அனபான வாக்காள பெருமக்களே
"நான் என் குடும்ப வாழ்க்கையை ஒழுக்கத்துடன வாழ்ந்து கொண்டிருப்பவன். கட்டிய மனைவிக்கும், பெற்ற குழந்தைகளுக்கும் நல்ல கணவனாக, தகப்பனாக நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருப்பவன். நியாயமான முறையில் தொழில் செய்து அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய வரிகளை முறைப்படி செலுத்தி என் வாழ்க்கையை நேர்மையான முறையில் நடத்திக் கொண்டிருப்பவன்.
என் குடும்பத்திற்குத் தேவையான பொருளாதாரம் தன்னிறைவு பெற்றுள்ளது. எங்கள் தேவைகளும் ஆசைகளும் மிகக் குறைவு. எங்கள் சந்தில் வாழும் மக்களுக்கு இத்தனை நாளும் என்னால் முடிந்த பல நல்ல காரியங்களை செய்து கொண்டிருந்தேன். பழகிய மக்கள் வற்புறுத்தலின் காரணமாக இப்போது இந்த தொகுதிக்கு எந்த கட்சியும் சாராத வேட்பாளராக உங்கள் வாக்குகளை கேட்டு வந்துள்ளேன். உங்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் எதுவும் தரும் எண்ணமில்லை. உங்களுக்கு இலவசங்கள் கொடுத்து உங்களை சோம்பேறியாக்கும் எண்ணம் அறவேயில்லை. கவர்ச்சி அலைக்காக மக்களை திரட்ட வேண்டும் என்பதற்காக தகுதியில்லாத எந்த நபரையும் இப்போது என்னுடன் அழைத்து வரவில்லை. முழுக்க முழுக்க உங்கள் சிந்தனையில் உருவாக வேண்டிய மாற்றங்களையும், அவ்வாறு மாற்றங்கள் உருவானால் நமக்கு கிடைக்கும் லாபங்களையும் விவரிப்பதே என் எண்ணம். உங்கள் சந்தேகம் எதுவாகயிருந்தால் என்னுடன் தயக்கம் இல்லாமல் உரையாடலாம். என் தனிப்பட்ட வாழ்க்கை முதல் இந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் நான் செய்ய நினைத்திருக்கும் அத்தனை செயல்பாடுகளையும் குறித்து நீங்கள் கேள்வி கேட்கலாம்"
குழப்பாக இருக்கிறதா? இது போன்று ஒரு வேட்பாளர் பேசிக் கொண்டு உங்கள் முன்னால் வந்தால் நம் மனதில் என்ன தோன்றும்.
பிழைக்கத் தெரியாதவன்? உலகத்தை புரிந்து கொள்ளாதவன்? உச்சி வெயில் சூட்டில் மூளை குழம்பி விட்டதோ?
இது போன்ற அவசர கேள்விகள் இன்றைய சூழ்நிலையில் நம் மனதில் உருவாவது இயல்பே. மேலைநாடுகள் ஒவ்வொன்றுக்கும் இன்று வரையிலும் இந்தியா என்பது ஒரு அதிசய நாடே..
இன்னும் சொல்லப்போனால் ஆச்சரியமான நாடும் கூட. இத்தனை ஏற்றத்தாழ்வுகள், மொழிகள், மதங்கள், ஜாதிப்பிரிவுகள், குழப்பங்கள், போராட்டங்கள், கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், லஞ்சம், ஊழல் என்று தொடர்ந்து நடந்து கொண்டிருந்த போது எந்த புரட்சியும் நடக்காமல் இன்னமும் ஏன் இந்த மக்கள் இத்தனை சகிப்பாளர்களாக இருக்கிறார்கள் என்று உள்ளுக்குள் தோன்றும்.
பரம ஏழை, ஏழை, அன்றாடம் உழைத்தால் தான் வாழ வேண்டிய வர்க்கம், நடுத்தரவர்க்கம், சற்று வருமானம் உள்ள நடுத்தரவர்க்கம், பணக்காரன், லாப நட்டத்தால் பாதிப்படையாத பணக்காரர்கள், ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் பணம் படைத்தவர்கள் என்று ஏராளமான சமூக முரண்பாடுகள் உள்ள இந்தியாவில் நாட்டின் நிலம் முதல் நடக்கும் ஊழல் வரைக்கும் எல்லாமே பெரிது. ஆயிரம் பேர்கள் ஒரே சமயத்தில் இறந்தால் கூட ஜனத்தொகையின் அடிப்படையில் நமக்கு ஒரு செய்தியாகத் தான் இருந்து தொலைக்கின்றது.
இப்போது நடக்கப்போகும் 2011 தமிழ்நாடு தேர்தல் தற்கால சமூக வாழ்க்கையின் அடிப்படை மனோபாவங்களை பிரதிபலிப்பதாக இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அடுத்து ஐந்து ஆண்டுகள் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் எவ்வாறு ஆட்சி செய்யப் போகிறார்கள் என்பதை கூறும் தேர்தல் அறிக்கை இப்போது சற்று மாறுதலாகி உங்களுக்கு நாங்கள் என்னன் இலவசமாக தரப்போகின்றோம்? என்பதை கூறக்கூடிய அறிக்கையாக மாறியுள்ளது.
இன்று நாம் காணும் இலவசங்கள் மலிந்த தேர்தல் அறிக்கைகள் எரிச்சலை உருவாக்குவதை விட பொது மக்களுக்கு அடிக்கடி தேர்தல் வரக்கூடாதா? என்ற ஏக்கத்தை தான் அதிகபடுத்துகின்றது. காரண்ம நாம் எதிர்பார்ப்பதும் அதுவே தான்.
தற்போது எந்த இடத்தில் எவரைச் சந்தித்தாலும் எந்த கட்சியின் சார்பாக எவர் நிற்கின்றார்கள் என்று கேட்டு முடித்ததும் அவரின் செல்வாக்கு, பணபலம், ஜாதி ரீதியான பலம் போன்றவற்றை அலசத் தொடங்கி விடுகிறார்கள். பேச்சின் முடிவில் எந்தந்த கட்சிகள் தங்கள் பகுதிக்கு வரும் போது என்னென்ன தருவார்கள் என்பதைப் பற்றி ஆருடம் சொல்லத் தொடங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை மனதில் கொண்டு தங்களுக்குள் ஒரு முடிவோடு இருக்கிறார்கள்.
முடிந்தவரையிலும் அத்தனை கட்சியிலும் என்னன்ன வாங்கிக் கொள்ள வாய்ப்புண்டு என்பதை மனதிற்குள் பட்டியலிட்டு வைத்துக் கொண்டு தயாராக இருக்கிறார்கள்.
ஏன் இத்தனை மாற்றங்கள்?
ஏற்கனவே தேர்ந்தெடுத்தவர் தொகுதிக்காக என்ன செய்தார்? தாலியை அடகு வைத்து கெஞ்சிக் கொண்டு வந்து நின்றாரே? இப்போது இவ்வளவு பெரிய சொத்துக்கு அதிபதியாக இருக்கிறாரே? எப்படி சம்பாரித்தார்? இவர் எப்படி சட்டத்தில் மாட்டாமல் இருக்கிறார்? தரங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்தவன் இப்படி வெட்கம் இல்லாமல் வந்து நிற்கின்றானே? இவனைச் சுற்றிலும் எப்போதும் ஒரு வெட்டிக்கும்பல் சுற்றிக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து முதல் காலி செய்வது வரைக்கும் செய்து கொண்டு இருந்தார்களே? ஐயோ, இவர்களை தேர்ந்தெடுந்தால் அடுத்த ஐந்தாண்டும் நமக்கு அதோகதிதான்.
யாராவது இப்படி யோசித்துள்ளார்களா? இல்லை எதிரே வந்து நிற்கும் போது அந்த வேட்பாளரிடம் கேட்கும் தைரியம் தான் வருமா? வராது? ஏன்?
காரணம் பணத்திற்காக எதையும் செய்யலாம் என்ற இயல்பான குணாதிசியம் மெதுமெதுவாக பரவிக் கொண்டிருக்கிறது. பணத்தை மட்டுமே மதிபபீடு செய்யும் சமூக கட்டமைப்பு உருவாகிக் கொண்டிருப்பதால் பணம் வைத்திருப்பவன் பரம யோக்கியனாகவும், இல்லாதவன் எதற்கும் லாயக்கு இல்லாதவனாகவும் ஆகிவிட்டான்
.
ஒரு நடுத்தர வர்க்கம் பார்வையில் இந்தியாவில் வாழ எந்த பிரச்சனையும் இல்லை. எந்த மொழி வேண்டுமானாலும் பேசலாம். இந்தியாவின் எந்த பகுதிக்கு வேண்டுமானலும் சுதந்திரமாக போகலாம். நம் கையில் காசு இருந்தால் எந்த தொழில் வேண்டுமானலும் தொடங்கலாம் உருவாக்கலாம் வளர்க்கலாம். மொத்தத்தில் நாம் விரும்பும்படி வாழலாம். விரைவாக முன்னேற எதை வேண்டுமானாலும் வளைக்கலாம். கணக்கற்ற பணம் இருந்தால் சட்டத்தின் சந்து பொந்துக்களை உடைக்கலாம். ஒட்டலாம்.
பார்க்க தொலைக்காட்சி உண்டு. அழுது தீர்க்க நெடுந்தொடர் உண்டு. யோசிக்காமல் இருக்க நகைச்சுவை காட்சி உண்டு. இதுவும் வேண்டாம் என்றால் திகட்ட திகட்ட திரைப்படக் காட்சிகளை மட்டுமே கண்டு களிக்க 24 மணி நேரமும் ஓடிக் கொண்டிருக்கும் சேனலும் உண்டு. அவன் சரியில்லை என்று இவனும், இவன் கொள்ளைக்காரன் என்று அவனுமாய் லாவணி பாடும் செய்தி தொகுப்புரைகளும் உண்டு. பல சமயத்தில் இது குறித்தே பேசப்படும் பரப்புரைகளும் உண்டு. இது எதுவுமே வேண்டாம் என்றால் நிம்மதியான டாஸ்மார்க் உண்டு.
ஆறுமாதங்களில் இருபது ரூபாய் கூடக் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கும் பெட்ரோல் விலை எதுவும் நினைவுக்கு வராது. அச்சமூட்டும் விலைவாசி உயர்வு அத்தனையும் மறந்து போயாச்சு. அடித்த கொள்ளையின் எண்களை கூட எண்ணத் தெரியாமல் திகைத்த திகைப்பு கூட மாறிவிட்டது.
எல்லாவற்றையும் விட சொக்கலால் பீடிக்கு லாட்டரி அடித்தவன் சொகுசாய் காரில் வலம் வருவதைப் பற்றி யோசிக்க கூட நினைப்பு வரவில்லை. காரணம் இலவசத்தை எதிர்பார்த்து எதார்த்த வாழ்க்கையை விட்டு விட்டு எவன் வருவான்? எதைத் தருவான் என்று யோசிப்பு மட்டுமே இந்த தேர்தல் சமயத்தில் ஒவ்வொரு வாக்காளர்கள் மனதிலும் ஓடிக்கொண்டிருப்பதால். வீடு தேடி வந்து தருபவனை கெடுப்பவர்களை அடிக்க ஓங்கும் கைகள் என்றுமே ஒன்று சேராது. காரணம் அவ்வாறு சேரக்கூடாது என்பதற்காகவே போட்டி போட்டுக் கொண்டு ஆற்றில் ஓடும் நீரை அம்மா நீ கொஞ்சம் குடி. அய்யா நீ கொஞ்சம் குடி என்று மாற்றி மாற்றி பழக்கப்படுத்தியாகி விட்டது.
நமக்கு வேறென்ன வேண்டும் ?
எது தான் இங்கு இல்லை? எல்லாமே உண்டு. மொத்தத்தில் எந்த சூழ்நிலையிலும் எது குறித்தும் ஆழ்ந்து யோசிக்காமல் இருக்க, தன்னிலை மறந்து வாழ கற்றுக் கொண்டால் இந்த நாடு தகுதியான நாடு தான்.
யோசித்தால் தான் மண்டையிடி. ஆழ் மனதில் உருவாகியுள்ள அழுக்குகளை சுரண்டிப் பார்க்க விருப்பமில்லாமல் வாழும் ஒவ்வொரு தனிமனிதர்களைப் போலவே இது தான் சரி என்று வழிநடத்தும் தலைவர்களும் நமக்கு அமைந்திருப்பதால் நம் ஜனநாயகத்திற்கு என்றுமே அழிவில்லை.
காரணம் நம் ஆசைகள் அதிகம். அதற்கான உழைப்புகள் என்பது மிகக் குறைவு.
நாம் அளவுக்கு அதிகமாக ஆசைப்படக்கூடாது. தகுதியானவர்கள் நமக்கு தலைவர்களாக வர வேண்டும் என்று?
39 comments:
நானும் ரொம்ப ஆசைப்பட்டுட்டேன்! நீண்ட பின்னூட்டமாகிப் போக அப்படியே டெம்ப்லேட்டிலேயே அடிக்கப் போக பிரசுரித்துவிட்டு பார்த்தால் பின்னூட்டத்தை காணவில்லை :(
இருங்க மண்டையை சுரண்டி மீண்டும் அடிக்கிறேன்...
நான் கொஞ்சமாய்த்தான் ஆசைப்படுவேன். அதனால் சின்னதாக .... நல்லாருக்கு ஜி!
தகுதியானவர்கள் நமக்கு தலைவர்களாக வர வேண்டும் என்று?//
கேள்வியின் முடிவிலிருந்தே பதிலுக்கான விடையை வளைத்துப் பார்த்தால் வரிகளுக்கு மேலாகவே பதில் - ஆசை!
இந்த ஆசை என்ற சரும நோய் நமது சமூகத்தில் ஒரு தேசிய நோயாக ஆழ வேரூன்றி வருகிறது. இது சென்றடையும் கடைசி இடம் அங்கமிழந்து இனிமேல் இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என்ற முண்டக் கட்டி நிலைதான்.
தனது நிலத்திற்கு வரப்பு எடுக்கும் பொழுது அண்டைய வீட்டுக்காரனின் நிலத்தையும் கொஞ்சனுண்டு வளைத்து, நெளித்து எடுத்துக் கொள்ளும் போக்கத்தவனின் மன நிலையில் இருக்கும் ஒருவனிடம் பொது சொத்தை வைத்து நிர்வகிக்கும் பொறுப்பை கொடுத்தால் என்னாவாகும்?
கட்டுரையில் கேக்கப் பட்டிருக்கும் பல கேள்விகளில் ஏதாவது ஒன்றை கேட்டுக் கொண்டாலும் நீளும் கை கீழே விழுந்து விடும். ஒரு நாள் கூத்திற்கு இந்த பணத்தையோ அல்லது ஆறு மாதத்தில் உடையக் கூடிய ஒரு பொருளுக்கோ ஆசைப்பட்டு கொல்லை அடிப்பதற்கு பச்சைக் கொடி காட்டுகிறோமே, அதற்கு பதிலாக முறையாக மக்களுக்கு நிரந்தமரமாக வேலை வாய்ப்புகளையும், சுகாதாரம் பேணுவதற்கான சூழல்களையும் உருவாக்கி கொடுத்தால் என்ன என்று ஏன் கேட்டுக் கொள்வதில்லை...
இந்த கட்டுரை எனக்கு பல விசயங்களை பேசுவதற்கான வாய்ப்பை கொடுத்து நிற்கிறது...
//எங்கள் தேவைகளும் ஆசைகளும் மிகக் குறைவு.//
ஒவ்வொரு தனிமனித பக்குவத்திலும் இந்த நிலையை எட்டி விட்டால், வீனான போட்டி, பொறாமை எல்லாவற்றிற்கும் மேலாக நியாயமற்ற ஆசை பிசாசு பிடித்து ஆட்டி வைக்காது.
அடுத்தவனை பார்த்து அவனது வாழ்வு முறையினை பார்த்து ஆசை படுவதற்கு முன்பு தன்னுள்ளயே முதலில் தனக்கான ஒப்பீடுகளை நிகழ்த்தி கொள்வது, இது போன்ற பொறாமை, ஆசை போன்ற புற்று நோயால் தாக்கப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். இதுவே, அடித்தளம் ஊரான் காசை தட்டி உலையில் போடுவதற்கான ஊழல், லஞ்சம், வழிப்பறி, நில அபகரிப்பு, கொலை போன்றவற்றை நிகழ்த்தி புளுத்து மரணிப்பதிலிருந்து குறைந்த பட்சம் தன் உள்ளுணர்வு வாழும் பொழுதே சுபிட்சமாக வாழ்வதற்கான அடிப்படையை அமைத்துக் கொடுக்கும்.
அவா துன்பத்தை தரும் என்றார் புத்தர் - இது நாட்டு தலைவனை தேர்ந்தெடுப்பதிலும் தான் .. ரொம்ப நல்லவனாக காட்சியளிப்பவனையும் - ரொம்ப கெட்டவனாய் காட்சியளிப்பவனையும் தலைவன் ஆக்கக் கூடாது ... அப்போ யாரைத் தான் தலைவன் ஆக்குவது ... புரியவில்லை ..
//இது எதுவுமே வேண்டாம் என்றால் நிம்மதியான டாஸ்மார்க் உண்டு.//
அது டாஸ்மாக் :D (TASMAC).
'மாற்றம்' என்பது கூட சந்தைப் படுத்தப்பட்டுவிட்டது பார்த்தீர்களா :). IKEA விளம்பரப் படத்த சொன்னேன்.
//இன்னும் சொல்லப்போனால் ஆச்சரியமான நாடும் கூட. இத்தனை ஏற்றத்தாழ்வுகள், மொழிகள், மதங்கள், ஜாதிப்பிரிவுகள், குழப்பங்கள், போராட்டங்கள், கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், லஞ்சம், ஊழல் என்று தொடர்ந்து நடந்து கொண்டிருந்த போது எந்த புரட்சியும் நடக்காமல் இன்னமும் ஏன் இந்த மக்கள் இத்தனை சகிப்பாளர்களாக இருக்கிறார்கள் என்று உள்ளுக்குள் தோன்றும். //
பூமி பல அடுக்குகளால் ஆன அசைந்து கொண்டேயிருக்கும் தளமாம்.அதனால்தான் சில அடுக்குகள் மோதிக்கொள்ளும் போது கற்பனைக்கும் எட்டாத சுனாமியின் வருகை.
இந்தியாவும் அதே மாதிரிதான்.மிதந்து கொண்டிருக்கிறோம்.
//இன்று நாம் காணும் இலவசங்கள் மலிந்த தேர்தல் அறிக்கைகள் எரிச்சலை உருவாக்குவதை விட பொது மக்களுக்கு அடிக்கடி தேர்தல் வரக்கூடாதா? என்ற ஏக்கத்தை தான் அதிகபடுத்துகின்றது. //
அந்தளவுக்கு வளர்ந்தாச்சா:)
//எது தான் இங்கு இல்லை? எல்லாமே உண்டு. மொத்தத்தில் எந்த சூழ்நிலையிலும் எது குறித்தும் ஆழ்ந்து யோசிக்காமல் இருக்க, தன்னிலை மறந்து வாழ கற்றுக் கொண்டால் இந்த நாடு தகுதியான நாடு தான்.
யோசித்தால் தான் மண்டையிடி.//
பதிவுலகம் பக்கமே எட்டிப்பார்க்காம இருந்தாலே சொர்க்கம்தான் இந்தியா:)
//காரணம் நம் ஆசைகள் அதிகம். அதற்கான உழைப்புகள் என்பது மிகக் குறைவு.//
இதில் மட்டும் மாறுபடுகிறேன்.நமது ஆசைகள் குறைவு.இயல்பாகவே நாம் உழைப்பாளிகள்.இருந்தாலும் சோம்பலுக்கான அத்தனை சுற்றுச்சூழலும் உருவாகியிருக்கின்றன.
//நம் ஆசைகள் அதிகம். அதற்கான உழைப்புகள் என்பது மிகக் குறைவு.//
நன்று ஜோதிஜி.
நல்ல பதிவு.
மக்கள் நன்கு யோசிக்க வேண்டும்.
நன்றி.
வருங்கால எம் எல் எ ஜோதிஜி வாழ்க..
வருங்கால மண்புமிகு அமைச்சர் ஜோதிஜி வாழ்க..
வருங்கால மண்புமிகு முதல் அமைச்சர் ஜோதிஜி வாழ்க..
வருங்கால மண்புமிகு பிரதமர் ஜோதிஜி வாழ்க..
வருங்கால ஜனாதிபதி ஜோதிஜி வாழ்க..
நல்லா கூவுனனா?....எலக்சன் டைமு...பார்த்து கொஞ்சம் மேல போட்டுகுடு தல..
பணத்தை மட்டுமே மதிபபீடு செய்யும் சமூக கட்டமைப்பு உருவாகிக் கொண்டிருப்பதால் பணம் வைத்திருப்பவன் பரம யோக்கியனாகவும், இல்லாதவன் எதற்கும் லாயக்கு இல்லாதவனாகவும் ஆகிவிட்டான்//
எல்லா இடத்திலேயும்.. அதான் மனிதன் பணத்துக்காக எதையும் செய்ய துணிகிறான்.. தலைமை எப்ப்டி அப்படி மக்கள்..:(
//எது தான் இங்கு இல்லை? எல்லாமே உண்டு. மொத்தத்தில் எந்த சூழ்நிலையிலும் எது குறித்தும் ஆழ்ந்து யோசிக்காமல் இருக்க, தன்னிலை மறந்து வாழ கற்றுக் கொண்டால் இந்த நாடு தகுதியான நாடு தான். //
'இங்கெல்லாம் இப்படித்தாங்க'ன்னு இருக்கணுமாம். என் அண்ணியின் பொன் மொழி.
ஆமாம்..... ஒவ்வொரு கட்சியும் தேர்தல் அறிக்கை என்ற பெயரில் லஞ்சம் தரப்போகும் பொருட்களை அறிவிக்கிறாங்களே.... இதையெல்லாம் தேர்தல் கமிஷன் கண்டுக்காதா?
மேலைநாடுகள் ஒவ்வொன்றுக்கும் இன்று வரையிலும் இந்தியா என்பது ஒரு அதிசய நாடே../
இத்தனை இருக்கும் இயற்கை வளங்களையும் போக்கடித்துவிட்டு, பாலைவனங்களெல்லாம் சோலைவனங்களாகும் விஞ்ஞான முன்னேற்றகாலத்தில், அரசியலால் கற்காலத்தை நோக்கி முன்னேறும் நம் நாடு ஆச்சரியப்படுத்தும் நாடுதான்.
நாம் ஜோதிஜி தலைமையில் புதிய கட்சி ஒன்றை துவங்கினால் என்ன!!!
கே.ஆர்.பி.செந்தில் said...
நாம் ஜோதிஜி தலைமையில் புதிய கட்சி ஒன்றை துவங்கினால் என்ன!!!
ரிப்பீட்டு
@துளசி கோபால்
//..ஆமாம்..... ஒவ்வொரு கட்சியும் தேர்தல் அறிக்கை என்ற பெயரில் லஞ்சம் தரப்போகும் பொருட்களை அறிவிக்கிறாங்களே.... இதையெல்லாம் தேர்தல் கமிஷன் கண்டுக்காதா?..//
வாக்குக்கு பணம், பொருள் தருவது தான் சட்ட விரோதம். தேர்தலுக்கு பின் தருவோம் வாக்குறுதி சட்டவிரோதம் அல்ல.
அது வெறும் வாக்குறுதி தான் பொருள் அல்ல.
@ கே.ஆர்.பி.செந்தில் said...
நாம் ஜோதிஜி தலைமையில் புதிய கட்சி ஒன்றை வங்கினால் என்ன!!!
@சி.பி.செந்தில்குமார் said...
நாந்தான் முதல்ல கூவுனேன்... அதனால என்ன முதல்ல கவனிங்க..தல
நல்ல பதிவு.
விவேகானந்தர் என்னிடம் 100 இளைஞர்களை கொடுங்கள்! வருங்காலத்தில் வளமான வலிமையான் இந்தியாவை உருவாக்கிக் காட்டுகிறேன் என்றார்! அப்போது இந்த அளவிலே சமூக சீர்கேடுகள் இல்லை, சமூகத்தை சீர்கெடச் செய்ய, மனசாட்சிக்கு, கடவுளுக்கு, மானம், மரியாதை போய்விடும் தெருவில் நடமாட முடியாது! என பயந்தார்கள்! ,
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் விளையும் என பயந்தார்கள்!
இப்போ மக்களிடம் நேர்மையில்லை, நீதிக்கு பயப்படும், மனசாட்சிக்கு பயப்படும், கடவுளுக்கு பயப்படும் மனநிலையில்லை. எப்படியாவது ஒரே நாளில் பணக்காரனாகிவிடவேண்டும் அது எந்த வழியில் பணம் வந்தாலும் பரவாயில்லை என்ற மன நிலையே வேரூன்றி விட்டதால் சமூக சீர்கேடுகள் பெருகிவிட்டன.
இவற்றையெல்லாம் சீராக்க, மக்களை நன்னெறிப்படுத்த விவேகானந்தர் இப்போதிருந்தால், வளமான வலிமையான இந்தியாவை உருவாக்கிக் காட்ட பத்துலட்சம் பேரை கேட்டிருப்பார்!
for more pl visit..,http://saigokulakrishna.blogspot.com/2011/03/blog-post_21.html
எண்ணங்கள் கருத்தை வழிமொழிகிறேன் அன்பின் ஜோதிஜி்.
ஏற்றுமதியாளர், எழுத்தாளர் , அரசியல்வாதி அன்பின் ஜோதிஜி வருக..வருக..வரவேற்க தோன்றினாலும் அரசியல் சாரா அமைப்பில் இருந்து முடிந்தவரை உங்கள் சிந்தனையை செயல் குழந்தைகளாக உருவாக்கம் செய்தாலே மிகுந்த மகிழ்வெய்துவேன் அன்பின் ஜோதிஜி.
ஆரோக்கிய அரசியல் நினைக்கவே பிரம்மிப்பாய் இருக்க அதனையெல்லாம் கடந்து நெடியதூரம் வந்துவிட்ட களைப்பு.
பணம்....பணம்...பணம்....நிற்கவே ஓடவேண்டிய சூழலில் செத்துப்போன நற்சிந்தனைகள் ஆயிரம்..ஆயிரம்.
எத்தனை சதவீதம் ஓட்டு போடுகிறார்கள்? (வரிசையில் காத்திருந்து)
ஏன் 60 - 70%. அதிலும் உண்மையான பதிவு?
40 வருட அரசியல் அனுபவத்துக்கு ஓட்டுப்போடும் வர்க்கத்தை இலவசங்களினால் வாங்கத்தெரியும்.
மத்திய அரசில் எந்த அணி வந்தாலும் அமைச்சர் பதவிகள் வாங்கத்தெரியும்.
தற்போதைய ஆட்சியில் தமிழ் நாட்டின் கடன் 50000 கோடிகள் ஏறியுள்ளது.
சட்டசபையில் கேள்வி: நீங்கள் கொடுத்த இலவசங்களினால் கடன் ஏறியதா?
பதில்: அது வேற பணத்தில் (வருமானத்தில்) கொடுத்தோம். இந்தக் கடன், கட்டமைப்பு பணிகளுக்காக வாங்கப்பட்டது.
யாருக்குப் புரிகிறது?
கடந்த தேர்தலில் அம்மாவும் கேப்டனும் திட்டிக்கொண்டது எல்லோருக்கும் மறந்துவிடுகிறது.
அரசியலுக்கு வருபவர்களின் நோக்கம் ஒன்றே.
நீங்கள் (பின்னூட்டங்களையும் சேர்த்து) எல்லாம் ஆய்த எழுத்து சமீபத்தில் பார்த்தீர்கள்போல.
இந்தப் பதிவுகள் ஓட்டுப் போடும் வர்க்கத்தினருக்கு சென்றடையாது.
தினத்தந்தியில் வந்தாலே சென்றடையாது.
இன்னும் மூன்று வாரங்கள் எழுதுவீர்களா? அப்புறம் திருப்பூர், இலங்கை, காந்தி....
(கொஞ்சம் ஓவரோ? சாரி!)
//காரணம் பணத்திற்காக எதையும் செய்யலாம் என்ற இயல்பான குணாதிசியம் மெதுமெதுவாக பரவிக் கொண்டிருக்கிறது. பணத்தை மட்டுமே மதிபபீடு செய்யும் சமூக கட்டமைப்பு உருவாகிக் கொண்டிருப்பதால் //
உண்மை உண்மை.. நாம் நுகர்வுக் கலாச்சார அடிமைகள்..
ஜோதிஜி.. நீங்க ஏன் தேர்தல்ல நிற்கப்படாது?
(இதை டைப்படித்துவிட்டு கீழே வந்தால் ஏற்கனவே தொண்டர்கள் சேர்ந்துட்டாங்க போலயே.. :) )
ஓடிடறேன்..
ஜோதிஜி... எல்போர்ட் மகளிர் அணி செயலர் பதவி கொடுத்துருங்க...
change begins at home----
வீடு நலமெனில் நாடு நலமே .....நல்ல பதிவு
என் சந்தேகமும் இது போன்றே ...
http://buildappu.blogspot.com/2011/03/3.html
அண்ணே வினோத்து.. கூலி கொடுத்து தின்னச் சொன்னாலும் எனக்கு இந்தக் கரும்பு வேண்டாம்.. :)
ஏன் இப்டிலாம் யோசிக்க ஆரம்பிச்சீடீங்க நண்பா??
:( :(
இப்டி யோசிச்சா நம்மள பொழைக்க தெரியாதவன்னு ஊர் சொல்லும் ..!
:( :(
மாற்றத்திற்கான சிறு விதயாவது இந்த தேர்தல் முடிவுகள் கான்பித்ததென்றால்
மனதை தேற்றலாம்..!
பார்ப்போம்.
2 நாட்களுக்கு முன்னால் மறுமொழி எழுதியிருந்தால் சற்று நெடிய வரிகளாக வந்திருக்கும் என நினைக்கிறேன். அய்யா இலவச வாக்குறுதிகளைத் தொடர்ந்து, இன்று அம்மா வாக்குறுதிகளையும் பார்த்தபின் அய்யா ஜோதி போகாத ஊருக்கு ஏனப்பா வழி சொல்கிறாய் என பலர் கேட்பார்களோ என அய்யமாக இருக்கிறது. கனவு காணுங்கள் பின்னர் நடக்கலாம் என்பது போல் உங்கள் கட்டுரையில் கனவாக தெரிவது விரைவில் நனவாகட்டும்
என்னது ஜோதிஜி வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறாரா?
நல்ல பகிர்வு என்று சொல்லத்தான் நினைத்தேன். ஆனால் கட்டுரை முழுக்க ஓர் இந்தியனின் வருத்தம் தோய்த்து எடுக்கப்பட்டிருப்பதால் தவிர்க்கிறேன். ராஜ நட சொன்னது போல் பதிவுலகப் பக்கம், செய்திதளப்பக்கம் போகாமல் இருந்தால் இந்தியாவும், இலங்கையும் ஜனநாயக நாடுகள் தான்.
கவலைப்படாதீர்கள் இங்கேயும் (கனடா )ஆட்சி கவிழ நிமிடங்களை எண்ணிக்கொண்டே, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே தான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். அரசியல் குட்டை எங்குமே ஒரே மாதிரி தான் ஜோதிஜி.
இங்கே அடுத்தவனை ஏறி மிதித்தாவது முன்னேறிக்கொண்டே இருக்கப் பழகியாகிவிட்டது.
nice post..keep posting
ஜோதிஜி
மனிதனால் ஆழமாக யோசிக்காமல் இருக்க முடியுமா? அதற்கான வலிமுறைகள் என்ன ஜோதிஜி ?
Post a Comment