கூட்டத்திற்கான தலைப்பு " நாம் இந்தியாவை நேசிக்கின்றோம்" யாழ்பாணத்தில் உள்ள சுதுமலை அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல் முறையாக லட்ச மக்களுக்கு மேல் திரண்டுருந்த பொதுக்கூட்டத்தில் பினவருமாறு உரையாற்றினார்.
அன்பிற்கும் மதிப்பிற்குரிய தமிழீழ மக்களே,
" இன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. நமது சக்திக்கு அப்பாற்பட்ட, உருவாக்கப்பட்ட இந்த நிகழ்வின் இறுதி என்பது சாதகமா இல்லை பாதகமா? என்பதை நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த ஒப்பந்தம் எங்கள் இயக்கத்தையோ, போராளி குழுக்களையோ கலந்து ஆலோசிக்காமல் திடுமென நிர்ப்பந்தத்தில் உருவாக்கப்பட்ட ஒன்று. டெல்லிக்கு என்னை வரவழைத்த போது கூட முழுமையான விபரங்கள் தெரியாது. மொத்த விபரங்களையும் சொன்ன போது இந்திய அரசின் தந்திரம் எங்களுக்கு புரிந்தது. நம்முடைய நலத்தை விட இலங்கை இந்தியாவின் பிராந்திய நலத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருப்பதை உணர்ந்த நாங்கள் எதிர்ப்பதை தவிர வேறு ஒன்றும் எங்களுக்குத் தோன்றவில்லை. ஆனால் எங்களின் எதிர்ப்பு மொத்தமும் அர்த்தமற்றதாய் போய்விட்டது. அவர்களின் ஆதிக்கத்திற்கு நாங்கள் அணிபணிந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம். வேறு வழி எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
இந்த ஒப்பந்தம் எங்கள் இயக்க வழிமுறைகளை, நோக்கங்களை, கடந்து வந்த மொத்த செயல்பாடுகளையும் பாதிக்கின்றது. 15 வருடங்களாக பாதுகாத்து பயணித்து வந்த பாதை இன்று கேள்விக்குறியில் வந்து நிற்கிறது. எங்களை நிராயுதபாணிகளாக மாற்றுவதில் இந்தியா வெற்றி கண்டுருக்கிறது. இனவாத சிங்கள அரசின் மீது என்றும் எமக்கு நம்பிக்கை வரப்போவது இல்லை. ஆனால் பாரதப்பிரதமர் அதற்கென்று சில தனியான வாக்குறுதிகள் தந்துள்ளார். எமது மக்களின் நல்வாழ்வில் அக்கறை இருப்பதாக தெரிவித்துள்ளார். சிங்கள படைகள் இனி தமிழர் அழிப்பு என்ற நோக்கத்தில் இறங்காது என்பதில் நம்பிக்கை வைத்துள்ளோம். இதன் அடிப்படையில் எங்கள் ஆயுதங்களை இந்தியாவில் இருந்து வந்துள்ள அமைதிப் படையிடம் ஒப்படைக்க என்று முடிவு எடுத்தோம். தீலீபன்
எமது மக்களின் பாதுகாப்புக்காக நல்வாழ்வுக்காக நாம் எத்துணை போராட்டங்களை, இழப்புகளை சந்தித்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். நமது மக்களின் பாதுகாப்புக்காக வைத்துள்ள ஆயுதங்களையும் இந்தியாவிடம் நாம் ஒப்படைக்கின்றோம் என்றால் மொத்த பாதுகாப்பும் இனி இந்தியாவின் பொறுப்பு என்று அர்த்தம். இந்த நிகழ்வு எங்களுக்கான பின்னடைவு என்றபோதிலும் நம் மக்களின் விடிவுகாலம் என்பதில் உறுதியாக இருப்பதால் நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கின்றோம்.
நாங்கள் இந்த ஆயுதங்களை ஒப்படைக்காமல் போனாலும் இந்திய ராணுவத்துடன் மோத வேண்டிய துர்பாக்ய நிலைமை ஏற்படும். இதை நாங்கள் விரும்பவில்லை. நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய வீரனுக்கு எதிராக எங்கள் ஆயுதம் போராடாது. இனி எங்கள் மக்களை பாதுகாக்கும் மொத்த பொறுப்பும் இந்திய வீரர்களுக்கு சொந்தமாகின்றது. ஈழத் தமிழன் ஒவ்வொருவர் உயிருக்கும் உடைமைக்கும் இனி இந்தியாவே பொறுப்பு. இந்த சூழ்நிலையில் நாங்கள் இந்தியாவுடன் ஒத்துழைப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.
" தமிழீழ தனியரசே தமிழீழ மக்களுக்கு நிரந்தர இறுதி தீர்வாக இருக்கமுடியும் " என்ற என்னுடைய அசையாத நம்பிக்கை என்றும் மாறப்போவது இல்லை. இந்த நோக்கத்திற்காகவே இறுதிவரை நான் போராடுவேன் என்பதை இங்கு அழுத்தமாக தெரியப்படுத்த விரும்புகிறேன். போராட்ட களம் மாறலாம். ஆனால் எமது லட்சியங்கள் மாறப்போவது இல்லை. இந்த லட்சியம் நாம் அடைய வேண்டுமென்றால் உங்கள் அத்தனை பேர்களின் ஒத்துழைப்பு அவஸ்யம் தேவையாய் இருக்கிறது.
தமிழீழ மக்களின் நலன் கருதி இடைக்கால அரசில் பங்கு பெற, அல்லது தேர்தலில் போட்டிட வேண்டிய அவஸ்யம் எமது இயக்கத்திற்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்த காலத்திலும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. முதலமைச்சர் பதவியையும் ஏற்கப் போவது இல்லை. இதை நான் உறுதியாக சொல்ல விரும்புகிறேன் "
பிரபாகரன் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர் அல்ல. உணர்வுகளும் அத்தனை சீக்கிரமாக அவரைப் பாதிப்பதும் இல்லை. ஆனால் அன்றைய பொதுக்கூட்டம் முடிக்கும் போது எந்த மனோநிலையில் இருந்து இருப்பார் என்பதை மொத்த நீண்ட உரையை படிக்கும் போது சின்னக்குழந்தைக்கு கூட புரியும்?
மிகப்பெரிய ஆச்சரியம் உலக ஊடகங்களும், இந்திய பத்திரிக்கைகளும் இந்த பேச்சை வெகுவாக பாரட்டின. முக்கியவத்துவம் கொடுத்து முதல் பக்கத்தில் வெளியிட்டன. ஏறக்குறைய பிரபாகரனுக்கு இரண்டு பக்கமும் சிக்கிக்கொண்டு உள்ளே அழுந்திக்கொண்டு உணர்வுகளை வெளியே காட்டிக்கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலை. இந்த பொதுக்கூட்டம் என்பது கூட தன்னுடைய உணர்வுகளுக்கான வடிகால் போல் தான் இருந்தது.
இது போன்ற சூழ்நிலையில் சராசரி மனிதன் மூர்ச்சையாகி விழுந்து விடும் சூழ்நிலை தான் அதிகமாக இருக்கும். அமைச்சர் பதவி பிடுங்கப்பட்ட அடுத்தநாளே இதயவலி வந்துவிடும் தியாகிகளுக்கும் 15 ஆண்டுகளாக உயிர்வெறுத்து போராடிய, களமாடியவருக்கும் உள்ள இந்த நிகழ்வை உங்களால் வித்யாசம் கொண்டு பார்க்க முடிகின்றதா?
ஆனால் பிரபாகரனுக்கு மட்டுமல்ல ஆயுத ஒப்படைப்பு என்ற சடங்கில் நடந்த நிகழ்வின் போது மற்ற போராளிகளின் ஆத்திரமும், அவநம்பிக்கையும் வெளியே காட்டுவதாக இருந்தது. அந்த அளவிற்கு ஒவ்வொருவருக்கும் உள்ளே இருந்த உணர்வலைகள். ஏறக்குறைய சாவுச் சடங்கு போல் தான் அது நடந்தது. வெளியே சிரிப்பு. உள்ளே அழுகை.
பிரபாகரனுடன் டெல்லிக்கு பயணித்தாரே யோகி, முதன் முதலாக தான் வைத்திருந்த துப்பாக்கியை ஒப்படைக்க வந்த காத்திருந்த (இலங்கை பாதுகாப்பு செயலாளர், இந்திய திபேந்தர் சிங், மற்ற பல அதிகாரிகள்)வர்களிடம் கையில் கொடுக்காமல் மேஜை மீது வைத்து விட்டு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்த போது இதற்கென்று வரவழைக்கப்பட்ட மொத்த உலக ஊடக மக்களுக்கும் ஏமாற்றம். வேறென்ன செய்யமுடியும்? அதிகாரவர்க்கத்தினர் எப்போதும் போல ஜாலியோ ஜிம்கானா தான்.
பிரபாகரன் தாங்கள் வைத்திருந்த மொத்த ஆயுதங்களையும் ஒப்படைத்து இருப்பார் என்றா கருதுகிறீர்கள்? லொக்கடா, டக்கடா இந்திய வகை ஆயுதங்கள் அதற்கென்று பொறுக்கி எடுத்து வைத்திருப்பார். இவர் பக்கம் இந்த மாதிரி அழுகுணி ஆட்டம்.
இவர்கள் ஒப்படைத்த இந்த ஆயுதங்களுடன், ரா உளவுப்படை கொண்டு வந்து சேர்த்து இருந்த மற்ற ஆயுதங்களையும் சேர்த்து தான தர்மமாக உள்ளே வலுவிழந்து வாழ்ந்து கொண்டுருந்த EPRLF,PLOTE.TELO போன்ற மற்ற போராளிக்குழுக்களுக்கு கனஜோராக இந்திய அமைதிப்படை வழங்கிக்கொண்டுருந்தது. இது அந்தப் பக்கம் கண்ணாமூச்சி ஆட்டத்தின் தொடக்கம்.
அப்படியென்றால் நம்முடைய அரசியல் ஞானி செய்து கொண்டுருக்கிறார்? ராஜீவ் காந்தி சொன்னபடி " இடைக்கால நிர்வாக அரசு" எப்போது உருவாக்கப் போகிறீர்கள்? என்ற விடுதலைப்புலிகள் கேட்ட போது கொட்டாவி விட்டு தூக்க கலக்கத்தில் எழுந்தவர் போல் இந்தியாவையும் விடுதலைப்புலிகளையும் பார்த்து திரு திருவென்று முழித்தார்.
சிந்தனை அதிகம் பெற்றவர் மறப்பது இயல்பது தானே?
புது ரத்தம் பாய்ச்சப்பட்ட மற்ற மொத்த போராளிக்குழுக்களுக்கும் வந்த மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டுமே? இரவு வேளைகளில் ரகஸ்யமாய் கிழக்கு மகாண கரையோரப் பகுதிகளில் கொண்டு போய் இந்தியாவின் உதவியோடு இறக்கப்பட்டனர். மன்னார் மாவட்ட கடற்கரை கிராமத்துப் பக்கம் டெலோ இயக்கத்தினர் பறபறவென்று பல்லை கடித்துக்கொண்டு காத்துருந்தனர்.
தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, பல்வலியோடு இரண்டு காலும் வீங்கியிருந்தால் ஒருவனுக்கு எப்படியிருக்கும். புதுரத்தம் பாய்ச்சப்பட்டவர்களிடம் இருந்து விடுதலைப்புலிகளை காக்க வேண்டும். ரா உளவுத்துறை திருவிளையாடலை மறு பக்கம் சமாளிக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் ரத்தம் குடிக்க காத்துருக்கும் இலங்கை இராணுவம். இப்போது இந்திய வீரர்கள் பேசும் (ஹிந்தி) மொழியும் புரியவில்லை. அவர்களின் ஆதரவும் கிடைக்குமா என்ற சந்தேகம்.
வெறியுடன் வாழ்ந்தவரை நீ ஒரு வெகுளி? என்பது போல் எச்சமாக நினைத்த வல்லரசு தான் வகையாக மாட்டிக்கொள்ளப்போகிறோம் என்பதை அறியாமலே வலை பின்னத் தொடங்கியது. வகைவகையான வலைபின்னலை பார்த்து வளர்ந்த பிரபாகரன் அவசரப்படவில்லை. ஏன் வந்த ஆத்திரத்தைக்கூட உள்ளேயே அடக்கிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை. தன் முன்னால் மூத்திரம் போக அஞ்சியவர்கள் கூட இன்று ரவுண்டி கட்டி அடிக்க காத்துக்கொண்டுருப்பது கண் முன்னே தெரிகிறது. அவர்களால் சிலரைக்கூட இழந்தாகி விட்டது. நாம் கைவைத்தால் மொத்தமும் நம்மால் தான் நடந்தது என்று சுபம் போட்டு முடித்து விடுவார்கள்.
அவர்களின் தைரியம் என்பது பின்னால் உள்ள இந்தியா கொடுக்கும் தைரியம். நாம் என்ன தவறு செய்தோம்? இந்தியா விரும்பிய அத்தனை இழுப்புக்கும் தானே போய்க் கொண்டுருக்கிறோம்? இன்னமும் நம்மை விரும்பாமல் ஏன் அவர்களை வளர்க்க ஆசைப்படுகிறார்கள்?
மக்கள் முன்னால் பேசிய பேச்சு மாறிவிடுமோ என்ற அச்சம் அவரை அலைக்கழித்தது. இப்போது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையும் செய்து விடமுடியாது. உலகம் முழுக்க கவனித்துக் கொண்டுருக்கிறது. என்ன செய்யலாம்? என்று யோசித்துக்கொண்டுருந்த போது தீலிபன் தன்னுடைய உண்ணா நோன்பு போராட்டத்தை தொடங்கி விட்டார்.
காரணம் தீலிபனுக்கு டெல்லியில் நடந்த மொத்த " Gentlemen Agreement " முழுமையும் தெரியும். ஏமாற்றத்தின் தொடக்கம் புரிந்து விட்டது. ஒரு வகையில் உண்ணாநோன்பு இறுதியில், இறந்த தீலீபன் மரணம் என்பது எந்தவித தாக்கத்தை உருவாக்கியது தெரியுமா?
வல்லரசு தலையில் எழரை பகவான் வந்து அமர்ந்த தருணமிது.
18 comments:
தெளிவா இருக்கு
இப்படி பதிவு போடுவதும்,வாசிப்பதும்,நம் இன உணர்வை பிரதி எடுப்பதும் வரலாற்று கடமை.
இந்தியாவில் காந்தியின் உண்ணாநோன்பு வெற்றிபெற் றது காரணம் பிரித்தானியர் கனவான்கள் மனச்சாட்சி உள்ளவ்ர்கள் என்பதால்.அதே காந்தியின் தத்துவத்தை
கையில் எடுத்த திலீபனை சாவடித்தது காந்திதேசம்.
காரணம் இந்தியவல்லாண்மை அரக்கர் இனம் மனச்
சாட்சி இல்லாத அசுரர்.காந்தியின் தத்துவத்தைக்குளி
தோண்டிப்புதைத்த கொலைகாரர்.இதுதான்அவர்களின்
உண்மைமுகம்.
நன்றி அண்ணாமலையான் ஜெரி ஆசிரியரே.
தவேஷ் அவசரப்பட்டு திலீபன் இறந்த விசயத்தை காந்தி தேசத்துடன் ஒப்பிட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்.
உண்மையிலே திலீபன் இறந்தால் என்ன எதிர்விளைவுகள் உருவாகும் என்பதை அமைதிப்படை தளபதி பதட்டமாய் மேலே புரியவைத்தார். கதாநாயகன் தீட்சித் கூட அறைகுறை மனது தான். இவர் இறப்பபுக்கு பின்னால் பெரிய நாடகம் ஒன்றை பிரபாகரன் நடத்த இருப்பதாக அன்றைய உளவுத்துறை (ரா) கொடுக்கப்பட்ட அறிக்கையின் விளைவாக உருவானது தான் இந்த காந்திய வழிமுறையின் இறுதி.
Those are the truth. I was little kid when Theleepan anna fasting. My dad took me directly there. I impact a lot in my life. He is the hero in my hear. He was a medical student. You all may know how hard to get the medical admission in Jaffna. But he dedicated in his young age, for us and all Tamils' life. Immagine, if you are fasting one day, without food and drink. He had been 12 days for us. He had been dying everytday for our future. His pure "aathma" is with us. He is the real hero.
Also, I am proude to say, my dad took me to the Suthumalai meeting as well. I think I was 3 or 4 years old.
//அவசரப்பட்டு திலீபன் இறந்த விசயத்தை காந்தி தேசத்துடன் ஒப்பிட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்.//
இதில் என்ன அவசரம் ,பெரிய நாடகம் ஜோதிஜி, சினிமா பாணியில் கதையளக்கிறீர்கள்?, திலிபனின் கோரிக்கைகள் ஒன்றும் தமிழிழத்தை ஒரிரவில் பெற்றுத்தருமாறு இந்தியாவிடம் அவன் கேட்கவில்லை.
வெறுமனே இந்தியா சம்மதித்த அல்லது இந்தியா தானாகவே ஈழமக்களுக்கு என சொல்லி சிங்கள தேசத்துடன் செய்துகொண்ட ஒப்பந்ததை சரிவர அமுல்படுத்துங்கள் எனும் மிக சராசரி வேண்டுகோள் மட்டுமே.
அதையே செய்ய திராணியற்ற இந்தியா ஈழமக்களுக்கு என்ன செய்திருக்கும் என்று நீங்கள் எதிர்பார்கிறீர்கள்.
திலீபன் உண்ணாவிரதம் இருந்த பண்ணிரென்டு நாட்களும் இந்திய வானோலிகள் இவ் உண்ணாவிரதத்தை எவ்வளவு கீழ்தரமாக விமர்சித்தார்கள் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும். இதில் அவசரம் என்றோ நாடகம் ஒன்றோ ஒன்டும் இல்லை இந்தியா என்றுமே தமிழரின் நலனை விட தன் நலன் சார்ந்தே செயற்படும். இந்தியா மிகவும் நிதானமாக வெண்டுமென்றே தீலிபன் சாகும் வரை காத்திருந்தது. பின்னாளில் 17 கடற்புலிகளை கைது செய்து இலங்கை அரசிடம் கையளித்ததும் இதன் ஒரு தோடர்ச்சியே. 1987இல் திலீபனை சாகடித்த இந்திய வல்லாதிக்கம் 2009இல் முள்ளிவாயக்கால் பேரவலத்துடன் தனது கொலைப்படலத்தை இடைநிறுத்தி உள்ளது அவ்வளவு மட்டுமே. இனியும் தன் தேசிய சிந்தனைக்கு இடையூறாக யார் இலங்கையில் முளைத்தாலும் இந்திய வல்லாதிக்கம் காந்திதேசம் எனும் அழகான முகமூடிக்குள் ஒளிந்தவாறு மன்மோகன்சிங் போன்ற அல்லக்கைகளின் போலிசிரிப்புகளின் பின் ஒழிந்திருந்தவாறு தனது அழித்தல் தொழில்லை மிக அழகாக , நாகரிகமாக செய்து முடிக்கும்.
திலிபனின் ஐந்து அம்சக் கோரிக்கை உங்கள் சிந்தனைக்கு....
1.மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2.சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3.அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4.ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5.தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
//வெறியுடன் வாழ்ந்தவரை நீ ஒரு வெகுளி? என்பது போல் எச்சமாக நினைத்த வல்லரசு தான் வகையாக மாட்டிக்கொள்ளப்போகிறோம் என்பதை அறியாமலே வலை பின்னத் தொடங்கியது. வகைவகையான வலைபின்னலை பார்த்து வளர்ந்த பிரபாகரன் அவசரப்படவில்லை.//
அதுதான் அவர் குணம்...வரலாற்றை தொடர்ந்து எழுதுவதற்கு நன்றிகள்
தொடர்ந்து வந்து கொண்டுருந்தாலும் நீண்ட இடைவெளிக்குப்பிறகு வந்து கொடுத்த உங்கள் விமர்சனத்திற்கு நன்றி புலவன். நீங்கள் விரும்பி படிக்கும் தள வரிசைப்பட்டியலை இதில் இணைக்க முடியவில்லை. என்ன தொழில் நுட்ப காரணம் தெரியவில்லை. கணிணி வல்லுநர் நீங்கள்? இனம் கண்டு கொண்டதற்கு நன்றி.
உங்கள் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளை என் எழுத்து மூலமாக மீண்டும் இங்கு நீங்கள் கொண்டு வந்து நிணைத்துப் பார்த்தமைக்கு நன்றி. இதைக்கூட முகமற்று தான் நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுமா? பங்கு எடுத்தவர் நீங்கள். அதன் மொத்த சாதக பாதக அம்சங்களையும் நேரிடையாக பார்த்தவர் நீங்கள். தீலீபன் ஆத்மா வருந்தாதா?
திரைப்பட பாணியில் கதை.
உங்கள் கோபம் நியாயமானதே. படித்த பல புத்தகங்கள் அந்த கோபத்தை எனக்கும் வரவழைத்தது. பங்கு எடுத்தவர்களுக்கும், அவஸ்த்தை பட்டவர்களுக்கும் இது மரண போராட்டம். உங்களைப் போன்றவர்களைத் தவிர பலரும் படிக்க ஒரு நடை என்ற உடை தேவைப்படுகிறதே?
அல்லக் கைகளின் போலிச் சிரிப்புகளின் பின் ஒழிந்திருந்தவாறு தனது அழித்தல் தொழிலை மிக அழகாக , நாகரிகமாக செய்து முடிக்கும்.
எந்த வட இந்தியாக்காரனிடமும் அகம்பாவம் குடி
கொண்டிருக்கும் என்பதை அனுபவபூர்வமாக அறிந்த
வன்.டிக்ஷிற் என்பவனிடம் அது அளவுக்கு மீறி இருந்தது.டிக்ஷிற் ஒருதூதுவன்போல்செயல்ப்படாமல்
ஒரு பிரட்டிஷ் வைசிராய்மாதிரிச்செயல்பட்டவன்.
இலங்கையும் ஒரு இறமையுள்ளநாடு என்பதை மதிக்காதவன். நான் சொன்னால் கேட்கவேண்டும் எதிர் நியாயம் பேசக்கூடாது என்றுஆத்திரப்பட்டவன்.
இந்திய அமைதிப்படை அதிகாரியிடம் வெள்ளைக்
கொடியுடன் வரும் பிரபாகரனைச்சுட்டுக்கொல்லும்
படி கட்டளை கொடுத்தவன். இராணுவக்கட்டுப்பாட்
டை மதிப்பவர் கல்க்கட் என்பதால் அவ்ர் அந்த துரோ
கத்தைச்செய்யவில்லை.பிரபாகரனின் நாடகம் தெரிந்
திருந்தால் அது நடைபெறவிடாமல் திலீபனின் உயிர்
காப்பற்றப்பட்டிடுக்கவேண்டும் அல்லவா.டிக்ஷிற் ஜ
கட்டுப்படுத்திவைக்காதது யார் தவறு ராஜீவ் காந்தி
தானே.அதனால் அதன்பலனை அவர் அனுபவித்தார்.
இந்தியாவின் ஆக்ரமிப்பை தாக்குப் பிடிக்க முடிந்த புலிகளால், ஏன் இம்முறை புலிகளால் தாக்கு பிடிக்க முடியாமல் போனது. இன்றைய போராளிகளின் பலமும், ஆயுத பலமும் அந்நாளில் இல்லை. அப்படியிருந்தும் அன்றைய வெற்றியை இன்று ஏன் அடைய முடியவில்லை. தாங்கள் சமாளிக்கக் கூடிய எந்தவொரு வாய்ப்பும் கிட்டாமல் போனதா... ஒரே ஒரு வாய்ப்பு கிடைத்தது, அதை உணர்ந்து பயன் படுத்தியிருந்தால் பெரிய வெற்றியை அடையமுடியவில்லை என்றாலும் தற்காலிக வெற்றியை பெற்று இருக்கலாம். அது ராஜபக்சே மற்றும் பொன்சேகா இடையேயான மோதல். ஒரே நாளில் இந்த மோதல் துவங்கிவிட்டதாகவா கருதுகிறிர்கள். புலிகள் யுத்தப் பகுதியில் சில ராணுவ வெற்றி பெற்று இருந்தால் கூட, இருவரின் மோதல்கள் காரணமாக முடிவே வேறு விதமாக மாறி இருக்கும். அவர்களின் மோதல் ராணுவ வெற்றியின் காரணமாக பெரிதாக வெடிக்கவில்லை. புலிகளுக்கோ சிறிய வெற்றி கூட கிடைக்காததால், ஒற்றுமையின்மை தோன்றி வீழ்ச்சிக்கு வழி வகுத்து விட்டது.
தவேஷ் எந்த கோபத்தை அப்படியே வெளியே கொண்டு வர தமிழில் எத்தனையோ நேர்மையான வார்த்தைகள் இருக்கிறது. அவ்வாறு சொல்லும் போது இன்னும் வீச்சு அதிகம். தொடக்க கால திராவிட இயக்கத்தின் அதிரடி பேச்சு மக்கள் இப்போது இல்லாமல் போனதன் காரணம் என்ன? அன்று கேட்பவர்கள் வெட்கப்பட்டுக்கொண்டு சிரித்துக் கொண்டு போய்விடுவார்கள்? ஆனால் அவர்கள் வளர்ந்தார்களா? அவர்களால் மேலே உள்ளவர்கள் தான் வளர்ந்துள்ளார்கள்.
தமிழ் உதயம்.
நீங்கள் சொல்லவருவது எனக்குப் புரிகிறது. ஆனால் இன்னமும் தெளிவாக சொல்ல முயற்சித்து இருக்கலாம். வந்து படிப்பவர்களுக்கு புரியும் வாய்ப்பையும் உருவாக்கி இருக்கலாம்.
பொன்சேகா எங்கங்கு தவறுகள் இருந்ததோ அதை மட்டும் தொடர்ச்சியாக நீக்கி, சோர்வை நீக்க காரணமாக இருந்த காரணமே முதல் வெற்றிக்கான அடித்தளம் என்றால், ஆனால் கோத்தபய முப்படைக்கும் தலைமை என்ற நிலையில் அமர்ந்து கொடுத்த உருவாக்கிய சுதந்திரம் தெளிவான பாதையை உருவாக்கியது என்பது தான் முள்ளிவாய்க்காலின் முடிவு.
மற்ற நாடுகள் ஒத்துழைப்பு என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். காரணம் பிரபாகரன் குறித்து வெறுப்புடன் சுட்டிக்காட்டும் வடக்கு பத்திரிக்கைகள் கூட கடைசி கட்ட தாக்குதல்களை மிகப் பெரிய பெருமூச்சுடன் தான் வர்ணிக்கிறீர்கள். அந்த அளவிற்கு TOUGH பிரபாகரன் என்ற ஆளுமை.
அந்தப்பக்கம் தன்னம்பிக்கையின் அதீத வெளிப்பாடு.
இந்தப்பக்கம் திட்டமிடுதல் என்பதுடன் கூட வந்தவர்கள் போனவர்கள் என்று அத்தனை பேர்களையும் தனக்கு சாதகமாக ஒருங்கிணைத்த வெளிப்பாடு.
வழக்கம் போல அருமையான பதிவு ஜோதிஜி
ஜோதிஜி! உங்கள் மதிப்புக்குரிய தலைவர் தீட்சித்தை
ஏக வசனத்தில் விளித்தது உங்கள் அடிமைமனதிற்கு
வருத்தம் அளித்துவிட்டது போலும்.மரியாதைக்கு சிறி
தும் அருகதை அற்றவன் தீட்சித் என்பதை மானமுள்ள
எல்லாத்தமிழரும் ஒப்புக்கொள்வார்கள்.ஈழத்தமிழர்கள்
தன் மானம் மிக்கவர்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட
உண்மை.
நன்றி தேனம்மை
தவேஷ் , எழுதுபவனுக்கு வாசிப்பவனின் அனுபவம் கிடைப்பதில்லை. எழுத ஆரம்பித்தவுடனேயே எழுதுபவனுக்கு வாசிக்கும் விதமும் நோக்கமும் மாறத் தொடங்கி விடுகிறது.
திரிபு இல்லாமல், ஏற்றத்தாழ்வு எண்ணத்தில் கொள்ளாமல் எதிர்மறை நியாயங்களை மொத்தமாக ஏன்? என்ற நோக்கத்தில் சுருக்கமாக தெரிவித்துக் கொண்டுவரும் இந்த நிகழ்வுகளை விரிவாக விளக்கமாக உண்மையான இரு பக்கத்தையும் இது வரையிலும் எவரும் சொல்லாத உண்மைகளுடன் புத்தகமாக வெளிவரும் போது நீங்கள் படிக்க வாய்ப்பு இருந்தால் உணர்ந்து கொள்வீர்கள்.
மற்றபடி ஜெரி ஈசானந்தா சொல்லியிருப்பதை ஒரு முறை படித்துக்கொள்ளுங்கள்.
Post a Comment