இலங்கையில் போர்த்துகீசியர்கள் ஆண்டபோது, 17 ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க மத குருவான பெர்ணாஓ த கெய்ரோஸ் (FERNAO DE QUEYROZ) போர்த்துகீசிய மொழியில் முதன்மையான இலங்கை குறித்த வரலாறு எழுதப்பட்டது.
பின்னாளில் வந்த ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட மொத்த வரலாறுகளும் ஏற்கனவே பாலி மொழியில் எழுதப்பட்ட திரிபு அடிப்படைகளை கொண்டு உருவாக்கப்பட்டது. முழுமையாக, நம்ப முடியாத விசயங்களை வைத்து படைக்கப்பட்ட மகாவம்சம், தீபவம்சம் நூல்கள் உருவானது. .
இனக்குழுவாக இருந்தவர்களில் சிங்களர்களே முறையான பூர்வகுடி மக்கள் என்ற புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள் என்ற பெயரில் திரிபு வரலாற்றை தொடங்கி வைத்தனர்.
இந்த வரலாற்று பிழைகளுக்கு சரித்திர சான்றுகளாக அன்றே பல விதங்களிலும் உருவாக்கப்பட்டது. இந்த சதிகள் பல நூற்றாண்டுகள் கடந்தும் மாற்ற முடியாமல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இறுதியில் மறக்க முடியாத சம்பவங்களாக இன்று வாழ்ந்து கொண்டுருக்கும் எஞ்சிய தமிழர்களுக்கு கொடுத்து விட்டது.
உலக சரித்திர பக்கங்களில் நீக்கவே முடியாத அளவிற்கு இடம் பெற்ற ஹிட்லரின் நாசிக் கொள்கைகளுக்கு சார்பாக மொத்த வரலாற்றை திரிபு என்று சொல்லும் அளவிற்கு உருவாக்கிய ஜெர்மானிய வரலாற்றாசிரியர்கள் போலவே இலங்கையின் மொத்த வரலாற்றுப் பக்கங்களிலும் இந்த திரிபு தான் அதிகமாக இருக்கிறது.
இதைப்போலவே மற்றொரு ஆச்சரியம்,
அன்று முதல் இன்று வரையிலும் இலங்கையில் வாழ்ந்து கொண்டுருக்கும் தமிழர்கள் தங்களைத் தாங்களே பிரித்து வைத்துக்கொண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
பூர்வகுடி தமிழர்கள், இந்திய வம்சாவளித் தமிழர் கடைசியாக இலங்கை முஸ்லீம்கள். இதிலும் பிழைப்பு தேடிப்போன கொழும்புச் செட்டிகள் என்ற சிறு குழுவினர் தனியாக இருக்கின்றனர்.
இலங்கைத் தமிழர்கள் என்ற இந்த ஒரு வார்த்தைக்குப் பின்னால் பல பிரிவுகளாக ஜாதி, இனம், மதம் என்று நான் பெரியவர் நீ சிறியவன் என்று தங்களுக்கு நிகர் தாங்களே என்று வேறு எவருடனும் சேராமல், கடைசி வரையிலும் மற்றவர்களை தங்களுடன் சேர்க்காமல் தனித்துவமாய் வாழ்ந்து முதல் கொடுமை என்றால், மொத்தமாக கூறுகளாக பிரிந்து வாழ்ந்தவர்கள் கோரங்களாக ஒரு இனமே அழிந்து போன இன்றைய சூழ்நிலையில் தங்களை மாற்றிக்கொள்ளாமல் வாழ்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்று மொத்த இலங்கை தமிழினத்தின் எச்சமும் மிச்சமாய் கூடார வாசிகளாக, இருப்பிடமற்ற அலையும் பழைய கால நாடோடிகளாக மாறிய போதும் இன்னும் உணராமல் இருப்பது அடுத்த மகத்தான சோகம்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த இனம் என்று பெருமை பெற்றதாக சொல்லப்படும் தமிழன் என்பவனுக்கு தனியாக குணம் உண்டு என்பதைப் போல இலங்கையில் வாழ்ந்த தமிழனத்தை அழித்து முடிக்கவென்று உருவான அரசியல் சதிகள் உருவானது இன்று நேற்றல்ல.
இதன் தொடக்கம் ஆங்கிலேயர்கள் உருவாக்கியது.
அவர்கள் உருவாக்கியதை கெட்டியாக பிடித்துக்கொண்டவர்கள் சிங்களர்கள். தன்னையும் உணர்ந்து கொள்ளாமல், தமிழினம் என்பதை விட தங்கள் இனம் ஜாதி என்ற குறுகிய எண்ணம் கொண்டவர்களால் தொடங்கியது இந்த தமிழினத்தின் வீழ்ச்சி.
இதன் முடிவு இன்றைய தினத்தின் சர்வதேச அரசியலின் எழுச்சியாய் வந்து முடிந்துள்ளது. தவறான அரசியல் கொள்கைகள் எந்த அளவிற்கு மொத்த சமூகத்தையும் சீர்குலைக்கும் என்பதையும் தவறானவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு எந்த அளவிற்கு மோசமான பாதைக்கு செல்லும் என்பதற்கு இலங்கையில் ஆட்சி புரிந்தவர்களே மிகச் சிறந்த உதாரணம்.
இலங்கையின் மொத்த வரலாற்றுப் பாதைகளை பார்த்தோமென்றால் ஒவ்வொரு காலகட்டத்திலும் சிங்கள சரித்திரத்தை சிறப்பானதாக மாற்றுவதற்கென்ற உழைத்தவர்களைப் போல தமிழர்களின் தடங்களையும் கவனமாக மறக்கப்படும் அளவிற்கு அவர்கள் உழைத்த உழைப்பு ஆச்சரியமாக இருக்கிறது.
நமக்கு தமிழர்களின் வரலாறு கற்றுக்கொடுக்கும் வாழ்க்கைப் பாதையை விட மற்றொரு ஆச்சரியத்தை கவனித்தால் நமக்கு புரியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்கள் உருவானது மாற்றங்களின் மூலம் உருவான அரசியல் கணக்குகளை உணர்ந்து கொள்ளாதவர்கள் எப்படி தலைவனாக மாற்றம் பெறமுடியும்? என்பதை காலக்கண்ணாடி போல் தமிழர்களின் கடந்து வந்த பாதைகள் நமக்கு உணர்த்துகிறது.
காரணம் அன்று முதல் இன்று வரை அரசியல் என்பது ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்டது அல்ல. கணக்குகளை அடிப்படையாக கொண்டது.
எல்லாமே சாத்தியம். அது எப்போதும் அரசியலில் மாத்திரமே என்பதை நம்மால் ஈழ வரலாற்றின் மூலம் புரிந்து கொள்ள முடியும்..
எல்லாமே சாத்தியம். அது எப்போதும் அரசியலில் மாத்திரமே என்பதை நம்மால் ஈழ வரலாற்றின் மூலம் புரிந்து கொள்ள முடியும்..
இலங்கையில் வாழ்ந்த திருவாளர் அப்பாவி தமிழ் பொதுஜனம் முதல் எங்களுக்கான உரிமை வேண்டும் என்று அரசியல் மூலமாக அஹிம்சை வழியில் போராடியவர்கள் வரை கேட்டது ஒன்றே ஒன்று தான்.
எங்களை வாழ விடு என்பது தான்.
இதுவே சாத்யமில்லாதபோது தான் "எங்களின் உரிமைகளைப் பெற ஆயுதமேந்துவதைத் தவிர வேறு வழியில்லை" என்று ஆயுதப் பாதையை தேர்ந்தெடுத்தவர்கள் தங்களின் குரலை வேறுவிதமாக உயர்த்தினார்கள்.
இவர்கள் அத்தனை பேர்களும் ஆட்சிபுரிந்து கொண்டுருந்தவர்களிடம் கேட்டது
எங்கள் தனித்தன்மையான கலாச்சராத்துடன் நாங்கள் வாழ எங்களுக்கான இடத்தைக் கொடு" என்று போராடிப் பார்த்தார்கள். இறுதியில் மண்ணோடு மண்ணாய் கலந்து மாவீரர்களாகப் போனார்கள். .
“எங்கள் நிலத்தை எடுத்துக்கொண்டாய். எங்களின் பிணத்தை எங்கு கொண்டு புதைக்கப் போகிறாய்?” என்று கேட்டவர்களின் தனித் தமிழீம் எதிர்காலத்தில் வெல்லக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதா?
முந்தைய தொடர்ச்சி
51 comments:
ஜோதிஜி,,
தொடரை தொடர்வது எனக்கு எப்பொழுதுமே கைவரப்பெற்றதில்லை, ஹி...ஹி நான் தொடரா எழுதப்போறேன்னு சொன்னாலே எழுத மாட்டேன்,அதே போல தான் தொடரைப்படிப்பதிலும் :-))
ஆனால் இந்த தொடரை தொடரலாம்னு பார்த்தால் ,அதுவும் இழுக்குது.
நான் இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறேன்,இப்படிக்குட்டி குட்டியா , 10 வரிக்கெல்லாம் பதிவுப்போட்டால் எப்பூடி?
# இலங்கைத்தமிழர் என சொன்னாலே சண்டைக்கு வர ஈழத்தமிழர்கள் எல்லாம் இருக்காங்க தெரியுமோ, அப்படியான ஒற்றுமை அவர்களுக்குள்.
யாஹு சாட்டில் தமிழ்-1 என ஒரு அறை இருக்கும் அங்கே போய் பேசிப்பார்க்க மகா பொறுமை வேண்டும், அங்கேலாம் நான் அலப்பரை கொடுத்து இருக்கேன் :-))
இணைய வெளியில் இலங்கை தமிழர்கள் ,தமிழகத்தமிழர்களை எதிரிப்போல பாவிப்பதெல்லாம் உண்டு, வலைப்பதிவில் தான் ஒரு அளவுக்கு இணக்கமாக இருக்கு.
அப்படி இருக்கும் போது ஜாதியம் பற்றிக்கேட்கவா வேண்டும்.
# இலங்கையின் உண்மையான பூர்வகுடிகள், வேடர்கள் மற்றும் ரோடியர்கள் தான்,இதில் அதிகம் பாதிக்கப்பட்டது ரோடியர்கள் தான், மேலாடை கூட அணியத்தடை. சிங்கள,தமிழின மக்கள் அப்புறம் போய் ஆக்ரமிச்சுட்டாங்க.
இன்று ரோடியர்களும்,வேடர்களும் அழியக்கூடிய நிலையில் இருக்கிறார்கள், இருக்காங்களானே சந்தேகம் தான்.
இன்று இலங்கைத் தமிழர்களாக இருப்பவர்களிலும் பூர்வ குடிகள் உண்டு. குறிப்பாக நழவர்கள் எனப்படுவோரும் இலங்கையின் பூர்வ குடிகளின் தோன்றல்களே .. ! ரோடையர்கள், வேடுவர்கள், நழவர்கள், சிங்கள தமிழ் தலித்கள் என பூர்வ குடிகள் அனைவரும் அழியும் நிலையிலேயே இருக்கின்றனர்....
சிங்களவர்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் கரவார்கள் / தமிழர்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் கரையார்கள் ஆகிய இரு சாதியும் 15-ம் நூற்றாண்டில் முக்குவரை விரட்ட அங்கு கொண்டு செல்லப்பட்ட மீனவக் குடிகள். இவர்கள் தமிழகத்தில் இருந்து போனவர்கள்..
கரவாக்களில் இருந்து தான் இன்று சிங்கள இனவெறிப் பரப்பும் பல பிக்குகள், தலைவர்கள் வந்தார்கள் என்பது தனிக்கதை... !
இலங்கை முஸ்லிம்கள் பலர் முக்குவர்களின் வழித்தோன்றல்கள். முக்குவர்கள் வட கேரள கரையில் இருந்து இலங்கை, தமிழகத்தின் கோரமண்டலம் வரை மீன் பிடி, கடல் வாணிபத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்கள். அவர்கள் போர்த்துகேயரின் வரவின் பின் ஒடுக்கப்பட்டார்கள்.. பரதவர்கள் பலரும் கத்தோலிக்கத்துக்கு மாறியதால், முக்குவர்கள் விரட்டப்பட்டனர். அவர்களில் சிலர் வடகேரளத்திற்கும், சிலர் கிழக்கிலங்கைக்கும் போய் குடியேறினார்கள். பல முக்குவர்கள் சமண மதத்தவர் எனவும், போர்த்துகேய காலத்தில் இஸ்லாமுக்கு மாறியதாகவும் கூறப்படுகின்றது. இன்று முக்குவர் வழித்தோன்றிய இலங்கை முஸ்லிம்கள் தாம் தமிழரே இல்லை எனக் கூறுவது அடுத்து வேடிக்கை.
கத்தோலிக்கமாக மதம் மாறிய பரதவர்களை போர்த்துகேயர் மன்னார் முதல் மாத்தறை வரை கொண்டு குடியேற்றினார்கள். பரதவர்கள் தூத்துக்குடி பகுதியில் இருந்து போனவர்கள். மன்னாரைத் தவிர ஏனைய பரதவர்கள் இன்று சிங்களவர்களாக மாறிவிட்டார்கள். சிங்கள கத்தோலிக்கர்களின் பலரின் மூதாதையரும் தமிழர்களே.
இன்னம் இருக்கு வேளாளர்கள், கேரளர்கள், வங்காளிகள், கலிங்கர்கள், சாவகர்கள் எவ்வாறு இலங்கையின் வடக்கில் குடியேறினார்கள். அவர்கள் வடக்கில் எவ்வாறு தமிழ் மயமானார்கள், தெற்கில் சிங்கள மயமானார்கள்.
பின்னர் இலங்கையில் சிற்சில சிறிய குடிகளாக பாம்பாட்டி தெலுங்கர்கள், ஆப்பிரிக்க காப்பிலிகள், போர்த்துகேயர்கள், கொழும்புச் செட்டிகள், மலையாளிகள், சிந்திகள், மேமோன்கள், யூதர்கள், கோயாக்கள், மலாய்கள் என சிறிய ஆனால் பலம் வாய்ந்த சிறு குழுக்களின் ஆளுமையும் இனவாதத்தில் பங்கு கொண்டன .. என்பது மற்றொரு பரிணாமம் ..
.. ஜோதிஜியின் இத் தொடருக்கு எனது சிறு குறிப்புக்கள் வலு சேர்க்கட்டுமாக, நன்றிகள் !!!
//இணைய வெளியில் இலங்கை தமிழர்கள் ,தமிழகத்தமிழர்களை எதிரிப்போல பாவிப்பதெல்லாம் உண்டு//
ஏனென்றால் ஆங்கிலத்தில் எழுதும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமிழரல்லாத இந்தியர்களுக்குப் பயந்தோ என்னமோ, தமது தமிழடையாளத்தை அடக்கி வாசித்து, தாம் இந்திய விசுவாசிகளாக, தமது முதலடையாளம் இந்தியர் என்பதாகக் காட்டுவதால் தான் அடிக்கடி தமிழ்நாட்டுத் தமிழர்களும், ஈழத்தமிழர்களும் மோதிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. எங்களைப் பொறுத்தவரையில் எமது முதல் அடையாளம் தமிழர் என்பது தான், நாங்கள் சிறிலங்கன் என்று பம்மாத்து விடுவதில்லை. :)
//இலங்கைத்தமிழர் என சொன்னாலே சண்டைக்கு வர ஈழத்தமிழர்கள் எல்லாம் இருக்காங்க தெரியுமோ, அப்படியான ஒற்றுமை அவர்களுக்குள்//
இது பிழையான தகவல் என்று நினைக்கிறேன். சிறிலங்கா தமிழர்கள் என்பதைத் தான் நாங்கள் விரும்புவதில்லை. இலங்கையின் அரசாங்கத்தையே சிறிலங்கா என்று தமிழில் எழுதாமல் இலங்கை எனப் போராடி எழுத வைத்தவர்கள் ஈழத்தமிழர்கள், அதிலும் யாழ்ப்பாணத்தமிழர்கள். ஈழவிடுதலைப்போராட்டத்தின் பின்னர் தான் ஈழத்தமிழர் என்ற பதம் பரவலாகப் பாவிக்கப்படுகிறது, அதனால் வடக்கு கிழக்கு தமிழர்களை ஈழத்தமிழர்கள் என அழைப்பதைப் பலரும் விரும்புவதற்குக் காரணம் சிங்களவர்கள் அந்த சொல்லையே வெறுப்பதால் தான். அதை விட இலங்கைத் தமிழர்கள் என்பதும் வடக்கு கிழக்கில் வாழும், அல்லது வடக்கு கிழக்கை தமது பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களைத் தான் குறிக்கும். இந்திய வம்சாவளித்தமிழர்களை மலையகத் தமிழர்கள் என்று அழைப்பது தான் வழக்கம். அதனால் ஒருவரின் சாதிக்கும், எங்கு வாழ்கிறார்கள் என்பதற்கும் இலங்கைத் தமிழர்கள் என்ற பதத்துக்கும் தொடர்பில்லை அவர்களின் பூர்வீகம் வடக்கு கிழக்கில் உள்ளதா என்பதைப் பொறுத்து தான் இந்தப் பெயர்கள் பிரயோகிக்கப்படும். வெளியாட்களுக்கு இவற்றை எல்லாம் புரிந்து கொள்வது கடினம் தான். :))
// குறிப்பாக நழவர்கள் எனப்படுவோரும் இலங்கையின் பூர்வ குடிகளின் தோன்றல்களே //
சகோ இக்பால் செல்வன், மன்னிக்கவும், நான் கேள்விப்பட்டதேயில்லை, உங்களின் கருத்தை மேலும் விவரிக்க முடியுமா. அது நழவர் இல்லை, நளவர்.
//17 ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க மத குருவான பெர்ணாஓ த கெய்ரோஸ் (FERNAO DE QUEYROZ) போர்த்துகீசிய மொழியில் முதன்மையான இலங்கை குறித்த வரலாறு எழுதப்பட்டது.//
போத்துக்கேயர்கள் தமிழர்களையும் மலையாளிகளையும் மலபாரிகள் என அழைத்தனர். அவர்களுக்கு ஏற்கனவே தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் மலபாரிகள் அறிமுகமான படியால், ஈழத்தில் வாழ்ந்த பூர்வீக ஈழத்தமிழர்களும் ஒரே மொழியைப் பேசியதால் அவர்களையும் மலபாரிகள் என அழைத்தது மட்டுமல்ல், இந்தியாவில் எங்கும் கண்டிராத சிங்குலியாக்கள் மட்டும் தான் இலங்கையின் பூர்வீக குடிகள் என தப்புக்கணக்குப் போட்டு விட்டனர். அதே வேளையில் போத்துக்கேயப் பாதிரியார் Fernao de Queyroz’s இன் யாழ்ப்பாண தமிழ் அரசைப் பற்றிய தகவல்கள், இன்றும் சிங்களவர்களுடன் வாதாடுவதற்கும், யாழ்ப்பாண அரசின் எல்லை, அதன் ஆளுமை, அது சிங்களவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் தனியரசாக இருந்தது என்பவற்றையும் அறிய உதவுகிறது.
17-ம் நூற்றாண்டில் மலையாளமே மலபார் தமிழ் - மலையாளத் தமிழ் என்று தான் அழைக்கப்பட்டது. மலையாளக் கரையில் இருந்தவர்களுக்கும் - இலங்கையில் இருந்த தமிழர்களுக்கும் எதோ ஒரு வகை ஒற்றுமையை அவர்கள் கவனித்த படியால் தான் அவ்வாறு அழைத்திருக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன்.. ஏனெனில் அதேக் காலத்தில் கோரமண்டலம், தூத்துக்குடியில் இருந்தவர்களை அவர்கள் மலபாரிகள் என அழைத்திருக்கவில்லை. இது இன்னம் ஆராயப்படவேண்டியவை. ஆனால் போர்த்துகேயர் வருகையின் போது அங்கு தமிழர்கள் இருந்தமை அவர்களது ஆவணங்கள் உறுதி செய்கின்றது என்பது உண்மை.
//மலையாளக் கரையில் இருந்தவர்களுக்கும் - இலங்கையில் இருந்த தமிழர்களுக்கும் எதோ ஒரு வகை ஒற்றுமையை அவர்கள் கவனித்த படியால் தான் அவ்வாறு அழைத்திருக்க வேண்டும் //
பலநூற்றாண்டுகளுக்கு முன்பாக மலையாள மொழி இன்றைய அளவுக்கு சமக்கிருதக் கலப்பில்லாமலிருந்திருக்கலாம். அதனால் மலையாளிகளும், ஈழத்தமிழர்களும் இலகுவாக உரையாடியதை போத்துக்கேயர் அவதானித்திருக்கலாம். அதை விட தமிழ்நாட்டில் வழக்கொழிந்து போன பழந்தமிழ்ச்சொற்கள் பல இன்றும் கேரளத்திலும், இலங்கைத் தமிழிலும் நடைமுறையிலுண்டு. மலையாளிகள் மெதுவாகப் பேசினால், முன்பின் மலையாளத்தைக் கேட்டிராத என்னால் கூட அவர்கள் கூறுவதை இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. சேரநாட்டவர்கள் இயற்கையாகவே கடலோடிகள், அதனால் அவர்களின் பழக்கவழக்கங்கள் பூர்வீக ஈழத்தமிழர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது இயற்கையே.
வியாசன்,
//ஏனென்றால் ஆங்கிலத்தில் எழுதும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமிழரல்லாத இந்தியர்களுக்குப் பயந்தோ என்னமோ, தமது தமிழடையாளத்தை அடக்கி வாசித்து, தாம் இந்திய விசுவாசிகளாக, தமது முதலடையாளம் இந்தியர் என்பதாகக் காட்டுவதால் தான் அடிக்கடி தமிழ்நாட்டுத் தமிழர்களும், ஈழத்தமிழர்களும் மோதிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. எங்களைப் பொறுத்தவரையில் எமது முதல் அடையாளம் தமிழர் என்பது தான், நாங்கள் சிறிலங்கன் என்று பம்மாத்து விடுவதில்லை. :)//
இதை என்னவென்று சொல்வது? கேணத்தனம் என்று சொல்லலாமா?
இந்தியாவில் இருக்கும் தமிழன் இந்தியன் என்றோ இந்திய விசுவாசம் கொண்டோ இருக்க கூடாதா?
நீங்க சொல்ற பம்மாத்தை செய்வது யாருனு கூட தெரியலை, கனேடிய தமிழன், பிரெஞ்சு தமிழனு இப்போ போய் ஒரு நாட்டுக்குடிமகனாக ஆகிட்டு, மூச்சுக்கு மூச்சு சொல்லிக்கிறதெல்லாம் என்னவாம்?
இலங்கை விவகாரத்தில் எனக்கு ரொம்ப நாளா உறுத்துவது என்னவெனில் ,பிரச்சினையைப்பற்றி பேசும் மக்கள் எல்லாம் இந்தியன் என தமிழக தமிழர்கள் சொல்லிக்கொள்ள வெட்கப்படவேண்டும், இன்னும் புறக்கணிக்க வேண்டும் என்ற ரீதியில் தான் பேசிக்கிட்டு இருக்காங்க, அப்புறம் இந்தியா ஏன் எதுவும் செய்யவில்லைனும் கேட்கிறாங்க.
தமிழ்நாட்டில் இருக்கவனையும் இந்தியன்னு சொல்லிக்க கூடாதுனு சொல்லிட்டு, அப்புறம் இந்தியா என்ன செய்தது, எதாவது செய்ய வேண்டாமானும் கேட்பதன் பொருள் என்ன?
// வெளியாட்களுக்கு இவற்றை எல்லாம் புரிந்து கொள்வது கடினம் தான். :))//
ஆமாம் புரிந்துக்கொள்ள ரொம்ப கடினம், தேவைக்கு ஏற்ப மாற்றி சொல்லிக்கொண்டால் அப்படித்தான் இருக்கும் :-))
இதே வலைப்பதிவுலகில் ,இலங்கைத்தமிழர்கள் என சொல்லக்கூடாது,ஈழத்தமிழர்கள்னு தான் சொல்லணும் என சண்டைப்போட்டவங்களும் இருக்காங்க.
//தமிழ்நாட்டில் இருக்கவனையும் இந்தியன்னு சொல்லிக்க கூடாதுனு சொல்லிட்டு, அப்புறம் இந்தியா என்ன செய்தது, எதாவது செய்ய வேண்டாமானும் கேட்பதன் பொருள் என்ன//
ஒன்றில் நான் உங்களுக்கு விளங்கும் வகையில் பதிலளிக்கவில்லை அல்லது நீங்களும் மற்ற இந்தியர்கள் போல் உங்களின் இந்தியவிசுவாசத்தை சம்பந்தமில்லாமல் எங்களிடம் காட்டுகிறீர்கள் போல் தெரிகிறது. நான் சொன்னதெல்லாம் ஆங்கில இணையத்தளங்களில் சில சமயங்களில் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் வாக்குவாதம் வருவதற்குக் காரணம், ஈழத்தமிழர்கள், தமிழர்கள் என்ற வகையில் தமிழ்நாட்டுத் தமிழர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, உங்களில் சிலர் நீங்கள் இந்தியர்கள் என்பதைக் காட்டி, எங்களின் செலவில் உங்களின் இந்திய விசுவாசம் உண்மையானதா, இல்லையா என்பதை உரசிப்பார்ப்பது அல்லது தமிழரல்லாத இந்தியர்களுக்கு உங்களின் இந்திய விசுவாசத்தைக் காட்டி அவர்களின் பகையைச் சம்பாதிக்காமல் தவிர்த்துக் கொள்வதைத் தான். நாங்கள் தமிழர்கள் என்ற இனரீதியில் பேசும் போது, எங்களுக்குச் சம்பந்தமில்லாத இந்தியா என்ற உங்களின் மேலதிக அடையாளத்தைப் பற்றி எங்களிடம் பீற்றிக் கொள்வது தேவையற்றது என்பது தான் எங்களின் கருத்தாகும். நாங்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் பேசும் போது, நாங்கள் சிறீலங்கன் என்று பீற்றிக் கொண்டால், நீங்களும் உங்களின் இந்திய அடையாளத்தைக் கொண்டு வந்து எங்களின் முகத்திலடிக்கலாம், அதில் தவறில்லை. :))
இந்தியன் என்று நீங்கள் சொல்லிக் கொள்ள வெட்கப்பட வேண்டும் என்பதல்ல எங்களின் கருத்து. நீங்கள் வெட்கப்பட வேண்டுமா, இல்லையா என்பதை எங்களிடம் கேட்பதை விட, பாக்குநீரிணையில் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பங்களைக் கேட்டால் உங்களுக்கு பதிலளிப்பார்கள் அல்லது மலையாளிகளிடம் கேளுங்கள். :)
இலங்கைத் தமிழர்களின் அழிவுக்கு ஆரம்பத்திலிருந்து இந்தியாவும் முக்கியகாரணங்களிலொன்று, அதனால் அதைத் தீர்க்க வேண்டிய தார்மீகக் கடமையும் இந்தியாவுக்குண்டு. அதை விட ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் எந்த வித பாசமும், விசுவாசமும் கிடையாது. இந்த விடயத்தில் சிங்களவர்களுக்கும் இலங்கைத்தமிழர்களுக்குமிடையே எந்த வேறுபாடுமில்லை. பெரும்பாலான ஈழத்தமிழர்களின் இந்திய விசுவாசம் வேங்கடத்தின் எல்லைகளை அடைந்தவுடன் பறந்து போய் விடும். அதற்கு அப்பால் எங்களும் இந்தியாவும் ஒன்று தான் ஆபிரிக்காவும் ஒன்றுதான். :)
நேற்றே வவ்வால் உங்களுக்கு பதில் அளிக்க நினைத்தேன். மின் தடை காரணமாக கிடைத்த நேரம் கொஞ்சமாக இருந்த காரணத்தால் இன்று தரலாம் என்றால் வியாசன் வந்தமை கொடுத்த விமர்சனங்களை பார்த்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
இக்பால் செல்வன் தாராளமாக ஒவ்வொரு பதிவிலும் உங்களுக்குத் தெரிந்த புரிந்த தகவல்களை தாரளமாக பின்னூட்டத்தில் போடலாம்.
இந்த தொடர் எழுதி ஏறக்குறைய மூன்று வருடங்கள் ஆகி விட்டது. ஒரு புத்தக வடிவம் என்ற முயற்சியை தொடங்கியதே இதன் மூலம் தான். ஆனால் அப்போது வடிவமைப்பு பற்றி ஒன்றும் தெரியாமல் அப்போது என் தொடர்பில் இருந்த ஹாலிவுட் பாலாவிடம் கொடுத்து வடிவமைப்போடு ஏதும் தவறுகள் குறைகள் இருக்கின்றதா என்று பார்க்கச் சொன்ன போது அவர் நன்றாக உள்ளது. ஆனால் படிப்பவர்கள் சோர்ந்து போகும் அளவிற்கு ஏராளமான விபரங்களை கொடுத்துக் கொண்டே இருக்குறீங்க என்றார்.
அதன் பிறகு மறுபடியும் பிரித்து பல வரலாற்று தகவல்களை குறைத்து சிறிது சிறிதாக மாற்றினேன். இப்போதைய என் வேலைப்பளூவில் என்னால் அதையெல்லாம் மறுபடியும கோர்க்க நேரம் இல்லை. படங்கள் கூட கோர்க்க முடியவில்லை.
வீட்டில் மூன்று பேர்களும் இணையத்தை முழு வீச்சில் கையாண்டு கொண்டு இருப்பதால் இணைய வேகம் அதளபாதாளத்திற்கு சென்று திறக்கவே பயமாக உள்ளது. மீண்டும் ஒரு முறை பிஎஸ்என்எல் கட்டண சேவையை மாற்ற வேண்டிய சூழ்நிலையில் உள்ளேன்.
வவ்வால் உங்களுக்கு மட்டும் ஒரு தகவல்.
ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி உலக நாடுகள் பல இடங்களிலும் ஈழத் தமிழர்கள் (இலங்கைத் தமிழர்கள்) நடத்திய நடத்தும் கூட்டங்களிலும் உரையாற்றியவர். அவருடன் பழகத் தொடங்கிய பிறகு தான் இலங்கைத் தமிழர்களின் உண்மையான ஆளுமைத்திறன் எனக்குத் புரிந்தது.
அவர் வார்த்தையில் சொல்லப் போனால்
இலங்கைத் தமிழர்கள் கர்வம் மிகுந்தவர்கள். ஆனால் அந்த கர்வம் நியாயமானதே. காரணம் அந்த அளவுக்கு அவர்கள் தமிழுக்கு தொண்டு செய்து உள்ளார்கள். 1920 ஆம் ஆண்டு காலத்திலேயே சட்டங்கள், மருத்துவங்கள் குறித்து கலைச் சொல் அகராதியோடு பல புத்தகங்களை கொண்டு வந்தவர்கள் என்பது போன்ற பல தகவல்களை சொல்லச் சொல்ல எனக்கே அவர்கள் அதிகப்படியான மரியாதை உருவாகத் தொடங்கியது.
இன்று வரையிலும் அவர்கள் என் பார்வையில் தமிழர்களாகத் தான் இருக்கின்றார்கள். வாழ்க்கின்றார்கள். நாம் தான் பின்தங்கி விட்டோம் என்று நினைத்துக் கொள்வதுண்டு.
அவர்களை பாராட்டுவதில் தவறில்லை தானே?
வியாசன்,
இந்தியா என்று சொல்லி பீற்றிக்கொள்ளவும் தயாரில்லை, தூற்றிக்கொள்ளவும் தயாரில்லை, அப்படி செய்வதும் இல்லை. ஆனால் இழிவுப்படுத்தி பேசும் போது பதில் சொல்லவும் கடமைப்பட்டுள்ளோம்.
ஈழத்தில் இருக்கும் தமிழர்கள் ஒன்றும் ஈழத்திலேயே முளைத்தவர்கள் இல்லை. ஆனால் சிலர் என்னமோ அவர்கள் தனிப்பிறவிகள் போல பேசிக்கொண்டு ,பின்னர் இந்தியா என்ன செய்தது என்றும் கேட்பதையே சொல்கிறேன்.
//இந்தியன் என்று நீங்கள் சொல்லிக் கொள்ள வெட்கப்பட வேண்டும் என்பதல்ல எங்களின் கருத்து. நீங்கள் வெட்கப்பட வேண்டுமா, இல்லையா என்பதை எங்களிடம் கேட்பதை விட, பாக்குநீரிணையில் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பங்களைக் கேட்டால் உங்களுக்கு பதிலளிப்பார்கள் அல்லது மலையாளிகளிடம் கேளுங்கள். :)//
கண்டிப்பாக வருத்தப்படுவாங்க,ஆனால் வெட்கப்படமாட்டாங்க. ஏன் எனில் அரசியல்வாதிகளின் செயலுக்கு தேசத்தின் மீது வெட்கப்பட எதுவுமில்லைனு தெரியும்.
அதே போல உங்க ஈழப்பெருமையை போய் மலையகத்தமிழர்களிடமோ, இல்ல கொழும்புவில் இருப்பவர்களிடமோ சொன்னால் காதுக்கொடுத்துக்கூட கேட்க மாட்டார்கள் என்பதை அறிவீரோ :-))
//இலங்கைத் தமிழர்களின் அழிவுக்கு ஆரம்பத்திலிருந்து இந்தியாவும் முக்கியகாரணங்களிலொன்று, அதனால் அதைத் தீர்க்க வேண்டிய தார்மீகக் கடமையும் இந்தியாவுக்குண்டு.//
ஆரம்பத்திலேயே எந்த வகையில் காரணமாயிற்றுனு சொல்ல முடியுமா?
பிரச்சினையை ஆரம்பிச்சதே ஈழத்தில் இருக்கும் மக்கள் தான்.
தார்மீகக்கடமை என்பது இருபக்கமும் இருக்கணும்.
உங்களுக்கு என்று ஒரு நியாயம் பேசிக்கொன்டு அதையே அனைவரும் கேட்க வேண்டும் என சொல்வது ஒரு பக்க சார்பானது.
தனி ஈழம் என ஒன்று உருவாக்கி தந்தாலும் அங்கே போய் வாழ அயலகம் போன ஈழத்தவர் யாரும் தயாராக இல்லை, அப்படி இருக்கும் போது , தார்மீக கடமைனு சொல்லிக்கிட்டு எதை செய்ய சொல்லுறிங்க.
மொத்தமாக இலங்கை உட்பட, உலகம் முழுக்க இருக்கும் ஈழத்தமிழர்கள் எண்ணிக்கை ஒரு கோடி கூட தேறாது,ஆனால் அவர்கள் சொல்படி இந்தியாவும், தமிழகத்தமிழர்களும் செயல்படனும்னு எதிர்ப்பார்ப்பது எப்படி சரியாகும். அதற்கான உரிமை எங்கிருந்து கிடைத்தது?
முதலில் பொதுவான ஒரு அமைதியான வாழும் சூழலை தான் உருவாக்க முயலனும், அதற்கு யாரும் முயற்சிக்க மாட்டேங்கிறார்கள்.
ஜோதிஜி,
உங்களோடு பெரும்பாலும் முட்டிக்கொள்வது போல சூழல் உருவாக காரணமே, நீங்கள் ஒரு கருத்தினை , அதன் முழுப்பரிமாணத்தில் உள்வாங்கிக்கொள்ளாமலே சமயங்களில் ஒரு ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட் அடிப்பீர்கள், இது எனது அவதானிப்பு :-))
//இலங்கைத் தமிழர்கள் கர்வம் மிகுந்தவர்கள். ஆனால் அந்த கர்வம் நியாயமானதே. //
ஹி..ஹி கர்வம் கொண்டவர்கள் அதனை வேறு எங்காவது காட்டினால் பரவாயில்லை சக தமிழன் மீதே காட்டினால் :-))
//அந்த அளவுக்கு அவர்கள் தமிழுக்கு தொண்டு செய்து உள்ளார்கள். 1920 ஆம் ஆண்டு காலத்திலேயே சட்டங்கள், மருத்துவங்கள் குறித்து கலைச் சொல் அகராதியோடு பல புத்தகங்களை கொண்டு வந்தவர்கள்//
கண்டிப்பாக தமிழுக்கு தொண்டு செய்துள்ளார்கள் தான் ஆனால் கர்வம் கொள்ளும் அளவுக்கா என "தீர்ப்பெல்லாம்" எழுத முடியாதே :-))
ஆறுமுகநாவலர் எதிர் இராமலிங்க அடிகள் போட்டி, வழக்கெல்லாம் அறிவீர்களோ?
1920க்கு முன்னரே அகராதி, கலைச்சொல் உருவாக்கம் எல்லாம் நடந்துப்போச்சு. இன்னும் சொல்லப்போனால் போர்ச்சுகீசியர் லிஸ்பனில் வச்சே தமிழ் அகராதி போட்டுவிட்டார்கள்.
தமிழ்நாட்டில் ஒன்னுமே நடக்காதது போல இலங்கையில் இருப்பவர்கள் கர்வம் கொண்டவர்கள் ,அதுவும் நியாயம்னு சொல்வதை அறியாமை என்பதை தவிர வேறென்ன சொல்ல.
ஜோதிஜி,
உங்களோடு பெரும்பாலும் முட்டிக்கொள்வது போல சூழல் உருவாக காரணமே, நீங்கள் ஒரு கருத்தினை , அதன் முழுப்பரிமாணத்தில் உள்வாங்கிக்கொள்ளாமலே சமயங்களில் ஒரு ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட் அடிப்பீர்கள், இது எனது அவதானிப்பு :-))
//இலங்கைத் தமிழர்கள் கர்வம் மிகுந்தவர்கள். ஆனால் அந்த கர்வம் நியாயமானதே. //
ஹி..ஹி கர்வம் கொண்டவர்கள் அதனை வேறு எங்காவது காட்டினால் பரவாயில்லை சக தமிழன் மீதே காட்டினால் :-))
//அந்த அளவுக்கு அவர்கள் தமிழுக்கு தொண்டு செய்து உள்ளார்கள். 1920 ஆம் ஆண்டு காலத்திலேயே சட்டங்கள், மருத்துவங்கள் குறித்து கலைச் சொல் அகராதியோடு பல புத்தகங்களை கொண்டு வந்தவர்கள்//
கண்டிப்பாக தமிழுக்கு தொண்டு செய்துள்ளார்கள் தான் ஆனால் கர்வம் கொள்ளும் அளவுக்கா என "தீர்ப்பெல்லாம்" எழுத முடியாதே :-))
ஆறுமுகநாவலர் எதிர் இராமலிங்க அடிகள் போட்டி, வழக்கெல்லாம் அறிவீர்களோ?
1920க்கு முன்னரே அகராதி, கலைச்சொல் உருவாக்கம் எல்லாம் நடந்துப்போச்சு. இன்னும் சொல்லப்போனால் போர்ச்சுகீசியர் லிஸ்பனில் வச்சே தமிழ் அகராதி போட்டுவிட்டார்கள்.
தமிழ்நாட்டில் ஒன்னுமே நடக்காதது போல இலங்கையில் இருப்பவர்கள் கர்வம் கொண்டவர்கள் ,அதுவும் நியாயம்னு சொல்வதை அறியாமை என்பதை தவிர வேறென்ன சொல்ல.
//இன்று வரையிலும் அவர்கள் என் பார்வையில் தமிழர்களாகத் தான் இருக்கின்றார்கள். வாழ்க்கின்றார்கள். நாம் தான் பின்தங்கி விட்டோம் என்று நினைத்துக் கொள்வதுண்டு.
அவர்களை பாராட்டுவதில் தவறில்லை தானே?//
என் பார்வையில் மட்டும் அவர்கள் ஆங்கிலேயர்களாகவா தெரிகிறார்கள்?
பாராட்டலாம் தவறேயில்லை, ஆனால் பாராட்டுவது உன் கடமை,செய்யவில்லைனா தமிழனத்துரோகினுலாம் கிளம்புவது தான் சரியல்ல :-))
ஈழத்தில்(இலங்கையில்) வாழ்ந்து புலம்பெயர்ந்து வாழும் மேல் தட்டு மக்களிடம் இருந்து அறியப்பெறும் தகவல் ஒரு வகை, ஆனால் இலங்கையில் இருந்த போதும், துன்பப்பட்டு, இங்கும் கஷ்டப்படும் இலங்கை மக்களிடம் இருந்து அறியப்படும் தகவல்கள் வேறு வகை. நான் கஷ்டப்படும் மக்களிடம் இருந்து அறிந்தவன் ,அவ்வளவே வித்தியாசம்.
//கண்டிப்பாக தமிழுக்கு தொண்டு செய்துள்ளார்கள் தான் ஆனால் கர்வம் கொள்ளும் அளவுக்கா என "தீர்ப்பெல்லாம்" எழுத முடியாதே //
எண்ணிக்கையில் பலமாக இருந்தும் கையாலாகதவர்களாக பார்ப்பனர்களுகு விறகு கொத்திக் கொண்டும், தண்ணீர் இறைத்துக் கொண்டும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் இருந்த காலத்திலேயே, தமிழுக்குத் தொண்டு செய்தவர்கள் ஈழத்தமிழர்கள், அதாவது தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு முன்பாகவே தமிழை அழிவிலிருந்து காத்தவர்கள் ஈழத்தமிழர்கள். அதனால் கர்வம் கொள்ளுவதில் என்ன தவறு?
//ஆறுமுகநாவலர் எதிர் இராமலிங்க அடிகள் போட்டி, வழக்கெல்லாம் அறிவீர்களோ?//
அறிவோம், அதற்கும் இதற்கும் என்ன சந்தர்ப்பம். அது சைவசித்தாந்தத்துக்கும் இராமலிங்க அடிகள் சமரச் சுத்த சன்மார்க்கம் என்ற புதிய கொள்கைக்குமிடையிலான போட்டி. பழமைவாதியும், எல்லாம் வல்ல சிவபெருமானை விட வேறெவரையும் வணங்குதல் சிவநிந்தனை என்று நம்பிய யாழ்ப்பாணத்து ஆறுமுகநாவலருக்குமிடையே நடந்த போட்டி. அதை இங்கு ஏன் குறிப்பிடுகிறீர்கள்.
//1920க்கு முன்னரே அகராதி, கலைச்சொல் உருவாக்கம் எல்லாம் நடந்துப்போச்சு. இன்னும் சொல்லப்போனால் போர்ச்சுகீசியர் லிஸ்பனில் வச்சே தமிழ் அகராதி போட்டுவிட்டார்கள்.
//
போத்துக்கேய பாதிரிமார்களின் நோக்கம் மதத்தைப்பரப்புவதே தமிழைக்காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. தமிழ்நாட்டவர்களுக்கு முன்பாக பழந்தமிழ் இலக்கியங்களை அச்சு இயந்திரமேற்றி அழியாமல் காத்தவர்கள் ஈழத்தமிழர்கள் தான்.
//ஈழத்தில்(இலங்கையில்) வாழ்ந்து புலம்பெயர்ந்து வாழும் மேல் தட்டு மக்களிடம் இருந்து அறியப்பெறும் தகவல் ஒரு வகை, ஆனால் இலங்கையில் இருந்த போதும், துன்பப்பட்டு, இங்கும் கஷ்டப்படும் இலங்கை மக்களிடம் இருந்து அறியப்படும் தகவல்கள் வேறு வகை.//
புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் வேற்றுக்கிரக வாசிகளல்ல, அவர்களும் தமிழீழ மண்ணின் மைந்தர்கள். ஈழத்தில் வாழும் தமிழர்களின் பிள்ளைகள், சகோதரர்கள், மாமன், மச்சான் பங்காளிகள் தான் புலம்பெயர்ந்த தமிழர்கள் என்பதை பலர் மறந்து விடுகின்றனர். இன்றைக்கு சிங்கள வர்த்தகர்களும், ஏழைச் சிங்களவர்களும் யாழ்ப்பாணம் நோக்கிப் படையெடுப்பதற்குக் காரணம், வடக்கில் வாழும் தமிழர்களிடம் பணப்புழக்கம் இருக்கிறதென்ற காரணத்தால் தான். அதற்கெல்லாம் காரணம் இலங்கை அரசு தமிழர்களுக்கென செய்து கொடுக்கும் வேலைவாய்ப்புத் திட்டங்களோ அல்லது கட்டியெழுப்பும் தொழிற்சாலைகளாலோ அல்ல, அதற்குக் காரணம் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் அனுப்பும் பணம் தான். இந்தியா கொடுக்கும் நிதியுதவியும், வீட்டுத்திட்டமும், ஈழத்தமிழர்களின் மண்ணில் சிங்களக்குடியேற்றத்துக்குத் தான் உதவுகிறது. ஈழத்தில் வாழும் தமிழர்களும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களையும் எதிரிகளாக தொடர்பில்லாதவர்களாக சித்தரிக்க தமிழர்களின் எதிரிகள் முயற்சிப்பதொன்றும் ஈழத்தமிழர்கள் அறியாததல்ல. அதைத் தான் சிங்கள அரசும் செய்கிறது.
சகோ.வவ்வால் அவர்களே,
//ஈழத்தில் இருக்கும் தமிழர்கள் ஒன்றும் ஈழத்திலேயே முளைத்தவர்கள் இல்லை.//
ஈழத்தில் முளைத்தோமோ இல்லையோ, இந்தியாவிலிருந்து போகவில்லை, இலங்கை தமிழ்நாட்டிலிருந்து கடல்கோளால் பிரிந்த போது, பிரிக்கப்பட்ட தமிழர்களின் மூதாதையர்கள் தான் எங்களின் முன்னோர்கள் என நம்பும் ஈழத்தமிழர்களும் இருக்கிறார்கள். அதை விட இந்தியா என்பது என்ன, வெள்ளைக்காரர் உருவாக்கியது தானே. அதற்கு முன்னால், எங்களின் தமிழ் முன்னோர்கள் இந்தியா என்ற சொல்லைத் தான் கேள்விப்பட்டிருப்பார்களா? எங்களின் முன்னோர்கள் 'இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு" ஆக்கத் தான் முனைந்தார்களே தவிர இந்தியா ஆக்க அல்ல. . :- )
//அதே போல உங்க ஈழப்பெருமையை போய் மலையகத்தமிழர்களிடமோ, இல்ல கொழும்புவில் இருப்பவர்களிடமோ சொன்னால் காதுக்கொடுத்துக்கூட கேட்க மாட்டார்கள் என்பதை அறிவீரோ//
அவர்கள் சிங்களத்தின் மத்தியிலிருப்பதால் தான் பாதுகாப்புக் காரணங்களுக்காக தமது ஈழ ஆதரவை வெளிப்படையாகக் காட்டுவதில்லை என்பதை அறிவீரோ :) எத்தனை மலையகத்தமிழர்கள் ஈழவிடுதலைப்போராட்டத்தில் இணைந்து போராடினார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியாது போலிருக்கிறது, சும்மா கொழும்புக்குப் போய் ஒரு சில தமிழுணர்வற்ற , இரண்டாவது, மூன்றாம் தலைமுறை கலப்பினத் தமிழர்களுடன் பழகி விட்டு, இலங்கைத் தமிழர்களின் ஈழவிடுதலைப்போராட்டத்தை எந்த உண்மையான தமிழனும் இப்படிக் கொச்சைப்படுத்த மாட்டான். நீங்கள் உண்மையான தமிழரல்ல என்று இங்கு நான் சொல்லவில்லை. :)
//ஆரம்பத்திலேயே எந்த வகையில் காரணமாயிற்றுனு சொல்ல முடியுமா?//
அமெரிக்க ஆதரவைக் காட்டியது மட்டுமன்றி, இந்திய பாகிஸ்தான் போரில்
பாகிஸ்தான் விமானங்களை இலங்கையில் எரிவாயு நிரப்ப அனுமதித்து இந்தியாவுக்குப் 'பெப்பே' காட்டிய சின்னஞ்சிறு இலங்கையைத் தன்வழிப்படுத்த இலங்கைத் தமிழர்களின் உரிமைப்போராட்டத்துக்கு ஆதரவளிப்பது மாதிரி நடித்து, எமது இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்து அவர்களைக் களப்பலியாக்கி, இலங்கையை நிலைகுலைத்து ஈழத்தமிழர்களின் முதுகிலும் குத்தியதிலிருந்து, இலங்கைத் தமிழர்களின் அழிவுக்கு இந்தியாவும் முக்கிய காரணமாகும்.
//தனி ஈழம் என ஒன்று உருவாக்கி தந்தாலும் அங்கே போய் வாழ அயலகம் போன ஈழத்தவர் யாரும் தயாராக இல்லை//
இதைத் தான் ஈழத்தில் நாங்கள் அதிகப்பிரசங்கித்தனம் என்போம். ஈழத்தமிழர்கள் எல்லோரிடமும் கருத்துக்கணிப்பு நடத்தினீர்களா? இப்பவே எத்தனையோ பேர் திரும்பப் போகத் தொடங்கி விட்டீர்கள். என்னுடைய பெற்றோர்கள் கூட நிரந்தரமாக ஊருக்குப் போகவிருக்கிறார்கள். அதை விட தனி ஈழம் அமைத்தால் எல்லோரும் கட்டாயம் திரும்பவேண்டிய தேவை என்ன? இஸ்ரேல் என்ற நாடு அமைந்ததும், அமெரிக்க யூதர்கள், ஐரோப்பிய யூதர்களும் திரும்பிப் போய் விட்டார்களா? இல்லை, ஆனால் அமெரிக்க யூதர்கள் தான் அமெரிக்காவின் ஆதரவை இஸ்ரேலுக்கு ஏற்படுத்திக் கொடுத்து தமது நாட்டைக் காக்கிறார்கள். அமெரிக்க யூதர்களைப் போலவே புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழீழத்தின் பலமாக, ஆதரவாக இருப்பார்கள்.
//மொத்தமாக இலங்கை உட்பட, உலகம் முழுக்க இருக்கும் ஈழத்தமிழர்கள் எண்ணிக்கை ஒரு கோடி கூட தேறாது,ஆனால் அவர்கள் சொல்படி இந்தியாவும், தமிழகத்தமிழர்களும் செயல்படனும்னு எதிர்ப்பார்ப்பது எப்படி சரியாகும். அதற்கான உரிமை எங்கிருந்து கிடைத்தது?//
அப்படி யாரும் எதிர்பார்க்கவில்லை. தமிழர்களுக்கு எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் தமிழர்களனைவரும் குரல் கொடுக்க வேண்டும் அதற்காக தமது நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளை மாற்ற அல்லது அதில் தாக்கத்தை ஏற்படுத்துமளவுக்காவது பலம் வாய்ந்தவர்களாக தமிழர்கள் மாற வேண்டும். உதாரணமாக, 300,000க்கும் குறைவான கனேடிய தமிழர்கள், தமது அரசை இலங்கைக்கு எதிராகப் பேசவைக்க முடிந்தால், ஒரு குட்டி மாநிலமான கேரளா இரண்டு மீனவர்களுக்காக இந்தியாவை இத்தாலிக்கெதிராக யுத்தத்தை அறிவிக்குமளவுக்கு தூண்ட முடியுமானால். 70 மில்லியன் தமிழ்நாட்டுத் தமிழர்களால் ஈழத்தமிழர்களுக்காதரவாக இந்தியாவைப் பேசவைக்க முடியாது போனாலும் கூட, 500 இந்தியத் தமிழ் மீனவர்களுக்காக இந்தியாவை இலங்கையை எதிர்த்துப் பேச வைக்க முடியாதா? அப்படியானால் 70 மில்லியன் தமிழ்நாட்டுத் தமிழர்களும் கையாலாகாதவர்களா அல்லது இந்திய கூட்டமைப்பில் அவர்களின் நிலை ஙே என்று எருமை மாதிரி எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பது தானா, என்ற கேள்விகள் உலகத்தமிழர்களுக்கு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. :-)
வியாசன்,
//எண்ணிக்கையில் பலமாக இருந்தும் கையாலாகதவர்களாக பார்ப்பனர்களுகு விறகு கொத்திக் கொண்டும், தண்ணீர் இறைத்துக் கொண்டும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் இருந்த காலத்திலேயே, தமிழுக்குத் தொண்டு செய்தவர்கள் ஈழத்தமிழர்கள், அதாவது தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு முன்பாகவே தமிழை அழிவிலிருந்து காத்தவர்கள் ஈழத்தமிழர்கள். அதனால் கர்வம் கொள்ளுவதில் என்ன தவறு?//
இந்தக்கூற்று ஒன்றே போதும் உங்கள் சிந்தனைகள் எப்படிப்பட்டவை எனக்காட்ட,வரலாறு தெரியாமல் இருந்தால் பரவாயில்லை,அடிப்படை அறிவேயில்லாமல் பேசினால் என்ன செய்ய :-))
தற்பெருமை பேசிக்கொள்ளவும் கொஞ்சம் அடிப்படை தேவை!!!
// தமிழ்நாட்டவர்களுக்கு முன்பாக பழந்தமிழ் இலக்கியங்களை அச்சு இயந்திரமேற்றி அழியாமல் காத்தவர்கள் ஈழத்தமிழர்கள் தான்.//
ஹி...ஹி செம காமெடி :-))
ஆறுமுக நாவலருக்கு முன்னர் இலங்கையில் தமிழ் இலக்கியம் தெரிஞ்சவங்கன்னு ஒருத்தருமே இல்லை, ஆனால் அவர் காலத்தவரான இராம லிங்க அடிகளே பல தமிழ் நூல்கள் இயற்றி அச்சில் கொண்டு வந்திருந்த காலம்,அதனால் தான் இராமலிங்க அடிகள் பற்றி பேசினேன்.
அப்புறம் அவர்களுக்கு இடையேயான வழக்கு ஏன்னு கூட உங்களுக்கு தெரியலை. அருட்பா- மருட்பா சண்டைனா என்னனு யாராவது வரலாறும், தமிழும் தெரிந்தவர்களிடம் கேட்டுத்தெரிந்துக்கொள்ளவும். உங்களுக்கு பாலப்பாடத்திலிருந்து தமிழ் வரலாறு சொல்ல வேண்டும், தற்சமயம் அதற்கு நேரமில்லை.
அந்த காலத்தில் இலங்கையில் தமிழ் இலக்கியத்தின் மூலமே கிடையாது, திருப்பனந்தாள் மடம், திருவாடுதுறை மடம்னு வந்து தமிழ் இலக்கியம்ம் படிச்சிட்டு , இங்கே இருந்து பிரிண்டிங் பிரஸ் வாங்கிட்டு போனார் நாவலர் :-))
கி.பி 1812 இலேயே திருக்குறள் அச்சடிக்கப்பட்டு விட்டது. அதுக்கு முன்னரே தமிழ் ,தமிழ் -பெங்காலி, தமிழ்-போர்ச்சுகீஸ் அகராதிலாம் அச்சடிச்சிட்டாங்க.
வீரமா முனிவர்(இத்தாலி), கால்டுவெல்னு வெள்ளைக்காரனே தமிழ் வளர்ச்சியில் இறங்கிட்டாங்க.
உலக அளவில் பழமையான அச்சுக்கூடங்களில் ஒன்றாக தமிழக அச்சுக்கூடங்கள் இருந்தன, தமிழ் நாட்டில் அச்சுத்தொழிலின் வயது 450 ஆண்டுகள்.
--------
//ஈழத்தில் முளைத்தோமோ இல்லையோ, இந்தியாவிலிருந்து போகவில்லை, இலங்கை தமிழ்நாட்டிலிருந்து கடல்கோளால் பிரிந்த போது, பிரிக்கப்பட்ட தமிழர்களின் மூதாதையர்கள் தான் எங்களின் முன்னோர்கள் என நம்பும் ஈழத்தமிழர்களும் இருக்கிறார்கள். அதை விட இந்தியா என்பது என்ன, வெள்ளைக்காரர் உருவாக்கியது தானே. அதற்கு முன்னால், எங்களின் தமிழ் முன்னோர்கள் இந்தியா என்ற சொல்லைத் தான் கேள்விப்பட்டிருப்பார்களா? எங்களின் முன்னோர்கள் 'இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு" ஆக்கத் தான் முனைந்தார்களே தவிர இந்தியா ஆக்க அல்ல. . :- )//
வரலாற்றை விட புராண நம்பிக்கைகள் அதிகம் கொண்டவர் போல :-))
//எத்தனை மலையகத்தமிழர்கள் ஈழவிடுதலைப்போராட்டத்தில் இணைந்து போராடினார்கள் //
//அமெரிக்க ஆதரவைக் காட்டியது மட்டுமன்றி, இந்திய பாகிஸ்தான் போரில்
பாகிஸ்தான் விமானங்களை இலங்கையில் எரிவாயு நிரப்ப அனுமதித்து இந்தியாவுக்குப் 'பெப்பே' காட்டிய சின்னஞ்சிறு இலங்கையைத் தன்வழிப்படுத்த இலங்கைத் தமிழர்களின் உரிமைப்போராட்டத்துக்கு ஆதரவளிப்பது மாதிரி நடித்து, எமது இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்து அவர்களைக் களப்பலியாக்கி, இலங்கையை நிலைகுலைத்து ஈழத்தமிழர்களின் முதுகிலும் குத்தியதிலிருந்து, இலங்கைத் தமிழர்களின் அழிவுக்கு இந்தியாவும் முக்கிய காரணமாகும்.//
இலங்கை குடியுரிமை சட்டம் எல்லாம் எப்போ போட்டாங்கனு தெரியலை போல, சிங்கள்,பவுத்தமே அரச மொழி,மதம்னு சட்டம், மலையகத்தமிழர்கள் வெளியேற்றம் எல்லாம் எப்போ நடந்துச்சு?
இந்தியா மேற் சொன்னவைகளை எப்போ செய்தது. வரலாற்றை பின்னாடி இருந்து முன்னாடி கொண்டு போய் பேச உங்களால் மட்டுமே முடியும் :-))
// இஸ்ரேல் என்ற நாடு அமைந்ததும், அமெரிக்க யூதர்கள், ஐரோப்பிய யூதர்களும் திரும்பிப் போய் விட்டார்களா?//
ஹி...ஹி இல்லாத நாட்டையே உருவாக்கிட்டு அப்புறம் உரிமை கொண்டாடும் இஸ்ரேலும், இருக்கிற நாட்டை விட்டு போயிட்டு ,உருவாக்கனும் என சொல்வதும் ஒன்றா? அப்படி உருவாக்கனும் என சொல்லும் போது வாழ வர வேண்டாமா?
//500 இந்தியத் தமிழ் மீனவர்களுக்காக இந்தியாவை இலங்கையை எதிர்த்துப் பேச வைக்க முடியாதா? அப்படியானால் 70 மில்லியன் தமிழ்நாட்டுத் தமிழர்களும் கையாலாகாதவர்களா அல்லது இந்திய கூட்டமைப்பில் அவர்களின் நிலை ஙே என்று எருமை மாதிரி எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பது தானா, //
கேட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள், அதற்கான தண்டனையை அரசியல்வாதிகளுக்கு ஜனநாயக முறையில் மக்கள் கொடுத்து விடுகிறார்கள். ஜனநாயக நாட்டில் செயல்படாத தலைவர்களுக்கு தேர்தலில் தான் தண்டனைக்கொடுக்க முடியும்.
எப்படி இலங்கையில் இன்னும் ராச பக்சேவின் பாதுகாப்பில் வாழும் தமிழர்கள் இருக்கிறார்களோ அப்படியே இங்கும் அரசியல் வாதிகளின் கூடாரத்தில் சுயநலத்துடனும் வாழும் கூட்டமும் இருக்கு, அதனால் தான் சரியான செயல்பாடு இல்லாமல் இருக்கிறது.
வியாசன்,
உங்களை ஏதோ சற்று வரலாறு அறிந்தவர் என்று நினைத்தேன்.
//எண்ணிக்கையில் பலமாக இருந்தும் கையாலாகதவர்களாக பார்ப்பனர்களுகு விறகு கொத்திக் கொண்டும், தண்ணீர் இறைத்துக் கொண்டும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் இருந்த காலத்திலேயே, தமிழுக்குத் தொண்டு செய்தவர்கள் ஈழத்தமிழர்கள்,//
இதெல்லாம் மிகவும் கீழ்தரமாக உள்ளது.
ஜோதிஜி,
//இன்று வரையிலும் அவர்கள் என் பார்வையில் தமிழர்களாகத் தான் இருக்கின்றார்கள். வாழ்க்கின்றார்கள். நாம் தான் பின்தங்கி விட்டோம் என்று நினைத்துக் கொள்வதுண்டு.//
நான் சந்தித்த பல வெளிநாட்டு ஈழத்தமிழர்கள் கர்வத்தை விட துவேசம் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள். அதற்காக எல்லாரும் அப்படியே எனச் சொல்வது பொருந்தாது.
# எல்லா சிங்களவரும் மோசமானவர்கள்.
# யாழ்ப்பாணத்தமிழர்கள் மற்ற ஈழத்தமிழர்களைவிட அறிவாளிகள்.
# சக ஈழத்தமிழர்களின் சாதி குறித்து அவதூறான கருத்துகள் சொல்வது.
# ஏதோ இந்தியத்தமிழர்கள் அடிமைப்பட்டு கிடப்பதுபோல அங்கலாய்ப்பது.
# வெளிநாடு சென்றும் சாதியையும் மதத்தையும் விடாமல் தூக்கிப்பிடிப்பது.
என சொல்லிக்கொண்டே போகலாம்.
நான் மேல் கூறியவை எல்லா ஈழத்தமிழருக்கும் பொருந்தாது. இவற்றில் பல நம் நாட்டு தமிழர்களிடமே உண்டு. இவர்கள் இப்படித்தான் என பொதுமைப்படுத்தத் தேவையில்லை. ஆனால் வியாசனும் தற்போது அப்படித்தான் குறிப்பிடுகிறார். மனிதர்களின் தனிப்பட்ட குணங்களை சாதிக்கும் மதத்திற்கும் இனத்திற்கும் நாட்டிற்கும் பூசுவது சரியில்லை.
//போத்துக்கேய பாதிரிமார்களின் நோக்கம் மதத்தைப்பரப்புவதே தமிழைக்காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. தமிழ்நாட்டவர்களுக்கு முன்பாக பழந்தமிழ் இலக்கியங்களை அச்சு இயந்திரமேற்றி அழியாமல் காத்தவர்கள் ஈழத்தமிழர்கள் தான்.//
ஆறுமுக நாவலர் பைபிள் மொழிபெயர்ப்பு எதற்காக செய்தார்? சைவம் தழைத்தோங்கவா?
//இந்தக்கூற்று ஒன்றே போதும் உங்கள் சிந்தனைகள் எப்படிப்பட்டவை எனக்காட்ட,//
தமிழ்நாட்டுத் தமிழர்களில் பெரும்பான்மையினருக்கு சாதியடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டது போல், ஈழத்தமிழர்களுக்கு கல்வி மறுக்கப்படவில்லை. அதனால் தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் கல்வியில் முன்னணியில் திகழ்ந்தார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அக்காலத்தில் தமிழ்நாட்டில் பார்ப்பனர்களுக்குப் போட்டியாகத் திகழ்ந்தவர்கள் யாழ்ப்பாணத்தமிழர்களே தவிர தமிழ்நாட்டுத் தமிழர்களல்ல. 1858 இல் சென்னைப்பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரிகள் இருவருமே ஈழத்தமிழர்களாகிய தாமோதரம்பிள்ளையும், விசுவநாதபிள்ளையும் தான். யாழ்ப்பாணத்தவராகிய சேர். சி. வை. தாமோதரம்பிள்ளை தமிழுக்குச் செய்த தொண்டைப் பற்றி அறிந்த பின் பேசவும்.
//ஹி...ஹி செம காமெடி //
பேசுகிற விடயம் புரியாது விட்டால் சிரித்து மழுப்புவது பலரின் இயல்பு தான், உ.வே. சுவாமிநாதையருக்கு முன்பாகவே தமிழிலக்கியங்களை குறிப்பாக ஐம்பெரும் காப்பியங்களை ஓலைச்சுவடிகளிலிருந்து எடுத்து அழியாது காக்கும் பணியைத் தொடங்கியவர் ஆறுமுகநாவலர் என்பதைத் தான் நான் குறிப்பிட்டேன். உங்கள் பதில்களில் ஆறுமுகநாவலருக்கெதிராக தேவையற்ற காழ்ப்புணர்வு தெரிகிறது, அவரது தமிழ்த்தொண்டை முழுமையாக அறியாமை தான் காரணம் போலும்.:)
"...The credit for editing and publishing many of the works included in the Cankam literature and the Five Great Epics (Civakacintamani, Cilappatikaram, Manimekalai, Valayapati and Kuntalakeci) goes to U. V. Swaminatha Aiyar (1855-1942). In this endeavour it has been rightly observed that Arumuka Navalar LAID THE FOUNDATION, C. W. Thamotherampillai raised the walls and U.V.Swaminatha Aiyar built the superstructure..."
//ஆறுமுக நாவலருக்கு முன்னர் இலங்கையில் தமிழ் இலக்கியம் தெரிஞ்சவங்கன்னு ஒருத்தருமே இல்லை//
ஈழத்தமிழர்களைப் பற்றி எதுவுமே தெரியாத அரைவேக்காட்டுடன் நான் எனது நேரத்தை வீணாக்கவில்லை என இப்பவும் நம்புகிறேன். எனது நம்பிக்கையை பாழடித்து விடாதீர்கள். ஈழத்தமிழர்களின் தமிழ் அறிவும்,தமிழ்த்தொண்டும் ஆறுமுகநாவலருடன் தொடங்கவில்லை. சங்க காலத்திலே ஈழத்துப் பூதந்தேவனார் போன்ற ஈழத்துப் புலவர்கள் இருந்தனர். ஈழத்துப் புலவர்களின் பாடல்கள் சங்கத்தமிழ் இலக்கியங்களிலும் உண்டு. யாழ்ப்பாணத்து அரசின் காலத்தில் பல தமிழிலக்கியங்கள் யாழ்ப்பாண அரசர்களின் ஆதரவுடன் ஈழத்தமிழ்ப்புலவர்களால் இயற்றப்பட்டன. யாழ்ப்பாண புலவர்களால் தமிழில் இயற்றப்பட்ட, இலக்கியம், வரலாறு, மருத்துவம், சைவசித்தாந்தம் எனப் பலதுறைகளில் எண்ணற்ற தமிழ்நூல்கள், ஒலைச்சுவடிகள் உள்ளன, அவற்றில் பல யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட போது அழிந்தும் போயின. மதுரைத் தமிழ்ச்சங்கம் இல்லாது போன பின்னர், அதன் வழியே யாழ்ப்பாண அரசின் தலைநகராகிய நல்லூரில் யாழ்ப்பாணத்தரசன் பராராசசேகரனால் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ்வளர்த்தவர்கள் எங்களின் ஈழத்தமிழ் முன்னோர்கள். தெரியாது விட்டால் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். நல்லூர் தமிழ்ச்சங்கத்திலிருந்த ஈழத்துப் புலவர் அரசகேசரி 500 ஆண்டுகளுக்கு முன்பே ரகுவம்சம் போன்ற சமக்கிருத நூல்களைக் கூடத் தமிழில் மொழியெர்த்தவர, யாழ்ப்பாண அரசின் அரசவைத் தமிழ்ப்புலவர்களில் ஒருவராகிய அரசகேசரிப்புலவர். ஈழத்தமிழர்களின் தமிழறிவும், தமிழ்த்தொண்டும் எமது வரலாற்றுடன் பின்னிப்பிணைந்தது. வெறும் பதிலைக் கட்டுரையாக்க விரும்பாததால் மேலும் தொடரவில்லை.
//அருட்பா- மருட்பா சண்டைனா என்னனு யாராவது வரலாறும், தமிழும் தெரிந்தவர்களிடம் கேட்டுத்தெரிந்துக்கொள்ளவும்//
நான் பெரிய தமிழ்ப்பண்டிதன் அல்லது ஈழத்தமிழர்களின் வரலாறு முழுதும் தெரியும் என இங்கு நான் வாதாடவில்லை. ஆனால் ஆறுமுகநாவலரினதும் வள்ளலாரினதும் அருட்பா, மருட்பா சண்டையைப் பற்றி நானும் கேள்விபட்டிருக்கிறேன். இருவரும் சமகாலத்தவர்கள் ஆனால் ஆறுமுகநாவலரின் தமிழ்த்தொண்டுடன், வள்ளலாரின் ஆன்மீகத் தொண்டை ஒப்பிடுவது வெறும் அபத்தம்.
உங்களோடு பெரும்பாலும் முட்டிக்கொள்வது போல சூழல் உருவாக காரணமே, நீங்கள் ஒரு கருத்தினை , அதன் முழுப்பரிமாணத்தில் உள்வாங்கிக்கொள்ளாமலே சமயங்களில் ஒரு ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட் அடிப்பீர்கள், இது எனது அவதானிப்பு :-))
நாம என்ன தேர்தல் சீட்டுக்காக முட்டிக் கொள்கின்றோம். கருத்துக்காகத்தானே. தவறு என்றாலும் கூட தொடர்ந்து முட்டி முட்டி முயற்சிப்போம்.
என்னளவில் தெரிந்தவற்றைத்தான் இங்கே எழுத்தாக்க முடியும். தவறு என்றாலும் அதை இக்பால் போல தொடர்ந்து இங்கே எழுதி வைக்கும் போது பலருக்கும் பலன் உள்ளதாக இருக்கும் தானே. பகிர்தலின் மூலம் தான் அறிதல் தொடங்குகின்றது.
உலக அளவில் பழமையான அச்சுக்கூடங்களில் ஒன்றாக தமிழக அச்சுக்கூடங்கள் இருந்தன, தமிழ் நாட்டில் அச்சுத்தொழிலின் வயது 450 ஆண்டுகள்.//
கேள்வி என்னவென்றால் அந்த அச்சு இயந்திரங்களுக்குச் சொந்தக்காரர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களா, ஐரோப்பிய பாதிரிமார்களா? அவர்களின் நோக்கம் உண்மையில் தமிழ்த்தொண்டா? எத்தனை சிரமங்களுக்கு மத்தியில் ஆறுமுகநாவலர் தமிழ்நூல்களை அச்சிட அச்சுஇயந்திரம் வாங்க ஆறுமுகநாவலர் எவ்வளவு சிரமப்பட்டார், பாதிரிமார்களால் எத்தனை தடங்கல்களுக்குள்ளானர் என்பதைப் பற்றி நானும் வாசித்திருக்கிறேன்.
மனிதர்களின் தனிப்பட்ட குணங்களை சாதிக்கும் மதத்திற்கும் இனத்திற்கும் நாட்டிற்கும் பூசுவது சரியில்லை.
அற்புதம்.
//சிங்கள்,பவுத்தமே அரச மொழி,மதம்னு சட்டம், மலையகத்தமிழர்கள் வெளியேற்றம் எல்லாம் எப்போ நடந்துச்சு?//
சிங்கள், பெள்த்தம், அரசமொழி எல்லாவற்றுக்கும் இந்திய அரசுக்கும் தொடர்பில்லை,நாங்கள் இந்தியா எப்படி ஈழத்தமிழர்களின் அழிவுக்குக் காரணியானது என்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். மலையகத்தமிழர்களின் வெளியேற்றத்தில் இந்தியா ஈழத்தமிழர்களின் முதுகில் அல்ல இந்தியத்தமிழர்களின் முதுகில் குத்தி அவர்களை அழித்தது என்பது தான் உண்மை.
மிக்க நன்றி வியாசன். உங்கள் கருத்துக்களை இன்று காலையில் தான் பொறுமையாக படிக்க நேரம் கிடைத்தது.
வியாசன் , வவ்வால், குட்டிப்பிசாசு
ஒரு பொதுவான குழப்பம்.
நமது அச்சுக்கலையின் வரலாறே 175 வருடங்கள் தான். காரணம் ஆங்கிலேயர்கள் நமக்கு அச்சடிக்கும் உரிமையை வழங்காமல் இருந்தார்கள் என்று படித்துள்ளேன். ஆனால் இந்த சட்டதிட்டங்கள் பற்றி தெரியாமல் பலரும் பல இடங்களில் அச்சுக்கோர்ப்பு மூலம் பல புத்தகங்களை கொண்டு வந்தார்கள் என்று ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி மூலம் தெரிந்து கொண்டேன். ஆனால் இங்கே நீங்க ஒவ்வொருவரும் 450 வருடங்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கீங்க.
ஆதாரம் ஏதும் உண்டா?
இதைத்தான் நான் கர்வம் மிக்கவர்கள் என்று நாகரிகமாக குறிப்பிட்டேன்.
//இருக்கிற நாட்டை விட்டு போயிட்டு ,உருவாக்கனும் என சொல்வதும் ஒன்றா? அப்படி உருவாக்கனும் என சொல்லும் போது வாழ வர வேண்டாமா?//
எங்களுக்கொரு நாட்டை உருவாக்கத் தேவையில்லை அதை ஏற்கனவே எங்களின் முன்னோர்கள் இரத்தம் சிந்திக் காத்து எங்களின் தந்து விட்டுத் தான் போனார்கள். காலத்தின் கோலத்தாலும், இந்தியாவின் கழுத்தறுப்பாலும் அதன் விடுதலைப்போராட்டம் உருக்குலைந்து போய்விட்டது, அதன் விடுதலைக்கு நாங்கள் எல்லோரும் திரும்பிப் போவதை விட, வெளியிலிருந்தே உறுதுணையாக இருக்க முடியும் யூதர்கள் எங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள் என்பது தான் என்னுடைய கருத்தாகும்.
//எண்ணிக்கையில் பலமாக இருந்தும் கையாலாகதவர்களாக பார்ப்பனர்களுகு//
//இதெல்லாம் மிகவும் கீழ்தரமாக உள்ளது.//
@குட்டிப்பிசாசு
நான் ஏன் அப்படிக் குறிப்பிட்டேன் என்பதற்கு மேலே விளக்கம் கொடுத்திருக்கிறேன். என்னுடைய கருத்து உங்களின் மனதைப்புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.
போன ஜென்மத்தில் நக்கீரன் பரம்பரையிலும் பொறந்துருப்பீங்களோ?
//ஆறுமுக நாவலர் பைபிள் மொழிபெயர்ப்பு எதற்காக செய்தார்? சைவம் தழைத்தோங்கவா?//
நிச்சயமாக. ஆறுமுகநாவலர் "வசன நடை கைவந்த வள்லலார்" ஆக இருந்தமையால், பாதிரியார் பேர்சிவல் கேட்டுக் கொண்டதற்கிணங்க பைபிள் மொழிபெயர்ப்பில் உதவினாரே தவிர, அவர் தனியாக பைபிளைத் தமிழில் மொழி பெயர்க்கவில்லை. அவர் பைபிளை முழுமையாக வாசித்ததால் தான், கிறித்தவ பாதிரிமாரின் பிரச்சாரங்களுக்கெதிராக, அவர்களின் பைபிள் கதைகளையே காட்டி அவர்களை மடக்க அவரால் முடிந்தது. அவர் பைபிளைக் கற்றதால் தான் அவரால் சைவசித்தாந்ததின் மேன்மையை ஒப்பிட்டு, மக்களுக்கு உணர்த்த முடிந்தது. ஆறுமுகநாவலர் இல்லாதிருந்தால் இன்று யாழ்ப்பாணம் இந்தியாவின் கோவா மாநிலம் போன்று மாறி, யாழ்ப்பாணத்தமிழர்கள் அனைவரும், தமிழர்களாக அல்ல போத்துக்கேயக் கலப்புக் கத்தோலிக்கர்களாக இருப்பார்கள்.
ஜோதிஜி,
அதுக்கு தான் ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட் அடிக்கிறது சொன்னது :-))
நாம நக்கீரர் பரம்பரையோ இல்லையோ தெரியாது,ஆனால் சொல்ல நினைப்பதை சொல்லாமல் விடுவதில்லை :-))
வியாசர்,
//தமிழ்நாட்டுத் தமிழர்களில் பெரும்பான்மையினருக்கு சாதியடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டது போல், ஈழத்தமிழர்களுக்கு கல்வி மறுக்கப்படவில்லை. அதனால் தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் கல்வியில் முன்னணியில் திகழ்ந்தார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அக்காலத்தில் தமிழ்நாட்டில் பார்ப்பனர்களுக்குப் போட்டியாகத் திகழ்ந்தவர்கள் யாழ்ப்பாணத்தமிழர்களே தவிர தமிழ்நாட்டுத் தமிழர்களல்ல. 1858 இல் சென்னைப்பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரிகள் இருவருமே ஈழத்தமிழர்களாகிய தாமோதரம்பிள்ளையும், விசுவநாதபிள்ளையும் தான். யாழ்ப்பாணத்தவராகிய சேர். சி. வை. தாமோதரம்பிள்ளை தமிழுக்குச் செய்த தொண்டைப் பற்றி அறிந்த பின் பேசவும்.//
ம்ம் அப்புறம்?
தமிழ்நாட்டில் எப்படி பார்ப்பணர்களோ ,அதே போல இலங்கையில் பிள்ளைமார் சமூகத்தினர் மேலாண்மை செலுத்தினார்கள், மற்றவர்களை அடக்கி வைத்தார்கள் என்பதையும் சொல்லி இருக்கலாமே :-))
அதனால் தான் யாழ் பிள்ளைகள் சென்னை வந்து படித்தார்கள்.
சென்னை மாகாண கல்வி பின்ப்புலத்தினை பற்றி கொஞ்ச நாள் முன்னர் தான் வேகநரினு ஒருத்தருக்கு பாடம் எடுத்தேன், இப்போ நீங்க,உங்களுக்கும் சொல்லிக்கொடுப்போம் :-))
#ஆறுமுகநாவலர் திருமுருகாற்று படையைத்தான் முதலில் பதிப்பித்தார்,அதற்கான ஓலைச்சுவடிலாம் தமிழ்நாட்டில் இருந்து தான் வாங்கிட்டு போனார்.
நான் சொல்ல வந்தது என்னவெனில் தமிழ்நாட்டில் அப்போவே எல்லா இலக்கியமும் புழக்கத்தில் தான் இருந்தது, வள்ளலார் எழுதிய அருட்பா எல்லாம் அச்சிலே வந்தது. என்றால் இங்கே அப்போ அச்சு தொழில் மூலம் தமிழ் வளர்க்கப்பட்டே இருந்து என்பதை சொல்ல.
நாவலர் ஒன்றும் புதிதாக வளர்த்து தமிழனுக்கே தமிழைக்காத்து கொடுத்துவிடவில்லை.
எளிதில் கிடைத்த ஓலைச்சுவடியை அச்சில் வார்த்தாலும் அதுவும் சேவை தான்,ஆனால் நீங்க சொல்லிக்கொள்வது என்னவெனில் தமிழை அச்சுக்கொண்டு போய் வளர்த்தார் என்று வேறு கருத்தில் என்பதை நினைவில் கொள்ளவும்.
உ.வே.சா செய்தது தமிழ்நாட்டிலேயே கிடைக்க அரிதான தமிழிலக்கியங்களை கண்டெடுத்து அச்சிட்டது.
நீங்க சந்தடி சாக்கில் அதனை நாவலருக்கு தள்ளிக்கிட்டு போறிங்க.
வியாசர்,
//ஈழத்தமிழர்களைப் பற்றி எதுவுமே தெரியாத அரைவேக்காட்டுடன் நான் எனது நேரத்தை வீணாக்கவில்லை என இப்பவும் நம்புகிறேன்.//
உங்களைப்போன்ற நிறையப்பேரை பார்த்தாச்சு, இப்படித்தான் சரியா புரிஞ்சிக்காம எதையாவது உளறிக்கொட்டிவிட்டு அடுத்தவனுக்கு அறிவில்லைனு சொல்லிக்கிட்டு அலைவாங்க, அதெல்லாம் நான் கணக்கில் எடுப்பதேயில்லை,நான் இப்போ உங்க கூடவும் பொறுமையா பேசறன்னா அதான் ,காரணம்!
// ஈழத்தமிழர்களின் தமிழ் அறிவும்,தமிழ்த்தொண்டும் ஆறுமுகநாவலருடன் தொடங்கவில்லை. சங்க காலத்திலே ஈழத்துப் பூதந்தேவனார் போன்ற ஈழத்துப் புலவர்கள் இருந்தனர். ஈழத்துப் புலவர்களின் பாடல்கள் சங்கத்தமிழ் இலக்கியங்களிலும் உண்டு//
ம்ம் மேல சொல்லுங்க,
1) பூதந்தேவனர்,
2) பேரு யாருனு கண்டுப்பிடிச்சுட்டு வரவும் :-))
நான் சொன்னது இலக்கியம் படிச்சு அதனை வளர்த்தவர்கள், இலக்கியம் படைச்சு வளர்ப்பது வேறு.
இலக்க்கியம் படைச்சு வளர்த்த தமிழகம் பற்றி தெரியாமல் பேசும் உங்களை என்னவென்பது?
ச்சே அவ்வையார், வள்ளுவர் , தொல்காப்பியர்,பிசிறாந்தையார், காக்கைப்பாடினியார், நச்சினினாக்கினியர், பரிமேல் அழகர், கனியன் பூங்குன்றனர்,கபிலர், கம்பர், ஒட்டக்கூத்தர், நக்கீரர், ....
இவங்கலாம் அமெரிக்காவில பொறந்து ஆங்கிலத்த வளர்த்துட்டாங்க ,உதாரணமா சொல்ல தமிழகத்துல பேர கிடைக்கலையே அவ்வ் :-))
#// யாழ்ப்பாணத்து அரசின் காலத்தில் பல தமிழிலக்கியங்கள் யாழ்ப்பாண அரசர்களின் ஆதரவுடன் ஈழத்தமிழ்ப்புலவர்களால் இயற்றப்பட்டன. யாழ்ப்பாண புலவர்களால் தமிழில் இயற்றப்பட்ட, இலக்கியம், வரலாறு, மருத்துவம், சைவசித்தாந்தம் எனப் பலதுறைகளில் எண்ணற்ற தமிழ்நூல்கள், ஒலைச்சுவடிகள் உள்ளன, அவற்றில் பல யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட போது அழிந்தும் போயின. //
யாழ் நூலகம் புகழ் வாய்ந்த ஒன்று என்பதை மறுக்கவில்லை, ஆனால் யாழ் நூலகம் தாண்டி எங்குமே நீங்க சொன்ன நூல்கள் செல்லாமல் போனது ஏன்?
இல்லை நீங்க சொன்னது போல எழுதின நூலுக்கு எல்லாம் பேரே வைக்காம போயிட்டாங்களா?
அங்கே இருந்தது எல்லாமே தமிழக நூல்கள் தானே , மேலும் யாழ் நூலகம் என்ன 100 ஆண்டுக்கு முன்னரா எரிச்சாங்க? என்னமோ சங்க காலத்தில் எரிச்சிட்டா போல ,சொல்றிங்க?
// நல்லூர் தமிழ்ச்சங்கத்திலிருந்த ஈழத்துப் புலவர் அரசகேசரி 500 ஆண்டுகளுக்கு முன்பே ரகுவம்சம் போன்ற சமக்கிருத நூல்களைக் கூடத் தமிழில் மொழியெர்த்தவர,//
பயங்கரமான உண்மையா சொல்லுறிங்களே, இதுக்கு நீங்க தமிழ்நாட்டில் தமிழே தெரியாம எல்லாம் இருந்தாங்கன்னே சொல்லி இருக்கலாம் :-))
இந்த மாதிரி வேலையெல்லாம் தமிழ்நாட்டில் நடக்கவேயில்லையா? தற்ப்பெருமை பேசிக்கவும் அளவேயில்லையா?
---------------
//ஆனால் ஆறுமுகநாவலரின் தமிழ்த்தொண்டுடன், வள்ளலாரின் ஆன்மீகத் தொண்டை ஒப்பிடுவது வெறும் அபத்தம்.//
நீங்க பேசுற அபத்தம் விட ஒன்னும் மோசமா போயிடாது :-))
ஆன்மீகத்தமிழ் என்றால் என்ன என்றே தெரியாமல், ஆன்மீகத்தொண்டுனு சொல்லிக்கிட்டு அலையும் உங்களுக்கு ,மாணிக்கவாசகர், சம்பந்தர்,சுந்தரர்,திருஞானசம்பந்தர் எல்லாம் கூட வெறும் மதத்தொண்டர்களாக தெரிந்தால் ஆச்சரியமில்லை :-))
அப்புறம் ஆறுமுகநாவலர் என்ன வேலை செய்தார்னு நினைச்சு இவ்வ்ளோ நேரமா பேசிட்டு இருந்தீங்க அய்யா அவரும் ஆன்மீகவாதி தான் :-))
அவருக்கு வள்ளலார் அளவுக்கு தமிழ் ஞானம் இயல்பிலேயே வரவில்லை என்பதால் ,அச்சடிக்கிற வேலையை பிரதானமாக எடுத்துக்கொண்டார்.
வள்ளலார் இயற்றிய அனைத்தும் பக்தி தமிழ் இலக்க்கிய வகையில் வரும். அவர் செய்ததை மொட்டையாக்க ஆன்மிகத்தொண்டுனு சொல்லி வைப்பது ,உங்கள் அறியாமையின் வெளிப்பாடே.
வியாசர்,
//ஐரோப்பிய பாதிரிமார்களா? அவர்களின் நோக்கம் உண்மையில் தமிழ்த்தொண்டா? //
உங்களுக்கு தமிழகத்தின் வரலாற்றின் அரிச்சுவடியில் இருந்தே ஆரம்பிக்கனும் போல இருக்கே அவ்வ்.
பாதிரிகள் கிருத்துவம் வளர்த்தாங்க, இல்லைனு சொல்லவில்லை தமிழின் மொழியழகால்,இனிமையால் மயங்கி தமிழும் வளர்த்தார்கல்.
வீரமா முனிவர், ஜி.யு.போப்,கால்டுவெல், சென்னை மாகாண கவர்னர் எல்லிஸ் எல்லாருமே தமிழ் ஆர்வலர்களே.
ஆறுமுக நாவலர் எல்லாம் அச்சு மை வாங்கும் முன்னே தமிழ்நாட்டில் தமிழிலக்கியங்கள் அச்சில் உலாத்திக்கிட்டு தான் இருந்துச்சு.
நீங்க பழைய இலக்கியத்தை ,அதுவும் தமிழ்நாட்டில ஓலைச்சுவடி வாங்கிட்டு போய் அச்சடித்ததை வைத்தே இம்புட்டு கர்வமாக பேசினால், சின்னப்புள்ளத்தனம் என சொல்வதை தவிர வேற வழியேயில்லை.
மயூரம் வேதநாயகம், மனோமனியம் சுந்தரம், வை.மு கோதைநாயகி அம்மாள்,மு.வரதராசன்,(சென்னை பல்கலையின் முதல் தமிழ் முனைவர்),வடுவூர் துரைசாமி அய்யங்கார்,அக்கால துப்பறியும் எழுத்தாளர்,திகம்பர சாமியார் துப்பறியும்னு கதைகள்,என்னைக்கேட்டா தமிழின் முதல் மர்மக்கதை மன்னர் இவர் தான, இப்படி எல்லா வகையிலும்,எல்லா எழுத்தும் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்துக்கொண்டிருந்தது.
என்னால் இன்னும் பலநூறு பேரை சொல்ல முடியும்.
சுமார் 2000 ஆண்டுகாலத்தில் தமிழிலக்கியம் சார்ந்து எத்தனை பேரை இலங்கையின் பூர்வீகமாக காட்ட முடியும்னு இத்தனை அகம்பாவம் உங்களூக்கு?
நான் இலங்கை தமிழர்களின் பங்களிப்பை இல்லை என சொல்லவில்லை,ஆனால் உங்கள் கூற்றில் எப்பொழுதும் தமிழகத்தமிழர்களை காட்டிலும் இலங்கை தமிழர்கள் தமிழை வளர்த்தார்கள் என்ற வெட்டி பந்தா தெரிந்ததால் தான் கொஞ்சம் "தெளிய" வைப்போம் என பேசிக்கிட்டு இருக்கேன்.
வள்ளலார் செய்த சமயப்புரட்சி, சமபந்திபோசனம் கூட ஆறுமுக நாவலரின் வள்ளலார் மீதான கோபத்திற்குக் காரணம்.
ஜோதிஜி,
ஏன் கூகிள் உங்களுக்கு வேலை செய்ய மாட்டேன்னு அடம்பிடிக்குதா?
கி.பி 1835 ஆம் ஆண்டு வரையில் அச்சு கூடம் துவங்கும் லைசென்ஸ் இந்தியருக்கு கொடுக்கப்படவில்லை. அதனால் அப்படி இருக்கலாம்.
ஆனால் பிரிட்டீஷ், டச்சு,பிரச்சு என அச்சுக்கூடம் வச்சு அச்சடித்துக்கிட்டு தான் இருந்தாங்க.
முதல் தமிழ் திருக்குறல் கி.பி.1812 இல் சென்னை மாகாண கவர்னர் எல்லீஸ் பிரபுவால் சொந்த செலவில் அச்சடிக்கப்பட்டது(தமிழ் படிச்சாரம்)
தமிழில் ,தமிழ் ஃபான்டில் அச்சான முதல் சங்க இலக்கியம் என்ற பெருமை திருக்குறளுக்கே சேரும்( தமிழன் அச்சடிச்சானா என கேட்டால் ,வியாசரை கேளுங்கள் ,யாருக்கும் தெரியாமல் யாழ்ப்பாணத்தில் அச்சடித்து இருக்கலாம் )
சங்க இலக்கியம் என்ற வகையில் சொல்கிறேன் அதுக்கு முன்னரே அச்சான தமிழ் நூல்கள் எல்லாம் இருக்கு,தேம்பாவை,சதுரகராதி, ஒப்பிலக்கியம்னு ,இன்னும் நிறைய இருக்கு,அவ்வ் எத்தனை முன்னெச்சரிக்கையா சொல்ல வேண்டி இருக்கு.
வியாசர்,
//நாங்கள் இந்தியா எப்படி ஈழத்தமிழர்களின் அழிவுக்குக் காரணியானது என்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.//
இந்தியா செய்வதற்கு முன்னர் எல்லாமே ஈழத்தமிழர்களே செய்தாயிற்று. உண்மையான வரலாறு தெரியாமல் பேசிக்கொண்டிருங்கள்.
இலங்கையில் கலவரம் ஆகி இந்தியாவுக்கு ஓடி வந்த பின்னரே இந்தியா அரசியல் செய்தது.
//மலையகத்தமிழர்களின் வெளியேற்றத்தில் இந்தியா ஈழத்தமிழர்களின் முதுகில் அல்ல இந்தியத்தமிழர்களின் முதுகில் குத்தி அவர்களை அழித்தது என்பது தான் உண்மை.//
பொய் பேச எல்லாம் வெட்கமே படமாட்டிங்கன்னு நல்லா தெரியுது :-))
மலையகத்தமிழர் விவகாரத்தில் 1931க்கு பின் இலங்கை பொது வாக்களிப்பு சட்டம் ரத்தாக காரணம் என்னனு தெரியுமா? இல்லை நான் வரலாற்றை சொல்லவா? 1931 இல் ஏதுய்யா இந்தியா ? எவன் வந்து இலங்கையில் அரசியல் செய்தான் சொல்ல முடியுமா?
//மலையகத்தமிழர் விவகாரத்தில் 1931க்கு பின் இலங்கை பொது வாக்களிப்பு சட்டம் ரத்தாக காரணம் என்னனு தெரியுமா? இல்லை நான் வரலாற்றை சொல்லவா? 1931 இல் ஏதுய்யா இந்தியா ? எவன் வந்து இலங்கையில் அரசியல் செய்தான் சொல்ல முடியுமா?//
விரும்பினால் நானே அதற்கு விளக்கம் தந்து ஒரு பதிவைப் போடுகிறேன், அதில் தாராளமாக விவாதிப்போம். உங்களுக்கு ஜீ.ஜீ. பொன்னம்பலம் சிங்களவர்களுடன் சேர்ந்து வாக்களித்தது மட்டும் தான் தெரியும் ஆனால் அந்தளவுக்கு வருமளவுக்கு எப்படி ஹிந்தியா இந்தியத்தமிழர்களின் முதுகில் குத்தியது தெரியாது.
"...The credit for editing and publishing many of the works included in the Cankam literature and the Five Great Epics (Civakacintamani, Cilappatikaram, Manimekalai, Valayapati and Kuntalakeci) goes to U. V. Swaminatha Aiyar (1855-1942). In this endeavour it has been rightly observed that Arumuka Navalar LAID THE FOUNDATION, C. W. Thamotherampillai raised the walls and U.V.Swaminatha Aiyar built the superstructure..."
இதை நான் சொல்லவில்லை. ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தவேண்டும் என்ற ஆவலில் சும்மா புலம்புவது போல் தெரிகிறது. சுவாமிநாதையருக்கு முன்பாகவே ஐம்பெருங்காப்பியங்களை தமிழில் அச்சிட அவற்றைப் பாதுகாக்க அத்திவாரமிட்டவர் ஆறுமுகநாவலர், அந்த தொண்டைத் தொடர்ந்தவர் யாழ்ப்பாணத்து தாமோதரம்பிள்ளை என்பதற்கு ஆதாரங்கள் இணையத்திலேயே உண்டு. தேடிப்பாருமையா
வெள்ளைக்காரன் முதலில் தமிழில் அச்சடித்ததைப் பற்றி இங்கு யாரும் பேசவில்லை. :)
வியாசன்,
தமிழ் இலக்கிய அச்சு வரலாற்றினை பேசினால் அதில் வெள்ளையர் செய்ததையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
மேலும் வெள்ளையர் முயற்சித்ததால் தான் அச்சு எந்திரம்,தமிழ் அச்சு எழுத்துக்கள் கிடச்சுது,அதை தமிழர்கள் வாங்கி அச்சடிக்க முடிந்தது.
இப்படி தமிழ்நாட்டில் எண்ணற்ற வேலைகள் நடந்திருக்கும் போது ,தமிழே யாழ்ப்பாணத்தமிழர்களால் தான் வளந்துச்சுனு திரிச்சு போலி கர்வம் கொள்வதை என்னவென்பது.
குட்டிப்பிசாசு,
நீங்க சொல்வது சரி தான்,நாவலர்னு இல்லை எல்லா இந்து சனாதான மதப்பற்றாளர்களுக்கும் வள்ளலார் மேல எரிச்சல் ஆகிடுச்சு.
இன்னும் சொல்லப்போனால் இந்து சனாதான கருத்துக்களையே சீர்திருத்தம் செய்தார்.கண் மூடும் பழக்கம் மண்மூட வேண்டும் என ,கண் மூடித்தியானம் செய்வதையே எதிர்த்தார்.உருவ வழிப்பாட்டை புறக்கணித்தார்,சம போஜனம்,வேதம் ஓதுவதை நிறுத்தினார். இன்னும் நிறைய மாற்றங்கள் கொண்டுவந்தார்.
இங்கே தமிழ்ப்பற்றி பேசுவதால் மற்றதை தவிர்த்தேன்.
வள்ளலாரின் தமிழ் ஆற்றல் பார்த்து நாவலருக்கு கொஞ்சம் பொறாமை,காரணம் வள்ளலார் 4-5 ஆம் வகுப்புக்கு மேல படிக்கலை,ஆனால் இலக்கண சுத்தமா,தளை தட்டாமல், ஆசிரியப்பாவில் சந்தத்தோடு அருட்பா எழுதினார்.
எனவே அருட்பா இறைநூல் இல்லைனு வழக்குப்போட்டுட்டார்.
கோர்ட்டில் வழக்கு நடந்தப்போது, நாவலர் சவால் விட்டதற்கு அங்கேயே ஒரு வெண்பா பாடிக்காட்டினாராம்,அதற்கு பொருள் சொல்ல நாவலரால் முடியவில்லை.அதெல்லாம் பார்த்துட்டு தான் ஜட்ஜ் வள்ளலார்க்கு சாதகமா தீர்ப்பு சொன்னார்.
இந்த கதையெல்லாம் எங்க தமிழாசிரியரே பாடம் எடுக்கும் போதே சொல்லுவார்.
வியாசர்,
வீம்புக்குனு பேசிட்டு இருக்காப்ல தெரியுதே,1931 இல் பிரிட்டீஷ் காலத்தில் நடந்ததை சொன்னாலும் "ஹிந்தியா"னு ஆரம்பிக்கிறிங்க, அப்போ எப்படி ,யாரு மூலமா முதுகுல குத்துனாங்க :-))
இன்று மீண்டும் ஒரு முறை உங்கள் விவாதங்களை படித்துக் கொண்டு வருகின்றேன்.
இந்தியாவின் கழுத்தறுப்பாலும் அதன் விடுதலைப்போராட்டம் உருக்குலைந்து போய்விட்டது
இன்று கோத்தபய இதைத்தான் சொல்லியிருக்கிறார்
இந்த முழுமையாக விவாதத்தை ஒரு முக்கியமான நபருக்கு அனுப்பி விடுகின்றேன்.
Post a Comment