இலங்கையின் தொடக்க கால சரித்திர நிகழ்வுகளை இதுவரையிலும் ஆங்கிலேயர்கள் உள்ளே நுழைந்து அவர்களின் ஆட்சி தொடங்கிய காலம் வரைக்கும் உண்டான நிகழ்வுகளை 11 தொடர்கள் மூலம் பார்த்து உள்ளோம். மீதி உள்ள தொடர்களை ஒரு சிறிய இடைவெளி விட்டுத் தொடர்வோம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
சென்றவாரத்தில் என் மூத்த அக்கா அவர்கள் பள்ளியில் நடந்த ஒரு உரையாடரை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
அவர்கள் பள்ளியில் அவர் தலைமையாசிரியாக இருப்பதால் அந்த பகுதியில் உள்ள ஒரு முக்கியமான தமிழ் ஆசிரியரை வரவழைத்து ஒரு நிகழ்ச்சிக்காக உரையாற்றி வரவழைத்து இருந்தார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பற்றி வந்த ஆசிரியர் உணர்ச்சி பூர்வமாக உரையாற்றி முடித்து விட்டு மாண்வர்களைப் பார்த்து உங்களுக்கு கேள்விகள் ஏதும் கேட்கத் தோன்றினால் தாராளமாக எழுந்து நின்று என்னிடம் கேட்கலாம் என்றாராம். தயங்காமல் ஒரு மாணவன் எழுந்து நின்று கேட்ட கேள்வி இது.
நான் கப்பலோட்டிய தமிழன் பற்றி தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகின்றது? என்னுடைய நிகழ்கால வாழ்க்கையில் எந்த வகையில் இவர் உதவ முடியும்? பழைய வரலாற்றுகளை கேட்பதால் படிப்பதால் என்ன லாபம்? என்று கேட்க வந்த ஆசிரியர் சிரித்துக் கொண்டே மீண்டும் பத்து நிமிடம் அது குறித்து பேசினாராம்.
அவர் சொன்ன இறுதியான உரையின் சுருக்கமான வரிகள் இது.
உன்னுடைய கடந்த காலம் பற்றி யோசித்தால் என் எதிர்காலத்தை திட்டமிட முடியும். உன் நிகழ்காலத்தைப் பற்றி புரிந்தால் தான் உன் கடந்த கால நிகழ்வுகளை எப்படி உள்வாங்கி இருக்கின்றாய் என்பது உனக்கு புரியும்.
இது போலத்தான் நாட்டுக்கும், நாடு சார்ந்த செய்திகளுக்கும்.
மாணவனுக்கு புரிந்ததோ இல்லையோ அக்கா ஆச்சரியமாக சொன்ன விசயம் அந்த ஆயிரம் பேர் கூட்டத்தில் அவன் எழுந்து நின்று தைரியாமாக பேசிய விதம் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது என்றார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் உலகில் வாசிக்க நேரம் இருப்பதில்லை. பெரும்பாலும் லைட்ரீடிங் என்ற ஆங்கில வார்த்தைக்கு பலரும் அங்கீகாரம் கொடுத்து இது தான் இப்போதைக்கு சரி என்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டது.
1992 ஆம் ஆண்டு சமயத்தில் என்னால் புத்தகங்கள் படிக்க முடியாத சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த போது ஏராளமான கேசட் வாங்கிக் கொண்டு வந்து நான் தனியாக இருந்த வீட்டில் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அரசியல், ஆன்மீகம், இலக்கியம் சார்ந்த பலரின் பேச்சுக்களை நள்ளிரவு வரைக்கும் கேட்டுக் கொண்டே தூங்குவதுண்டு. ஒவ்வொருவரின் உண்மையான முகங்களும், நோக்கங்களும், கொள்கைகளும் தெரியத் தெரிய நாம் நேரத்தை வீணடிக்கக்கூடாது என்று அந்த பழக்கமும் போய்விட்டது.
கடந்த ஒரு மாதமாக எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தற்போது பல்வேறு கூட்டங்களில் உரையாற்றும் ஒலிக் கோப்புகளை கேட்டுக் கொண்டே இருக்கின்றேன். பல ஆச்சரியமான தகவல்கள். எளிமையான விசயங்கள் ஆனால் உண்மையான தகவல்கள்.
நீங்கள் ஏதோவொரு வேலையில் இருக்கும் போது திரு. கிருஷ்ணமூர்த்தி உரையை கேட்டுக் கொண்டே பணியாற்ற முடியும்.
வலையேற்றிய சிவாவுக்கு என் நன்றிகள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சிறுபத்திரிக்கைகளுக்குப் பின்னால் உள்ள பெரும் சரித்திரம் பற்றி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி தஞ்சாவூர் பாரதி சங்கத்தில் தமிழறிஞர்களும் வாக்கும் என்ற பொருளில் சி.சு.செல்லப்பாவின் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஆற்றிய உரை....
(இடம்:-சுப்பையா நாயுடு உயர்நிலைப்பள்ளி, தஞ்சை)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
டாலர் நகரம் நூல் வெளியீட்டுவிழாவில் திருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளிக் குழந்தைகள் பாடிய பாடல்களின் மொத்த தொகுப்பு இது. நெருங்கிய நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க.
மொழி, கல்வி, கலாச்சாரம், நமது வாழ்க்கையை பிரதிபலிக்கும் வரிகளும் சவுக்கடிகளும்.
மொழி, கல்வி, கலாச்சாரம், நமது வாழ்க்கையை பிரதிபலிக்கும் வரிகளும் சவுக்கடிகளும்.
8 comments:
கடந்த கால நிகழ்வுகளை அறிந்து கொள்வதிலும், நல்லவற்றை நம் வாழ்வில் தொடருவதும் தவறில்லை... தேவையில்லா ஆய்வு தேவையில்லை... அந்த மாணவன் வருங்காலத்தில் நல்லதொரு தொழில் அதிபராக வர வாய்ப்புண்டு... மாணவனின் தைரியத்திற்கு வாழ்த்துக்கள்...
காணொளிகளுக்கு நன்றி...
ஜோதிஜி,
ஹி...ஹி எனக்கும் ஒரு கிலோ வரலாறு வேண்டும், விலைய சொல்லுங்க :-))
இப்படி எல்லா அறிவும் கிலோ கணக்கில கிடைச்சா கஷ்டப்பட்டு படிக்கவே வேண்டாம் :-))
இப்படிக்கு
ஒரு முன்னாள் மக்கு மாணவன்!
நீங்க தொடாத விசயம் இது போன்ற பழைய எழுத்தாளர்கள் குறித்த விபரங்கள் என்று தான் நினைத்துள்ளேன். இல்ல அதைப் பற்றியும் தெரியுமா? அதெல்லாம் சரி, இரண்டு ஒலித் தொகுப்புகளையும் முழுசா கேட்டீங்களா? உங்கள் கருத்தறிய ஆவல்.
நீங்க கூறியுள்ளதை இதே அர்த்தத்தில் வேறு விதமாக ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என்னிடம் உரையாடிய போது சொன்னார். ஆச்சரியம் தான்.
டாலர் நகரம் எதைப்பற்றி விளக்குகிறது?
http://minulagam.blogspot.com
.தமிழ்நாட்டின் சிறப்புகள்
1. தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்
2. தமிழகத்தின் நுழைவாயில் - தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் - கோயம்புத்தூர்
4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் - கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் - பெரம்பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் - புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் - பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் - திருவாரூர் தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு - மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு - கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு - தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் - தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் - ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் - ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி - காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் - தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு - காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் - சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் - சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி - உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து - திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை - திருவள்ளுவர் சிலை (133 அடி)
26 முதன்முதலில் தமிழர்களுக்கு சாம்பார் வைக்க சொல்லித் தந்த ஊர் ஊத்துக்குளி. கோட்டை.
27.பண்றிகளே இல்லாத ஊர் காரைக்குடி.
28. சாமியார்கள் வெள்ளை உடை மட்டுமே உடுத்துவது திருச்செங்கோட்டில் மட்டுமே. அதனாலே தான் திருச்செங்கோட்டில் தாயாரிக்கப்படும் சிவப்புக் கரை வேஷ்டிகள் விலை கூடுதலாக விற்கப்படுகிறது.
29.காபித்தூளை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவர் பெயர் நரசிம்ம நாயுடு இவர் ஈரோட்டைச் சேர்ந்தவர்.
30. புலம் பெயர்ந்த தமிழர்கள் மூலம் ரெங்கூன் சென்ற சித்த வைத்திய முறையே இன்று பர்மாவில் செய்கோன் மெடிக் எனும் பர்மீய மருத்துவமாக புகழ் பெற்றிருக்கிறது.
நன்றி
ஒவ்வொருவரின் உண்மையான முகங்களும், நோக்கங்களும், கொள்கைகளும் தெரியத் தெரிய நாம் நேரத்தை வீணடிக்கக்கூடாது என்று அந்த பழக்கமும் போய்விட்டது.
நிஜம் தான். அருமையான பதிவு. நன்றி.
Post a Comment