வால் said...

ஜோதிஜி,

மறுபடியும் தானா வந்து மாட்டிக்கிறிங்களே :-))

அது சரி மரம்வெட்டி மருத்துவர் பற்றி எழுதும் போதும் பம்மிக்கிட்டு தான் எழுதினிங்களா, மம்மியப்பத்தி விமர்சித்து எழுதலைனா பம்முறாங்கனு சொல்வது சரியானால் நீங்கள் எழுதியதும் பம்மியதே :-))

# இந்த ஆங்கில வழிக்கல்வி அறிவிப்பு பற்றி எல்லாம் ஏகத்துக்கும் குதிக்கிறாங்க அவர்களை பார்த்து நான் கேட்க விரும்புவது எல்லாம் ஒன்றே ஒன்று தான் ,கடந்த இருபது ஆண்டுகளாக நீங்கள் எல்லாம் தமிழகத்தில் வசிக்கவில்லையா ? இல்லை அரசுப்பள்ளிப்பக்கமே சென்றதில்லையா?

உங்களையும் தான் கேட்கிறேன், நீங்கள் கடந்த இருபது ஆண்டுகளாக எந்த கிரகத்தில் இருந்தீர்கள்?

அய்யா அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் எல்லாம் ஆங்கில வழி போதித்தல் இருபது ஆண்டுகளுக்கு முன்னரே வந்து விட்டது, அதை கூட தெரிந்து கொள்ளாமல் ஆள் ஆளுக்கு பொங்கிட்டு இருக்கீங்களே :-))

எனது சகோதரர், ஒன்றுவிட்ட சகோதரி என அனைவரும் அரசு/அரசு உதவிப்பெரும் பள்ளியில் ஆங்கில வழியில் 20 ஆண்டுகளுக்கு முன்னரே படித்தவர்கள், இன்று பொறியாளர் ,மருத்துவர்களாக உள்ளார்கள். நான் கொஞ்சம் சுமார் என்பதால் அரசு உதவிப்பெரும் பள்ளியில் தமிழ் வழியில் படித்தேன்.

அரசு/அரசு உதவி பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி பிரிவு ஆரம்பிக்க தடையேயில்லை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் பள்ளி தலைமை ஆசிரியர் விண்ணப்பித்து ஆரம்பித்துக்கொள்ளலாம். எனவே பள்ளி தலைமை ஆசிரியரின் முடிவில் ஆங்கில வழிக்கல்வி இருந்தது இப்போது பொதுவாக ஆக்கப்பட்டிருக்கிறது அவ்வளவே.

எங்கம்மா ,பெரியம்மா ,பெரியப்பா உட்பட அனைவருமே அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பள்ளி நடை முறைகள் எல்லாமே படிக்கும் போதே கூட இருந்து பார்த்துள்லேன், ஹி..ஹி நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே 10 ஆம் வகுப்பு பசங்க தேர்வுத்தாள் எல்லாம் திருத்தி இருக்கேன்னா நம்ம "திறமை" எப்படினு பார்த்துக்கொள்ளவும் :-))

கடலூர் மாவட்டத்தில் எனக்கு தெரிந்து பல ஆண்டுகளாக ஆங்கில வழிக்கல்வி அரசு/உதவிப்பள்ளிகளில் உள்ளது, பெரும்பாலும் "ஏ'செக்‌ஷன் ஆங்கில பிரிவாக இருக்கும்.

சில பள்ளிகளை குறிப்பிடுகிறேன் ,

கடலூர் திருப்பாதிரிபுலியூர் பெண்கள் மேல்நிலை பள்ளி, நெய்வேலி ஆண்கள்/பெண்கள் மேனிலைப்பள்ளி, சிதம்பரம் அரசு மகளீர் மேல்நிலைப்பள்ளி , போன்றவற்றில் பல ஆண்டுகளாக ஆங்கில வழிக்கல்வி இருக்கிறது.

சிவக்குமார் said...

வவ்வால் எல்லாப் பள்ளிகளிலும் கொண்டுவரப் போகிறார்கள் என்பதே தற்போதைய அறிவிப்பு என்று நினைக்கிறேன்.

ஜோதிஜி இன்னும் உங்கள், வில்லவன் பதிவைப் படிக்க வில்லை. பின்பு படிக்கிறேன். எனது பதிவுக்கு உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன். நான் போனவருடம் எழுதியது.

ஆங்கில வழியில் படிப்பது தவறா ?

ezhil said...

அருமையான அலசல்.... நீங்கள் கூறியபடி வசதியற்றோர் படிக்க வைக்கிறார்கள் என்பதாலேயே நாம் பேசுவது முறையல்ல என்று கருதினேன்... நீங்கள் கூறிய பிரச்சனைகள் யோசிக்கும்போது அங்கிருக்கும் ஆசிரியர் அனைவரும் ஆங்கில வழி கற்றுத்தர ஏற்றவர்கள் அல்ல என்பன போன்றவை உங்களின் பார்வை சரிதான்... எங்களின் ஊரில் கூட ஒரு 10 வருடங்கள் முன் அரசு பள்ளியில் ஆரம்பித்த ஆங்கில வழிக் கல்வி முறை தகுந்த ஆசிரியர் இல்லாமையால் நிறுத்தப்பட்டது...

மேலும் என் முக நூல் பக்கத்தில் உங்கள் பதிவினை பகிர்ந்துள்ளேன்

வவ்வால் said...

தமிழானவன்,

//எனவே பள்ளி தலைமை ஆசிரியரின் முடிவில் ஆங்கில வழிக்கல்வி இருந்தது இப்போது பொதுவாக ஆக்கப்பட்டிருக்கிறது அவ்வளவே.
//

அதத்தானே நானும் சொல்லி இருக்கேன், தமிழில் தான் சொன்னேன்,ஆனால் எனக்கு என்னமோ சரியா புரியலைப்போல விளக்கம் சொல்ல வாங்க, இங்க ஒருத்தர் இதுக்கு முன்னர் அரசுப்பள்ளியில் ஆங்கில வழி போதனையே இல்லை என்பது போல பதிவெழுதி இருக்கார் ,அதுக்கு ஒன்னும் சொல்லிடாதிங்க, முதலில் ஆள்ப்பார்த்து கருத்து சொல்வதை நிறுத்தி தொலைங்க, அப்புறம் தன்னால தமிழும், தமிழ்நாடும் உருப்படும்.

”தளிர் சுரேஷ்” said...

சில அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி இருந்து கொண்டுதான் இருக்கிறது திரு வவ்வால் சொன்னது போல அது ஏ செக்சனாக இருக்கும். இப்போது எல்லா பள்ளிகளிலும் ஆங்கிலவழி பயில வழி உருவாக்கப்பட்டுள்ளது. பொறியியல் போன்ற படிப்புகளுக்கு அடிப்படை ஆங்கில அறிவு போதாது என்பது என் கருத்து. தமிழ் வழியில் படித்த மாணவர்கள் பொறியியல் பாடப்பிரிவுகளில் குறைந்த மதிப்பெண்களே பெறுகிறார்கள். பலர் மன உளைச்சலுக்கும் ஆளாகுகிறார்கள்! பள்ளிகளில் தமிழ் வழி கல்வி ஒன்றும் நிறுத்தப் பட வில்லையே! தமிழ் வழி படிக்க விரும்புவர்கள் தமிழில் படிக்கலாமே! என்னை பொறுத்த வரையில் ஆங்கில வழி கல்வியால் தமிழ் அழிந்து விடும் என்பது மாயையான கருத்தாக தோன்றுகிறது. அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் போதிக்கப் படாவிட்டாலும் தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்த்துவிட பெற்றோர்கள் தயாராக உள்ளார்கள்! தமிழ் மலர்ச்சி பெற மக்களிடையேதான் மறுமலர்ச்சியும் விழிப்பும் ஏற்பட வேண்டும். அரசின் இந்த முடிவு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகப் படுத்தும் என்று நான் நினைக்கிறேன்! மற்றபடி திறமையான ஆசிரியர்கள் இல்லை போன்ற உங்கள் வாதங்களில் உடன் படுகிறேன்! நன்றி!

ஜோதிஜி said...

ஒய் டென்சன் ப்ளீஸ் கூல் கூல்.

ஜோதிஜி said...

இது கவைக்கு உதவாது. நான் ஒன்னு பேச நீங்க ஒன்னு சொல்ல.


ராமதாஸ் மாதிரி என் மனதில் உள்ளதைப் பேச பேசாம இன்னோரு பதிவ எழுத வேண்டியது தான்.

ஏலேய் சின்னராசு வண்டிய ஏடுறா.

ஜோதிஜி said...

இதுக்கு மேலே கொஞ்சம் யோசித்தால் வேறு விதமா வந்து விழுகுது தனபால்.

ஜோதிஜி said...

நன்றி சுரேஷ்

reverienreality said...

நல்ல அலசல்...

என் கருத்து முற்றிலும் மாறானது...

தமிழ் தாயாக இருந்தால் என்னை நேசி என்று இப்படி கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லையே...

தமிழ்வழிக் கல்வியில் வந்த நாங்கள் சோடை போகவில்லை...

அதே நேரம் இனி வரும் சந்ததி ஆங்கில வழிக்கல்வியினால் சீரழியப் போவதும் இல்லை...

வீரியம் இருந்தால் நம் தமிழ் சமூகம் ஒரு பள்ளி... கல்லூரி மாணவனுக்குத் தேவையான ...அதற்கும் மேலான அத்தனை விசயங்களையும் தமிழில் கொண்டுவரட்டும்...

அப்போது எல்லாத்தமிழனும் ஏன் மற்றவர்கள் கூட தமிழ்வழிக்கல்வியை தானே தேடி வருவார்கள்...

அதுவரை இது சூடான பெருமூச்சு மட்டுமே..

ஜோதிஜி said...

இப்போது ஆசிரியர் தொழில் சேவை என்பதையும் தாண்டி இதுவும் காசு சம்பாரிக்க உதவக்கூடிய தொழிலே என்கிற நிலைமைக்கு சமூகம் மாற்றிவிட்டது. மாறியுள்ளது.

நன்றி எழில்

ஜோதிஜி said...

வீரியம் இருந்தால் நம் தமிழ் சமூகம் ஒரு பள்ளி... கல்லூரி மாணவனுக்குத் தேவையான ...அதற்கும் மேலான அத்தனை விசயங்களையும் தமிழில் கொண்டுவரட்டும்...

காலம் கடந்து விட்டது. ஒரு இக்கட்டான நிலைமைக்கு வந்து விட்டது சமூகம்.

நான் நினைத்துள்ள கருத்துக்களை உங்கள் சிந்தனையின் மூலம் பாதி அளவுக்கு வந்துள்ளது.

நன்றி ரெ வெரி.

ராமதாஸ் கோவத்திற்குப் பிறகு வராமல் போய்விடுவீர்களோ என்று நினைத்தேன்.

என் எழுத்துக்களை கருத்தாக எடுத்துக் கொண்டதற்கு மீண்டும் என் நன்றி.

Unknown said...

நல்லதொரு விளக்கம் . நன்றி

சிவக்குமார் said...

ஒங்களுக்குப்புரியலன்னு சொல்லல, ஏன் எல்லாரும் பொங்கறாங்கன்னு கேட்டதுக்குத்தான் அந்த பதில். இன்னும் சரியாகச் சொல்லியிருக்கலாம். தப்புதான். சரி நான் அப்படியென்ன பண்ணிட்டன்னு இவ்வளவு கடுப்பு ?

/பதிவெழுதி இருக்கார் ,அதுக்கு ஒன்னும் சொல்லிடாதிங்க/
படிச்சிட்டுத்தான ஏதாச்சும் சொல்ல முடியும்.

//ஜோதிஜி இன்னும் உங்கள், வில்லவன் பதிவைப் படிக்க வில்லை. பின்பு படிக்கிறேன். //
இப்படி நான் இன்னும் ஜோதிஜி பதிவைப் படிக்கல வந்து படிக்கணும்னுதான சொல்லிருக்கேன். நான் எந்த ஆளப் பாத்து கருத்து சொல்றத நிறுத்தணும் ? கொஞ்சம் புரியற மாதிரி சொன்னா நல்லா இருக்கும்.

சிவக்குமார் said...

ஜோதிஜி தாய்மொழியில் கற்பதுதான் எளிது என்பதையெல்லாம் நான் மறுக்கவில்லை. என் பிரச்ச்னை என்னவென்றால் தற்போதைய நிலவரம்தான். 12 வரை தமிழில் படித்து விட்டு கல்லூரியில் சென்று பின்பு ஆங்கிலத்திற்கு மாறுவதில் ஏற்படும் சிக்கல் பற்றியே கவலைப் படுகிறேன். வேலைக்கு எல்லாருக்கும் உத்தரவாதம் இல்லை. கிடைக்கும் ஒரு சில வேலைகளுக்கும் ஆங்கிலப் புலமையே அதிகம் கேட்கிறார்கள். அது ஆங்கில வழியில் படித்தவர்களுக்கே திணறல் என்கிற போது தமிழ் வழியில் படிப்பவர்க்கு இன்னும் ஓரடி பின்னால் தான் நிற்பார்கள். மூன்று வருடத்தில் எல்லாம் புலமை பெற முடியாது எல்லோராலும். இது என்னுடைய அனுபவம். நான் தமிழில் படித்து லோல்பட்டதால் சொல்கிறேன்.

இப்போதும் தனியார் பள்ளிகளைக் அரசுப் பள்ளி மாணவர்கள் சிறந்த மதிப்பெண்கள் பெறுகிறார்கள். தேர்ச்சி விகிதம் கூட நிறைவாகத்தான் இருக்கிறது. அடிப்படை வசதி, ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளைத் தவிர மற்றவைகளைச் சொல்கிறேன். அவர்கள் ஆங்கில வழி என்பதைத் தவிர வேறு எந்த வகையிலும் தனியார் பள்ளிகளின் தரத்திற்குக் குறைய மாட்டார்கள். இந்த ஆங்கில வழிக் கல்வி எல்லாப் பள்ளிகளுக்கும் வரும் போது தனியார்கல்வி நிறுவனங்கள் மீதான மாயை குறையும் என்று நம்புகிறேன்.

ஜோதிஜி said...

மாயமா? மயக்கமா? தடுமாற்றமா?

அடுத்த பதிவில் பேசுவோம் நண்பா.

நன்றி

வவ்வால் said...

தமிழானவன்,

///பதிவெழுதி இருக்கார் ,அதுக்கு ஒன்னும் சொல்லிடாதிங்க/
படிச்சிட்டுத்தான ஏதாச்சும் சொல்ல முடியும்.

//ஜோதிஜி இன்னும் உங்கள், வில்லவன் பதிவைப் படிக்க வில்லை. பின்பு படிக்கிறேன். //

சுத்தம் , நான் கடுப்பானதாக நீங்கள் நினைப்பது சரியென்றே கொண்டாலும் கடுப்பானதற்கு காரணமே நீங்கள் பதிவைப்படிக்கவில்லை என சொல்லிவிட்டு ,படித்துவிட்டு அதன் அடிப்படையில் கருத்து சொன்ன எனக்கு விளக்கம் சொல்ல கிளம்பியதால் தான், பதிவைப்படிக்காத உங்களுக்கு நான் ஏன் அப்படி சொன்னேன் என்பதற்கான காரணம் தெரியவே போவதில்லை, ஆனால் எனக்கு விளக்கம் கொடுக்கிறீர்கள் அதுவும் நான் சொன்னதையே வேறு வார்த்தைகளில் மாற்றிப்போட்டு.

பதிவின் கருத்துக்கு என்ன சொல்றிங்கனு கேட்டதே அதற்கு தான் ,படிக்கலை அதான் சொல்லவில்லைனு அதற்கு நழுவிக்கிட்டீங்க, அப்போ எதுக்கு நான் எதிர்வினையாற்றி இருக்கிறேன்னு எப்படி புரிந்துக்கொண்டு எனக்கு விளக்கம் சொல்ல முன் வரிங்களே எப்படி?,ஆளப்பார்த்து சல்லீசா முடிவு எடுக்குறதா தான் எனக்கு தோணிச்சு அதான் அப்படி சொன்னேன்.

பதிவைப்படிச்சுட்டு அப்புறமா எனக்கு விளக்கம் கொடுக்க வந்திருந்தால் நான் இப்படி சொல்லியிருக்க மாட்டேன்.

எது எப்படியோ அரசுப்பள்ளியில் பசங்களை சேர்க்க நினைக்காதவர்கள் தான் பெரும்பாலும் அரசுப்பள்ளியில் ஆங்கில போதனை தமிழை அழித்துவிடும்னு பெரும்பாலும் பொங்குறாங்க, இப்படிலாம் உணர்ச்சிகரமாக பொங்குவது தான் "சமூகவலைத்தள புரட்சிப்புலி"களின் டிரெண்ட் :-))

சிவக்குமார் said...

வவ்வால் !

நீங்க கடுப்பாகலன்னா சந்தோசம்தான். ஜோதிஜி, வில்லவன் ஆகியோரின் தமிழ்வழிக் கல்வி ஆதரவான முன்னைய பதிவுகள் படித்து பின்னூட்டமிட்ட அனுபவமிருப்பதால் அவர்கள் மனவோட்டம் குறித்து ஓரளவு தெரியும். அதனால அப்பறமா பொறுமையா படிச்சிக்கலாம்னு விட்டேன். கடைசியா உங்க பின்னூட்டம் இருந்தது மடிக்கணினியை நிறுத்தறதுக்கு முன்னால அவசரமா படிச்சிட்டு கமென்ட் போட்டுட்டேன். அவ்வளவே அதான் தப்புன்னு ஒத்துகிட்டனே. நழுவல் எல்லாம் ஒன்னுமில்ல. என்னுடைய கருத்து புதுசா ஒண்ணுமில்லன்னுதான் ஒரு பழைய பதிவுக்கு இணைப்புக் கொடுத்தேன்.

R. Rajesh Jeba Anbiah said...

Probably relevant Opportunities Beyond English

reverienreality said...

ஜோதிஜி.

சமூக சிந்தனையோடு எழுதும் வெகு சிலரில் நீங்களும் ஒருவர்...எப்படி வாசிக்காமல் இருப்பேன்...அலைபேசியில் வாசிப்பதால் நிறைய நேரங்களில் பதில் எழுதுவதில்லை..மனதில் சுருக்கென்று பட்டால் நினைவு வைத்து எழுதுவேன்..

மற்றபடி எல்லாத்தமிழனுக்கும் உள்ள கெட்ட பழக்கம் தான்...யாராவது நல்லா ஏதாவது பண்ணினா வாய் மூடி நின்னுட்டு...சின்னதா சறுக்கும் போது பாய்வது வழக்கம் போல் தொடரும் ..-:)

Diwakar Nagarajan said...

Jothi ji,

Apologize in writing in english as I am sending this from mobile and difficult to use the keypad for tamil fonts.

I read most of your articles, I am not in agreement with the core section. I am in agreement to the other sections on the quality & improvement needs etc.

I have studied in tamil medium till my 10th standard, and reading in tamil is fine if only there are standard mechanism to translate new discoveries / inventions in tamil as and when they are available. As of now nothing is done by the government for that. Also any study the first priority is to take care of their day to day life with proper living standard, unfortunately by studying in tamil. Until that happens there is no point in asking someone to study in any language of not much of use. First priority to basic needs with decent living standards. As long as the option to study in any language should be there. Also the unwsnted pride / fear about tamil should be kept away. There are more things to be done prior asking someone to read only in tamil like availability of knowledge base, potential work choices, etc. There are no concentrstion in those area the government should be forced for that. Instead if we are asking to remove the english medium then we sre removing the capabilty of some families coming up.

Thanks
Diwakar

Diwakar Nagarajan said...

Jothi ji,

Apologize in writing in english as I am sending this from mobile and difficult to use the keypad for tamil fonts.

I read most of your articles, I am not in agreement with the core section. I am in agreement to the other sections on the quality & improvement needs etc.

I have studied in tamil medium till my 10th standard, and reading in tamil is fine if only there are standard mechanism to translate new discoveries / inventions in tamil as and when they are available. As of now nothing is done by the government for that. Also any study the first priority is to take care of their day to day life with proper living standard, unfortunately by studying in tamil. Until that happens there is no point in asking someone to study in any language of not much of use. First priority to basic needs with decent living standards. As long as the option to study in any language should be there. Also the unwsnted pride / fear about tamil should be kept away. There are more things to be done prior asking someone to read only in tamil like availability of knowledge base, potential work choices, etc. There are no concentrstion in those area the government should be forced for that. Instead if we are asking to remove the english medium then we sre removing the capabilty of some families coming up.

Thanks
Diwakar

ஜோதிஜி said...

வவ்வால்

எங்கள மாதிரி சின்னப்பசங்ள ரொம்ப பயமுறுத்தாதீங்க.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

மிக்க நன்றி திவாகர்.

நான் அடுத்து எழுத நினைத்துள்ள அடிப்படை விசயங்களைப் பற்றி எழுதியிருக்கீங்க. மிக்க நன்றி.

வவ்வால் said...

தமிழானவன்,

நாம எல்லாம் கடுப்பானா பதிலே சொல்லாமல் எடத்தை காலி செய்துடுவேன் , என்ன இப்படி புரியாதமலே பேசுறாங்களேனு சலிப்பானதால் அப்படி சொல்லி இருந்தேன், வேறொன்றுமில்லை ,தொடருங்கள்!
-------------

ஜோதிஜி,

வெயில் வேற சூடு கவ்வுது இதுல இப்படிலாம் "ஷாக்" அடிக்கிறாப்போல பேசுனா இதயம் வெடிச்சிறப்போவுது எனக்கு, நீங்களே சின்னப்பசங்கன்னா நானெல்லாம் பச்சிளம் பாலகனய்யா ,பாலகன் அவ்வ்!

ஜோதிஜி said...

பாலகன் வவ்வாலின் பரமபத விளையாட்டு லீலைகள்

தலைப்பு நல்லாயிருக்கா

குறும்பன் said...

\\நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே 10 ஆம் வகுப்பு பசங்க தேர்வுத்தாள் எல்லாம் திருத்தி இருக்கேன்னா நம்ம "திறமை" எப்படினு பார்த்துக்கொள்ளவும் :-))\\ சரி சரி புரியுது :) உங்கள நிறைய இடுகை போட சொல்றது தான் ஓரே வழி.

குறும்பன் said...

தன்யார் பள்ளிகள் பல இப்போதே CBSEக்கு மாறிவிட்டன. CBSE ஆங்கில பள்ளி தான் சிறந்ததுன்னு சொல்லுவாங்க பாருங்க. பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலோர் தமிழில் தான் பாடம் எடுக்கின்றனர். (அனுபவம்)