Sunday, January 02, 2011

தமிழ்மணம் 100 பதிவுகள் - படுத்துக்கொண்டே ஜெயித்தவர்

தமிழ்மணம் 2010 முன்னணி வலைபதிவுகள் பட்டியலைப் பார்த்து விட்டீர்களா? நான் சற்று தாமதமாகத்தான் பார்த்தேன்.  பட்டியலைப் பார்த்துக் கொண்டே வந்த போது என்னுடைய தளமும் இருந்தது.  தமிழ்மண நிர்வாகக்குழுவின் பார்வையில் தேவியர் இல்லம் திருப்பூர் 49 என்ற இடத்தில் இருந்தது. தமிழ்மண தொழில்நுட்ப குழுவினர் உழைத்த உழைப்பிற்கு மரியாதை செய்யும் பொருட்டு இந்த அடையாளச் சின்னத்தை என்னுடைய இடுகையில் தலையில் மாட்டி வைத்துள்ளேன். இதே சமயத்தில் ப்ரியமுடன் வசந்த அனுப்பிய இந்த முகப்பு படத்தையும் சேர்த்துள்ளேன். 

தமிழ்மணம் கொடுத்துள்ள இந்த 49ல் எந்த மகிழ்ச்சியும் இல்லை என்பதோடு வருத்தமும் இல்லை.  முன்னணி வலைபதிவுகள் என்பதற்கும் சிறந்த இடுகைகள் எனற வார்த்தைக்கும் உண்டான இடைவெளி மிகப் பெரிதானது.  இது போன்ற சமயங்களில் அது குறித்து எவரும் பெரிதாக யோசித்து மண்டையை உடைத்துக் கொள்ள விரும்புவதில்லை.  இது குறித்து பலரும் என்னிடம் பேசினார்கள்.  சிலர் தங்கள் வருத்தங்களை மின் அஞ்சல் வாயிலாக பகிர்ந்து கொண்டார்கள்.  

மொத்தத்தில் தமிழ்மணம் என்ற திரட்டியின் மூலம் உள்நுழைந்வர்களின் கணக்கீடு.  அவ்வளவுதான்.  

இந்த பட்டியலில் வராதவர்கள் மன உளைச்சல் அடைய வேண்டிய அவஸ்யமில்லை.  என்னைப் போன்றவர்கள் தமிழ்மணம் மற்றும் தமிழிஷ் என்ற இரண்டு தளத்தில் மட்டும் இணைத்துவிட்டு அக்கடா என்று நகர்ந்து போய் விடுவதுண்டு.  விந்தைமனிதன் சொன்னதுக்குப் பிறகு கதவையும் திறந்து வைத்தாகி விட்டது. 

எத்தனை பேர்கள் படிக்கிறார்கள் என்பதை விட எப்படி புரிந்து கொண்டார்கள் என்பதே எனக்கு முக்கியமாக படுகின்றது. கடைக்குட்டி பிறந்த நாளுக்கு வீட்டில் தொடர்ச்சியாக தங்கிய மூத்த பத்திரிக்கையாளர் முத்து முருகேசன் அழுவாச்சி காவியம் கதாநாயகன் என்ற தலைப்பை படித்துவிட்டு சற்று உணர்ச்சி வசப்பட்டு என்னை பாராட்டியதே இந்த ஆண்டின் சிறந்த விருதாக எடுத்துக் கொண்டேன்.

ஒவ்வொரு மனிதனுமே தனித்தனி தீவு போன்றவர்கள்.  அவர்களின் எண்ணங்கள் நோக்கங்களை எவராலும் முழுமையாக மாற்றி விடமுடியாது. ஒவ்வொருவரின் வளர்ப்பும், வாழ்ந்த சூழ்நிலையும், அவர்கள் தங்களுடைய குடும்பத்தில் பெற்ற தாக்கங்கள் என்று பலவிதங்களிலும் அவர்களின் எண்ணங்களை தீர்மானிக்கிறது.  சிலசமயம் அவரவர் சொந்த வாழ்க்கை அனுபவங்கள் மாற்றிவிடும். சிலருக்கு தாங்கள் படித்த வாசிப்பு அனுபவம் மாற்ற உதவும். சிலர் மட்டும் இதில் விதிவிலக்கு.  பந்தயம் கட்டுகிறாயா? எங்கே என்னை திருத்திப்பார்? என்று சொல்பவர்கள் பற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. 

வலையுலகத்தில் அவ்வவ்போது நடந்து கொண்டுருக்கும் பிஸ்கோத்து பிரச்சனைகளை நீங்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டு வந்தாலே உங்களால் புரிந்து கொள்ளமுடியும்.  உசுப்பேத்துபவர்கள் எப்போதும் போல அடுத்தவர்களை நோக்கி நகர்ந்துவிடுகிறார்கள்.  ஆனால் மாட்டிக் கொண்டவர்கள் மட்டும் பரிதாபமாக நிற்கிறார்கள். கூகுள் பஸ்ஸில் நடக்கும் இணைய அரட்டைகளை கவனித்துப் பாருங்கள்.  எங்கே செல்லும் இந்த பாதை என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும்?

தமிழ்வெளி நிறுவனர் நண்பர் புருஷோத்தமன் (குழலி) உரையாடிய போது சொன்ன விசயங்கள் இப்போது நினைவுக்கு வருகிறது.  

" இது தான் சரியான எழுத்து என்று எவரால் அறுதியிட்டு கூறமுடியும்?  ஒரு குறிப்பிட்ட விசயங்களில் மாற்றுக் கருத்து இருப்பவர்கள் வந்து படிக்கும் போது எழுதியவர்களின் நோக்கத்தைப் பார்த்து தன்னுடைய இருட்டு சிந்தனைகளை மாற்ற உதவுவதே சிறந்த எழுத்து.,

இதற்கு ஏன் ஓட்டு?   என்றார். 

உண்மைத்தமிழனுக்கு விளையாட்டுத்தனமாக செய்த மைனஸ் ஓட்டு என்பதை பார்க்கும் போது எழுதுவதை விட இது போன்ற விசயங்களில் தான் பலருக்கும் அக்கறை இருக்கிறது. அதிலும் குறிப்பிட்ட இணைப்பை சொடுக்கும் போது அது சரியாக மைனஸ் ஓட்டுக்கு அழைத்துச் சென்று நம்மை அறியாமல் அந்த பாவத்தை செய்ய வேண்டியதாக உள்ளது. கரம் சிரம் பார்த்துக் கொள்ளுங்கள்.   இது போக ஒவ்வொருவரும் யார் யாருக்கும் ஓட்டுப் போடுகிறார்கள் என்ற மற்றொரு ஆராய்ச்சிக் கூட்டம் அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டுருக்கிறார்கள்.  

நாம் வெகுஜன அரசியலில் பங்கெடுக்க, குறைந்தபட்சம் தேர்தல் சமயத்தில் ஓட்டுப் போட விரும்புவதில்லை. ஆனால் அரசியலை வெட்டியாய் விமர்சிக்க, நீ எப்படி என் தலைவரை விமர்சிப்பாய் என்று வம்பு செய்ய தயாராய் இருப்போம்.

மெத்தப் படித்தவர்களுக்கு எல்லாமே விளையாட்டு.  புரியாதவர்களுக்கு??

ஆனால் தமிழ்மணம் சொல்லியுள்ள முதல் 100 பதிவுகளில் நீங்கள் விரும்பியவர் வரவில்லையென்றால் ஒன்று உங்களுக்கு இந்த வலையுலக அரசியல் புரியவில்லை என்று அர்த்தம்.  அல்லது எழுதியவருக்கு இந்த அரசியலை வென்றெடுக்கும் திறமை இல்லை என்று அர்த்தம். 

கோவி கண்ணன் சொன்னது போல எழுதுவது எத்தனை முக்கியமோ அதனை கொண்டு சேர்ப்பது அதனை விட முக்கியம்.  இது தமிழ்மணம் நிர்வாகத்தின் மேல் உள்ள தவறு அல்ல.  இது நம்முடைய ஒவ்வொருவருடைய தவறுமே ஆகும். தொடக்கத்தில் தமிழ்மணத்தில் விளம்பரங்கள் ஏதுமில்லை. உள்நுழைய பயனர் என்று கொடுக்க வேண்டிய அவஸ்யமில்லாமல் தான் வைத்திருந்தார்கள்.  ஆனால் பரிந்துரை, மணிமகுடம் எல்லாவற்றிலும் நம் மக்களின் மஞ்சுவிரட்டு நடக்க, உங்களுக்கு மட்டும் தான் அரசியல் தெரியுமா? எங்கள் அரசியலைப் பாருங்க என்று முதல் 20 தளங்கள் என்று ஆரம்பித்தார்கள். அது இன்று ரேங்கிங், நூறு தளங்கள் என்று கொடியை நாட்டிவிட்டு ஒவ்வொருவரும் அடிச்சுக்கிட்டு நிற்பதை அமைதியாக வேடிக்கை பார்க்கும் மனோநிலைக்கு வந்திருப்பார்கள் போல.

சூடான இடுகை, பரிந்துரை, மணி மகுடம் போன்றவற்றில் வரும் ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் அவரவரின் தனிப்பட்ட உழைப்புகள் தான் பின்னால் இருக்கிறது.  சென்ஷி மூலம் அறிமுகமான செல்வநாயகி எழுதியிருந்த கவிதை ஒன்று எனக்கு நாலைந்து நாட்கள் மனதை உலுக்கிக் கொண்டேயிருந்தது.  ஏன் தமிழ்மணத்தில் உள்ள செல்வராஜ், சசி இடுகைகள் கூட இதில் வரவில்லை. அடுத்த ஆச்சரியம் துளசி கோபால் பெற்ற இடம் 62.  நம்ம சுப்பையா வாத்தியார் பெற்ற இடம் 57.???? சூறாவளியை உருவாக்கிய சவுக்கு பெற்ற இடம் 75.

பதிவு போட்ட சிறிது நேரத்தில் பின்னோட்டங்கள் வந்து குவியும் ஹேமா இடுகையும் இதில் காணவில்லை.  எனக்கே 49 என்றால் துளசி கோபால் எத்தனை வருடமாக எழுதிக் கொண்டுருக்கிறார். எதன் அடிப்படையில் இந்த 49 தகுதி வந்துள்ளதை புரிந்து கொள்ளுங்க.

இதுவொரு கிலுகிலுப்பை அல்லது கிச்சுகிச்சு.  

நண்பர் சாய்தாசன் கூற்றுப்படி ஒரே மாதத்தில் அலெக்ஸா ரேங்கில் பல மடங்கு முன்னால் வந்த சுடுதண்ணியைக் கூட இங்கு காணவில்லை.  

என்னமோ போங்க?  ஒன்னும் புரியமாட்டுது. 

ஆக மொத்தம் நெகிழ்ந்து போன்வர் சொன்ன வாசகம் தான் மொத்தத்தில் சிறப்பானது.

"அண்ணே என் தகுதி எனக்குத் தெரியும்.  நன்றாக உணர்ந்து உருப்படியாக எழுதிக் கொண்டுருப்பவர்களின் கணக்கும் தெரியும்.  இதற்குப் பின்னால் உள்ள அரசியலை நான் புரிந்து கொண்டவன் என்ற முறையில், இந்த அரசியலில் நான் வென்றுவிட்டேன் என்கிற ரீதியில் எனக்கு மகிழ்ச்சி தான்" என்றார்.

ஆனால் இதில் நான் ஆச்சரியப்பட்ட ஒரே விசயம் ஒன்று உண்டு. பாலமுருகன் என்று சொன்னால் உங்களுக்குத் தெரியாது. என்னமோ தான் போய் ஹாலிவுட் படத்தை எடுத்துக் கொண்டுருப்பதை போல தன் பெயருக்கு முன்னால் ஹாலிவுட் என்ற பெயரை வைத்துக் கொண்ட பாலாவை உங்களுக்குத் தெரியுமா?  ஹாலிவுட் பாலா என்ற பெயரில் அக்கரைச்சீமை என்ற வலைபதிவின் மூலம் கலக்ககிய கண்ணியவான் இன்று காணவில்லை என்ற பட்டியலில் இருக்கிறார்.  

"நான் கஷ்டப்பட்டு நாலு பேரு தெரிஞ்சுக்கட்டும்ன்னு எழுதுவேன். அடுத்தவன் போற போக்கில எழுதிட்டு போவாரு.  அவருக்கு விழுற ஓட்டு எனக்கு விழாது. அப்புறம் எதுக்கு இந்த ஓட்டுப்பட்டை. இதுக்கு நான் போயி குத்துங்க எஜமான் குத்துங்கன்னு கெஞ்சனும். 

                           2010 Blog Rank 99

போங்கடா உங்க ஓட்டு அரசியலும், வலைபதிவுகளும் என்று துச்சமாக தன் தளத்தையே தூக்கி எறிந்த ஹாலிவுட் பாலா (அக்கரைச்சீமை) பெற்ற இடம் 99.  அதிலும் இந்த 99  இரண்டு பேருக்கு வந்துள்ளது.  

அவர் தான் என் பார்வையில் உண்மைத் தமிழர்களை புரிந்து கொண்டவர். இவரே உண்மைத்தமிழன் பெற்ற மூன்றாம் இடத்தை பெற தகுதியானவர்.  காரணம் பாலாவின் குரு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். (சரவணன் இதற்காக நீங்க மறுபடியும் ஒரு இடுகையை போட்டு விடாதீங்க.. நீங்க இந்த ஓட்டுக்கு கொடுக்குற முக்கியத்துவத்தை பார்த்தே பலரும் உங்களை ஓட்டு ஓட்டென்று ஓட்டிக் கொண்டுருக்காங்க. ப்ளீஸ் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க)

எந்த திரட்டிகளிலும் இணைக்காமலேயே வந்து கொண்டுருந்த விமர்சனத்திற்கு பாகம் ஒன்று இரண்டு மூன்று என்று உருவாக்கிய நாமக்கல் பார்ட்டியை நமஸ்காரம் செய்கின்றேன். 

தங்கராசா நீ இதை படிக்கிறாயோ இல்லையோ உன்னோட தைரியம் எனக்கு வர இன்னும் நாளாகும்ப்பா?? ஆனால் முருகா நீ உன் அறிமுகம் என்கிற ரீதியில் உன் வலைதளத்தில் எழுதி வைத்த விசயத்தை தான் இந்த இடத்தில் எழுதி வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றேன்.

"போய் புள்ளகுட்டிகள படிக்கவைக்கிற வழியைப் பாருங்க"

47 comments:

எஸ்.கே said...

நானும் பாலா அவர்களின் ரேங்க்கை பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. திரட்டிகளை ஒதுக்கியவர் அவர். மேலும் அவர் தளத்தை அழித்து இத்தனை நாளாகியும் அந்த பட்டியலுக்குள் வந்துள்ளார்!

எஸ்.கே said...

பலர் இந்த ரேங்க் பட்டியலுக்கு கருத்து தெரிவித்திருக்கிறார்கள். சில நல்ல வலைப்பூக்கள், முன்னணியில் வராததை குறித்து வருத்தமும் அடைந்திருக்கிறார்கள்!

என்னைப் பொறுத்தவரை வலைப்பூவில் ஓட்டு, ஹிட்ஸ், ரேங்க் இதையெல்லாம் விட உண்மையான பின்னூட்டமே நமக்கு நல்ல ஊக்கத்தை அளிக்கும் என நினைக்கின்றேன்!

திரட்டிகள் ஒரு பக்கம் நன்மை செய்தாலும் அதனால் சில குறைபாடுகளும் வரத்தான் செய்கின்றன. தாங்கள் முன்னணியில் இடம்பெற முடியவில்லையென வருத்த்தப்பட்டு மனநிலையை பாதித்துக் கொள்பவர்களும் உருவாகிறார்கள்!

எஸ்.கே said...

ஹாலிவுட் பாலா சார்! நீங்க எங்க இருந்தாலும் உங்களுக்கு வணக்கங்கள்!

Anonymous said...

ஹாலிவுட் பாலா தமிழ்மணத்திலே இங்கிலிசுகூட தமிழையும் நட்சத்திரவாரத்திலே கொடுக்கமுடியுமா என்ன்று கேட்டதாலே வீரம் பொங்கியவர். தமிழ்மணம் இங்கிலிசு பதிவுகளை சேர்த்து அரசீயல் பன்ன்னிருக்கனூம்.

THOPPITHOPPI said...

தமிழ்மணம் டாப் 100 ல் தன்னுடைய வலைத்தளம் வரவில்லையே என்று நினைத்து, 2011 ல் மொக்கைப்பதிவாக இருந்தாலும் தினமும் பதிவு எழுதி தமிழ்மணத்தில் ஹிட்ஸ் வாங்க நினைத்தவர்கள் தலையில் ஒரு குட்டு இந்த பதிவு.

தமிழ்மலர் said...

நன்று.

நீங்கள் எல்லாம் ஆட்டத்தில் கலந்துகொண்டதை பற்றி எழுதுகிறீர்கள். தமிழ்மணம் எனது பதிவை ஆட்டத்தில் சேர்த்துக்கொள்வே காசு கேட்டது. மறுத்ததால் இருட்டடிப்பு செய்துவிட்டது. இதை எங்கபோய் சொல்ல?

வலைபதிவு என்பது மக்களின் இதழியல். இதில் கூட இப்படி அரசியல் செய்து அடித்துக்கொள்வார்கள் என்று நான் துளியும் நினைக்கவில்லை.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா..

வால்பையன் said...

பாலா ப்ளாக்கை அழித்து விட்டதாக கேள்வி பட்டேன்!

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

வலைப்பூ விஷயத்தில் நான் பிறந்த குழந்தைக்கு சமானம். எந்த அரசியலும் எனக்குப் புரியவில்லை. எழுதுவது ஒன்றே கடமை என்று மட்டும் புரிகிறது.

Anonymous said...

ஏன் கடமைன்னு சொல்ரீங்க? ஆராச்சியும் எழுத சொல்லி வற்புறுத்தினாவா?

நசரேயன் said...

இதை வச்சி குறைந்தது 100 இடுகையாவது எதிர்பார்க்கிறேன்

Bibiliobibuli said...

பதிவுலகில் அரசியல் உண்டு என்று தெரியும். ஆனாலும், அது அப்போதும் புரிந்ததில்லை. இப்போதும் அப்படியே. ரொம்ப நல்லா எழுதுறவங்க, சமூக அக்கறையோட எழுதுறவங்க இப்படி எத்தனையோ நான் எதிர்பார்த்த சிலரின் பெயர்களை கூட காணவில்லை.

இப்போ, சமூகமா, அரசியலா, கலைச்சேவையா எது பற்றி பதிவு போட்டா இருபதுக்குள் இடம் பிடிக்கலாம் என்பது மட்டும் ஓரளவுக்குப் புரிகிறது. சரி, விடுங்க வராத வேலையெல்லாம் நமக்கெதுக்குன்னு நினைக்கிறேன்.

Anonymous said...

//நண்பர் சாய்தாசன் கூற்றுப்படி ஒரே மாதத்தில் அலெக்ஸா ரேங்கில் பல மடங்கு முன்னால் வந்த சுடுதண்ணியைக் கூட இங்கு காணவில்லை. //

அதற்கு குறிப்பாக தமிழ்மணத்திலிருந்து கணிசமாக ஹிட்ஸ் வாங்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

சென்னை பித்தன் said...

இதெல்லாம் எனக்குப் புரியாத விசயம்.ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்வேன்.உங்கள் பதிவு ஒரு பெரிய தாக்கத்தை எற்படுத்தப் போகுது!

a said...

புள்ளய கிள்ளிவிட்டு தொட்டிலயும் ஆட்டிவிட்டுட்டீங்க....

நீச்சல்காரன் said...

வெறும் மென் பரிமாற்றங்களை வைத்து மணப் பரிமாற்றங்களை அளக்கமுடிவதில்லை.

கோவி.கண்ணன் said...

இடுகை நன்றாக இருக்கு 100ல் ஒருவராக வந்ததற்கு நல்வாழ்த்துகள்.

:)

சி.பி.செந்தில்குமார் said...

உங்க தரம் எங்களூக்கு தெரியும். சோ டோண்ட் ஒர்ரி சார்

http://rajavani.blogspot.com/ said...

வித்யா சுப்ரணியம் , ரதி , சி.பி.செந்தில்குமார் கருத்துகளை வழிமொழிகிறேன். முகப்பு படம் கவரவில்லை அன்பின் ஜோதிஜி.

கண்ணகி said...

நிஜ வாழ்க்கையிலும் இப்படித்தான் நிகழ்கின்றன...நம்மைப் புரிந்தவர்கள் நாலுபேர் இருந்தால் அது போதும்...விடுங்க ஜி....

'பரிவை' சே.குமார் said...

//பதிவுலகில் அரசியல் உண்டு என்று தெரியும். ஆனாலும், அது அப்போதும் புரிந்ததில்லை. இப்போதும் அப்படியே. ரொம்ப நல்லா எழுதுறவங்க, சமூக அக்கறையோட எழுதுறவங்க இப்படி எத்தனையோ நான் எதிர்பார்த்த சிலரின் பெயர்களை கூட காணவில்லை. //

Repeat...

suneel krishnan said...

ஒன்னும் புரியல :)
வாழ்த்துக்கள் :)

Unknown said...

பூ கடைக்கு எதுக்கு சார் விளம்பரம், உங்களோட எழுத்தே சொல்லிடுமே :-)

ஆனந்தி.. said...

வித்யா சுப்ரணியம் , ரதி , சி.பி.செந்தில்குமார் கருத்துகளை வழிமொழிகிறேன்.

ஹேமா said...

ஜோதிஜி...படுத்துக்கிட்டு இருந்தாலும் உங்க எழுத்தாற்றலுக்குக் கிடைத்த பரிசும் கௌரவவும்.வாழ்த்துகள் !

ரதி...மூச்....!

தாராபுரத்தான் said...

முன்னணி வலைபதிவுகள் என்பதற்கும் சிறந்த இடுகைகள் எனற வார்த்தைக்கும் உண்டான இடைவெளி மிகப் பெரிதானது.

Anonymous said...

/மொத்தத்தில் தமிழ்மணம் என்ற திரட்டியின் மூலம் உள்நுழைந்வர்களின் கணக்கீடு. அவ்வளவுதான். /

இதைத்தானே தமிழ்மணம் சொல்லியிருக்கின்றது.
http://www.tamilmanam.net/top/blogs/2010/
/2010ம் ஆண்டுக்கான தமிழின் முன்னணி வலைப்பதிவுகளின் பட்டியல் வாசகர்களிடம் பெற்ற பார்வைகளை (ஹிட்ஸ்) முதன்மையாக கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. மறுமொழிகள், வாசகர் பரிந்துரை வாக்குகள் போன்றவையும் காரணிகளாகக் கணக்கில் கொள்ளப்பட்டன/
சிறந்த பதிவுகளின் பட்டியலென்று எங்காவது சொல்லியிருக்கின்றதா?
அல்லது, தமிழ்மணத்தினை நடத்துகின்றவர்கள் தேர்ந்தெடுத்த பதிவுகள் என்றேனும் எங்காவது சொல்லியிருக்கின்றதா?
தமிழ்மணத்தினூடாகப் பார்க்கப்பட்ட பதிவுகளென்ற அளவிலேதான் தானியங்கியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ள பட்டியலே இது.

தமிழிலே முதன்மையான பதிவு என்று தரம் கருதித் தேர்தெடுக்கப்பட்டால், எதற்காகப் பிறகு ஆண்டின் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த பதிவுகளை வாசகர்களின் வாக்குகளின்படி தேர்ந்தெடுக்கவேண்டும்.

சரி தானியங்கியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவென்றாலுங்கூட, அதை அப்படியாக ஒரு வரிசை என்று பார்த்துவிட்டுப்போங்களேன். அலெக்ஸா வரிசையை மட்டும் அடிக்கடி நாலாம் கந்தாயத்திலே இங்கே ஆறாம் கந்தாயத்திலே அங்கே என்று எல்லோருக்கும் பதிவு போட்டுக் காட்டி மகிழுங்கள். அலெக்ஸா வரிசைப்படுத்தலுக்கும் தமிழ்மணத்தின் இப்படியான தானியங்கி வரிசைப்படுத்தலுக்கும் ஏதேனும் வேறுபாடிருக்கின்றதா? இருக்கின்றது இல்லையா? அடடா இருக்கிறதே! தமிழ்மணமென்றால், எடுத்தேன் கவிழ்த்தேனென்று எதேச்சையாக விமர்சித்து வைக்கலாம்.

ஹாலிவுட் பாலா தமிழ்மணத்தின் நட்சத்திரப்பதிவராக இருக்கும்போது, தமிழினையும் தலைப்பிலே போட்டு எழுத முடியுமா என்று வேண்டுகோளாகக் கேட்ட ஒரே காரணத்தாலே, திரட்டுகின்றவர்களும் நீரோ திரட்டியும் உமதோ என்று கடாய்ந்துவிட்டுப் போனார். சேரும்போது, இருக்கும் விதிகளை (தமிழிலே எழுதுவதை ஊக்குவிக்கவிரும்பியே தமிழ்மணம் திரட்டி என்பதாலே, தமிழிலே எழுதுங்களேன்) கடனட்டைவிதிகள்மாதிரி வாசிக்காமலே சேர்த்துவிட்டு, பின்னாலே, புரட்சிக்கொடி அநியாயத்துக்குக் காட்டுவது நியாயமா?

மாயவரத்தான் போன்றவர்கள் உண்மைத்தமிழன் போன்ற அழுகுணிக்குழந்தைகளுக்கு மறை குத்தினாலும், தமிழ்மணத்தினைத் தட்டுவது எவ்வகையிலே நியாயம்?

தமிழ்மலர் போன்றவர்கள் தமிழ் டிவி என்று விளம்பரம் செய்க என்று பதிவிலே அறிவித்து அகப்பட்ட செய்திகளையெல்லாம் அள்ளிப்போட்டுப் பதிவு நடத்துவார்கள். இது தனிப்பட்ட பதிவர்களின் முன்னேற்றத்தினைத் தடுக்கும் என்பதாலே, விரும்பினால், விரும்பினால் மட்டுமே பணம் கட்டி விளம்பரமாகக் காட்டப்படும் பதிவாக வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால், இருட்டடிப்பு ஆகிவிடுகின்றது. தமிழ்மணம் ஏதோ பிடுங்கிச் சாப்பிடும் வர்த்தக ஏகாதிபத்தியம் போல ஆளுக்கோர் உதை போடுவது முறையா?

பதிவு எழுதிப் பரபரப்பு ஏற்படுத்தி நான்கு ஆமாம்சாமிகளும் வந்து பெரியமனுசக்கருத்தினைச் சொல்லமுன்னால்,கொஞ்சமேனும் நிதானமாக யோசியுங்களேன்.

/ ஏன் தமிழ்மணத்தில் உள்ள செல்வராஜ், சசி இடுகைகள் கூட இதில் வரவில்லை. /

ஏனென்றால், அவர்கள் இடுகை எதையும் போடவில்லை. நேரத்தினைத் மொக்கைப்பதிவுகளை இணைத்தும் கழற்றியும் தமிழ்மணம் ஊடாக உழைத்துத் தாம் சாப்பிடப்பயன்படுத்தியிருப்பார்களோ?

அநாமதேயம் போட்டதென்றால், அநாமதேயம் போட்டதுதானென்றிருக்கட்டும். யாராவது அறிந்த பெரியமனுசன் வந்து போட்டது யாரென்று சொல்லிக் கைதட்டு வாங்காமலா போகப்போகிறான்?

தமிழ்மலர் போன்றவர்கள் தமிழ் டிவி என்று தம்பதிவிலே போட்டு இங்கே விளம்பரம் செய்க என்று பதிவிலே அறிவித்து அகப்பட்ட செய்திகளையெல்லாம் அள்ளிப்போட்டுப் பதிவு நடத்துவார்கள். இது தனிப்பட்ட பதிவர்களின் முன்னேற்றத்தினைத் தடுக்கும் என்பதாலே, விரும்பினால், விரும்பினால் மட்டுமே பணம் கட்டி விளம்பரமாகக் காட்டப்படும் பதிவாக வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால், இருட்டடிப்பு ஆகிவிடுகின்றது. தமிழ்மணம் ஏதோ பிடுங்கிச் சாப்பிடும் வர்த்தக ஏகாதிபத்தியம் போல ஆளுக்கோர் உதை போடுவது முறையா? ஆக, பொறுப்பு என்பது திரட்டி நடத்துகின்றவர்களுக்குமட்டுமேதானா? ஆளுக்கொரு கருத்தினைச் சொல்லும் பதிவர்களுக்கு இல்லையா? பதிகின்றவர்களின் பொறுப்புணர்வு எங்கே போகின்றது?

ஜோதிஜி said...

தமிழ்மணம் ஏதோ பிடுங்கிச் சாப்பிடும் வர்த்தக ஏகாதிபத்தியம் போல ஆளுக்கோர் உதை போடுவது முறையா?

நண்பா ஏதோ தவறாக புரிந்து கொண்டு விட்டீங்க என்று நினைக்கின்றேன். இது உதை அல்ல. ஒரு வகையில் எழுதி நாமும் ஜெயிக்க வேண்டும் அல்லது அடுத்த முறை தமிழ்மண பட்டியில் வந்து நிற்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்குண்டான விதை.

ஆக, பொறுப்பு என்பது திரட்டி நடத்துகின்றவர்களுக்குமட்டுமேதானா? ஆளுக்கொரு கருத்தினைச் சொல்லும் பதிவர்களுக்கு இல்லையா? பதிகின்றவர்களின் பொறுப்புணர்வு எங்கே போகின்றது?

என்னுடைய பார்வையில் பதிவுலகத்தில் நூறு பேர்களுக்கு இந்த பொறுப்பு பத்து பேர்களுக்குத் தான் இருக்கிறது. அவரவர் நொடி நேர புகழுக்கு ஆசைப்பட்டுத்தான் இதற்காக உழைத்துக் கொண்டுருக்காங்க.

யாராவது அறிந்த பெரியமனுசன் வந்து போட்டது யாரென்று சொல்லிக் கைதட்டு வாங்காமலா போகப்போகிறான்

நான் புரிந்து கொண்டேன் வலியும் இதன் பின்னால் உண்டான வேதனையும்.

ஜோதிஜி said...

தமிழ்மலர் போன்றவர்கள் தமிழ் டிவி என்று தம்பதிவிலே போட்டு இங்கே விளம்பரம் செய்க என்று பதிவிலே அறிவித்து அகப்பட்ட செய்திகளையெல்லாம் அள்ளிப்போட்டுப் பதிவு நடத்துவார்கள். இது தனிப்பட்ட பதிவர்களின் முன்னேற்றத்தினைத் தடுக்கும் என்பதாலே, விரும்பினால், விரும்பினால் மட்டுமே பணம் கட்டி விளம்பரமாகக் காட்டப்படும் பதிவாக வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால், இருட்டடிப்பு ஆகிவிடுகின்றது.

இது போன்ற செய்திகள் இந்த இடுகையின் மூலம் தான் வெளியே வர வாய்ப்பு இருக்கின்றது.

ஜோதிஜி said...

(தமிழிலே எழுதுவதை ஊக்குவிக்கவிரும்பியே தமிழ்மணம் திரட்டி என்பதாலே, தமிழிலே எழுதுங்களேன்) கடனட்டைவிதிகள்மாதிரி வாசிக்காமலே சேர்த்துவிட்டு, பின்னாலே, புரட்சிக்கொடி அநியாயத்துக்குக் காட்டுவது நியாயமா?

சரியாத்தான் சொல்லியிருக்கீங்க. இந்த இடத்தில் மற்றொன்று. நீங்க எப்படி தமிழில் எழுதுவதை ஊக்குவித்தல் என்பதை ஒருகொள்கையாக வைத்துருக்கீங்களோ அதைப்போல வேறு ஏதோவழியில் சமூக வளர்ச்சிக்கு அல்லது அக்கறையின்பால் எழுதப்படும் வலைபதிவுகளை அடையாளம் காட்டுவதும் இந்த சேவையில் ஒன்றாக இருந்தால் நலம். பல வங்கி அதிகாரிகள், அதிகாரவர்க்கத்தினர் பேசிய போது புரிந்து கொண்ட செய்தி இது. ஏதாவது செய்யுங்க.

ஜோதிஜி said...

மாயவரத்தான் போன்றவர்கள் உண்மைத்தமிழன் போன்ற அழுகுணிக்குழந்தைகளுக்கு மறை குத்தினாலும்

சிரித்துவிட்டேன்.

அலெக்ஸா வரிசையை மட்டும் அடிக்கடி நாலாம் கந்தாயத்திலே இங்கே ஆறாம் கந்தாயத்திலே அங்கே என்று எல்லோருக்கும் பதிவு போட்டுக் காட்டி மகிழுங்கள். அலெக்ஸா வரிசைப்படுத்தலுக்கும் தமிழ்மணத்தின் இப்படியான தானியங்கி வரிசைப்படுத்தலுக்கும் ஏதேனும் வேறுபாடிருக்கின்றதா? இருக்கின்றது இல்லையா? அடடா இருக்கிறதே! தமிழ்மணமென்றால், எடுத்தேன் கவிழ்த்தேனென்று எதேச்சையாக விமர்சித்து வைக்கலாம்.

அட நீங்க வேற? இதப் போய் பெரிசா எடுத்துக்கிட்டு. யாரை விமர்சிக்க முடியும்? தகுதியிருக்கிறவங்களை, அல்லது முன்னேறிக்கொண்டுருப்பவர்களைத்தான் விமர்சிக்க முடியும், எதன் அடிப்படையில் விமர்சனம் வரும்?
ஒன்று காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அல்லது அக்கறையின் பால் விமர்சனம் வரும்.

நீங்க தான் சொல்லனும் என்னுடைய எழுத்து உருவானது அக்கறையா இல்லை வேறு எதுவுமா என்று?

என்னுடைய பார்வையில் இந்த அளவீடுகள் நிறைய அறிவீலிகளை உருவாக்கி விடுமோ என்ற பயத்தின் காரணமாகவே இதை எழுதி வைத்தேன்.

Anonymous said...

ஜோதிஜி நான் சொன்னது உங்களுக்கல்ல. இங்கே பின்னுதைந்திருக்கும் சிலருக்கும் வேறு சில பதிவுகளிலே அதே தொனியிலே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எழுதியிருக்கும் சிலருக்கும். தமிழ்மணத்தின் பரிசுத்தொகையைப் பற்றியும் இதே மாதிரியாக காப்பரேட்டு கொடுப்பது இவ்ளோதானா என்பதுபோல அடித்துவெட்டிவிசுக்கிச் செல்லும் ஆட்களைப் பார்த்து வெறுப்பேறியிருக்கையிலே இப்படியாகச் சிலர்.

தமிழ்மொழியிலே பதிவினை வளர்ப்பதுதான் தமிழ்மணத்தின் நோக்கம் ஆங்கிலப்பதிவுகளை இணைப்பதைத் தவிருங்கள் என்றால் அதற்குக் கருத்துச்சுதந்திரத்தைப் பறிக்கிறார்கள் என்று அறைகூவிச் சொல்லிவிடுவார்கள்.

தமது பதிவுகளிலே விளம்பரங்களைச் சேர்க்கும் செய்திப்பதிவுகளையும் சாதாரணமான ஒரு தனிப்பட்ட பதிவரின் பதிவினையும் ஒன்றாக எடைபோடலாமா? தனிப்பட்ட குரல்களின் கருத்துகள் சென்றடையத்தான் தமிழ்மணம் எனும்போது, விளம்பரப்பதிவுகளுக்கு இலவசவிளம்பரம் கொடுப்பதற்காகத்தான் தமிழ்மணம் என்று கொண்டு இருட்டடிப்பு என்று செயினைச் சுழற்றும் வியாபாரிகளை என்னவென்று மதிப்பிடுவீர்கள்?

ஒரு தனிப்பட்ட பதிவரின் இடுகை முகப்பிலே நிற்கவேண்டுமென்றால், அள்ளிப்போடும் விளம்பரப்பதிவுகளை தமிழ்மணத்துக்கு விளம்பரம் இழப்பென்றாலும் தவிர்த்தே ஆகவேண்டும்.

குறைந்தபட்சம் கவனித்துப் பார்த்தீர்களென்றால், தமிழ்மணத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் 2004, 2005 களிலே பதிவுகள் போட்டுக்கொண்டிருந்தார்கள்.இன்றைக்கு அவர்கள் பதிவுகள் போடுவதற்கு நேரமில்லாதிருக்கின்றார்களோ தெரியாது. ஆனால், அவர்களுக்குப் "பிடித்தால், எண்ணூறாவது பாலோயராகுங்கள்; எட்டு லட்சம் ஹிட்" பஞ்சாமிர்தப்பதிவுகள் போடுகின்றவர்கள் எல்லோரும் போட்டுத் தள்ளிக்கொண்டிருக்கின்றார்கள்.

அட விடுங்கையா திரட்டிகள் என்பதே பதிவர்களுக்கு பதிப்புலகத்துக்கு ஏணிப்படிதானே?

பதினைந்து இடுகைகள் போட்டாலே, பிரபலபதிவர் என்றும் இரண்டு ஜெயமோகன்கூட்டம் மூன்று சாருநிவேதிதா சண்டை என்று போட்டாலே இலக்கியவாதி ஆகிவிடும் ஞான சூனிய உலகு நமது.

Anonymous said...

/ஒருகொள்கையாக வைத்துருக்கீங்களோ அதைப்போல வேறு ஏதோவழியில் சமூக வளர்ச்சிக்கு அல்லது அக்கறையின்பால் எழுதப்படும் வலைபதிவுகளை அடையாளம் காட்டுவதும் இந்த சேவையில் ஒன்றாக இருந்தால் நலம்/

எப்போதிருந்தோ இப்படியாகத்தான் நடக்கின்றதென்பதை நீங்கள் கொஞ்சம் பதிவுகளைக் கூர்ந்து பார்த்தாலே புரிந்துகொள்ளலாம். கொடிதாங்கிய பதிவு செய்யப்பட்ட கட்சிப்பதிவுகளையோ தொலைக்காட்சி, சஞ்சிகைப்பதிவுகளையோ சாதிச்சங்கப்பதிவுகளையோ மதமேறிய பதிவுகளையோ தமிழ்மணம் இயன்றவரை தவிர்த்துக்கொண்டுதான் இருக்கின்றதென்று பார்க்கின்றேன். ஆனால், இயற்கை, தொழில்நுட்பம், வணிகம், அறிவியல், சமூகசேவை சம்பந்தப்பட்ட இலாபநோக்கற்றபதிவுகளைச் சேர்த்துக்கொண்டுதான் இருக்கின்றதல்லவா?

Anonymous said...

/என்னுடைய பார்வையில் இந்த அளவீடுகள் நிறைய அறிவீலிகளை உருவாக்கி விடுமோ என்ற பயத்தின் காரணமாகவே இதை எழுதி வைத்தேன்/

கவலைப்படாதீர்கள். குந்தியிருந்து மலம் கழித்தாலும் பெருமலக்கும்பி எனதே என்பதிலும் நாம் போட்டி போட்டுக்கொள்வோம் :)

ஜோதிஜி said...

திரட்டிகள் என்பதே பதிவர்களுக்கு பதிப்புலகத்துக்கு ஏணிப்படிதானே?

கடல்தாண்டியிருந்தாலும் வலிக்கும் வரை செல்ல குத்து குத்த உங்கள் கரங்களை நோக்கி என் கரங்கள் நீள்கிறது.

கவலைப்படாதீர்கள். குந்தியிருந்து மலம் கழித்தாலும் பெருமலக்கும்பி எனதே என்பதிலும் நாம் போட்டி போட்டுக்கொள்வோம் :)

இதைத்தான் வாழ்நிலையில் உள்ள எந்த சூழ்நிலையிலும் ஜெயித்து வருதல் என்று டார்வின் சொல்லியிருப்பாரோ?

கொஞ்சம் பதிவுகளைக் கூர்ந்து பார்த்தாலே புரிந்துகொள்ளலாம். கொடிதாங்கிய பதிவு செய்யப்பட்ட கட்சிப்பதிவுகளையோ தொலைக்காட்சி, சஞ்சிகைப்பதிவுகளையோ சாதிச்சங்கப்பதிவுகளையோ மதமேறிய பதிவுகளையோ தமிழ்மணம் இயன்றவரை தவிர்த்துக்கொண்டுதான் இருக்கின்றதென்று பார்க்கின்றேன்

படித்தவன் பாவம் செய்தால் அய்யோ அய்யோ என்று போவானாம். சொன்னவர் எவரோ? அவரும் போய்விட்டார். ஆனால் இந்த நல்ல மனிதர்கள் மட்டும் எளிதாக மறந்துவிட்டார்கள்.

ஜோதிஜி said...

ஜோதிஜி நான் சொன்னது உங்களுக்கல்ல. இங்கே பின்னுதைந்திருக்கும் சிலருக்கும் வேறு சில பதிவுகளிலே அதே தொனியிலே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எழுதியிருக்கும் சிலருக்கும். தமிழ்மணத்தின் பரிசுத்தொகையைப் பற்றியும் இதே மாதிரியாக காப்பரேட்டு கொடுப்பது இவ்ளோதானா என்பதுபோல அடித்துவெட்டிவிசுக்கிச் செல்லும் ஆட்களைப் பார்த்து வெறுப்பேறியிருக்கையிலே இப்படியாகச் சிலர்.

இந்த நாள் இனிய நாள். இந்த வருடமும் இனிதாக இருக்கும் என்றே நம்புகின்றேன். என்னுடைய நோக்கத்தை தெளிவாக புரிந்து கொண்டு அக்கறையாக உணர்வூட்டியமைக்கும் இங்கு நன்றி என்ற வார்த்தையை எழுதிவைக்கின்றேன்.

விமர்சனத்தின் வாயிலாக பகிர்ந்து கொண்ட அத்தனை நண்பர்களுக்கு நன்றிங்கோ.

Thenammai Lakshmanan said...

எனக்கு எத்தனாவது ரேங்க் ஜோதிஜி.. எதில் பார்க்கணும்னு தெரியலை.. 20 வரைதானே இருக்கு.. 100 க்கு மேல் கிடையாதா..:))

Anonymous said...

in the past three months,
உங்கள் சுசீலா பதிவுக்கு
1468

Thenu's recipies
833

சும்மா பதிவு
34

ஜெயமோகன் போன்ற பேரறிஞர்கள் சகவாசம் கிட்டினால், சகல ராங்கிங் சம்பத்தும் புத்தாண்டிலே பெருகும்.

நீங்களே சோதனை செய்யும்வண்ணம் தமிழ்மணத்திலே கொடுத்திருக்கின்றார்கள்

எண்ணங்கள் 13189034291840215795 said...

முன்னணி என்பது சிறப்பு என அர்த்தமில்லை..

மேலும் தமிழ்மணம் ஒரு திரட்டி மட்டுமே...

பின்லேடனும் பிரபலமாகலாம்.முன்னணியில் வரலாம் , ஓட்டுபோட ஆளிருந்தால் போதும்....:)

TamilTechToday said...

Nice & Great info!

Follow My Websites too.

A to Z online General knowledge Information Portal Website - www.bharathibtech.com

kavirimainthan said...

அருமை நண்பர் ஜோதிஜி,

உங்கள் வாழ்த்துக்களுக்க்கு நன்றி.
உங்களிடமிருந்து வாழ்த்து பெறுவது -
எனக்கு பெருமை.

மிகக் கடுமையான உழைப்பாளி நீங்கள்.
எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும்,
மேம்போக்காக இல்லாமல் ஆழமாக எழுதுகிறீர்கள்.
இவ்வளவு ஆழமாக எழுதுவதற்கு -
எவ்வளவு படிக்க வேண்டும்,
எவ்வளவு யோசிக்க வேண்டும்,
எவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டும் !

உண்மையில் - உங்கள் உழைப்பை,
உங்கள் தணியாத ஆர்வத்தை,
அழகான தமிழைப் பார்க்கும்போது,
எனக்கு மலைப்பாக இருக்கிறது.

உங்கள் பணி இனிதே சிறப்புடன் தொடர
என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.

-அன்புடன்,
காவிரிமைந்தன்